Thursday, December 18, 2014

கோபுரமாம், கோபுரம், தங்கத்திலே கோபுரம்!




வல்லி சொன்ன மாதிரி அரங்கனைப்பார்க்க வேண்டி பல மாதங்களுக்குப் பின்னர் இன்று கிளம்பினோம்.  பாதி வழியிலேயே மழை பிடித்துக் கொண்டது.  நேற்றிரவிலிருந்து விட்டு விட்டுப் பெய்யும் மழை வருமோ என்ற சந்தேகம் இருந்தது.  இருந்தாலும் அப்புறம் வைகுண்ட ஏகாதசி உற்சவம் திங்களன்று ஆரம்பிப்பதால் பெருமாளைப் பார்ப்பது கடினம். இன்னிக்கே கூட்டம் இருக்குமோ என்ற எண்ணமும் இருந்தது.  சூரியன் வேறே கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்து விட்டு இன்னிக்கு மறைந்து மறைந்து எட்டிப் பார்த்தான். 

சூரியன் வரலைனதும் மேகம் வருத்தம் தாங்காமல் கண்ணீர் மழை பொழிய ஆரம்பித்தது. ஈசான்ய மூலையில் கருங்கும்மென்றிருந்தது.  முன்னாள் முதலமைச்சர் ஆட்சியில் இருக்கும்போது கட்டிய மேற்கூரைகள் நடைபாதையில் இருந்தமையால் வண்டியையும் அங்கே நிறுத்திவிட்டு நாங்களும் ஒதுங்கினோம்.  அரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது.  அதன் பின்னர் கொஞ்சம் நின்று சிறு தூற்றலாக இருக்கவே பரவாயில்லை எனக் கிளம்பினோம்.

எனக்கு உள் ஆண்டாள் சந்ந்திக்குப் போகணும்னு ஆசை.  ஆனால் நாங்க வண்டியிலே போனால் நேரே வடக்கு வாசலுக்குப் போய் வண்டியை அங்கே நிறுத்திட்டுத் தாயாரை முதலில் பார்த்து விசாரிச்சுட்டுப் பின்னர் பெருமாளைப் பார்க்க வருவோம்.  இன்னிக்கும் அப்படியே செய்தோம். வடக்கு வாசலை நெருங்கும்போதே மழை மறுபடி ஆரம்பித்தது.  ஒரு மாதிரியாச் சமாளித்துக் கொண்டு தாயார் சந்நிதிக்குச் செல்லும் மண்டபத்துக்குள்ளே நுழைந்துவிட்டோம்.  தாயார் சந்நிதியில் கூட்டம் இல்லை.  தாயாரைக் கொஞ்ச நேரம் நின்று பார்க்க முடிந்தது.  மூவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.

பட்டாசாரியார்களும் விரட்டாமல் பிரசாதம் கொடுத்து சடாரியும் சாதித்தனர். பின்னர் அங்கிருந்து பெருமாளைப் பார்க்கச் செல்லலாம் என்றால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டிட்டு இருந்தது. இவ்வளவு மழையை ஶ்ரீரங்கம் வந்து மூன்று வருஷத்தில் இப்போத் தான் பார்க்கிறோம். மழை நிற்க அரை மணிக்கும் மேல் ஆகி விட்டது.  அதன் பின்னர் பெருமாள் சந்நிதிக்குப் போனால் இலவச தரிசனக் கூட்டம், 50 ரூ. கூட்டம், மூத்த குடிமகன்கள் தரிசனக் கூட்டம் என்று மூன்று வரிசை நிற்க எனக்கு மயக்கமே வந்துவிட்டது.  இது போதாது என்று வைகுண்ட ஏகாதசி உற்சவ ஏற்பாடுகள் நடப்பதால் எல்லாவற்றையும் மாற்றி இருந்தனர். 

அப்புறமா வேறே வழியில்லாமல் இவ்வளவு தூரம் வந்துட்டோம், பெருமாளைப் பார்க்காமல் போகக் கூடாது என நினைத்து 250 ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டு போனால் அங்கேயும் கூட்டம்!  ஜய, விஜயர்கள் கிட்டே  இருந்து உள்ளே குலசேகரன் படிக்குப் போகவே அரை மணிக்கும் மேல் ஆகிவிட்டது. உள்ளே பெருமாளைப் பார்த்தால் திடீர்னு வயது குறைந்து காட்சி அளித்தார்.  ஒரே சிரிப்பு வேறே.  அவரைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நம்பெருமாள், "என்ன,என்னைக் கவனிக்கலையே"னு கேட்க, "நீங்க தான் இன்னும் இரண்டு நாள் போனால் வெளியே வந்து காட்சி கொடுப்பீங்களே!" னு சொன்னேன்.  என்றாலும் அவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.  அதே நமட்டுச் சிரிப்பு.  பக்கத்தில் இரு தேவியரையும் இன்று நன்கு பார்த்துக் கொண்டேன்.  திரும்புகையில் மறுபடி ஒரு தரம் பெரிய பெருமாளைப் பார்த்துக் கொண்டேன்.  மார்பில் மணிமாலைகள் புரளக் கண்ணை நன்கு திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். 

அங்கிருந்து திரும்பினால் அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் வழியா வர வழியைக் கம்புகள் போட்டுத் தடுத்துட்டு, சேனை முதலியார் சந்நிதி வழியா வடக்கே சுவர்க்க வாசல் போற வழியிலே விட்டுட்டாங்க. நேரே அந்த வடக்கு வாசல் திறந்திருந்தாலும் தாயார் சந்நிதி கிட்டக்க.  போயிருக்கலாம்.  படிகளில் இறங்கினதும் பிரகாரம் வந்துடுது. படிகளில் ஏறும்போது தங்க கோபுரத்தை இந்தப் பக்கமிருந்து தரிசிக்கலாம்னு பார்த்தேன்.  அப்புறமா காமிரா கொண்டு வரலையேனு தோணிச்சு.  பரவாயில்லைனு செல்லில் எடுத்தேன்.  மழை பெய்து கொண்டிருந்ததாலும் வெளிச்சம் சரியா இல்லாததாலும் சுமாரா வந்திருக்கு. இல்லாட்டி ஒழுங்கா எடுத்துடுவியானு ம.சா. கேட்குது.  அதுக்கு இதே வேலை. இப்போக் கொஞ்ச நாட்களா நான் கண்டுக்கிறதில்லையா. கோபம் வேறே.  வந்த வரை படத்தைப் போடறேன். சிரிக்காமப் பாருங்க.  நானும் ஒரு நாளைக்குக் காமிரா எடுத்துட்டுப் போய் அனுமதி வாங்கிட்டுப் படம் எடுக்கணும்னு நினைக்கிறேன்.  நினைப்பிலேயே இருக்கு. :



நடுவிலே திருப்பணிக்கான வேலைகள் நடப்பதால் சாரங்கள் எல்லாம் தெரியுது. திருப்பணி முடியட்டும். மறுபடி முயல்கிறேன்.

17 comments:

  1. விமான தரிசனத்துக்கு மிக நன்றி கீதா. ஆடினாலும் விமான அழகுக் கலையவில்லை.இன்னும் 13 நாட்கள் இருக்கே ஏகாதசிக்கு. அதற்குள்ள இத்தனை ஏற்பாடுகளா. அழகு. உங்க வழியா ரங்கன் இங்க வந்துவிட்டான். நன்றி மா. ஸ்ரீரங்கத்தில் மழையா.அதிசயமா இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, 22 ஆம் தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் ஆரம்பம். ஏகாதசி வரை. அதுக்கப்புறமா இராப்பத்து! தசமி வரையோனு நினைக்கிறேன். :)))) இங்கே இந்த வருஷம் மழை பரவாயில்லை. இன்னிக்கு இப்போத் தான் சூரியன் எட்டிப் பார்த்திங். அப்புறமா அவரோட மூடைப் பொறுத்துக் காய்வார் இல்லைனா ஒளிஞ்சுப்பார். :))))

      Delete
  2. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

    மதுரையிலும் காலை முதல் நசநச என்று மழை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இங்கே நல்லாவே மழை வெளுத்து வாங்கியது.

      Delete
  3. என் திருமணம் முடிந்து கரூரில் இருந்து திரும்புகையில் 2008ல் அரங்கனை முதன்முதலில் தரிசித்து அருள் பெற்றேன்! பின்பு சென்றதில்லை! கூட்டம் நிறைந்திருப்பதால் கோபுர தரிசனத்தோடு திருப்தி பட்டுக்கொள்வதோடு சரி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அப்போதைக்கு இப்போது இன்னமும் கூட்டம் ஜாஸ்தி! இன்னும் ஒரு மாதத்துக்குப் பணம்கொடுத்துப் பார்க்கக் கூடக் கஷ்டப்படணும். :)

      Delete
  4. திருச்சி ரங்கநாத சுவாமியை தரிசனம் செய்த உணர்வு சற்று மேலோங்கியது
    தங்களது "கோபுரமாம், கோபுரம், தங்கத்திலே கோபுரம்!" படிக்கும் போது!
    வைகுண்ட ஏகாதேசிக்கு முன்னோட்டம் போன்று உள்ளது. அழகு! அருமை
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (எனது இன்றைய பதிவு நாராய்! இளந் நாராய்! கவிதையை காண வாரீர்)

    ReplyDelete
    Replies
    1. வந்தேன், நாரையைக் கண்டேன். வைகுண்ட ஏகாதசி ஜனவரி ஒன்றாம் தேதி. டிசம்பர் 22 ஆம் தேதி உற்சவம் ஆரம்பம்.

      Delete
  5. இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது....? நீங்கள் தொடருங்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, டிடி, நாம படம் பிடிச்சிருக்கிற அழகு நமக்கே சிப்பு சிப்பா வருதில்ல! அதான்! :))))

      Delete
  6. யாரு நம்பெருமாள்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, நம்பெருமாள் உற்சவர். இந்தியா முழுசுக்கும் சுத்தினவர் இவர் தான். சரியான ஊர்சுத்தி! இப்போவும்! :)

      Delete
  7. நானும் போய் ரொம்ப நாளாகி விட்டது. கூட்டம் தெற்கு வாசலுக்கு வேலையாக போகும் போதே தெரியுது. சபரிமலை பக்தர்கள், வெளிநாட்டவர்கள்னு அமர்க்களமா இருக்கு. இங்கிருந்தே கோபுர தரிசனம் செஞ்சாச்சு...:) நன்றி மாமி.

    ReplyDelete
    Replies
    1. நான் படித்த உங்களின் முதல் வலைப்பூ.. மிக நல்ல naration.

      Delete
    2. வாங்க பானுமதி. நல்வரவு. என்னோட வலைப்பூவில் முதலாவதா? இல்லாட்டி நீங்க படிக்க ஆரம்பிச்சதிலே முதலாவதா? :))))

      Delete
  8. தங்ககோபுரதரிசனம் செய்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! நன்றி.

      Delete