பாரம்பரியத் தொழில் அந்த அந்தக் குடும்பத்து வாரிசுகளால் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் பொருளில் வந்த ஒரு வீடியோவில் அதைச் சொன்னவரைப் பற்றி ஒரு பதிவு முகநூலில் பார்த்தேன். பி.ஏ. எம்.ஏ. எனப் படித்தால் மட்டும் வேலை கிடைத்து விடுமா என்றும் சொல்லி இருந்தார். ஏனெனில் இவை இரண்டுமே வெறும் பட்டமே. இதை வைத்துக் கொண்டு அரசு உத்தியோகத்தில் எழுத்தராகப் போகலாம். ஆனால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது. ஆகவே தச்சர் பரம்பரை வாரிசுகள் தச்சுத் தொழிலிலும், நாவிதப் பரம்பரை அவங்க பரம்பரை வைத்தியத் தொழிலும், வண்ணார்கள் பரம்பரையும் அவங்க பரம்பரையான துணிகளைப் பராமரிப்பது பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்கள் படித்த படிப்பை வைத்துத் தொழில் ஆரம்பித்து மேம்பட்டுக் கொள்ளலாம் என்பது தான் அவர் சொல்ல வந்தது. ஆனால் வழக்கம் போல் நம் மக்கள் குலத்தொழில் கல்வியைக் கற்கச் சொல்கிறார் என அவரைக் குற்றம் சொல்லிவிட்டு பிராமணர்கள் மட்டும் படிக்கலாமா, அவங்க மட்டும் ஏன் வேத அத்யயனத்தோடு நிறுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்டிருந்தனர். அதற்கு நான் எழுதிய பதில்/விளக்கங்களும் அதற்கான எதிர்வினைகளும். "கீதா" என்னும் பெயரில் என்னுடைய கருத்துகள். பெயர் குறிப்பிடாமல் பதிவரின் கருத்துகள். இப்போதைய காலகட்டத்தில் பல பாரம்பரியத் தொழில்கள் முற்றிலும் நசிந்து விட்டன. நடுவில் வந்த ஆங்கிலேய ஆட்சி அனைத்துப் பாரம்பரியங்களையும் அழித்து ஒழித்துவிட்டது. பூக்கட்டுவது கூட ஒரு பாரம்பரியம் தான். எல்லோருக்கும் அப்படி அழகாகப் பூக்கட்ட வராது. மதுரையில் இன்றளவும் பூக்காரத் தெரு, வளையல்காரத் தெரு (இப்போப் பெயர் மாறி இருக்கோ) என்றெல்லாம் உண்டு. பிராமணர்களில் பல சமையல் வல்லுநர்கள் அந்தக் காலங்களில் ஓட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தனர். இப்போதைய காலங்களில் அவர்களின் வாரிசுகளே பெருமளவு சமையல் ஒப்பந்தக்காரர்களாகக் கல்யாணங்கள், பெரிய விசேஷங்கள், அரசு விழாக்கள் எனக் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இதை மறுக்க முடியாது.
கீதா There are so many doctors and engineers who are still practicing veda parayana and doing agnihothram daily. So many efficient persons are in this field. And nowadays in veda patasalas they also teaching in normal education system. It includes veda adyayanam.
சிநேகிதி LB வேத பாராயணத்தை மட்டும் பார்ட் டைமா பண்ணுவாங்க, ஆனா தச்சனும், வண்ணானும் மட்டும் ஃபுல் டைமா அவங்க குலத் தொழிலையே பண்ணனும், பி.ஏ எம்.ஏ பண்ணக் கூடாதுன்ற செலக்டிவ் வர்ணாசிரமத்தைத்தான் கேள்வி கேட்கிறோம்
கீதா you are totally wrong and diverting the main message
சிநேகிதி அந்த வீடியோ பாத்தீங்களா?
கீதா Lakshmi Balakrishnan No need. You people are seeing things. Not looking into it.
சிநேகிதி அந்த வீடியோவ பாக்காம, அதைப் பத்தின என் கருத்துக்கு நீங்க ஒரு பதில் சொல்வீங்க. அதுக்கு நான் பதில் சொன்னா நான் விஷயத்தை திசை திருப்பறேன்னு வேற சொல்வீங்க. இது என்ன மாதிரியான விவாதம்?
கீழே இருப்பவை வேறொருத்தரின் பதிலைப் பார்த்துட்டுச் சொன்னதுஎன் கருத்து. .
நடுவில் ஆசான் (ஐயப்பன் கிருஷ்ணன்) வந்து வேறொரு வீடியோவைக் காட்டினார். அதில் பட்டமேல்படிப்புப் படித்த பெண் கழிவறையைக் கழுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான கருத்து ஸ்ரீநிவாசன் ஐயர் என்பவரால் பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பெயர்/ அடையாளம் தவறென முகநூல் சுட்டிக் காட்டிவிட்டது.
கீதா ஆசானே, தில்லியில், மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சுலப் இன்டர்நேஷனல் மூலம் கட்டப்பட்ட கழிவறைகளைச் சுத்தம் செய்வது பிராமணர்களே! அவர்களில் பலரும் நல்ல படிப்புப் படித்தவர்களே!
கீதா வேத பாராயணத்தைப் பகுதி நேரத் தொழிலாக வைத்துக்கொள்ளுவதில்லை. ஆசான் நன்கு அறிந்த மருத்துவர் வாசுதேவன் அவர்களின் மகன் சம்ஸ்கிருதம் மற்றும் இன்னும் சில விஷயங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் படித்தவர். தமிழிலும் வல்லவர். வான சாஸ்திரத்திலும் வல்லவர். அவர் நெரூரில் காஞ்சி மடம் நடத்தும் பாடசாலையில் தான் வேதம் கற்பிக்கிறார். முழு நேரமாக. மற்றவை தான் அவருக்குப் பகுதி நேரத் தொழில்கள். அவரைப் போல் இன்னும் சில இளைஞர்களும் எங்கள் சொந்தத்தில் இருக்கின்றனர். அதில் ஒருவர் இஞ்சினியர், இன்னொருவரும் மருத்துவர்.காஞ்சி மடம் நடத்தும் கல்லூரிகளில் கற்பிக்கின்றனர்.
மேலும் வர்ணாசிரமத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் வர்ணாசிரமம் என்றால் என்ன என்பதே யாருக்கும் புரியலை. வர்ணாசிரமப்படி யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம். அதே போல் ஓர் மஹரிஷியின் மகனாக இருந்தாலும் வைசியன் ஆகலாம். அது அவர் செய்யும் தொழிலைப் பொறுத்து. விசுவாமித்திரர் ஓர் அரசர். தவம் செய்து அதன் மூலம் பிராமணர் ஆனவர். அவரால் உபதேசிக்கப்பட்ட காயத்ரி ஜபமே இன்றைக்கும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு பிராமணர்களின் வீடுகளிலும் எதிரொலிக்கிறது. வேதங்களைத் தொகுத்து அளித்தவரும் இன்றைக்கும் அனைவருக்கும் குருவாக வணங்கப்படுபவரும் ஆன வேத வியாசர் ஓர் மீனவப்பெண்ணின் வயிற்றில் பிறந்தவர். பீஷ்மரால் விஷ்ணு சஹஸ்ரநாமம் போதிக்கப்பட்டது. வர்ணாசிரமத்தில் ஜாதி வேறுபாடு கிடையாது. ஜாதி வேறுபாடுகளே கடந்த 200, 300 வருடங்களில் உருவாக்கப்பட்டவை.
கீதா குறிப்பிட்ட வீடியோ எனக்கும் வந்து நானும் பார்த்துவிட்டேன். ஆதலால் தான் இப்போது தேவை இல்லை என்றேன். அதோடு நீங்கள் என்னமோ எல்லோருக்கும் பிராமணர்கள் சேர்ந்து அநீதி இழைத்துவிட்டதாக ஒரு மாற்றமுடியாத எண்ணத்தில் இருப்பதால் உங்களிடம் எதுவும் எடுத்துச் சொல்லுவதில் பலனில்லை. அதனாலும் விலகிப் போனேன். முடிந்தால் தரம்பால் அவர்களின் புத்தகம் The Beautiful Tree தரவிறக்கிப் படித்துப் பாருங்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கல்வி கற்றவர்களில் பெரும்பாலும் நாவிதர்களே அதிகம் என்பது புரியவரும்.
சிநேகிதி நீங்க சொல்ற புத்தகத்தை நிச்சயம் நான் படிக்கறேன். அதே போல எனக்கு முன்முடிவுகள்னு சொல்லிட்டே நீங்க முன்முடிவுகளோடு உழலாம, நான் சொல்வதில் இருக்கும் அடிப்படை உண்மையை எதிர்கொள்ள முயலுங்கள்.
கீதா அடிப்படை என நீங்கள் சொல்லுவதே தப்பு! நீங்க பொங்கும் அளவுக்கு என்னால் பொங்கவெல்லாம் முடியாது. ஏனெனில் கடந்த காலச் சரித்திரம் என நீங்கள் கற்றது உங்களை அப்படிப் பேச வைக்கிறது. அது சரித்திரமே அல்ல என்பது தெரியும்போது ஒருவேளை மாறலாம். இதிலே ஒரு அடிப்படை உண்மையும் இல்லை. இந்தக் காலத்தில் எவருக்கும் அடிப்படைக் கல்வியோ, பள்ளிக் கல்வியோ, பட்டக் கல்வியோ யாரும் இல்லை என மறுப்பதில்லை. கிராமப்புற மாணவர்கள் படிப்பில் சர்வதேச அளவுக்குத் தரமான படிப்பைப்பெறவேண்டும் என்பதற்காகவே "நவோதயா" பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். அந்தப்பள்ளிகள் வந்துவிட்டால் எந்த கிராமப்புற மாணவனும் "நீட்" என்ன சர்வதேசக் கல்வித் தேர்வுகளிலும் போட்டி இட முடியும். முதலில் அதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். நாவிதன் மகனோ, வண்ணான் மகனோ, தச்சன் மகனோ அவரவர் விரும்பிய கல்வியைக் கற்க முடியும். அவர்கள் கவைக்கு உதவாத வெறும் பட்டப்படிப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டாம் என்னும் எண்ணத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் மட்டும் நவோதயாப் பள்ளிகளை ஆதரித்தால் கிராமத்துச் சிறுவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறுவார்கள். இதைச் சிந்திக்க நாம் மறுப்பதோடு அல்லாமல் அவர்களைக் குலத் தொழிலைக் கற்கச் சொல்லுவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இது நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய துரோகம் என்பதை உணராமல் அவர்களை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு மேலும் மேலும் தாழ்ந்து போகும்படி செய்கிறோம். முதலில் இதை அந்த இளைஞர்கள் உணர வேண்டும்.
சிநேகிதி ஒகே, உங்களுக்கு இந்த ஒரு பார்ட்தான் சிக்கல்னா அதை விட்ருவோம். சரி, எல்லாரும் ஏன் வேதம் *மட்டுமே* படிக்காம, வேறு விஷயங்களை படிச்சு, வருமானத்துக்காக வேறு தொழில் செய்யணும்? ஏன் வேதபரிபாலனம் மட்டுமே போதும்னு இருக்கக் கூடாது? வண்ணானுக்கு பிஏ எம் ஏ சோறு போடாதுன்னா, பிராமணனுக்கு மட்டும் எப்படி எம்.பி.பி.எஸ் சோறு போடலாம்? எம்.பி.பி.எஸ் நாவிதர்களுக்குத்தானே சோறு போடணும்? இதான் என் கேள்வி. அதை விட்டுட்டு நீங்க எவ்ளோதான் சுத்தி சுத்தி அடிச்சாலும் உண்மை அப்படியே நிக்கும்.
கீதா இதிலே ஒரு உண்மையும் கிடையாது. சும்மா வளைச்சு வளைச்சுப் பேசினா அது உண்மை ஆகவும் ஆகாது. வேதம் படிச்சு எல்லோருமே வைதிகர்களாக அன்றும், இன்றும், என்றும் போனதில்லை. அதோடு முன்னெல்லாம் வேத பரிபாலனம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு, உணவுக்கு உத்தரவாதம் எல்லாம் இருந்தன. இப்போது அவை எதுவும் இல்லை. நான் சொல்பவர்களில் பலரும் வேத பரிபாலனம் மட்டுமே போதும் என இருப்பவர்களே! வண்ணான் ஆகட்டும், பிராமணன் ஆகட்டும், நாவிதன் ஆகட்டும், இந்தக் காலத்தில் பி.ஏ. எம்.ஏ. எல்லாம் வெறும் பட்டம் தான். சோறு போடாது. தொழில் கற்றுக்கொண்டால் சோறு போடும். அதைத் தான் அந்த வீடியோவில் சொல்லி இருக்கிறது. புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இங்கே யாரும், யாரையும் படிக்க வேண்டாம் என்றோ பட்டம் பெற வேண்டாம் என்றோ சொல்லவில்லை. அது மட்டும் போதாது என்றே சொல்லப்படுகிறது.
சிநேகிதி தொழிற் பயிற்சி வேணும்னு சொல்றதுக்கும், அவனவன் குலத்தொழில அவனவன் செய்ய வேண்டியதுதானேன்னு சொல்றதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தனக்கிருக்கும் ஆன்மீக அதிகாரத்தின் மமதையோடு இதை சொல்வதற்கும், வேலையில்லா இளைஞர்களின்பாற் கொண்ட உண்மையான அக்கறையோடு தொழிற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி பேசுவதற்குமான வேறுபாடு ஒருபோதும் உங்களுக்குப் புரியப் போவதில்லை
மேலும் இதற்கு மேல் இந்த விஷயத்தை உங்களோடு விவாதிப்பதில் பொருளிருப்பதாக நான் நினைக்கவில்லை. lets agree to disagree.
//ஆன்மீக அதிகாரத்தின் மமதையோடு//
கீதா நம் சிநேகிதி அந்த வீடியோவில் உள்ளவர் ஆன்மிக அதிகாரத்தின் மமதையோ
டு குலத்தொழிலைக் கற்கவேண்டும் என்று சொல்லி இருப்பதாகச் சொல்கிறார். அது எனக்குப் புரியவில்லை. முதலில் ஆன்மிக வாதிகளே வெகு குறைவு. ஆனால் இப்போதெல்லாம் பக்தியை ஆன்மிகம் எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். நான்கைந்து கோயில்கள் பற்றியும், வேறு சில பக்திக் கதைகளையும் பகிர்ந்து கொண்டால் "ஆன்மிக எழுத்தாளர்" பட்டம் எளிதாகக் கிடைத்து விடுகிறது. எனக்கும் அப்படி ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் ஆன்மிகத்துக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது! எங்கோ தொலைவில் இருப்பதைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு சரி.
கீதா முக்கியத்துவம் பற்றி பேசுவதற்குமான வேறுபாடு ஒருபோதும் உங்களுக்குப் புரியப் போவதில்லை.// இதைத் தான் முன்முடிவு என்றேன். என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? :)))) குலத் தொழில் பரம்பரையாக வருவது. ஆகவே அதைத் தன் தகப்பனிடமிருந்தோ, பாட்டன், மாமனிடமிருந்தோ எளிதாகக் கற்கலாம். அந்த நுணுக்கங்களைத் தங்கள் வாரிசுகளுக்கு பெரியவர்களும் கற்பிப்பார்கள். அதுவே வெளியிலிருந்து வந்த மாணவன் எனில் தொழில் கற்றுக் கொடுப்பார்களே தவிர்த்து நுணுக்கங்கள்? எதிர்பார்க்கவே முடியாது!
கீதா எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் ஏற்கவில்லை எனினும் மன வருத்தம் இல்லை.
கீதா சிற்பியின் மகனுக்குத் தான் சிற்பக்கலையின் நுணுக்கங்கள் தெரியும். பரம்பரையாக வந்த தொழில் ரகசியங்களைத் தங்கள் வாரிசுகளுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள். இது மனித மனத்தின் போக்கு. இதில் தவறும் காண முடியாது! நாதஸ்வரத்தை நாம் ஆதரிக்காமல் விட்டதால் எத்தனை நாதஸ்வர வித்வான்கள் தங்கள் தொழிலைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது தெரியுமா? இன்று அந்தத் தொழிலே நசிந்து வருகிறது. ஒரு நாதஸ்வர வித்வானிடம் பேசிப்பாருங்கள் ஏன் என்று! அவர் சொல்லுவார் காரணங்களை.
சிநேகிதி நான் பொங்கறேன், வளைச்சு வளைச்சு பேசறேன், அடிப்படையே எதுவுமில்லை, நான் பேசுவதில் உண்மையே இல்லை, நான் வரலாறு என்று கற்றிருப்பது எதுவுமே வரலாறு அல்ல.. இவ்வளவும் நீங்க எனக்கு கொடுத்த சர்டிஃபிகேட்ஸ். இதெல்லாம் என்னை எவ்வளவு தூரம் தெரிஞ்சுகிட்டப்புறம் நீங்க எடுத்த முடிவுகள்? சரி விடுங்க, இதோடேனும் நிப்பாட்டிடலாம்
கீதா உண்மையான சரித்திரம் கடந்த ஐம்பது வருடங்களில் யாருமே படித்தது இல்லை. நானும் சில வருடங்கள் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்திருக்கிறேன். முக்கியமாகத் தமிழ், வரலாறு, பூகோளப் பாடங்கள். அவற்றை எல்லாம் பார்த்துவிட்டுத் தான் சொல்கிறேன். கோபம் இல்லாமல் நிதானமாக யோசித்தால் புரியும். ஆதரிக்க பிராமணர்கள் இல்லாமல் அதுவும் கிராமங்களில் பிராமணர்களே அற்றுப் போனதால் கோயில் திருவிழாக்களில் இருந்து, அனைத்துக்கும் மூடுவிழா ஏற்பட்டதால் பல நாதஸ்வர வித்வான்கள் ஊரை விட்டுச் செல்லும்படியான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை மாயவரத்துக்கு அருகே உள்ள ஊரைச் சேர்ந்த ஓர் நாதஸ்வர வித்வான் எங்களிடம் சொன்னது. நாதஸ்வரக் கலை ஆதரிப்பவர்கள் இல்லாமல் இன்றைய திருமணங்களில் செண்டை மேளம் இடம் பெறுகின்றது. இது யார் குற்றம்?
கீதா பிராமண வெறுப்பு என்பது அடிப்படைக் கலாசாரத்தையே மாற்றி மக்களை எங்கோ கொண்டு போய்விட்டது. இறைவன் மனம் வைத்தால் எல்லாம் மாறலாம். இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தவறாகவோ உங்கள் மனம் புண்படும்படியோ சொல்லி இருந்தால் மன்னிக்கவும். என் கருத்து என்னோடு, உங்கள் கருத்து உங்களுக்கு! அதில் தலையிடும் எண்ணம் எனக்கு இல்லை. நன்றி என்னைப் பொறுத்துக் கொண்டதற்கு.
கீதா எங்க வீட்டிலேயே ஆயுர்வேத வைத்தியப் பரம்பரை. ஆனால் பின்னாட்களில் என் அப்பாவிடம் இருந்து ஆரம்பித்து அதைத் தொடராமல் விட்டதால் அது குறித்த ஓலைச்சுவடிகள், மருந்து செய்யும் முறைகள், உணவுக்குறிப்புகள் எனப் பலவும் தூக்கிக் கொடுத்து விட்டார்கள். இப்போ யாரிடம் இருக்கோ? குலத் தொழில் என்பதால் எங்களில் ஓரிருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். அது அந்தக் காலத்தில் யாருக்கும் புரியவில்லை. இதில் எங்களுக்கு எல்லாம் மிகவும் வருத்தம் தான். இயல்பாக ரத்தத்தில் ஊறி ஒரு விஷயம் வருவதற்கும், கற்றுக்கொண்டு வருவதற்கும் வேறுபாடு உண்டு என்பது என் கருத்து.
கீதா About carpentry it is a traditional work. The technical secrets are in the jenes. And it suits for the sthapathies also.
ரொம்பச் சரி. தச்சுத் தொழிலை விடவும் மருத்துவம் மிகவும் முக்கியமான தொழில் அல்லவா? பேசாமல் முதலில் அதை திரும்பவும் நாவிதர்கள் கையில் கொடுத்துவிடலாமா? அவர்களை மருத்துவர் என்றே அழைப்பதும் உண்டே? அவர்களுக்கே மருத்துவக் கல்லூரிகளில் 100% இடஒதுக்கீடு தந்து, அவர்களின் மரபுச் செல்வத்தை இந்த சமூகம் பயன்படுத்திக் கொள்ளட்டுமே...
கீதா திருமதி லக்ஷ்மி, நேற்று இணையம் சரிவர இயங்காததால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. நீங்கள் ஓர் முன் முடிவுடன் இருப்பதால் இது குறித்த விரிவான விளக்கம் தேவை இல்லை என்றே சென்றுவிட்டேன். அதோடு நாவிதராக இருந்தாலும் சரி, தச்சராக இருந்தாலும் சரி, அந்தத் தொழில் அவர்கள் பரம்பரையிலேயே தொடர்ந்து வரும். ஆகவே நாவிதரின் பிள்ளைக்கும் நல்லபடிப்புக் கொடுத்து மருத்துவமும் கற்பித்தால் நல்ல மருத்துவராகப் பரிமளிப்பார். இதைத் தான் முன்னர் ராஜாஜி கொண்டு வந்தார். காலையில் படிப்பு, மாலையில் தொழில் என. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ராஜாஜி அவமானப் பட்டது தான் மிச்சம். இது குறித்து நிறைய எழுதலாம் என்றாலும் அதற்கான இடம் இது இல்லை.
எங்கள் மாமனார் ஊரில் பல சித்த மருத்துவர்களும் நாவிதர்களே!
சிநேகிதி நான் சொல்ல வருவது அந்த வீடியோவில் உள்ளவர் சொல்வது போல் அவரவர் குலத்தொழிலை அவரவருக்கு மட்டுமே உரிமையாக்குவது பற்றி. அதாவது நாவிதர் தவிர்த்து மற்றவங்கல்லாம் ஏன் மருத்துவம் படிக்கணும்? இப்ப மேல ஒரு எடுத்துக்காட்டு சொல்லிருக்கீங்களே, அவங்கல்லாம் ஏன் வேதபாராயணம் மட்டுமே பண்ணக் கூடாது? எதுக்காக நாவிதர்களின் தொழிலில் தலையிட்டு ஸ்வதர்மத்தை விட்டு விலகணும்னு கேக்கறேன்
கீதா Lakshmi Balakrishnan இந்தக் கேள்வியை இப்போத் தான் பார்க்கிறேன். அந்தணர்களில் வேத அத்யயனம் செய்தவர்கள் தனி, போர்ப்பயிற்சி செய்து போர் வீரர்களாக இருந்தவர்கள் தனி,மருத்துவர்களாக இருந்தவர்கள் தனி, சாதாரணக் குடும்பம் நடத்துபவர்களாக இருந்தவர்கள் தனி எனப் பல்லவ ராஜா காலத்திலேயே, அதற்கும் முன்னால் இருந்தே இருந்திருக்கிறது. போர்ப் பயிற்சி செய்பவர்களை அமைச்சராகவும் ஆக்கி இருப்பார்கள். அவர்கள் அமாத்ய பிராமணர் எனப்படுவார்கள். ஆகவே அந்தணர்களில் எவரும் நாவிதர்களின் தொழிலில் எல்லாம் தலையிட்டு ஸ்வதர்மத்தை விட்டு விலகவெல்லாம் இல்லை. இதற்கான சான்றுகளை இப்போத் தேடி எடுப்பது கஷ்டம். ஆனால் விரைவில் தருகிறேன். ஆனால் சோழ நாட்டில் அப்படி ஓர் அமைச்சர் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்திருக்கிறார். பிரமராயன் என்றோ என்னமோ பெயர் வரும்.
திரு P L Bhargava எழுதிய India in the Vedic age என்ற நூலில் படித்த ஞாபகம்; பிராம்மணர்களில் போர்செய்யும் ஜாதியைச் சேர்ந்தோர், வாணிகம் செய்யும் ஜாதியைச் சேர்ந்தோர், வேலைசெய்யும் சாதியைச் சேர்ந்தோர் ஒரு காலத்தில் இணைந்ததாகப் படித்த நினைவு. அதே போல் வழிவழியாக எழுத்தாணி பிடிக்கும் ஜாதிகளைச் சேர்ந்தோர் க்ஷத்திரியர்களில் சேர்ந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன.
அந்தக்காலங்களிலும் பிராமணர்கள் வெறும் வேத அத்யயனத்தோடு நிறுத்திக் கொண்டதில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டும் வேதம் கற்றுக்கொடுத்து வந்தார்கள். மற்றவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டே வந்தார்கள். வணிகம் கூடச் செய்திருக்கின்றனர். முதலில் ஸ்வதர்மம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதம் கற்றுக் கொண்டு வேத அத்யயனம் செய்து கொண்டு ஒதுங்கி இருப்பது ஸ்வதர்மமே அல்ல. அவனுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும். அது கற்பித்தலாகவோ, மருத்துவம் பார்ப்பதாகவோ, அல்லது வேறு முறையில் போர்ப்பயிற்சி கொடுப்பதாகவோ கூட இருக்கலாம். இப்போதும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர் தமிழ்நாட்டு பிராமணர்கள்.
குலத்தொழிலைக் கற்பதோ, கற்பிப்பதோ, கற்கச் சொல்லுவதோ அவமானத்துக்கு உரிய விஷயமாக நினைப்பதாலேயே இத்தகைய தவறான புரிதல்கள்!
போடலாமா வேண்டாமா என யோசித்து யோசித்து 3 நாட்கள் ட்ராஃப்ட் மோடிலேயே வைத்திருந்து மிகுந்த யோசனைக்குப் பின்னர் பகிர்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.