எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 31, 2013

மரபு விக்கியில் இருந்து பதிவர் குமரன் அளித்த ஊஞ்சல் பாடல்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட

அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

கீழே உள்ள ஊஞ்சல் பாட்டு மரபு விக்கியில் இருந்து எடுக்கப்பட்டது.




சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப்
பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே.

தங்கமே இந்தநிலமே சாமி
சுந்தராபுரி செல்வமே

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில் வெண்ணைதிருடி சாமி
மத்தாலடி பட்டீர்

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில்வெண்ணை சிந்திற்றோ சாமி
உன்கமலமுகம் வாடிற்றோ
சித்திராபுரி வீதியிலே சாமி
சிரித்தால் ஓடிவாரும்
கட்டகய ரில்லையே சாமி
உனையடிக்க மனமில்லையே
துஷ்டத்தனம் வெறுத்து சாமி
துரையே ஓடிவாரும்
நெற்றிசுற்றி யசைய சாமி
முகம்வேர்க்க பெண்கள் நகைக்க
மங்களஞ்சேர் கிருஷ்ணா சாமி
மாயவரே ஓடிவாரும்

தங்கமே இந்தநலமே சாமி
சுந்தராபுரி செல்வமே
அஷ்டாக்ஷரப் பொருளே சாமி
அடியேன் ஓடிவாரேன்

வேறு.
நலுங்கிடராம்மா மதுரைமீனாக்ஷிக்கு
நலுங்கிடராம்மா

ஆதிறட்நாலுபொய்கை அபரஞ்சிபீண்டிலா
கோதைநாச்சியாரம்மா கொலுண்டாக்கா நலுங்கிட
மல்லிகைமுல்லையுடன் மணமுள்ளயிருவாட்சி
செண்பகமலருடன் சிவசுந்தரர்க்கு நலுங்கிட

வேறு.

நலுங்கிடவாரும் பிராணநாதா நாழியாச்சுதே
அம்மிமிதித்து அருந்ததிப்பார்த்து நலுங்கிட

அழுந்தத்தாலி கட்டினீரே
பன்னீருஞ்சந்தனமும் பரிமளமிகப்பூசி நலுங்கிட
பூச்சக்ரவர்த்தி புண்ணியபுருஷா
உனக்குநான் செய்குவேன் நலுங்கிட

வேறு.

ஸ்ரீராம ஜெய ஜெய சீதாமனோகர
காருண்யசாகர கருணா ஜெய ஜெய ஸ்ரீராம
சீதையாரும் ரகுபதியும் சிங்காசன மேலிருத்தி
நலுங்கிட வேணுமென்று நாகரீகமாத ரெல்லாம் ஸ்ரீ
புண்யமான பாத்திரத்தில் புட்பமதை தானெடுத்து
கன்னிமார்கள் கொண்டுவந்து காணவந்தாரகுபதியை ஸ்ரீ
மந்தாரைமுல்லைசரம் மருக்கொழுந்துபிச்சிச்சரம்
முல்லைமலரல்லிச்சரம் முடித்தார்களிருபேரும் ஸ்ரீ

(Missing one page here)

பஞ்சபூதப்பலகை கப்பலாய் சேர்த்து, பாங்கான வோங்கார பாய்மரமும்கட்டு, அஞ்செழுத்தைக் கட்டிசரக்காக வைத்து, செந்தக்கால்சரக்கை சீனியாய் வைத்து செம்மாந்திகளும் ஆனந்தவெள்ளம் கண்டமாய்ப்போகுதே அலங்காரக் கப்பல்.

பண்டுளமாலையணி பலராஜருடன் கப்பலுக்கு, அந்தமுள்ள தீவுகளில் இருக்கும் அதிசயமாய் சரக்குகளைகொண்டு மிகத்தானேத்தி கோலவழிகப்பல் நடந்திடவே

முடுகு

சந்தணஞ் செஞ்சந்தணஞ் சூதாலிங்கம் தவறாதகருநாவிவெண்ணாவிவீரம் பண்ணானசாரம் பவவீரகுதிரை பாஷாண வெள்ளைபாஷாண எரியன்பாஷாண குக்கில்நேராணகெந்தகம் நெல்லிக்காய் கெந்தகம் ரோதகட்டாழை கிழவீரங்கி கிழமூக்கு தேவதாரக்கட்டையீய ஊசிக் கரந்தமிலவங்க வங்கங் கருவங்கத் தங்கந்துய்யமாய் பூலங்கெட்டம் பூலாங்கிழங்கும் கொம்பரக்கு மெழுகுங்கோறோசனை நல்ல குங்குமப்பூவு,

வெட்டுடாவெட்டு மரமும்முத்துக்கள் நட்டு ஈட்டம் பாத்து வெங்கலப்பானையை வண்டிமேலேத்து அஞ்சங்கி பீரங்கிடண்டடித்து, வனபேரி கனபேரிகை வாங்கிகோடு, மாணாம்புச்சாவடிக் கோபுரங்கட்டி, மலையேரிப் பார்க்கலாம் வைகுண்ட கப்பல்.

சம்மந்தி ஏசல்

அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே, வடக்குத் தெருவிலே வாழைக்காய்திருடி வாழைமட்டையால் பூசைபட்டாளே, அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே தெற்குத்தெருவிலே தேங்காய் திருடி தென்ன மட்டையால் பூசைகள் பட்டாளே, அடிபட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே மேலத்தெருவிலே மிளகாய்திருடி பனைமட்டையால்

(missing one page here)

இராகம் பைரவி.

வச்சிரவைடூரியத்தால் பலகைசேர்த்து
மரகதத்தினாலிழைத்த கால்கள் நாட்டி
உச்சிதரத்தினம்பதிக்க கொடுங்கைபூட்டி
உகந்துசாரங்கராச றாடீரூஞ்சல்
மகண்டமகரகண்டி பதக்கமின்ன
காதுதோடுகம்மல்சரம் பளபளென்ன
சங்குசக்கரங்கை சாரங்கம்தரித்தநாதன்
மங்கைகோமளவல்லியுடன் மனமகிழ்ந்து
பங்கஜாட்சருக்கும்பிதா ஆடீரூஞ்சல்
பார்புகழுங்குடந்தைவாச றாடீரூஞ்சல்

வேறு

செண்டாடினாள் ரங்கநாயகி ஸ்ரீநிவாசருடன்
மண்டலமெல்லாம் புகழும் மங்கைநாயகருடன்
குண்டுமல்லிகை குமுகுமெனவே குளிரபந்து களவரெடுக்கவே
மண்டலமெலாம் புகழும் ரங்கநாயகருடன்
தங்கவொட்டியாணம் தளதளென சரிகைப்புடைவை பளபளெனவே
நெத்தியிலிட்டகஸ்தூரிபொட்டு நிலைகட்டிகளையசையவே

கதவுதிறக்கிற பாட்டு

1. செந்திருவதனம்பெண் மங்கயரேவுந்தன்
செம்பொன்கதவைத் திறமானேயடி
இன்பக்குயிலன்னமே இப்போதே

2. கதவைத்திறவென்று யிதமாகக்கூறினீர்
கட்டழகாவுந்தன் ஊரென்னசுவாமி
உமக்கிட்டதிரு நாமத்தின்பேரென்ன

3. பேரென்னவெனக்கேட்பார் மகளேயெந்தன்
காரணிவைகுந்தத் தானடிவளர்
சோரநாதக் கள்வநானடி


http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-11-28-19-55-14/2008-11-28-19-55-57/2009-10-13-14-53-28/2009-10-13-14-53-58


நன்றி மரபு விக்கி.

Thursday, August 29, 2013

"பழ"காரங்களோடு கிருஷ்ண ஜன்மாஷ்டமி! :)

எங்க வீட்டுக் கிருஷ்ணன் நேற்றுப் பிறந்த நாள் அலங்காரம்.  வலப்பக்கம் தொட்டிலில் இருக்கும் கிருஷ்ணனை ராஜஸ்தான்,புஷ்கரில் வாங்கினோம்.  இடப்பக்கம் இருக்கும் குட்டிக் கிருஷ்ணன் யாரோ கொடுத்தது.  நடுவில் இருக்கும் தவழ்ந்த நவநீத கிருஷ்ணன் குடும்பத்துப் பரம்பரைச் சொத்து! :) என் கணவரோட முன்னோர்கள் பஞ்சாயதன பூஜை செய்து வந்திருக்காங்க.  அப்போ எல்லா சுவாமிகளோடயும் இந்தக் கிருஷ்ணனையும் வைச்சு இருந்திருக்காங்க. இவரோடு கூட ஶ்ரீதேவி, பூதேவி சமேத மஹாவிஷ்ணு, பிள்ளையார், ரிஷப வாஹனர் ஆகியோரும் உண்டு.  ரிஷப வாஹனர் விக்ரஹம் தான் கிடைக்கலை.  வாஹனம் மட்டும் கிடைச்சது. நாங்க பத்ரியில் வாங்கின லிங்கத்தையும், மதுரை மீனாக்ஷி விக்ரஹத்தையும் அதிலே வைச்சிருக்கோம். :)))




தீபாராதனையில் கிருஷ்ணரும், நிவேதனங்களும்.  கிருஷ்ணருக்கு நேத்திக்கு விரதம்.  அதோட பிறந்த குழந்தையாச்சே! :)) பல்லெல்லாம் முளைக்கலை! அதனாலே எல்லாம் "பழ"காரங்கள் தான் கண்ணனுக்கு.  குழந்தை பிறந்திருக்கிறதாலே பால் பாயசம் வைச்சேன்.  கொஞ்சமே கொஞ்சம் போல் வடை தட்டினேன். மற்றபடி அவல், வெல்லம், வெண்ணெய், தயிர், பால், (பால் அடுத்த படத்திலே இருக்கும்)ஆப்பிள், மாதுளை, கொய்யா, வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவை தான் நிவேதனம்.  ஹிஹிஹிஹி. (இந்த வருஷம் பண்டிகை கிடையாது.  ஆனால் குழந்தை பிறப்பை அலட்சியம் செய்ய முடியுமா? அதான் எளிமையாகக் கொண்டாடியாச்சு!)



இதிலே தீபாராதனைத் தட்டுக்கும் வடைக்கும் நடுவே இருக்கிறது பால்.  பால் காலை வரை வரணும் என்பதால் ஏதேனும் விழுந்து கெட்டுப் போயிடப் போகுதேனு தள்ளி வைச்சிருந்தேன்.  படத்திலே விழலை.  அப்புறமா நகர்த்தி முன்னாடி கொய்யாப் பழத்தையும் பாலையும் வைச்சுப் படம் எடுத்தேன். கிருஷ்ணர் பல் இல்லாமப் பழங்களை மட்டும் எப்படிச் சாப்பிடறதுனு கேட்டுட்டார்.  ஃப்ரூட் சாலட் பண்ணிக் கொடுத்துடறேன்னு சொல்லிட்டேன். 








Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான், மனக்கவலைகள் மறந்ததம்மா!



யதா யதா ஹி தர்மஸ்ய க்லானீர்--பவதி பாரத
அப்யுதான--ம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

எப்போதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்!

பரித்ராணாய ஸாதூனாம் விநாஸாயச துஷ்க்ருதாம்
தர்ம--ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே!

சாதுக்களைக் காப்பதற்கும் துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.

Monday, August 26, 2013

ஆசைக்கு அளவில்லை!

பொதுவா மொக்கைக்கே ஜாஸ்தி பின்னூட்டங்கள் வரும். அதிகப் பார்வையாளர்கள் இருப்பாங்க.  ஆனால் இன்னம்பூரார், சுபாஷிணி, நா. கண்ணன் குறித்த பதிவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக அதிகப் பார்வையாளர்கள் இருந்திருக்கின்றனர்.  எனக்கே  இது ஆச்சரியம் தான்.  ஆனால் நேற்றுப் போட்ட விவேகாநந்தரை யாரும் அதிகம் லக்ஷியம் செய்யவில்லை. :( போகட்டும்.  இன்னம்பூராருடன் ஆன சந்திப்புப் பதிவு தொடர்கிறது.  அது முடிஞ்சதும் தான் கோயில்கள் பத்தி எல்லாம் எழுதணும்.
*********************************************************************************

ஞாயிற்றுக் கிழமை அதிகாலையிலேயே கிளம்பும்படி வண்டியை வரச் சொல்லி இருந்தோம்.  ஆனால் கிளம்பும்முன்னர் திடீரென என் கணவருக்கு வயிற்றுக்கோளாறு வந்து பேதி ஆக ஆரம்பித்துவிட்டது.  அரை மணி நேரத்துக்குள்ளாக மூன்று முறை போயாச்சு.  என்ன செய்யறதுனு புரியலை.  பயணத்தை நிறுத்திடலாமானு எனக்குள் யோசனை.  ஆனால் அவரோ போயிடலாம், பார்த்துப்போம் என்கிறார்.  இதற்காகவென வாங்கி வைத்திருக்கும் மாத்திரையைத் தேடோ தேடுனு தேடினால் அவசரத்துக்கு அது கிடைக்கவில்லை.  மற்ற மாத்திரைகள் எல்லாம் ராத்திரியே எடுத்து வைச்சாச்சு. இது தேவைப்படும்னு யாருக்குத் தெரியும்! கையில் எடுத்துப் போக இட்லியும், தயிர்சாதமும் செய்ய நினைச்சிருந்தேன்.  இந்தக் களேபரத்தில் இட்லி மட்டும் ஒரு மாதிரியாகச் செய்து முடிச்சேன்.  சாதம் வைக்க நேரம் இருந்தாலும் புத்தி அதில் செல்லவில்லை. வண்டி கீழே வந்து காத்திருப்பதாக டிரைவர் தொலைபேசிச் சொல்லிவிட்டார்.

தைரியமாகப் போகலாம்னு கிளம்பிட்டார். சரினு அரை மனசாக நானும் கிளம்பினேன்.  இதுவே எனக்கு வந்திருந்தால் கிளம்பி இருக்க முடியுமா சந்தேகமே! வண்டியில் ஏறியும் உட்கார்ந்தாச்சு.  வயிற்றில் வலியும், கடபுடவென்ற களேபரமும் தவிர வேறெதுவும் இல்லைனு உறுதிமொழி கொடுத்தார். கொஞ்சம் மனம் சமாதானம் ஆனாலும் பூராவாக ஆகவில்லை.  கொண்டு போன இட்லியைச் சாப்பிடவும் மனம் இல்லை. ஒருவழியாகத் திருமயம் கோயிலுக்குப் போனோம்.  அங்கே அந்தக் கோயில் கோட்டைக்குக் கீழே மலை அடிவாரத்தில் இருக்கிறது. கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்து கொண்டு அருகில் உள்ள சிவன் கோயிலுக்கும் சென்றுவிட்டுத் திரும்ப வண்டிக்கு வந்தோம். கோயில் பற்றிய விபரங்கள் தனிப்பதிவாக வரும். வண்டியில் ஏறி உட்கார்ந்து அடுத்துத் திருக்கோஷ்டியூர் என டிரைவர் சொல்ல, நாங்களும் கிளம்பினோம்.  இதுவரை ஒன்றும் இல்லை;  பிழைத்தேன்.  ஆனால் சாப்பாடு சாப்பிட அவருக்கு பயம்.  ஆகவே இட்லி அப்படியே இருந்தது.

திருக்கோஷ்டியூரை முடித்துக் கொண்டு மேலே ராமாநுஜர் நாராயண நாமத்தை உலகுக்கு அறிவித்த இடம் செல்ல வேண்டுமென்றால் மேலே ஏறணும். அதுக்கு பயம்.  இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்னு வந்துட்டோம். ரங்க்ஸுக்குப் பசி ஜாஸ்தியாகவே அங்கே பிரசாதக் கடையில் லட்டு ஒன்று வாங்கிக் கொண்டோம்.  உடலில் சர்க்கரை குறைஞ்சிருக்கும்.  ஆகவே இது கொடுக்கலாம் என்று தைரியமாகவே வாங்கிக் கொண்டு அவருக்குப் பாதி கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டேன்.  அடுத்துத்  திருப்பத்தூர். அங்கே யோக பைரவர் தரிசனம் முடிச்சுத் திரும்புகையில் பசி வரதாகச் சொல்ல, இட்லிப் பொட்டலத்தை எடுத்துச் சென்று இருவரும் சாப்பிட்டோம்.  மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு சற்று நேரம் அங்கே உட்கார்ந்து பார்த்தோம். ஒண்ணும் பிரச்னை இல்லை.  மேலே தைரியமாகப் போகலாம்னு கிளம்பினோம். அடுத்து வைரவன் பட்டியும், பிள்ளையார்பட்டியும்.  அதன் பின்னர் காரைக்குடி தான்.  அங்கே பனிரண்டு மணிக்குள்ளாகப் போய்விடலாம்.  போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டு இரண்டு கோயில்களையும் முடித்துக் கொண்டோம்.  வைரவன் பட்டியில் திருவிழாக் கூட்டம். ரேக்ளா பந்தயம் முடிஞ்சு மாடுகளும், சொந்தக்காரங்களும் பரிசுகள் வாங்கிக் கொண்டிருந்தாங்க.  மாடுகளைப் பார்க்கச் செல்க, பேசும் பொற்சித்தரமே பதிவுக்கு. :)

அப்புறமாப் பிள்ளையார் பட்டிக்குப் போய்ப் பிள்ளையாரைப் பார்த்து என்னனு கேட்டுட்டு அங்கிருந்து காரைக்குடி கிளம்பினோம்.  திரு காளை ராஜன் தெரிவித்த வழியில் சென்று பல்கலைக்கழக விருந்தினர் விடுதியை அடைந்தோம்.  அங்கே திரு காளை ராஜன் எங்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்று ஒரு அறையில் தங்க வைத்தார்.  சாப்பாடு சாப்பிடவும் அழைத்தார்.  நாங்கள் உள்ள நிலைமையைச் சொல்லி தயிர் சாதம் போதும்னு சொல்லிட்டோம்.  அதன்படி அவரும் மேலே நல்லவேளையாக வற்புறுத்தவில்லை.  தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டுப் படுத்திருந்தோம்.  திரு இன்னம்புரார் ஒன்றரை மணிக்கெல்லாம் வந்துவிட்டார்.  அவருடன் அவர் மகன், பேத்தி, மகள், மாப்பிள்ளை ஆகியோர் வந்திருந்தனர்.  அனைவரும் உணவு அருந்தச் சென்றனர்.  திரும்பி வந்ததும் இன்னம்பூராரைச் சந்தித்து ஆசிகள் வாங்கிக் கொண்டு, (அவருக்குச் சதாபிஷேஹம் என்பதால்) சற்று நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் பின்னர் நாங்கள் கிளம்பி வந்துவிட்டோம். வரும் வழியில் வயிறு தொந்திரவு இல்லை என்பதாலோ என்னமோ ரங்க்ஸுக்குக் கோகர்ணம் போகணும்னு ஆசை வர, டிரைவரும் வழி விசாரித்துக் கொண்டு கோகர்ணம் கோயிலுக்குக் கொண்டு விட்டார். அங்கேயும் போய்ப் பார்த்துவிட்டு மேலே எல்லாம் ஏறவே முடியலை.  ரொம்பக் களைச்சிருந்தோம். ஒருபக்க மாடி பார்த்துட்டு மறுபக்க மாடியின் பைரவர், துர்கை ஆகியோருக்கு இங்கிருந்தே ஹெலோ சொல்லிட்டுக் கீழே இறங்கினோம்.  இத்தனைக்கும் பெரிய மலையெல்லாம் ஒண்ணும் இல்லை. மலையைக் குடைந்து கட்டிய கோயில். அதிலேயே பாறையின் மேலே ஏற வேண்டி இருக்கு. :) காலை திருமயத்திலும் இப்படித் தான் கோட்டைக்கு மேலே போக நினைச்சால் நல்ல வெயில் வந்துவிட்டதோடு இப்போ இங்கே ஏறினால் பின்னர் மற்றக் கோயில்கள் பார்க்கையில் சரியாப் பார்க்க முடியாது  களைப்பாக இருக்கும் என்று தோன்றியது.  மேலும் ரங்க்ஸின் உடல்நிலையையும், உ.பி.கோயில் மலை ஏற்றம்  அனுபவத்தையும் யோசித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் மலை ஏறுவதைத் தவிர்த்தோம்.

விருந்தினர் யாரானும் வரச்சே கட்டாயமாய் இந்தக் கோயிலுக்கு மட்டும் ஒருநாள்  ஒதுக்கிப்போய்ப் பார்க்கணும்.  இப்படி எத்தனையோ ஆசைகள்!  நிறைவேறுதா, தெரியலை! :)))

Sunday, August 25, 2013

விவேகாநந்த யுகம் மலரட்டும்!

பாரதத்தின் உலகச் செய்தியை வளரும் சமுதாயம் உணர்வதற்கும், மனித வாழ்க்கையின் மகத்துவம் ஆத்ம ஞானம் அடைவதில் இருக்கிறது என்பதை உணர்வதற்கும், மேற்கு உலகம் தரும் நன்மைகளையும், கிழக்கு உலகம் தரும் நன்மைகளையும் மனிதர் தன்னம்பிக்கையுடனும், கம்பீரத்துடனும் தம் வாழ்வில் ஒருங்கிணைத்து மலரச் செய்வது எப்படி என்பதை இளைய சமுதாயம் கற்று ஊக்கம் கொள்வதற்கும் சுவாமி விவேகாநந்தரின் கருத்துகள் மகத்தான உதவியாகும். அவருடைய கருத்துகள் அடங்கிய சிறுநூல் ஒன்று நெடுநாளாக அச்சில் இருந்துகொண்டிருப்பது, இப்பொழுது மிக மிகக் குறைந்த விலையில் அத்வைத ஆஸ்ரமம் கொண்டு வந்திருக்கிறது. 

விலை ரூ 4 மட்டுமே. 

நூல் - Vivekananda His Call To The Nation 

இந்த நூல் அவரது கருத்துகளை பல்வேறு தலைப்புகளில் தொகுத்தது. பாக்கட் சைஸில் 112 பக்கங்கள். ஆனால் அருமையான தொகுப்பு. 

இதை அதிகமான அன்பர்கள் நூற்றுக் கணக்கில் வாங்கி இளைஞர்களுக்கு அன்பளிப்பாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இன்று பார்த்தவுடன் ரூ 100 க்கு 25 பிரதிகள் வாங்கி வந்தேன். 

இன்னும் குறைந்த விலையில் தர வேண்டியோ அல்லது இன்னும் அதிகப் பிரதிகள் இந்த விலையிலேயே தொடர்ந்து அச்சடிக்க வேண்டியோ அல்லது இந்த மாதிரி விலையில் இன்னும் அவருடைய வேறு ஏதாவது நூல்களைக் குறைந்த விலையில் தர இயலுமாறோ யாரேனும் நன்கொடை தந்தும் வருங்காலத்திற்கு நன்மை பயக்கலாம். 

முக்கியமாக அவருடைய Lectures from Colombo to Almora, ஆங்கில நூல், கொலம்புவிலிருந்து அல்மோராவரை, தமிழ் நூல் இரண்டையும் ரூ 5 வீதம் விற்பனைக்குக் கொண்டுவர பணநலம் மிக்க அன்பர்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு பண்ணினால் இளைய பாரதம் என்றும் வாழ்த்தும். 

ஆனால்  இந்த நூல் 100 ரூபாய்க்கு 25 பிரதிகள் என்று குறைந்த பட்சம் எல்லோரும் வாங்கிக் குழந்தைகளுக்கு அளித்தால் எத்தனையோ நன்மை உண்டு. 

நிச்சயம் நற்பணிக்கு நீங்கள் முந்துவீர்கள். 

வாழ்க பாரதம்! 

மேற்கண்ட செய்தியைத் திரு ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் அவர்கள் மின் தமிழில் பகிர்ந்திருக்கிறார்.  அன்பர்கள் மேற்கண்ட புத்தகத்தைக் கூடிய மட்டிலும் வாங்கிச் சிறு குழந்தைகளுக்கு அளிக்கவும். 




விவேகாநந்தர் எத்தகைய தீர்க்கதரிசி என்பது கீழ்க்கண்ட அவரது இறுதி வார்த்தைகள் தெளிவாக்குகிறது!

"இந்தியா அமரத்தன்மை வாய்ந்தது.  கடவுளைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றென்றும் வாழும். ஆனால் அரசியலையும், சமூகச் சச்சரவுகளையும் பின் தொடர்ந்தால் இந்தியா அழிந்துவிடும்!  "

மேற்கண்ட சிவப்பு வண்ணச் செய்திக்கு நன்றி தினமலர்


அஆமே

Friday, August 23, 2013

படம் என்னனு சொல்லுங்க!

கொஞ்ச நாட்களாகப் பாதிப் பாதி சினிமா பார்த்துட்டு இருக்கேன்.  ஹிஹிஹி, எப்போ முழுசாப் பார்த்தேனு கேட்கறீங்களா?  அது என்னமோ உண்மை தான்.  தியேட்டர்களிலே படம் பார்க்கிறச்சே முழுசாத் தான் பார்த்திருக்கேன்.  தொலைக்காட்சியிலே முன்னெல்லாம் சென்னைத் தொலைக்காட்சி ஞாயிற்றுக் கிழமைகளில் படம் போடுவாங்க பாருங்க.  அப்போ  படம் ஆரம்பிக்கிறச்சேயே பிள்ளையாருக்குக் காசு வைச்சு, தேங்காயெல்லாம் உடைச்சு (ஹிஹிஹி, மின்சாரம் இருக்கணும்ங்கறதுக்கும், தொலைக்காட்சிப் பெட்டியில் பிரச்னை வராமல் இருக்கிறதுக்கும், எல்லாத்தையும் விட முக்கியமா அன்னிக்குனு பார்த்து அறுவை விருந்தாளிங்க வராமல் இருக்கணும்னும் தான். தொலைக்காட்சிப் பெட்டியில் பிரச்னைனா உடனே பார்க்க முடியாதே!) அன்னிக்கு டிஃபன் சுண்டல்னு சிம்பிளா முடிச்சுடுவேன். ஹிஹிஹி, இட்லி, தோசை எல்லாம் வைச்சுக்கறதில்லை. இட்லியானும் பரவாயில்லை.  தோசை ரெண்டு பக்கம் ரெண்டு கல்லுப் போட்டு வார்க்கணும்.  சரிப்பட்டு வராது. சுண்டல்னா குக்கரில் வேகப் போட்டோமா, உப்புக் காரம் போட்டுக் கலந்து தேங்காய் சேர்த்துக் கொடுத்தோமானு ஆகும்.

அதோட படம் பார்த்துண்டே கொரிக்கலாம்.  தியேட்டர் எஃபக்டும் வரும்.  இல்லையா? வரவங்களுக்கும் சுண்டல் விநியோகம் உண்டு.  அக்கம்பக்கம் தொலைக்காட்சிப் பெட்டி வாங்காதவங்க அப்போ நிறைய.  எல்லாரும் முக்கியமா ஜிவாஜி, எம்ஜிஆர் படம்னால் எங்க வீட்டுக்கு வருவாங்க.  இல்லாட்டியும் படம் பார்க்கக் குறைந்தது அக்கம்பக்கத்தில் இருந்து நாலைந்து பேராவது இருக்கும். கீழே உட்கார முடியாதவங்க கட்டில், பெஞ்ச், நாற்காலினு உட்காருவாங்க.  நாங்கல்லாம் தரை டிக்கெட் தான்.  இடைவேளையின் போது அப்போல்லாம் நிர்மா விளம்பரம் தான் வரும்.  இப்போ மாதிரி விளம்பரம் மூன்று மணி நேரமும் சினிமா அரை மணி நேரமும் இருக்காது. 

அது சரி, நான் பார்த்த படங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பிச்சு எங்கேயோ போகுது பாருங்க.  நேருக்கு நேர் படம் பாதியில் ஆரம்பிச்சு முடிவு வரை பார்த்தேன். அப்புறமா அரண்மனைக்காரன்னு ஒரு படம், மலையாளம் டப்பிங், ஜெயராமன், அப்புறமா யாரோ ஸ்ருதியாம்.  ஜெயராமனைத் தவிர மத்தவங்க யாரும் தெரியலை. காஞ்சனா ஞாயிறன்று (?) வந்தது.  அதையும் பாதியிலே இருந்து தான் பார்த்தேன்.  முடிவு வரை.  அதுக்கு முதல் நாள் சபாஷ் மீனா, படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரத்தில் இருந்து ஜிவாஜி "சித்திரம் பேசுதடி" பாடல் பாடி முடிச்சுத் தன் காதலைத் தெரிவிச்சுக் கொஞ்ச நேரம் பார்த்தேன். அப்புறமா போரடிச்சுது.  போய்ப் படுத்துட்டேன்.  

இப்போ மண்டை உடைக்கிற பிரச்னை என்னன்னா, முந்தாநாள்  லோகல் கேபிளில் ஒரு படம் பார்த்தேன்.  அஜித்-த்ரிஷா! சரண்யா அஜித் அம்மாவா வராங்க.  மத்தவங்கள்ளே விவேக், விவேக் மனைவியாக நடிக்கும் மீனா குமாரி, ஹேமா பாஸ்கர், மனோபாலா, சந்தானம் ஆகியோரைத் தான் தெரியுது.  மத்தவங்க எல்லாம் யார்னு தெரியலை.  இயக்குநர் விஜய் னு ஒருத்தர்.  இவரையும் கேட்டதில்லை.  ஹிஹிஹி, திரைப்படத் தகவல்களில் ரொம்பப் பின் தங்கி இருக்கேனோ? அஜீத்தின் அப்பாவாக நடிப்பவரை எங்கேயோ பார்த்திருக்கேன். நல்ல நடிகர்.  ஆனால் யாருனு தெரியலை! ஒரு காலத்தில் ஹீரோவாக நடிச்சிருக்கார்.  போலீஸாக விரும்பும் அஜித் சூழ்நிலையால் வில்லன் கைகளில் மாட்டிக் கொள்ளும் ஆன்டி ஹீரோ கதை தான். என்ன படம்னு சொல்லுங்கப்பா! சொல்றவங்க கிட்டே கணக்கெல்லாம் கேட்க மாட்டேன்.

இந்தப் படத்திலே விவேக் தாதாவா வரார்.  அவர் அஜித்தோட வீட்டிலேயே கூடவே வசிக்கிறார். ஆனாக் கடைசி வரைக்கும் அவரோட மாமனாரா நடிக்கும் அஜித்தின் அப்பாவுக்கு இவரோட இந்தத் தந்திரம் தெரியவே இல்லை.  அது எப்படி??? லாஜிக்கா எல்லாம் யோசிக்கக் கூடாதோ? :))))

Thursday, August 22, 2013

கணக்கா கேட்கறீங்க, கணக்கு! ஹாஹாஹாஹா!

ஶ்ரீராம்  முப்பது ரூபாய்க்குக் கணக்குக் காட்டச் சொல்லி இருக்கார்.  கணக்குக் கேட்டதிலே எத்தனை கட்சி உடைஞ்சிருக்கு!  அது தெரியாமக் கேட்டிருப்பாரோ? அதுவும் 30 ரூபாய்க்கு!  நான் யார், நான் யார், நான் யார்!  இந்த வலை உலகின் ஈடு இணையற்ற ஒரே தலைவி.  என்னிடமா உங்கள் கணக்கு!  கணக்கு, மணக்கு எனக்கு ஆமணக்கு! என்றாலும் விட்டேனா பார்!  பொறுத்தது போதும், பொங்கி எழு என எழுந்துவிட்டேன். ஆஹா, என்னிடமா கணக்கு!  இதோ உங்கள் கணக்கு!  இல்லை இல்லை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதோ என் கணக்கு!

அரிசி ஓசியில் வாங்கினது ஒரு கிலோ

சின்ன வெங்காயம்  5 ரூக்கு (கிலோ 40க்கு நல்ல தரமானதும், சுமாரானது 30, 35ரூக்கும் கிடைக்கிறது.)

எண்ணெய் மற்றும் உப்புக்கு = 10 ரூ (எண்ணெய்க்கு எட்டு ரூ, உப்புக்கு 2 ரூ)

தக்காளி    100கிராம்        =2 ரூ (கிலோ பதினைந்து ரூபாய் என்பதால் 2 ரூக்குப் போதும்)

பாசிப்பருப்பு        =10 ரூக்குக் கிடைப்பது

பச்சை மிளகாய்      2 ரூக்குக் கிடைப்பது


ஆங்காங்கே பொறுக்கிய சுள்ளிகளை வைத்து அடுப்பு மூட்டி அரிசியைச் சோறாக்கி  அதிலேயே பாசிப்பருப்பையும் சேர்த்து வேக வைத்துவிட வேண்டும்.  தக்காளி, பச்சை மிளகாய்  எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கணும். சின்ன வெங்காயத்தை உரிக்கவும்.  குறுக்கே நறுக்கிக்கவும்.  பச்சைமிளகாய், உப்பு, தக்காளி மீதம் இருந்தால் சேர்க்கவும்.  சாதத்துக்கு சைட் டிஷாகத் தொட்டுக் கொண்டு சாப்பிடவும். மிச்சம் ஒரு ரூபாயைச் சேமிக்கவும். தினம் ஒரு ரூபாயாகச் சேர்த்துக் கொண்டு வரவும்.  மாசமுடிவில் கிடைக்கும் முப்பது ரூபாயோடு அன்றைக்குக் கோட்டா முப்பதும் சேர்த்து அம்மா உணவகத்தில் வெளுத்துக்கட்டவும்.

இன்றைய விலைவாசி நிலவரப்படி கொடுத்திருக்கேனாக்கும்!

Wednesday, August 21, 2013

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்!

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்


இந்தக் காசியாத்திரை என்னும் பரதேசிக் கோலம் பெரும்பாலான சமூகங்களிலும் பின்பற்றப் படுகிறது. ஆனால் சில சமூகங்களில் பெண்ணின் தந்தைக்குப் பதிலாக சகோதரர் சென்று மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்.  ஆயிற்று.  இப்போ நாம் நடத்தும் கல்யாணத்திலே காசியாத்திரை முடிஞ்சு மாப்பிள்ளைக்குப் பெண்ணைத் தரேன்னு பெண்ணின் அப்பா உறுதி மொழி கொடுத்துட்டார்.  அடுத்தது இப்போப் பெண் வரணும். அடுத்து மாலை மாற்றல் நடக்கும்.  தாய்மாமன்கள் மாலை எடுத்துக் கொடுக்கப் பிள்ளையும், பெண்ணும் மாலை மாற்றிக் கொள்வார்கள். அதன் பின்னர் பெண்ணின் கையைப் பிள்ளையின் கையில் கொடுத்துப் பிடிக்கச் சொல்வார்கள்.  இதிலே சிலருக்கு அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன.  இப்போத் தான் பெண்ணும், மாப்பிள்ளையும் முதல் முதல் ஒருவர் கையை  ஒருத்தர் பிடிக்கணும். 


 ஆனால் மிகவும் சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்க்கும் சிலர் விவாஹங்களில் காசி யாத்திரை எனப்படும் பரதேசிக் கோலமும், மாலை மாற்றுதலும், பெண்ணும், பிள்ளையும் பாணிக்ரஹணத்துக்கு முன்னர் ஒருவர் கையை மற்றவர் பிடிப்பதும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர். அவர்கள் கருத்து முதன் முதல் பெண்ணும், பிள்ளையும் கையைப் பிடிக்கையில் லக்னம் நன்றாக இருக்க வேண்டும் என்றும், பாணிக்ரஹணம் நடைபெறும் சுப முஹூர்த்த லக்னத்திலேயே கையைப் பிடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.  மேலும் மாலை  மாற்றுதலும், ஊஞ்சலும்  கூடத் திருமணம் முடிந்த பின்னரே நடக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்து.  ஏனெனில் இதற்குப் பின்னரும் திருமாங்கல்ய தாரணம் ஆனாலும் திருமணங்கள் நின்றிருக்கின்றன என்பதால் முதலிலேயே இதை எல்லாம் செய்யக் கூடாது. பின்னர் பெண்ணின் வாழ்வும், பிள்ளையின் வாழ்வும் பாதிப்புக்கு ஆளாகலாம் என்பது அவர்கள் கூற்று.


ஏனெனில் திருமாங்கல்யதாரணம் என்பது ஒரு சடங்கே தவிர அதற்கு வேத பூர்வமான மந்திரங்கள் கிடையாது.  வெறும் ஸ்லோகம் தான் என்கின்றனர்.  வேத பூர்வமான மந்திரங்களைச் சொல்லி நடக்கும் சப்தபதி ஆனாலே திருமணம் ஆனதாக அர்த்தம்.  அதற்கு முன்னர் திருமணம் நடந்துவிட்டதாகச் சட்டத்திலேயே இல்லை. மேலும் திருமாங்கல்ய தாரணம் ஆனதும் மொத்த விருந்தினரும் கலைந்தும் சென்றுவிடுகின்றனர்.  உண்மையான விவாகச் சடங்குகள் பின்னரே நடப்பதால் அவற்றுக்கு சாட்சிகள் இல்லை.  நல்ல வைதீகமான பெரியோர்கள் இந்தச் சடங்குகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  ஆகவே முஹூர்த்த காலம் கழியும் முன்னரே சப்தபதி உட்பட எல்லா முக்கியச் சடங்குகளையும் செய்வதே உண்மையில் விவாஹம்.


  நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கத் தான் போகிறோம்.  அப்போது அவற்றின் முக்கியத்துவம் நமக்கும் புரியும். மேலும் முன்னெல்லாம் மாயவரத்துக்கு அருகிலுள்ள கொறநாடு என்னும் கூறைநாட்டில் சிவப்பில் கட்டம் போட்ட நூல் புடைவைகளையே திருமணத்திற்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கைத்தறி நெசவில் நெய்யப்பட்ட அந்தப் புடைவை தான் திருமணத்தின் போது பெண்ணுக்குக் கட்டிக் கொள்ளப் பிள்ளை வீட்டாரால் கொடுக்கப்படும்.  இப்போது போல் பட்டெல்லாம் இல்லை.  கூறை நாட்டுப் புடைவை என்பதால் கூறைப்புடைவை என்று சொல்ல ஆரம்பித்தது இன்று அதன் பெயரே கூறைப்புடைவை என்றே ஆகிவிட்டது.  கொற நாட்டுக் கூறைப்புடைவை என்பதை அனைவருமே மறந்தாச்சு. 

சரி, இப்போ மேலே உள்ளவை எல்லாம் நமக்கு  அறியாத விஷயங்கள் என்பதால் அறியத் தந்தாச்சு.  ஆனால் நாம் எடுத்துச் செய்யும் கல்யாணத்தில் பெண் வீட்டுக்காரங்களும், பிள்ளை வீட்டுக்காரங்களும், முதலில் பெண்ணும், பிள்ளையும் கையைப் பிடிக்கும் முன்னர் மாலை மாற்றிக் கொள்ள அழைத்துச் சென்றுவிட்டனர்.  அதோ, பெண்ணின் தாய் மாமனும், பிள்ளையுடைய தாய் மாமாவும் தயாராக வந்து விட்டனர்.  முன்னெல்லாம் சின்னக் குழந்தைகளாக இருந்ததாலும், மாலைகள் சில சமயங்களில், பல சமயங்களிலும் குழந்தைகளை விடப் பெரியதாக இருந்ததாலும் தாய் மாமாக்கள் குழந்தைகளைத் தோளில் சுமந்து கொண்டு மாலை மாற்ற வைப்பார்கள்.. ஆனால் சில வீடுகளில் இன்றும் அதை ஒரு கட்டாயமாகக் கடைப்பிடிப்பது பார்க்கவே சரியாய் இல்லை. 


 நாம்  நடத்தற கல்யாணத்திலே மாமாக்கள் மாலையை எடுத்துக் கொடுக்கிறாங்க.  அவங்க மாலை மாத்தறாங்க.  ஆஹா, இது என்ன, பெண் மாலை போடப் போடுகையில் மாப்பிள்ளையின் தோழர்கள் பிள்ளையை இழுத்துக் கொண்டு பின்னே, பின்னே, செல்கின்றனரே!  ஆம், இது ஒரு விளையாட்டு.  கல்யாணத்தின் நாணம், சங்கோஜம் ஆகியவை இருவருக்கும் இல்லாமல் சகஜ பாவம் வரவழைக்க வேண்டி நடத்தப்படும் சடங்கு எனலாம்.  பெண்ணின் தோழிகள் பெண்ணை முன்னே அழைத்துச் சென்று வம்படியாக மாப்பிள்ளையைக் குனிய வைத்துப் பெண்ணை மாலையைப் போட வைப்பார்கள். அடுத்துப் பெண்ணின் முறை.  பெண் இப்போது பின்னே செல்ல, மாப்பிள்ளை மாலையைப் பெண்ணின் கழுத்தில் தூக்கி எறிய, பெண்ணின் தோழிகள் ஒத்துக்கொள்ளாமல் வாதம் செய்யப் பின்னர் பிள்ளை மீண்டும் பெண்ணை அருகே வரச் சொல்லி மாலையைப் போடுகிறார்.  கூப்பிட்டதும் போகிறாயானு தோழிகள் கத்தப் பெண்ணோ சிரிக்கிறாள்.



மாலை மாற்றி ஆச்சு;  நாதஸ்வரத்தில் நையாண்டிப் பாடல்! மாலை மாற்றினாள், கோதை மாலை மாற்றினாள்.  என்று பாடுகிறார்கள் நாதஸ்வரக் காரர்கள். இங்கே ஒருத்தர் அதைப் பாட அதை நையாண்டி செய்கிறார் மேளக்காரர். அதற்குள்ளாகப் புரோகிதர்கள் முஹூர்த்த நேரம் நெருங்குவதாக எச்சரிக்கை கொடுக்கப் பிள்ளையின் கையில் பெண்ணின் கையை ஒப்படைத்து ஊஞ்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  வலக்கால் முன்னே வைத்துப் பெண்ணும், பிள்ளையும் ஊஞ்சலுக்குச் செல்கின்றனர்.  மாலை மாற்றுதல் என்பது சாஸ்திரம் அல்ல என்றாலும் சாஸ்திரத்தைச் சேர்ந்ததொரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. 


 மேலும் ஆண்டாள் தினம் ஒரு மாலை கட்டி அரங்கனுக்குச் சாற்றியதையும், பார்வதி மாலை கட்டி பரமேஸ்வரனுக்குக் காத்திருந்ததையும் அறிந்திருக்கிறோம்.  ஆகவே மாலை மாற்றுதல் முக்கியத்துவம் பெறுகிறது.  பெரும்பாலான தஞ்சை ஜில்லாக் கல்யாணங்களில் இந்த மாற்று மாலை என்பது பச்சையும், வெள்ளை நிறப் பூக்களையும் வைத்துக் கட்டப்பட்டதாக இருக்கும். பொதுவாக முல்லை, மல்லிகை போன்ற பூக்களால் ஆன மாலையையும் மாற்று மாலைகளாகப் பயன்படுத்துவார்கள்.  அடுத்து ஊஞ்சல்.



Monday, August 19, 2013

கோயில் பதிவுகளுக்கு முன்னர்......................

இங்கே வந்ததில் இருந்து திருமயம் கோயிலுக்குப் போகணும்னு ஆசை.  திருமயம்,சித்தன்னவாசல் இரண்டுக்கும் போகணும்னு சொல்லிட்டே இருந்தேன்.  ஆனால் போகவே முடியலை. அது என்னமோ தெரியலை; தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  டிசம்பர் மாதம் சில நண்பர்கள் வந்தப்போ புதுக்கோட்டையில் திருக்கோகர்ணமும் போயிட்டு வந்தாங்க. அவங்களும் அதைப் பத்திச் சொல்லிட்டு இருந்தாங்க.  தினம் தினம் சொல்லிட்டு இருந்தேன். அப்போத் தான் நம்ம இன்னம்பூராரின் பயணத்திட்டத்தில் காரைக்குடியும் உண்டுனு தெரிஞ்சது. அவர் டிசம்பர் மாதத்தில் இருந்தே, இந்தியா வரப் போகும் ஆகஸ்ட் மாதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  காரைக்குடியில் மாணவர்களுக்காக தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஐஏ எஸ், ஐபிஎஸ் மாணாக்கர்கள் தேர்வை எதிர்கொள்ளும் முறை குறித்த ஒரு அறிமுகச் சொற்பொழிவு செய்ய இருந்தார்.   இங்கே தமிழ் மரபு அறக்கட்டளை குறித்து ஒரு சின்ன அறிமுகம்.

சுபாஷிணி

மலேசியாவில் பிறந்து வளர்ந்து, படித்துப் பின்னர் தற்சமயம் ஜெர்மானியரான ட்ரெம்மலைத் திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியில் வேலை பார்த்துக் கொண்டு கணவருடன் வசிக்கும் சுபாஷிணியும், கொரியாவில் இருந்த நா. கண்ணனும் பனிரண்டு வருடங்கள் முன்னர் ஆரம்பித்தது இந்த அறக்கட்டளை.

நா.கண்ணன்

 இதன் மடலாடல் குழுமமாக முதலில் யாஹூவில் "இ-சுவடி" என்ற குழுமம் ஆரம்பித்துப் பின்னர் கூகிளின் மடலாடல் குழுமமான மின் தமிழ் ஆரம்பிக்கப் பட்டது. ஒரு கோயிலுக்குப் போனதுக்கு இப்படி நீஈஈஈஈஈஈள முன்னுரையானு நினைக்க வேண்டாம்.  சந்தடி சாக்கிலே மின் தமிழைக் குறித்துச் சொல்லலாம்னு தான். இந்த மின் தமிழ்க் குழுமம், மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  பனிரண்டாவது ஆண்டு விழாவை ஒட்டி இம்மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

 சென்ற மாதம் இதன் நிர்வாகிகளில் ஒருவரான திரு நா. கண்ணன் ஈரோட்டில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுத் தமிழ் மரபு அறக்கட்டளை மையம் துவக்கி வைத்தார். இதற்காக நம் வலைப்பதிவரும், வல்லமை மின்னிதழின் ஆசிரியருமான பவளசங்கரி தீவிரமாக உழைத்தார். அதைத் தொடர்ந்து ஆரம்ப காலத்தில் இருந்தே இதன் உறுப்பினராக இருந்து வரும் திரு இன்னம்பூரார் அவர்கள்  கல்லூரி மாணவர்களிடையே பங்கு பெற்று ஐ ஏ. எஸ் தேர்வில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு அறிமுகச் சொற்பொழிவை ஆகஸ்ட் பனிரண்டாம் நாள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் நிகழ்த்த இருந்தார்.  அவர் இருந்தது இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில்.  இந்தியா வரும் முன்னர் இருந்தே திரு இன்னம்புரார் தன்னுடைய நிகழ்ச்சி நிரலைக் கூறி இருந்தார்.  சென்னை சந்திப்பில் நிச்சயம் கலந்து கொள்ள இயலாது என்பது தெரியும்.  ஆகவே இன்னம்பூருக்கோ அல்லது காரைக்குடிக்கோ போகலாம் என நினைத்தேன்.  முதலில் திரு இன்னம்புரார் குறித்து ஒரு சின்ன அறிமுகம். எண்பது வயதுக்கு மேலாகும் திரு இன்னம்பூர் செளந்திரராஜன் மத்திய அரசின் தணிக்கைத்துறையின் துணைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.  அவ்வப்போது தணிக்கைத் துறை குறித்த தன் கருத்துக்களை வல்லமை மின்னிதழிலும், மின் தமிழ், தமிழ்வாசல் போன்ற குழுமங்களிலும் பகிர்ந்து கொள்வார்.  அரியக்குடி, காரைக்குடி போன்ற ஊர்களில் சிறு வயதில் தன் தகப்பனாரின் வேலை நிமித்தம் வாழ்ந்து அந்த ஊரின் அனுபவங்களையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வார்.

இன்னம்பூரார்

அவருடைய "அம்மா சொல்படி ராஜு" என்னும் தொடர் அந்தக் கால வாழ்க்கை குறித்த அவருடைய தாயின் அனுபவங்களை அவர் தாய் கூற திரு இன்னம்பூரார் எழுதியவை. இது அவருடைய மாஸ்டர் பீஸ் என்பது என்னுடைய சொந்தக் கருத்து.  ஆனாலும் அவர் தமிழின் மேல் அளப்பரிய காதல் கொண்டிருந்தாலும், நன்கு படிக்கவோ, எழுதவோ தனக்கு வராது என்பார்.  இந்த வயசிலும் சர்க்கரை நோயாளியான அவர் தன் சகோதரருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமும் கொடுத்த பின்னரும், தேனியைப் போல் சுறுசுறுப்பாகப் பல்வேறு விதமான சமூகத்தளங்களில் தன் ஆற்றலைக் காட்டி வருகிறார். தமிழ் இலக்கணத்தைப் பத்து வருடங்களுக்கு முன்னர் படிக்க ஆரம்பித்த இவர் சென்ற வாரம் யாப்பருங்கலக்காரிகையிலும், தண்டியலங்காரத்திலும் தேர்வு எழுதியுள்ளார்.  தன் மகனுடன் வசிக்கவென லண்டன் சென்ற இவர் அங்கேயும் சும்மா இருக்கவில்லை.  லண்டன் பல்கலைக்கழகத்திலும் சமூகம், சமுதாயம், மனித வளம், உறவுகள் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டதோடு அல்லாமல் மனித வளம், மனித உறவு குறித்த மேற்படிப்பும் படித்திருக்கிறார்.  நடைப்பயிற்சி, உடல் பயிற்சி போன்றவை மேற்கொண்டிருக்கும் இவர் தற்சமயம் இரு வருடங்களுக்குப் பின்னர் இந்தியா வருகை தந்துள்ளார்.

பாண்டிச்சேரியில் பக்தி இலக்கியம் சம்பந்தமாகப் படித்து வரும் இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திலும் தமிழில் பட்டமேற்படிப்புப் படிக்க விண்ணப்பித்திருக்கிறார்.  ஆகஸ்ட் பனிரண்டாம் நாளான நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் மாணவர்களுக்கு ஐஏ எஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதுவதற்காக எப்படித் தயார் செய்து கொள்வது என்பது குறித்து ஒரு அறிமுகச் சொற்பொழிவு செய்திருக்கிறார்.  இவர் எழுதும் பாமரகீர்த்தி என்னும் சாமானிய மக்கள் குறித்த கட்டுரைகள் வலை உலகில் பெரும் புகழ் பெற்றவை. சாமானியரிடம் இருக்கும் தனிப்பட்ட சிறப்பை எடுத்துக்காட்டும் விதமாக ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளைக் கொஞ்சமே கொஞ்சம் கற்பனை சேர்த்துப் பலரும் விரும்பும் விதம் எழுதுவார்/  அவ்வப்போது கையில் வலி என்று சொன்னாலும் இணையத்துக்கு வந்து எழுதாமல் அவராமல் இருக்க இயலாது.  பல நல்ல புத்தகங்களை மின்னாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைத்திருக்கிறார். மேலும் பல நவீன யுக்திகள் மூலம் தமிழை மேம்படுத்த வேண்டும் என்ற ஆவலும் கொண்டிருக்கிறார்.  ஒலித் தமிழ் என்னும் வலைப்பக்கம் திறந்து அதன் மூலம் தமிழ் கற்றுக் கொடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்.  இனி நம் பயணத்தைத் தொடருவோம்.  ரொம்ப அறுவை போட்டுட்டேனோ?

http://innamburan.blogspot.in/2013/08/2.html">இன்னம்பூரார் பக்கம்


இவரைச் சந்திக்கத் தான் காரைக்குடிக்குச் சென்றோம்.  ஏற்கெனவே இவர் லண்டன் செல்லும் முன்னர் ஒரு சின்ன  கெட் டு கெதர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.  குரோம்பேட்டையில் அவர் இல்லத்தில் நடைபெற்ற  அந்த நிகழ்ச்சிக்குத் தான் ஒவ்வொருத்தரும் அவரால் இயன்ற பலகாரங்களைச் செய்து கொண்டு போயிருந்தோம்.  நான் வெண்கல உருளியில் செய்யப்பட்ட அரிசி உப்புமா, கொத்சு கொண்டு சென்றிருந்தேன்.  ஆகவே இப்போ அவர் மகளைச் சந்திக்கையில் அவங்களுக்கு நினைவில்லாவிட்டாலும், அரிசி உப்புமா எனச் சொல்லி நினைவு கூர வைக்கலாம்.  காரைக்குடிக்குச் சென்று ஞாயிறன்று இரவு தங்கித் திங்கள் காலை திரும்பலாம் எனப் போடப்பட்ட திட்டத்தை என் உறவினர் ஒருவர் திங்களன்று வந்ததால் மாற்ற நேரிட்டது.  ஞாயிறன்று காலை இங்கிருந்து சென்று ஞாயிறன்று மாலையே திரும்பவேண்டும் என்று முடிவு செய்தோம்.  ஆகவே வாகனம் ஏற்பாடு பண்ணிக் கொண்டோம். அங்கே முனைவர் காளை ராஜன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு எங்கள் தொடர்பில் இருந்து வந்தார். ஞாயிறன்று காலையும் வந்தது.

ஒவ்வொரு முறையும் கோயில்களுக்குப் போகணும்னு தான் போவோம்.  இம்முறை தான் நண்பரைப் பார்க்கப் போகிற இந்தச் சந்தர்ப்பத்தை இதற்கும் பயன்படுத்திக்கலாம்னு போனது. :))))))


Sunday, August 18, 2013

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??




ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும். ஆனால் சென்ற  வருடம் ஆவணி மாதம் இரண்டு அமாவாசை வருவதால் மல மாதம் என்றும், அப்போது சுப காரியங்களைச் செய்யக் கூடாது என்றும், புரட்டாசி மாதமும் ஸங்க்ரமண தோஷ மாசமாகி விட்டதால், இந்துக்களின் காலண்டர்படி(பஞ்சாங்கப்படி) இப்போது சிரவண மாதம் என்பதால் (தமிழ் ஆடியாக இருந்தாலும்)  நர்மதைக்குத் தெற்கே உள்ள சாம வேதிகளுக்கு இந்த மாதம் உபாகர்மா  ஆடி மாதம் அமாவாசை கழிந்த ஹஸ்த நக்ஷத்திரம், பஞ்சமி திதியில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  சென்ற வருடத்து ஆவணி அவிட்டம் செவ்வாய்க்கிழமையன்று ஜூலை 24-ஆம் தேதி  ஸாமவேதிகளின் உபாகர்மா வந்தது.  இந்த வருடம் செப்டம்பர் ஏழாம் தேதி சாமவேதிகளுக்கான உபாகர்மா!

தகவல்களுக்கு நன்றி:தெய்வத்தின் குரல்! 

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  நான்காம்  முறையாக இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன். ருக் மற்றும் யஜுர் வேதிகளுக்கு ஆகஸ்ட் இருபதாம் தேதியும், சாமவேதிகளுக்கு செப்டம்பர் ஏழாம் தேதியும் இந்த வருடம் ஆவணி அவிட்டம் வருகிறது.  பொதுவாக மீள் பதிவு போடுவதில்லை;  என்றாலும் இது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கடந்த சில வருடங்களாகப் போட்டு வருகிறேன்.  ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  நன்றி. பொறுத்தருள்க! :)))))


டிஸ்கிக்கு டிஸ்கி: வா.தி. வி.எ. ஊத்திக் கொண்டு கண்டு பிடிச்ச தப்பைச் சரி பண்ணிட்டேன். :)))))))

Saturday, August 17, 2013

*நானும் தாய் தான்*

Naanum Thaai than*நானும் தாய் தான்*

மனைவியை மதிக்காத ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டியது


enjoyyyyyyyyyyyyyyyyyy!:)))))

This is 1600th Post and a free gift to one and all. Hihihihihihi! 

Friday, August 16, 2013

வளைந்து, நெளிந்து ஓடும் காவிரி!



எங்க குடியிருப்பின் பின் பக்கம் புஷ்பக் நகர் என்னும் பகுதி.  ஒரு வேலையாக அங்கே போயிருந்தோம். மூன்றாவது குறுக்குத் தெருவின் கடைசியில் காவிரிக்கரை 25 அடி உயரத்துக்குப் போட்டிருக்காங்க.  ஏறப் படிகள் இருந்தன.  சரினு அதிலே ஏறி மேலே இருந்து காவிரியைப் படம் எடுத்தேன்.  இதிலே இரண்டு படம் நான் எடுத்தது.  ஒண்ணு ரங்க்ஸ் எடுத்தார்.




முன்னாடி போட்ட படங்கள் எதுவும் தெரியலைனும் க்ளாரிடி இல்லைனும் வா.தி. மற்றும் சுபாஷிணி சொல்றாங்க.  மேலும் வா.தி.  இந்தப் படங்கள் எல்லாம் ஸ்டாம்ப் சைஸுக்கு இருக்கிறதாவும் சொல்றார்.  உங்களுக்கு எல்லாம் எப்படித் தெரியுது? எனக்கு ஸ்டாம்ப் சைஸுக்கு முன்னாடி போட்டவையும் தெரியலை.  இப்போவும் தெரியலை.  பகல் நல்ல வெளிச்சத்தில் படம் எடுத்ததால் லைட்டிங் கொஞ்சம் சுமாராக வந்திருக்கலாம். போட்டோ ஷாப் வேலையெல்லாம் பண்ணவில்லை. 



இங்கிருந்து உ.பி.கோ. தூரக்க இருக்கிறதாலே மலை சரியாத் தெரியலைனு நினைக்கிறேன்.  இந்த இடத்தில் வடமேற்கில் இருந்து தென் கிழக்காகக் காவிரி வளைகிறாள். அந்தக் கோணம் வரணும்னு நினைச்சேன்.  ஆனால் அதுக்கு முடியாம அப்போ ஒரு இரு சக்கர வாகனம் வந்து சறுக்கிக் கொண்டு அத்தனை உயரத்திலிருந்து பள்ளத்தில் விழ இருக்கவே, எங்களுக்கும் பயம் வந்துவிட்டது.  மேலும் அந்தத் தெருவில் வீட்டுக் கட்டுமான வேலைகளுக்கு மணல் எடுக்க ஆட்கள் அந்தப் படிகளின் வழியாக வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர்.  ஆகவே முடியலை. தண்ணீர்க் குழாய் தெரியும் இடத்துக்கு அப்பால் காவிரி மேலும் வளைந்து சரியான கிழக்குத் திசையில் திரும்புகிறாள்.  அந்த இடத்துக்குப்போக முடியாது.  ஒருநாள் பாலத்தில் இருந்து எடுக்க முடியுமானு பார்க்கணும்.  காவல் துறை அங்கே நிற்க அனுமதிக்கணும். :))))))












1

Wednesday, August 14, 2013

ஓடிப் போய் வாழலாம் வா! புதுகையின் கருத்தும் என் பதிலும்!

//சமீபத்துல ஒரு கதை படிச்சேன். “ஓடிப்போயிடலாம்!!!” இதுதான் தலைப்பு.
(நீங்களும் படிச்சிருக்கலாம்). அந்த கதையின் கருத்து இதுதான். வயதான தன் மனைவி இரவு பகல் பார்க்காம உழைச்சுகிட்டே இருப்பதை தாங்க முடியாத வயதான கணவர் அந்த வீட்டை விட்டு ஓடினால் தன் மனைவிக்கு ஓய்வு கிடைக்கும் என நினைக்கிறார்.//

இந்தக் கதையை நானும் படிச்சிருக்கேன்.  ஒரு பக்கக் கதை. உதவிக்கு யாரும் இல்லாமல் தனியாகக் கஷ்டப்படும் வயதான மாமியார் பத்தின கதை.  தனியே போனால் மட்டும் வேலை செய்ய வேண்டாமானு ஒருத்தர் கேட்டிருந்தாங்க.  தனியே போனால் வேலையின் சுமை குறையும்.  அவங்க இருவருக்கு மட்டும் செய்தால் போதும்னு ஆகும்.  இது பிள்ளை வீடோ, பெண் வீடோ நினைவில் இல்லை.  ஆனால் யார் வீடாக இருந்தாலும் அம்மா என்றால் குழந்தைகள் செய்யட்டுமேனு தான் விடறாங்க.  இது பொதுவான ஒன்று.  வெகு சிலர் தான் அம்மாவுக்கும் வயசு ஆச்சு, ஓய்வு வேண்டும்னு நினைக்கிறாங்க.  கதையை மறுபடி படிச்சால் தான் யார் மேல் தப்புனு புரியும்.

ஆனால் பொதுவாக மாமியார்கள் பிள்ளைக்குக் கல்யாணம் ஆனதும், "என் பிள்ளைக்கு அது பிடிக்கும்; இது பிடிக்காது. நீ இன்னிக்கு வந்தவ தானே!  அவனோட விருப்பு, வெறுப்பு உனக்கு என்ன தெரியும்!" அப்படினு சொல்லித் தானே செய்யறாங்க.  தன் கணவனுக்குத் தான் செய்யணும்னு நினைக்கும் பெண்கள் மட்டும் இதிலே போராடி தங்கள் உரிமையை நிலைநாட்டிக்கறாங்க.  ஆனால் அவர்களிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் "நல்லதாப் போச்சு! வேலைச் சுமை குறைஞ்சது!" னு இருப்பாங்க.  வெகு சிலரே வேலைக்குப் போனாலும் கணவன் மேலும் கருத்துடன் இருக்க முடிகிறது.

இன்னும் சில மாமியார்கள் மருமகளைத் தனியே செய்யவிட்டுட்டுத் திண்டாடவும் வைப்பாங்க. ஆனால் சமையல் செய்து முடிக்கும்வரை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சரியா சாப்பாட்டு நேரத்திலே மருமகளை அப்புறப்படுத்திவிட்டுத் தானே தன் பிள்ளைக்குப் பிடிவாதமாகப் பரிமாறி விடும் மாமியார்களும் உண்டு. மாமியாரைச் சமையலறைக்கே வரவிடாமல் தானே முழுப் பொறுப்பு எடுத்துக் கொண்டு சாப்பாடை மாமியாருக்கு மட்டும் தனியாக எடுத்துக் கொடுக்கும் மருமகள்களும் உண்டு.

இது எதுவுமே இல்லாமல் மருமகள் வந்ததுமே மாமியார் மருமகளுக்குத் தங்கள் வீட்டுப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, இப்படிச் சமைக்கணும், இம்மாதிரிக் காய்களை இங்கே நறுக்கணும். மாமனாருக்கு இது பிடிக்கும், உன் கணவனுக்கு இது பிடிக்கும்னு சொல்லி மருமகளைச் சமைக்க வைத்து அல்லது தான் சமைக்கையில் கூட உதவி செய்யச் சொல்லிப் பழக்கப் படுத்துவதே சிறந்த முறை.  இம்முறையில் மாமியார், மருமகள் அந்நியோந்நியமும் அதிகப்படும். மருமகளுக்கும் மாமியாரிடம் சகஜமாக எதையும் கேட்டுச் செய்யும் வழக்கம் ஏற்படும். அனைவருக்கும் பரிமாறிவிட்டு மாமியாரும், மருமகளும் சேர்ந்து சாப்பிடலாம்.  அல்லது அனைவருமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்.  என்றாவது ஒரு நாள் தன் பிள்ளைக்கு மாமியார் தான் உணவளிக்க வேண்டும்;  அவனுக்குப் பிடித்த உணவைத் தான் தயாரித்து அளிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு மருமகள் இடம் கொடுத்து அன்று விலகி நிற்பதே சிறப்பு.  ஆனால் மாமியார் இதைத் தினம் தினம் எதிர்பார்க்கக் கூடாது.  எப்போப் பிள்ளைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்துவிட்டாளோ அப்போ மனைவியை விட்டே அனைத்தையும் செய்து தரச் சொல்வதே நல்லது.

இது சரியா??!!!! தவறா??!!!!

//1.ரிட்டயர்மெண்ட் இல்லாத ஒரு வேலை குடும்ப வேலை. அதிலயும் அடுப்படி வேலைக்கு ஓய்வே இருக்காது. தனியா போனாலும் அங்கயும் அந்தம்மா சமைக்கத்தானே போறாங்க??? மத்த வேலைகளும் குறையாதே????//

நிச்சயமாக் குறையாது.  இது அவரவர் மனோபாவம் மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தது.  தனிக்குடித்தனம் நடத்தும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் எனில் உதவிக்கு ஆளை வைத்துக்கொள்ளலாம்.  அல்லது வெளியில் மெஸ்ஸில் கிடைக்கும் சாம்பார், ரசம் போன்றவை வாங்கி வீட்டில் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.  எல்லாத்தையும் விட நல்ல தரமான, பாதுகாப்பான அதே சமயம் உண்மையிலேயே சேவை மனப்பான்மை இருக்கும் முதியோர் இல்லத்தில் இருவரும் சேர்ந்து விடுவது இன்னும் நல்லது.

2. பெத்த பிள்ளைங்களுக்கு ஆரம்ப முதலே சமைச்சு, நோய்வந்தா பார்த்து எல்லாம் செஞ்சது இதே பெற்றோர் தானே??? அதுவே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆனதும் செய்யும்போது மட்டும் எப்படி தப்பாகும்?? எக்ஸ்ட்ரா கேரக்டரா மருமகள்..... அப்புறம் பேரக்குழந்தைகள் வந்திட்டதால செய்யக்கூடாதா??

உடம்பில் தெம்பிருந்தால் கட்டாயம் செய்யத் தான் வேண்டும்.  அதுவும் பேரக் குழந்தைகளைப் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லும் பாட்டி, தாத்தா தனி ரகம்.  இப்படிப் பட்டவங்களை நானும் பார்த்திருக்கேன்.  சின்ன வயசிலே பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள மனசும் உடலும் தெம்பு கொடுக்கும். வயசானதும் அது குறைஞ்சு தானே போகும்.  என்றாலும் குழந்தைகளை வீட்டில் இருந்த வண்ணம் பார்த்துக்கொள்ளும் பாட்டிகள் உண்டு.  தாத்தாக்களும் பேரக் குழந்தைகளைப்பள்ளிக்கு அனுப்பி வைத்துத் திரும்பக் கூட்டி வந்துனு செய்வாங்க.  அதையும் பார்த்திருக்கேன்.  இப்போவும் எத்தனையோ பெற்றோர்கள் பெண் வயிற்று, பிள்ளை வயிற்றுப் பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மறுக்கிறவர்களும் உண்டு தான்.  எங்க வீட்டிலேயே இரண்டு வகையும் உண்டு. :))) இதுவும் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்ததே.  கஷ்டம்னு நினைச்சோம்னால் எல்லாம் கஷ்டமே.  சுகம்னு நினைச்சால் எல்லாம் சுகமே. பெண்ணோ, பிள்ளையோ குழந்தைகளைப் பார்த்துக்க ஆள் இல்லைனு பெற்றோர் கிட்டே ஒப்படைச்சால் கட்டாயமாப் பார்த்துக்கணும். அதுவும் நம்ம பேரக் குழந்தைகள் தானேனு எண்ணம் கட்டாயம் இருக்கணும்.  மாமியார் மருமகளிடம் உன் குழந்தைகளை என்னால் பார்த்துக்க முடியாதுனு சொல்வது ரொம்பத் தப்பு. மருமகள் மட்டும் தனியாகவா குழந்தை பெற்றுக் கொண்டாள்.  நம்ம பையரின் குழந்தை தானே!  அந்த எண்ணம் இருக்கணும் இல்லையா!


3. அந்த காலத்துல பெரியவங்க உசுரு இருக்கறவரைக்கும் ஓடியாடி வேலை செஞ்சா நல்லதுன்னு சொல்லி சுறுசுறுன்னு இல்லாட்டியும் கைய கால மடிக்க நீட்டி வேலை பாத்தாங்க. இப்ப மட்டும் முதுமை ஏன் அதிகமா கொண்டாடப் படுது?

இப்போ முதுமை கொண்டாடப்படுதோ இல்லையோ வியாதிகள் அதிகமாக் கொண்டாடப் படுது.  உடல் உழைப்பு நிறைந்த அந்தக் காலத்திலே முதியோர் தனியாகவே இருந்திருக்கின்றனர்.  இப்போவும் எண்பது, தொண்ணூறு வயசுக்காரங்களோட தெம்பும், மனோபலமும், உடல் பலமும் அறுபதுகளிலும், நாற்பதுகளிலும் ஏன் இருபதுகளிலும் கூடக் கிடையாது.  முன்னேயும் பிள்ளையால் ஒதுக்கி வைக்கப் பட்ட பெற்றோர், பெண்ணால் ஒதுக்கி வைக்கப்பட்ட மாமியார், மாமனார்கள் இருக்கத் தான் செய்தனர்.  ஆனால் வெளியே வரவில்லை.  இப்போ மீடியா, அரசு எல்லாம் முதியோருக்கு எனத் தனிப்பட சலுகைகள் கொடுத்து முதியோரை அடையாளப்படுத்துவதால் முதுமை கொண்டாடப் படுகிறதோ!  அதிலேயும் தினசரிகளில் தினம் தினம் பிள்ளையால், பெண்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் பற்றிய செய்திகள்னு அதிகம் வருது.  முதியவர்கள்னா அவங்களுக்கு இப்போதைய காலத்தோடு நாகரிகத்தோடு அநுசரித்துப் போகத் தெரியாது.  பழைய விஷயங்களைத் தான் பேசுவாங்க;  அறுவை போடுவாங்கனு நினைக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் உண்டு.

ஆகவே முதுமையையும், முதியோரையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என முதுமை கொண்டாடப் படலாம்.  நம் நாட்டில் கூட்டுக்குடும்பக் காலகட்டத்தில் இதுக்கெல்லாம் தேவை இருக்கவே இல்லை.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப்போய்க் கொண்டிருந்தார்கள்.  ஆனால் இப்போதெல்லாம் ஒரு இளம் கணவன், மனைவி தங்கள் பெற்றோரைக் கூட வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தினாலே கூட்டுக் குடும்பம் என்றாகி விட்டது.  அதுவும் இருவரும் வேலைக்குச் சென்றால் தான் வைச்சுக்கறாங்க.  இல்லைனா பெரும்பாலும் தனிக்குடித்தனம் தான்.  என்னைக் கேட்டால் வட மாநிலங்களில் செய்யறாப்போல் செய்யலாம்.  பெற்றோரும், பிள்ளைகளும் அவரவர் மனைவியோடு ஒரே வீட்டிலே வாழ்க்கை நடத்துவாங்க.  ஆனால் அவரவர் சமையலறை தனித்தனி.  பொதுவாக ஒரு கூடம் (ஹால்) இருக்கும்.  சாப்பாட்டை அங்கே கொண்டு வந்து எல்லாரும் சேர்ந்தும் சாப்பிடலாம்.  அல்லது அவரவர் பகுதியிலும் இருந்து கொண்டு சாப்பிடலாம்.  நடுவே ஹால் என்றால் நாலு பக்கமும் அறைகள் இருக்கும்.  அதிலேயே சமையல், சாப்பாடு, படுக்கை அறை எல்லாமும் அடங்கும்.  ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டும், பேசிக் கொண்டும் தான் இருந்தாக வேண்டும்.  பெற்றோருக்கு என்றாவது முடியலை என்றாலோ, அல்லது பெற்றோர் சமைத்துச் சாப்பிட வில்லை என்றாலோ ஒரு மாதம் ஒரு பிள்ளை வீட்டில் என்ற கணக்கில் சாப்பிடுவார்கள்.  இது எழுதப் படாத ஒரு பொது விதி.  அதிகமாக உத்தரப் ப்ரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இப்படிப் பார்க்கலாம்.  பொதுவான தொழில் எனில் அவரவர் குடும்ப உறுப்பினரின் எண்ணிக்கை அடிப்படையில் செலவுக்கான பணத்தைக் குடும்பத் தலைவர் கொடுப்பார்.  மீதிப் பணம் சேமிக்கப்பட்டுக் குழந்தைகள் படிப்பு, வெளியூர் செல்லுதல், சுற்றுலா செல்லுதல்னு, கல்யாணங்கள், மகப்பேறுனு செலவு செய்வாங்க. இம்முறை மிகச் சிறந்ததுனு என்னோட கருத்து.


4. தான் வேலைல இருந்தப்ப மனைவி குடும்ப பாரத்தை சுமந்தது தெரியாம இருந்த ஆண்கள் ரிட்டயர்ட் ஆனதுக்கப்புறம் மட்டும் ஏதோ தன் மனைவியை கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கறது மாதிரி இருப்பது சரியா??

பெண்ணுக்குக் குடும்பம் தான் உலகம் என்றால் ஆணுக்கு உலகமே குடும்பம். :)) ஆகவே வேலையிலே இருந்தப்போ அவங்க வேலை, அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள், சிரமங்கள், போட்டிகள் என அதிலேயே அவர்கள் முழு கவனமும் போயிடும்.  வீட்டுக்கு வந்தால் அப்பாடானு இருக்கும்.  அந்தச் சமயம் அவங்களுக்குப் பொழுது போக்கு அம்சங்கள் தான் தேவைப்படும்.  ஆனால் இன்றைய கால கட்டத்தில் பெண்களும் வேலைக்குப் போகின்றனர்.  மேலும் நாற்பது ஆண்டுகள் முன்னர் வரை இருந்த தலைமுறையில் பெண் வேலைக்குனு போகாட்டியும் வீட்டின் மற்ற நிர்வாகங்கள் அவள் கையில் தான் இருந்து வந்தது.  ஆகவே இதுவும் ஆண் தலையிடாமல் இருந்ததுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  என்றாலும் நிறைய ஆண்கள் வேலைக்குப் போனாலும் மனைவிக்குக் கூடமாட காய் நறுக்கிக் கொடுத்து, துவைத்த துணிகளைக் காயப்போட்டு, பாத்திரங்கள் கழுவுகையில் உதவினு செய்வதை அன்றும் இன்றும் என்றும் பார்க்கலாம்.  குழந்தைகள் படிப்பில் கூடத் தலையிடாத ஆண்களை இன்றும் பார்க்க முடியும்.  அதெல்லாம் அம்மாக்கள் தான் கவனிக்கணும்னு சொல்வாங்க. அதுவும் தப்பு.  குழந்தைகள் படிப்பிலும் அப்பாக்கள் கவனம் இருக்கணும்.  இருந்தே ஆகணும். தன் மகனையும் தன்னைப் போல் விட்டேற்றியாக வர விடக் கூடாது.  குடும்பமே மனைவி, கணவன் இருவரும் சேர்ந்து ஓட்டும் ஒரு இரட்டை மாட்டு வண்டி தானே. மனைவி மட்டும் பாரத்தைச் சுமந்தால் போதுமா?


5. நீ ஒரு வேலை? நானொரு வேலைன்னு வயதான தன் மனைவிக்கு தன்னால் முடிஞ்ச உதவியை செஞ்சா அந்த மனைவிக்கும் ஓய்வு கிடைக்கும்,
வேலைகளை நேரத்தோட முடிக்கவும் முடியும். இதைப்பத்தி ஏன் யாரும் யோசிக்க மாட்டாங்க. (ஆபிஸ்ல ரிட்டயர்மெண்ட் உண்டு, வீட்டு வேலைக்கு ரிட்டர்மெண்ட் இல்லைன்னு புரிஞ்சிக்காத ஆட்கள் இன்னமும் இருக்காங்க)

மனைவியும் கேட்கணும். அதுவும் அதிகாரமா இல்லாம, அன்பாக் கேட்கணும்.  என்னால முடியலைங்கறதை கூச்சப்படாம ஒத்துக்கணும்.  ஒரு சிலர் முடியலைனு சொன்னால் வயசாயிடுச்சுனு நினைப்பாங்கனு சொல்ல மாட்டாங்க.  அப்படி இருக்கக் கூடாது. புழுவைக் கொட்டக் கொட்ட எப்படி குளவியாகுதோ அது போல் சொல்லிச் சொல்லிக் கேட்டுக் கேட்டுக் கணவனுக்குப் புரிய வைக்கணும்.  அல்லது கொஞ்சம் ஐஸ் வைச்சாவது செய்ய வைக்கணும்.  பழகிட்டா அவங்களே கேட்டுச் செய்வாங்க. வீட்டு வேலைக்கு என்னிக்கும் ஓய்வு என்பதே இல்லை.  ஒரு சிலரை எடுத்துக்குங்க.  மற்றவங்க சமைச்சால் பிடிக்காது.  ஆயிரம் குத்தம், கொனஷ்டை சொல்வாங்க.   பாத்திரம் கழுவ ஆள் வைச்சாலும் அவங்க கழுவிக் கொடுப்பதும்  பிடிக்காது.  ஆகவே அதுவும் அவங்களே செய்வாங்க . இது அவங்களாக ஏற்படுத்திக் கொள்வது தானே.  வெளிநாடுகளில் எல்லாம் வேலைக்கு ஆள் வைச்சுக் கட்டுப்படி ஆகாது.  அங்கே உள்ளவங்க தானே தான் செய்துக்கறாங்க.  அது மாதிரினு நினைச்சுப்பேன். ஆகக்கூடி அப்போ கூடுதல் வேலை தானே! ஆக அந்தப் பொறுப்பை நாம் ஒத்துக்கணும், உணரணும்.  நம்ம வீட்டுக்கு, நம்ம பிள்ளைக்கு, நம்ம பெண்ணுக்கு, நம்ம பேரக் குழந்தைங்களுக்குச் செய்யறோம்! வேறே யாருக்குச் செய்யறோம்னு நினைச்சால் விஷயம் ஒண்ணுமே இல்லை.  முடியலைனா எனக்கு இன்னிக்கு முடியலை, நீங்க தான் பார்த்துக்கணும்னு தெளிவாச் சொல்லிடணும்.

ஆனால் ஒரு விஷயம் என் அனுபவத்தில். வேலைக்கு ஆட்களை வைச்சுட்டு அவங்க செய்யும்போது செலவு கூடத் தான் ஆகும்.  இதுவே நாம் செய்தால் செலவு குறைச்சல்.  நமக்கு ஒரு விம் பார் ஒரு மாசம் வரும்னால் வேலைக்கு ஆள் வைச்சால் ஒரு வாரம் தான் வரும்.  அதே போல் துணி துவைக்கும் டிடர்ஜென்டும்.  வேலைக்கு ஆள் வைத்துத் துவைத்தால் ஒரு கிலோ ஒரு மாசத்துக்குப் போதாது.  நாம் செய்தால் ஒரு மாசத்துக்கும் மேலேயே வரும். பாத்திரங்களும் சுத்தமாக இருக்கும்.  துணியும் சுத்தமாக இருக்கும்.  பக்கத்திலேயே நின்று கண்காணிக்கவும் வேண்டாம். என்ன சொல்றீங்க?????????


போல்ட் எழுத்துக்களில் புதுகையில் கேள்விகள்.  என் பதில்கள் சாதாரணமான எழுத்தில். :))))

Tuesday, August 13, 2013

என் கேள்விக்கு என்ன பதில்???

ஹிஹிஹி, ஒண்ணுமில்லை.  முந்தாநாள் காரைக்குடிக்கு இன்னம்பூராரைப் பார்க்கப் போனோம்.  போறது தான் போறோமே, சுற்றுவட்டாரக் கோயில்களையும் பார்த்துடலாம்னு முடிவு பண்ணிட்டுப் போனோம்.  திருமயம், திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், வைரவன் பட்டி, பிள்ளையார் பட்டி பார்த்துட்டுக் காரைக்குடி போய் இன்னம்புராரைப் பார்த்துப் பேசிட்டுத் திரும்பி வரும் வழியில் புதுகையில் திருக்கோகர்ணம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தோம்.  நேற்றுக் கொஞ்சம் வேலை இருந்தது.  ஆகவே மடல்கள் பார்த்ததோடு சரி. படங்கள் எல்லாம் இனிமேல் தான் ஏற்றணும்.  அதுவேறே எப்படி வந்திருக்கோ தெரியலை! :))))

இப்போ என்னோட தலையாய பிரச்னை என்னன்னா, போயிட்டு வந்த ஊர்களைப் பத்தி எழுதி வைச்சுட்டு,  கல்யாணப் பதிவுகள் முடிஞ்சப்புறமா இங்கேயே போடலாமா, இல்லை ஆன்மிகப் பயணங்கள் பக்கத்திலே போடலாமா இல்லை என் பயணங்களில் பக்கத்திலே போடலாமாங்கறது தான்.  எங்கே போட்டாலும் போணியாகணுமே!  எண்ணங்களில் போட்டால் கொஞ்சமாவது போணி ஆகும்.  அதான் யோசிக்கிறேன்.  ஆனால் இப்போப் போட்டால் கல்யாணப் பதிவுகள் தாமதம் ஆகும்.  தொடர்பு விட்டுப் போகும்.  ஹிஹிஹி, நம்ம வழக்கப்படிப் பார்த்தா ஒரு கோயிலுக்கு இரண்டு பதிவுனு வைச்சுண்டாக் கூட பத்துப் பனிரண்டு தேத்திடுவோமே!  :))))) அதனால் யோசனை. எங்கே கொடுத்தால் வரவேற்பு இருக்கும்னு ஒரு சின்ன வாக்குப் பதிவு!  கருத்துகள் பின்னூட்டங்களாகவே கொடுக்கலாம்.  வாக்குப் பெட்டியெல்லாம் வைக்கலை! :)))))))


ஜனநாயக முறைப்படியான நம் ஆட்சியில் வாசகர்களாகிய உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.  நாம யாரு? ஒன் அன்ட் ஒன்லி வலை உலகத் தலைவியாச்சே!  நம்ம தொண்டர்களை அடக்கி ஆளப் பார்க்கிறோம்னு நாளைக்கு யாரானும் நம்மைப் பார்த்துச் சொல்லிடக் கூடாதில்லை! உலகெங்கும் இருக்கும் தொண்டர்கள் அனைவரும்  பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றி.


வணக்கம். 

Saturday, August 10, 2013

காசிக்கு, காசிக்கு, காசிக்குப்போகும் சந்நியாசி!



கல்யாணம் இன்னிக்கு.  காலையிலேயே சீக்கிரம் எழுந்தாச்சு. எல்லாருக்கும் காலைக் காஃபி வந்ததா? முன்னெல்லாம் குறைஞ்ச பட்சமாகச் சின்னதாக 150 மி.லி. பிடிக்கும் எவர்சில்வர் தம்ளரில் காஃபி கொடுத்தாங்க.  ஆனால் இப்போது அதுவும் கடந்த பத்து வருஷங்களாகச் சின்னதான டிஸ்போசபிள் கப்பில் கொடுக்கிறாங்க.  பிடிக்கக் கூட முடியாது.  பிடித்து வாயருகே கொண்டு போக முடியாமல் சிரமப்படறவங்க பலரைப்பார்த்திருக்கேன். அத்தனை சூடாகக் குடிக்க முடியாதவங்களும் உண்டு.  (வெளியே போனால் எல்லாம் டிஸ்போசபிள் கப்பிலே காஃபியோ, டீயோ கொடுக்கிறவங்க கிட்டே நாங்க எங்க தம்ளரை நீட்டிடுவோம். கல்யாணங்களில் கூட!)  அவங்களுக்கு ஆத்திக் குடிக்க இன்னொரு டிஸ்போசப்பிள் கப் கொடுக்கலாம்.  அல்லது ரயில்வேயில் கொடுக்கிறாப்போல் பேப்பர் கப் 200 பிடிக்கிறாப்போல் வாங்கி (அதைத் தண்ணீர் குடிக்கத் தராங்க) அதில் முக்கால் பாகம் ஊற்றிக் கொடுக்கலாம்.  மேலும் இன்னொரு விஷயம், காலை முதல் காஃபியே இம்மாதிரிச் சின்ன உத்தரணியில் கொடுப்பது பலருக்கும் அரை மனது தான்.  இதிலே போய் மிச்சம் பிடிக்கிறாங்க பாருனு சமையல் கான்ட்ராக்டரைக் குறை சொல்வாங்க.  நேரடியாக் குற்றம் சாட்டுகிறவங்க ரொம்பவே கம்மி.  ஆனால் நானெல்லாம் கான்ட்ராக்டர் கிட்டே பேச்சு, வார்த்தையின் போதே சொல்லிடுவேன்.  காலைக் காஃபி தம்ளரில் தான் கொடுக்கணும்.  அதன் பின்னர் தம்ளர் கேட்கிறவங்களுக்கு அதிலே தான் கொடுக்கணும்னு கண்டிஷன் போட்டுடுவேன்.  சாப்பாடுகளுக்கு ஆகும் செலவைப்போல் மூன்று மடங்குக்கும் அதிகமாகத் தான் கான்ட்ராக்டர்கள் வாங்கறாங்க.  ஆகக் கூடி அவங்களுக்கு இதிலே லாபம் தான் அதிகம் இருக்கும்.  இதிலே ஒரு கல்யாணத்தில் மிச்சம் ஆகும் பொருட்களையும், பலகாரங்களையும் வைத்து இன்னொரு கல்யாணத்தில் அட்ஜஸ்ட் செய்வதையும் நேரிலேயே பார்த்திருக்கிறேன். மிகச் சிலரே மிஞ்சும் சாப்பாடை ஆசிரமங்கள், அநாதை விடுதிகள் எனக் கொடுக்கின்றனர்.  இதை எல்லாக் கான்ட்ராக்டர்களும் கடைப்பிடிக்கணும்.  சாப்பிடறவங்க வாயாலே பெண்ணையும், பிள்ளையையும் வாழ்த்துவாங்களே!  அதுக்காகவே கொடுக்கலாம்.  இப்போ நம்ம கல்யாணத்துக்கு வருவோமா?

அடுத்துப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மங்கள நீராட்டு.  இதைப் பெண்ணின் அத்தையோ, பிள்ளையின் அத்தையோ இருவருக்கும் எண்ணெய் வைத்தோ, அல்லது தனித்தனியாக எண்ணெய் வைத்தோ ஆரம்பித்து வைப்பார்கள்.  அத்தைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  இது குறித்து ஜீவி சார் சொன்ன கருத்து வந்து சேரவில்லை. :( பெண்ணும், பிள்ளையும் குளித்து முடித்ததும் அலங்காரம் ஆரம்பிக்கும்.  பெண் எப்போதுமே அலங்காரப் ப்ரியை என்பார்கள்.  ஆகவே பெண்ணின் அலங்காரம் அதிசயமெல்லாம் இல்லை.  பையரின் அலங்க்காரம் தான் முக்கியம் இப்போ. அதைப் பார்ப்போம். மாப்பிள்ளையின் இந்த அலங்காரத்திற்குப் பரதேசிக் கோலம் என்று சொல்வார்கள்.  ஆனால் உண்மையில் இத்தனை நாட்கள் படிப்பு, படிப்பு என இருந்த மாணவன் இப்போது தான் திருமணத்திற்குத் தகுதி பெற்றவனாகியதால் ஆடை, அலங்காரங்கள் செய்து கொள்கிறான்.  ஆனால் இந்தக் காசி யாத்திரை குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன.  ஒரு சிலர் இது தான் திருமண பந்தத்திலே இருந்து தப்பிக்கப் பிள்ளைக்குக் கிடைத்தக் கடைசிச் சந்தர்ப்பம் எனவும், வேறு சிலர் மாணவன் காசிக்குப் படிக்கச் செல்கையில் பெண் வீட்டார் வழி மறித்து எங்க பெண்ணைத் திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்வதால் பிள்ளை திரும்பி விடுகிறான் எனவும் சொல்கின்றனர்.  இன்னும் சிலர் பையர் நேரடியாக வானப்ரஸ்தம் மேற்கொள்ளக் கிளம்புவதாகவும் அதைத் தடுத்துப்பெண்ணின் தந்தை தன் பெண்ணைக் கொடுப்பதாகவும் சொல்கின்றனர்.  அதற்காகவே வெயிலில் இருந்து பாதுகாக்கச் செருப்பு, துஷ்ட மிருகங்களை அடக்கத் தடி, மழை, வெயிலில் பாதுகாப்புக்குக் குடை,, அவன் அறிவு பெறப் , புத்தகங்கள் எல்லாம் கொடுப்பதாகச் சொல்கின்றனர்.  ஆனால் காசி யாத்திரை எனப்படும் பரதேசிக் கோலத்தின் அர்த்தம் இது எதுவுமே இல்லை என்பதே உண்மை. அதோட இல்லாமல் இதைத் தவிர்க்க வேண்டியவற்றின் பட்டியலிலும் கூறி இருக்கிறார்கள். :)))) உண்மையான பொருள் புரியாததால் பல அனர்த்தங்கள். முதல்நாள் லக்னப் பத்திரிகை வாசிப்பதால் மறுநாள் இந்தச் சடங்கு தேவையற்றது என்பது ஒரு கருத்து.  பெண்ணை நிச்சயம் செய்வது பெரியோர்கள் தான்.  இப்போத் தான் நிச்சயத்தில் பெண்ணும், பிள்ளையும் கலந்து கொள்கின்றனர்.  பொதுவாகப் பெரியோர்களே நிச்சயம் செய்கின்றனர்.  அதன் பின்னரே மணமகனுக்கு முறைப்படி தெரிவிக்கப்படுவதாய் ஐதீகம். அதனாலேயே இந்தக் காசி யாத்திரையை எல்லா சமூகத்தினரும் விடாமல் கடைப்பிடிக்கிறாங்களோனு நினைக்கிறேன். :)))))

முன்பெல்லாம் மாணவன் குருகுலத்தில் படித்து வந்தான். ஸமாவர்த்தனம் என்னும் கான்வகேஷன் நடந்த பின்னரே காசிக்கும் யாத்திரை சென்று வருவான். காசியாத்திரை போய் வரும் கட்டத்தில் மாணாக்கனை "ஸ்நாதகன்" எனச் சொல்கின்றனர்.  படிக்கும் காலத்தில் மாணவன் குருவுக்கு அடங்கியவனாக பிக்ஷை எடுத்து உணவு உண்ணும் வழக்கத்தோடு இருந்து வந்தான்.  வயிறு நிறையச் சாப்பிடலாம்.  ஆனால் அவற்றில் புலனை ஈர்க்கும் விஷயங்கள் இருத்தல் கூடாது.  ஒற்றை வேஷ்டி தான் கட்டிக் கொள்ள வேண்டும்.  வெற்றிலை, பாக்கு,போன்றவையோ சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களோ, பயன்படுத்துதல் கூடாது.  இப்போதும் நியம நிஷ்டையோடு இருக்கும் பிரமசாரிகள் வெற்றிலை, பாக்குப் போட மாட்டார்கள்.  உணவின் ருசியைக் குறித்துக் குறை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் சுகத்தில் மனம் போக ஆரம்பித்தால் கல்வியில் குறைபாடு ஏற்படும்.  பனிரண்டு வருஷங்கள் இப்படி இருந்து குருகுல வாசத்தை முடித்த மாணவனை கிரஹஸ்தாசிரமம் ஏற்க வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம் சொல்லும் ஆலோசனை.  ஆகவே அவன் இல்லறம் ஏற்க வசதியாக இப்போது ஆடை, மாலை, சந்தனம், குங்குமம், குடை, தடி, விசிறி, செருப்பு போன்றவை பயன்படுத்துவதோடு வாசனாதி திரவியங்களும் பயன்படுத்துவான்.  அவன் படித்தவன் என்பதை உலகோருக்குக் காட்டும் வண்ணம் கையில் ஒரு புத்தகம், (முன் காலங்களில் சுவடிகள்) இருக்கும்.  பார்க்கப் போகும் பெண்ணின் கண்களுக்கு அழகனாகத் திகழ வேண்டாமா?  ஆகவே அவன் தன்னைத் தானே அழகு படுத்திக்கொள்வதோடு உறவினரும் உதவுகின்றனர்.  ஆசாரியரும் இனி அவனுக்கு ஒற்றை வேஷ்டி தேவையில்லை எனப் பஞ்சகச்சம் பரிந்துரைக்கிறார்.

இல்லறம் விரும்பும் மாணவன் தானாகப் பெண்ணைக் கேட்டுப் பெற முடியாது என்பதால் தக்கவர்களை அணுகி அவர்கள் மூலம் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான்.  அப்போது தான் பெண்ணின் தகப்பனார் அவன் குலம், கோத்திரம் மட்டுமல்லாது படிப்புப் போன்ற தகுதிகளையும் அவன் விருப்பத்தையும் நன்கு அறிந்து கொண்டு தான் தன் பெண்ணை அந்தப் பிள்ளைக்கே தருவதாக ஒத்துக் கொள்கிறார்.  ஆனானப்பட்ட பரமசிவனுக்கே சப்தரிஷிகள் அனைவருமாகச் சென்று ஹிமவானிடம் பெண் கேட்க வேண்டி இருந்ததே! பெண்ணைக் கொடுப்பதன் மூலம் அத்தனை நாட்கள் பெண்ணிடம் தனக்கிருந்த உரிமையை  அகற்றி மணமகனிடம் ஒப்படைக்கிறார் பெண்ணின் தந்தை.  இதுவே பரதேசிக் கோலம் என்று இன்றைய நாட்களில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டிருக்கிறது.  உண்மையில் பெண்ணை உரியவரிடம் ஒப்படைக்கும் ஒரு நிகழ்வே காசியாத்திரை அல்லது பரதேசிக்கோலம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.  இத்தோடு ஸமாவர்த்தனம் நிறைவு அடைகிறது.  அடுத்து டும் டும் மேளம் கொட்டிக் கல்யாணச் சேதிதான்.



காசியாத்திரை எனப்படும் பரதேசிக் கோலம் குறித்த விளக்கங்களுக்கு நன்றி காமகோடி தளம். 

Friday, August 09, 2013

Peek a Bhoo! மழை காணுமே, காணுமே காணுமே இட்டாச்ச்ச்சு!




ஶ்ரீரங்கத்தில் மழையா? ம்ஹ்ஹும்!  வாய்ப்பே இல்லை.  மழை வருது, வருது, வருது, இதோ வந்துடுச்சு, இட்டாச்சு!

ஓடிப் போயிடுச்சு!

ஹாஹாஹா, நல்ல நாளிலேயே வெந்நீரில் குளிக்கும் நம்பெருமாளுக்கு இந்த மழைக்கே ஜலதோஷம் பிடிச்சுக்கும்! :P:P:P:P:P   இன்னிக்குக் காலங்கார்த்தாலே ரெண்டு, ரெண்டுனா ரெண்டு தான்  தூற்றல் போட்டுது.  நம்பெருமாள் வருணனைப் பார்த்தார்.

காணுமே, மழை காணுமே, இதோ இங்கிருக்கு, இட்டாச்சுனு வருணன் சொன்னதும் பெருமாளுக்குச் சமாதானம் ஆயிடுச்சு! மழையும் நின்னது, சீச்சீ, தூற்றல் நின்னது.  பெருமாளும் ஆண்டாளைப் பார்க்கப்போனார். 

Tuesday, August 06, 2013

நாடெங்குமே செழிக்க! நன்மையெல்லாம் சிறக்க, நடந்தாய் வாழி காவிரி!

ஆடிப் பெருக்கன்னிக்கே இன்னும் கீழே போய்ப் படம் எடுத்திருக்கணும் போல! :)) அந்தப் படிகளையும் தாண்டித் தண்ணீர் வந்துட்டதாலே அம்மா மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமையிலே இருந்து மூடிட்டாங்க.  அதை ஒட்டிய கரைகளையும் காவல் துறை பாதுகாப்பில் வைச்சிருக்காங்க.  இன்னிக்கு ஆடி அமாவாசைக்குத் திறப்பாங்கன்னா ம்ஹ்ஹும், நோ, நோ சொல்லிட்டாங்க.  எல்லாரும் தெருவிலே உட்கார்ந்து பித்ருக்கடன்களைச் செய்தனர். அதைப் படம் எடுக்கக் கூடாதுனு கீழேயே போகலை. :)))))  ஆனால் இன்னிக்குக் காலம்பர மொட்டை மாடியிலே இருந்து சில படங்கள் எடுத்தேன்.  கொள்ளிடமும் நிரம்பி இருக்கு.  கொள்ளிடக் கரைக்கும் போகணும்.  அங்கேயானும் கொஞ்சம் கிட்ட இருந்து எடுக்க முடியுதானு பார்க்கலாம்.  இப்போ இன்னிக்கு எடுத்த படங்கள் கீழே பகிர்ந்துக்கறேன்.

1. கீழே காணும் படம் கொஞ்சம் தென்மேற்குப் பகுதியில் எடுத்தது. அக்கரையில் தெரிவது சிந்தாமணிப் பகுதி.


வெகு காலமாகப் பிறந்த வீட்டிலேயே இருந்த பெண் தன் கணவனைக் காணத் துடிப்புடனும், ஆவலுடனும் வருவது போல் வருகிறாள் காவிரி.  வர வழியெங்கும் அவளுக்குப் பல்வேறு விதமான அலங்காரங்கள். ஆபரணங்கள், மலர் மாலைகளைச் சூட்டுகின்றனர்.  மலர் தூவி வரவேற்பு.  கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளாகக் காணாத தன் புகுந்த வீட்டின் நிலைமை எப்படி இருக்குனு பார்க்க வேண்டி கொஞ்சம் இடம் கிடைச்சால் போதும்னு உள்ளே நுழைகிறாள் காவிரி. 

இது கொஞ்சம் தெற்கே.  கொஞ்சம் தள்ளி வந்தால் உ.பி.கோவில் வரும்.  ஆனால் காவிரி மறைக்கும். ஆகவே உ.பி.யும் தெரியணும், காவிரியும் தெரியணும்னா கீழே போய்க் காவிரிக்கரையிலோ அல்லது பாலத்திலோ போய்த் தான் எடுக்கணும்.  நேரம் கிடைக்கையில் எடுக்கிறேன். 


காவிரிக்குத் தான் வழியில் எத்தனை கரங்கள் முளைக்கின்றன.  அவள் ஆசை அடங்கவில்லை.  தான் இல்லை எனினும் தன் நெஞ்சத்து ஈரம் கொஞ்சமானும் மிச்சம் இருந்ததால் இங்கே இன்னும் பசுமை குடி கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து சந்தோஷம் தாங்கவில்லை அவளுக்கு.  எல்லாக் கரங்களையும் நீட்ட வேண்டும் போல இருக்கு.  ஆனால் நடுவில் கல்லணை குறுக்கிட்டது.  அந்தத் தடையை ஞாயிறன்று நீக்கிவிட்டார்கள்.  கல்லணையிலிருந்தும் தன் அனைத்துக்கரங்களையும் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனைக் காணும் ஆவலோடு ஓடுகிறாள் காவிரி.

இது முற்றிலும் மேற்கே.  இன்னும் தள்ளிப்பார்த்தால் வடமேற்கிலிருந்து காவிரி வளைந்து, நெளிந்து, ஒசிந்து, ஒல்கி வருவது  பல நாட்கள் கழிந்த பின்னர் முதன் முதல் கணவனைக் காண வரும் பெண்ணின் நாணத்தை நினைவூட்டும்.  வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்ற தன் பெயர் இங்கே தமிழ்நாட்டில் பொய்த்துப் பழங்கதையாய்ப்போனதை நினைத்து வெட்கத்திலும் அப்படி வருகிறாள் என எடுத்துக்கொள்ளலாம்.  இங்கே அப்படித் தான் எடுத்துக்க வேண்டி இருக்கு.

இதுவும் மேற்குப் பக்கம் தான்.


பார்த்தாள் காவிரி.  இந்த மனிதர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு கங்கை, யமுனை மட்டுமல்ல, நானும் இப்படிச் சிரிப்பாய்ச் சிரிக்கிறேனே எனக் கோபம் வந்துவிட்டது.  அதான் இந்த வருஷம் விட்டேனா பார், என்னையா தடுக்கிறாய்? எனக் காளியின் ஆவேசத்தோடு சீறிப் பாய்கிறாள்.  அவள் சீற்றம் கொண்டாலும் அதன் மூலம் அனைவரையும் வாழத்தானே வைக்கிறாள்!  தன்னைக் கட்டுப்படுத்திய மனிதரிடம் தான் அவள் சீற்றமெல்லாம். 


Sunday, August 04, 2013

ஊருக்குப் போயிட்டு வந்தேன்! :))))

இன்னிக்குக்காலையிலே நாலு மணிக்கே எழுந்து குளிச்சுட்டுக் குலதெய்வம் கோயிலுக்குப் போனோம்.  கும்பகோணத்தை நெருங்கியதும், சில சாமான்கள் வாங்க வேண்டி பெரிய கடைத்தெருவிலே இறங்கினோம்.  அங்கே இருந்த பொதுக் கட்டணக் கழிப்பறை மூடி இருக்கவே என்ன ஆச்சுனு விசாரிச்சோம். அதை வேறே தெருவுக்கு மாத்தி இருப்பதாச் சொன்னதும், ஒரு ஆவலுடன் எங்கேனு பார்த்ததில் என்னத்தைச் சொல்றது! :( சார்ங்கபாணி கோயில் மதில் சுவரில் அதை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. ரொம்ப மனசுக்கு வேதனையாப் போச்சு.  இங்கே தான் அப்படின்னா நாகேஸ்வரர் கோயில் வழியாப் போனப்போ அங்கேயும் இப்படி ஒண்ணு கட்டி விடப்பட்டிருப்பது தெரிஞ்சது.  பெரிய கடைத்தெருவில் தெருவின் நடுவே இருந்தாலும் யாருக்கும் தொந்திரவில்லாமல் இருந்த கழிப்பறைகள் இப்படிக் கோயில்களின் மதில் சுவரை ஒட்டிக் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தும் ஊர் மக்கள் ஏதும் சொல்லலையேனு தோன்றியது.  கோயிலைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்றாங்க.  ஆனால் கழிவறை இருக்கலாமா என ஏன் தோன்றவே இல்லை??????? 

கிராமத்துக்குப் போகும்போது பார்த்தால் புதூர் என்னும் கிராமம் வரையிலும் அரசலாற்றில் தூர் வாரும் பணி நடைபெறவே இல்லை எனப் புரிந்தது.  மக்கள் தான் எல்லாமும் அரசே செய்து கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறாங்களே.  அவங்க பக்கத்து ஆற்றின் மாசுகளை குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்தவங்களே நீக்கலாம். :( தண்ணீர் வரலைனு சொன்னால் மட்டும் போதுமா?  வர நீரைப் பாதுகாப்புடனும், சுத்தமாகவும் வைச்சிருக்க வேண்டாமா?  புதூர் தாண்டி எங்க ஊரான கருவிலி வரையிலும் சுத்தமாகத் தூர் வாரி இருந்தாலும், ஆற்றில் இறங்கும் கரைக்கருகேயே ஊற்றுத் தண்ணீருக்காக மக்கள் தோண்டுவதைப் பார்த்தோம்.  இப்போ இன்னும் அந்தப் பகுதி வரையிலும் காவிரி நீர் வரவில்லை.  நீர் வந்துவிட்டால் அந்தப் பள்ளம் நிரம்பிவிடும்.  பள்ளம் இருப்பது தெரியாமல் கரையோரமாக ஆற்றில் இறங்கும் நபர்களைப் பள்ளத்தில் இழுக்கும் அபாயம் இருக்கிறது.  கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் பயணத்திலும் இப்படி ஆங்காங்கே நடப்பதைப் பார்க்க முடிந்தது.  வண்டியில் போனதாலும் காமிரா எடுத்துப் போயும் படங்கள் எடுக்க முடியவில்லை. :(எடுத்தாலும் நடு ஆற்றில் பள்ளம் தோண்டுபவர்களை எடுக்க வழியில் நிறுத்தி இறங்கணும்.  அந்தக் குறுகலான பாதையில் வண்டியை நிறுத்தினால் எதிரே வரும் பேருந்துகள், கனரக வண்டிகள் கடக்கையிலே சிரமம்!  ஆகவே அந்த ஆசையை விட்டுவிட்டேன்.  பாலத்துப்பக்கம் ஒண்ணும் இல்லை.  சுத்தமாகவே இருந்தது.

வயல்கள் எல்லாம் உழுது போட்டுவிட்டு நீருக்காகக் காத்திருக்காங்க.  இன்னும் கல்லணை திறக்கலை.  கல்லணைத் தண்ணீர் அங்கே போனால் தான் கடைமடைப் பாசனம். 


(இந்தப் படம் இன்னிக்கு எடுக்கலை;  கும்பாபிஷேஹம் நடக்கும் முன்னர் திருப்பணிக்காக எப்போவோ எடுத்தது.  நடுவில் உற்சவரைத் திருடிக் கொண்டு போயிட்டுப் பின்னர் திலகவதி ஐபிஎஸ்ஸிடம் தனிப்பட வேண்டுகோள் விடுத்து மீட்டோம். இப்போ உற்சவர் இன்னமும் கோர்ட்டின் பாதுகாப்பில் தான் இருக்கார்)


பரவாக்கரையில் பெருமாள் கோயிலில் பெருமாளைத் தரிசனம் பண்ணினால் அவர் நின்ற கோலம் வலக்காலைத் தூக்கிக் கொண்டு ஆடும் வெள்ளியம்பல நடராஜர் போலவே தோன்றியது.  இரண்டு மூன்று முறை உற்றுப் பார்த்தும் மீண்டும் மீண்டும் அப்படியே தோற்றம்.  
(அப்பர் தேவாரத்தில் 5 ஆம் திருமுறை(?) கருவிலிக் கொட்டிட்டை எனக்குறிப்பிடப் பட்டுள்ள ஊர் இது தான்.  நாச்சியார் கோயிலில் இருந்தும் வரலாம்.  காரைக்கால் வழியில் வந்து வடமட்டத்தில் திரும்பி பரவாக்கரையைக் கடந்தும் வரலாம். திருச்சியில் இருந்து கும்பகோணம் வந்து  கும்பகோணத்தில் இருந்து பரவாக்கரை செல்லப் பேருந்துகள் இருக்கின்றன. அவை வடமட்டம் வரையிலும் செல்லும்.  அங்கிருந்து நடந்தோ ஆட்டோவிலோ பரவாக்கரை போகலாம்.  மினி பேருந்து பரவாக்கரைக்குச் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வருகின்றன.  அவை குறித்த தகவல் தெரியாது.  நண்பர் ஒருத்தர் கேட்டிருப்பதால் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.)

இங்கே கருவிலியில் சற்குணேஸ்வரரோ, அப்படியே தும்பிக்கையோடு கூடிய கணபதி போல் காட்சி அளித்தார்.  என் கண்ணுக்குத் தான் அப்படி எல்லாம் இருந்ததோ என்னமோ!   ஒன்றரை மணிக்கு வந்தோம்.  வந்து சாப்பிட்டுக் கணினியிலே உட்காரலாம்னு பார்த்தால் திடீர் மின் வெட்டு.  அப்போ அப்போ நான் இன்னும் போகலையாக்கும்னு சொல்லிட்டு இருக்கு.  மூன்றரை மணிக்குத் தான் வந்தது.  இப்போ இணையம் சொதப்பல் பண்ணிட்டு இருக்கு. :(

Saturday, August 03, 2013

நம்பெருமாள் ஆடிப்பெருக்குக்கு வந்தாச்சு, எல்லாரும் பார்க்க வாங்க!


தலையிலே பார்த்தீங்களா?  அதுக்குப் பாண்டியன் கொண்டைனு பெயர். இதை சுந்தரபாண்டியன் கொடுத்ததாக வரலாறு.  ஆனால் இப்போ இருக்கும் கொண்டைக்கு வேறு கதையும் சொல்றாங்க.  அது ஆன்மீகப் பயணம் வலைப்பக்கத்திலே வரும். :)))) இன்னிக்குக் காவிரிக்குச் சீர் கொடுப்பார் ரங்க நாதர்.  அதுக்காக ஆண்டாளம்மா ஏற்கெனவே காவிரிக்கரைக்குப் போயாச்சு. பட்டுப் புடைவை, வளையல்கள் மஞ்சள் குங்குமம், கருகமணி, பிச்சோலை, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் போன்ற மங்கலப் பொருட்கள் ஒரு பட்டுத்துணியில் மூட்டையாகக் கட்டப்பட்டு யானையின் மேல் ஏற்றி சகல மரியாதையோடும் ஓடும் காவிரி வெள்ளத்தில் சமர்ப்பிக்கப்படும்.  அதைப் பார்க்கலாம்னா முடியாது போல.  இந்த வருஷம் எக்கச்சக்கக் கூட்டம். :(
இதான் அம்மா மண்டபம். உள்ளே நுழையும் வழியைக் காவல்துறை பூட்டி வைச்சிருக்கு.  ஏனெனில் பெருமாள் நுழைகையில் கூட்டமும் சேர்ந்து உள்ளே கட்டுக்கடங்காமல் போயிடும். காவிரிக்குப் போகப் பக்கத்துப் படித்துறை வழியாப் போனோம்.  அங்கே மக்கள் வெள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளம், காவிரி வெள்ள்ளத்தோடு போட்டி!  இன்னும் இரண்டு நாட்களில் கூடுதல் நீரும் காவிரிக்கு வரும்.  அப்போ நிதானமாய்ப் போய்ப் படம் கிட்ட இருந்து எடுக்கணும்.  இப்போ சற்றே தள்ளி இருந்த உயரமான படியின் மேலே இருந்து எடுத்த படங்கள் கீழே காணலாம்.


இன்னொண்ணு


இப்போ வீதியில் போட்டிருந்த சில கடைகளைக் காணலாம்.







படங்கள் இன்னமும் இருக்கு.  ஆனால் போடலை. :)))))) அப்புறமாப் போடறேன்.  இல்லைனா பேசும் பொற்சித்திரமே பக்கத்திலே பகிர்ந்துக்கறேன்.  அதுக்கும் படம் வேணும் இல்ல!  மறந்துட்டேனே, நம்பெருமாளைப் பல்லக்கின் ஆழத்திலே வைச்சிருந்தாங்க!  அதோட குறுக்குக் கட்டைகள் வேறே.  அப்புறமா நம்ம ரங்க்ஸ் தான் எதிரே இருந்த அறநிலையத் துறை அலுவலகத்துக்கு நம்பெருமாள் போயிருந்தப்போ அங்கே போய்க் கிட்டே இருந்து எடுத்துட்டு வந்தார்.

எல்லா இடத்திலேயும் நிவேதனம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதங்கள்னு. நம்பெருமாளுக்கு இந்தத் தெருவிலேயே பல மண்டகப்படிகள். எல்லா இடத்திலும் நிவேதனம் நடக்கையில் ஒரு நீண்ட வெள்ளைத்துணியால் திரைபோடறாங்க.  உள்ளே பட்டாசாரியார் நம்பெருமாளுக்கு நிவேதனம் செய்விக்கிறார்.   திரை நீக்கியதும் பார்த்தால் நிஜம்மாவே சாப்பிட்டிருப்பார் போலனு தோணும்.  அப்படி ஒரு சிரிப்பு முகத்திலே.  ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு இன்னிக்குப் பெருமாள் என்னமோ சோகமா இருக்கிறதாப் பட்டதாம். திருஷ்டிப் பொட்டு வைக்கலைனோ என்னமோ தெரியலை. 

ஆனால் பாருங்க இத்தனை இடத்தில் சாப்பிட்டும் அவர் நித்ய உபவாசி தான்;  அதே போல் இத்தனை பெண்களை மணந்தும் அவர் நித்ய ப்ரமசாரிதான். அதோட அர்த்தமே இன்னிக்குத் தான் நல்லாப் புரிஞ்சது.  குரு பூர்ணிமா அன்று நடந்த சத்சங்கத்திலே இதைக் குறித்து விளக்கம் சொல்லப் பட்டது.  ஆனாலும் உணர்வு பூர்வமாகப் புரிஞ்சதுனு சொல்லலாம்.  ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். :)))))))