Monday, September 09, 2013

உங்க வீட்டுக்குப் பிள்ளையார் வந்தாரா?

எங்க வீட்டிற்கும் பிள்ளையார் வந்துட்டார். எப்போவும் பிள்ளையார் சதுர்த்திக்குச் சில நாட்கள் முன்னர் ஆரம்பிச்சுக் குறைஞ்சது ஒரு வாரம் பதிவுகள் போட்டுட்டு இருந்தேன். இப்போ அப்படிப் போட நேரம் இல்லை. அதோட எல்லாரும் எழுதறாங்களேனு பேசாம விட்டுட்டேன்.  ஆனாலும் பிள்ளையார் பத்திச் சொல்லாம இருக்க முடியுமா?  இந்த வருஷம் பண்டிகை இல்லைனாலும், பிள்ளையாரை வரவேற்காமல் முடியுமா?  எளிமையான வரவேற்புக்கொடுத்தாச்சு.  பிள்ளையாரும் போதும்னு சொல்லிட்டார்.  எல்லா வீட்டிலேயும் நிறையச் சாப்பிட்டு வயிறு கடபுடவென இருக்காம்.  அதனால் இது போதும்னு சொல்லிட்டார். :))) எளிமையாகப் பாயசம், ரவா கொழுக்கட்டை, (பொரித்தது) வெற்றிலை, பாக்கு, பழம், மாதுளை, தேங்காய் மட்டுமே.  மாதுளை சாப்பிட்டால் ஜீரணம் ஆகும் என்பதால் அது.  வயிற்றுக் கோளாறுக்கு நல்லது. பிள்ளையாருக்கு அஜீரணம் ஆகாமல் இருக்க மாதுளம்பழம். :)  ரவா கொழுக்கட்டை ஒரு வாரம் ஆனாலும் வீணாகாது. நெய்க்கொழுக்கட்டைனும் சொல்வாங்க. எப்படிப் பண்ணறதுனு சாப்பிடலாம் வாங்கலே சொல்லி இருக்கேன்.  பார்த்துக்குங்க.

பிள்ளையாரை மட்டும் தனியா எடுத்தேன்.  லார்ஜ் க்ளிக்கினால் கொஞ்சம் மங்கலாத் தான் வருது.  இன்னமும் காரணம் புரியலை. :(

சாதம், பருப்பு, ரவா கொழுக்கட்டை, பாயசம், பழம், மாதுளை, வெற்றிலை, பாக்கு, தேங்காய் நிவேதனம் பண்ணி கற்பூர ஆரத்தி காட்டியாச்சு பிள்ளையாருக்கு. 


மேல் தட்டு ராமர், கிருஷ்ணர், பிள்ளையாரும் கீழே உள்ள மஹாவிஷ்ணு, ஶ்ரீதேவி, பூதேவியும் சேர்த்து எடுக்க முடியலைனு சொல்லிட்டு இருந்தேன்.  நண்பர் ஒருத்தர் எடுத்தார்.  இதுவும் கொஞ்சம்மங்கலாத் தான் இருக்கு.  க்லாரிடி இல்லை.  ஏன்னு புரியலை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???? நான் எடுக்கிறது தான் சரியில்லையோனு நினைச்சேன்.  நண்பர் சிறந்த ஃபோட்டோ கிராபர். அவர் எடுத்ததும் இப்படித் தான் வந்திருக்கு. என்னனு திரும்பி வந்து தான் பார்க்கணும். :( லென்ஸும் க்ளீன் பண்ணியாச்சு. 



படம் எப்படித் தெரியுதுனு உங்க கருத்தைப் பதிவு பண்ணுங்கப்பா. காமிராவிலே ஒண்ணும் பிரச்னை இல்லை.  ஏன்னா எடுத்ததும் திரும்பப் பார்த்தால் நல்லாவே இருக்கு.  பிகாசாலே ஏத்தி இங்கே போட்டால் தான் மங்கித் தெரியுது. :(


எல்லாருக்கும் பதில் கொடுக்க தாமதம் ஆகும்.  அது வரைக்கும் பிள்ளையார் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா இங்கே போங்க எல்லாரும்.  எல்லாம் ஒரு விளம்பரந்தேன்! http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0704gs_pillaiyar.php கிட்டத்தட்ட 38 கட்டுரைகள் இருக்கின்றன.  நான் வர வரைக்கும் படிங்க.  எல்லாருக்கும் தேர்வு, மார்க் எல்லாம் உண்டு. :))))) டாட்டா!  லிங்கை என்ன அப்படியே கொடுத்திருக்கேன்னு நினைக்காதீங்க.  லிங்க் போறதில்லை. மார்க்கி போகுது. :( கணினியிலே முயன்று பார்க்கணும். மடிக்கணினியிலே லிங்கே போறதில்லை. 

28 comments:

  1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. படங்கள் நன்றாகத் தான் உள்ளன அம்மா... இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. படங்கள் நன்றாகத் தான் உள்ளன அம்மா... இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. புகைப்படங்கள் மோசமாயில்லை.

    பொதுவாக பூஜை அறைக்குள் இருக்கக் கூடிய குறைவான வெளிச்சமும், லேசான புகை மூட்டமும் தெளிவு குறைவான படங்களுக்குக் காரணங்களாயிருக்கலாம்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. // எளிமையான வரவேற்புக்கொடுத்தாச்சு. பிள்ளையாரும் போதும்னு சொல்லிட்டார். எல்லா வீட்டிலேயும் நிறையச் சாப்பிட்டு வயிறு கடபுடவென இருக்காம். அதனால் இது போதும்னு சொல்லிட்டார். :)))//

    பொதுவாக எந்தக் கடவுளாக இருந்தாலும் கோபித்துக்கொள்வார்கள்... ஆனால் விநாயகர் மட்டும் கோபித்துக் கொள்ள மாட்டார் ...

    படங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன... நன்றி அம்மா..

    ReplyDelete
  6. // இந்த வருஷம் பண்டிகை இல்லைனாலும், பிள்ளையாரை வரவேற்காமல் முடியுமா? எளிமையான வரவேற்புக்கொடுத்தாச்சு. பிள்ளையாரும் போதும்னு சொல்லிட்டார். //

    சொல்றாரே தவிர க்ளியரா வர மாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறாரே ?

    எதுக்கும் கொழக்கட்டை பண்ணி நைவேத்தியம் பண்ணிட்டு
    அப்பறம் திரும்பவும் போடோ எடுத்துட்டு பாருங்க.

    நீங்க பிரியா பாஸ்கரன் பதிவை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    அதுலே ஒரு யானை அடம் பிடிச்சதாம். அது என் அப்படின்னு பெரிஅவாளுக்குத் தெரிஞ்சப்பறம் 108 தேங்காய் உடச்சப்பரம் தான் யானை மேற்கொண்டு ஊர்வலத்தில் போனதாம். என்னோட பதிவிலும் இருக்கு, ப்ரியா பாஸ்கரன் பதிவிலும் அந்த செம்பாக்கம் கோவில் கதை இல்லை உண்மைலே நடந்த சம்பவம் போட்டு இருக்கு.

    சுப்பு தாத்தா.

    //க்லாரிடி இல்லை. ஏன்னு புரியலை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???? நான் எடுக்கிறது தான் சரியில்லையோனு நினைச்சேன்.//

    subbu thatha
    www.vazhvuneri.blogspot.com
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  7. //உங்க வீட்டுக்குப் பிள்ளையார் வந்தாரா?//

    ஆஹா, இப்போ தான் ஒருவழியா வந்துட்டுப்போனார்.

    நல்ல மாத்யான்னிஹ காலத்தில் தான் பூஜையை ஆரம்பித்து, மிகவும் தாமதமாகவே முடித்தேன்.

    ReplyDelete
  8. எங்கள் சொந்த ஊர் கணபதி அக்ரஹாரம். கும்பகோணம்-திருவையாறு பாதையில் இருக்கிறது.

    ஊர் வழக்கப்படி ஸ்ரீமஹாகணபதி கோயிலில் தான் நிவேதங்களுடன் வந்து பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவது. அதனால் வெளியில் களிமண் பிள்ளையார் வாங்கி வீட்டில் வைத்து பூஜிக்கும் வழக்கம் இல்லை.

    வெளியூரெல்லாம் வந்த பின்
    கொலுவில் வைக்கும் பிள்ளையாரை பூஜையில் வைத்து அலங்கரித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகி றோம்.

    ReplyDelete
  9. பொதுவாகப் பிள்ளையாருக்கு நிவேதனமாகக் கொழுக்கட்டை செய்வாகள். கொட்டாரக்கரை கணபதி கோயிலில் சுவாமி சந்நிதானத்துக்கு எதிரில் நாளெல்லாம் சுடச் சுட நெய்யப்பம் செய்கிறார்கள். நிவேதனமாகப் படைக்க.

    ReplyDelete
  10. வந்துட்டார்! வந்துட்டார். :))

    பிரசாதம் எடுத்துக்கொண்டோம். விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அப்பனே பிள்ளையாரப்பா .எங்கள் வீட்டிற்கு வந்தார் நான் தான் வேலைக்குப் போயிற்றனாக்கும் :)))) வெளி நாட்டில கடவுளுக்கு கொடுக்கும் மதிப்பை விட வேலைக்குக் கொடுத்தேயாகணும் அல்லது போனால் சீட்டுக் கிழிஞ்சிரும் .அதனால உங்கள் வீட்டில் படைத்த சுவையான இந்தக் கொழுக்கட்டையை ரசித்து ருசித்து நாங்கள் இருவரும் அதாவது பிள்ளையாரும் நானும் சாப்பிட்டோம் :)))இனிய வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் .

    ReplyDelete
  12. அன்பு கீதா,எங்கயோ ஊருக்குப் போவதாகச் சொல்லி இருந்தீர்கள். சென்னையாக இருந்தால் எங்க வீட்டுக்கு வரவும்:0)
    படங்கள் நன்றாகத்தான் இருக்குமா. கற்பூரப் புகை,நார்மலா பூஜை அறையில் இருக்கும் ஊதுபத்தி புகை,தீபங்களின் ஒளி எல்லாம் காரணிகளாக அமைகின்றன.உங்களுக்கு அருளாத பிள்ளையாரா.

    ReplyDelete
  13. பிள்ளையார் சதுர்த்திக்கு நினைத்துக்கொண்டேன். நாலுநாள் கழிச்சு வந்து ஆஜர் தந்தாச்சு. அது என்ன ரவா கொழக்கட்டை? புதுசா?

    ReplyDelete
  14. பிள்ளையார் சதுர்த்திக்கு நினைத்துக்கொண்டேன். நாலுநாள் கழிச்சு வந்து ஆஜர் தந்தாச்சு. அது என்ன ரவா கொழக்கட்டை? புதுசா?

    ReplyDelete
  15. எங்கள் வீட்டுக்கும் பிள்ளையார் வந்தார் அருளை தந்தார். அதைப்பற்றி பதிவும் போட்டு விட்டேன்.
    உங்கள் வீட்டுக்கு வந்த விபரம் அறிந்து கொண்டேன்.
    மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. வாங்க ராஜராஜேஸ்வரி, தாமதமான வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வாங்க டிடி, நன்றி, உங்கள் குடும்பத்தில் விநாயகர் அருளால் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  18. வாங்க ஶ்ரீராம், இது பூஜை அறையெல்லாம் இல்லை. ஹால் எனப்படும் கூடத்திலிருந்து சமையலறைக்குச் செல்லும் வழியில் ஒரு ஐந்துக்கு மூன்று ரேழி மாதிரி. :))) அங்கே நின்னும் படம் எடுக்க முடியலை; உட்கார்ந்தும் எடுக்க முடியலை. வெங்கட் உயரமா இருக்கிறதாலே ராமரையும், கீழுள்ள விக்ரஹங்களையும் சேர்த்து எடுத்துட்டார். :))) நான் பிள்ளையார் சதுர்த்திக்கு எடுத்த படங்கள் சுமார் தான். :)))

    ReplyDelete
  19. வாங்க ஸ்கூல் பையர், எந்தக் கடவுளுமே கோவிச்சுக்க மாட்டாங்க. எங்க ராமரோட கூட நான் பேசிப் பார்த்திருக்கேன். :))) கோவிச்சுண்டதெல்லாம் இல்லை.

    ReplyDelete
  20. வாங்க சூரி சார், இந்த வருஷம் இந்த ரவா கொழுக்கட்டை தான் பிள்ளையாருக்கு. நல்லா கரகரனு இருக்குனு சொல்லிட்டார். அதனால் அவருக்கு ஒண்ணும் கோபமெல்லாம் இல்லை. :)

    ReplyDelete
  21. வாங்க வைகோ சார், ஒரு காலத்தில் அப்படித் தான் நிதானமாப் பண்ணிட்டு இருந்தோம். இந்த சர்க்கரை எட்டிப் பார்க்க ஆரம்பிச்சதுமே எல்லாம் தலைகீழ்! :)))

    ReplyDelete
  22. வாங்க ஜீவி சார், கணபதி அக்ரஹாரம் பத்தியும் இந்த விஷயம் பத்தியும் ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கேன். நீங்க அந்த ஊரைச் சேர்ந்தவர்னு இன்னிக்குத் தான் தெரியும், :) எங்க வீட்டிலே களிமண் பிள்ளையார் வாங்கிட்டுத் தான் இருந்தோம். என்னவோ 2 வருஷமா விட்டுப் போச்சு! :(

    ReplyDelete
  23. வாங்க ஜிஎம்பி சார், இந்தச் செய்தியும் படிச்சிருக்கேன். எங்க வீட்டிலே கொழுக்கட்டையோடு அப்பமும் உண்டு. இந்த வருஷம் செய்யலை.

    ReplyDelete
  24. வாங்க மாதேவி, நன்றிம்மா.

    ReplyDelete
  25. வாங்க அம்பாள் அடியாள், நேரம் இருக்கையில் விநாயக சதுர்த்திக்கு முன்னால் இந்த ரவா கொழுக்கட்டையைச் செய்து வைச்சுக்குங்க. விநாயக சதுர்த்தியை அருமையாகக் கொண்டாடிடலாம்.

    ReplyDelete
  26. வாங்க வல்லி, பெண்களூர் போயிருந்தேன். கல்யாணத்துக்காக. சென்னைக்கு இப்போ இல்லை. :))) படங்கள் என்ன இருந்தாலும் உங்களை எல்லாம் போல் எடுக்க வரலை தான். :)

    ReplyDelete
  27. வாங்க ஜெயஶ்ரீ, ரொம்ப பிசி போல, பார்க்கிறதே இல்லை இப்போல்லாம். விநாயகரை நினைச்சால் என்னோட நினைவும் வரது வழக்கம் தான். :))))))))))))))

    ReplyDelete
  28. வாங்க கோமதி அரசு, பிள்ளையார் பற்றிய உங்கள் பதிவைக் கொஞ்சம் மெதுவா வந்து படிச்சுக்கறேன். :)))

    ReplyDelete