Friday, February 15, 2013

மின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க!

தாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலின் தளத்துக்கு ஏறியதும் அங்கே இருக்கும் மணி மண்டபம்.  மணி மண்டபம் என்றதும் ஏதோ நினைவுச் சின்னம் என்றே நினைத்தேன்.  ஆனால் அது இல்லையாம்.  இங்கே இருந்து தான் மணி அடிக்கப்படும் என்கிறார்கள். 


மேலே தான் உச்சிப் பிள்ளையார் சந்நிதி.

உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் படிகள்.  மணி மண்டபத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியதும் காணப்படும் இந்தப் படிகளில் ஏறித்தான் பிள்ளையாரைப் பார்க்கப் போக வேண்டும்.  படிகள் பார்க்கச் சின்னவையாக இருந்தாலும் ஏறுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.  கவனமாக ஏற வேண்டும்.

உச்சிப் பிள்ளையார் சந்நிதியைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தில் இருக்கும் ஜன்னல்களில் இருந்து தெரியும் தாயுமானவர் கோயிலின் ராஜ கோபுரமும் சற்றுத் தள்ளித் தெரியும் தங்கக் கலசத்துடன் கூடிய விமானமும்.

உச்சிப் பிள்ளையார் கோயிலின் உச்சியில் இருந்து திருச்சி நகரம்.  கொஞ்சம் பனி மூடியிருந்தது.  விலகவில்லை என்பதால் படம் தெளிவாகத் தெரியவில்லை.  வந்த வரைக்கும் கொடுத்திருக்கேன்.  நல்ல மூடுபனி எட்டு மணி வரையும் இருந்தது. 

இன்னிக்குப் படம் மட்டும் பாருங்க.  விபரங்கள் நாளைக்கு எழுதறேன்.  ஆஃப்லைனில் எழுதி வைச்சுட்டு மின்சாரம் இருக்கிறச்சே பதிவுகளைப் போடணும்.  என்ன ஒரு கஷ்டம்னா ஆஃப்லைனில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எழுத வேண்டி இருக்கும்.  அதுக்கப்புறம் சார்ஜ் பண்ண மின்சாரம் இருக்குமானு தான் கவலை. :( இன்று மிக மோசமான மின் விநியோகம்.

13 comments:

  1. உச்சிப் பிள்ளையார் மண்டபம் எடுக்க முடியவில்layaa கீதா.?
    ஏறிவிட்டீர்களே.ஏற்றீவிட்டாரே:)
    படங்க்கள் கச்சிதமாக இருக்கின்றன.
    அப்பாடி ஏறியாச்சு.இனி அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் அருமை.
    மின்வெட்டு அதிகமாய் இருக்கிறது. இங்கும்.

    ReplyDelete
  3. படப் பதிவு பார்த்து விட்டேன். மின்சாரம் அவ்.....வ....ளவு மோச.....மா....வா.... இருக்குது?!

    ReplyDelete
  4. வாங்க வல்லி, உச்சிப்பிள்ளையார் மண்டபம் நேரே சந்நிதி வந்துடறதாலே எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. :(( உச்சிப்பிள்ளையாருக்கு நேர் பின்னாடிப் பிராகாரத்தில் தான் தாயுமானவர், கோபுரமும், தங்கக் கலசமும் தெரியுது. அங்கே எடுத்தோம்.

    ReplyDelete
  5. வாங்க கோமதி அரசு, நேத்துப் படாத பாடு படுத்திடுச்சு மின்சாரம். இன்னிக்கு இப்போ இந்த நிமிஷம் இருக்கு. இனிமே எப்படியோ! காலையிலிருந்து இல்லை. சமையலுக்கு அரைக்கவும், துணி தோய்க்கவும், மாவு அரைக்கவுமே நேரம் கொடுக்கிறதில்லை. :(

    ReplyDelete
  6. கெளதம் சார், ஒரு பெரிய நோ!. பெரிசு பண்ணிப் பாருங்க. :P :P :P :P

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், மின்சாரம்ங்கறதையே இன்னும் சில நாட்களில் மறந்துடுவோம். :((((

    ReplyDelete
  8. இப்போ ஒரு வாரமா மோசமா இருக்கு! :((((

    ReplyDelete
  9. படங்கள் அருமையா இருக்கு... மின்சாரம் இப்ப இங்க இல்லை...:)

    ReplyDelete
  10. கூடிய சீக்கிரம் விஞ்ச் போடறாங்களாம்

    ReplyDelete
  11. படங்கள் நன்றாக இருக்கின்றது. மலையிலிருந்து நகரம் அழகு.

    ReplyDelete