இந்தப்படத்தில் இருப்பவர்கள் யார்? சொல்லுங்க,பார்ப்போம்!
ஏற்கெனவே இந்தப்படத்தைப் பார்த்தவங்க ஆட்டத்தில் கலந்துக்கக்கூடாது! கீழே இருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?
இது தான் சிரிப்பாச் சிரிச்சுடுச்சே நிறையவே!
நேற்றுஅல்லது முந்தாநாள் வீடு பற்றிப் பேச்சு வருகையில் அதிரா அவருடைய இலங்கை வீட்டை நினைவு கூர்ந்திருந்தார். எனக்கும் எங்க அம்பத்தூர் வீடு நினைவில் வந்தது. கீழே வீட்டு வாசலில்தெருவுக்கே நிழல் கொடுத்துக் கொண்டிருந்த வேப்ப மரம். இப்போ இருக்கா இல்லையானு தெரியலை. வெட்ட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொண்டோம். :(
வீட்டிற்குள் நுழையும் வாயில்.உள்ளே வராந்தா, அடுத்துக்கூடம். முக்கிய நுழைவாயில்க் கதவுக்கும் வராந்தாக் கதவுக்கும் இடையே பத்து அடிக்கும் மேல் இடம் விட்டிருந்தோம்.
மரப்பசுமைக்குப் பின்னர் பச்சையாய்த் தெரிவது மாடியின் மேல் முதல் தளத்தில் போட்டிருந்த ஷெட்!
வீட்டு வாசலில் அமர்ந்து கொள்ள பெஞ்ச் போட்டிருந்தோம். மாலை வேளைகளில் அதில் உட்கார்ந்து புத்தகம் படிக்க, டேப் ரிகார்டர் போட்டுக் கேட்க, அக்கம்பக்கம் உள்ளவர்களோடு அங்கிருந்தபடியே அரட்டை அடிக்க என நினைவுகள், நினைவுகள், நினைவுகள்!
மேலே உள்ள படங்கள் எல்லாம் 2016 ஆம் ஆண்டில் எடுத்தவை. கீழே பார்க்கப் போகும் படங்கள் 2011 ஆம் ஆண்டில் நாங்க வீட்டை விட்டுக் காலிசெய்ய நேர்ந்ததற்கான காரணங்களுடன் கூடிய படங்கள். வீட்டு வாசலில் ஒரு பக்கம் ஜல்லிமலை, இன்னொரு பக்கம் மணல் குன்று. வழியில் எல்லாம் இரும்புக் கம்பிகள். செங்கல்கள்!
இந்த மணல் குன்று கரைந்தால் தான் நாங்க வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர முடியும். வெளியே இருந்து உள்ளே வர முடியும். இதைக் குவித்திருந்த நாளன்று என் மாமனாரின் ச்ராத்தம். யாருமே வர முடியாமல் பக்கத்துக் குடியிருப்பு வளாகத்தின் வழியாக எங்க சுற்றுச் சுவர் உயரம் கம்மி என்பதால் எல்லோரும் புரோகிதர்கள் உட்பட ஏறிக் குதித்து வந்தார்கள். பால்காரர் இதை எல்லாம் பார்த்து விட்டுப் பாலே கொடுக்கவில்லை.
நாங்க எங்க வீட்டிலிருந்து மண்வெட்டி, பான்டு போன்றவை எடுத்து வந்து வாசல் மணல் மலையைக் கொஞ்சம் நகர்த்திவிட்டுச் சரி செய்து வீட்டுக்குள் ஒரு காலையாவது உள்ளே நுழையும்படி செய்தோம்.
அந்தச்சமயம் வந்த கிருஷ்ணன் பிறப்பின் முதல்நாள் தான் முதல் முறையாகத் தண்ணீர் வீட்டுக்குள் வந்தது. காலை மூன்று முதல் எட்டு மணி வரை தண்ணீரை இறைத்துக் கொட்டி விட்டுப் பின்னர் செய்த பக்ஷணங்கள் இவை. கிருஷ்ணனிடம் உனக்கே இது நியாயமா எனக் கேட்டேன் அன்று.
இடர் விலக வேண்டும் எனக் கிருஷ்ணன் பிறப்புக்குப் பின்னர் வந்த மஹாசங்கடஹர சதுர்த்தி அன்று செய்த கணபதி ஹோமம். இந்த ஹோமம் செய்து சரியாய் ஒரே மாதம் தான் அந்த வீட்டில் இருந்தோம். அதன் பின்னர் அந்த வீட்டைக் காலிசெய்து கொண்டு என் நாத்தனாரின் ஓரகத்தி வீட்டுக்குக் குடித்தனமாகப் போனோம். அடுத்து வந்த மாதங்களில் அம்பேரிக்கா போனதால் அங்கே எடுக்கப்பட்ட முடிவு தான் ஶ்ரீரங்கத்துக்குக் குடித்தனம் வருவது.
அம்பத்தூர் வீட்டுக் கூடத்தில் நடுவில் அமைக்கப்பட்ட சுவாமி அலமாரி. மேல் தட்டில் ராமரும் கீழே மண்டபத்தில் விக்ரஹங்களும் வைத்திருந்தோம். மண்டபத்தை அங்கேயே கொடுத்து விட்டுவந்து விட்டோம்.
இது அம்பத்தூரில் ஒரு கார்த்திகை அன்று எடுத்த படம். 2010 ஆம் வருடம் என நினைக்கிறேன்.
கொல்லைத் தோட்டத்தில் நம்ம செல்லம் படுத்துக் கொண்டிருக்கையில் ஃபில்ம் காமிராவில் எடுத்த பழைய படம்.
வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்தப்போ மாடிப்படி அடியில் தேங்கி இருந்த தண்ணீரில் காணப்பட்ட நண்டுகள்.
இந்த மீன் கொத்தி நாங்க அந்த வீட்டுக்குப் போனதில் இருந்து எனக்குப் பழக்கம். எங்க கொல்லைக் கிணற்றுக்குள் டைவ் அடித்துப் போகும். ஒருநாள் மதியம் கிணற்றில் இறங்கி விட்டு ஓய்வு எடுத்தபோது எடுத்த படம். இதுவும் 2009 அல்லது 2010இல் இருக்கும்.
இதைத் தான் பாரிஜாதம் என்பார்கள். எல்லோரும் பவளமல்லிப் பூவைப் பாரிஜாதம் என்கின்றனர். ஆனால் இது தான் உண்மையில் பாரிஜாதம். வாசனை அக்கம்பக்கமெல்லாம் பரவும். ஊரைத் தூக்கும்.
ஹாஹாஹா, இதுக்கு முன்னால் தான் ஆறு மாசத்துக்கு ஒரு முறை பிரசவத்துக்கு ஒரு மியாவ் வந்துடும். அதுக்குப் பிரசவம் பார்த்துப் பத்தியம் வடிச்சுப் போட்டுனு எனக்கு ஒரே அலுப்பா இருக்கும். இருந்தாலும் நல்ல பொழுது போக்காத்தான் இருந்தது. அதைத் தான் நாய்கள்........ :( குட்டிகளும் சேர்ந்து அம்மாவுடன் போய்ச் சேர்ந்து விட்டன. இது அதற்கு அப்புறமா வந்ததுனு நினைக்கிறேன். கொல்லைக்கிணற்றடியில் காற்றாடப் படுத்து இருந்தப்போ எடுத்த படம். வட்டமாய்த் தெரிவது கிணறு.
முன்னெல்லாம் கௌதமன் சார் ஞாயிறன்று எங்கள் ப்ளாகில் படங்கள் போடுவார்.அதற்கேற்றாற்போல் போட்டிப் படம் எங்கே இருந்தாவது எடுத்து வந்து போடுவேன். இப்போல்லாம் சுற்றுப்பயணப் படங்கள் வருவதால் போடுவதில்லை. இன்னிக்கு அதுவும் நினைப்பு வந்தது. எல்லோரும் பார்த்து ரசியுங்கள்.