Friday, December 17, 2021

மர்மம் என்ன சொல்லுங்க!

 எங்கள் ப்ளாக்


மேற்கண்ட சுட்டியில் உள்ள எ.பியின் இந்தப்பதிவில் நான் கீழ்க்கண்ட கருத்துக்களைக் கொடுத்தால் இரண்டோ, மூன்றோ தான் போயிருக்கு! மற்றவை தெரியவில்லை. :)))))) என்ன காரணமாய் இருக்கும்? நேற்று ரேவதியின் ஊஞ்சல் பதிவிலும் கருத்து இருமுறை கொடுத்தும் போகவே இல்லை. :))))



 Geetha Sambasivam "வெள்ளி வீடியோ : பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும் போற்றும் உறவல்லவோ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:


இந்தப் பனை மரம் பாடல் திரைப்படத்திலேயே சரோஜா தேவி வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கையில் பாடுவதாக வந்து நான் படமே பார்த்திருக்கேனே! கடைசியில் இருமி, இருமிச் செத்துப் போவார்.


கருத்தை இடுகையிடுங்கள்.


கருத்துக் கொடுத்தால் காணாமல் போகிறதே, நேற்று ரேவதி பதிவில். இன்னிக்கு இங்கே! :(


கருத்தை இடுகையிடுங்கள்.

இதுக்கு முன்னே இந்தப் பாடல் பத்திக் கருத்துச் சொல்லி இருந்தேன். படத்தில் சரோஜாதேவி வகுப்பில் பிள்ளைகளுக்காகப்பாடிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி இது என்பதாக. ஆனால் அந்தக் கருத்து எங்கே போச்சு? காக்காய்? ரோபோ? ரேவதியின் பதிவில் கூடக் கேட்டிருந்தேன். எதுவுமே வரலை. :(

இந்தப் பனை மரம் பாடல் திரைப்படத்திலேயே சரோஜா தேவி வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கையில் பாடுவதாக வந்து நான் படமே பார்த்திருக்கேனே! கடைசியில் இருமி, இருமிச் செத்துப் போவார்.

கருத்துக் கொடுத்தால் காணாமல் போகிறதே, நேற்று ரேவதி பதிவில். இன்னிக்கு இங்கே! :(

என்ன ஆச்சரியம்? நான் கொடுத்த மூன்று கருத்துகளுமே காணாமல் போய்விட்டன. ஆனால் என் மெயில் பாக்ஸில் இருக்கு.

மயக்கமே வரும்போல இருக்கே! கொடுக்கும் கருத்துகள் எல்லாம் எங்கே போகின்றன? அல்லது ஶ்ரீராம் ஒருத்தர் இத்தனை தான் போடணும்னு ஏதாவது நிபந்தனை வெளியிட்டிருக்காரா? :))))))

இப்போ ஆறிலே நாலு போய் இரண்டு, இதைச் சேர்த்தால் 3 இருக்கு!

கொனஷ்டை அர்த்தம் வேறே! குறும்பு முழுக்க முழுக்க வேறே! கண்ணன் செய்தது எல்லாம் குறும்பு. கொனஷ்டை இல்லை.

ஹாஹா, கொனஷ்டை வேறே, குறும்பு வேறேனு பதில் கொடுத்திருந்தேனே! வழக்கம் போல் காணோம். அல்லது ஏணிமலை பூதம் தான் வந்து விழுங்குகிறதோ? தெரியலை. என்னொட மெயில் பாக்ஸில் இருப்பதால் நாளைக்கு வந்து காப்பி, பேஸ்ட் பண்ணிப் பார்க்கணும். :)))

24 comments:

  1. ஒவ்வொரு சனியன்றும்  "காணாமல் போன கருத்துக்கள்" என்று தனிப்பதிவு போடலாம்.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னமும் வெள்ளிக்கிழமை முடியலை. :))))

      Delete
    2. எபியில் உங்க கருத்து இரண்டு வந்திருக்கிறதே.
      கொனஷ்டை அர்த்தம் வேற தான்.

      குறும்பு அழகு. கொனஷ்டை ...வேற:)

      Delete
    3. ஆமாம், வல்லி, கண்ணன் செய்தவை குறும்பு எனில் அதைச் சிலர் அர்த்தப்படுத்திக்கொள்வதைக் கொனஷ்டைனு சொல்லலாம்.

      Delete
  2. ஆச்சர்யமான விஷயம்.  எப்படி காணாமல் போகிறது?  என் மெயில் பாக்ஸுக்கும் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. தெரியலை ஶ்ரீராம், இன்னிக்கு பானுமதியும் சொல்லி இருக்காங்க. ஹிஹிஹி!

      Delete
  3. நீங்கள் கொடுத்துள்ள கமெண்ட்ஸ் எல்லாம் பதிவில் இருக்கின்றனவே..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அந்தப் பதிவை மறுபடி பார்த்துச் சோதிக்கலை. நேத்தெல்லாம் முடியலை. வயிற்றுத் தொந்திரவு. படுத்துக்கொண்டே இருந்தேன். :(

      Delete
  4. எனது மின்னஞ்சலுக்கும் வந்தது (Notify me சொடுக்கி விட்டால் - அனைவருக்கும்) அப்படி வரும் போது, அங்குள்ள "கருத்துரையிடுக" சொடுக்கினால் (Browser செல்லாமல்) அங்கேயே பதிவு திறக்கும்... அங்கே கருத்துரை இட்டு பாருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். நீங்க சொல்றாப்போல் செய்கிறேன்.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    நீங்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் எங்குதான் போகிறது. கொஞ்சம் தாமதமாக போகுமோ என்னவோ? ஆனால், அதை வைத்து ஒரு பதிவை எழுதி விடலாம் என்ற ஐடியாவை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.:))) பதிவும், அதற்கேற்ற தலைப்பும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

    எனக்கும் இந்த மாதிரி சந்தேகம் வரும் போது இரண்டாவதாக ஒன்று தந்து விடுவேன். கால்வாசி நான் கைப்பேசியில் தட்டச்சு செய்பவை ஒருவருக்கு அனுப்பும் போது நெட் ப்ராப்ளம் காரணமாகவோ, இல்லை என் கை விரல்களின் தவறுதலாலோ, ஒரே நொடியில் மாயமாகி அதோகதி அடைந்து விடும். மீண்டும் தட்டச்சு செய்தவைகளை நினைவு கூர்ந்து அடித்து அனுப்புவதற்குள்.... அதனாலேயே என் கருத்துக்கள் சில நேரங்களில் தாமதமாகி விடும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கமலா! நான் பதிவாப் போட்டதுக்குக் காரணம் இந்தக் கருத்துக்களை எல்லாம் எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் தெரிஞ்சுக்கணும்னு. ஏன்னா அங்கே வரலையே! ஆனால் ஶ்ரீராம் வந்திருக்குங்கறார். போய்ப் பார்க்கணும் அப்புறமா.

      Delete
  6. Replies
    1. நிச்சயமா சதீஷ், உங்க பதிவுக்கு வரணும். நேரம் தான் சரியா வரலை. :(

      Delete
  7. நல்ல பதில்கள் கிடைத்து இருக்கிறது. திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல செய்து பாருங்கள்.

    ReplyDelete
  8. ஓ! இதை வைத்தே ஒரு பதிவா? நாங்களெல்லாம் புலம்பி விட்டு போய் விடுவோம்.இங்கதான் கீதா அக்கா நிக்கறாங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அதுக்காகவெல்லாம் நிற்க முடியுமா? உட்கார்ந்துண்டேன். :)

      Delete
  9. இதுவும் ஒருவகை திப்பிலி பதிவுதான் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அது "திப்பிசப்" பதிவுகள். சமையலில் மட்டும். இங்கே இது தேவைனு போட்டது தான் இது. :)))))

      Delete
  10. அக்கா என் கருத்துகள் போகாமலேயே படுத்தியதே கொஞ்ச நாட்கள் முன்பு. ப்ளாகர் எரர் எரர் என்று வந்துகொண்டேட் இருக்கும் என்ன முயற்சி செய்தும். அப்போது ஸ்ரீராமிடம் புலம்புவேன். கருத்து போட்டுவிட்டு அங்கு செல்கிறது என்றால் கமென்ட் மாடரெஷன் வைத்திருக்கும் நீங்கள் கோமதிகக வெங்கட்ஜி, வல்லிம்மா எல்லாரிடமும் கருத்து வந்ததா என்றும் கருத்திலேயே கேட்பதும் உண்டு!! ஹாஹா

    இது நல்ல ஐடியா கீதாக்கா கருத்து போகவில்லை என்றால் இப்படி பதிவாகப் போட்டுவிடலாம் அல்லது மெயிலில் கொடுத்துவிட்டு அவங்களையே எடுத்துப் போடவும் சொல்லலாம் என்ற ஐடியா இப்போது எனக்குத் தோன்றியுள்ளது!!!!

    நான் எல்லாம் புலம்பியிருக்கிறேனே தவிர இப்படி ஐடியா வந்து செய்யவில்லை!!ஹிஹிஹி

    நல்ல ஐடியாவிற்கு மிக்க நன்றி கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கெல்லாம் ஆரம்பத்தில் பதிவுகளே காணாமல் போய்ப் பின்னர் திரும்பக் கிடைச்சிருக்கு. அப்போதும் இப்படித்தான் பதிவு காணாமல் போனதில் இருந்து ஆரம்பித்துச் சொல்லிப் புலம்புவேன். :)))) ஹிஹிஹிஹி, பதிவு ஒண்ணு தேறுமே!

      Delete
  11. உங்களுக்கும் செல்லவில்லையா? கருத்துகள் போகவில்லை அதனால் உன் கருத்துகளைப் பதியமுடியவில்லை என்று இடையில் கீதா சொன்னதுண்டு. தற்போது போகிறது என்று தெரிகிறது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துளசிதரன், அடிக்கடி போவதில்லை. ஏதோ சின்னத் தொழில் நுட்பப்பிரச்னை.

      Delete