இது ஆடி வெள்ளீக்குப் போட்ட மாவிளக்கு
எச்சரிக்கை
Have a great day.
Monday, September 18, 2023
வந்தார், வந்தார், வந்தாரே விநாயகர்!
இது ஆடி வெள்ளீக்குப் போட்ட மாவிளக்கு
Sunday, September 17, 2023
எங்கே தப்பு?
குஞ்சுலு ஊருக்குப் போனதில் இருந்து ஒரே நெருக்கடி. -ஹி-ஹி, அதால் இல்லை. உறவினர் வருகை/திரும்புதல் என. உட்கார நேரம் இல்லை. சென்ற வாரம் ஒரு கல்யாணம். பையருக்கு 26 வயது/பெண்ணூக்கும் கிட்டத்தட்ட 2,3 வயதே கம்மி. பார்க்கவே அழகாக இருந்தது. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே பெரிய திருமண அரங்கான அரங்கன் அரங்கத்தில் கல்யாணம். உண்மையிலேயே பெரிய திருமண மண்டபம். மாமியார் வழி சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆகவே நம்ம வீடு கல்யாண வீடு மாதிரி ஆகி விட்டது. எல்லோரும் வருவதும் போவதுமாக இருந்தது. உட்கார நேரமில்லை. பின்னர் அவசரமான ஒரு சின்னப் பயணமாகச் சென்னைக்குப் போயிட்டு புதன்கிழமை திரும்பிட்டோம். மறூநாள் அமாவாசை வேறே! மூச்சு விட முடியலை.
செப்டெம்பர் 11 ஆம் தேதி குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாள். அன்னிக்குக் குஞ்சுலுவைப் பார்த்து ஆசிகள் சொன்னோம். குதித்துக் கொண்டு இருந்தது. அதோட அன்னிக்குத் தான் பாரதியின் நினைவு நாள். கணீனியைத் திறக்கவே முடியலை. விடாமல் பதிவு போட்டிருக்கேன். ஆனால் இந்த வருஷம் முடியலை!அன்னிக்குப் பூரா மனசில் பாரதியின் நினைவுப் பதிவு போடாதது முள்ளாகக் குத்தியது. என்ன செய்ய? மறூநாள் அதிகாலை சென்னை கிளம்பணூமே! உறவினரையும் கவனித்துக் கொண்டே கிளம்பவும் ஏற்பாடுகள். முன்னெல்லாம் தினம் இரு பதிவுகள் கூடப் போட்டிருக்கேன். வெளீயே எங்காவது போனால் நம்பிக்கையான நட்பிடம் கடவுச் சொல்லைக் கொடுத்துப் பதிவுகள் போடச் சொன்னதும் உண்டு. பின்னர் ஷெட்யூல் செய்து வைக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போ 2016 ஆம் ஆண்டில் இருந்தே சுணக்கம். இப்போ 2021க்குப் பின்னர் ரொம்பவே மோசம். பதிவு போட்டாலே பெரிய விஷயம் என இருக்கு. இந்த வருஷம் அதை விடவே மோசம். இதுவும் ஒரு நேரம். கடந்து போகும் என நினைக்கிறேன்.
பல வேலைகள் முடிக்காமல் கிடக்கின்றன. வயதோ ஆகிறது. எதை எடுத்துச் செய்வது? எல்லாமே முக்கியமானவை தான். இனியாவது உட்கார முடியுமா? உட்கார்ந்தாலும் வேலைகள் முடிக்க முடியுமா? தெரியலை. என்னமோ நாட்கள் பறக்கின்றன. ஆனால் வெட்டியாக! மனது ஒரு பக்கம் குத்தினாலும் நேரம் வாய்ப்பது கஷ்டமாக இருக்கே! ஏன் இப்படி? எங்கே தப்பு? உட்கார்ந்து யோசிச்சாலும் புரியலை. கடவுள் தான் சரி பண்ணணூம்.