Friday, December 11, 2015

மஹாகவிக்கு அஞ்சலி!

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

தீம்தரிகிடபக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது

பாயுது-தாம்தரிகிடதக்கத் ததுங்கிடத் தித்தோம்-அண்டம் சாயுது சாயுது

சாயுது-பேய் கொண்டு தக்கை அடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டியடிக்குது மின்னல்-கடல் வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்-கூ கூவென்று விண்ணைக் குடையுது

காற்று.சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது

வானம் எட்டுத் திசையும் இடிய-மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி-தலை ஆயிரந்தூக்கிய சேடனும்
பேய் போல் மிண்டிக் குதித்திடுகின்றான்

-திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்;

-என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்! கண்டோம், கண்டோம்,

கண்டோம்-இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு  கண்டோம்.!

பாரதியார் க்கான பட முடிவு

இன்று மஹாகவிக்குப் பிறந்த நாள். இப்போதைய நிலைமையில் பலருக்கும் இது குறித்து நீனைவு இருந்தாலே பெரிய விஷயம். எனினும் மழை கன மழையாகப்  பெய்வது பாரதியின் காலத்திலும் இருந்தது தானே! அப்படி ஒரு கனமழையில் நடந்தது குறித்துப் பாரதி பகிர்ந்திருக்கிறார். அப்போது மழை குறித்து எழுதிய இந்தப் பாடலை அவர் நினைவு நாளில் பகிர்கிறேன். கடும் புயலுடன் கூடிய மழையிலும் தெய்வீகத்தை அவரால் காண முடிந்தது. ஆனால் நம்மால் முடியவில்லை! :(  இப்போது அடித்தது புயலும் இல்லை! கனமழையும் அதன் மூலம் பெருகிய வெள்ளமும் தான்! இதைத் தவிர்த்திருக்க வேண்டும்! அதற்கும் கையாலாகாமல் இருந்துவிட்டோம். வருங்காலத்திலாவது அதற்கேற்றவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என இந்த நாளில் உறுதி பூணுவோம். 

4 comments:

  1. வாழ்க அவர் புகழ்!

    ReplyDelete
  2. பாரதி.... மங்காத புகழ்.... என்றைக்கும் தொடரட்டும்.....

    ReplyDelete
  3. பாரதி புகழ் ஓங்குக.

    ReplyDelete
  4. பாடல் பெயர் ?

    ReplyDelete