எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 19, 2025

திருமணம் ஆக வேண்டி பிரமசாரிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

 இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய

புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.

----

விரைவில் திருமணம் நடக்க ஸ்வயம்வர கலா மந்திரம்:


இதற்கு த்யானம் நியாஸம் எல்லாம் உண்டு. குரு மூலமாகவே உபதேசம் ஆகி ஜபம் செய்ய வேண்டும்.

அதனால் இங்கே இரண்டாம் பட்ச த்யான ஸ்லோகம் மட்டுமே தரப்படுகிறது.

தேவையானவர்கள் குரு முகமாக உபதேசம் பெறுக.


த்யானம்:


சம்பு4ம் ஜக3ந் மோஹன ரூப பூர்ணம்


விலோக்ய லஜ்ஜாகுலிதாம் ஸ்மிதாட்4யாம்


மதூ4கமாலாம் ஸ்வஸகீ2 கராப்4யாம்


ஸம்பிப்ரதீ4ம் அத்3ரி ஸுதாம்ப4 ஹேஜம்



மூல மந்த்ரம்:


 குரு முகமாக உபதேசம் பெற்றே ஜபிக்க வேன்டும். அப்படி உபதேசம் கிடைக்காவிடில் கீழ் காணும் த்யான மந்திரத்தை ஜபிக்கவும்.


ஸ்மர மதன வரணலோலா மந்மத ஹேலா விலாஸ மணிசாலா |


கனகருசி சௌர்ய சீலா த்வமம்பக பா3லா கராப்3ஜ த்ருத4 மாலா ||


மன்மதனை சிக்ஷித்த சிவனை வரிக்க ஆசை உள்ளவளும் மன்மத லீலைக்கு மணிமயமான சாலையாக இருப்பவளும் ஸ்வர்ண வர்ணமானவளும் கையில் ஸ்வயம்வர மாலையுடையவளுமாக இருக்கிறாய். ஓ அன்னையே! எனக்கும் விரைவில் விவாஹமாகும்படிச்செய்.


[நித்யம் காலை 108 முறை ஜபிக்கவும்]

4 comments:

  1. நன்றி கீதா அக்கா.  ஆம், நீங்கள் எனக்கு அனுப்பி இருந்தீர்கள்.  

    ReplyDelete
  2. என்ன ஜபித்தாலும் விதிப்படிதான் நடக்கும் என்று எனக்கு 24 ல்தான் வெற்றி கிடைத்தது!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்... இது பற்றி எனக்கு வேறு எண்ணம் உண்டு. நாம தீவிரமாக நினைத்து, மனத்தை ஒருமுகப்படுத்தி ஜபித்தால் விரைவாக நடக்கும். இருந்தாலும் அதற்கான நேரம் வரணும் என்பது உண்மைதான். ஆனாலும் இப்படி வேண்டிக்கொள்ளலாமா என்பது கொஞ்சம் சிந்திக்கத்தகுந்தது.

      Delete
  3. ஆம். 20 ல் அனுப்பி 24 ல்தான் சித்தி ஆயிற்று.

    ReplyDelete