நல்ல செய்தி! கணினிப் பிரச்னையைச் சரி பண்ணியாச்சு. டெல் கம்பெனியுடைய மெகானிக்கையே கூப்பிட்டேன். அவரும் வீட்டிலே வந்து தான் செய்வேன், பரவாயில்லையா என்று கேட்டார். நமக்கு அதானே வேணும்! சரினு சொல்லி நேத்திக்கு வந்து செய்து கொடுத்திருக்கார். ஓ.எஸ். மாத்த வேண்டாம், பிரச்னை அதில் இல்லைனு சொல்லிட்டு இணையம் இணைப்புக் கொடுத்த "நெட் வொர்க் செட்டிங்க்ஸ்" பொதுவான செட்டிங்க்ஸ் எல்லாவற்றையும் பார்த்துப் பலதை நீக்கி சிலதைச் சேர்த்துப் பின்னர் மீண்டும் இணைய இணைப்புக் கொடுத்து அது சரியா இருக்கானும் சோதிச்சுப் பார்த்து, கணினியே எல்லாத் தேர்வுகளிலும் பாஸ்னு சொன்னதும் என்னை இயக்கிப் பார்க்கச் சொன்னார். சரியாக இருந்தது. அவரும் இயக்கிக்காட்டினார். ஒரு வாரம் பார்த்து விட்டுப் பின்னர் மீண்டும் பிரச்னை வந்தால் சொல்லும்படியும் அப்போது உள்ளேயும் பிரிச்சுப் பார்த்துடலாம்னும் சொல்லி இருக்கார். இன்னைக்குக் கணினி வேலை முழுவதும் இந்தப் புதிய கணினியில் தான். பழசையும் சரி பண்ணித் தரேன்னு சொல்லி இருக்கார்.
ஆனால் இந்த இ கலப்பை தான் மறுபடி மறுபடி தகராறு. பார்க்கலாம். ஒரு வாரம். சரியா வரலைனா மருத்துவர் அடுத்து வரச்சே என்னனு கேட்டுக்கணும். இணையம் தானே பிரச்னை பண்ணிட்டு இருந்தது. அது சரியாகி விட்டது! கொஞ்சம் நிம்மதி! முன்னால் வந்த மருத்துவர் ஓ.எஸ். மாத்தணும்னு சொன்னதோடு இல்லாமல் இணைய இணைப்புக்கு பென் ட்ரைவ் மாதிரி ஒரு டிவைஸ் போடணும்னு வேறே சொன்னார். இரண்டும் சேர்ந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் அதுவும் எனக்காக என்றார். வின்டோஸ் 7 போட்டுக் கொடுக்க சாதாரணமாக ஆயிரம் வரை வாங்குவாங்களாம். எனக்காகக் குறைச்சுண்டேன் என்றார். ஆனால் இப்போது 300 ரூ சர்வீஸ் சார்ஜ் கொடுத்ததிலேயே சரியாகி இருக்கு. பார்ப்போம். ஓ.எஸ். அவர் போடுவதாகச் சொன்னது வின்டோஸ் 7 பிரிமியம்! அது பைரேடட் வெர்ஷன் வேறே! முன்னால் சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஒருத்தர் போட்டுக் கொடுத்துப் பிரச்னை வந்ததால் பயம்! :))))