முகநூல் நண்பர்கள் பலருக்கும் திரு பாக்கியம் ராமசாமி என்னும் ஜ.ரா.சு. அவர்களைத் தெரியாமல் இருக்காது. பல்லாண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதின ரவாதோசை பற்றியதொரு கட்டுரையை யாரோ மீண்டும் கேட்க அதைப் பதிவிட்டதோடு ஆனியன் ரவாதோசை ரசிகர் சங்கம் என்னும் பொருள்படி ORDS என்னும் ரசிகர் மன்றத்தையும் துவக்கி அதில் சேருபவர்கள் அவரவருக்கு வெங்காய ரவாதோசையோடு ஏற்பட்ட அனுபவங்களைப் படங்களுடன்பதியச் சொல்லி இருந்தார். அப்போ நான் அம்பேரிக்காவில் இருந்தேன்னு நினைக்கிறேன். பையர் வீட்டிலோ, பெண்ணின் வீட்டிலோ ரவாதோசையே பண்ண முடியாது! அப்படியும் ஒரு நாள் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் எனப் பெண் வீட்டில் ரவாதோசை பண்ணியும் அதைப் படம் எடுத்துப் போட முடியலை. அதுக்குப் பரிசு எல்லாம் கொடுத்தார்! ம்ஹூம்னு பெருமூச்சு விட்டதோடு சரி! நமக்குக் கொடுத்து வைக்கலைனு நினைச்சுண்டேன். அவர் ரவாதோசை பற்றி எழுதிய வெங்காய ரவாதோசை மஹாத்மியம் சுட்டி கிடைச்சால் பகிர்கிறேன்.
அப்புறமா இந்தியா வந்ததும் பலமுறை ரவாதோசை (ஆசை தீர) பண்ணினாலும் ஆனியன் போட்டுப் பண்ண முடியலை. நேத்திக்குத் திடீர் என ரவாதோசை பண்ணும் எண்ணம் வந்தது. ஆனால் காலம்பர சாம்பார் வைக்கலை. ராத்திரிக்கு வைச்சால் மிஞ்சிடும். ஆகவே தேங்காய்ச் சட்னி, ஏற்கெனவே முதல்நாள் அரைச்சு வைச்சிருந்த தக்காளிச் சட்னி மற்றும் கொத்துமல்லிச் சட்னி, வெங்காயச் சட்னியோடு திருப்தி அடையலாம்னு முடிவு கட்டினேன். இதிலே நம்ம ரங்க்ஸ் தேங்காய்ச் சட்னியைத் தவிர மற்றவற்றைக் கண்ணெடுத்தும் பாரார்! ஆகவே கொத்துமல்லிச் சட்னியும் ஏற்கெனவே அரைச்சது கொஞ்சம் இருந்ததைத் தேவை எனில் எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன். யாருப்பா அங்கே கொத்துமல்லி விற்கிற விலையில் னு கூவுறது? ஹிஹி, அதான் அரைக்கலையே! மற்றபடி தேங்காய், வெங்காயச் சட்னிகள் தயார் செய்யப்பட்டன. ரவாதோசைக்குக் கலவையும் கலந்து வைக்கப்பட்டது. ஹிஹி, மாவு கலக்கும்போது படம் எடுக்கும் நினைவு வழக்கம் போல் இல்லை. முதல் தோசையை அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் ஊற்றியதும் நினைவு வந்தது. கீழே மாவு கலந்திருக்கும் பாத்திரத்தின் மேல் தோசைத்திருப்பியோடு! :)
தோசையை தோசைக்கல்லில் ஊற்றியதும் எடுத்த படம்! நினைவா எடுத்துட்டோமுல்ல! :)
தோசையைத் திருப்பிப் போட்டதும் எடுத்த படம் கீழே!
திருப்பிப் போட்டதும் எடுத்த படம். வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கியதால் ஜாஸ்தி தெரியாது. அதோடு நான் வெங்காயத்தை மாவோடு கலந்து விட்டேன். ஓட்டல்களில் மேலே தூவுறாப்போல் தூவவில்லை. ஏனெனில் வெங்காயம் கொஞ்சம் முறுகலாக ஆனால் தான் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும். மேலே தூவினால் பச்சை வெங்காயம் மாதிரியே இருக்கு பல சமயங்களிலும். கீழே சட்னி வகைகள்.
முன்னால் தெரிவது தேங்காய் அதுக்கு வலப்பக்கம் தக்காளி+கொத்துமல்லிச் சட்னி, இடப்பக்கம் வெங்காயச் சட்னி! ஆசையாய் தோசை சாப்பிட வாங்க!
ரவாதோசை கலவைக் குறிப்பு:
நல்ல பொடி ரவையாக இருந்தால் அரை மணி முன்னால் ஊற வைச்சால் போதும். எங்களோடது கொஞ்சம் பெரிய ரவை. என்றாலும் அரை மணி முன்னால் தான் ஊற வைச்சேன்.
ரவை இரண்டு கரண்டி அல்லது ஒரு சின்னக்கிண்ணம்
அரிசி மாவு ஒரு சின்னக் கிண்ணம்
வறுத்து அரைத்த உளுத்தமாவு இரண்டு டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு ஒரு கரண்டி! (மைதாமாவு இப்போதெல்லாம் சேர்ப்பதில்லை! ஆதலால் கோதுமை மாவு! உளுத்தமாவு சேர்ந்து வரதுக்காக! எப்போவுமே கைவசம் இருக்கும் வறுத்து அரைத்த உளுத்த மாவு!) எந்த தோசைக்கும் உளுத்தமாவு போட்டால் நன்றாக எடுக்க வரும். இதில் பச்சைமிளகாய், ஜீரகம், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கடுகு தாளித்துவிட்டு அரை மணி வைத்துப் பின்னர் தோசை வார்க்க ஆரம்பிக்கலாம்.