Wednesday, July 21, 2021

சித்தப்பாவும் சுஜாதா வீட்டுக் காஃபியும்!

 இன்னிக்குக் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்திருக்கேன். கால் வலி எல்லாம் குறைந்தாலும் வீக்கம் குறையவில்லை. இரண்டு கால் பாதங்களிலும் வீக்கம் வருகிறது/மறைகிறது. மீண்டும் வருகிறது.  நோய்க்கிருமிகளால் உண்டான நச்சுப் பூராவும் வெளியே வரணும். மெதுவாகத் தான் சரியாகும் என்கிறார் மருத்துவர். ஆனால்  ஊன்றும்போது இருந்த கடுமையான வலி இப்போது இல்லை. என்றாலும் கால்க் கணுவைச் சுற்றிய வலி இன்னும் குறையணும். வலக்காலில் குறைந்திருக்கு. அது போல் இடக்காலில் குறையவில்லை. எப்போ எழுந்து சகஜமான நடமாட்டம் வரும்னு புரியலை. எல்லா உம்மாச்சிங்களையும் வேண்டிண்டாச்சு. இனி அவங்க பொறுப்பு!

*************************************************************************************

குட்டிக் குஞ்சுலு விதம் விதமாகக் கோணங்கி எல்லாம் பண்ணுகிறது. எங்களைப் பார்த்தால் ஏதேனும் புத்தகம்/பொம்மையை வைத்துத் தன் முகத்தை மறைத்துக் கொள்ளும். அதை அவ அப்பா எடுத்தால் சிரிக்கும்/ இல்லைனா சில சமயம் கத்தும். சில சமயம் அதுவே அந்தப் பொம்மையைக் காட்டி இதான் பேபி என்று சொல்லும்/ நாங்க அதைத் தான் கொஞ்சணுமாம். கொஞ்சினால் இப்போல்லாம் காதைப் பொத்திக்கறது. அது பேபி இல்லையாம். ஆகவே கொஞ்சக் கூடாதாம். விளையாட்டுக் காட்டும். புத்தகத்தில் வர்ணங்கள் வரைந்து காட்டும். பசில்ஸில் சிலவற்றைப் போட்டுக் காட்டும். எல்லாம் செய்யும் சமயம் ஐ பாட் பார்த்துட்டால் உடனே ஐ பாட் தான்! காமிக்ஸ் பார்க்கணும்! ஒரே ரகளையா இருக்கும். எங்களுக்கு டாட்டா சொல்லச் சொன்னால் அவளோட பேபியின் கையை அசைத்து டாட்டா காட்டுவாள். ஃப்ளையிங் கிஸ் கேட்டால் அவள் பேபி மூலம் தான் வரும். அது கொடுக்காது.  காலம்பர எழுந்தால் பல் தேய்க்க, பால் குடிக்க ஒரே ரகளை! ஓட்டம் காட்டுகிறது. அப்பா, அம்மாவுக்கு நல்ல உடல் பயிற்சி! 

***********************************************************************************

சில நாட்கள் முன்னர் எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் திரு ஜீவி அவர்கள்பூ வனம் வலைப்பக்கச் சொந்தக்காரர், எழுத்தாளர்கள் பற்றிய ஏதோ பேச்சில் சித்தப்பா திரு சுஜாதாவின் மரணத்திற்குப் பின்னான இரங்கல் கூட்டத்திற்குப் போனதாகவும், அங்கே சுஜாதாவின் வீட்டுக் காஃபி நன்றாக இருக்கும் என்று சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கியதாகவும் எழுதி இருந்தார். இதற்கு என்னையும் துணைக்குச் சேர்த்திருந்தார். நான் யாரோ அவரை அங்கே கொண்டு விட்டதாகச் சொன்னதாகச் சொல்லி இருக்கார். 

உண்மையில் நடந்ததே வேறே! சித்தப்பாவைக் கொண்டு விட்டதாக நான் சொன்னது அநேகமாக ஜெயலலிதா கொடுத்த விருது வாங்கும் விழாவுக்கு என நம்புகிறேன். இது பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். ஆகவே இப்படிச் சொல்லி இருக்கேன். என் நினைவு சரியானால் அது இந்த விழாவில் தான் மேடை ஏறுவதைப் பற்றிக் குறையாகச் சித்தப்பா சொன்ன நினைவு. வயதாகிவிட்டதால் மேலே ஏறச் சிரமமாக இருந்ததைச் சொல்லி இருந்தார்.  ஆனால் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்திற்கு (அப்படி ஒன்று நடந்திருந்தால்) சித்தப்பா போகவே இல்லை என்பது நூற்றுக்கு நூறு சதம் உண்மை. திரு சுஜாதா அவர்களுடன் வீட்டுக்கு எல்லாம் அடிக்கடி போய் வந்து கொண்டு அப்படி எல்லாம் நெருங்கிய பழக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பழக்கம் உண்டு. ஆகவே சுஜாதா இறந்ததும்  2008 ஆம் ஆண்டில் சித்தப்பா யார் துணையும் இல்லாமல் தானே சுஜாதாவின் வீட்டைத் தேடிக் கொண்டு சென்றார். அங்கே அவருக்குக் கொஞ்சம் உடல் நலம் இல்லாமல் போக அவரைச் சில நண்பர்கள் ஆட்டோ பிடித்து வீட்டில் கொண்டு விட்டிருக்கின்றனர். இது தான் சித்தப்பா சுஜாதா வீட்டிற்கு முதலும்/கடைசியுமாகப் போனது. சுஜாதா இறந்த சமயம் ஹிந்துவில் இருக்கும் அவருடைய 3 ஆவது பிள்ளை ராமகிருஷ்ணன் ஊரிலேயே இல்லை. ஆகவே அவருக்குத் தகவல் பின்னர் தான் தெரியும்.  சுஜாதாவுக்கு இரங்கல் கூட்டத்திற்குச் சித்தப்பா போகவில்லை என்பதையும் திரு ராமகிருஷ்ணன் உறுதி செய்தார். 

இதை எல்லாம் கடந்த நாட்களில் விசாரித்து அறிந்து கொண்டு எழுதுவதற்காகவே இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தேன். சித்தப்பாவின் கடைசி மகன் என் ஊகத்தை உறுதி செய்தார். இப்படி ஒன்று நடக்கவே இல்லை என உறுதியாகக் கூறினார்.  யார் யாரோ சித்தப்பா பற்றி மட்டும் இல்லாமல் அவங்களுக்குத் தெரிந்த மறைந்த எழுத்தாளர்கள்/பிரபலங்கள் பற்றிக் கதையை அவிழ்த்து விடுகிறார்கள். அது போலத்தான் இதுவும். சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் சித்தப்பா அவர் வீட்டுக் காஃபி நன்றாக இருக்கும் என்று சொன்னதாய்க் கூறுவதும். அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் யாரும் இப்படிக் கூற மாட்டார்கள். இன்னும் என்னென்ன இருக்கோ! தெரியலை!

35 comments:

  1. கால் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது நல்ல செய்தி.  முற்றிலும் சீக்கிரம் குணமடையவேண்டும்.  முற்றிலும் குணமாகும்வரை நடபபதைக் குறையுங்கள்.  IG Paint போட்டீர்களா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஐஜி பெயின்ட் போடலை ஶ்ரீராம். பையர் அமேசானில் ஆர்டர் செய்து ஒரு ஆயின்மென்ட்/க்ரீம் வாங்கி அனுப்பி இருக்கார். சிநேகிதி ஒருத்தர் சொன்னார். அது தடவிக் கொண்டேன். கொஞ்சம் மாறுதல் தெரிகிறது. தொடர்ந்து பயன்படுத்திப் பார்க்கணும். BENGAY Cream/Ointment

      Delete
  2. குகுவின் விளையாட்டுகள் சுவாரஸ்யம்.  எனக்கு என் தங்கையின் பேத்தி நினைவுக்கு வருகிறாள்.  

    ReplyDelete
    Replies
    1. நேற்றும் வந்திருக்கு. நான் எட்டரைக்கே போய்ப் படுத்துட்டேன். பார்க்கலை. பாட்டி எங்கே என்று தாத்தாவிடம் கேட்கும்.

      Delete
  3. சித்தப்பா பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்திருக்கிறீர்கள்.  எங்கெங்கோ படிப்பதை மனம் தன்னுள் பதிய வைத்துக் கொண்டு விடுகிறது.  எங்கு என்று தெரியாவிட்டாலும் படித்த விஷயம் மனதில் நின்று விடுகிறது போலும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், எந்த விழாவில் எதைப் பற்றிப் பேசுவது என்பது தெரியாத மனிதர் அல்லவே! மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. தம்பியிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவரும் எல்லாவற்றையும் தீர விசாரித்து (பத்திரிகையாளர் அல்லவா) பின்னர் என்னிடம் உறுதி செய்தார்.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    தாங்கள் இப்போது கொஞ்சம் நலம் பெற்று வருவது குறித்து கொஞ்சம் சந்தோஷம். இன்னமும் முற்றிலும் குணமாகி பழையபடி சிரமமின்றி எழுந்து நடமாட நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக நம் பிராத்தனைகள் பலித்து அந்த நாட்கள் விரைவில் வந்து விடும். கவலைப்பட வேண்டாம்.

    தங்கள் பேத்தியின் குறும்புகளை உங்களுடன் சேர்ந்து நானும் ரசித்தேன். குழந்தையின் குறும்புத்தனமான பேச்சும், செய்கைகளும் உங்களுக்கும் சற்று மன மாற்றத்தைத் தரும். அடிக்கடி பேத்தியை ஸ்கைப்பில் வரச் சொல்லி,பேசுங்கள். அதுவே ஒரு சந்தோஷத்தை தந்து கொஞ்சம் வலிகளுக்கு ஆறுதலாக இருக்கும். தங்கள் மகளின் உடல்நிலை (வயிற்றுப்பிரச்சனை) இப்போது எப்படி உள்ளது. நலமாக உள்ளாரா?

    தங்கள் சித்தப்பாவை பற்றி தாங்கள் மனம் திறந்து எழுதியதை புரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா இன்னிக்கு ஆடி முதல் வெள்ளி என்பதால் காலை விளக்கேற்றிவிட்டு வரணும்னு இருந்தேன். முடியலை. மத்தியானமாப் படுத்துட்டேன். இப்போத் தான் வர முடிந்தது. உங்கள் கருத்துக்கு நன்றி. பெண்ணின் வயிற்றுப் பிரச்னையும் உணவு மாறாமல் இருந்தால் தொந்திரவு தருவதில்லை.

      Delete
  5. இன்னுமே கால்வலி குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    குகு வின் லீலைகள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பரவாயில்லை நெல்லை. குகுவின் விஷமங்கள் தான் சமயத்தில் பொறுக்க முடியலை. ரொம்ப விஷமம்.

      Delete
    2. ரொம்ப விஷமம் இருந்தால் ரொம்ப புத்திசாலியாவும் வருவாங்க...சுறுசுறுப்பாவும் இருப்பாங்க. அதனால சந்தோஷமே கொள்க

      Delete
    3. நன்றி நெல்லை.

      Delete
  6. எப்படி இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  7. கால் ஊன்றும்போது ஏற்பட்ட கடுமையான வலி இப்போதில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி! விரைவில் சகஜமான நடமாட்டம் வந்து விடும். கவலைப்படாதீர்கள்! பாதங்களில் வீக்கம் அடிக்கடி ஏன் வருகிறது? சில சமயம் இரத்த அழுத்தத்துக்கான மருந்துகளாலும் [ example:Amlodipine] வரும். டாக்டர் என்ன சொன்னார்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! நேற்றெல்லாம் கெண்டைக்கால் வீக்கம், வலி அதிகமாக ஆகிவிட்டது. மருத்துவர் மீண்டும் சர்க்கரை, யூரியா கிரியாட்டினைன் எடுக்கச் சொல்லி எடுத்துப் பார்த்தாச்சு. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பின்னர் நானே அவரிடம் நரம்புகள் தான் இழுத்துக் கொண்டு காலைப் பதிக்கையில் வலியை அதிகமாக்குகிறது என்பதை விளக்கினேன். காலைச் சுற்றிக் கொலுசு போடும் இடமெல்லாம் வலி! இன்னிக்கு முழுக்க ஓய்வாக இருந்ததில் இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. ரத்த அழுத்தத்துக்கான மருந்தும் ரொம்பவே வீரியம் குறைந்த மருந்து தான்.

      Delete
  8. கால் வலி - விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

    குழந்தையின் குறும்புகள் நன்று.

    ReplyDelete
  9. ரொம்பப் புலம்பறேனோ? பதிவு போணியே ஆகலை!

    ReplyDelete
    Replies
    1. மனதில் இருப்பதை வெளியில் சொல்லிவிட்டால், கொஞ்சம் மனது சாந்தமடையும்... கஷ்டங்கள் குறையும்.

      Delete
    2. அதான் சொல்லிட்டேன். :)

      Delete
  10. கால் சிறிது சுகம் என கூறியுள்ளீர்கள் நலமாக வேண்டுகிறோம்..ஓய்வில் இருங்கள்.
    குஞ்சுலுவின் சுட்டித்தனம் ரசனை. மகிழ்ந்திருங்கள் . எனது பொழுதுகள் வேலையுடன் பேரனுடன் இனிதாக களிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மாதேவி, இன்று சில வேலைகளைச் செய்து கொண்டேன். துணி உலர்த்துவது, பாத்திரம் ஒழிப்பது போன்றவை. விரைவில் சரியாகணும். குஞ்சுலு தான் ஒரே ஆறுதல்.

      Delete
  11. கால் வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையட்டும்.. அதைப் பொறுத்துக் கொள்ளும் வல்லமையை அம்பாள் தந்தருள்வாளாக...

    ஓம் சக்தி ஓம்..

    ReplyDelete
  12. குஞ்சுலுவின் குறும்புகளில் மன மகிழ்ச்சி.. எங்கள் வீட்டு வாண்டும் இப்படித்தான்..

    எங்கும் நலம் விளையட்டும்...

    ReplyDelete
    Replies
    1. கோடி துக்கம் போகும் ஒரு குழந்தையின் முகத்தால் என்பார்கள். சுற்றுப்புறமே பிரகாசமாக ஆகிவிடுமே குழந்தைகளால். உங்க வீட்டு வாண்டுக்கும் ஆசிகள்.

      Delete
  13. எப்படியோ புதிய ஏவாரம் ஒன்று தொடங்கி இருக்கின்றது...

    சம்பந்தமான சம்பவம் ஒன்று நடந்த போது பிறந்தே இராதவர்கள் - அதைப் பற்றி விளக்க் முற்படுகின்றார்கள்..

    புராண இதிகாச வரலாற்றுச் செய்திகளில் வாய் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது தனிப்பட்டவர்களையும் விட்டு வைக்கவில்லை..

    எல்லாம் வயிற்றுக்காக என்று ஒதுங்கவும் முடியவில்லை... சஞ்சலம் தான் மிச்சம்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை. யாரோ, எங்கோ சொன்னவற்றை நிஜம் என நம்பிக்கொண்டு பகிர்ந்து கொள்பவர்களை என்ன சொல்வது? வயிற்றுக்குனு தெரியலை. வம்புக்குனு தான் தோன்றுகிறது.

      Delete
  14. வலி குறைய பிரார்த்தனைகள்.
    விரைவில் நலம்பெற வேண்டும். என் மகனும் உங்கள் மகன் அவர்கள் வாங்கி தந்த மருந்து அனுப்புவான், வரும் போது வாங்கி வருவான். எப்போதும் வீட்டில் இருக்கும் இந்த மருந்து.

    பேத்தியின் குறும்புகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.
    சித்தப்பாபற்றிய செய்திகளை தம்பியிடம் கேட்டு தெரிந்து கொண்டு பகிர்ந்தது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. என்னோட பிரச்னைகளில் நீங்கள் இணையத்தில் வராததே தெரியலை, கமலாவின் கருத்துரையில் இருந்து தெரிந்து கொண்டேன். இந்த பிங்கே ஆயின்மென்ட் போட ஆரம்பித்ததும் கொஞ்சம் பரவாயில்லை. சுமார் பத்து நாட்கள் கழித்துக் கொஞ்சம் வேலைகள் செய்தேன். குஞ்சுலு இன்னும் சற்று நேரத்தில் வரும். சித்தப்பா பற்றிய செய்தி மனதில் உறுத்தலாக இருந்தது. அதான் தீர விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னர் எழுதினேன்.

      Delete
  15. அன்பு கீதாமா,
    உடல் நலம் தேறட்டும்.
    பென் கே ரொம்ப நல்ல மருந்து.
    1996 லிருந்து இதுதான் என் முட்டி,
    பாதம் ,கழுத்து என்று
    கவனித்துக் கொள்கிறது.

    குஞ்சுலு வளர விஷமமும் வளர்கிறது.
    அது என்ன செய்யும் ?கட்டிப் போட்ட மாதிரி எங்கேயும் போக முடியவில்லை.
    நல்ல வேளை ஸ்கூல் இருக்கே.

    சுஜாதா சார் இரங்கல் மீட்டிங்க் இருந்தது.
    நான் போயிருந்தேன். உங்கள் சித்தப்பாவைப்
    பார்த்த நினைவில்லை.

    வயதான ஜெயகாந்தன், பாலு மஹேந்த்ரா இவர்கள்
    பேசினார்கள்.
    வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ பேச்சுக்கு
    பதிலே வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி. 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே பயன்பாட்டில் இருக்கா? தெரியாமல் போச்சு. எனக்கு இப்போத் தான் மின் தமிழில் அறிமுகம் ஆன ராஜம் அம்மா கலிஃபோர்னியாவிலிருந்து இதைக் குறித்துத் தகவல் அனுப்பினாங்க. இதோடு சேர்து ஐசி ஹாட்டும் சொன்னாங்க. அது இருக்கு வீட்டில். அதோடு அது எனக்குத் தடவினால் தோலில் எரிச்சல் வருது என்பதால் பயன்படுத்துவது இல்லை. அவர் தான் போட்டுப்பார். இது நல்ல உபயோகமா இருக்கு.

      சித்தப்பா சுஜாதாவின் இரங்கல் சந்திப்புக்குப் போகலைனு தெரியும். இருந்தாலும் தெரிந்து கொண்டு எழுதினேன். நீங்க சொல்றாப்போல் இருக்கணும்னு பார்த்தாலும் சில சமயம் முடியலை.

      Delete
  16. உங்கள் கால் வலி முற்றிலும் விரைவில் குணமாக பிரார்தனைகள். குழந்தையின் குறும்புகள் ரசனைக்குரியவை.
    பிரபலமானவர்கள் இருக்கும் பொழுதும், இறந்த பிறகும் வதந்திகள்:((

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி. எல்லாவற்றிலிருந்தும் விடுமுறைனு சொன்னீங்க போல! பேத்தி வந்தாச்சா? குப்புறத்திக் கொண்டு நீந்த ஆரம்பிச்சுட்டாளா? யார் மாதிரி இருக்கா? (இப்போ ஒண்ணும் தெரியாது, ஆனாலும் எல்லோரும் கேட்பது) வீடே கலகலனு இருக்கும். ஒரு குழந்தை இருந்துவிட்டால் நமக்கு ஆயிரம் வேலை வந்துட்டாப்போல் இருக்கும். அத்தனை கவலையும் அது சிரிக்கையில் ஓடிப் போயிடும். பார்த்துப் பார்த்துச் செய்யத் தோன்றும்.

      Delete