எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 07, 2006

கலைந்த சுருதி

சுருதி கலைந்ததா? என்றால் என்னைப் பொறுத்தவரை ஆம் என்றுதான் சொல்வேன். என்ன செய்யறது? பழைய மாதிரி எதுவுமே இல்லை. இப்போ எல்லாமே மாறி இருக்கு. என்னைப் பொறுத்த வரை எப்பவும் போல் தான் இருக்கேன். ஆனாலும் என்னால் உணர முடிகிறது மாற்றங்களை. இது எதனால்? எப்போ நேர்ந்தது? எப்படி நேர்ந்தது? தெரியாது. எங்கோ எதிலோ ஒரு இழை மாறி இருக்கிறது. அல்லது ஒரு சின்னத் தவறு நம்மை அறியாமல் நேர்ந்திருக்க வேண்டும். புரியாமல் இருக்கலாம் அல்லது புரிந்து கொண்டு இனிமேல் தொடரவேண்டாம் என்றும் இருக்கலாம். எல்லாம் நேரத்தைப் பொறுத்துத் தான் அமையும்.

நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தது தற்செயல்னு எல்லாம் சொல்ல மாட்டேன். சுமார் 2 வருடங்களாகவே இதைப் பத்தி ஓரளவு தெரியும். விகடனில் "கற்றதும் பெற்றதும்" எழுதி வந்த திரு சுஜாதா இங்கே நடக்கும் விவாதங்களைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார். "பொன்னியின் செல்வன்" குழுவைப் பற்றிய அறிமுகம் "கல்கி" பத்திரிகை வாயிலாகக் கிடைத்தது. கல்கியிலேயே திரு இரா.முருகன் எழுதி வந்த வலை உலக விமரிசனங்களையும் படித்து வந்திருக்கிறேன். இப்போவும் வந்து கொண்டிருந்தது. சில வாரங்களாய் வருவது இல்லை. அப்போவெல்லாம் கணினி வாங்குவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. அப்புறம் கணினி வாங்கி கிட்டத் தட்ட ஒரு வருஷம் ஆகப் போகும் சமயம் தான் திடீரென என் பெயரில் ப்ளாக் ஆரம்பித்து வைத்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தான் எழுத முடிந்தது. அப்புறம் தமிழில் எழுத டோண்டு சாரில் இருந்து, வெ.வ.வா. ஜீவா, சூப்பர் சுப்ரா , மஞ்சூர் ராஜா வரை உதவ தமிழ் வர ஆரம்பித்தது.

இதெல்லாம் ஒரு பதிவா? மொக்கை என்று அம்பி சொன்னாலும் அவை எனக்கு எரிச்சல் மூட்டுவதற்கு வேண்டுமென்று சொல்வது என்று புரிந்து கொள்வேன். அம்பி இப்போ தங்கமணி பற்றிய கனவுகளில் மூழ்கி இருப்பதால்தான் எதுவும் எழுத முடியவில்லை. ஆஃபீஸ் வேலை என்பதெல்லாம் சும்மா, உள உளாக்கட்டிக்கு. அப்புறமும் அவர் தங்கமணியைக் கேட்டுக் கொள்ள வேண்டும், எழுத அனுமதி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தங்கமணியும் எழுத ஆரம்பித்தால் பிரச்னை இல்லை. என்னைப் பொறுத்த வரை நான் எழுதுவது எல்லாமே கிட்டத் தட்ட என் கணவருக்குத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் பின்னூட்டங்களில் இருந்து எல்லாமே அவரிடம் சொல்லுவேன். சில விஷயங்களை எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்று பேசித் தெரிந்து கொள்வேன். இந்த வலை உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும், அவற்றுக்கு நான் அளிக்கும் பின்னூட்டங்களும், எனக்கு வரும் பின்னூட்டங்களும், இ-மற்றும் எறும்பு மெயில்களும் காட்டுவேன். ரொம்பவே அபூர்வமாய்ச் சிலசமயம் நான் யாரிடமாவது "சாட்"டிக் கொண்டிருக்கும்போதோ அல்லது ஏதாவது எழுதும்போதோ கிட்டே உட்கார்ந்து பார்ப்பார். அதன் மூலம் என்னோட வலை உலக நண்பர்கள் பற்றிய அறிமுகமும் கொடுத்திருக்கிறேன். என்ன, பேர் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார். மற்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி அறிமுகம் கொடுத்திருப்பதால் அதை வைத்துப் புரிந்து கொள்வார். இப்போ லேட்டஸ்டா வந்திருக்கிற "உமாகோபு" மற்றும் SKMல் இருந்து எல்லாரையும் பற்றிச் சொல்லி இருக்கிறேன். உமாகோபுவிற்கு அறிமுகம் "மைலாப்பூர் மாமி" என்றும் SKMற்கு அறிமுகம் யு.எஸ். மாமி என்றும் (ஹிஹிஹி), சொன்னால் புரிந்து கொள்வார். கூடவே எஸ்கேஎம் பெண் இந்தியாவில் படிப்பதையும் நினைவு படுத்த வேண்டும். இதனால் என்ன பிரயோஜனம் என்றால் என்னைத் தேடி வரும் நண்பர்களுடன் அவரும் தடங்கல் இல்லாமல் பழக முடியும் இல்லையா? இல்லாவிட்டால் அவர் ஏதோ உலகிலும், நான் ஏதோ உலகிலும் தனித்து இருக்க வேண்டி இருக்கும்.

சுருதியைக் கூட்ட முயன்றிருக்கிறேன்.சரியா இருக்கா இல்லையா? நீங்க எல்லாம் தான் சொல்லணும், அப்புறம் இன்னொரு விஷயம் அம்பி இனிமேல் அடிக்கடி சென்னை வர நேரலாம். ஒவ்வொரு முறையும் என்னோடு பேச இனிமேல் யோசிப்பார் என்று நினைக்கிறேன். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான் இல்லையா அம்பி? இது கொஞ்சம் திடீர்னு தான் முடிக்கிறேன். திரும்ப வந்தாலும் வரும். பார்க்கலாம், வர்ட்டா?

6 comments:

  1. // ஆஃபீஸ் வேலை என்பதெல்லாம் சும்மா, உள உளாக்கட்டிக்கு.//

    மச்சான், உண்மையா...

    //சுருதியைக் கூட்ட முயன்றிருக்கிறேன்.சரியா இருக்கா இல்லையா? நீங்க எல்லாம் தான் சொல்லணும்,//

    தலைவியே ..என்ன இது சுருதி குறைந்தது அப்படின்னு.. அட..எங்கேயுமே எந்த தொய்வுமே இல்லியே..

    சில சமயம் உடைநிலை காரணமா இப்படி தோன்றுவது உண்டு மேடம்..

    Take Care

    ReplyDelete
  2. NArayana! Narayana! nu post title vechu irukalaam! :)

    sruthi ellam ozhunga thaan irukku, pakka vathyam thaan innum soodu pudikalai. office work mudiyattum,
    aprom paarunga ambiyoda speeda! :)

    ReplyDelete
  3. எழுதும்போது திடீர்னு சந்தேகம், எல்லாருக்கும் புரியுமான்னு, அதான் பாதிலே நிறுத்தினேன். ஆனால், என்ன ஆச்சரியம், என்னோட நண்பர் வட்டம் என்ன, என்னைப் புரிஞ்சுக்க முடியாத அளவு இல்லைனு புரிய வச்சுட்டாங்க, எல்லாருக்கும் ரொம்பவே நன்றி.

    ReplyDelete
  4. பக்கத்திலே தானே ஆன்மீகப் பயணம்னு விழுந்து, விழுந்து எழுதறேன். யாராவது படிச்சா என்ன? இந்த அழகிலே இந்தப் பதிவை மொக்கைனு சொல்லிட்டுப் பின்னூட்டம் கொடுக்கறதிலே குறைச்சல் இல்லை. ஒரு பிரயாணம் பற்றிய குறிப்புக்கள் என்ற அளவிலாவது யாருக்கும் தெரிஞ்சுக்கற ஆசை கூட இல்லையே? நற நற நற நற நற நற

    ReplyDelete
  5. தமிழ் மணத்திலே சேர்க்கப் போனால் அது நீ புதுசா ஒண்ணுமே எழுதலைன்னு சொல்லுது, என்னத்தைச் சொல்ல, ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்து ஆள் தேட வேண்டி இருக்கு, எல்லாம் நேரம். :D

    ReplyDelete
  6. romba azagaa ezudareenga. continue writing. meendum varugiraen

    ReplyDelete