எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 04, 2016

பத்து வருடங்கள் , 2000 பதிவுகள்!

இந்தப் படம் தற்செயலாக என்னுடைய ஆல்பத்தில் இருந்து கிடைச்சது. சமீபத்தில் எடுத்தது தான்!  எங்கே கையிலிருந்து காமிராவைப் பிடுங்கிடுமோனு கொஞ்சம் கவலையாகவே இருந்தது. இன்னும் நிறையப் பேர் கூட்டமாக இருந்தாங்க. ஆனால் அங்கே போய் எடுக்கும் அளவுக்கு தைரியம் வரலை! மேலே பாய்ஞ்சதுன்னா! :)


இணையத்தில் எழுத ஆரம்பிச்சுப் பத்து  வருடங்கள் ஆகிவிட்டன. அநேகமாக இந்த வலைப்பக்கம் எழுதாமல் இருந்தது இல்லை. இப்போது ஒரு ஆறு மாதங்களாகத் தான் அதிகம் எழுதுவதில்லை. குறைத்துக் கொண்டிருக்கிறேன். சிறு வயது நினைவுகள் என்றால் நிறையவே சொல்லலாம். ஆனாலும் சும்மா நம்மைப் பற்றியே எத்தனை நாட்கள் தான் எழுதுவது? பொதுவான விஷயங்கள் குறித்து எழுதலாம். பல விஷயங்களும் எழுத ஆரம்பித்துப் பாதியிலேயே நிற்கின்றன! தொடர முடியாமல் உள்ளது.

நான் எழுத ஆரம்பிச்சபோது என்னுடன் ஆரம்பித்தவர்களில் நிறையப் பேர் இப்பொ எழுதுவதில்லை. அதில் முக்கியமாக அம்பி, கைப்புள்ள, நாகை சிவா, மதுரை ராம், மு.கார்த்திக் என்னும் கார்த்திகேயன்,  வேதாள் என நான் அன்புடன் அழைக்கும் வேதா ஆகியோர் முக்கியமானவர்கள். இதில் அம்பி மற்றப் பதிவர்களோடு சேர்ந்து ப்ளாக் யூனியன் எல்லாம் ஆரம்பிச்சார். இன்று அந்த வலைப்பக்கமும் யாராலும் எதுவும் எழுதப்படாமல் இருக்கிறது. திரு டிஆர்சி எனப்படும் ராமசாமி சந்திரசேகரன் அவர்கள் எனக்குக் கொஞ்சம் முன்னால் கௌசிகம் என்னும் பெயரில் வலைப்பக்கம் ஆரம்பித்துச் சில மாதங்கள் எழுதாமல் அப்புறம் தொடர்ந்து எழுதிவிட்டு இப்போது நிறுத்திவிட்டார். ஆனால் முகநூலில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.  அம்பியை முகநூலில் கூடக் காணோம். அல்லது எனக்கு அவர் முகநூல் ஐடி தெரியலைனு நினைக்கிறேன். கைப்புள்ளனு ஒருத்தர் முகநூலில் இருப்பதாகத் தெரிகிறது. அவரும் நம்ம கைப்புள்ளயும் ஒருவரா என்பதில் சந்தேகம்!

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அநேகமா எல்லா இளைஞர்களும் எழுதிக் கொண்டிருந்தனர். இப்போது அந்த வலைப்பக்கம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறதானு தெரியலை. முன்னெல்லாம் நண்பர்களில் யாரேனும் ஒருவர் என் பிறந்த நாளைக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் பதிவு போட்டுப் பல்லி மிட்டாய் கொடுப்பாங்க! இப்போ அதுவும் இல்லை! :) மேலே  சொன்ன இளைஞர்கள் அனைவரும் திருமண பந்தத்தில் ஈடுபட்டதும் பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். இதில் கைப்புள்ள கொஞ்ச காலம் எப்படியோ ஓட்டினார். அப்புறம் முடியவில்லை. அம்பியும் அமெரிக்கா செல்லும்வரை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்புறம் ஆளே காணோம். எப்போதானும் ஜி+ இல் வருவதோடு சரி!

சாதாரணமாகப் பெண்கள் தான் திருமணம் ஆனதும் பழைய நட்பைத் தொடர முடியாமல் இருக்கும். ஆனால் இணையத்தைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பின்னரே இவர்கள் எல்லாம் இணையத்திலிருந்து விலகி விட்டனர். இதில் வேதா மட்டும் அவ்வப்போது முகநூலில் வருகிறார். என் ஒரு சில பதிவுகளுக்கு சமீப காலமாகக் கருத்தும் சொல்லி வருகிறார். தொடர்ந்து பத்து வருஷங்களாக எழுதி வருவது நானும், ரேவதி நரசிம்மனும் தான் என்று நினைக்கிறேன். துளசி கோபால், நுனிப்புல் உஷா போன்ற மற்றவர்களெல்லாம் எங்களுக்கு முன்னால் இருந்தே எழுத ஆரம்பிச்சுட்டாங்க. ரேவதி கூட எனக்கு முன்னால் இருந்தே இணையத்தில் இருந்து வருகிறார்.  கிட்டத்தட்ட 2160 பதிவுகள் எழுதி இருந்தாலும் அதில் மீள் பதிவுகளும் சில இருக்கின்றன. உபயோகமான பதிவுகள் என்ற கணக்கில் பார்த்தால் 200க்குள் தான் இருக்கும். நம்ம எழுத்தின் தரம் அப்படி! :)

என்னவோ எழுத நினைத்து என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போ சமீபகாலமாக முகநூல் மூலம் மேலும் பல புதிய சிநேகிதர்கள் ஏற்பட்டிருக்கின்றனர்.  பதிவு எழுதிக் கொண்டிருந்த பலரும் முகநூலில் அரட்டை அடிப்பதில் மூழ்கி உள்ளனர். அதில் என்ன ருசி இருக்குனு இன்னமும் எனக்குப் பிடிபடவில்லை. நானும் அவ்வப்போது போனாலும் எல்லாப் பதிவுகளையும் எல்லார் பதிவுகளையும் பார்ப்பதில்லை; படிப்பதில்லை! குறிப்பாகத் தான் கிடைக்கின்றன.  இணையமே வேண்டாம்னு மூடி வைச்சுட்டும் இருந்துடுவேன். அப்படியும் இருப்பது உண்டு. அந்த மாதிரித் தான் இப்போப் பதிவுகளைக் குறைச்சிருக்கிறதும்! கொஞ்ச நாட்கள் தான் சும்மா இருந்து பார்ப்போமே! என்ன ஆயிடும் என்று தான்! ஆனாலும் அவ்வப்போது மடல்களுக்குப் பதில் சொல்லவோ ஏதோ ஒரு வேளையானும் முகநூல் பார்க்கவோ இணையத்துக்கு வருகிறேன். அதையும் நிறுத்த முடியுமானு பார்க்கணும்! :)

63 comments:

  1. வாவ்!!!! 2000பதிவுகள் நீங்கமட்டும்தான்!!! இனியபாராட்டுகள்!!!

    ReplyDelete
    Replies
    1. வெளியீடு கண்டவை 2160 அதில் நூற்றுக்கும் மேல் மொக்கைப் பதிவுகள் என்பதால் உத்தேசமாக 2000 பதிவுகள்னு சொன்னேன்! :) ட்ராஃப்ட் மோடிலேயே பல பதிவுகள் நூற்றுக்கணக்கில் முடிக்காமல் கிடக்கின்றன! :)

      Delete
    2. பாராட்டுகளுக்கு வேதா(ள்), துளசி இருவருக்கும் நன்றி.

      Delete
    3. ட்ராப்பில் 100 பதிவுகள் கிடக்கின்றதாஆஆஆஆஆஆஆஆஆஆஆ ?

      Delete
    4. ஹிஹிஹி, ஆமாம் கில்லர்ஜி! ஒரு சில விஷயங்கள் சர்ச்சைக்கு உரியதாக இருக்கும். முக்கியமாய்ப் பெண்கள் முன்னேற்றம், அவர்கள் நடை, உடை, பாவனை குறித்து எழுதியவை!திருமணம் குறித்தும், திருமணச் சடங்குகள் குறித்தும் எழுதியவற்றில் ஒரு சில பதிவுகள் தொடரவே இல்லை! இன்னும் சில! :) திடீர்னு தோணினா வெளியிடலாமேனு ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கு!

      Delete
  2. வாங்க வேதா(ள்), அந்த நாளும் வந்திடாதோனு பாட வேண்டியது தான்! :)

    ReplyDelete
  3. நிச்சயம் சாதனைதான். அதிலும் குறிப்பாக கண்ணன் பற்றிய பதிவுகள் பக்கம், ஶ்ரீரங்கம் பதிவுகள், சமையல் பதிவுகள் என்று பல்சுவையிலும் பதிவுகள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அதைத் தவிரவும் இருக்கே! எல்லாக் கணக்கும் எடுத்துக்கலை! கணக்கில் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப வீக்! :)

      Delete
    2. கண்ணன் பதிவுகள் ஒவ்வொரு பாகமும் குறைந்த பட்சமாக 200இல் இருந்து 300க்குள் இருக்கலாம். :)

      Delete
  4. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்// இவங்க இப்ப வாலிபர்களா இல்லையா? இல்லை வருத்தப்படாத ந்னு அடை மொழி கொடுத்துக்க முடியலியா? :-))))

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் மாமாவா ஆயிட்டாங்க! குடும்பப் பொறுப்பு அதிகரிச்சிருக்கும். கைப்புள்ளக்கு 2 பெண்கள் பிறந்தாச்சு! ஸ்கூல்லே சேர்த்துக் கொண்டுவிட்டுக் கூட்டிவரவே நேரம் சரியா இருக்கும். மத்தவங்க பத்தித் தெரியலை! :)

      Delete
    2. ஹிஹிஹி,இப்போ வருத்தப்படும் வாலிபர் சங்கம்னு வைச்சுப்பாங்களோ என்னமோ! :)

      Delete
    3. நேத்திக்குப் பல வருடங்கள் கழிச்சுக் கைப்புள்ளயை முகநூலில் சந்தித்தேன். :) அம்பத்தூரிலேயே அவர் பெண் எடுத்திருந்தும் நேரில் பார்த்ததே இல்லை! :) இப்போ லண்டனில் இருக்காராம்!

      Delete
  5. எதையோ எழுத வந்துட்டு எதையோ எழுதறீங்களே? // நூற்றுக்கும் மேல் மொக்கைப் பதிவுகள் என்பதால் உத்தேசமாக 2000 பதிவுகள்னு //
    2000 மொக்கைப் பதிவுகள் என்பதால் உத்தேசமாக நூறு பதிவுகள்னு ... இப்படித்தானே இருக்கணும்? :P

    ReplyDelete
    Replies
    1. //உபயோகமான பதிவுகள் என்ற கணக்கில் பார்த்தால் 200க்குள் தான் இருக்கும். நம்ம எழுத்தின் தரம் அப்படி! :)//

      பாருங்க தம்பி, இங்கே சொல்லி இருக்கேனே நானே! சரியாப் படிக்கணும்! :)

      Delete
  6. Congrats Geetha Mami. I really miss those Tom & Jerry fights between you and ambi.....:)) BTW All your posts are good. I read all your posts.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுபாஷிணி! உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவால் தான் ஏதோ ஓட்டுகிறேன். உண்மையில் அம்பி இல்லாமல் பதிவுலகம் சுவாரசியம் இல்லாமல் தான் இருக்கு! :)

      Delete
  7. வாழ்த்துகள் மேலும் தொடந்து எழுத எமது மனமார்ந்த வாழ்த்துகள்
    பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தமை நன்று

    இந்த வருட தொடக்க முதலே பல நல்ல பதிவர்கள் முகநூலில் இறங்கி விட்டார்கள் மேலும் பல பதிவர்கள் வாட்ஸ்-அப்பில் காலத்தை கடத்துகின்றார்கள் என்ன செய்வது இது அவர்களின் சுதந்திரம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வாட்ஸப்பிலும் முகநூலிலும் அப்படி என்ன இருக்குனு எனக்குப் புரியறதில்லை! வாட்ஸப் எங்க குழந்தைகள் தொடர்பு கொள்ள மட்டும் பயன்படுத்துகிறோம்.

      Delete
  8. பல விஷயங்களும் எழுத ஆரம்பித்துப் பாதியிலேயே நிற்கின்றன! தொடர முடியாமல் உள்ளது.

    ~ வாஸ்தவம். யாராவது படிச்ச் எழுதத்தோணும்.

    ReplyDelete
    Replies
    1. படிப்பாங்க, கருத்துச் சொல்வாங்க. அநாவசியக் கருத்து மோதல்கள் ஏற்படும்! அதை எல்லாம் தவிர்க்கத் தான். முக்கியமாக் கடவுள் குறித்த சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், திருமண பந்தம் இவை குறித்த என்னோட கருத்துகள்! :) ஆகையால் தொடர முடியவில்லை! :)

      Delete
  9. ரத்னேஷ் ஒரு பதிவர் இருந்தார். உங்க மதுரைக்காரர் தான். ஞாபகம் இருக்கார். உருப்படியான எழுத்துக்குச் சொந்தக்காரர்.

    இன்னொரு மதுரைக்காரர் குமரன். நாலைஞ்சு தளங்கள் கொண்டிருந்தார். எஎவ்வளவு நல்லா எழுதிண்டிருந்தார்? தமிழ் ஆர்வமும் அதிகம். இப்பொழுது எழுதறதில்லையா?..

    அப்புறம் இலவச கொத்தனார், டி.ஆர்.எஸ்., கண்ணபிரான்-- நிறைய பேர். இவங்கள்லே யாருமே இப்போ எழுதறதில்லை போலிருக்கு.

    டோண்டு ராகவனை மறக்கவே முடியாது. இப்பொழுதும் அவர் பதிவுகளை அப்பப்போ படிப்பேன். எழுதியவர் இப்போ இல்லேனாலும் அவருக்காக அவர் எழுதின பதிவுகள் வாழும். அதற்கு டோண்டு ராகவன் நிதரசன உண்மையாய் அவர் பதிவுகளில் வாழ்கிறார்.

    2000 தானா?.. எனக்கென்னவோ இன்னும் நீங்கள் நிறைய எழுதியிருப்பீர்கள் என்று எண்ணம். ஏனென்றால் ஒரு காலத்தில் தினத்திற்கொரு பதிவு போட்டுக் கொண்டிருந்தீர்கள். மொக்கையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். உருப்படியாக இருப்பவற்றை தலைப்பு வாரியா தொகுக்க மடியுமா பாருங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரத்னேஷைத் தெரியாமலா! நன்றாகவே தெரியும்! இப்போதெல்லாம் அவர் எழுதுவதில்லை என்பதும் தெரியும். கேஆர்எஸ் கண்ணபிரான் ரவிசங்கர் அவ்வப்போது ஒரு வருடத்துக்கு ஒரு முறை போடுகிறார். ஜி.ராகவன் எனப்படும் ஜிராவை துளசியின் வலைப்பக்கங்களில் பின்னூட்டங்களில் பார்ப்பேன். குமரன் எழுதுவதில்லை போல! அவருடன் எழுதி வந்த சிவமுருகனையும் ஆளையே காணோம்! :) இப்படிப் பலரும் இப்போது எழுதுவதில்லை! இ.கொ. ட்விட்டரில் மூழ்கி விட்டார்! எப்போதாவது பதிவு போடுகிறார். என்னோட ஏதேனும் ஒரு பதிவுக்கு வந்து கமென்டுவார், இல்லைனா முகநூலில் வம்புக்கு இழுப்பார்! :) இப்போதெல்லாம் அதுவும் குறைந்து விட்டது. :)

      Delete
  10. அசுர சாதனைதான் இல்லை இல்லை பகீரதன் சாதனை என்று சொல்லி இருக்க வேண்டும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார். வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அட? தோழி! எப்போவோ நான் ஹூஸ்டனில் இருக்கிறச்சே கூகிளில் சாட் பண்ணினது தான். உங்க பதிவுகளைத் தவறாது படித்து வந்தேன். இப்போ நீங்க மருத்துவத் தொழிலில் மும்முரமாயிட்டீங்க போல! ஆளையே காணோம்! வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
    2. ஏன் எடுத்துட்டீங்கனு தெரியலை! போகட்டும்! :( தப்பாய்ப் போட்டுட்டீங்களோ? நீங்க சாட்டுக்கு அழைத்தபோது கூகிள் ஹாங் அவுட்டிலே நான் அப்போது சமையல் வேலையில் மும்முரம். அதனால் பார்க்கவில்லை! :)

      Delete
  12. பத்து வருடங்கள் 2000 பதிவுகள் - பெரிய சிறப்பான சாதனை. இன்னும் பல வருடங்களக்கு இதேபோல நிறைய பதிவுகள் எழுத நல்வாழ்த்துகள்.
    இணையத்திற்கு வராமல் இருக்கவேண்டாம். வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுத்தான் வருகிறோம். நேரத்தை வீணடிப்பதில்லை. இது ஒரு நல்ல பொழுதுபோக்கு. நாம் எழுதுவது நமக்காக மட்டுமே என்று நினைத்துக் கொள்ளுங்கள். எனக்குக்கூட சிலநாட்கள் சோர்வாக இருக்கும். என்னத்த எழுதி....என்னத்த பண்ண என்று. புதிதாக ஏதாவது படித்தாலோ, கேட்டாலோ, பார்த்தாலோ உடனே எழுதலாமே என்று உட்கார்ந்துவிடுவேன்.
    என்பணி வலைப்பதிவு செய்வது என்று நினைத்துக் கொண்டு எழுதுங்கள்.
    நீங்கள் எழுதியதைப் படித்தபின் தான் நான் என் வலைப்பதிவை ஆரம்பித்து டிசம்பரில் 5 ஆண்டுகளை முடித்தது பற்றி எழுதவேயில்லை என்று உரைத்தது. டிசம்பரில் எழுதும் நிலையிலும் இல்லை.

    மனமார்ந்த பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள்.


    ReplyDelete
    Replies
    1. 2005 ஆம் வருடமே எழுத ஆரம்பிச்சது தான்! ஆனால் 2006 இல் தான் சூடு பிடிச்சது. ஆகையால் 2006 ஏப்ரல் மாதத்தைத் தான் கொண்டாடுவேன். இம்முறை ஒரு சில சம்பவங்கள், மனோநிலை ஆகியவற்றால் ஏப்ரலில் இதைக் குறித்துச் சொல்லவில்லை! இப்போத் தான் முகநூலில் மார்க் பழைய பதிவு ஒன்றை நினைவூட்டும்போது பத்து வருடங்கள் நிறைந்து விட்டன என்பது நினைவில் வந்தது. இணையம் வராமல் இருப்பதில்லை. வீட்டு வேலைக்குத் தான் முன்னுரிமையும் கூட! என்றாலும் பதிவுகள் எழுதுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். :)

      Delete
  13. ஒரு பதிவு எழுதுவது என்பது சாதாரணமல்ல. அந்த நிலையில் நீங்கள் 2000 பதிவுகள் எழுதியதறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து ஒரு காரியத்தை ஈடுபாட்டோடு செய்வது சற்றே சிரமம். அந்நிலையில் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா, எல்லோரும் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்ற பதிவுகளை எழுதிட்டு அப்புறமா விட்டுடறாங்கனு நினைக்கிறேன். எனக்கு என்னமோ அப்படி இருக்கத் தோணலை. கண்டது, கேட்டது, பார்த்தது, அனுபவிச்சதுனு பகிர்கிறேன். அதிலே விஷயம் இருக்கோ இல்லையோ தெரியாது! எழுதுவதோடு என் கடமை முடிஞ்சது! :) எப்போவானும் பொருள் பொதிந்த பதிவுகளைப் போடுவது உண்டு! ஆனாலும் அதற்கும் ரொம்பத் தயக்கமா இருக்கும். ஏனெனில் கடுமையான வார்த்தைப் பிரயோகம் வந்துடுமோனு தான்! :) கூடியவரை கடுமையாக எழுதுவதில்லை. எளிமையான வார்த்தைகளை மட்டுமே போட்டு எழுதுகிறேன். ரொம்பவே உயர்வான இலக்கியத் தரத்தில் எழுதுவது கூடாது என்றும் தவிர்த்து வருகிறேன். என் போன்ற சாமானியர்களும் படிக்கும் விதத்திலேயே அமைந்திருக்கும்.

      Delete
  14. வாழ்த்துகள்!!! இனியபாராட்டுகள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்மனம். வருகைக்கு நன்றி.

      Delete
  15. அன்பு கீதா, மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    மனவலிமை இருப்பதால் உடல் நோவுகளையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு எழுதி இருக்கிறீர்கள்.

    எவ்வளவு பெரிய சாதனை. அனைவரையும் நேசிக்கும் தன்மை.
    இது. இன்றுபோல் எப்பவும் இருக்கணும்.
    நான் சுணங்கிவிடுகிறேன். மனம் நிறைய எழுத ஆசை இருந்தாலும்
    முடிவதில்லை.
    நானும் இருக்கிறேன் என்பதற்காக முக நூல் வருகிறேன்.

    பதிவுகள் எழுதும்போது நீண்டு விடுகின்றன. பார்க்கலாம் போகிறபடி போகட்டும்.

    எண்ணிய எண்ணங்கள் ஈடேற வேண்டி உங்கள் கண்ணனிடமே சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி. முகநூலிலும் உங்கள் பதிவைப் பார்த்தேன். முடிஞ்சப்போ எழுதுங்க! நானும் அவ்வப்போது தான் எழுதுகிறேன் இப்போதெல்லாம். பெரும்பாலும் குறைவாகவே எழுதுகிறேன். கண்ணனைத் தவிர்த்து! :)

      Delete
  16. பத்து வருடங்கள் . இரண்டாயிரம் பதிவுகள். மிகப் பெரிய சாதனை.
    உங்கள் சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் கீதா மேடம். இன்னும் பல வருடங்கள் நீங்கள் தொடர்ந்து எழுதி வர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜலக்ஷ்மி, உங்களை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. விரைவில் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete
  17. பத்து வருடங்கள் சாதனைதான், வாழ்த்துக்கள். பதிவுகளை முடிந்த போது எழுதுங்கள்.
    உங்களால் எழுதாமல் இருக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! பதிவுகள் எழுதாமலும் இருப்பேன்! ஆனால் இணையம் வராமல் முடியறதில்லை. முகநூல், பதிவுகள்னு இல்லாட்டியும் எல்லா மடல்களும் பார்க்க வேண்டுமே! அதுக்காகவேனும் வந்தாகணும்! :)

      Delete
  18. மிகப்பெரிய சாதனைதான். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தாங்கள் செல்லும் இன்றைய இதே வேகத்தில் செல்வீர்களானால், அடுத்த பத்தாண்டுகளில் 20000 பதிவுகளைக்கூடத் தங்களால் மிகச்சுலபமாக எட்டிவிட முடியும். அதற்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போல்லாம் வேகம் குறைஞ்சாச்சே வைகோ சார்! நீங்க வரதில்லை! அதனால் தெரியலை! அடுத்த பத்தாண்டுகள் நானே இருப்பேனோ மாட்டேனோ! :)

      Delete
    2. Geetha Sambasivam 05 July, 2016

      //இப்போல்லாம் வேகம் குறைஞ்சாச்சே வைகோ சார்!//

      அப்படியா? ஏன் ??????????

      //நீங்க வரதில்லை! அதனால் தெரியலை!//

      இருக்கலாம். நான் யார் பதிவுகள் பக்கமும் முன்புபோல இப்போது அதிகமாகச் செல்வது இல்லை. சென்று படித்தாலும் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனோ அதற்கான ஆர்வம் எனக்கு மிகவும் குறைந்துவிட்டது.

      //அடுத்த பத்தாண்டுகள் நானே இருப்பேனோ மாட்டேனோ! :)//

      அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீங்கோ. இருப்பினும் இந்த ஒரு சந்தேகம் நான் உள்பட எல்லோருக்குமே உள்ளதுதான். நீடூழி வாழ்க !

      Delete
    3. வேகம் குறைந்ததுக்குப் பல்வேறு காரணங்கள், சூழ்நிலைகள், வைகோ சார்.மற்றபடி நீங்களும் உங்கள் குடும்பத்தாரோடு நீடூழி வாழப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  19. 2900 பதிவுகள். அப்பாடி.கை விரல் எல்லாம் 1 இன்ச் தேஞ்சு இருக்கணுமே. கொஞ்ச நாள் கூட பதிவுலகத்தில் இருங்கோ. வம்புக்கு நாங்கள் எங்கே போவோம்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, ரொம்ப நாட்களாகக் காணோமேனு நினைச்சேன். 2,900 பதிவுகள் இல்லை, 2,000 பதிவுகள் தான். ஆனால் மற்ற வலைப்பக்கங்களைக் கணக்கெடுத்தால் 2,900 த்துக்கும் மேலேயே வரும் தான்! :) வம்புக்கென்ன குறைச்சல்! நிறைய வம்பு பண்ணிட்டு இருக்கலாம்! :)

      Delete
  20. மொக்கை பதிவுகளை தனியாக வரிசைப்படுத்தினால் மக்கள்ஸ் மொக்கையா இல்லையா என்று முடிவு செய்ய ஏதுவாக இருக்கும்.உங்களுக்கு மொக்கை எங்களுக்கு பொக்கிஷம்

    ReplyDelete
    Replies
    1. மொக்கைகளை வரிசைப்படுத்துவதா? சரியாப் போச்சு போங்க! மொக்கை அல்லாதவற்றை மட்டும் வரிசைப் படுத்தலாமே! :)

      Delete
    2. எப்படியோ படிக்கவிடாமல் படிப்பவருக்கு வேலை(?!)

      Delete
  21. உபயோகமான பதிவுகள் என்ற கணக்கில் பார்த்தால் 200க்குள் தான் இருக்கும். நம்ம எழுத்தின் தரம் அப்படி! :)///இதற்கு பெயர் தான் தன்னடக்கமா ?? வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நாஞ்சில் கண்ணன், உண்மைதான் சொல்கிறேன். பல பதிவுகள் மொக்கை தான். இந்தப் பதிவு உட்பட! :)

      Delete
  22. வலைப்பூ நடத்துவது என்பது
    இலகுவானது அல்ல - அதிலும்
    பத்தாண்டுகள் கடந்தாச்சு என்றால்
    சாதனை தான் - அதற்கு மேல்
    2000 இற்கு மேற்பட்ட பதிவுகள் என்றால்
    சாதனைக்கு மேல் சாதனை என்பேன்!
    தொடர்ந்து
    பல சாதனைகளை நிகழ்த்த
    எனது வாழ்த்துகள்!

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்கள் கருத்தை அன்று கவனிக்கவில்லை போலும். பதில் சொல்லாமல் விடுபட்டுப் போயிருக்கிறது. தாமதத்துக்கு மன்னிக்கவும். :(

      Delete
  23. சாதனைப் படைத்தமைக்கு வாழ்த்துகள்... வலைத்தளத்திற்கு புதியவன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளத்தைப் பார்த்தேன், வாழ்த்துகள். நிறைய எழுதுங்கள். வாழ்க! வளர்க!

      Delete
  24. அப்ப....2000 பதிவுகள், 10 ஆண்டுகள்...மிகபெரிய சாதனை அம்மா...

    வாழ்த்துகள்...

    தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசிக்க விருப்பமுள்ள ஒரு வாசகி...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அனுராதா ப்ரேம்.

      Delete
  25. எனக்கு உங்க சமையல் குறிப்பெல்லாம் உபயோகமாயிருக்கு. அதுவும்தவிர, ஸ்ரீரங்கத்தைப் பற்றியது எல்லாம் அவ்வப்போது படிப்பேன். எந்தப் பதிவுலயும் ஏதேனும் யாருக்கேனும் உபயோகமாயிருக்கும். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழன், ஶ்ரீரங்கம் பதிவுகளைத் தொடரணும். சரியாக் குறிப்பெடுக்க முடியாமல் ஒரு சில பிரச்னைகள்! அதனாலேயே தாமதமாகிறது. மனம் பதியவில்லை. மற்றபடி என்னுடைய சமையல் குறிப்பு உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பது குறித்து மகிழ்ச்சி.

      Delete
  26. happa!!!! vaazththugal muthalil. thaangal innum ezutha vendum..

    pala pathivargal ippothu whatsappilum fb yilum than irukirargal. oruvelai udanadi result kidaipathalo ippothellam 2 minutes noodles avasaramthane prabalamaga ullathu.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கீதா, (தில்லையகத்து) உங்களைப் போல் எல்லாம் அர்த்தமுள்ள பதிவுகள் எழுதுவதில்லை! ஏதேனும் தெரிந்தால் தானே! :(எனக்கென்னமோ வாட்ஸப்பும் சரி, முகநூலும் சரி அவ்வளவு கவரவில்லை. ஆனாலும் இருக்கேன்! பெண் முகநூலில் இருப்பதால் உடனுக்குடன் அவளால் பார்க்க முடியும். பிள்ளை, பெண் இருவரும் வாட்ஸப்பில் இருப்பதால் அதுவும் உடனுக்குடன் செய்திகள் பரிமாறிக்கொள்ளலாம். ஆகவே இரண்டிலும் இருக்கேன். :)

      Delete