Sunday, August 30, 2015

படத்துடன் தேப்லா! :) வந்து சாப்பிடுங்க!

தேப்லா

ரொம்ப மாசம் கழிச்சு நேத்திக்குத் தேப்லா பண்ணினேன்.காலம்பர செய்த மோர்க்குழம்பு மீந்து போச்சு! இங்கே தான் கொடுக்க யாருமே இல்லையே! ஆகவே மோர்க்குழம்பைச் செலவு செய்த மாதிரியும் இருக்குமேனு தேப்லா பண்ணிட்டேன். பொதுவா தேப்லாவுக்கு சோம்பு முழுதாகவோ அல்லது சோம்புப் பவுடரோ போடுவேன். நேத்திக்கு அதெல்லாம் போடலை. அதோட பச்சைமிளகாய், இஞ்சிப் பொடியாய் நறுக்கிச் சேர்ப்பேன். நேத்திக்கு அப்படியும் போடலை. பச்சை மிளகாய் பாதி, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் பச்சைக்கொத்துமல்லியோடு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொண்டேன். ஜீரகமும் சேர்க்கலை.

நேற்றுத் தேப்லா செய்த முறை

கோதுமை மாவு இரண்டு கிண்ணம்
கடலை மாவு அரைக்கிண்ணம்
மஞ்சள் பொடி  அரை டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்
ஓமம் போட்டிருக்கலாம். என்னமோ போடலை.
பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லியை மிக்சியில் அரைத்த விழுது
(பாதி பச்சை மிளகாய்தான் போட்டேன்.)
உப்பு தேவையான அளவு
தயிர் அரைக்கிண்ணத்திலிருந்து ஒரு கிண்ணம் வரை (மாவு பிசையப் போதுமான அளவு)
நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்


தோசைக்கல்லில் தேப்லாவைப் போட்டு எடுக்கவும் நல்லெண்ணெயோ, நெய்யோ ஒரு சின்னக் கிண்ணம் தேவை.


கோதுமை மாவு, கடலைமாவோடு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு, பச்சைமிளகாய் விழுது ஆகியவற்றை  எண்ணெயோடு நன்கு கலந்து கொண்டேன். கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியதும் சேர்த்தேன். மாவை நடுவில் குழித்துக் கொண்டு தயிரைக் கலந்து நன்கு பிசைந்து வைத்தேன். சுமார் மாலை நாலு மணி அளவில் மாவு பிசைந்து தயாராகி விட்டது. ராத்திரி ஏழு மணிக்குப் பண்ண 3 மணி நேரமாவது ஊற வேண்டாமா?

பின்னர் ராத்திரி தேப்லா பண்ணினேன். சப்பாத்திக்கல்லில் சப்பாத்தி போல் இட்டுக் கொண்டு தேவையானால் உள்ளே நெய் தடவி மடித்துப் போட்டு இட்டுக் கொண்டும் போடலாம். அல்லது அப்படியே மெலிதாக இட்டும் போடலாம். நேற்று உள்ளே நெய் தடவிப் போட்டேன். கீழே படங்கள்.

தோசை வார்க்கும் தோசைக்கல்லிலேயே சப்பாத்தி பண்ணுவதில்லை. சப்பாத்திக்கு எனத் தனியாகக் கல் வைத்திருக்கிறேன். இரும்பில் உள்ள பிடி போட்ட தோசைக்கல் தான் என்றாலும் கல் என்று சொல்லியே பழக்கம் ஆகிவிட்டது. :)


இரண்டு நாட்கள் வரை இந்தத் தேப்லா கெட்டுப் போகாது. நன்றாக இருக்கும்.




பிசைந்து வைத்த மாவு




சப்பாத்திக்கல்லில் மாவு






அடுப்பில் வேகும் தேப்லா



16 comments:

  1. சரியா படிக்காம, அவசரத்துலே,
    கோதுமை மாவு அரைக்கிண்ணமும்
    கடலை மாவு இரண்டு கிண்ணமுமொ போட்டிருக்கேன் போல
    இருக்கு.
    இப்ப என்ன செய்யறது சொல்லுங்க...

    ஹெல்ப். ஹெல்ப்.
    கியவி வந்து கத்சரியா படிக்காம,
    கோதுமை மாவு அரைக்கிண்ண்ணமும்
    கடலை மாவு இரண்டு கிண்ணமும் போட்டு இருக்கேன்
    போல இருக்கு.

    இப்ப என்ன செய்யறது?

    எஸ். ஓ. எஸ்.
    ஊட்டுக் கிழவி வந்து கத்துவதற்கு முன்னாடி சரி பண்ணனும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. சுப்பு சார், கவலையே வேண்டாம்! சேர்க்க வேண்டியதெல்லாம் சேர்த்துட்டீங்களா. அதனால் பரவாயில்லை. தயிரோ, தண்ணீரோ ஊற்றிக் கலக்கும் முன்னர் அந்த மாவைப் பாதி எடுத்து வைச்சுட்டு அதிலேயே இன்னும் கொஞ்சம் கோதுமை மாவைப் போட்டுக்குங்க! சரியாயிடும். இன்னொரு நாளைக்குத் தேப்லா பண்ண அந்த எடுத்து வைச்சிருக்கும் மாவைப் பயன்படுத்திக்கலாம். :)

    ReplyDelete
  3. செய்ததே இல்லை, சாப்பிட்டதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்க ஶ்ரீராம்! :)

      Delete
  4. சூப்பர். இப்பதான் தேப்லா என்று ஒரு படசணத்தை கேள்விப்படுறேன்

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிபி, இது பட்சணம் இல்லை. சப்பாத்தி மாதிரி ஒரு ஆகாரம்! :) இரவு உணவுக்காகச் செய்தேன்.

      Delete
  5. பெயரே கேள்விப்பட்டதில்லை செய்து சாப்பிட்டதும் இல்லை. செய்து பார்க்கலாம் ஒரு முறை.

    ReplyDelete
    Replies
    1. குஜராத்தில் பிரபலம் ஐயா. செய்து பாருங்கள்.

      Delete
  6. இதோ வந்துட்டேன்...

    நீங்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்... நன்றி....

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. எனக்கு நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. தனியாய் வர இயலாது என்பது முதல் பிரச்னை! பார்க்கலாம்.

      Delete
  7. sappitta madhiri erukku

    ReplyDelete
  8. மும்பை அத்தை சொல்லிக் கொடுத்த சப்பாத்தி. ரொம்ப நன்றாக இருக்கும்,. மருமகள் வெகு நேர்த்தியாகச் செய்வாள்.
    ரொம்ப நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. எல்லோருக்கும் இது பிடிக்கிறதில்லை. :)

      Delete
  9. கேள்விப் பட்டது இல்லை! வித்தியாசமா இருக்கு! செய்து பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் சுரேஷ்!

      Delete