Wednesday, September 11, 2013

முண்டாசுக்கவிஞனுக்கு அஞ்சலி!

பாரதியார் நினைவு நாள்


பாரதியாரின் சிட்டுக் குருவி கட்டுரையில் இருந்து சிலவரிகள்:

"இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? "விடு", "விடு", "விடு", என்று கத்துகிறது. இது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது.

"விடு விடு விடு: தொழிலை விடாதே, உண்மையை விடாதே, கூட்டை விடாதே, பேட்டை விடாதே, குஞ்சை விடாதே,
உள்ளக் கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பங்களை விடு.

சொல்லுவதற்கு இந்த வழி எளியதாய் இருக்கின்றது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னர் இதை வழக்கப் படுத்துதல் அருமையிலும் அருமை!"


"தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்ச்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகு உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ??"

இந்தப் பாட்டுத் தான் என்னை எப்போது உயிர்ப்போடு வைத்திருக்கின்றது என்றால் அதில் சந்தேகம் இல்லை. பலருக்கும் பிடித்த பாட்டும் கூட. ஆனாலும் மனம் பரிதவிப்பில் தவிக்கும்போது இந்தப் பாட்டே நினைவில் வரும். பாரதி இதை எழுதிய சூழ்நிலையும் அப்படித் தானோ என்று தோன்றும். காலத்தை வென்ற கவிஞன் என்பது மிகையில்லை. இன்னும் வரப் போகும் பல தலைமுறைகளும் பயனடையும் வகையில் குறுகிய வாழ்நாட்களுக்குள் இவற்றைப் படைத்த கவிஞனைப் போற்றி வணங்குகின்றேன்.

ஏற்கெனவே இரண்டு,மூன்று வருடங்கள் முன்னர் போட்ட பதிவை மீள் பதிவாக்கி இருக்கேன்.  நேரப் பற்றாக்குறை மட்டுமல்ல.  ஊரிலும் இருப்பேனானு தெரியாது. ஆகவே ஷெட்யூல் பண்ண வசதியாக இதைத் தேர்ந்தெடுத்தேன்.

5 comments:


  1. "முண்டாசுக்கவிஞனுக்கு அஞ்சலி!"


    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. இன்னும் கீதாவிடமிருந்து பதிவில்லையே என்று பார்த்தேன்.
    இதோ வந்துவிட்டான் பாரதி.

    அருமையான உயிர் கொடுக்கும் பாடலோடு.
    மிக நன்றி. சோர்ந்த வேளையில் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் பதிவு. வாழ்க பாரதி.

    ReplyDelete
  3. காலத்தை வென்ற கவிஞன் என்பது மிகையில்லை. இன்னும் வரப் போகும் பல தலைமுறைகளும் பயனடையும் வகையில் குறுகிய வாழ்நாட்களுக்குள் இவற்றைப் படைத்த கவிஞனைப் போற்றி வணங்குகின்றேன்.//
    உண்மை. காலத்தை வென்றவர்தான் பாரதி.
    நானும் உங்களுடன் சேர்ந்து வணங்கி கொள்கிறேன்.

    ReplyDelete
  4. வாங்க டிடி, நன்றி

    வைகோ சார், நன்றி

    வல்லி ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தேன். :))

    வாங்க கோமதி அரசு, நன்றிங்க.

    ReplyDelete