Monday, September 30, 2013

பூப்பூவாய்ப் பூத்திருக்கு, பூவிலே சிறந்த பூ என்ன பூ?

ஒரு நாலு நாளைக்கு வரலைனா மக்கள்லாம் மறந்தே போயிடறாங்கப்பா. அநியாயமா இல்லையோ!  வீட்டிலே கொஞ்சம் அதிக வேலை.  விருந்தாளிகள் வரவு.  மஹாளயம், வெளியே போக வேண்டி வந்தது, அலைச்சல்னு கணினி கிட்டே மெயில் பார்க்க மட்டுமே உட்கார முடிஞ்சது.  சரி, நம்மளைக் காணோமேனு எல்லாரும் தேடப் போறாங்கனு பார்த்தால் இங்கே ஹிட் லிஸ்டே கீகீகீகீகீகீகீகீகீகீகீழே போயிருக்கு.  மொத்தம் நூறு பேருக்குள்ளே தான் இரண்டு, மூணு நாளா விசிடிங்க்.  இப்படி இருந்தால் அப்புறமா நம்மளை மறந்தே போயிடுவாங்கனு தோணிச்சு.  அதான் ஒரு மொக்கை கொடுத்து ரீ என்ட்ரி போட்டுக்கறேன்.  இனி தொடர்ந்து அறுவை போடுவேன்.  தயாரா இருங்க. (இல்லாட்டி மட்டும் எல்லாரும் வராங்களா என்ன?) அடைப்புக்குறிக்குள் என்னோட ம.சா. சொல்லுது.  அதுக்கு வேறே வேலையே இல்லை.  தேவையில்லாமல் முன்னுக்கு வரும். இப்போ வெங்கட் போட்ட பதிவைப் பார்த்ததும், ஏற்கெனவே நான் போட்டிருந்த பாரிஜாதம் படமும், பிரம்மகமலம் படம், அடுக்கு நந்தியாவட்டைப் படம், பவளமல்லிப் படம் ஆகியன பகிர்ந்துக்கறேன்.  முன்னாடி பார்க்காதவங்க பார்க்கலாமே!

இதான் எங்க வீட்டிலே பூத்த பாரிஜாதம் வகைப் பூக்களும், அதன் மொட்டுக்களும்.

இதுவும் அதான்,  இன்னொரு செடியில் பூத்திருந்தது.

இது கூகிளாண்டவர் கொடுத்தது.  இதான் பிரம்மகமலம்னு சொல்லுது.  ஹரிகி கொடுத்தது வேறே மாதிரி இருந்தது.  குழுமத்திலே அந்த இழையைத் தேடணும். இல்லைனா ஹரிகி கிட்டே கேட்டு வாங்கிப் போடறேன். :)))

இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது.  பவளமல்லி.  சாயந்திரம் ஏழு மணி ஆச்சுன்னா எங்க வீட்டிலே கணினி வைச்சிருந்த ஜன்னல் அருகே இருந்த இந்த மரத்திலிருந்து பூக்கள் கொட்ட ஆரம்பிக்கும்.  காற்றிலே மணம் கணினி முன்னாடி உட்கார்ந்திருக்கும் என் மூக்கை வந்து நிறைக்கும்.  மனமே அந்த மணத்தில் ஆழ்ந்து போகும்.   ஆனால் இந்தப் பூக்கள் கூகிளாண்டவர் கொடுத்தது தான்.  இதைக் காலையிலே நிறையப் பொறுக்கி மாலை கோர்த்து எங்க வீட்டு ராமருக்குப் போடுவேன்.  இங்கே இல்லை. :(  இப்போ அம்பத்தூர் வீட்டிலேயும் பவளமல்லி மரம் இல்லை. :(  இந்தப் பாரிஜாதச் செடியையும் வெட்டிட்டாங்க.   அதுவும் இப்போ இல்லை. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இந்தப் பாரிஜாதம் வகைப் பூக்கள் பூக்கும். 

19 comments:

  1. அழகாக இருக்கு... இனி தொடர்ந்து தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. பூக்களால் பதிவே பளிச்சுனு அழகாத்தெரியுது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. //அதான் ஒரு மொக்கை கொடுத்து ரீ என்ட்ரி போட்டுக்கறேன்.//

    மொக்கைப் பதிவு என்றால் என்ன என்பது பற்றி தகுந்த உதாரணங்களுடன், ஒரு எழுச்சியான பதிவு கொடுங்கோ ப்ளீஸ்.

    // இனி தொடர்ந்து அறுவை போடுவேன். தயாரா இருங்க.//

    மொக்கை வேறு, அறுவை வேறோ ... அட ராமச்சந்த்ரா !

    //(இல்லாட்டி மட்டும் எல்லாரும் வராங்களா என்ன?) அடைப்புக்குறிக்குள் என்னோட ம.சா. சொல்லுது.//

    உங்கள் மன சாட்சிக்கு என் பாராட்டுக்கள். உள்ளதை உள்ளபடி ஹரிச்சந்திரன் போலச் சொல்லியுள்ளது.;)

    ReplyDelete
  4. பூ....பூவாய் பூத்திருக்கிறது. :)

    மூன்றாவது படம் நிஷாகாந்திப் பூ என்றும் சொல்வதாக நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ஆஹா... பதிவுக்கு பதில் பதிவா? :)

    சரி சரி....

    ReplyDelete
  6. மூன்றாவது படம் நிஷாகாந்திப் பூ

    http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_03.html

    மணிராஜ்: நிஷாகந்தி- பூப்பூக்கும் ஓசை.

    http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_12.html
    மணிராஜ்: நிஷாகந்திப் பூ

    என்று எங்கள் இல்லத்தில் மலர்ந்த மலர்களை பதிவிட்டிருக்கிறேன்..
    நுகர்ந்து பாருங்கள்..

    மலரோடு மலர்ந்த தங்கள் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete

  7. இந்த பிரம்மகமலம் பூவுக்கு நிஷ்ஹ்கந்தி என்ற பெயரும் உண்டு. விடியற்காலையில் மலரும். விடிந்து பார்த்தால் தலை தொங்கி இருக்கும்.

    ReplyDelete
  8. இங்கு நான் நேற்று வந்து கொடுத்துச் என்னாச்சு?

    ReplyDelete
  9. இங்கு நான் நேற்று வந்து கொடுத்துச் என்னாச்சு?

    ReplyDelete
  10. நேற்று நான் இங்கு வந்து படித்து விட்டு, சிறுவயதில் தஞ்சையில் இருந்தபோது மூன்றாவது வீட்டில் இருந்த பவளமல்லிப் பூக்களைப் பொறுக்கிய அனுபவம் பற்றி கமெண்ட் போட்டேனே...

    ReplyDelete
  11. வாங்க டிடி, ரொம்ப நாட்கள் கழிச்சு வந்ததுக்கும், ரசிச்சதுக்கும் நன்றி. :)

    ReplyDelete
  12. வாங்க வைகோ சார், பூக்களே அழகு தானே, அதான் பதிவும் அழகாய் ஆயிடுச்சு.

    ReplyDelete
  13. நாங்க வண்டிலே போறது பத்தியும், காஃபி பத்தியும் பதிவு எழுதி இருந்தேனே, அதெல்லாம் கொசுவத்தி இல்லைனா மொக்கை வகையைச் சேர்ந்தது. :)))

    ஹிஹிஹி, என்னோட ம.சா.வைப் பாராட்டியதுக்கு அது நன்னி சொல்லுது. :)))

    ReplyDelete
  14. வாங்க மாதேவி, ஆமாம், கேள்விப் பட்டிருக்கேன். இது பெளர்ணமி அன்னிக்கு ராத்திரி தான் பூக்குமாம். அதுவும் சொன்னாங்க.

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், அங்கேயே சொன்னேனே! :)

    ReplyDelete
  16. வாங்க ராஜராஜேஸ்வரி, கட்டாயமாய் உங்க பதிவில் வந்து பார்க்கிறேன். பிரம்மகமலத்தை நிஷாகாந்தினு சொல்வாங்கனு கேள்விப் பட்டிருக்கேன்.

    ReplyDelete
  17. வாங்க ஜிஎம்பி சார், ஆமாம், மலர்ந்து ஒரே இரவு தான் இருக்கும்னு சொன்னாங்க. :))) எங்க வீட்டிலே இந்தப் பாரிஜாதம் மூணு நாளானாலும் வாடாது. ஆகையால் இது பிரம்மகமலமா இருக்காதுனே நினைக்கிறேன்.

    ReplyDelete
  18. வாங்க ஶ்ரீராம், உங்க கமென்டைக் காணவே காணோம். காக்கா தூக்கிட்டுப்போயிருச்சு போல! :)))

    ReplyDelete
  19. இப்போக் கொடுத்தது தான் வந்திருக்கு. :)))

    ReplyDelete