Tuesday, January 13, 2015

திருப்பாவைக் கோலங்கள்!

பாடல் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    


   


இன்று கடைசி நாள்.  போகிப் பண்டிகை.  ஆகவே படிக்கோலம் என்று சொல்லப்படும் மணைக் கோலம் போடலாம். விதவிதமாக அழகு செய்யப் பெண்களுக்குச் சொல்லியா தர வேண்டும்?


வங்கம் என்றாலே கடலையே குறிக்கும் சொல்.  இங்கே அது பாற்கடலைக் கடைந்ததைக் குறிக்கும். கேசி என்னும் அரக்கனைக் கொன்றதால் கேசவன் எனப் பெயர் பெற்றான் கண்ணன்.  "மாதவன்" என்னும் பெயருக்குப் பல அர்த்தங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  "மா"என அழைக்கப்படும் ஶ்ரீ ஆகிய தாயாரின் கணவன் என்னும் பொருளிலும்,  மது வித்தை மூலம் உணரப்படும் பரம்பொருள் மாதவனாக ஆதி சங்கரராலும்,  மௌனம், தியானம், யோகம் ஆகியவற்றால் உணரப்பட்டு சித்தம் போன போக்கில் போகாமல் நிலைநிறுத்த உணரப்படுபவனாகப் பராசர பட்டராலும், "மா" எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவனாக ஹரி வம்சத்திலும் அறியப்படுகிறது.

இத்தகைய மாதவனை, கேசவனை அழகிய திருமுகத்தை உடைய கோபியர்கள் ஆகிய தாங்கள் அனைவரும் அவன் திருவடிகளைச் சரணம் என்று சென்று அவனை தரிசித்து இறைஞ்சி பாவை நோன்பின் விரத பலன்களைப் பெற்று வந்த விபரங்களை ஶ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த பட்டர் பிரான் ஆன பெரியாழ்வாரின் செல்வத் திருமகள் ஆன கோதையாகிய நான் சொன்ன இந்த இனிய தமிழ்ப்பாடல்கள் முப்பதையும் தவறாமல் இந்த தனுர் மாதத்தில் பாவை நோன்பு நூற்றுச் சொல்லுபவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் அழகிய உயர்ந்த அகன்ற தோள்களை உடைய செந்தாமரை போன்ற விரிந்த கண்களை உடைய திருமாலின் அருள் பெற்று அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.

16 comments:

  1. விளக்கத்திற்கு நன்றி அம்மா....

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு நன்றி டிடி.

      Delete
  2. சிறப்பான விளக்கம்.

    படிக்கோலமும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு நன்றி வெங்கட்!

      Delete
  3. நான் போட்ட கோலமும் உங்கள் பதிவில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன் என்று எழுதி இருக்கும் கோலம்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கோலம் என்று இப்போதே தெரிந்தது கோமதி. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  4. மார்கழி முடிகிறது. பலருக்கும் பதிவெழுத மூளையை கசக்க வேண்டி இருக்கும்....! உங்கள் பதிவு ஒரு ஆராய்ச்சிப் பதிவு அல்லவா.?

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் ஆராய்ச்சி எதுவும் பண்ணலை. மனதில் பட்டதை அவ்வப்போது பகிர்ந்தேன். பதிவு எழுத விஷயத்துக்குக் குறைச்சலும் இல்லை! :)

      Delete
  5. கோலங்கள் பிரமாதம். கிலேசத்தைப் போக்கும் கேசவன் என்றேன்றும் நன்மை தரட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, உங்களுடன் பேச முடிந்தது ஆறுதலாக இருந்தது. நன்றிம்மா. பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  6. கோலங்களும் விளக்கமும் அழகு கீதா மேம் :)

    ReplyDelete
  7. கோலங்கள் அழகு.

    ஜி எம் பி ஸார் சொல்லியிருப்பது : "மார்கழி முடிகிறது. பலருக்கும் பதிவெழுத மூளையை கசக்க வேண்டி இருக்கும்....!"

    அதானே!

    :)))))

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நமக்கு விஷயத்துக்குப் பஞ்சமே இல்லை ஶ்ரீராம். :)

      Delete
  8. அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், நன்றிப்பா.

      Delete