Monday, December 29, 2014

திருப்பாவைக் கோலங்கள்

பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


உதயன் கோலங்கள் க்கான பட முடிவு

வீட்டு மாடம், அல்லது வீடு மாதிரிக் கோலமோ போடலாம். இல்லத்தைக் குறித்துச் சொல்லி இருப்பதால் மாடக் கோலமும் போடலாம்.
உதயன் கோலங்கள் க்கான பட முடிவு

செழிப்பாக வளர்ந்ததால்  பால் தானாகச் சொரிந்து இல்லத்தையே சேறாக்குகின்றனவாம் எருமைகள். ஆகையால் வீட்டுக்குள் நுழைய முடியாமல், வீட்டின் வாசல் நிலைக்கட்டையைப் பிடித்துக் கொண்டு பனியில் தொங்கும் பெண்கள் விடாமல் தோழியை எழுப்புகின்றனர்.  இங்கேயும் ராவண வதம் புரிந்த ராமனைக் குறித்தே மனதுக்கு இனியான் எனச் சொல்கிறாள் ஆண்டாள்.  அத்தகைய இனியானைப் பாடக்கூட வாய் திறக்கமுடியாமல் தூங்குகிறாயா?  என்ன ஒரு பெருந்தூக்கம், கும்பகர்ணன் தோற்கும்படியாக என வசை பாடுகிறாள் ஆண்டாள்.

பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

புள் எனப் பறவைகளைக் குறித்துச் சொல்லி இருப்பதால் பறவைகளைக் கோலமாக வரையலாம். ஆனால் இங்கே சொல்லி இருக்கும் பறவை அரக்கனாக இருந்து பறவை வடிவில் வந்த பகாசுரனைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.




இந்த மாதமே கண்ணனையும் அவன் லீலைகளையும் குறித்து நினைந்து ஆனந்திக்கும் மாதம்.  அத்தகைய தண்மையான மாதத்தில் குள்ளக் குளிரக் குடைந்து தண்ணென்ற நீரில் நீராடாமல் இருக்கும் தோழியைத் தூக்கமாகிய இருட்டிலிருந்து விழிப்பு என்னும் வெளிச்சத்திற்கு வரச் சொல்கிறாள் ஆண்டாள். இங்கே தூக்கம் அறியாமை என்னும் இருளையும், ஞானம் என்னும் வெளிச்சத்தை விடிவெள்ளியாகவும் மறைபொருளாகச் சுட்டப்படுகிறது.

ராவணனை வதம் செய்த சாக்ஷாத் அந்த மஹாவிஷ்ணு என்னும் நாராயணனை, பறவை வடிவெடுத்து வந்த அரக்கனையும் பிளந்து தள்ளிய கண்ணன் அவதாரத்தில் வந்த நாராயணனின் நாமத்தைச் சொல்லாமல் தூக்கம் என்னும் பெரும் இருட்டில் ஆழ்ந்திருக்கும் தோழியை அதோ பார், வெள்ளி முளைத்தது, வியாழம் உறங்கப் போயிற்று.  நீயும் எழுந்திரு என்கிறாள் ஆண்டாள். 

12 comments:

  1. கோடு கோலமாய் இருப்பதின் மேலேயே நெளிக் கோலம் அதே டிசைனில் போட்டது போல இருக்கிறது.

    :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கோலத்திலும் நிபுணர்????

      Delete
  2. பாடல் விளக்கம் அருமை.
    கோலங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete
  3. அழகான விளக்கம்! சிறப்பான கோலம்! நன்றி!

    ReplyDelete
  4. இப்போதெல்லாம் பால் கிடைப்பதேயில்லை. ஆனால் மாடுகள் தானாக பால் சொறிந்து சேறாக்குகின்றன. பால் சேறு...
    அதுவும் தோழிகள் வீட்டின் வாசல் நிலைக்கட்டையைப்பிடித்துக்கொண்டு.. கற்பனை பண்ணும்போதே அழகாக இருக்கின்றது. அறியாமை எனும் இருள் அகற்றி ஞானம் எனும் வெளிச்சமேற்றிய ஆண்டால் எல்லோர் மனதையும் ஆண்டாள். பறவைக்கோலம் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க விச்சு, பால் கிடைக்கலையா? ஆச்சரியமா இருக்கே!

      Delete
  5. சிறப்பான விளக்கம் அம்மா....

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றி.

      Delete
  6. கோலங்கள் வெகு அழகு. பொல்லா அரக்கனைக் கிள்ளிகளைந்தவன் நம் மனக் குறைகளையும் நீக்கட்டும். மே லே மார்கழிப் பனி. காலடியில் பால் வெள்ளம் .நடுவில் நின்று ஆண்டாள் விளிக்கும் அழகு அருமை நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி கற்பனை செய்து பார்த்து ரசித்தமைக்கு நன்றி

      Delete