எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 18, 2016

நிலா, நிலா! ஓடி வா! நில்லாமல் ஓடி வா!


நேத்துக் காலையிலேயே நடைப்பயிற்சியின் போது காமிரா எடுத்துச் செல்லலையேனு நினைச்சேன். இன்னிக்கும் மறந்துட்டுப் பாதிப் படிகள் ஏறினபின்னர் நினைவு வந்து எடுத்துப் போனேன். ஆனால் நேற்றுக் கண்ட மாதிரி இல்லை வானம்! இருந்தாலும் பரவாயில்லைனு எடுத்தேன். உ.பி.கோயில் தெரியுது பாருங்க பிரகாசமான விளக்குக்குப் பின்புறமா! என்னதான் ஜூம் பண்ணினாலும் இவ்வளவு தான் வருது! எனக்குத் தான் தொ.நு. தெரியாதே! ஆகவே போனாப் போகுதுனு விட்டுடுங்க! :) தெற்கே தெரியும் இது!

நிலாவைத் தான் எடுக்கக் காமிரா கொண்டு போனேன். நிலாவை மேற்கே அஸ்தமனம் ஆகும் முன்னர் காலை ஐந்தரைக்கு எடுத்தது இது. இதுவும் ஜூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பண்ணினது தான்! ஹிஹிஹி, இம்புடுதேன் வந்துச்சு!




நேற்றுக் கீழ்வானம் செக்கச் சிவந்திருந்தது. அந்த வண்ணக்கலவையைக் குழைக்க இன்று நேரமில்லை சூரியனுக்கு! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வண்ணத்தைத் தெளித்திருந்தான்! லேசாக இளமஞ்சள் கலந்த சிவப்பு வண்ணத்தைத் தெளித்திருந்தான். தனக்குத் தானே ஆரத்தி எடுத்துக் கொண்டான் போலும்!



இவ்வளவெல்லாம் எடுத்துட்டு நம்மக் காவிரியம்மாவை எடுக்காமல் முடியுமா? அகண்ட காவிரியை வறண்ட காவிரியாப் பாருங்க! :)


இன்னொரு கோணத்தில் வறண்ட காவிரி!

34 comments:

  1. அழகா வந்திருக்கு கீதா. முதல் படம் அபாரம். எனக்கு பௌர்ணமி னால் மழைன்னு ஆகிவிட்டது. நாளைக்குத்தேய்ந்த நிலா கண்ணில் படும்:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதி. முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  2. நல்லாயிருக்கு. காவிரியில் நீர் வரவில்லை. கண்ணில்தாதான் வருகிறது.

    ReplyDelete
  3. அழகாயிருக்கு. நமக்கு இதுவே எதேஷ்டம். முயற்சிதான் முன் நிற்குது.

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போவுமே அதிகத்துக்கு ஆசைப்படறதில்லை, நானானி! :) ஆகவே எனக்கும் திருப்தி தான்! நன்றி வருகைக்கு!

      Delete
  4. எனக்கும் முதல் படம் ரொம்பவும் பிடித்திருக்கிறது. என்ன ஒரு வண்ணக்கலவை! இப்படி எடுத்து எடுத்து பழகிக்கொண்டே இருந்தால் ஒருநாள் நீங்கள் தலைசிறந்த புகைப்படக்காரர் ஆகிவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதை விட அழகான காட்சியை ரிஷபன் முகநூலில் பகிர்ந்திருக்கார் பாருங்க. நானும் இன்று காலை அந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்தேன். என் மனதில் தோன்றியது வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி! தான்!

      Delete
  5. எனக்கு எல்லா படங்களும் நல் வரவே. நதிகளை கைது செய்தால், இதே கதி தான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பெருந்தன்மை "இ" ஐயா!

      Delete
  6. Replies
    1. நன்றி ஐயா. ரசனைக்கு நன்றி.

      Delete
  7. நன்றாக வந்து இருக்கிறது எல்லா படங்களும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. உங்கள் அன்பு எல்லாவற்றையும் நன்றாக இருப்பதாகச் சொல்ல வைக்கிறது! :)

      Delete
  8. காவிரியில் பாசனத்துக்கு நீரில்லை. ஆனால் இங்கு குடிக்கவே நீர் இல்லை என்கிறார்களே

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இது குறித்த உண்மை நிலவரம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டாம்! :)

      Delete
  9. 'நடைப் பயிற்சி போல் தெரியவில்லையே.. புகைப் படம் எடுக்கும் பயிற்சிமாதிரினா தெரிகிறது. சந்திரன் அழகாக வந்திருக்கிறது. (அது சரி.. சந்திரன் ஆணா அல்லது பெண்ணா? சொல்லுங்கள் பார்க்கலாம்)

    "தொழில் நுணுக்கம்" ஓகே. உ.பி என்ன? டக்குனு மனசுல வரமாட்டேன் என்'கிறது.

    ReplyDelete
    Replies
    1. உ.பி= உச்சிப் பிள்ளையார் கோயில்! :) ஜிம்பிள்!

      அருஞ்சொற்பொருள்:

      விவிசி=விழுந்து விழுந்து சிரித்தேன்
      த உபுவி.சி தரையில் உருண்டு புரண்டு விழுந்து சிரித்தேன்
      அவசி =அசடு வழியச் சிரித்தேன்.
      உபிச=உடன் பிறவா சகோதரன் அல்லது சகோதரி(யாரைச் சொல்றேங்கறதைப் பொறுத்து)
      கதெகவா= கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!
      ம.சா=மனசாட்சி
      ம.பா. =மறுபாதி

      இப்போ ம.சா., ம.பா., அதிகம் பயன்பாட்டில் இல்லை! :) மற்றது அவ்வப்போது வரும். இதை எல்லாம் மனப்பாடம் பண்ணி வைச்சுக்குங்க. திடீர்னு தேர்வு வைப்பேனாக்கும்! :) அப்புறமா புகைப்படம் எடுத்துட்டு நடைப்பயிற்சியும் செய்தேன். :)

      Delete
  10. மேற்கே ஓடி மறைய விரும்புகிற நிலாவை நோக்கி `நிலா, நிலா! ஓடிவா!` என்றால் திரும்பி வருமா? எனினும் துரத்திப் பிடித்திருக்கிறீர்கள் கேமராவில். காலையில் ஒரு நல்ல காரியம்!

    நானும் உத்திரப்பிரதேசத்துக் கோவிலெல்லாம் உங்களுக்கு அங்கிருந்தே தெரிய ஆரம்பித்துவிட்டதா? யோகசக்தியாக இருக்குமோ என்று ஒருகணம் மலைத்தேன்!

    ReplyDelete
  11. //நானும் உத்திரப்பிரதேசத்துக் கோவிலெல்லாம் உங்களுக்கு அங்கிருந்தே தெரிய ஆரம்பித்துவிட்டதா? யோகசக்தியாக இருக்குமோ என்று ஒருகணம் மலைத்தேன்!//

    ஹெஹெஹெஹெ, இது ஜாலியா இருக்கே! விளக்கம் சொல்லி இருக்க வேணாமோ! :)))))

    ReplyDelete
  12. யோகசக்தி என்றதன் மூலம் நான் குறிப்பிட விரும்பியது, யோகா என்கிற பெயரில் கால்களுக்குள் தலையை நுழைத்து, உடம்பை இப்படியும் அப்படியுமாக வளைத்து, நிமிர்த்தி இப்போதெல்லாம் என்னென்னவோ செய்துபார்க்கிறார்களே அதையல்ல! சதாசிவ பிரும்மேந்திரர் போன்ற ஞானிகளுக்கு சித்தியான சாதனாக்கள் (பார்வையிலிருந்து மறைந்துவிடுவது, திரும்ப வேறெங்கோ தோன்றுவது போன்றவை,பூமிக்குள் தலைபுதைத்துக் கால்களை செங்குத்தாக வெளியே உயர்த்தி நாட்கணக்காக தவமிருப்பது), போகர் போன்ற சித்தர்கள் ஆழ்தியானம், தவம் மூலம் அடைந்த அஷ்டமாசித்திகளும் அதைத் தாண்டியவையும் (போகரின் `அப்பாலுக்கும் அப்பால்..`)-இப்படிப்பட்ட மஹாசித்திகளில் ஒன்று வாய்க்கப்பெற்ற வலைப்பதிவரைப் படித்துக்கொண்டிருக்கிறோமோ என்று ஒரு கணம் திகைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நல்லாவே புரிஞ்சது ஏகாந்தன். ஏனெனில் யோகா என்றால் உண்மையான அர்த்தம் என்ன என்பது குறித்து ஓரளவுக்கு அறிந்திருப்பதோடு எங்கள் குருநாதரே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் யோகசக்தி வாய்ந்தவர் தான்! அவரைக் குறித்த மற்ற விபரங்கள் பகிர முடியாது! எனினும் அவர் சக்தி குறித்து அறிந்திருக்கிறேன். முன்னர் கொடுத்த பதில் சும்ம்ம்ம்ம்மா விளையாட்டுக்கு! எனக்கும் அத்தகைய யோகசக்தி வாய்த்துவிட்டால் எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்துட்டு விளையாட்டாக பதில் கொடுத்தேன். உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். :)

      Delete
    2. http://freetamilebooks.com/ebooks/yogasanam

      இந்தப் புத்தகத்தில் யோகாசனம் (ஆசனங்கள் மட்டுமே) குறித்த என்னுடைய புரிதலை ஓரளவுக்குச் சொல்ல முயன்றிருக்கிறேன். யோகம் வேறு யோகாசனம் வேறு என்பதையும் குறிப்பிட்டிருப்பேன். நேரம் வாய்க்கையில் படித்துப் பார்க்கவும். நன்றி.

      Delete
  13. தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. விளையாட்டுக்குத்தான் சொல்கிறீர்கள் எனப் புரிந்துகொண்டேன்.

    இப்படிக் கிண்டியதும் நல்லதாய்ப்போயிற்று. நீங்கள் மின்னூல் ஒன்று இதுபற்றி எழுதியிருப்பதும் தெரியவந்தது எனக்கு. படிக்க முயற்சிக்கிறேன்.

    குருநாதர் இத்தகைய யோகசக்தி உடையவர் என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு விபரங்கள் பகிரமுடியாது என்றும் சொல்லிவிட்டீர்கள். ஏமாற்றம்தான்.

    ReplyDelete
    Replies
    1. என்னமோ தெரியலை, பிளாகர் இந்தத் தளத்தைத் திறக்க மறுத்துட்டே இருந்தது. :) நன்றி ஏகாந்தன். குருநாதர் தக்ஷிணாமூர்த்தியைப் போல் இளவயதுக்காரர்! ஆனாலும் எங்கள் குரு!

      Delete
    2. என்னமோ தெரியலை, பிளாகர் இந்தத் தளத்தைத் திறக்க மறுத்துட்டே இருந்தது. :) நன்றி ஏகாந்தன். குருநாதர் தக்ஷிணாமூர்த்தியைப் போல் இளவயதுக்காரர்! ஆனாலும் எங்கள் குரு!

      Delete
    3. ஹூம், இரு முறை கருத்துச் சொல்லியும் ஏற்கவே இல்லை! என்னனு தெரியலை. ஏதோ பிரச்னை போல

      Delete
    4. ஹூம், இரு முறை கருத்துச் சொல்லியும் ஏற்கவே இல்லை! என்னனு தெரியலை. ஏதோ பிரச்னை போல

      Delete
    5. ஹிஹிஹி, எல்லாம் இரண்டு இரண்டு முறை வந்திருக்கே! :) என்ன மாஜிக் வேலை இது?

      Delete
  14. இன்னிக்குத்தான் பார்த்தேன். படமெல்லாம் நன்றாகவே இருக்கிறது.காலையில் ஐந்தரை மணிக்கு நிலவை பிடிச்சுட்டிங்களே. அதுவும் ஓடாமல் காட்சியைத் தந்திருக்கிறதே. அதற்கே பாராட்ட வேண்டும். வரண்ட காவேரி, எப்போது அகண்ட காவேரியாகி உங்களிடம் சிக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா, பாராட்டுக்கும், ரசனைக்கும். மேட்டூர் அணை திறந்திருக்கிறதாலே இன்னமும் இரண்டு நாட்களில் காவிரியில் நீர் வரலாம். :)

      Delete
  15. அழகான காட்சிகள்! ரசித்தோம்..

    கீதா: செம கீதாக்கா. முதல் படம் அசத்தல்!!...நானும் இப்படி எடுத்து வைத்திருக்கறதெல்லாம் அடுத்த பதிவாக வருது....ஏதோ நம்மகிட்ட இருக்கற கேமராவுல....வெங்கட்ஜி எடுக்கற மாதிரி எல்லாம் வராது....ம்ம்ம் ரொம்பவே அழகு நிலா..

    ReplyDelete
    Replies
    1. என்னை விட நன்றாக புகைப்படம் எடுப்பவர்கள் நிறையவே உண்டு. உங்கள் அன்பிற்கு நன்றி கீதாஜி!

      Delete
  16. நல்ல படங்கள்...... பாராட்டுகள்.

    உங்கள் மூலம் திருச்சி காட்சிகளை பார்க்கக் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete