எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 04, 2016

நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தகவல்கள்!

நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தேவி ஸ்கந்த மாதா எனப்படுவாள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.இவளை  வைஷ்ணவி எனவும் அழைப்பார்கள்.. மாத்ருகா வர்ண சொரூபிணி என வர்ணிக்கப்படும் சதாக்ஷியும் இவளே. சாகம்பரியும் இவளே! மஹாலக்ஷ்மியாகவும் அழைக்கப்படுகிறாள்.
சாகம்பரி க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார் வாயிலாக விக்கி பீடியா!

கைகளில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகையில் வைஷ்ணவி எனப் படுவாள். இன்றைய தினம் சுகாசனம் எனப்படும் அமர்ந்த கோலத்தில் அம்பிகையை சாந்த துர்கையாக அலங்கரிக்கலாம். ஆறு வயதுப் பெண் குழந்தையை காளிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். கடலை அல்லது கடலை மாவுடன் மஞ்சள் பொடி சேர்த்து மயில், அன்னம்,போன்ற பறவைக்கோலம் போடலாம்.

செவ்வரளி, சந்தன இலை போன்றவற்றால் மாலை கட்டியும் அர்ச்சனைகள் செய்தும் அம்பிகையை வழிபடலாம். இன்றைய நிவேதனமாகத் தயிர் சாதமே செய்யலாம். அல்லது சுண்டக்  காய்ச்சிய பசும்பாலில் குழைந்த சாதத்தைப் போட்டுக் கிளறி, நெய் சேர்த்துச் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராக்ஷையை வறுத்து சேர்க்கவும்.  மாலை கடலைப்பருப்புச் சுண்டல் செய்யலாம்.

கடலைப்பருப்பை லேசாகச் சூடு வர வறுத்து விட்டு இரண்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் வைக்காமல் நேரடியாக வேக வைக்கவும். கடலைப்பருப்பு நசுங்கும் பதத்தில் வெந்ததும் உப்புச் சேர்த்துக் கொண்டு இரண்டு நிமிடம் வேக விட்டுப் பின்னர் வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்த்துப் பெருங்காயமும் சேர்க்கவும். வெந்த கடலைப்பருப்பைப் போட்டு இரண்டு டீஸ்பூன் சாம்பார்ப் பொடியும் சேர்க்கவும். பின்னர் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழிஞ்சுக்கலாம்.  நவராத்திரி நாள் இல்லைனா, காரட், வெங்காயம் துருவிச் சேர்க்கலாம்.

நம்ம கைப்பக்குவத்தில் இன்று வேர்க்கடலைச் சுண்டல்! வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும்.  பின்னர் மறுநாள் குக்கரில் உப்புச் சேர்த்து வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வேர்க்கடலை வெந்ததைக் கொட்டி ஒரு ஸ்பூன் அல்லது ஒன்றரை ஸ்பூன் சாம்பார்ப் பொடி சேர்க்கவும். அல்லது மி.வத்தல் கொத்துமல்லி விதைப் பொடி போடலாம். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறித் தேவையானால் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். படம் நம்ம காமிராவில் எடுத்தது என்பதால் இன்னிக்கு ஶ்ரீராமுக்கு அனுப்பலை. காமிராவில் பிரச்னைனு நினைச்சால் பாட்டரியில் சார்ஜ் இல்லை. மாத்து பாட்டரியைப் போட்டால் எடுக்கவே இல்லை. அப்புறமாப் பழைய பாட்டரியையே சார்ஜ் பண்ணிப் போட்டுட்டுப் படம் எடுத்தேன். எப்படி இருந்தாலும் சகிச்சுக்குங்க மக்களே!

16 comments:

 1. ஐந்தாநாளும் தொடர்ந்து வருகிறேன் நன்று

  ReplyDelete
 2. என்ன, இன்றும் அதே படமேவா!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, அதான் நேத்திக்குப் போடலை! :)

   Delete
 3. சுண்டல் ருசியா இருக்கு. அன்புடன்

  ReplyDelete
 4. முதல் நான்கு நாட்கள் வெளியூர் சென்று விட்டதால் படிக்க முடியவில்லை. இன்றுதான் ஆரம்பிக்கிறேன். சுவையான, சுருக்கமான தகவல்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி. சுண்டல் சாப்பிட்டிருக்க முடியாது. அதனால் என்ன, பரவாயில்லை! :) நவராத்திரி பத்தி நிறைய எழுதியாச்சு! அதனால் சுருக்கம்! :)

   Delete
 5. முதல் படியில் இருக்க வேண்டும் என்று அத்தனை பேரும் முந்திக் கொண்டார்களா, என்ன?.. ஏன் இத்தனை அடைசல்?..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சார்! உம்மாச்சிங்க எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் துணையா முதல் படியிலேயே இருக்கோம்னு சொன்னாங்க!

   ஹிஹிஹி, மத்தப்படிகள் எல்லாம் அகலம் குறைவு! :) முதல் படி பெரிய ஸ்டீல் டேபிள்!

   Delete
 6. மிஸ் பண்ணிய ஐந்தாம்நாள் தகவல்கள்....அருமை...

  கீதா: முதலில் என்ன சுண்டல் என்று பார்த்துவிட்டுத்தான் மற்ற தகவல்களுக்கு ஹிஹிஹீ..

  அந்த மாக்கல்?? சொப்புச் சாமான்ககள் தான் ரொம்ப பிடித்தது. அது மாக்கல் தானே பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. செம க்யூட்.

  ReplyDelete
  Replies
  1. மாக்கல் சொப்புக்கள், மரச்சொப்புகள் (நான் விளையாடியது) அதைத் தவிர அப்பா காலத்துப் பித்தளைச் சொப்புச் சாமான்கள் எல்லாமும் இருக்கின்றன. :) பொம்மைகள் எல்லாத்துக்கும் அறுபது வயது ஆகின்றன.

   Delete
 7. சுவையான தகவல்கள் - சுண்டலோடு இருப்பதாலோ! :)

  ReplyDelete
  Replies
  1. இருக்கும், இருக்கும்!

   Delete