எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 21, 2017

அப்போவும், இப்போவும், எப்போவும்! :)

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!!
Photo

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக அஷ்வின் ஜி!:)

இந்திய பாக், எல்லைப் பிரச்னைகளோ என்று அல்லது, இந்திய சீன எல்லைப் பிரச்னைகள் என்றோ, வந்து பார்க்கும் என் அன்பான வலை உலக நண்பர்களே, இது அது இல்லை, அது இல்லை, அது இல்லவே இல்லை! பின்னே என்னதான் நடந்தது? கேளுங்கள் சொல்கிறேன். எங்க வீட்டில் வண்டிகள் இருந்தன என்று சொல்லி இருக்கேன் இல்லையா? அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு! அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது! முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ? இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன். அதிலும் பின்னால் ஸ்டெப்னி வைக்கிறதுனு ஒண்ணு இருக்கும், ஸ்கூட்டர்களிலே, அந்த ஸ்டெப்னியை எடுத்துட்டால் உயிரைக் கையிலே தான் பிடிச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனால் சீட் தனித்தனியாக இருக்கும் என்பதால் என் சீட்டில் நீ உட்கார்ந்தாய் என்றோ, எனக்கு இடமே இல்லை, நான் எங்கே உட்காருவேன் என்பதோ கிடையாது.

அதுக்குப் பின்னர், பையன் காலிபர் வாங்கினாலும் என்னோட ம.பா.வுக்கு அது என்னமோ பிடிக்கவே பிடிக்காது. அவர் ஏற்கெனவே அவசரத்துக்கு என டிவிஎஸ் வாங்கி வச்சிருந்தார். பையனை அதை வச்சுத் திருப்தி பண்ண நினைச்சாலும் அவன் அதுக்கெல்லாம் அசராமல் காலிபர் வாங்கிட்டு 6 மாசமே ஓட்டி விட்டு, அதை இங்கே அனுப்பிச்சுட்டான். ஆனாலும் அவர் அதை எடுத்துட்டு ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டார்ங்கிறப்போ என்னை எங்கே அழைச்சுட்டுப் போகப் போறார் அதிலே எல்லாம். ஆஃபீஸுக்கே டிவிஎஸ்ஸில் போக ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாளிலே மற்ற இரண்டு வண்டிகளையும் விற்கிறாப்போல ஆச்சு! அப்புறமா மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம்! இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது. அவர் ஆஃபீஸ் போக ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஒரே கிக்கில் கிளம்பிவிடும். அதே வண்டி நான் எங்கேயாவது போக ஏறி உட்கார நினைச்சுக் கிளம்பும்போது, "கிக்" வந்தாப்போலே ஆடிக் கொண்டு கிளம்பவே கிளம்பாது. ஒரு வழியா அரை மணி முன்னாலேயே வண்டியை ஸ்டார்ட்டும் பண்ணி, அதை அணைக்காமல் அவசரம், அவசரமா என்னைக் கிளம்பி வரச் சொல்லுவார். நானும் ரொம்பவே அப்பாவியாய்ப் போய் வண்டியில் ஏறி உட்காருவேனோ இல்லையோ, வண்டி நின்னுடும். "ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்" அப்படினு கமெண்ட் வரும்.

எல்லாம் நம்ம "ஹெட்லெட்டர்" அப்படினு சகிச்சுட்டுக் கீழே இறங்குவேன். மறுபடி வண்டியைக் கிளப்பி, மறுபடி ஏறி உட்கார்ந்து, வண்டி கிளம்ப மறுத்து அடம் பிடிக்க, மறுபடி முயன்று, "நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன்! நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக்! அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது? இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது! சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன்! "படக்!" டிக்கி திறந்து கொள்ளும்! ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் கையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி "மூட் அவுட்" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய்! மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் "படக்"! டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக்!!!!! இப்போ அவர் கிட்டே இருந்து வரும்!

"கொஞ்சம் தள்ளித் தான் உட்காரேன், பின்னாடி, எனக்கு இடமே இல்லை!"

"இன்னும் எங்கே உட்காருகிறது? ஏற்கெனவே, நான் தொங்கிட்டு வரேன்! இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும்!"

'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா? வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்?"

"நல்லா ஓட்டுங்க வண்டியை! நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன்! இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை!"

"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"

"வண்டியை நிறுத்துங்க, நான் ஆட்டோவிலே வந்துக்கறேன்!"

"சரியாப் போச்சு, இங்கே இருக்கிற அண்ணா நகருக்கு ஆட்டோவோட விலையையே கேட்கிறாங்க ஆட்டோக்காரங்க, பேசாமல் வாயை மூடிட்டு உட்காரு!"

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதெல்லாம் வண்டி ஓடும், ஓடின சப்தம் இல்லை, நாங்க ரெண்டு பேரும் கோபத்திலே ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுட்டு வந்த சப்தம் அது. அடுத்த முறை எங்கேயாவது போகும்போது இதே விஷயம் ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!ஹாஹாஹா, மேலே உள்ளவை 2007 ஆம் ஆண்டில் எழுதினது! அதுக்கப்புறமா இரண்டு முறை மீள் பதிவும் போட்டாச்சு! இப்போ நாங்க அதிகம் வண்டியிலே போகிறதில்லை என்றாலும் இப்போக் கொஞ்ச நாட்களாக, கொஞ்ச நாளா என்ன கொஞ்ச நாள்! இப்போ இரண்டு, மூன்று நாட்களாக நெபுலைசர் வைச்சுக்க வேண்டி வண்டியில் போக வேண்டி இருக்கு. என்ன தான் ஒரு வேளை ஆட்டோவில் போனாலும், மறுவேளை வண்டியில் தான் போக வேண்டி இருக்கு! ஆனால் பாருங்க, அதிசயத்திலும் அதிசயமா நம்ம ரங்க்ஸ் இப்போ இடமே இல்லைனு சொல்றதில்லை. ஒல்லியாயிட்டேனோ? தெரியலை என்னனு! அதிகம் வம்பு வைச்சுக்காமல் ரெண்டு பேரும் ஜாக்கிரதையா வண்டியிலே போயிட்டு வந்துட்டு இருக்கோம். கண்ணு படப் போகுதய்யா சின்னக் கவுண்டரே! சே! அது சினிமாப் பாட்டு இல்லையோ! கண்ணுபடப் போகுதம்மா உங்க ரெண்டு பேருக்கும்! 

24 comments:

 1. திருவரங்கத்தில் பக்தர்களின் கூட்டத்தில் வண்டி ஓட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான்.

  உங்கள் அனுபவங்களை ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், இது சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக நடக்கும் ஒன்று! :)

   Delete
 2. எனக்கு தோனுவது அந்த வண்டிக்கு ஏதும் தோஷம் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, கில்லர்ஜி, இருக்கும், இருக்கும்!

   Delete
 3. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் .

  //ரங்க்ஸ் இப்போ இடமே இல்லைனு சொல்றதில்லை. ஒல்லியாயிட்டேனோ? தெரியலை என்னனு! //

  மெலிந்து விட்டீர்களா?

  வண்டியும் மக்கர் செய்யாமல் போகுது போலவே!

  அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று வண்டி சமத்தாய் போகுது போல!


  சுற்றிப்போடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு! வண்டிக்குத் தானே சுத்திப் போடணும்! ஹிஹிஹி, போட்டுடலாம்.

   Delete
 4. மெலிந்து விட்டீர்களா என்று கோமதி அக்கா கேட்டிருப்பதை அதிகம் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 5. வண்டி ஓட்டுவது பற்றியே தனியாக ஒரு பதிவும் போடலாம். நீங்கள் வண்டி ஓட்டமாட்டீர்கள் என்பதால் பின்னால் உட்கார்ந்து போகும் அனுபவத்தை அனுபவமாக்கி விட்டீர்கள். நம்ம கூட ஒரு பதிவு தேத்தலாம் போலிருக்கே.. இப்போதான் முதல்முறை படிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. எழுதுங்க, எழுதுங்க, உங்க வண்டி ஓட்டும் அனுபவம் பற்றியும் எழுதுங்க! :)

   Delete
 6. என்னது
  ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது எங்க வீட்டுல மட்டும்தான் கேட்கும் என நினைச்சு இருந்தேன் உங்க வீட்டுலேயும் கேட்கிறது என்றால் ஆச்சிரியமாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, அவர்கள் உண்மைகள், எங்க வீட்டிலே எப்போதுமே கேட்குமே!

   Delete
 7. எனக்கு வண்டி ஓட்டி பழக்கம் இல்லை. நான் எந்தக் காரணம் கொண்டும் இரு சக்கர வாகனங்களில் ஏறுவதில்லை.

  பேசாம நீங்களே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றால் இந்தக் கஷ்டம்லாம் இல்லை.

  இன்னும் குளிர்காலம் 2-3 மாதங்கள். உடல் நலத்தில் கவனம் வையுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. குளிர் வந்துட்டால் பிரச்னையே இல்லை! எனக்குக் குளிர் ஒத்துப் போயிடும்! இந்த நசநசனு பெய்யும் மழையும், அடிக்கும் வெயிலில் வியர்வையும் தான்! :(

   Delete
 8. ஓட்டுபவரைப் பிடித்துக் கொள்ளலாமே அதுவும் ஸ்டைலாக

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, ஜிஎம்பிசார், அதெல்லாம் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்காது!

   Delete
 9. அனுபவம் குறிப்பு ரசித்தேன் சிரித்தேன் Take care sis

  ReplyDelete
  Replies
  1. நன்றி பூவிழி!

   Delete
 10. நம்ம ஊர்ல ரோடு க்ராஸ் பண்றதே பெரிய சாதனை எனக்கு !! இந்த ஸ்கூட்டிலாம் என்னமா வேகமா விர்ருனு போகுது நம்ம ஊரில் ..
  பல வருஷமா சிக்னல் கு வெயிட் பண்ணி க்ராஸ் செய்றது பழகிட்டதால் அடுத்தது இங்கே ரெண்டு சக்கரம் எல்லாம் சம்மர் டைமில் பைக்கர்ஸ் மட்டுமே ஓட்டுவாங்க அப்புறம் கார் பார்ட்ஸ் pizza கொண்டு போறவங்க மட்டுமே டூ வீலர்ல எப்பவாச்சும் பார்த்திருக்கேன் .
  ஈஸ்டர்ன் ஐரோப்பியர் வருகைக்குப்பின்னே நிறைய சைக்கிள் பயணிகள் இப்போ பார்க்கிறேன் .
  எதுக்கு இவ்ளோ பில்டப்பு :) ஹீஹீ எனக்கு டூவீலர்ன்னா பயம் :)

  அனுபவம் ரசித்தேன் ..
  யெஸ் நான் துளஸிக்கா ப்லாகில் சமீபத்தில் பார்த்தேன் நீங்க முன்பு பார்த்த படத்தில் இருப்பதற்கும் இப்போதுக்கும் நல்ல டிஃபரென்ஸ் தெரியுது முன்பைவிட இளைச்சிருக்கீங்க .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின், இளைச்சிருக்கேன்னு சொன்னதுக்கு நன்னி ஹை! எங்கே உங்க தலைவியைக் காணோம்? :)))) தேம்ஸுக்குள்ளே இருந்து வெளியே வரலையா?

   Delete
 11. மீள் பதிவாயினும் பொருத்தமான பதிவுதான். நான் பெரும்பாலும் நடந்தே சென்றுவிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா, நடப்பது நல்லதே! என்றாலும் அதிக தூரம், உடல் நலமில்லாமல் இருக்கும் சமயங்களில் முடியறதில்லை!

   Delete
 12. ஹா ஹா ஹா! ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பானுமதி!

   Delete