Wednesday, August 20, 2014

வெல்லச் சீடை மாவு அப்பமான கதை கேளுங்கள்!


எங்க வீட்டுக் கோலம் ஜன்மாஷ்டமிக்குப் போட்டது அன்றைய தினம் சேர்க்க மறந்து போச்சு.


எதிர் வீட்டில் கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியை வீட்டுக் கோலம்.  சங்குக் கோலம்.


உப்புச் சீடை மாவு வெடிச்சுச் சிதறிக் கஷ்டப்படாதவங்களே இருக்காது.  ஆனால் எனக்கு என்னமோ வெடிச்சதில்லை.  உப்பைக் கல் உப்பாகவோ அல்லது பொடி உப்பாகவோ நேரிடையாகக் கலக்காமல் வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பைப் போட்டு ஆற வைத்து அந்த உப்பு ஜலத்தில் மாவு பிசைய வேண்டும். ரொம்ப மொழு, மொழு எனப் பிசையக் கூடாது.  உருட்டும்போதும் ரொம்பவே மொழு மொழு என உருட்டக் கூடாது. ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் சேர்த்துக் கொண்டு உருட்டினால் போதும். :)))

வெல்லச் சீடைக்குப் பாகு தக்காளி பதமாக இருக்கணும்.  பாகு முத்திவிட்டால் சீடை கெட்டியாக ஆயிடும். எனக்கு எல்லாமும் சரியாகத் தான் இருந்தது.  ஆனால் என்னமோ தெரியலை.  பத்து சீடைக்கு மேல் உருட்ட முடியலை.  மாவை அப்படியே வைச்சுட்டேன்.  வடை மாவையும் ஐந்து வடை நிவேதனத்துக்குத் தட்டிட்டு அப்படியே வைச்சுட்டேன். மறுநாள் அந்த வடை மாவை வடை தட்டி, வீட்டுக்கு வந்த நாத்தனார் பெண்ணுக்குக் கொடுத்துட்டு, நாங்களும் கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். சீடை மாவை என்ன செய்யறது?

கேரளாவில் முக்கியமாய்ப் பாலக்காட்டுப் பக்கம் அப்பத்திற்குப் பாகு செலுத்தி வைத்துத் தான் செய்வார்கள்.  ஆனால் அதில் கோதுமை மாவு சேர்க்கிறதில்லைனு நினைக்கிறேன். நாம தான் திப்பிச வேலைகளில்தேர்ந்தவங்களாச்சே!  ஆகவே ஒரு கரண்டி கோதுமை மாவு+ கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மிக்சியில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, இந்த வெல்லச் சீடை மாவையும் போட்டுச் சுற்றினேன்.  நல்ல கெட்டியாக வடை மாவு பதத்துக்கு மாவு வந்தது.  அதை அப்படியே கையால் போண்டோ மாதிரிப் போட்டு எடுத்துவிட்டேன்.  கீழே படங்கள். தித்திப்பும் குறைந்துவிட்டது.   அதோடு நான் எப்போ அப்பம் செய்தாலும் அதில் கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்தே செய்வேன். :))))



மிக்சி ஜாரில் கலந்த மாவு




எண்ணெயில் குதிக்கும் அப்பங்கள்






வெந்த அப்பங்கள்.  சுவையோ சுவை!

16 comments:

  1. அப்பாடி.... படங்களுடன் பதிவு... கோலம் அருமை. அப்புறம் வர்றேன்.

    ReplyDelete
  2. அப்போ வெல்லச்சீடை.....! கோலம் நன்றாக இருக்கிறது. அதுவும் அந்தச் சங்குக் கோலம்......!?

    ReplyDelete
  3. கோலங்கள் அழகு! வாழைப்பழம் கலந்த அப்பம் சுவையா இருக்கும்! மெதுவாகவும் இருக்கும்! எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கோ! நன்றி!

    ReplyDelete
  4. நான் தான் இந்தக் கோமாளிவேலையெல்லாம் செய்வேன் என்று நினைத்தேன். நீங்கள் அதைவிட அற்புதமாக வெல்ல போண்டாவே செய்துவிட்டீர்கள் கீதா. இவ்வளவு தள்ளாமையோடு பண்டிகை கொண்டாடுவதே சிரமம். உண்மையில் உங்கள் பொறுமை என்னை அதிசயிக்கவைக்கிறது. கோலங்கள் அழகா வந்திருக்கு. சங்குக் கோலம் கச்சிதமா இருக்கு.கூடவே சக்கரமும் போட்டிருக்கணுமோ.

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், சங்குக் கோலத்தைச் சொன்னீங்கன்னா அது நான் போட்டதில்லை. கலர்க் கோலம் மார்கழியில் மட்டும் தான். :))))

    ReplyDelete
  6. வெல்லச் சீடையை நிறுத்திட்டேன் ஜிஎம்பிசார். :)))

    ReplyDelete
  7. தளீர் சுரேஷ், என்னை மாதிரி உங்களுக்கும் பழ அப்பம்பிடிச்சிருப்பது குறித்து சந்தோஷம்.

    ReplyDelete
  8. வாங்க வல்லி, நிறையத் திப்பிச வேலைகள் செய்வேனே! ஏற்கெனவே ஆவக்காய் ஊறுகாய் பத்திப் போட்டுட்டு ஶ்ரீராம், எங்க வீட்டுக்கு வந்தால் ஆவக்காய் சாப்பிட மாட்டேன்னு சபதமே எடுத்திருக்காராக்கும். :))))

    ReplyDelete
  9. முதல் கோலம்தான் அழகு என்று சொன்னேன்.

    ஆவக்காய் ஊறுகாய்க் கதை தனி வல்லிம்மா. நூற்றாண்டுகளுக்கும் மேலானதாம்! :))))

    ReplyDelete
  10. சில சமயங்களில் இப்படி 'அட்ஜஸ்ட்மென்ட் சமையல் திப்பிசங்கள்' சுவையை ஒரு தூக்குத் தூக்கி விடும். நான் கூட அப்படி செய்ததுதானே சேனை கோப்தா!

    ReplyDelete
  11. சீடை அப்பமானக் கதை வெகு சுவாரஸ்யம். அப்பம் ருசியும் ஜோர்.

    ReplyDelete
  12. பயனுள்ள குறிப்புகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  13. ஹாஹாஹா ஶ்ரீராம், ஆவக்காய்க்கு நூற்றாண்டு கொண்டாடறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))

    கோலத்தைப் பாராட்டியதுக்கு நன்னி!

    ReplyDelete
  14. ஆமாம், திப்பிச வேலை நன்றாகவே அமையும். :)))

    ReplyDelete
  15. வாங்க ராஜலக்ஷ்மி, சீடை மாவு இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு! :))) யோசிச்சுட்டு இருக்கேன்.

    ReplyDelete
  16. நன்றி காசிராஜலிங்கம்.

    ReplyDelete