எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 01, 2026

தொழிலாளர் தினம்!

இன்னிக்குத் தொழிலாளர்கள் தினம் எனக் குறிப்பிட்ட கட்சியினர் கொண்டாடுகின்றனர். ஆனால் தொழிலாளர்கல் சுகமாகவும் சௌகரியமாகவும் வாழ அவர்கள் ஏதேனும் உதவி இருக்காங்களா என்றால் இல்லைனே சொல்லணும். அவர்களோட முக்கிய எதிரிகள் தொழிலதிபர்கள் தான். இத்தனைக்கும் தொழிலதிபர்கள் தொழிலாளர்களுக்கு வேண்டிய சம்பளம், போனஸ், குழந்தைகள் படிப்பில் உதவி, மருத்துவ உதவி, தினசரி உணவு கொடுத்தல் எனப் பல உதவிகள் செய்தாலும் இவர்கள் திருப்தி அடைவதில்லை.

தொழிலாளர்களுக்காக அந்தக் குறிப்பிட்ட கட்சி என்ன செய்தது? அவங்களை வேலை இழந்து திண்டாட விட்டதைத் தவிர்த்து? கல்கத்தாவிலும் சென்னை, அம்பத்தூரிலும் இருந்த வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த டன்லப் தொழிற்சாலை மூடப்பட்டது இவங்களாலே தான். தொழிலாளர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய ஒரு பெரிய தொழிற்சாலை முழுக்க முழுக்க மூடப்பட்டுப் பல தொழிலாளர்கள் தெருவில் விடப்பட்டனர். தொழிலாளர் தினம் என்றால் தொழிலாளர்கள் மும்முரமாகவும் ஆர்வமாகவும் தொழிலில் ஈடுபட்டுப் பெருக்கத் தானே வேண்டும்? அதை விடுத்துத் தொழிலதிபர்களை எதிர்ப்பதால் கிடைப்பது என்ன?  அம்பானியையும், அதானியையும் மட்டும் கார்ப்பரேட் தொழிலதிபர்கள் என்போர் நம் நாட்டின் தொலைக்காட்சி சானல்கள் நடத்துபவர்களை யாரென நினைக்கிறார்கள்? அதுவும் ஒரு கார்ப்பரேட் தொழில் தானே? மேலும் இந்தத் தொழிலதிபர்களால் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் எளிய மக்கள் இவை இல்லை எனில் என்ன செய்வார்கள்? நாம் எல்லாப் பக்கமிருந்தும் யோசிக்க வேண்டாமோ? கீழே காபி, பேஸ்ட் பண்ணி இருப்பது முகநூலில் கோடீஸ்வரன் சம்பத் என்பவருடைய பதிவு. இதைப் படிக்கையிலேயே மனம் கொதித்தது. இதுவரை எங்க குடும்பத்தில் நான் அடைந்த அவமானங்களையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த நான் இதைப் படித்ததும் என் மன நிலையை மாற்றிக் கொண்டேன்.

திரு கோடீஸ்வரன் சம்பத் என்பவர் முகநூலில் எழுதிய பதிவின் காப்பி, பேஸ்ட் இங்கே:- அவர் அனுமதி பெற முடியலை. ஏனெனில் மறுபடியும் இந்தப் பதிவைத் தேடினால் எனக்கு அது வரலை. :(  அனுமதிக்காகக் காத்திருந்ததால் தாமதம்.

1977-78களில் ஒரு நாள்: 

வழக்கம்போல பிர்லா நிறுவன தலைவர் திரு.ஆதித்ய பிர்லா, காலை கல்கத்தாவின் ரைட்டர் பில்டிங் (முதல்வர் அலுவலகம்) சாலையில் உள்ள இண்டியா எக்ஸ்சேஞ் கட்டிடத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்துக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்...

வழியெங்கும் கொண்டாட்டம், கம்யுனிசம் மாநில தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி முதல்முறையாக பதவி ஏற்க இருந்த நேரம். முதல்வர் அலுவலகம் அருகே பெருமளவு தொண்டர்கள் கூடியிருந்தனர்...

சிறிது நேரத்தில் ஜோதிபாசு அங்கே வர இருந்த சூழல். அந்த நேரம் பிர்லாவின் கார் அந்த சாலையில் நுழைய "முதலாளித்துவம் ஒழிக" என கத்திக் கொண்டே காரை சூழ்ந்தனர்...

அங்கே என்ன நடந்தது என்பதை அறியும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். 1900 முதல் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு கல்கத்தாவை ஒட்டி இருந்தது...  

இந்திய GDP-யில் 1/3 கிட்டத்தட்ட 35% கல்கத்தாவின் உழைப்பு. சணல், எஞ்சினியரிங், டெக்ஸ்டைல் என பலதரப்பட்ட தொழில்களில் முன்னோடியாக இருந்த மாநிலம்...

டாட்டா, பிர்லா என ஜாம்பாவான்கள் தங்கள் தொழிற்சாலைகளை அங்கே பெரும் முதலீடு செய்து அமைத்திருந்தனர்...

காரை சூழ்ந்த கம்யுனிச தொண்டர்கள் கண்ணாடிகளை உடைத்தனர். ஆதித்ய பிர்லாவை வெளியே இழுத்தனர். ஆளாளுக்கு அவரை தள்ளுவது, அடிப்பது, ஆடைகளை கிழிப்பது என வெறியுடன் தாக்கினர்... 

அவருடைய சட்டை பேண்ட்டை உருவி எறிந்தனர். அவமானத்தில் கூனிக் குறுகி நிற்க முடியாமல் நின்றவரை பார்த்து நகைத்தனர். அதற்குள் கார் முழுமையாக சிதைக்கப் பட்டுவிட்டது. பிர்லாவின் டிரைவர் கெஞ்சினார். அனைவரின் கால்களில் விழுந்தார்...

பிர்லாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டார். கூட்டம் வழிவிட்டு கைதட்டி ஆர்ப்பரித்தது. உள்ளாடைகளுடன் மெதுவாக நடந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த தன் அலுவலகத்தை அடைந்தார்...

அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரை கண்டு அதிர்ந்தனர். அவர் அமைதியாக தன் அறையை அடைந்து கதவை சாற்றிக் கொண்டார். இதற்குள் தகவல் தெரிந்த காங்கிரஸ் தலைவர்கள் அங்கே வர, யாரையும் சந்திக்க மறுத்து விட்டார்...

1-2 மணி நேரத்தில் இந்த செய்தி கல்கத்தா முழுவதும் பரவ பத்திரிகையாளர்கள், முதல்வர் அலுவலகம், பிர்லா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்...

ஜோதிபாசுவிடம் பிர்லா தாக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு சிரித்துக் கொண்டே இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறிவிட்டு நகர்ந்தார்...

அன்று மாலை வரை அலுவலகத்தின் உள்ளேயே இருந்த பிர்லா, வீட்டிலிருந்து வேறு ஆடை, கார் வர, யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்...

அடுத்த நாள் காலை கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு சென்றார். மும்பை பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து ஆறுதல் சொல்ல முயல, இதற்குள் பிரதமர் அலுவலக ஃபோன் வர, ஒரே வரியில் பதிலளித்தார்...

இனி பிர்லா குழுவுக்கும் மே.வங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. அடுத்த பத்து வருடத்தில் மொத்த பிர்லா தொழிலும் மகராஷ்டிரா, குஜராத் என மாறியது...

1977-2011 கம்யுனிசத்தின் கோர பிடியில் சிக்கிய மே.வங்கம் இன்று பாரத அளவில் 24வது இடம். ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமிருந்து தொழிலாளர்கள் மே.வங்கம் பிழைக்க சென்றனர்...

ஆனால் கம்யுனிசம் வந்த பிறகு, மே.வங்க தொழிலாளர்கள் பாரதமெங்கும் பிழைக்க சென்றனர். கிட்டத்தட்ட 35 ஆயிரம் தொழில்கள் இந்த காலகட்டத்தில் மாநிலத்தை விட்டு வெளியேறின...

உலகின் மிகச் சிறந்த எளிமையான ஒழுக்கமான முதல்வர் எனப் போற்றப்பட்ட ஜோதிபாசு, மே.வங்கத்தை சீரழித்தார். ஆனால் அவரின் ஒரே வாரிசு சந்தன்பாசு மிகப்பெரிய தொழிலதிபர், பங்களாதேஷ், மே.வங்கத்தில் பல தொழில்களை நடத்துகிறார்...

ஜெய்ஹிந்த்...!

6 comments:

  1. இதனை முன்பே படித்திருக்கிறேன்.

    பல தொழிலதிபர்கள் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலையிலும் பல நல்ல செயல்களைச் செய்துள்ளனர். இருந்தாலும் பேராசை காரணமாக தொழிலைச் சீரழித்த யூனியன்கள் அனேகம்.

    ReplyDelete
  2. இந்தத்தொழிலாளர் பிரச்னையை ஒட்டிவிட்டு வந்த கதைகளில் ஒன்று அன்பே சிவம்!  சம்பளம் ரூபாய் தொள்ளாயிரத்து பத்து!

    ReplyDelete
  3. அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சி என்றில்லை, எல்லா அரசியல் கட்சிகளின் கொள்கையுமே போலிதானே..

    ReplyDelete
  4. பிர்லாவுக்கு நேர்ந்த அவமானம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  அவர் எடுத்த முடிவும்!

    ReplyDelete
  5. ஆனால் அதற்குப் பிறகும் கூட மேற்கு வாங்க மக்களுக்கு புத்தி வரவில்லை போல..

    ReplyDelete
  6. எந்தக் கட்சியாக இருந்தாலும் அவரவர் ஆதாயம் மட்டுமே கவனிக்கும். இப்போதும் மேற்கு வங்கத்தில் பிர்லா குழுமத்தினர் தங்களது அலுவலகங்களை நடத்தி வருகிறார்கள்.

    மேற்கு வங்கத்தில் முன்பு கம்யூனிஸ்ட்காரர்கள் பிரச்சனைகள் செய்தார்கள் என்றால் இன்றைக்கு மம்தா கட்சியினர். நிறைய பிரச்சனைகள் அங்கே உண்டு. நண்பர் ஒருவர் பெங்காலி - அவர் மூலம் பல விஷயங்களை நான் கேட்டிருக்கிறேன். முன்பு தில்லியில் இருந்தவர், தற்போது கொல்கத்தாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அதற்கு எவ்வளவு பிரச்சனைகளைச் சந்தித்தார் என்பதைச் சொல்லி இருக்கிறார்.

    எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகிறது மேற்கு வங்கம்!

    ReplyDelete