Thursday, August 21, 2014

சர்வாங்க சுந்தரி!



கருவிலி சர்வாங்க சுந்தரியைப் பத்தி எழுதி இருந்தேன் இல்லையா?  தற்செயலா சர்வாங்க சுந்தரியின் படம் கிடைச்சது.  பழைய ஃபைல்களில் இருந்து கிடைத்தது.  இது ராஜ கோபுரம் கட்டும் முன்னர் எடுத்த படம்னு நினைக்கிறேன். முதல் முதலாகக்கும்பாபிஷேஹம் செய்தப்போ ராஜ கோபுரம் கிடையாது.  பின்னர் தான் ராஜ கோபுரம் கட்டப்பட்டது. 

13 comments:

  1. வணங்குகிறேன்.

    ReplyDelete
  2. ’சர்வாங்க சுந்தரி’

    என்ற பெயரே அப்படியே சொக்க வைப்பதாக உள்ளது.

    படமும் நல்ல அழகு !

    வணங்கி வந்தனம் செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  3. பெயருக்கேற்ப அம்மனும் அழகு! அழகான அலங்காரம்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. சர்வாங்க சுந்தரி.....

    பழைய பதிவின் சுட்டியும் கொடுத்திருக்கலாமே!

    நானும் தேடிப் பார்க்கிறேன் உங்கள் பக்கத்தில்.

    ReplyDelete
  5. அம்பிகையின் கண்களில் எத்தனை காருண்யம்!.. வணங்குகிறேன்!.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி!

    ReplyDelete
  6. தற்செயலா அல்ல, அதிர்ஷ்ட வசமா கிடைத்த படத்தில் பதிந்த அம்மனின் தெய்வீக அழகை தரிசிக்கும் பேறு கிடைத்தது.

    போன தடவை கும்பகோணம் சென்றிருந்த பொழுது நிறைய கோயில்களுக்குப் போனதில் இந்தக் இந்த கோயிலுக்கு போய் தரிசித்த நினைவும் மங்கலாக இருக்கிறது.

    ReplyDelete
  7. என் அம்மா எம்புட்டு அழகு!

    ReplyDelete
  8. நன்றி ஶ்ரீராம்,

    வைகோ சார், நன்றி.

    சுரேஷ், நேரிலே போய்ப் பாருங்க. நிஜம்மா ஓர் பெண்மணி எதிரே நின்று பேசுவது போல் இருக்கும்

    ReplyDelete
  9. வெங்கட், எனக்குக் கிடைச்சது பிக்சர் ஃபைலிலே! :))) பதிவு போட்டேனானு நினைவில் இல்லை. :)

    ReplyDelete
  10. நன்றி பார்வதி.

    ஜீவி சார், நன்றி. மறுபடி ஒரு தரம் போய்ப் பாருங்க. இப்போப் படமெல்லாம் எடுக்க முடியாதுனு நினைக்கிறேன்.

    கவிநயா, வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  11. நாங்கள் கருவேலி சர்க்குணேஸ்வரர் சர்வாங்க சுந்தரி அன்னையை தரிசித்து வந்ததும் அவர் உருவம் மனக் கண்ணில் தோன்றிக் கொண்டே இருந்ததும் நமக்குக் கொடுப்பினை ஒரு மணிநேர தரிசனம் மட்டுமே என்றும் ஆதங்கமாய் இருந்தது.

    ReplyDelete
  12. மீண்டும் சென்று தரிசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் உங்கள் தயவில் கருவிலி அன்னையின் தரிசனம் இங்கே கிடைத்தது. மிக்க நன்றி!

    ReplyDelete
  13. என்று எனக்குத் தரிசனம் கிடைக்குமோ. உங்கள் படத்திலியே அம்மாவை வணங்கிக் கொள்கிறேன்.நன்றி கீதா.

    ReplyDelete