நேத்து வீட்டு பால்கனிக்கு வந்த விருந்தாளிங்க. முதல்லே ஒருத்தர் மட்டும் வந்து தனியா உட்கார்ந்திருந்தாங்க. அவங்க கோவிச்சுண்டு வந்திருப்பாங்க போல! அப்புறமாக் கூட்டமாகப் பத்துப் பேர் வந்து ஒரே இரைச்சல்; பஞ்சாயத்து நடந்தது போல! சிறிது நேரத்துக்கெல்லாம் மத்தவங்க பறந்து போக எஞ்சி இருந்த மூவரை மட்டும் பால்கனிக் கதவுக்கு இந்தப்பக்கம் இருந்து படம் எடுத்தேன். காமிரா எடுத்துட்டு வரதுக்குள்ளே ஓடிட்டால் என்ன செய்யறதுனு கைபேசி மூலமே எடுத்தேன். கதவைத் திறக்கவும் முடியலை. கதவைத் திறந்தாலும் ஓடிடுவாங்க. அதனால் வந்தது போதும்னு எடுத்தது இது. இன்னொரு நாள் பால்கனிக் கதவைத் திறந்து வைச்சுட்டு அவங்க வரச்சே எடுக்கணும். கீழே இருக்கும் படம் கூகிளார் கொடுத்தது. இவங்க தான் வந்த விருந்தாளிங்க! தவிட்டுக்குருவியார்!
Saturday, June 06, 2015
வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க!

அழகான படங்கள்.
ReplyDeleteமட்டில்லா மகிழ்ச்சி. அதருமமிகு சென்னையை தாண்டி, ஒம்மாச்சி ஊரில் நான் இருக்கும் வாசஸ்தலத்தில் தவிட்டுக்குருவிகள் ஜாஸ்தி. அப்றம் பொம்மனாட்டிகள். சத்தமில்லை என்ற அச்சத்துக்கு இடமே இல்லை.
Deleteஇ; வேறு யாரா இருக்கமுடியும்?
நன்றி ஶ்ரீராம்.:)
Delete"இ" சார், சரியாச் சொன்னீங்க, அதருமமிகு சென்னைனு! ஆனால் இந்தக் காலத்தில் எல்லா இடங்களுமே அதருமம் மிகுந்து தான் இருக்கு! :( ஒண்ணும் சொல்ல முடியவில்லை! தவிட்டுக்குருவிகள் அம்பத்தூர் வீட்டில் ஒரு பட்டாளமே உண்டு. எந்நேரமும் கூச்சலாகவே இருக்கும். இங்கே கிளிகளும் கொஞ்சும் மைனாக்கள் பேசும், புறாக்கள் கூவும், குயில், அக்காக்குருவி, செம்போத்து எனப் பறவைகளின் குரலை வைத்து அடையாளம் காண்பேன். நடுவில் தேன் சிட்டு (இதுக்கு நான் விசிலடிச்சான் குஞ்சு னு பேர் வைச்சிருக்கேன்.) தன் சின்ன உடம்பில் இவ்வளவு பெரிய குரலா என ஆச்சரியப்படுத்தும். :)
Deleteஅழகான விருந்தாளிகள்!
ReplyDeleteவாங்க ரஞ்சனி நன்றி.
Deleteஜன்னல் வழியே எடுத்த படங்களைப் பார்த்தபோது காகங்களோ என்று நினைத்தேன்
ReplyDeleteகிட்டப் போனால் கொஞ்சம் அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் கிட்டப் போக யோசனை, பறந்துடுமோனு! அதான் சரியாத் தெரியலை. அதோடு பால்கனிக் கதவு வேறே சாத்தி இருந்தோம்.
Delete