எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 30, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 6


சமயபுரம் மாரியம்மன் தமிழ்நாட்டு மாரியம்மன் கோவில்களுக்கெல்லாம் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது.  அதோடு இந்தக் கோயிலும் ஒரு சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர்.  தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும்கோயில்களில் இதுவும் ஒன்று. ஆய்வாளர்கள் சோழர் காலத்திலேயே இங்கே அவர்களின் குலதெய்வமான மாரியம்மனோ அல்லது கொற்றவைக் கோயிலோ இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.  பின்னர் விஜயநகர மன்னர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் மேலும் சிறப்புப் பெற்றிருக்கலாம்.  கோயிலின் கொடிமரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களில் நாயக்கர் காலத்துச் சிலைகளே காணப்படுகின்றன.  ஆகையால் நாயக்கர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர்.  இந்தக் கோயிலின் அம்மன் திருவரங்கத்திலிருந்து வந்ததால் கோயில் பன்னெடுங்காலமாக ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தின் கீழேயே இருந்திருக்கிறது.  1984--ஆ ஆண்டில் தான் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு எனத் தனி நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டது.  திருமுருக கிருபாநந்த வாரியார் அவர்களால் பக்தர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டுக் கும்பாபிஷேஹம் நடத்தப் பட்டது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் இருக்கின்றன. முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்று உள்ளது.  இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்களைக் காணலாம்.  அம்மன் மிகவும் உக்கிரத்துடனும் கோரைப்பற்களுடனும் இருந்ததாகவும் அம்மனின் உக்கிரத்தைத் தணிக்க என்ன செய்வது என காஞ்சி பரமாசாரியாரைக் கலந்து ஆலோசித்த கோயில் நிர்வாகத்தினர் அவரின் ஆலோசனையின் படி நுழைவாயிலின் வலப்புறம் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்ததோடு அம்மனின் மூல விக்ரஹத்தின் கோரைப் பற்களையும் அகற்றி இருக்கின்றனர்.  பின்னர் 1970--இல் இதற்காகக் கும்பாபிஷேஹமும் செய்திருக்கின்றனர்.  அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கும்.  அம்பாள் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு. பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மூலம் அம்பாளின் கருவறையும், கருவறை விமானமும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 72 கிலோ தங்கத்தோடு மூன்றரை கிலோ செம்பு சேர்த்து அப்போதைய மதிப்பில் ஏழு கோடி ரூபாய்க்குத் தங்கத் தகடு வேயப்பட்டுள்ளது.

அம்மன் சுகாசனக் கோலத்தில் வீற்றிருக்கிறாள்.  எட்டுத் திருக்கரங்களுடன் காணப்படும் அம்பாளின் தலைக்கு மேலே ஐந்து தலை நகம் படம் விரித்துக்கொண்டு காணப்படுகிறது.  இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்க விட்டுள்ளாள்.  தொங்க விடப்பட்ட வலக்காலின் கீழே அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன.  கைகளில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஏந்திக் கொண்டு நெற்றியில் திருநீறும், குங்குமமும் அணிந்து, மூக்குத்தியும் தோடுகளும் ஜொலிக்க, 27 நக்ஷத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள்ளே அடக்கிய அம்பாள், 27 யந்திரங்களானத் திருமேனிப் பிரதிஷ்டையில் அருளாட்சி செய்கிறாள்.  இவளை ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகாதேவி தான் என்பார் உண்டு.  மன்மதனை எரித்த சிவன் அப்போது வெளியிட்ட வெப்ப அனல் தாங்காமல் தவித்த தேவலோகத்து மக்களையும், பூவுலக மக்களையும் உமை அன்னை அந்த வெப்பத்தைத் தான் உள்வாங்கிக் கொண்டு காப்பாற்றியதாகவும், அன்னையின் அந்த சக்தி சொரூபம் சீதளா எனவும், மாரியம்மன் எனவும் அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.  வசுதேவர் தேவகியின் எட்டாம் குழந்தையான கண்ணன்  கோகுலம் செல்ல, கோகுலத்தில் நந்தனுக்குப் பிறந்த பெண் குழந்தை சிறைச்சாலைக்கு வருகிறது.  அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற கம்சனிடம் இருந்து தப்பிய யோக மாயாவே இந்த மாரியம்மன் என்பாரும் உண்டு.  ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுர நாயகி, சாம்பிராணி வாசகி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, கெளமாரி, காரண செளந்தரி, சீதளா தேவி, கண்ணபுரத்தாள், மகமாயி எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள்.

மூலவர் விக்ரஹம் மூலிகைகளாலேயே ஆனதால் அபிஷேஹம் செய்வதில்லை.  உறசவ விக்ரஹத்துக்கு மட்டுமே அபிஷேஹங்கள் நடைபெறும்.  கருவறையின் பின் புறம் அம்மனின் பாதங்கள் உள்ள இடத்தில் மலர் சூட்டி, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.  அம்பாள் தினம் இரவு உலா வருவதாகவும் கோயிலிலேயே தங்கி முன் மண்டபத்தில் உறங்குபவர் பலருக்கும் இரவில் அம்மனின் கொலுசுச் சப்தம் கேட்பதாகவும் சொல்கின்றனர்.  தல விருக்ஷம் வேம்பு. அயோத்தி மன்னன் தசரதன் இங்கு வந்து வழிபட்டதாகச் சொல்கின்றனர்.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு பாலாலயம் செய்யப்பட்டு மீண்டும் அம்மன் பீடத்தில் அமர்த்தப் படுகிறாள்.  மற்ற மாரியம்மன் கோயில் போல் இல்லாமல் இங்கே சிவாசாரியார்களாலேயே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.  இங்கே அம்மனின் ஸ்தல விருக்ஷமான வேப்பமரத்தின் கீழுள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாயும், தினம் இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நாகம் கருவறைக்குச் சென்று கொண்டிருந்ததாயும், மக்கள் நடமாட்டம் அதிகம் ஆகவே நாகம் இப்போது வெளிவருவது இல்லை என்றும் சொல்கின்றனர்.  நாகம் இருக்கும் இடத்தைக் கம்பிக் கதவு போட்டு மூடியுள்ளனர்.

இங்கு பக்தர்களுக்காக அம்பாளே விரதம் இருக்கிறாள்.  அம்பாளின் விரதகாலம் மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை.  அப்போது தினம் சாயங்காலம் ஒருவேளை மட்டும் இளநீர்,மோர், பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதனம் செய்யப்படுகிறது.  ஊர்மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பார்கள்.  விரத முடிவில் பூச்சொரிதல் விழா நடக்கும்.  பக்தர்களின் உடல் வெப்பத்தைத் தான் வாங்கிக் கொண்டு அவர்களைக் காத்து ரக்ஷிக்கும் அம்பாளுக்கு பக்தர்கள் பூமாரி பொழிந்து அவளைக் குளிர்விக்கின்றனர்.  தேர்த்திருவிழாவும் நடைபெறும்.  அப்போது திருவானைக்கா ஜம்புகேஸ்வரரும் அம்மனுக்குச் சீர் வரிசை அனுப்பி வைப்பார்.  அண்ணனிடமும், ஈசனிடமும் சீர் வரிசை பெறும் அம்மன் இவள் ஒருத்திதான் என்கின்றனர்.  இங்குள்ள விபரம் அறிந்த மக்கள் இனாம் சமயபுரம் சென்று ஆதி மாரியம்மனைத் தரிசித்த பின்னரே கண்ணனூர் வந்து சமயபுரம் மாரியம்மனைத் தரிசிக்கின்றனர்.  இது தான் முறை என்கின்றனர்.  சூரப்ப நாயக்கர் என்பார் அன்னையின் ஆசியைப் பெறாமல் அன்னைக்கு எனப் புதிய உற்சவ விக்ரஹம் செய்து திருவிழாவில் வீதி வலம் வர ஏற்பாடுகள் செய்ய அதற்குப் பல தடைகள் ஏற்பட்டதாகவும், சூரப்ப நாயக்கர் பின்னர் அன்னையிடம் மன்னிப்புக் கேட்டதாயும், அதன் பின்னர் அன்னை மனம் இரங்கியதாகவும் கூறுகின்றனர்.  இப்போதும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின் போது சூரப்ப நாயக்கர் செய்த உற்சவ விக்ரஹம் தான் உலா வருவதாகச் சொல்கின்றனர்.


மாரி திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்
பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான் பெறுவர்
நாடித் துதிப்போரும் நற்கதியைத் தான் அடைவார்
ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஓடி
மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்
மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு
எங்கும் நிறைந்த ஈச்வரிக்கு மங்களம்.

மாரியம்மன் தாலாட்டு.

Sunday, August 26, 2012

அப்பாதுரைக்காக இலுப்பச்சட்டி தோசை! :))))

அப்பாதுரைக்காக இலுப்பச் சட்டி தோசை.  இது இட்லி மாவிலே நல்லா இருக்கும்.  ஆனால் நான் இட்லிக்கு, தோசைக்குனு எல்லாம் தனியா அரைப்பதில்லை.  சின்ன மொட்டைச் சட்டி.  எங்க குடும்பத்திலே பரம்பரையா எல்லாருக்கும் சீர் வரிசையிலே இந்தச் சட்டி கட்டாயம் கொடுப்பாங்க.  எல்லாருக்கும் இந்த தோசை ரொம்பப் பிடிக்கும்.  தொட்டுக்க மிளகாய்ப்பொடிதான் இதுக்கு நல்லா இருக்கும்.  அப்பாதுரை வாங்க,  இந்தியா வந்தப்போ இங்கே வந்திருந்தா கிடைச்சிருக்கும்.  வராம ஏமாத்திட்டீங்க!  கீழே வார்த்து எடுத்த தோசைகள்.  மேலே பொன் முறுகலா உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரி ஓட்டை ஓட்டையா நல்லா வரும் இது.

யாருக்கெல்லாம் வேணுமோ சாப்பிடுங்க.

சீதாபதி ராமசந்த்ர கி ஜெய்!

நேத்திக்கு ஒரு பஜனைக்குப் போயிருந்தேன்.  பல வருடங்கள் ஆகி விட்டது.  பஜனைக்குப்போயோ, அதில் கலந்து கொண்டோ. மதுரையில் இருக்கறச்சே அதான் பொழுது போக்கே. :))))) நேத்திக்கு பஜனையில் திடீர் ராதா கல்யாணமும் சிம்பிளாக நடத்தினாங்க.  அப்புறமா ஒரு சில பாடல்களுக்குக் குழுத் தலைவர் பிடித்த அபிநயங்கள் எல்லாமும் கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொண்டிருக்கேன்.  விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.

Bajanai 

லிங்க் வேலை செய்யலைனா, https://picasaweb.google.com/104461711363401053361/Bajanai?authkey=Gv1sRgCMyftITZ4aCslAE#5780782896063373714 நேரடியாக இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணிக்குங்க.  பல தடவை முயன்றும் லிங்க் என்னமோ தகராறு செய்யுது. கொஞ்ச நாட்களா இந்தப் பிரச்னை இருக்கு.  அதே லிங்கைப் பின்னூட்டத்தில் கொடுத்தால் வேலை செய்யுது.  என்ன காரணம்னு புரியலை. டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

Friday, August 24, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 5

மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
ஆயி உமையவளே ஆதி சிவன் தேவியரே
மாரித்தாய் வல்லியரே மகராசி வாருமம்மா
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே
தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா
திக்கு எல்லாம் போற்றும் எக்காலத் தேவியரே
எக்காலத் தேவியரே திக்கு எல்லாம் நின்ற சக்தி
கண்ணபுரத்தாளே காரண செளந்தரியே
காரண செளந்தரியே நாரணனார் தங்கையம்மா

(மாரியம்மன் தாலாட்டிலிருந்து எடுத்த வரிகள்)




சமயபுரம் மாரியம்மன் குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன.  ஸ்ரீரங்கம் கோயிலில் வைணவி என்ற அம்மன் விக்கிரஹம் இருந்ததாகவும், அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போகவும் கோயிலில் இருந்து அந்த விக்ரஹத்தை அப்புறப்படுத்த ஜீயர் சுவாமிகள் ஆணையிட்டதாகவும் கூறப்படுகிறது.  அவரின் ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வேண்டி ஆட்கள் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சற்று இளைப்பாறினார்கள்  அதுதான் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்றும் சொல்லப் படுகிறது.  விக்ரஹம் கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைக்கப்பட்டது.  அங்கே தான் தற்போது மாரியம்மன் கோயில் இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம்.  காட்டு வழியாகச் சென்ற மக்களுக்கு அம்பாள் விக்ரஹத்தைக் கண்டு ஆனந்தம் ஏற்பட்டது.  அம்பாளை வழிபட ஆரம்பித்தனர்.  கண்ணனூர் மாரியம்மன் என்ற பெயரும் சூட்டப் பட்டது.

இந்தச் சமயத்தில் விஜயநகர மன்னர்கள் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தனர்,  கண்ணனூரில் அவர்கள் முகாம் அமைக்கப்பட்டது.  அங்கே  அரண்மனை மேட்டில் மாரியம்மனைக் கண்டு வழிபட்டு தாங்கள் வெற்றி பெற்றுத் தென்னாட்டில் ராஜ்யம் அமைத்தால் அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாய்ச் சபதம் செய்தனர்.  அதன்படியே அவர்கள் வெற்றி பெற்றுக் கோயிலும் கட்டி வழிபட்டனர்.  விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706--இல் அம்மனுக்குத் தனிக்கோயில் அமைக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.  சுமார் நானூறு, ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயிலாக பிரபலம் அடைந்துள்ளது.  இது ஆதாரபூர்வமாய்ச் சொல்லப் படும் வரலாறு.  ஆனால் இன்னமும் பல வரலாறுகள் சொல்லப் படுகின்றன.  இது சமயபுரம் மாரியம்மன் குறித்த வரலாறு என்றாலும் இவளுக்குத் தாய் வீடும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.  அங்கேயும் மாரியம்மன் தான்.  ஆதிமாரியம்மன் என அழைக்கின்றனர் அவளை.  அந்தக் கோயில் சமயபுரத்திலிருந்து ஐந்து கிமீட்டர் தூரத்திற்குள் உள்ளது.  இந்த இடம் இனாம் சமயபுரம் என்று அழைக்கப் படுகிறது.




சோழ அரசனின் சகோதரியான இளவரசி ஒருத்தி கங்கநாட்டு மன்னனுக்கு வாழ்க்கைப் பட்டதாகவும், அவளுக்காக இந்தக் கண்ணனூரில் ஒரு மாளிகை சோழ மன்னன் கட்டிக் கொடுத்ததாகவும் சொல்கின்றனர். பின்னால் அந்த இடம் பாண்டியர் படையெடுப்பினால் அழிந்ததாகவும், வேம்புக்காடாக மாறியதாகவும் சொல்கின்றனர்.  அந்த இடம் அரண்மனை மேடு என அழைக்கப்பட்டிருக்கிறது.  ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வந்த அம்மன் விக்ரஹம் இங்கே வைக்கப்பட்டு வழிபடப்பட்டது.  இஸ்லாமியப் படையெடுப்பின் போது அம்மனின் உற்சவ விக்ரஹம் மறைத்து வைக்க வேண்டி எடுத்துச் செல்லப்பட்டது.  செல்லும் வழியில் வீரர்கள் கொள்ளிடக்கரையில் அம்மன் விக்ரஹத்தை வைத்துவிட்டு இளைப்பாறியதாகவும், பின்னர் மீண்டும் விக்ரஹத்தை எடுத்துச் செல்ல நினைத்தபோது விக்ரஹம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  அந்த விக்ரஹம் சில குழந்தைகளால் கண்டெடுக்கப் பட்டு விளையாட்டுப் பொருளாக மாறிற்று எனவும், ஊர் மக்கள் அதைக் கண்டு மாரியம்மன் சிலை என்பதைக் கண்டறிந்து கோயிலிலேயே சிலையை வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அங்கிருந்த ஒரு பெண் கோயிலில் வைக்க வேண்டாம் எனத் தடுத்திருக்கிறாள்.  பின்னர் அம்மனின் அருளை நேரடியாகப் பெற மக்கள் பூக்கட்டிப் பார்க்க அதிலும் அம்மன் சிலையை அங்கே கொண்டு வர வேண்டாம் என்றே வந்ததாம்.  ஆகவே ஒரு யானை மீது அம்மன் சிலையை ஏற்றி யானை எங்கே கடைசியாய் நிற்கிறதோ அங்கே கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டு யானை மீது சிலை ஏற்றப்பட்டது.  யானை சிறிது தூரம் சென்றதும் படுத்துவிட்டது.  அந்த இடத்திலேயே அந்த அம்மன் சிலையை வைத்து வழிபட்டனர்.  இவளை ஆதி மாரியம்மன் என்கின்றனர்.  இவள் தெற்கு நோக்கிக் கொண்டு தற்சமயம் சமயபுரத்தில் குடி கொண்டிருக்கும் மாரியம்மனைப் பார்த்த வண்ணம் காட்சி அளிப்பாள்.  இந்தக் கோயில் தற்போதைய சமயபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  சமயபுரம் மாரியம்மன் வருடத்தில் ஒரு முறை பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அல்லது சித்திரை மாதம் முதல் ஞாயிறு அன்று இனாம் சமயபுரத்தில் உள்ள தாயைப் பார்க்கச் செல்வதாகவும், அப்போது ஊர் மக்கள் சமயபுரம் மாரியம்மனைத் தங்கள் பெண்ணாகக் கருதிச் சீர் வரிசைகள் கொடுப்பதாகவும் ஐதீகம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் வைணவி தான் மாரியம்மன் என்றும் சொல்வதால் இந்தச் சீர் வரிசை ஒவ்வொரு வருஷமும் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்தும் செல்கிறது.  ஊர் மொத்தமுமே அவரவர் வீட்டுப் பெண்களுக்கு இந்தச் சமயம் திருவிழாச் சீர் கொடுத்து மகிழ்கிறது.  வெளியூரில் பெண்கள் வரமுடியாமல் இருந்தால் கூடக் குறைந்த பக்ஷத் தொகை மணியார்டர் மூலம் செலுத்துவிடுவார்களாம். இனாம் சமயபுரத்தின் ஆதி மாரியம்மன் தெற்கு நோக்கி சமயபுரம் மாரியம்மனான தன் பெண்ணைப் பார்த்த வண்ணம் இருக்கிறாள்.  ஆதி மாரியம்மன் நாகக்கன்னியுடன் இருப்பதால் அவளை வணங்கினால் திருமணத் தடைகள் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது.  சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே இவள் இங்கு அருளாட்சி புரிய வந்து விட்டதாகச் சொல்கின்றனர்.

ஆதி மாரியம்மன் வரலாறு:

சப்பாத்திக் கள்ளிச் செடிகள் சூழ்ந்த இந்தப்பிரதேசத்தில் குழந்தை வடிவில் அம்மன் கிடைத்ததாகச் சொல்கின்றனர்.  மாடு மேய்க்கும் இடையன் ஒருவனுக்குக் குழந்தையாக அம்மன் குரலை மட்டும் காட்டித் தான் இங்கே இருப்பதாக அடையாளம் காட்டி இருக்கிறாள்.  அந்தப் பகுதியைச் சுத்தம் செய்து பார்த்தால் கிடைத்த புற்றில் சக்தி தான் குடியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ஊர் மக்கள், அங்கேயே திறந்த வெளியில் முதலில் கோயில் அமைத்து வழிபட்டிருக்கின்றனர்.  தைப்பூசம் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டிருக்கிறது. ஒரு முறை தைப்பூசத்திருவிழாவின் போது கொள்ளிடம் ஆற்றுக்கு அம்மனை எழுந்தருளச் செய்ய ஒரு வேப்ப மரத்தடியில் அம்மனை வைத்துவிட்டு இளைப்பாறினார்கள். வழிபாடுகள் முடிந்ததும் அம்மனை மீண்டும் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து பல்லக்கில் அம்மனைத் தூக்கி வைக்க முயன்றால் அம்மனை எடுக்க முடியவில்லையாம்.

அப்போது ஒரு சிறுமி வடிவில் அம்மன் வந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாய்ச் சொல்லி இருக்கிறாள்.  பின்னர் வேறு வழியில்லாமல் அம்மனை அங்கேயே விட்டுச் செல்ல அங்கிருந்த அம்மன் தான் பின்னால் விஜயநகர மன்னர்களால் கோயில் கட்டப்பட்டு வழிபடப்பட்டது என்றும் அதுதான் இப்போதிருக்கும் சமயபுரம் மாரியம்மன் என்றும் சொல்கின்றனர்.  மாரியம்மன் பிறந்த இடம் இனாம் சமயபுரம் என்கின்றனர்.  விஜயநகர மன்னர்கள் கண்ணனூர் மாரியம்மனுக்குக் கோயில் கட்டுகையில் இனாம் சமயபுரத்தில் இருந்து ஆதிமாரியம்மன் கோயில் மண்ணை எடுத்து வந்தே கட்டியதாகவும் கூறுகின்றனர்.  தற்சமயம் கண்ணனூரில் இருந்தாலும் பிறந்த இடம் சமயபுரம் என்பதால் சமயபுரம் மாரியம்மன் என்ற பெயரிலேயே இவள் அழைக்கப் படுகிறாள்.  இனாம் சமயபுரத்து அம்மன் ஆதி மாரியம்மன் என அழைக்கப் படுகிறாள்.

இந்த இனாம் சமயபுரத்திற்கு இப்போது போகவில்லை.  நேரம் இல்லை.  ஆனால் நாலைந்து முறை போயிருக்கிறேன்.  அந்த நினைவுகளும் திரட்டிய தகவல்களும் தான் எழுத உதவியது.  சமயபுரம் கோயில் வாசலில் படம் எடுக்கக் கூடக் காமிராவை வெளியே எடுக்க முடியலை.  கூட்டம் மொய்க்கிறது.  உள்ளே போனால் போதும்னு ஆயிட்டது.  25 ரூ சீட்டு எடுத்துத் தான் அம்மனைப் பார்க்க முடிந்தது.  இம்முறை குங்குமம், எலுமிச்சம்பழம் பிரசாதம் பாகுபாடின்றி அனைவருக்கும் தந்து கொண்டிருந்தார்கள்.  வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  இத்தலத்தில் வேண்டிக் கொள்வது நடக்கிறது என்பது ஓர் அதிசயமே.  அதுவும் அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருப்பவர்களுக்குச் செய்து கொள்ளும் பிரார்த்தனைகள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணமாகிறது என்பதும் அதிசயமே. இதற்கு அம்மனின் அருளும், கருணையும் தான் காரணம் எனலாம்.  (அப்பாதுரை கவனிக்க)

மாரியம்மன் வருவாள்...........

Thursday, August 23, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் தொடரும், பொறுங்க!

ஏற்கெனவே துர்க்குணி; இப்போ கர்ப்பிணி; கேட்கணுமானு சொல்வாங்க.  அது போல சும்மாவே உடம்பு சரியாயில்லைனு எழுத முடியலை;  அது முடிஞ்சு இப்போக் கடுமையான மின் வெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.  சும்மாச் சொல்லக் கூடாது.  காலம்பர நாலு மணிக்குச் சரியா எழுப்பிடுவாங்க.  அப்புறமா அப்போ ஏதேனும் மிக்சி போட்டுடப் போறோமேனு ஜாக்கிரதையா ஆறு மணி வரைக்கும் நோ மின்சாரம்.  அதுக்கப்புறமா மின்சாரம் வந்துட்டுத் திரும்பப் போறதுக்குள்ளே அரையல், கரையல், துவையல்னு எல்லாத்தையும் முடிச்சுக்கணும்.  ஒன்பது மணி வரை இருக்கும்னு பேரு;  ஆனா அவங்க இஷ்டம்!  எட்டரைக்கே கூட நிறுத்துவாங்க.  திரும்பப் பனிரண்டு மணிக்கு வரணும்னு பேர்.  சில நாட்கள் ஒரேயடியா மூணு மணிக்குக் கூட வரும்.  சில நாட்கள் பனிரண்டுக்கு வந்துட்டு உடனே போகாமல் ஒன்றரை மணிக்கும் போகும்.

நேத்திக்கு மத்தியானம் மூணு மணிக்குப் போன மின்சாரம் ஆறு மணிக்கு வந்துட்டுச் சரியா ஆறரைக்குப் போய் எட்டுக்கு வந்துட்டுத் திரும்ப ஒன்பதுக்குப் போய்ப் பதினொன்றுக்கு வந்துத் திரும்ப பனிரண்டுக்குப் போய் அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, கை வலிக்குது.

மொத்தமாய் ஆறு மணி நேரம் கொடுக்கிறாங்க.  கிடைக்கும் மின்சாரத்தில் லாப்டாப் சார்ஜிங், யுபிஎஸ் சார்ஜிங், இன்வெர்டர் சார்ஜிங் எல்லாமுமே கஷ்டமா இருக்கு! :((((((((((

எப்போ சரியாகும்!  இங்கே இப்படினா சென்னையிலே மின்சாரம் இருக்குனு பேரே தவிர குறைந்த அழுத்தம்னு சொல்றாங்க அங்கிருந்து வந்த மக்கள்.  எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் நிறையப் பேருக்கு வீணாய்ப் போயிட்டு இருக்காம். என்னவோ போங்க!

புலம்பிட்டேன். மாரியம்மன் தான் காப்பாத்தணும்.:)))))))

Saturday, August 18, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 4


திருவானைக்காவில் இருந்து அடுத்து நாங்கள் சென்றது உத்தமர் கோயில் என்னும் பிக்ஷாண்டார் கோயில்.  இது திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டபோது கரம்பனூர் என்ற புராதனப் பெயர் பெற்ற இந்த ஊர்ப் பெருமாளை அவர் "கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே," என்று பாடியுள்ளார்.  அன்றிலிருந்து உத்தமர் கோயில் என அழைக்கப் பட்டிருக்கிறது.  இங்கே ஆயிஅரம் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் கதம்பவனமாக இருந்ததாய்த் தெரிய வருகிறது.  இங்கு ஸ்தல விருக்ஷம் வாழைமரம்.  தீர்த்தம் கதம்ப தீர்த்தம்.  பெருமாளே முக்கியமான சந்நிதியில் அருள் பாலித்தாலும் மும்மூர்த்திகளும் சேர்ந்து காட்சி அளிக்கும் ஓர் முக்கியக் கோயில் இது.  சிவன், பிரம்மா ஆகியோருக்கும் தனித்தனியாகச் சந்நிதிகள் இருக்கின்றன.  பெருமாளுக்கு வைகானச முறையில் வழிபாடுகள் நடைபெறுவதாய்த் தெரிய வருகிறது.  சித்திரை மாசத்தில் பெருமாளுக்கும், வைகாசியில் ஈசனுக்கும் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

சிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா அகம்பாவத்தில் உமையன்னை தனக்கும் பணிவிடை செய்ய வேண்டும் என நினைக்க, அவர் ஆணவத்தை அடக்க ஈசன் ஒரு தலையைக் கிள்ளி விடுகிறார்.  பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பீடிக்கிறது.  அதோடு பிரம்மாவின் கபாலமும் அவர் கையை விட்டு அகலவில்லை.  கையில் ஒட்டிக் கொள்கிறது.  அந்த பிரம்ம கபாலம் நிறைந்தால் தான் அவர் கையை விட்டு அது நீங்கும் எனவும் அதுவரையிலும் ஈசன் பிக்ஷை எடுக்க வேண்டும் எனவும் ஏற்பட அவ்வாறே பிட்சாடனராகப் பிச்சை எடுக்கிறார் ஈசன்.  ஒவ்வொரு ஊராகச் சுற்றியும் அவருக்குப் படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையுமே அந்தக் கபாலம் எடுத்துக்கொண்டு வந்தது.  எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் நிறையவில்லை.  பல தலங்களுக்கும் சென்ற ஈசன் கடைசியில் இந்தத் தலத்திற்கு வந்து, பிச்சை எடுத்தபோது, அங்கே கோயில் கொண்டிருந்த பெருமாள் மகாலக்ஷ்மியை பிரம்ம கபாலத்தில் பிக்ஷை போடச் சொல்ல அப்படியே அவளும் பிக்ஷை இடுகிறாள்.  கபாலம் நிறைந்து ஈசனின் பிரச்னை தீர்கிறது. அந்தக் கோலத்தில் ஈசன் இங்கே பிக்ஷாடனராகக் காட்சி அளிக்கிறார்.  இது ஈசன் இங்கே கோயில் கொண்ட கதை.

பிரம்மாவுக்குக் கோயில் இல்லை என்பதால் அவருக்கு மனக்குறை இருந்து வர, அதைத் தெரிந்து கொண்ட மஹாவிஷ்ணு பூலோகத்தில் அவரைப் பிறக்கச் செய்து இந்தத் தலத்தில் தன்னை வணங்கித் தவம் செய்யும்படி செய்து வந்தார்.  அவரது பக்தியைச் சோதிப்பதற்காகக் கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார்.  கதம்ப மரமாய்க் காட்சி அளித்த விஷ்ணுவை அறிந்து கொண்ட பிரம்மா மரத்திற்கு வழிபாடுகள் செய்து வணங்கி வந்தார்.  அவர் பக்தியில் மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணு அங்கேயே பள்ளி கொண்டார். பிரம்மாவையும் அந்தத் தலத்திலேயே இருக்கச் செய்தார்.  தனியாக வழிபாடுகள் இருக்கும் எனவும் அருளிச் செய்தார்.  பிரம்மாவிற்குப் பிற்காலத்தில் தான் சந்நிதிகட்டப்பட்டதாய்த் தெரிய வருகிறது என்றாலும் எப்போது எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.  பிரம்மாவிற்கு இடப்புறமாய் ஞான சரஸ்வதி கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, அக்ஷரமாலையுடன் காட்சி தருகிறாள்.  குருப் பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுவதாய்த் தெரிய வருகிறது.

மஹாவிஷ்ணு இங்கே கிழக்கே பார்த்தவண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார்.  உற்சவர் கையிலே சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு, "யாரங்கே, பிரயோகம் செய்யட்டுமா?" எனக் கேட்டுக் கொண்டு அருள் பாலிக்கிறார்.  விமானத்தின் பெயர் உத்யோக விமானம் என்பதாம்.  புதுசாகக் கேள்விப் பட்டேன்.  தாயார் பெயர் பூர்ணவல்லி என்பதாகும்,  இவளைத் தவிரவும் மஹாலக்ஷ்மி தனிச் சந்நிதியில் குடி கொண்டிருக்கிறாள்.  பூர்ணவல்லித் தாயார் எப்போதும், எல்லாவற்றையும் பரிபூரணமாக வைத்திருக்கும் சக்தியைத் தருபவள் என்கிறார்கள்.  இவள் இருக்குமிடத்தில் உணவுக்குப் பஞ்சம் இருக்காதாம்.  பெருமாள் சந்நிதியின் நேர் பின்னே மேற்கே பார்த்தவண்ணம் லிங்க வடிவில் ஈசன்.  கோஷ்டத்தில் தான் பிக்ஷாடனராகக் காண்கிறாரே எனப் பார்த்தால் உற்சவரும் பிக்ஷாடனர் தான்.  இவருக்கு அருகேயே சற்றுத் தள்ளி பிரம்மா ஞானசரஸ்வதியுடன் காணப்படுகிறார்.  சிவகுருவான தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு குருவான வரதராஜர், குருவான குரு பிரம்மா, சக்தி குருவாக, சவுந்தர்ய பார்வதி அம்மன், ஞானகுருவாக சுப்ரமணியர், தேவகுருவான பிரகஸ்பதி, அசுரகுருவான சுக்ராசாரியார் ஆகிய ஏழு குருக்களும் இங்கே குருவிற்கு உரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர்.  குரு பெயர்ச்சியில் ஏழு பேருக்கும் தனித்தனியே விசேஷமான அபிஷேஹ ஆராதனைகள் உண்டு எனக் கேள்விப் பட்டோம்.  அன்னிக்குப் போறது கஷ்டமும் கூட.  கூட்டம் நெரியும். :( அங்கே போய் சுவாமி தரிசனம் பண்ணிட்டு வெளியே வந்தப்போ பசி எடுக்க, அன்னபூரணியின் இடத்திலேயே சாப்பிடலாம்னு முடிவு செய்து கொண்டு போயிருந்த காலை ஆகாரத்தை அங்கேயே  மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு அடுத்து சமயபுரத்துக்குக் கிளம்பினோம்.

சமயபுரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.  அதோடு அங்குள்ள அம்மனும் சோழனின் தங்கை எனச் சொல்வாரும் உண்டு. எல்லாவற்றையும் மெல்ல, மெல்லப் பார்ப்போம். மாரியம்மன் பிறந்த இடம், உஜ்ஜயினியின் மகாகாளி வந்து சேர்ந்த கதை எல்லாவற்றையும் பார்க்கலாம்.   ஆனால் இம்முறை அங்கெல்லாம் செல்லவில்லை.  சமயபுரம் மட்டுமே.

Wednesday, August 15, 2012

எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

சுண்டைக்காய் வற்றல் ஒரு கைப்பிடி, மணத்தக்காளி வற்றல் ஒரு கைப்பிடி, வேப்பம்பூ ஒரு கைப்பிடி, அரை அங்குலம் சுக்குப் பொடி, பெருங்காயப் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டு நல்லெண்ணெயைப் பொங்க வைத்து எல்லாத்தையும் போட்டு நன்றாக வறுத்துக் கொண்டு ஒரு கைப்பிடி சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிட்டிருக்கேன்.  வயிறு சொன்னபடி கேட்கணும். :((((  கொஞ்சம் பரவாயில்லை. பார்க்கலாம்.  கன்னாபின்னாவென அலைச்சல், வேலை, நேரங்கெட்ட நேரச் சாப்பாடு எல்லாவற்றின் விளைவு. :((((( இன்னும் இரண்டு நாளாவது ஆகும். அது வரைக்கும் லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

சுதந்திரம் கிடைச்சாச்சாமே, அப்படியா?

இன்னைக்கு சுதந்திர தினமாமே, அப்படியா???  சுதந்திரத்தின் பொருள் உணர்ந்திருக்கோமானு சந்தேகமா இருக்கு! ஒரு அடிமைத் தனத்திலிருந்து வேறொரு விதமான அடிமைத் தனத்திற்கு ஆட்பட்டிருப்பது நம்மையும் அறியாமலேயே நிகழ்ந்து வருகிறது.  இதற்கான விழிப்புணர்ச்சியை இந்த சுதந்திரதினத்திற்குப் பின்பாவது பெற வேண்டும் என பாரத மாதாவைப் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, August 14, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 3


ஈசன் இங்கே அம்பாளுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்திருக்கிறார்.  ஆகவே இங்கே மாணவர்கள் அதிக அளவில் தங்கள் கல்விக்காக வேண்டுதல் செய்கின்றனர்.  ஜம்புகேஸ்வரரைத் தரிசிக்க நவதுளைகள் உள்ள ஜன்னல் ஒன்று உள்ளது.  அதன் வழியாகவே தரிசிக்க வேண்டும்.  கல்லால் ஆன இந்த ஜன்னல் வழியாகப் பார்க்கலாம். உள்ளே தற்சமயம் அனுமதிக்கின்றனர்.  இந்தத் துளை வழியே தரிசிப்பதன் தாத்பரியம் நம் உடலின் ஒன்பது வாசல்களையும் இது குறிப்பதாகவும் இவற்றை அடக்கினாலே நம்மால் நம்முள்ளே இருக்கும் சச்சிதானந்த ஸ்வரூபத்தைத் தரிசிக்க இயலும் என்பதே ஆகும்.  இந்தச் சந்நிதியில் வருடத்தில் எல்லா நாட்களும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.  கடுங்கோடையான வைகாசி மாதத்திலும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். ஐப்பசிப் பெளர்ணமியில் எல்லாச் சிவன் கோயில்களிலும் நடைபெறும் அன்னாபிஷேஹம் இங்கே மட்டும் வைகாசிப் பெளர்ணமியில் நடைபெறுகிறது.  ஏனெனில் ஐப்பசி மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாகக் கருவறையில் இருக்கும்.

இங்கே உள்ள ஒரு மதில் சுவற்றை ஈசனே சித்தராக வந்து கட்டியதாக ஐதீகம்.  இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் இம்மதிலை (ஐந்தாம் பிராகாரம்) கட்டிக்கொண்டிருக்கையில் நாட்டில் திடீரெனப் போர் ஏற்படப் போரை விட முடியாத நிர்ப்பந்தம் மன்னனுக்கு ஏற்பட்டது.  மன்னனுக்கோப் போரை விடவும் ஈசன் திருமதிலைக் கட்டுவதிலேயே மனம் லயித்து இருந்தது.  ஈசனை நாடினான் மன்னன்.  ஈசன் விபூதிச் சித்தராக வந்து பிராகாரம் கட்டும் வேலையை முடித்தார்.  சிவன் கட்டிய இந்த மதில் திருநீற்றான் திருமதில் எனவும் விபூதிப் பிராகாரம் எனவும் அழைக்கப் படுகிறது.  விபூதிச்சித்தராக வந்த ஈசனுக்கு பிரம்மதீர்த்தக்கரையில் சந்நிதியும் உள்ளது.

இங்கே அன்னை முதலில் மிகவும் உக்கிரத்தோடு இருந்து வந்தாளாம்.  இங்கு வந்த ஆதிசங்கரர் அம்பாளைச் சாந்தப் படுத்த இரு தாடங்கங்களை (காதணி) உருவாக்கி அவற்றை ஸ்ரீசக்ரம் போல் செய்யச் சொல்லி அம்பாளுக்குக் காதுகளில் பூட்டிச் சாந்தப் படுத்தினார்.   மேலும் அம்பாள் சந்நிதிக்கு எதிரே விநாயகரையும்,  பின்புறம் முருகனையும் பிரதிஷ்டையும் செய்தார்.  இதற்குப் பின்னர் அம்பாள் சாந்தமடைந்தாள் எனக் கூறப்படுகிறது.  இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தில் திருக்கலியாணம் நடைபெறுவதில்லை.  ஏனெனில் அம்பாள் தவம் மட்டும் இருந்து வந்ததோடு அல்லாமல் திருமணம் செய்து கொள்ளாததால் இங்கு திருக்கல்யாணம், பள்ளியறை வழிபாடு போன்றவை இல்லை.  எனினும் பள்ளியறை உண்டு.  இந்தப் பள்ளியறைக்கு மீனாக்ஷிதான் தன் கணவரான சொக்கநாதருடன் செல்கிறாள். இந்தக் கோயிலின் மற்ற எந்தச் சந்நிதியில் உள்ள மூர்த்திகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை.

இந்தக் கோயிலில் தான் வைணவரான கவி காளமேகத்துக்கு அம்பாள் கருணையால் கவி பாடும் வல்லமை கிட்டியது.  வைணவர் கோயிலின் மடைப்பள்ளியில் வேலை செய்து வந்த வரதனுக்கு சிவன் கோயிலில் நாட்டியமாடிய தேவதாசியின் மேல் காதல்.  அவளுக்காகத் தன் வேலையை எல்லாம் விட்டு விட்டு அவளைக் காண தினம் தினம் திருவானைக்கா கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார் வரதன்.  ஓர் நாள் தன் வேலையை முடித்துக்கொண்டு மோகானாங்கி என்னும் அந்த நாட்டியக்காரி வரத் தாமதம் ஆகிவிட்டது.  வரதர் அங்கேயே ஓர் மண்டபத்தில் படுத்துத் தூங்கிப் போனார்.  அதே மண்டபத்தின் இன்னொரு கோடியில் ஓர் அந்தணன் சரஸ்வதியை நோக்கித் தவம் இருந்து வந்தான்.  அன்றிரவு சரஸ்வதி அவன் தவத்துக்கு மனம் இரங்கி அவனைக் கண்டு அவன் முன் தோன்றி தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவன் வாயில் உமிழப் போனாள்.  சினம் கொண்ட அந்த அந்தணன் அதை வாங்க மறுக்க அந்தத் தாம்பூலத்தை வரதன் வாய் திறந்த வண்ணம் தூங்கிக் கொண்டிருக்கையில் அவன் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றுவிட்டாள்.  ஒரு சிலர் வரதன் முன் தோன்றி தேவி கேட்டதாகவும் வரதம் சம்மதத்தின் பேரிலே உமிழ்ந்ததாகவும் கூறுவர்.  எப்படி இருந்தாலும் தேவியின் அனுகிரஹத்தால் அன்றிலிருந்து கவி மழைபொழியத் தொடங்கிய வரதன் தான் பின்னால் கவி காளமேகம் என அழைக்கப் பட்டான்.

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்.

சிலேடைப் பாடல்களில் புகழ் பெற்ற காளமேகத்தின் திறமைக்கு ஒரு சான்று.  இந்தக் கோயிலின் சரஸ்வதியின் கைகளில் வீணை இல்லை.  காரணம் தெரியவில்லை.  சனீஸ்வரர் தன் மனைவியான ஜேஷ்டா தேவியுடன் காட்சி அளிக்கிறார்.  ஜம்புதீர்த்தம் விசேஷமானது.  கணவன், மனைவி ஒற்றுமைக்கும், மாணாக்கர்கள் படிப்புக்கும், தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் விவசாயம் நடக்கவும் இவரைப் பிரார்த்திக்கின்றனர்.  அம்பாளின் சக்தி அளவிட முடியாதது என்கின்றனர்.  பஞ்ச பூதத்தலங்களில் நீருக்குரிய இந்தத் தலத்தின் ஈசன் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார்.  ஜம்பு என்னும் முனிவர்  இங்கே தவம் இருக்கையில் ஈசன் கொடுத்த நாவல் பழத்தைக் கொட்டையோடு விழுங்க, நிஜம்மாவே அவர் வயிற்றில் மரம் முளைத்துத் தலை வழியாக வெளிவர, அவருக்கு அதன் மூலம் முக்தி கிடைத்ததாக வரலாறு சொல்கிறது.  அம்பிகை அமைத்த நீராலான லிங்கம் ஜம்பு எனப்படும் நாவல்  மரத்தின் கீழ் அமைந்தது என்பதாலும், ஜம்பு முனிவர் வழிபட்டதாலும், ஈசனுக்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.  இந்தக் கோயில்   காலை 5-30 மணியிலிருந்து பகல் ஒரு மணி வரையிலும், பின்னர் மதியம் 3-00 மணியிலிருந்து இரவு 8-30 மணி வரையிலும் தொடர்ச்சியாகத் திறந்திருக்கும்.

Thursday, August 09, 2012

கிருஷ்ணன் வந்தாச்சு! கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!

ராமர் புது வீட்டில். விளக்கு வெளிச்சம் அதிகம் என்பதால் பிரதிபலிப்பு அதிகமா இருக்கு.  விளக்கை அணைச்சுட்டும் எடுக்க முடியாது.  அப்படி ஒரு இடம்.

பரம்பரை பரம்பரையா வர கிருஷ்ணர்.  கையிலே வெண்ணெயோடு இருப்பார்.  தவழ்ந்த கிருஷ்ணர்.  இவர் எங்களிடம் 2010- ஆம் ஆண்டு தான் வந்து சேர்ந்தார்.  போன வருஷம் மழையிலே வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்து அதை எல்லாம் வாரிக் கொட்டிட்டு கோகுலாஷ்டமி கொண்டாடினோம்.  இந்த வருஷம் இங்கே வந்தாச்சு.  அரங்கன் இருக்குமிடம் தேடி வந்திருக்கார் இந்தக் கிருஷ்ணர்.  இங்கே மழையே இல்லை.

அவரே தான் கொஞ்சம் முகம் கிட்டக்க இருக்கும்படி எடுத்தது.  இந்த இரண்டு படங்களும் ரங்க்ஸ் கை வண்ணம்.  நான் தீபாராதனை காட்டிட்டு இருந்ததால் அவர் எடுத்தார்.

போன வருஷம் சொந்த வீட்டிலே கீழே உட்கார்ந்து எடுத்தேன்.  இந்த வருஷம் இங்கே உட்கார முடியாது.  இடம் இல்லை.  நின்ற வண்ணமே எடுத்தது.  முறுக்கு, உப்புச் சீடை, பாயசம், தட்டை, வெல்லச் சீடை, வெண்ணைச் சீடை, கோளோடை, சீப்பி, வடை, பால், தயிர், வெண்ணெய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், அவல், வெல்லம் போன்றவை.

அதேதான், எல்லாமும் சேர்ந்து வராப்போல் எடுக்கப் பார்த்தேன்.  அப்படியும் தயிர்ப் பாத்திரம் வலது ஓரத்தில் மறைந்துள்ளது.  யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்குங்க.  இந்த வருஷம் கொஞ்சம் சீக்கிரமாவே வந்துட்டார். நாளைக்கு நிறைய வேலை இருக்கு.  அதனால் இந்த வருஷம் கிருஷ்ணரைச் சீக்கிரமா வரச் சொல்லியாச்சு!



Wednesday, August 08, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 2


திருக்கைலையின் இரு சிவகணங்களான புஷ்பதந்தனுக்கும் மாலியவானுக்கும் தாங்களே அதிகமான சிவபக்தியில் இருப்பதாக எண்ணம்.  ஒருவர் மற்றவரின் பக்தியை மறுத்தார்.  இருவருக்கும் இதுவே பிரச்னையானது.  தினம் தினம் சண்டை.  ஒருநாள் சண்டை முற்றிப் போய் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர்.  இந்த சாபத்தின் விளைவாக மால்யவான் சிலந்தியாகவும், புஷ்பதந்தன் யானையாகவும் பிறந்தனர்.  இருவருக்கும் தங்கள் சாபமும், அதன் காரணமான இப்பிறப்பிலும் அவர்கள் சிவகணங்கள் என்பது நினைவில் இருந்தது.  ஆகவே பூமியிலும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது.  சிவ வழிபாட்டுக்குத் திருவானைக்கா வந்த இருவரும் இங்கேயும் சண்டை போட்டுக்கொண்டனர்.  இங்கேயும் சிவனை வழிபடுகையில் போட்டி ஏற்பட சிலந்தியான மால்யவான் புஷ்பதந்தனாகிய யானையின் துதிக்கையில் புகுந்து தொந்திரவு கொடுத்தது.  யானையாகிய புஷ்பதந்தன் முக்தியை அடையவே சிலந்தியான மால்யவான் தன் உடனிருக்கும் சிவனடியாரைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறப்பெடுத்துப் பின்னரே கைலை வந்தடையும்படி ஈசன் ஆணையிட்டார்.  சிலந்தியாகிய மால்யவான் தான் தன் பிறப்பை ஒரு நல்ல குடும்பத்தில் ஏற்கும்படியாகவும், இதிலேயும் தன் முற்பிறப்பு நினைவில் இருக்குமாறும் அருளும்படி ஈசனை வேண்ட அவ்விதமே ஈசன் அருளிச் செய்தார்.

மால்யவான் சோழ நாட்டின் அரசனான சுபவேதனுக்கும், கமலாவதி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தான்.  இவன் பிறக்கையில் கமலாவதிக்கு வலி எடுத்துப் பிரசவத்தை எதிர்நோக்கி இருந்தாள்.  அந்தச் சமயம் அரண்மனை ஜோதிடர் இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் இந்தக் குழந்தை சக்கரவர்த்தியாக இருப்பதோடு சிறந்த சிவனடியாராகவும் இருப்பான் என்று சொல்ல, அது ராணியின் காதை எட்டியது.  உடனே அவள் தன்னைத் தலைகீழாகக் கட்டச் சொன்னாள்.   வலியைப் பொறுத்துக்கொண்டு ஒரு நாழிகை நேரத்தையும் எப்படியோ கடத்தினாள்.  அதன் பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  வெகு நேரம் வயிற்றில் தங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் இரண்டும் செக்கச் செவேர் எனச் சிவந்து இருக்கவே, ராணி, குழந்தையைப் பார்த்து, "என் செங்கணா" என அழைத்து விட்டு உடனே இறந்தாள். ராணி அழைத்தபடியே குழந்தை கோச்செங்கணான் என அழைக்கப் பட்டது.  இந்தக் கோசெங்கணான் தான் தான் ஏற்கெனவே வழிபட்டு வந்த ஆனைக்கா ஈசனுக்குக் கோயில் எழுப்பினான்.  கோயில் எழுப்புகையில் தன் முற்பிறவி நினைவில் இருந்தமையால் யானைகள் செல்ல முடியாதபடிக்கு மாடக் கோயில்களாக அமைத்தான்.  மாடக் கோயில்கள் என்பது யானைகள் ஏறமுடியாவண்ணம் பூமி மட்டத்துக்கும் மேல் உயரமாகப் படிக்கட்டுகள் அமைத்துக் கட்டப் பெற்றவை ஆகும். இவ்வாறு கிட்டத்தட்ட காவிரிக்கரையோரம் 78 மாடக் கோயில்களைச் செங்கணான் கட்டியதாகத் தெரிய வருகிறது.  இவற்றில் பெரும்பாலான கோயில்களின் விமானம் யானை படுத்துத் தூங்குவது போலக் காணப்படும்.  அதற்கு கஜப்ருஷ்ட விமானம் அல்லது தூங்கானை மாடக் கோயில் என்று பெயர்.



`மேதகைய பயன்விழைவோர் ஞானதலத்
துறைகுவது மேவாதாயின்
ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே
லுரைப்பக்கேட்க
காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்
கடந்துமேலாம்
போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை
பொலங்கொம்பன்னாய்.``
-திருவானைக்காப் புராணம் - தலவிசேடப் படலம்.

இந்தக் கோயிலின் தலவரலாறு கீழ்க்கண்டபடி சொல்லப் படுகிறது.  பிரம்மாவுக்கு ஒரு சமயம் தான் படைத்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் ஆசை உண்டாக அவருக்கு ஸ்த்ரீ தோஷம் ஏற்பட்டது.  தோஷ நிவர்த்தி பெற ஈசனை நாட ஈசனும் அவருக்கு அருள வேண்டிக் கைலையிலிருந்து கிளம்புகிறார்.  அப்போது அம்பிகையும் உடன் செல்ல வேண்டும் என விரும்ப, பிரம்மாவிடமிருந்து அவளைக் காக்க வேண்டி ஈசன் மறுத்தார்.  அம்பிகையோ தான் ஈசனாகவும், ஈசன் அம்பிகையாகவும் செல்லலாம் எனக் கூறி அவ்விதமே இருவரும் செல்கின்றனர்.  இங்கே இதைப் படித்துவிட்டு என்னடானு யோசிக்க வேண்டாம்.  கணவன், மனைவி இருவரின் மன ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குறிக்கும் வண்ணமே சிவனும், சக்தியும் வெவ்வேறு அல்ல என்பதை எடுத்துச் சொல்லும் வண்ணமே இவ்வாறு குறிக்கப் படுகிறது.  பின்னர் பிரம்மாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது. அம்பிகையும் ஈசனைப் போற்றி வணங்க, அது முதல் தினம் உச்சிக் காலத்தில் அம்பாளுக்கு வழிபாடுகள் நடத்தும் அர்ச்சகர், அம்பாளின் புடவையையும், கிரீடத்தையும், மாலையையும் அணிந்து கொண்டு கையில் தீர்த்தப் பாத்திரத்துடன் மேளதாளத்தோடு ஈசன் சந்நிதி சென்று வழிபாடுகள் நடத்துவார்.  சுவாமிக்கு அங்கே அபிஷேஹம் செய்வார்.  கோபூஜையும் நடத்துவார்.  பின்னர் அம்பாள் சந்நிதி செல்வார்.  இந்த வழிபாட்டை அம்பாளே நடத்துவதாக ஐதீகம்.  அவரையே அம்பாளாக நினைத்துக் கொண்டு அனைவரும் கால்களில் விழுந்து வணங்குவார்கள்.

ஆடி மாதம் அம்பாள் தவம் இருந்த மாதம் என்பதால் ஒவ்வொரு ஆடி வெள்ளியும் இங்கு கோலாகலமாக இருக்கும்.  காலை இரண்டு மணியிலிருந்து இரவு பனிரண்டு வரையிலும் கோயில் திறந்திருக்கும்.  அம்பாள் காலை லக்ஷ்மியாகவும், மதியம் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி கொடுப்பாள்.  நம் நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அகிலத்தைக் காக்கும் அகிலாண்டேஸ்வரியாக அம்பாள் விளங்குவதால் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள்.  ஜம்புகேஸ்வரர் குறித்து நாளை பார்ப்போம்.

Tuesday, August 07, 2012

நல்ல தமாஷுங்கோ!

சிப்பு சிப்பா வருது; நேத்திக்கு தசாவதாரம் படம் ஹிந்தி டப்பிங் பார்த்தேன்.  வழக்கம் போலத் தான்; பாதிப் படத்திலிருந்து.  தலை, வால் எதுனு புரியலை;  படம் எடுத்தவங்களுக்கே தெரியுமோனு சந்தேகம் வேறே.  நல்ல தமாஷாக இருந்தது படம்.  ஒரு ஐம்பொன் சிலையை என்னமோ ரப்பர் பந்து மாதிரி நினைச்சு அசினும், நம்ம உலக நாயகரும் தூக்கிப் போட்டு அநாயாசமா விளையாடறாங்களே?  எங்க வீட்டு உருளியையோ, வெண்கலப் பானையையோ என்னாலே தூக்க முடியறதில்லை.  அவங்களை விட்டுத் தூக்கி வைக்கச் சொல்லி இருக்கலாம் போல! :P

அந்தச் சிலையைத் தூக்கிண்டு அசின் என்ன வேகமா ஓடறாங்க. மேலே இருந்து கீழே, கீழே இருந்து மேலே னு ஏறிக் குதிச்சு!  யம்ம்ம்ம்ம்மா!  நம்ம தமிழ்ப் படத்திலே தான் இப்படியெல்லாம் ஒரிஜினல் காட்சிகள் காணக் கிடைக்கும்.  லாஜிக்காவது ஒண்ணாவது!  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!


பேத்தல்!

Sunday, August 05, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில்


போன வாரம் சனிக்கிழமையன்னிக்கு உறவினர்கள் சென்னையிலிருந்து வந்தாங்க.  அதுக்கு முன்னாலே இருந்தே வீட்டில் கொஞ்சம் வேலை அதிகமாய் இருந்தது.  இணையம் பக்கம் அதிகமா வர முடியலை.  எழுதறதுக்கு என்னமோ நிறைய இருக்கு.  சென்னையிலிருந்து வந்தவங்களை வரவேற்று அன்று ஓய்வு எடுத்துக்கொள்ள வைத்து மறுநாள் ரங்கநாதரைப் போய்ப் பார்த்துக் குசலம் விசாரித்து வரச் சொன்னோம்.  எங்களுக்கு வீட்டில் வேலை இருந்ததால் நாங்க போகலை.  மறுநாள் எல்லாருமாய்ச் சேர்ந்து கோயில்கள் செல்லத் திட்டம் போட்டோம்.  உ.பி.கோயில் போகலைனு சொல்லிட்டாங்க.  அதனால் சிங்கனாரைப் பார்த்துவிட்டு, நலம் விசாரித்துக் கொண்டு நேரே அகிலாண்டத்தைப் பார்க்க முடிவு செய்தோம்.  அதன் பின்னர் உத்தமனையும், பிக்ஷாடனரையும் பார்த்து, பிரம்மாவை என்னனு கேட்டுட்டுப் பின்னர் சமயபுரம் போகத் திட்டம்.  அங்கே எனக்கு ஆதி கண்ணனூர் ஆதி மாரியம்மனையும், விக்ரமாதித்தனும், பட்டியும் வேதாளத்தோடு விளையாடிய இடத்தையும்,  விக்கிரமாதித்தனோட உஜ்ஜையின் மகாகாளியையும் சேர்த்துப் பார்க்க ஆவல். ஆனால் நம்ம ரங்க்ஸ் அதற்குத் தடா போட்டுவிட்டார்.

வீட்டின் சர்வாதிகாரி சொன்னப்புறம் நாம் ஒரு அப்பாவி என்ன சொல்ல முடியும்? பேசாமல் கேட்டுக்கொண்டேன்.  வந்தவங்க கிட்டே நீ பாட்டுக்கு ஆதி மாரியம்மன், உச்சினிமாகாளினு எல்லாம் கதை விடாதேனு மிரட்டல் வேறே.  வேறே வழியில்லாமல் வந்தவங்க போற வரைக்கும் வாயைத் தைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறமா எங்கே போறதுனு யோசிச்சப்போத் தான் உத்தமர் கோயில் பிரம்மா இன்னொரு இடத்திலேயும் வந்து பாருனு சொல்லுவாரேனு நினைப்பு வந்தது. ஆஹா, இப்போ மொத்தத் தமிழ்நாட்டு மகாஜனங்களும் தங்கள் தங்கள் தலைவிதியை மாத்திக்கணும்னு திருப்பிடவூர் போறாங்களேனு நினைப்பு வந்தது.  சரி அங்கேயும் போய்ட்டு, பிரம்மபுரீஸ்வரரையும் பதஞ்சலியையும், வியாக்ரபாதரையும் பார்த்துட்டு அப்படியே ஐயனாரையும் அரங்கேற்றம் பண்ணின கதை என்னனு விசாரிக்கணும்.  ப்ளான் தயாராச்சு.  மறுநாள் காலம்பர எழுந்து கிளம்பத் தயார் செய்து வண்டி வந்ததும் டிரைவரோட சின்ன மீட்டிங் போட்டதிலே அவர் திருவெள்ளறையும் சேர்த்துக்குங்கனு ஆலோசனை சொல்ல திட்டத்தில் அதுவும் அவசரம் அவசரமாய்ச் சேர்க்கப் பட்டது.


புதிர் ஒண்ணுக்கு விடை: சிங்கம் திரும்ப அழைத்தது ஏன்?

எல்லாரும் கிளம்பினோம்.  ரம்மியமான சூழ்நிலையில் குடியிருந்த சிங்கத்தைக் கண்டு பேசிவிட்டுக் கிளம்ப மனசில்லாமல் அங்கிருந்து அகிலாண்டத்தைப் பார்க்கப் போனோம்.

புதிர் இரண்டு:
அகிலாண்டம் (ஹிஹிஹி) சொன்னது என்ன?   அங்கே ஏன் படம் எடுக்கலை?

 உள்ளே நுழைகையிலேயே அலுவலக அறையில் காமிராவுக்கு 30 ரூனு போட்டிருக்க அங்கே போய் டிக்கெட் கேட்டால் உள்ளே தான் வாங்கிக்கணும்னு சொல்லிட்டார்.  சரினு உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போனோம்.  கிட்டத்தட்ட கர்பகிரஹம் வந்தாச்சு.  உள்ளே நுழைய டிக்கெட் வாங்கறச்சே காமிரா டிக்கெட்டும் வாங்க நினைச்சா, அங்கே படம் எடுக்கக் கூடாதாம்.  வெளிப் பிரகாரத்தில் மட்டும் எடுக்கலாமாம்.  இதுக்கு எதுக்கு எனக்குக் காமிரானு நினைச்சுட்டு, "வேண்டாம் போங்க"  னு நான் கோவிக்க, காமிராவையும், பணத்தையும் வாங்கி சந்தோஷமாய் உள்ளே போட்டார் ரங்க்ஸ்.  திரும்பிப் போறச்சேயாவது எடுக்கலாம்னா, நீ   மட்டும் இங்கேயே தங்கி எடுத்துட்டு அங்கே இருக்கணும்; நாங்க எல்லாம் போறோம், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே எல்லாக் கோயிலுக்கும் போகலைனா அப்புறமா மூடிடுவாங்க; பார்க்க முடியாது." னு மிரட்டல் வர, ஒண்ணும் பேச முடியலை.
கையது கொண்டு மெய்யது பொத்திக் கொண்டு பேசாமல் கிளம்பினேன்.  அடுத்தது உத்தமர் கோயில் என்னும் பிக்ஷாண்டவர் கோயில்.  அதுக்கு முன்னாடி திருவானைக்கா கதையை என்னனு பார்ப்போம்.  என்ன படமா?  இன்னொரு தரம் திருவானைக்கா போறச்சே கட்டாயமா எடுத்துட மாட்டோமா?  திருவானைக்கா பத்தின செய்திகள் தொடரும்.

Saturday, August 04, 2012

உபநயனம் என்றால் என்ன 6


வாமன அவதாரத்தில் வாமனனாக வந்த மஹா விஷ்ணுவுக்கு உபநயனம் நடந்தபோது சூரியன் காயத்திரியை உபதேசம் செய்ததாகவும்,  உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமிதேவியும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இதன் பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தைத் தர கௌபீனத்தை அதிதியும்;   குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையையும் அளித்ததாகச் சொல்லி இருக்கிறது.  இவ்வளவு சக்தி வாய்ந்த உபநயனம் என்பது வெறும் பூணூலைப் போடும் ஒரு நிகழ்ச்சி மட்டுமில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.  தற்காலங்களில் கெளபீனத்துக்குப் பதிலாக வெண்பட்டு வந்துவிட்டது;  அதே போல் பெற்றோரும் ஆடம்பரமாகவே ஒரு திருவிழாவைப்போலவே உபநயன சமஸ்காரத்தை நடத்துகின்றனர்.  யாருக்கும் இதன் அருமை தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த ப்ரஹ்மோபதேசம் தான் உபநயனத்தில் மிக முக்கியமான சடங்கு ஆகும்.   கூடி இருக்கும் பெரியோர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டு,  நவக்ரஹங்களுக்கு வழிபாடுகள் செய்து அவற்றைத் திருப்தி செய்து, ஆசாரியருக்குப் பாத பூஜை செய்து,  அவரிடம், “ஸாவித்ரியை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.” என விண்ணப்பிக்க வேண்டும்.  வெண்பட்டால் தந்தை, குரு, மாணவன் மூவரையும் மூடிக் கொண்டு உபதேசம் நடக்கும்.  குரு உபதேசம் செய்ததும், பலாச தண்டம் எடுத்துக் கொண்டு மாணவனே ஆசாரியருக்கு தக்ஷிணை கொடுப்பான்.  பின்னர் குருவானவர் சூரிய வழிபாட்டைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்.  மந்திரங்கள் மூலம் பல்வேறு விதமான உபதேசங்கள் செய்வார்.  பிரமசரியத்தை அநுஷ்டிக்கும் விதம் குறித்தும் சொல்லிக் கொடுப்பார்.   பிரமசரியம் அநுஷ்டிக்கும் மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும்;  பிக்ஷை எடுத்தே உணவு உண்ண வேண்டும் என்று சொல்வார்.  மாணவன் “அப்படியே செய்வதாக” வாக்குக் கொடுப்பான்.  இதன் பின்னரே மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும்.  முதல் பிக்ஷை தாயார் இருந்தால் தாயாரும், பின்னர் பிக்ஷையை மறுக்காத எந்தப் பெண்மணியானாலும் பிக்ஷை இடலாம்.  அதன் பின்னர் தந்தை இன்னும் வேறு யாரேனும் பிக்ஷை இட்டால் வாங்கிக் கொண்டு ஆசாரியரிடம் அதைக் காட்டி அவர் அநுமதி கொடுத்த பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும்.  இதுதான் நடைமுறை.

இப்போதெல்லாம் இப்படி நடைபெறுவதில்லை.  பிக்ஷை என்னமோ எடுக்கிறாங்க தான்.  அரிசியும் போடுவார்கள் தான்.  ஒவ்வொரு கிண்ணம் அரிசியும் தனியாக அவரவர் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தது போய்விட்டது இப்போதெல்லாம்.  அதற்குப் பதிலாக உபநயனம் நடக்கும் வீட்டுக்காரர்களே குறிப்பிட்ட அளவு அரிசியை ஒரு பெரிய அடுக்கில் அல்லது அண்டாவில் வைத்துவிடுகிறார்கள்.  யாருக்கெல்லாம் பிக்ஷை போட ஆசையோ அவர்கள் எல்லாம் அந்த அண்டாவில் இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்.  திரும்ப அதே அண்டாவில் கொட்டப்பட்டு மீண்டும் வேறு யாரானும் அதே அரிசியை பிக்ஷை போடுவார்கள். இவை சமீப காலங்களில் நடைபெறுகிறது.   எங்கள் பக்கம் பிக்ஷை இடுகையில் கையில் மட்டைத்தேங்காயோடு வெள்ளிக்காசு ஒன்றும் வைத்துக்கொண்டு பிக்ஷை இடுவார்கள்.  இப்போதெல்லாம் மட்டைத்தேங்காய் வைத்துக்கொள்வது குறித்து யாருக்கும் தெரியவில்லை.  காசு வைத்துக்கொள்வது என்பது ஒரே காசைத் திரும்பத் திரும்ப பிக்ஷை இடும் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.  :((  


உபநயனம் முடிந்ததும் அந்த பிரமசாரி உப்பு, காரம் மிதமான அளவில் உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும் .  மிகவும் ஆசாரமாக இருப்பவர்கள் உப்பு, காரத்தையே விலக்குவார்கள்.  குறைந்தது மூன்று நாட்களாவது பிக்ஷை எடுக்க வேண்டும்.  அரிசியாகவோ, அன்னமாகவோ பிக்ஷை எடுக்கலாம்.  சந்தியா உபாசனையை விடாமல் செய்ய வேண்டும்.  காலையில் தினம் சமிதா தானம் செய்ய வேண்டும்.  பகலில் உறங்கக் கூடாது.  நான்கு நாட்கள் உபநயனத்தன்று அணிந்த அதே துணியை அணிய வேண்டும்.  நான்காம் நாள் ஆசாரியர் வேறு துணியை உடுத்தக் கொடுத்ததும் துணியை மாற்றலாம்.  நான்காம் நாள் பலாச கர்மா என்பது நடக்கும்.  இப்போதெல்லாம் அது யாருக்கும் தெரியாது.  ஆசாரியரோடு சென்று  தேவதைகளை ஆவாஹனம் செய்து பழைய பலாச தண்டத்தை விட்டு விட்டு, புதியதாக ஒன்று எடுத்துக்கொள்வார்கள்.  இது தான் பலாச கர்மா.  இதற்கு கிழக்கு அல்லது வடக்குத் திசையில் செல்லவேண்டும் என்றும் புரச மரத்தடியில் மண்ணால் பிரணவ தேவி, ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகியோருக்குத் திட்டுகள் அமைத்து மந்திரங்களால் போற்றி ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள் என தி.வா. சொல்கிறார்.

இந்த உபநயனம் நடைபெறும் முன்னரே வீட்டில்  இருந்த பெரியோர்களில் சுமங்கலிகளாக இறந்த பெண்மணிகளை நினைத்து சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்வதுண்டு.  இதற்கு நாள் பார்க்க வேண்டும்.  சாதாரணமாக புதன், வெள்ளி, திங்கள் கிழமைகளில் தான் செய்வார்கள்.  இதை உபநயனத்துக்குக் குறிப்பிட்டிருக்கும் நாளுக்கு முன்னாலேயே செய்து விட வேண்டும்.  இதை அடுத்து வெங்கடாசலபதி சமாராதனையும் பல வீடுகளில் வழக்கம் உண்டு.  அநேகமாய் வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பிரார்த்தனையும், சனிக்கிழமை சமாராதனையும் செய்வார்கள்.  இதை எல்லாம் செய்து முன்னோர்களிடமும், கடவுளிடமும் உபநயனம் நல்லபடியாக முடியப் பிரார்த்திப்பார்கள்.   பூணூல் இல்லாமல் செய்யும் எந்தக் கர்மாவும் பலனைத் தராது என்பதாலேயே பூணூலே போடாத ஆண்களுக்கும் தேவைப்பட்ட நேரத்தில் சட்டைக்கு மேலேயாவது பூணூலை மாட்டிச் செய்ய வைக்கிறார்கள்.  இதை பிரம்ம சூத்திரம் என்றும் சொல்வதுண்டு.  இதுவே மனிதனின் மனதை ஒருமைப் படுத்தி அவன் தவத்தைக் காக்கும் கவசமாகச் செயல்படுகிறது என்பது ஆன்றோர் வாக்கு.


சரி, இப்போ காயத்ரி அல்லது சரஸ்வதி என்றால் என்னனு பார்ப்போமா?





ஓம்  பூர்: புவ: ஸுவ:  தத் ஸவிதுர் வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

இதுதான் மந்திரம்.  எல்லா பூஜைகளிலும் முதன் முதல் சொல்லப்படுவதும் இதுவே.  இதைச் சொல்லாமல் எந்த வழிபாடும் ஆரம்பிக்காது.  இதில் இருந்தே  இதன் முக்கியத்துவம் தெரிகிறது அல்லவா?  இதைக் கண்டறிந்தவர் விஸ்வாமித்திரர்.  இந்த காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் சொல்லி எந்த வழிபாடும் ஆரம்பிக்கும்.  பெண்களால் செய்யப்படும் வழிபாடுகள் உள்பட.   பெண்களும் அவர்கள் செய்யும் எந்த வழிபாட்டிலும் இந்த மந்திரத்தை முதலில் சொல்ல வேண்டும்.  இந்த மந்திரத்திற்கு காயத்ரி என்ற பெயரைத் தவிர சாவித்ரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு.  ஏனெனில் இந்த மந்திரத்தைக் காலையில் காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்க வேண்டும் என்பார்கள்.  அதே போல ஜபிக்கும் முறையும் காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்துக் கொண்டு கைகளை முகத்துக்கு நேரே கூப்பியும்,  நண்பகலில் கிழக்குப் பார்த்து அமர்ந்து கைகளை மார்புக்கு நேரே கூப்பியும், சூரிய அஸ்தமனம் ஆகும் மாலை நேரத்தில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு நேரே கூப்பியும் இருந்த வண்ணம் ஜபிப்பார்கள்.

24 அக்ஷரங்கள் கொண்ட இதில் "ௐ" என்ற பிரணவம் தவிர 3 வ்யாஹ்ருதிகள், 3 பாதங்கள் இருப்பதாய்ச் சொல்வார்கள்.  இதைச் சொல்லும் முறையும் இருக்கிறது.  எனக்கு அவ்வளவெல்லாம் தெரியாது.  ஆனால் அவசரம் அவசரமாக ஜபிக்கக் கூடாது.  மனம் ஏதோ ஒன்றை நினைத்திருக்க கடனுக்கு காயத்ரியை ஜபிக்கலாகாது.


இதன் பொருளானது பூ உலகம், மத்ய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி ஸ்வரூபத்தைத் தியானிப்போம்.  அந்த சக்தியை தியானிப்பதால் நமக்கு ஞானமாகிய வெளிச்சம் கிட்டட்டும்.  என்பதுவே.



இந்த வருட காயத்ரி ஜபம் அன்று இதை வெளியிட நினைத்தேன்.  முடியவில்லை. :(  ஆனாலும் இதன் பிறகாவது அனைவரும் சொல்லும் காயத்ரி மந்திரத்தைப்பொருளுணர்ந்து அனைவரும் சொல்லி லோக க்ஷேமத்துக்குப் பிரார்த்திப்போம்.  


அனைவரும் நலமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகளுடன் உபநயன சம்ஸ்காரம் பற்றிய பதிவு முடிவடைந்தது.




தகவல்கள் உதவி:  தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

Friday, August 03, 2012

கண்ணால் கண்டதும், கருத்தில் நின்றதும் காவிரி!

அம்மா மண்டபத்தின் முகப்பு.



நம்பெருமாள் வீதி உலா வந்த தங்கப் பல்லக்கு

நம்பெருமாள் ஓரப் பார்வை! :))))




உம்மாச்சி பாருங்கப்பா!  பட்டாசாரியார்கள் இல்லாமல் நம்பெருமாளைப் பார்ப்பது கஷ்டம். :)))))))

ஆண்டாளம்மா தலைமேலே தான் சீர் வைச்சு எடுத்துட்டுப் போவாங்க.  நேத்திக்கு ரொம்ப நேரம் ஆனதோடு நல்ல கூட்டம்.  உள்ளே போக முடியலை! இதெல்லாம் மத்தியானம் மூணு மணிக்கு எடுத்தது.

அம்மா மண்டபத்தூணில் உள்ள பிள்ளையார்


பிள்ளையார் தூணுக்கு நேரே மறுபக்கம் வாயு குமாரன், வாநர வீரன், அநுமந்தன்.

அண்ணன் சீர் கொண்டு வந்த மகிழ்ச்சியில் காவிரித் தாய்.

காவிரித்தாயே, காவிரித்தாயே, நாங்கள் விளையாட நீர் விட மறந்தாயே!

வறண்ட காவிரியில் செல்லும் மக்கள்

Thursday, August 02, 2012

சீப்பி, சீப்பியாய்ச்சாப்பிடுங்க!

பொன்ஸ் அக்கா சீப்பியின் செய்முறை கேட்டிருக்காங்க. அவங்க குட்டிப் பாப்பாவுக்குச் செய்து கொடுக்கணுமாம்.  சீப்பியை உப்புப்போட்டு ஒரு முறையிலும், இனிப்புச் சேர்த்து ஒரு முறையிலும் செய்யலாம்.  இரண்டையும் இங்கே எழுதுகிறேன்.  இந்த வலைப்பக்கம் பல தரப்புக்கும் போய்ச் சேருவதால் இங்கே எழுதுகிறேன்.   சாப்பிடலாம் வாங்க பதிவுப் பக்கம் பலருக்கும் தெரியாது.  ஆகவே அங்கே எழுதிப் பயனில்லை. :)))

தேவையான பொருட்கள்:

ஒரு கிண்ணம் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணை  ஒரு டேபிள் ஸ்பூன், பிசைய நீர்.  பொரிக்க எண்ணெய் அல்லது நெய்.

அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்காயத் தூளை நன்கு கலந்து வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.  கொஞ்சம் கொஞ்சமாக நீரைச் சேர்க்கவும்.  மாவு ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் பிசைய வேண்டும்.  மாவைக் கையால் உருட்டும் பதத்துக்குப் பிசைய வேண்டும்.  பின்னர் அவற்றை நீளமான விரல்கள் போன்ற அளவுக்கு உருட்டி வைத்துக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அவற்றைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.  பல் முளைக்கும் பருவத்துக் குழந்தைகளில் இருந்து ஐந்து வயதுக் குழந்தைகள் வரை இவற்றைத் தாராளமாக உண்ணக் கொடுக்கலாம்.  இவற்றின் முனையைக் குழந்தைகள் வாயில் வைத்துச் சீப்பிக் கொண்டு ருசியை அறிந்து சாப்பிடுவதால் இதற்குச் சீப்பி எனப் பெயர்.

அடுத்து இனிப்புச் சேர்த்தது.  

மாவு வகைகள் மேற்சொன்ன அளவுக்கு ஒரு கிண்ணம் வெல்லம் போட்டுப் பாகு காய்ச்சவும்.  பாகு உருட்டினால் தக்காளிப் பழம் போல் உருள வேண்டும்  அந்தப் பதத்தில் எடுக்க வேண்டும்.

அரிசிமாவில் உளுந்து மாவு, வெண்ணெய் சேர்த்துக் கொண்டு தயாராக வைத்திருக்கவும்.  இதில் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.  கிளறிக் கொண்டே இருக்கவும்.  மாவு கெட்டிப் பட்டதும் பாகை நிறுத்திவிடவும்.  சற்று நேரம் நன்கு கிளறி விட்டுக் கைகளால் சீப்பி போல உருட்டிக் கொண்டு நெய் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.  இது வெல்லச் சீடை ருசிக்கு இருக்கும்.  வெல்லச் சீடை மாவிலேயும் முறுக்கு மாவிலேயும் சீப்பி செய்துடுவேன்.  ஆகவே அப்படியும் செய்யலாம்.  படங்கள் இப்போது இல்லை.  அடுத்த வாரம் செய்யும்போது எடுத்துப் போடறேன்.

ஆடிப் பெருக்கும் காவிரியின் சுருக்கமும்!


Posted by Picasa
இன்னிக்கு ஆடிப் பெருக்கு.  காவிரியில் தண்ணீரே இல்லை.  தற்காலத்து மனித மனங்களைப் போலவே காவிரியும் வறண்டு கிடக்கிறாள்.  காவிரி வறண்டு இருப்பதும் மனிதர்களாலே தான்.  இன்று நம்பெருமாள் இங்கே காவிரிக்கு வந்து தன் தங்கையான காவிரிக்குச் சீர் அளிக்கப் போகிறார்.  பெருமாள் வரும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேற்றில் இருந்து எல்லா வீடுகளிலும் வாழைமரங்கள் கட்டித், தோரணங்கள் தொங்க விட்டு அவரவர் வீட்டுக் கல்யாணம் போலப் பெருமாளை வரவேற்கக் காத்திருப்பது அந்த நாட்களில் (ஹிஹி, ரொம்பல்லாம் அந்தக் காலம் இல்லை) மீனாக்ஷி கல்யாணத்திற்கு சீர் வரிசை ஊர்வலம் வரச்சே வீடுகளில் இப்படி வரவேற்ற நினைவு வருது.

இப்படிக் கொஞ்சமானும் பழமை மாறாமல் கடைப்பிடிக்கப் படுவது கொஞ்சமானும் ஆறுதலைத் தருகிறது.  ராத்திரியெல்லாம் ஊரே தூங்கவில்லை.  ஒரே வேட்டுச் சத்தமும், பாட்டுச் சத்தமும் தான்.  ரங்கநாதர் காவிரிக்கு வந்து யானை மேலிருந்து காவிரிக்குச் சீர் கொடுக்கப் போறதைப் பார்க்கக் கூட்டமும் அதிகமாய் வந்திருக்கிறது.  எவ்வளவு தூரம் போகமுடியும்னு தெரியலை.  இயன்றால் படங்கள் கிடைக்கும்; கூட்டம் அதிகம் இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.  பின்னர் திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்னர் வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு பின்னர் செல்வாராம்.  அது என்ன ஐதீகம் எனத் தெரியவில்லை.  கேட்டுட்டுச் சொல்றேன். இப்போதைக்கு வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?

Wednesday, August 01, 2012

உபநயனம் என்றால் என்ன?? 5


//அம்மியில் நிற்க வைத்து
ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர்
உரையாடுவார்.  இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் தெரியவில்லை.//

போன பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.  இதைப் படித்த திரு திவா அவர்கள் இது முக்கியம் என்று சொல்லிவிட்டு இதற்கான சுட்டியையும் கொடுத்து உதவினார்.  முதலில் சுட்டி கிடைத்தபோது சேமித்துக்கொள்ளவில்லை.  பின்னால் தேடியபோது சுட்டி கிடைக்கவில்லை.  ஆகவே என்னனு தெரியலைனு எழுதிட்டேன். :((( மிகவும் மன்னிக்கவும்.  முன்னாலேயே அவரிடம் கேட்டிருக்கணும். தாமதமாகவாவது தெரிய வந்ததுக்கு நன்றியைச் சொல்லிவிட்டு இதைக் குறித்து எழுதியதும் அடுத்த பதிவைப் பின்னர் போடுகிறேன்.

பூணூலே போடாத குழந்தைக்கு அப்பா, அம்மாவிடம் சொல்லி உபநயனம் செய்யச் சொல்லு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும்.  உபநயனத்துக்குத் தயாராக இருக்கும் வடுவிடம் உபநயனத்திற்குப் பின்னர் அவன் செய்ய வேண்டிய நித்ய கர்மாநுஷ்டானங்களைக் குறித்து அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.  இது தான் ஆசாரியர் முக்கியமாய்ப் பையனுடன் நடத்தும் சம்பாஷணை ஆகும்.   சந்தியா வந்தனம் செய்ய வேண்டியது மிக முக்கியம் என்பதாலும், ப்ரமசாரியாகப் போகும் சிறுவனுக்கு குருகுலத்தில் இருந்து வேத அத்யயனம் செய்ய வேண்டியதும் கட்டாயம் என்பதாலும், உபநயன காலத்திலேயே ஆசாரியர்கள் உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு அதற்கான தக்க பதிலையும் பெற்றுக் கொள்வார்கள்.  எல்லாம் வடமொழியில் இருப்பதால் இந்தக் காலத்தில் எல்லாருக்கும் இது புரியும் என்று சொல்ல முடியாது.  ஆசாரியார் கேட்டதற்குத் தக்க பதிலைச் சொல்லு என்று சொல்லிக் கொடுப்பதால் அப்படியே குழந்தைகள் சொல்வார்கள்.  ஆனாலும் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆசாரியர் மாணாக்கனாகப் போகிறவனிடம்,

"ப்ரும்மசார்யஸி= ப்ரும்மசாரியாக இருக்க வேண்டும்." என்று சொல்கிறார்.

மாணவன் ஆசாரியரிடம்,

"அப்படியே ஆகட்டும்.  நன்றாக இருப்பேன்."  என்கிறான்.

ஆசாரியர்: தினமும் உணவு உண்ணும் முன் இத்தனை நாட்கள் நீ பாட்டுக்குச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாய்.  அதைப் போல் இப்போது செய்ய முடியாது.  நீ பரிசேஷணம் பண்ண வேண்டும்." என்கிறார்.

மாணவனும், அப்படியே செய்வதாகச் சொல்கிறான்.

அடுத்து ஆசாரியர் பிக்ஷை எடுத்துத் தான் உண்ண வேண்டும் என்கிறார்.
பிக்ஷாசர்யஞ்சரா= என்றும் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவதோடு அல்லாமல் வேத அத்யயனமும் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்.

மாணவனும் சரி, அப்படியெ பண்ணுகிறேன் என்பான்.

பின்னர் ஆசார்யதீனோபவ என்று சொல்வார்.  அதாவது குருவுக்குப் பலன் தரக் கூடியவனாய் இருக்க வேண்டும்.   உனக்கு எந்த ஒரு குரு வேதத்தைக் கற்றுக் கொடுக்கிறாரோ அவர் சொல்வதை நீ கேட்க வேண்டும்."

மாணவன் அதற்கும் அப்படியே ஆகட்டும் என்பான்

பின்னர் தினசரி ஒரு நியமம் நீ தூங்காதே என்று சொல்லுவார்.

இதற்கு அர்த்தம் தூங்காமல் இருக்கக் கூடாது என்பதல்ல. தூங்குவதிலும் ஒரு ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும்.  என்பதுவே.  இதன் அர்த்தம் பகலில் தூங்காதே என்பதுவே.

மாணவனும் ஒத்துக்கொள்வான்.

இப்போதெல்லாம் இதன் முழுப் பொருளும் தெரியாமல் யந்திரத்தனமாக ஆசாரியர் சொல்ல மாணவனும் அப்படியே சொல்லப் பழகிவிட்டான்.  உண்மையில் அர்த்தம் புரிந்து கொண்டிருந்தால் இம்மாதிரிப் பிரதிக்ஞைகள் செய்துவிட்டு அதைக் காப்பாற்றமல் இருக்கக் கூடாது அல்லவோ!  ஆனால் இன்று அப்படி நடப்பதில்லை. பிரமசாரியாய் இருப்பதில்லை.  பிக்ஷை எடுத்து உண்பதில்லை.  பகலில் தூங்காமல் இருப்பதில்லை. ஆனால் க்ருஹஸ்தனான பின்னராவது அநுஷ்டிக்க வேண்டியதை அநுசரிக்கலாம் எனப் பரமாசாரியார் கூறுகிறார்.

தகவல் உதவிக்கு நன்றி:  திரு திவாஜி.