Saturday, July 12, 2014

திக், திக், திக், நிமிடங்கள்!

50 வருஷமாச் சமைக்கிறேன்.  இப்படி எண்ணெய் மட்டுமில்லை, வெந்நீரைக் கூடக் கொட்டிக் கொண்டதில்லை. :(  எப்போதேனும் தோசைக்கல், குக்கர், இரும்புச் சட்டி போன்றவற்றை இறக்குகையில் கையில் சூடு லேசாகப் படும். அதுக்கே ரங்க்ஸ் சூட்டோடு இதை எல்லாம் இறக்க வேண்டாம்.  ஆறினதும் இறக்கிக்கலாம் னு 14 4 தடை உத்தரவு போட்டிருக்கார்.  இப்போது தான் முதல் முறையாக இவ்வளவு கஷ்டமான அனுபவம்.  அதனால் தானோ என்னமோ தெரியலை.  ஊருக்குப் போகையில் கொஞ்சம் அலுப்பாகவும், ஒரு மாதிரி வெறுமையாகவும் இருந்தது.  என்னால் எதையும் தூக்க முடியாதுங்கறதாலே சாப்பாடுப் பையை மட்டும் என்னிடம் ரங்க்ஸ் கொடுத்து வைச்சிருந்தார்.  ரயிலில் போகும்போது அதை மேலே மாட்டி இருந்தோம்.  மாம்பலம் ஸ்டேஷனில் இறங்க கிண்டி வரும்போதே தயார் ஆவோம் என்பதால் சாமான்களைத் தூக்கிக் கொண்டு இருவரும் இறங்கும் வாயில் அருகே போய் விட்டோம்.  சாப்பாடுப் பை என் பொறுப்பில் இருந்ததால் அவருக்கு நினைவிலேயே இல்லை.  நானோ அதைத் தூக்கிக் கொண்டு போய்ப் பழக்கம் இல்லாததால் கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு போயாச்சு.  வண்டியும் மாம்பலத்தில்  நின்று நாங்களும் இறங்கிக் கொஞ்ச தூரம் போனதும் திடீர்னு ஏதோ குறைஞ்சாப்போல் எனக்குத் தோன்ற, அவரிடம் சாப்பாடுப் பை எங்கேனு கேட்டேன்.

அப்போத் தான் அதை வண்டியிலேயே விட்டுட்டோம் னு புரிஞ்சது.  நல்லவேளையாக நாங்க இறங்கின பெட்டி அருகே தான் போயிட்டிருந்தோம். அதுக்குள்ளே ஒரு வாயிலை உள் தாழ்ப்பாள் போட்டிருந்தாங்க. ரங்க்ஸ் இன்னொரு வாயிலுக்கு ஓடி உள்ளே இருந்தவங்களிடம் சொல்லிப் பையை வாங்கிட்டார் ரங்க்ஸ்.  வண்டி கிளம்பறதுக்கு ஊதியாச்சு.  அவருக்கும் பதட்டம்.  அவசரத்தில் கதவைத் திறப்பதற்கு பதிலாக மூடி இருக்கார்.  அப்புறமா ஒருத்தர் சொல்லிக் கதவைத் திறந்து வாயிலருகே வரார்.  வண்டி கிளம்பியாச்சு.  அவரை இறங்க வேண்டாம்.  எழும்பூர் போயிடுங்கனு சொல்ல நான் வேகமாய்ப் போகும்போது ஒரு காலைப் படியில் வைத்து மற்றொரு காலை நிதானமாகத் தரையில் வைத்து இறங்கி விட்டார்.  உயரமாய் இருந்ததால் சாத்தியமாயிற்று என்றாலும் அந்த விநாடி மனம் பரபரப்பும், திகிலும் சொல்ல முடியாதவையாக இருந்தது.   ஒரு நிமிஷம் இந்தப் பை போனால் போகிறதுனு விட்டிருக்கலாமேனு நினைப்பு வந்தது.  முக்கியமான சில பொருட்கள் அதில் இருந்தன.  எப்படியோ முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலன் எங்களுக்குக் கிடைத்தது.  நல்லபடியாக இறங்கிட்டார். இதுக்காகவே திரும்பி வரும்போது சாப்பாடுப் பையைச் சாப்பிட்டு முடிச்சதுமே சாமான்களைப் பிரித்துப் பெரிய பையில் போட்டு மூடி விட்டோம்.

ரயில்வேயில் மாற்றங்கள் வந்திருப்பதைப் பார்த்தால் தான் ஒத்துக்க முடியும். அடிக்கடிப் பயணம் செய்பவர்களுக்குக் கட்டாயமாக மாற்றங்கள் தெரியும். அதோடு இல்லாமல் மற்றத் துறைகளிலும் மௌனமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு கல்வித் துறை அதிகாரிகள் மானியங்களுக்காகவும், மற்ற சில தேவைகளுக்காகவும் மத்திய அரசின்  HRD Ministry யின் அதிகாரிகளோடு  சில நாட்கள் முன்னர் சந்திப்பு நடத்தி இருக்காங்க.  தமிழ்நாட்டு அதிகாரிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதோடு அந்த ஒரே நாள் சந்திப்பில் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து இவங்க தேவைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் பதிலளித்து உத்தரவாதமும் கிடைத்திருக்கிறது.

தமிழக அதிகாரிகள் இதை எதிர்பார்க்கவே இல்லையாம்.  வருஷா வருஷம் அவங்களோடான சந்திப்புக்கே 3,4 நாட்கள் காத்திருக்க வேண்டி வருமாம்.  அதுக்குப் பின்னரும் நீங்க திரும்பிப் போங்க, நினைவூட்டல் கடிதம் அனுப்புங்கனு சொல்லிடுவாங்களாம்.  குறைந்த பக்ஷமாக 3 மாதமாவது ஆகுமாம்.  இப்போது வேலை முடிந்தது குறித்து அவங்க மயக்கம் போட்டு விழாத குறைதான்.  உள் கட்டமைப்பு வேலை வெளியே தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் பொதுமக்களுக்குப் புரிய நாட்கள், மாதங்கள் ஆகலாம்.

நேற்றைய பட்ஜெட்டில்  பொதுவான சிறப்பம்சங்கள் இருந்தாலும் சேமிப்பு வரம்பை  3  லக்ஷத்திலிருந்து 5 லக்ஷமாக உயர்த்தி இருக்கலாம்.  இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். பொதுமக்களுக்கும் பயன்பாடு இருக்கும்.  சேமிப்பை 1.5 லக்ஷத்தோடு நிறுத்தியது சரியில்லை.  இதையே திரு இன்னம்புரார் அவர்களும் கூறியுள்ளார்.  பொதுவாக பட்ஜெட் திருப்திகரம் எனத் தோன்றினாலும் விளைவுகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.  திட்டங்கள் அறிவிப்புக்களோடு நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

18 comments:

  1. நிஜமாகவே திகில் நிமிடங்கள்தான். இதெல்லாம் ரொம்ப ரிஸ்க்.

    ரயில் பயண மாற்றங்கள் வரவேற்கத்தக்கதுதான், அவ்வப்போது ஏறும் கட்டணம் தவிர!

    பட்ஜெட் பின்விளைவுகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  2. ஆமாம், ஶ்ரீராம், இப்போ நினைச்சாலும் திக் திக் தான். :( எல்லாம் ஒரு குரங்கால் வந்த வினை. :)) நேத்து ராத்திரித் தூக்கத்திலே கூடக் குரங்கை நினைச்சுக் கத்தினேனாக்கும்னு ரங்க்ஸ் சொல்றார். :) தெரியலை.

    ReplyDelete
  3. படிக்கும் போதே திக் திக்னு இருந்தது. நல்லவேளை கடவுள் துணையிருக்கார்.


    ReplyDelete
  4. சாப்பாட்டு பையை எடுக்க இத்தனை ரிஸ்க்கா? சாப்பாடு மற்றும் அதில் இருந்த முக்கியமான வஸ்துக்களை கூட மீட்டு விடலாம்! ஆனால் உயிர்!... கவனமாக இருக்கவும்!

    ReplyDelete
  5. ஒரு காலைப் படியில் வைத்து மற்றொரு காலை நிதானமாகத் தரையில் வைத்து இறங்கி விட்டார்.//
    படிக்கவே பதட்டமாய் இருந்தது.
    நல்லவேளை கடவுள் காப்பாற்றினார்.
    இந்த அளவு குரங்கார் பயமுறுத்தி இருக்கிறாரே! கனவில் வேறு வந்து கத்த வைக்கிறார்.
    அனுமனிடன் தேகபலம், மனபலம் தர வேண்டிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

  6. பயண நேரங்களில் அதிக கவனம் தேவை. எல்லாத்தவறுக்கும் குரங்கு காரணமா. பாவம் அது...!

    ReplyDelete
  7. சற்று ஜாக்கிரதையாக பயணியுங்கள் கீதா மேடம். நிஜமாகவே திக் திக் நிமிடங்கள் தான்.

    ReplyDelete
  8. //வண்டி கிளம்பியாச்சு. அவரை இறங்க வேண்டாம். எழும்பூர் போயிடுங்கனு சொல்ல நான் வேகமாய்ப் போகும்போது ஒரு காலைப் படியில் வைத்து மற்றொரு காலை நிதானமாகத் தரையில் வைத்து இறங்கி விட்டார்.//

    'திக்..திக்'கை உணர முடிந்தது.
    இரண்டு மூன்று முறை இப்படியே நானும் இறங்கியிருப்பதால் அந்த படபடப்பின் வோல்ட்டேஜை இப்பொழுதும் தீவிரமாக உணர முடிந்தது. எல்லாம் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால். இப்பொழுதெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையுடன் நிறைய முன்யோசனை.

    சாப்பாட்டுப் பையை உங்கள் பொறுப்பில் தானே கொடுத்திருந்தார்?.. இந்த லட்சணத்தில் "பை எங்கே?" என்று அவரைப் பார்த்தே கேள்வி வேறையா?.. போய்த் தொலைந்தால் தான் என்னவாம்?.. வயசான காலத்தில் ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம்?..

    ஆயிரம் எழுதுகிறீர்கள்.. என்ன பிரயோஜம்?.. அவசரத்தில் உதவாத ஞானோதயம் இருந்து என்ன, இல்லாமல் போனால் தான் என்ன?..
    கோபம் கோபமாக வருகிறது..

    பட்டது போதும். இனிமேல் இந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம்.

    ReplyDelete
  9. சித்திரமும் கைப்பழக்கும். மறதியும் கூட பிறந்தது. சோத்துமூட்டையை மறக்கலாமோ?

    இதையே திரு இன்னம்புரார் அவர்களும் கூறியுள்ளார்.

    ஓ! பாத்தாச்சா! நான் இன்ன்னொன்னும் சொன்னேன். இந்த சேமிப்பு வரம்பை கெட்டிக்காரத்தனமாக ரூ.3 லக்ஷம் ஆகியிருக்கலாம். திரவிய வரவு மேல்த்தட்டுக்கு ஜாஸ்தி. சேமிப்பு மற்றவகையில் ரிஸ்காயிண்டு வரது. இது உச்சவர்ம்பௌ என்பதால், மற்றவாளுக்கு ஹானியில்லை. கவர்மெண்டுக்க்கும் ஆக்கப்பூரவ்மான செலவுக்கு கடன் வாங்கவேண்டாம். இப்போ கூட டூ லேட் இல்லை.

    இன்னம்புரார் (ன்)

    ReplyDelete
  10. உண்மை ஆதி, கடவுள் அருள் இல்லைனா என்னென்னமோ ஆகி இருக்கும். :(

    ReplyDelete
  11. சாதாரணமா இப்படி எல்லாம் மறந்து விட்டதே இல்லை சுரேஷ், அன்னிக்கு என்ன்மோ போறாத காலம். :(

    ReplyDelete
  12. தினம் தினம் ஆஞ்சநேயரை வேண்டிக்கறேன் கோமதி அரசு. குரங்கு கடிச்சுப் படும் அவஸ்தையை எல்லாம் படிச்சிருப்பதால் பயம் மனதிலே பதிவாகி விட்டது. :( அயோத்தியில் நேரிலேயும் பார்த்தோம்.

    ReplyDelete
  13. வாங்க ஜிஎம்பிசார், குரங்கார் பாவமாத் தான் இருக்கார்! :)

    ReplyDelete
  14. @ராஜலக்ஷ்மி,
    எப்போவுமே ஜாக்கிரதையாகத் தான் இருப்போம். சொல்லப் போனால் அவர் இறங்கறேன்னு சொன்னால் கூட நானும் சேர்ந்து இறங்கறேன்னு கிளம்புவேன். அன்னிக்கு என்னமோ..........

    ReplyDelete
  15. ஜீவி சார், என் பொறுப்பில் கொடுப்பதை நான் எப்போதும் கவனமாய்த் தான் வைச்சுப்பேன். அன்னிக்கு என்னமோ மறந்து விட்டது! அவர் எடுத்துட்டாரோனு நினைச்சுத் தான் கேட்டேன். இரண்டு பேருமே மறக்கும் ஆட்கள் இல்லை. :)

    மற்றபடி உங்கள் கோபம் நியாயமானதே! ஞானோதயம் வந்துட்டால் அப்புறமா என்னைக் கையிலேயே பிடிக்க முடியாதே! எங்கே!

    ReplyDelete
  16. ஆனால் ஒண்ணு, இனிமேல் யாருக்கும் ஆலோசனை, புத்திமதி கொடுக்கும் அளவுக்குத் தகுதி எனக்கு இல்லைனு புரிந்து கொண்டேன். கர்வபங்கம்????

    அப்படியும் எடுத்துக்கலாம். :))))))

    ReplyDelete
  17. வாங்க "இ" சார், படிச்சேன், கமென்ட் போட முடியலை.

    சோத்து மூட்டையை மறந்தது என் குற்றமே! :(

    ReplyDelete
  18. ரொம்ப ரிஸ்க். கவனமாக பயணம் செய்யுங்கள்.

    ReplyDelete