Wednesday, September 25, 2013

யசோதைக்குக் கிடைத்தது நமக்கும் கிடைக்கும்!

பிரம்மாண்ட புராணத்தின் 12 ஆவது அத்தியாயத்தில் இந்தக் கோயில் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.  இந்தக் கோயிலை ஒட்டிப் பாயும் கண்வா நதிக்கரையில் தான் நதி நரசிம்மர் கோயிலும் உள்ளது.  சகுந்தலையை வளர்த்த கண்வமுனிவரின் ஆசிரமம் இந்தப் பகுதியில் இருந்ததால் நதிக்கு கண்வ நதி என்ற பெயர் எனக் கேள்விப் பட்டோம்.  நாங்கள் செல்கையில் இருட்டி விட்டதால் நரசிம்மர் கோயிலை ஆறு மணிக்கே மூடிவிடுவார்கள் என்றும், பார்க்க முடியாது என்றும் தெரிவித்தனர்.  கொஞ்சம் ஏமாற்றம் தான்.  இந்த ஊரில் எங்கே தோண்டினாலும் மணலாக வருவதாகவும் அதனால்  இவ்வூர் மணலூர் என அழைக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.  பின்னர் மறளூர் என்றாகி மளூர் என அழைக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.  நான்காம் நூற்றாண்டில் இந்த மளூரில் அப்ரமேயர் கோயில் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம்.  இந்தக் கோயிலுக்கு ஶ்ரீராமாநுஜர், வியாசராஜர், புரந்தர தாசர், ராக்வேந்திர ஸ்வாமிகள் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.


கோயிலுக்கு அஸ்திவாரமே இல்லை எனவும் சொல்கின்றனர்.  இங்குள்ள கல்வெட்டுக்கள் பலவும் கிரந்தத்தில் உள்ளன.  இதைத் தவிர, தமிழ், சம்ஸ்கிருத மொழிகளிலும் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள ஊரான முகுந்தா முன் காலத்தில் முகுந்தராயப்பட்டினம் என அழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.  அந்த ஊரின் அரசனுக்கு சாரங்கதரா என்னும் பெயருள்ள ஒரு மகன் இருந்ததாகவும், அவன் அழகால் அனைவரையும் கவர்ந்ததாகவும், அரசனின் மனைவியும் அவன் மேல் மோகம் கொண்டதாகவும் சொல்கின்றனர்.  ஆனால் சாரங்கதராவுக்கோத் தாய் என்னும் பாசம் மட்டுமே இருந்தது.  காமவயப்பட்ட அரசி மன்னனிடம் சாரங்கன் மீது தேவையில்லாத புகார்களைச் சொல்ல, மன்னன் சினத்துடன் மகனின் கை, கால்களை வெட்டிக் கண்வா நதியில் தள்ளிவிட்டான்.  ஆனால் அப்ரமேயரின் அருளால் கை, கால்கள் வளர்ந்தன.  ஆகவே இந்த ஊர் மொளதூரு என அழைக்கப் பட்டுப் பின்னர் மளூரு என மருவியதாகவும் சொல்கின்றனர்.  இந்தக் கோயில் கிருஷ்ணனைப் பார்க்கப் புரந்தரதாசர் வந்தபோது கோயில் கதவுகளை மூடிவிட்டனராம்.  ஆகவே புரந்தரதாசர், "ஜகதோத்தாரண" என்னும் பாடலைப் பாட, கோயில்கதவுகள் திறந்தனவாம்.  கண்ணன் தவழ்ந்த கோலத்திலேயே வந்து உள்ளிருந்து எட்டிப் பார்த்தானாம். கண்ணனைப் பெற்ற தாயான தேவகிக்குக் கூடக் கிடைக்காத கோலம் தவழ்ந்த கிருஷ்ணன் ரூபம்.  அத்தகையை கிடைத்தற்கரிய பாக்கியத்தை நமக்கெல்லாம் அருளவே கிருஷ்ணன் இங்கே தவழ்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறான்.

இதைத் தவிர இந்தக் கோயிலில் கூரத்தாழ்வார், ராமாநுஜர், பிள்ளைலோகாசாரியார், வைகுண்ட நாராயணன், பரமபத நாதர் ஆகியோருக்கெல்லாம் தனிச் சந்நிதிகள் உள்ளன.  சிறியதொரு யாகசாலையும் இங்கே உண்டு.  மைசூர் மன்னன் இந்தக் கிருஷ்ணன் போல் இன்னொரு திருமேனியை அமைக்க வேண்டி தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்றானாம். ஆனால் கிருஷ்ணன் மன்னன் கனவிலே தோன்றி மீண்டும் தன்னை எடுத்த இடத்திலே வைக்கச் சொல்ல, மன்னன் மீண்டும் கோயிலுக்கே கொடுத்துவிட்டு அரக்கினால் அச்சு செய்து எடுத்துச் சென்றதாகச் சொல்கின்றனர்.  கோயில் மிகப் பழமையானதாக இருப்பதால் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடப்பதாகவும் ஹம்பியில் வேலை செய்யும் சிற்பிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அருகிலுள்ள ரயில் நிலையம், சென்னப்பட்டினம்,  அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.  மூன்றிலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள்ளாக இருக்கும்.

சாலை வழி எனில் மாநில நெடுஞ்சாலையில் பங்களூரு-மைசூரு செல்லும் வழியில் சன்னப்பட்டினத்திலிருந்து இரண்டாவது கிலோ மீட்டரில் உள்ளது.  மைசூரு செல்கையில் இடப்பக்கம் உள்ள வளைவில் திரும்ப வேண்டும்.  மைசூரிலிருந்து பங்களூரு வந்தால் வலப்பக்கம் உள்ள வளைவில் திரும்ப வேண்டும்.  இதற்கு எதிரிலேயே நதி நரசிம்மர், சிவன் கோயில் செல்லும் பாதை உள்ளது.  இங்கே தரிசனம் முடிந்ததுமே மணி கிட்டத்தட்ட எட்டு ஆகிக் கொண்டிருந்தது. ஆகவே உடனடியாக "பெண்"களூருக்குத் திரும்பினோம்.  வழியில் என் அண்ணாவுக்குத் தொலைபேசி நாங்க வர ஒன்பதுக்கு மேல் ஆகும் என்பதால் கொஞ்சம் சாப்பாடு வைக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டோம்.  ஒன்பதரைக்கு மேல் வந்து சாப்பிட்டுப் படுத்தோம். 

17 comments:


  1. படித்தேன், ரஸித்தேன்.

    அழகான விளக்கமான பதிவு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. சிறப்பான கோயிலின் தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. கிருஷ்ணனைப் பார்க்கப் புரந்தரதாசர் வந்தபோது கோயில் கதவுகளை மூடிவிட்டனராம். ஆகவே புரந்தரதாசர், "ஜகதோத்தாரண" என்னும் பாடலைப் பாட, கோயில்கதவுகள் திறந்தனவாம். கண்ணன் தவழ்ந்த கோலத்திலேயே வந்து உள்ளிருந்து எட்டிப் பார்த்தானாம். கண்ணனைப் பெற்ற தாயான தேவகிக்குக் கூடக் கிடைக்காத கோலம் தவழ்ந்த கிருஷ்ணன் ரூபம். அத்தகையை கிடைத்தற்கரிய பாக்கியத்தை நமக்கெல்லாம் அருளவே கிருஷ்ணன் இங்கே தவழ்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறான்.//

    அருமையான அந்த காட்சியை கண்மூடி கற்பனையில் பார்க்கும் போதே ஆனந்தமாய் இருக்கிறதே!
    புரந்தரதாசருக்கு எப்படி இருந்து இருக்கும்!
    அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  4. கோவிலைப் பற்றிய தகவல்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  5. கோவில் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வெறும் விவரிப்போடு நின்று விடாமல் தல வரலாற்றையும், தரிசித்துத் திரும்ப விவரங்களையும் கொடுத்தது சிறப்பு.

    ReplyDelete
  7. பிழைத்துக் க்டந்தால் இன்னொரு சந்தர்ப்பம் வாய்த்தால் இந்த உர்ருக்கும் கோயிலுக்கும் செல்ல வேண்டும் சோழர் காலத்திய கோயில் என்றால் சிற்பங்கள் அருமையாக இருக்குமே.

    ReplyDelete
  8. வாங்க வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  9. நன்றி டிடி. வருகைக்கும் நன்றி. :)

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ஶ்ரீராம், நன்றி.

    ReplyDelete
  12. வாங்க வெங்கட், போயிட்டு வாங்க. :)

    ReplyDelete
  13. ஜீவி சார், பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  14. வாங்க ஜிஎம்பி சார், போனால் காலை வேளையில் போங்க. பெங்களூரை விட்டுக் காலை ஆறு மணிக்குக் கிளம்பினால் எட்டுக்கெல்லாம் போயிடலாம். அம்பேகாலு கிருஷ்ணர் தரிசனம் ஆனதும், கண்வ நதிக்கரையில் நதி நரசிம்மர், சிவன் கோயில் ஆகியன போகவும் வசதியா இருக்கும். சாப்பாடு வேணும்னா பட்டாசாரியாரிடம் பணம் கொடுத்து ஏற்பாடு பண்ணிக்கலாம்.

    ReplyDelete
  15. சிறப்பான கோயில்தான்.

    ReplyDelete
  16. அப்ரமேயரின் அருளால் அருமையான தரிசனம் ..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  17. மைசூரு போகும்போதெல்லாம் சேவித்து இருந்தாலும், இப்போது உங்கள் பதிவைப் படித்தவுடன் மறுபடி போகவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அம்பேகாலு கிருஷ்ணன் மனம் வைத்தால் இந்த சனிக்கிழமையே போய் வருகிறேன். 'கீதா கூப்பிட்டாராமே, அடுத்த வருடமே போனயாமே, இப்போ எங்காத்திற்கும் வா' என்று அழைத்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete