ஜோசியத்தை எத்தனை பேர் நம்பறீங்க? அநேகமா வாழ்நாளில் ஒரு முறையாவது ஜோசியம் பார்க்காதவங்களே இருக்க மாட்டாங்கனு நம்பறேன். குறைந்த பட்சமாகப் பத்திரிகைகளில் வரும் ராசி பலன்களையாவது பார்த்திருப்பாங்க. ஆனால் நம்ம ரங்க்ஸ் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் உள்ள எல்லா ஜோசியர்களையும் பார்த்துட்டார். ஊட்டியிலே இருந்தப்போ ஒரு ஜோசியரைப் பார்க்கப் புஞ்சைப் புளியம்பட்டிக்கு என்னைக் கூட்டிப் போனார்னா பாருங்களேன். அந்த ஜோசியர் ரயில் சிநேகமாம். விலாசமெல்லாம் வாங்கி வைச்சுண்டு வருங்காலத்தைத் தெரிஞ்சுக்கக் கிளம்பிட்டார் என்னையும் அழைத்துக் கொண்டு! :)))) தெருவிலே வரும் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்கனு ஒருத்தர் பாக்கி இல்லை! :))))
புஞ்சைப் புளியம்பட்டிக்காரர் சொன்னது எல்லாம் பலிச்சதா, பலிக்கலையாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். சில ஜோசியர்கள் நாட்டு பலன், தலைவர்கள் பத்தி எல்லாமும் சொல்றாங்க. அப்படிச் சொன்னவர்களிலே சிலர் சென்ற வருஷம் சென்னை வெள்ளத்தைப் பற்றி ஆற்காடு பஞ்சாங்கத்திலே குறிப்பிட்டிருந்ததாகவும், இந்த வருஷமும் அதே போல் மழை வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னாங்க. அதே போல் பிரபலமான பெண் அரசியல் தலைவர் இறப்பு பற்றியும் சொல்லி இருந்ததாச் சொல்லிட்டு இருக்காங்க. ஜெயலலிதா இறந்ததும் உடனே வர்தா புயல் வந்ததும் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொஞ்சமானும் நம்பணும்னு சொல்றாப்போல் ஆயிட்டது! மேலும் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து போனது குறித்தும் அதிலே சொல்லி இருப்பதாகச் சொல்கின்றனர். தேதி குறிப்பிட்டே அதிலே ரூபாய் நோட்டு மதிப்புக் குறைவு பத்தி வந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.
கறுப்புப் பண நடவடிக்கை குறித்தும் அதன் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அதுவும் நடந்திருக்கிறது. இனி வரப் போகும் வருடத்திற்கு என்ன சொல்லி இருக்காங்க என்று தெரியலை! எங்க வாழ்நாளில் பல ஜோசியர்களைப் பார்த்தாச்சு. பெரும்பாலானவர்கள் சொன்னது பலித்ததே இல்லை. சும்மா சாதாரணமா எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் சொன்னவங்க ஜோசியம் பலிச்சிருக்கு! என் கல்யாணமும் அப்படி ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்தது. என் கைரேகையைப் பார்த்துட்டு என் நண்பர் சிவா என்பவர் ஐம்பது வயசுக்கு மேலே நீ வெளிநாடு போவேனு சொன்னப்போச் சிரிச்சேன். ஆனால் அது உண்மையாக நடந்தது. ஆனால் பொதுவாக எனக்கு ஜோசியம் பார்ப்பதிலேயோ வார பலன்கள் படிப்பதிலேயோ அவ்வளவு ஆர்வம் இல்லை. நடக்கிறது நடக்கட்டும், வருவதை எதிர்கொள்வோம்னு இருப்பேன்.
நம்ம ரங்க்ஸ் ஶ்ரீரங்கத்திலே இருந்தவரைக்கும் காலை ஏழு மணிக்குத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுட்டு உட்கார்ந்தார் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியா ஜோசியம் சொல்றவங்க சொல்றதை எல்லாம் கேட்டு முடிச்சுட்டு ஒருவழியா அரைமனசோடு எட்டரை மணிக்கு எழுந்திருப்பார். இதிலே ஏதோ ஒரு சானலிலே ஹரிகேசநல்லூர் ஜோசியர் ஒருத்தர் சொல்லுவார். யாருக்குமே கெடுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லவே மாட்டார். எல்லோருக்குமே வாழ்க்கையில் வளம் சேரும் என்றே சொல்லுவார். இதிலே சங்கரா தொலைக்காட்சியிலே சொல்றவர் ஒருத்தருக்கும் நல்லதாவே சொல்ல மாட்டார். நம்ம ரங்க்ஸ் தான் ரொம்பவே ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டு இருப்பார். அநேகமா ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருத்தர் வீட்டிலே இருக்கிறதாலே மொத்தமும் கேட்டுப்பார்.
நான் பாட்டுக்குச் சமைச்சுட்டோ அல்லது ஏதேனும் வேலை செய்து கொண்டோ இருப்பேன், இந்த ஜோசியக்காரங்க சொல்றதைக் கேட்டு ரங்க்ஸ் என்னிடம் , "இன்னிக்கு உனக்குச் சந்திராஷ்டமம்! ஜாக்கிரதையா இரு!" னு சொல்லிடுவார். அது வரைக்கும் நல்லாச் செய்துட்டிருந்த வேலை அப்புறமாத் தடுமாறுகிறாப்போல் இருக்கும். அப்போ வர கோபம் அன்னிக்குப் பூராப் போகாது. இதெல்லாம் சந்திராஷ்டமத்தோட வேலைனு ரங்க்ஸ் சொல்ல, "நான் பாட்டுக்கு இருந்தேன், நீங்க சொன்னதும் தான் எனக்கு இப்படி ஆயிடுச்சு,"னு நான் சொல்ல ஒரு குருக்ஷேத்திரம் தான் அங்கே நடக்கும்!
எது எப்படியோ, நமக்குனு உள்ளது, நமக்குக் கிடைக்க வேண்டியது கட்டாயமாய்க் கிடைத்தே தீரும்! கடவுள் அதை நிறுத்த மாட்டார். ஆகவே இந்த ஜோசியம் எல்லாம் எதுக்குப் பார்க்கணும்? எல்லாவற்றையும் ஆண்டவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியா இருப்போம். ஆனாலும் பாருங்க, மக்களுக்கு எதிர்காலம் குறித்து அறியறதுக்குத் தான் அதிக விருப்பம் இருக்கு! இந்தியா குறித்தும் மோதி ஆட்சி குறித்தும் கூட நாஸ்ட்ரடோம்ஸ் எழுதி வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நான் தேடினவரைக்கும் புத்தகத்தில் கிடைக்கலை; அல்லது எனக்குத் தேடத் தெரியலை! எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை விட்டு விடாமல் இருக்கணும். அதான் வேண்டியது.
ஜோசியம் பாருங்க, பொழுது போக்கா வைச்சுக்கோங்க. அதையே நம்பிக் கொண்டு உங்கள் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். நாம் முயற்சி செய்வதைப் பொறுத்தே கடவுள் அனுகிரஹமும் இருக்கும். ஒண்ணுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கடவுள் மட்டும் என்ன செய்வார்! அவரும் பேசாமல் தான் இருப்பார். முயற்சி தான் திருவினை ஆக்கும்!