Wednesday, August 27, 2014

சர்க்கரை இறங்கிடுச்சு ஒரு வழியா! :)

நேத்திக்கு எழுதின பிள்ளையார் பதிவுக்குக் கருத்துனு ஶ்ரீராமைத் தவிர யாரும் சொல்லாட்டியும் பார்வையாளர்கள் நிறையவே காட்டுது. ஜி+ இலும் ஆறு பேர் இதை + செய்திருக்காங்க.   ஆகப் பிள்ளையாருக்கு வரவேற்பு எப்போவுமே இருக்கு.  இனியும் அவர் தான் வருவார்.


இன்னிக்கு நம்ம ரங்க்ஸுக்குக்கண் ஆபரேஷன்.  ஒரு வாரமா அதிலே தான் ஒரே டென்ஷன். சர்க்கரை இறங்கவே இல்லை.  அட!!!! சர்க்கரை விலையைச் சொல்லலை. அவர் உடலிலே வைச்சிருக்கும் சர்க்கரை ஆலைச் சர்க்கரை இறங்கலை. ரொம்பக் கஷ்டப்பட்டு அதைக் குறைச்சு, இதைக் குறைச்சு அரைப்பட்டினி போட்டு சர்க்கரையை இறக்கிட்டு மருத்துவர் கிட்டே போனா உடனே ஆபரேஷன்னு சொல்லிட்டாங்க.


இன்னிக்குக் காலையில் ஆபரேஷன் நடந்து முடிந்தது.  இனியும் சர்க்கரை ஏறாமல் பார்த்துக்கச் சொல்றாங்க.  அதான் ரொம்பக் கஷ்டமான வேலை! :)))))))  இனியும் சில நாட்களுக்குப் பிள்ளையார் தான் வருவார். அப்புறமாத் தான் மொக்கையோ, இல்லை வேறே பதிவோ! :)))))

5 comments:

  1. கவனம்.சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. நல்லபடி ஆபரேஷன் முடிந்தது சந்தோஷம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும்! :)))))

    ReplyDelete

  3. கண் ஆப்பரேஷன் என்றால் காடராக்ட் சிகிச்சையா. I Wish him well.

    ReplyDelete