Saturday, March 01, 2014

அருமைத் தம்பிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் !




என் உடன்பிறவாத் தம்பியும் ஆன்மிகம் வலைப்பூவின் சொந்தக்காரரும், தொழில் முறையில் மருத்துவரும், பழைய புத்தகங்களை மின்னாக்கம் செய்வதில் முன்னோடியாகவும், மின்னாக்கத்தில் மின் தமிழ்க் குழுமத்தில் பல தொன்மையான புத்தகங்களை மின்னாக்கம் செய்து தந்து கொண்டிருப்பவரும், இத்தனை வேலைகளுக்கும் இடையில் கடலூரில் வேதபாடசாலையை நடத்திக் கொண்டிருப்பவரும், பல மருத்துவ முகாம்கள் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவ சேவை செய்பவரும்  நண்பர்களாலும் மற்றவர்களாலும் திவாஜி என அழைக்கப்படுபவரும் ஆன


                                 திரு திருமூர்த்தி வாசுதேவன் 


அவர்களுக்கு இன்று அறுபது வயது நிறைவடைகிறது. இன்று கடலூரில் அவர் இல்லத்தில் சஷ்டி அப்த பூர்த்தி விழா நடந்து கொண்டிருக்கும்.  எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை என்பது வருத்தமே. சஷ்டி அப்த பூர்த்தி சிறப்பாக நடைபெறப் பிரார்த்தனைகள் செய்து கொள்வதோடு என்னை அக்கா என அருமையாக அழைக்கும் தம்பிக்கும் அவர் குடும்பத்துக்கும் மேன்மேலும் பற்பல சிறப்புக்களை எல்லாம் வல்ல இறைவன் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி.



கீதா&சாம்பசிவம்

9 comments:

  1. திரு. திருமூர்த்தி வாசுதேவன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. திரு திருமூர்த்தி வாசுதேவன் ஐயா அவர்களுக்கு மேன்மேலும் பற்பல சிறப்புக்களை எல்லாம் வல்ல இறைவன் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. திவாஜி தம்பதியருக்கு நல்வாழ்த்துகள்.

    பகிர்ந்த தங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  7. வாழ்த்திய அனைவருக்கும் பப்ளிக்கா மாட்டிவிட்ட கீ அக்காவுக்கும் நன்றி. ;-)))))

    ReplyDelete
  8. திவாஜி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மனம் நிறைந்த வாழ்த்துகள் தம்பி வாசுதேவனுக்கு. நன்றி கீதா.

    ReplyDelete