Friday, February 12, 2016

சோள இட்லி மாவில் செய்த சோள தோசை!


நேற்றைய சோள இட்லி மாவில் இன்று வார்க்கப்பட்ட சோள தோசை! தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி கீழே!


16 comments:

  1. ஆஹா வித்தியாசமாக இருக்கின்றதே... ரெண்டு பார்சல் அபுதாபி.....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இந்தியா வரச்சே வாங்க! செய்து தரேன்.

      Delete
    2. Pramadham! Norway Kum oru dosai parcel pannungalen!!

      Delete
  2. அருமையா வந்திருக்கு கீதா. சோளமாவும் உளுந்தும் சேர்த்து அரைத்ததா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, சோள மாவு இல்லை. சோள ரவை! முந்தின பதிவையும் பார்த்துடுங்க! புரியும்! :)

      Delete
  3. சோள மாவில் சூடான தோசையும், தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியும் அருமையோ அருமை.

    :) பார்த்தாலே பசியைக் கிளப்புது :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, நன்றி வைகோ சார்!

      Delete
  4. ஏதோ பதிவில் படித்த நினைவு இட்லி மிச்சமானால் அதிலிருந்து உப்புமா அதுவும் மிஞ்சிப் போனால் அதிலிருந்து கொழுக்கட்டை அதுபோல் இட்லி மாவு மிஞ்சினால் தோசை எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு ஒரு வாரத்துக்குத் தேவையாக மாவு அரைத்துக் கொள்ளப்படும் முதல் இரு நாட்கள் இட்லி பின் இரு நாட்கள் தோசை அதன் பின்னும் வெரைட்டியாகத் தோசை சோள மாவில் தோசை மெலிதாக வார்க்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், இட்லி மீதமாகும் அளவுக்கெல்லாம் செய்வதில்லை. கணக்குத் தெரியும் என்பதால் கணக்காகவே செய்வது வழக்கம். மிஞ்சி எல்லாம் போகாது. ஆகவே எங்க வீட்டில் இட்லி உப்புமா என்பதே கிடையாது! மற்றபடி இட்லிமாவு, தோசை மாவுனு அரைப்பதில்லை என்பதால் அதையே இட்லியாகவும் செய்வோம்; தோசையும் செய்வோம். சோள மாவில் தோசை மெலிதாக வருகிறது.

      Delete
  5. கொஞ்சம் தித்திப்பாய் இருக்குமோ...!

    ReplyDelete
    Replies
    1. இல்லை, சாதாரண தோசையே கொஞ்சம் இளமஞ்சள் கலரில் இருக்கிறாப்போல் தான் இருக்கு! எனக்குத் தெரிஞ்ச ஒரு ஹோட்டல் காரர் தோசைக்கு அரைக்கையில் கொஞ்சம் சோளம் சேர்ப்போம்னு சொல்லி இருக்கிறார். தோசை பொன் நிறத்துக்கு வருவதற்காகச் சேர்ப்பார்களாம். நான் உளுத்தம்பருப்போடு இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்புச் சேர்ப்பேன். தோசை பொன்நிறமாக வருவதோடு முறுகலாகவும் இருக்கும்.

      Delete
  6. தினம் சோளம் போட்டால் பின்னூட்டம் போடுபவர்கள் எல்லோரும் ஓடி விட்டார்கள் போல!! ஓடிஸா பயணத்தை சீக்கிரம் முடியுங்கோ.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே ஜேகே அண்ணா! அதெல்லாம் யாரும் ஓடலை! எக்கச்சக்கப்பார்வையாளர்கள்! பின்னூட்டம் குறைவாக இருக்கேனு பார்த்தாப் பார்வையாளர்கள் நிறைய! ஜி+ இல் + செய்தவர்களும் அதிகம்! :)

      Delete
  7. இட்லி ரவை ன்னு நினச்சு ரவை(சூஜி) யை போட்டுட்டேன்:( ratio இட்டலி மாதிரிதான் போட்டேன். இப்ப எதோ வேற மாதிரி இருக்கே மாவுன்னு பாத்தா ! ரவையைப் போட்டுட்டோம்னு தெரிஞ்சது. அத்தனை மாவையும் என்ன பண்ண ? சொல்லவும் ப்ளீஸ் . முழிக்கும் ஜே !! இட்லியா வாத்தா வருமா?

    ReplyDelete
    Replies
    1. ரவை போட்டு ரொம்ப ஊறக் கூடாது. ரொம்ப ஊறி விட்டதெனில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டுக் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து ஊத்தப்பமாக வார்க்கலாம். அல்லது கரைத்து தோசையாக வார்க்கலாம். வைஃபை மவுஸ் சரியாக இல்லாமையால் கருத்துச் சொல்லவோ, பதிவு எழுதிப் போடவோ முடியலை. மடிக்கணினியில் மவுஸ் இல்லாமல் எனக்குச் சரியா வரலை! :(

      Delete
    2. அதிசயம் ஆனால் உண்மை! இன்னிக்கு இங்க வெய்யில் 32* நல்லா மாவு பொங்கீருந்தது. ரவை கொழ கொழன்னு இருக்குமோன்னு ஒரு டேபிள் ஸ்பூன் இட்லிரவை கலந்து எடுத்து பிரிட்ஜ் ல வச்சுட்டு வேலைக்கு போயிட்டேன் சாயந்திரம் எல்லாரும் இட்டலி வரும்னு உக்காந்துண்டு இருந்தா! வெளில சொல்லல செஞ்ச தப்பை. கடவுளேன்னு வேண்டிண்டே வாத்தா இட்டலி first class .நிஜம்மாவே soft இட்டலி . தொட்டுக்க உங்க
      பெப்பர் கொத்ஸை modify பண்ணி தக்காளி வெங்காயம் ரெட் பெப்பர் போட்டு பண்ணியாச்சு. :))))

      Delete