எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 26, 2017

சமையலும், அரசியலும்! :)

சுமார் 20 வருடங்கள் முன்னர் வரை கிறிஸ்துமஸும், புது வருடமும் கேக் பண்ணாமல் இருந்ததில்லை. அப்போல்லாம் குழந்தைகளும் இருந்தனர். மாமியார், மாமனாருக்குக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் மில்க் மெயிட் மட்டும் சேர்த்துத் தான் கேக் செய்வேன். அவன் (oven) வாங்குவதற்கு முன்பே குக்கரில் மணல் போட்டுக் குக்கர் பாத்திரத்திலேயே வைத்துச் செய்திருக்கேன். பிஸ்கட்டுகளும் அப்படியே பண்ணி இருக்கேன். பிஸ்கட்டுகள் வெட்டுவதற்கு டிசைன் கட்டர்கள் கூட இருந்தன! அவன் (oven) வாங்கியதும் அதிலேயே பன், ப்ரெட், பிட்சா போன்றவையும் முயன்று பார்த்துச் செய்திருக்கேன்.

பெண்ணிற்கும் கல்யாணம் ஆகிப் பையரும் அம்பேரிக்கா போனதும் தான் அவனை (oven)  நம்ம ரங்க்ஸ் தூக்கி தானம் செய்தார். எனக்கு அவ்வளவா மனசு ஆகவில்லை என்றாலும் கேக்கோ, பன்னோ, ப்ரெட்டோ பண்ணினால் நான் மட்டும் தான் சாப்பிடணும்! போணி ஆகாது! வேணும்னாக் கடையில் வாங்கிச் சாப்பிட்டுக்கலாம்னு விட்டுட்டேன். இப்போ அதிரா கேக் செய்முறைச் சுட்டி கொடுத்திருக்காங்க! அதைப் பார்த்ததும் கேக் செய்யணும்னு ஆசை! ஆனால் அவன் (oven) இல்லை. மைக்ரோவேவில் வைக்கலாமானு தெரியாது! மொறு, மொறுனு போயிடுமோனு சந்தேகம்! பொதுவா சூடு செய்ய மட்டுமே மைக்ரோவேவ் பயன்பாடு! கேக்  பண்ணினாலும் நான் தான் சாப்பிடணும்! ) ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிஞ்சப்புறமா இதெல்லாம் சாப்பிடறதில்லை. நான் மாஜரின் எல்லாம் வாங்கினதும் இல்லை. சேர்த்ததும் இல்லை! எப்போவுமே  சுத்தமான வீட்டில் எடுத்த வெண்ணெய் தான் சேர்ப்பேன். மற்ற செயற்கைப் பொருட்கள் சேர்த்தது இல்லை, முட்டை உட்பட! ப்ளம் கேக் நல்லாவே வரும். இருந்தால் பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், டுட்டிஃப்ரூட்டி சேர்ப்பது உண்டு.

குழந்தைகள் அவங்க அவங்க வாழ்க்கையில் நிலைத்ததும் இதில் எல்லாம் ஆர்வம் குறைந்தும் விட்டது! இப்போக் கொஞ்ச நாட்களாக பிட்சா பண்ணணும்னு ஆவல் வந்திருக்கு. அதை மைக்ரோவேவில் வைக்கலாம்!  ஒரு நாள் முயன்று பார்க்கணும். பார்ப்போம்!  ஜாம்நகரில் இருந்தப்போ பிட்சா, ஹாட் டாக் எல்லாம் பண்ணிப் பார்த்திருக்கேன். ஹாட் டாக் கிட்டத்தட்ட பாவு வடானு மும்பையிலே விற்கிறாங்களே அதே மாதிரித் தான்! ஆனால் உ.கியைக் கடலைமாவுக் கரைசலில் முக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்காமல் அப்படியே கறியாகப் பயன்படுத்துவேன்.
*********************************************************************************

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஜீரணிக்க முடியலை! ஆனால் தமிழ்நாடு எப்போவுமே இலவசத்துக்கும், பணத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் உள்ள மாநிலம். இங்கே அதிகம் கஷ்டப்படாமல் எது கிடைத்தாலும் மக்கள் வாங்கத் தயார்! உழைப்புக் குறைந்து விட்டது! எதுக்கெடுத்தாலும் போராட்டம்! மத்திய அரசை எல்லாவற்றுக்கும், ஒரு சில விஷயங்களுக்கு மாநில அரசையும் குற்றம் சொல்கின்றனர். மத்திய அரசின் நல்ல திட்டங்கள் பலவும் அடித்தட்டு மக்கள் வரை சென்றடையவில்லை. பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டம் மூலமாக எங்கள் குடும்ப ஆட்டோக்காரருக்கும், எங்களுக்கு வீட்டு வேலையில் உதவி செய்யும் பெண்ணிற்கும் வீடு கிடைத்துள்ளது. முத்ரா திட்டம் மூலம் இங்கே ஒரு சில ஆட்டோக்கள் ஓடுகின்றன என்பதோடல்லாமல் குடும்ப ஆட்டோக்காரரும் புதிய ஆட்டோ சொந்தமாக வாங்குகிறார். எரிவாயு அடுப்பு இல்லாத பலருக்கும் அடுப்பும், எரிவாயு இணைப்பும் கிடைத்துள்ளது. ஆனால் இதெல்லாம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் என்பது மக்களுக்குப் போய்ச் சேரவில்லை!

தொழில்துறை, கல்வி, அரசியல், ஆன்மிகம் என எதை எடுத்தாலும் நமக்குத் தடுமாற்றம் தான். கல்வியில் தேர்வு எழுதாமலேயே நம்மைத் தேர்ச்சி பெற வைத்தால் சந்தோஷம்! அரசியல் கேட்கவே வேண்டாம். ஆன்மிகம் என்றால் இன்னும் மோசம். பக்திக்கும் ஆன்மிகத்துக்கும் வேறுபாடே தெரியாத மனிதர்கள்! குறைந்த பட்சம் தேச பக்தியாவது இருந்தது. இப்போது பலரின் பிரசாரங்களினால் அதற்கும் ஊறு! கலாசாரம், பண்பாடு, மொழி என அனைத்துமே பங்கப்பட்டுப் போய்க் கிடக்கிறது.  இது நாள் வரை நாம் கும்பிட்டு வந்த நம் கடவுளர் நமக்குக் கடவுளே இல்லை என்கின்றனர் சிலர்.   வாய் மூடிக் கேட்டுக் கொள்கிறோம். கோயில்கள் அனைத்தும் வணிக வளாகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை!  நம் பண்டிகைகளைக் கூட அரசியல்வாதிகள் தீர்மானிக்கின்றனர். தனிமனித சுதந்திரம் என்பதெல்லாம் இங்கே காண முடியவில்லை!

அரசு எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் அதற்கு எதிர்ப்பு! ஆனால் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவை கொடுக்கணும். இலவச மின்சாரம் கொடுக்கணும்! எங்கே இருந்து எப்படிக் கொடுக்கும் அரசு? எவ்விதத் திட்டங்களையும் முடிக்க விடாமல் ஆரம்ப நிலையிலேயே போராட்டங்கள் நடத்தித் திட்டங்களைத் தொடர விடாமல் செய்து வரும்போது எங்கே இருந்து அரசு கொடுக்கும்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?  நமக்குத் தெரிந்ததெல்லாம் சினிமா தான்! இன்று கூட ரஜினிகாந்த் ஏதோ கூட்டம் கூட்டி இருக்கார் போல! எல்லாத் தொலைக்காட்சி சானல்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு ரஜினியை நேரில் பார்த்த சந்தோஷம் மட்டுமில்லாமல் அவருடன் படம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்ததில் ஏதோ கிரீடமே சூட்டி விட்டாற்போல் நினைத்துக் கொள்கின்றனர்.

சினிமா நடிகரை நடிகராகத் தான் பார்க்கணும். அதோடு இல்லாமல் அவரும் நம்மைப் போன்ற மனிதர் தான்! எங்கோ வானத்திலிருந்து குதித்தவர் அல்ல! ஆனால் நாமோ அடிதடி, தள்ளு, முள்ளோடு நடிகர்களைப் பார்த்துப் பரவசம் அடைகிறோம். இன்னும் சொல்லப் போனால் இளைஞர்கள் திசைமாறிப் போவதற்குத் திரைப்படங்களும் நடிகர்கள் அவற்றில் பேசும் வசனங்களுமே முக்கியக் காரணம் ஆகின்றன! நிழலில் சொல்லுவதை நிஜம் என நினைக்கும் மக்கள் கூட்டம்! என்னவோ போங்க! தமிழ்நாட்டின் நிலைமை சரியில்லை! சரியானபடி வழிநடத்த நல்லதொரு தலைமையும் இல்லை! நானும் நம்ம அதிரடி அதிரா மாதிரி ஊசிக்குறிப்பெல்லாம் போடலாமோனு ஜிந்திக்கிறேன். 

72 comments:

  1. இன்னைக்கு என்ன இடுகையே சூடா இருக்கு.

    அந்த கேக் பார்க்க அழகாத்தான் இருக்கு. ஆனால் நான் இதெல்லாம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்.

    பிட்சா நல்லாத்தான் இருக்கும். நீங்க நிறைய கேப்சிகம், ஆலிவ், வெஜிடபிள்லாம் போட்டு, கொஞ்சம் குறைவா சீஸ் போட்டீங்கன்னா அது நல்லா இருக்கும்.

    நீங்க மத்திய அரசைப் பற்றிச் சொல்லியுள்ளது ஓகேதான். ஆனால், டிமானிடைசேஷன் னால, என்ன உபயோகம் நமக்கு வந்தது, 2000 ரூ நோட்டுகள் கோடிக்கணக்கில் கைப்பற்றினாங்களே (ரெண்டு மூணு பேர்ட்ட இருந்து), அவங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதைப் பற்றியும் எழுதினால் படிப்பேன்.

    "அவரும் நம்மைப் போன்ற மனிதர் தான்! எங்கோ வானத்திலிருந்து குதித்தவர் அல்ல! " - இதுக்கு கில்லர்ஜிதான் பதில் எழுதுவார். நானோ ஸ்ரீராமோ எழுதமாட்டோம். ஏன்னா, நாங்க ஒவ்வொரு ரசிகர் மன்றத்தை நடத்திக்கிட்டிருக்கோம்.

    'தமிழகத்தில் தலைமை சரியில்லை'னு சொல்றீங்க. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

    ReplyDelete
    Replies
    1. நானோ ஸ்ரீராமோ எழுதமாட்டோம். ஏன்னா, நாங்க ஒவ்வொரு ரசிகர் மன்றத்தை நடத்திக்கிட்டிருக்கோம்.// ஹா ஹா ஹா ஹா ஹ...நாங்களும் அந்த ரசிகர் மன்றத்துலதான் ஹிஹிஹிஹி...

      நீங்க மத்திய அரசைப் பற்றிச் சொல்லியுள்ளது ஓகேதான். ஆனால், டிமானிடைசேஷன் னால, என்ன உபயோகம் நமக்கு வந்தது, 2000 ரூ நோட்டுகள் கோடிக்கணக்கில் கைப்பற்றினாங்களே (ரெண்டு மூணு பேர்ட்ட இருந்து), அவங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதைப் பற்றியும் எழுதினால் படிப்பேன்.//

      நானும் நெல்லையின் இதை வழி மொழிகிறேன்...கீதாக்கா

      கீதா

      Delete
    2. ///அந்த கேக் பார்க்க அழகாத்தான் இருக்கு. ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிரா செய்த கேக் எனப் போடோணும்:) அப்போதானே மக்களிடையே எனக்கொரு பப்புளிக்குட்டி:) கிடைக்கும்:))

      Delete
    3. ///ஏன்னா, நாங்க ஒவ்வொரு ரசிகர் மன்றத்தை நடத்திக்கிட்டிருக்கோம்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*234567

      Delete
    4. வாங்க நெ.த. சூடெல்லாம் இல்லை. ஆர்.கே.நகர் முடிவைப் பார்த்து வந்த வருத்தம்! :( டிமானிடைசேஷன் நடந்ததிலே காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறிவது முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் இருக்கும் முஸ்லீம் அன்பர் ஒருவரே மோதிக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளி வந்தது. பாகிஸ்தானால் அச்சடிக்கப்பட்டக் கள்ள நோட்டுச் செலவு செய்வது குறைந்தது. அல்லது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. முக்கியமாய் இதற்குத் தானே டிமானிடைசேஷன் கொண்டு வந்ததே! மற்றவற்றிற்குத் தக்க ஆதாரங்கள் எடுத்துக் கொண்டு தான் சொல்ல முடியும். இப்போ முடியாது! :)

      Delete
    5. தில்லையகத்து கீதா, உங்களுக்கும் இதே பதில்!

      Delete
    6. அதிரடி அதிரா, அது என்ன பப்புளிக்குட்டி? புதுசா இருக்கே? :)

      Delete
    7. ​அட, கீதா அக்கா... பப்ளிகுட்டி தெரியாது?​

      Delete
    8. ஹா ஹா ஹா கீதாக்கா.. ஸ்ரீராமே ஆச்சரியப்படுறார்ர்:).. நீங்க உங்கட கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டு பிடிங்கோ... இது தமிழ் அல்ல ஆங்கிலமாக்கும்:)

      Delete
    9. அக்கா :) பப்லிசிட்டியை publicity தான் பப்லிக்குட்டி ஆக்கிட்டாங்க மியாவ்

      Delete
    10. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*234567 @ அதிரா - ஏதோ இது புதுச் செய்திமாதிரி கோபப்படுறீங்க. 'அனுஷ்கா' 'தமன்னா' ரசிகர் மன்றங்கள் இணையத்தில் யார் நடத்தறாங்கன்னு தெரியாதா? நாங்க எப்படி தைரியமா, 'ரஜினி' பற்றி கருத்து சொல்லமுடியும்?

      Delete
  2. ஆர்.கே.நகர் முடிவு அந்த தொகுதி மக்களின் தேசபக்தியை காட்டி விட்டது.

    கர்நாடகத்தில் ரஜினிகாந்த் இன்றளவும் சாதாரண மனிதன்தான் ஒரு எல்.எல்.ஏ.ஆககூட உறுதி சொல்ல முடியாது.

    தமிழ் நாட்டில் அவனை கடவுளாக்கி விட்டானுக...
    தமிழ்நாடு நாசமாப்போகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, தமிழ்நாடு தேசபக்தி என்னும் கோட்டைத் தாண்டிப் பல வருடங்கள் ஆகிவிட்டனவே! என்னவோ தமிழ்நாட்டின் நிலைமை கவலைக்குரியதாகத் தான் இருக்கு!

      Delete
    2. கில்லர்ஜி - கர்னாடகாவில் நடிகர் ராஜ்குமாருக்கு மிக மிக அதிகமான ரசிகர்கள் உண்டு. அவர் நினைத்திருந்தால் அரசியலுக்குள் நுழைந்திருக்கலாம். ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை, அவருக்கும் எப்போதும் 'உண்மை' பேசவேண்டும் என்ற சுபாவம் இருந்ததால், அரசியல் தனக்கு எப்போதுமே சரிப்படாது என்று சொல்லியிருக்கிறார்.

      தென் இந்தியாவில், கேரளா மட்டும்தான் (இதுவரை) நடிகர்களை அரசியல்வாதிகளாகப் பார்க்காதது. (அப்படி இருந்தாலும், அரசியல்வாதி/அரசியல் கட்சி என்றுதான் எடைபோடுவார்கள். ரசிகக்குஞ்சுகள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதுபோல கேரளாவில் நடக்காது. அதனால்தான் பிரேம் நசீர், காங்கிரஸில் சேர்ந்தபோதும் அரசியலில் பிரகாசிக்கவில்லை). கேரளாவைத் தவிர மற்ற தென்னிந்திய மானிலங்கள் (கர்னாடகா, ஆந்திரா, தமிழகம்), சினிமாவுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை.

      Delete
  3. ஆஜர் போட்டுட்டு ..செல்கிறேன் விரிவான பின்னூட்டம் வரும் பின்னே ..வீட்டில் உறவினர் வருகை :)
    R .K ..நகர் .. :( என்ன சொல்ல நம்ம மக்களை ..நெஞ்சு பொறுக்கலை
    இவ்வளவு முட்டாள் ஆகிட்டாங்களே :(

    ReplyDelete
    Replies
    1. வாங்க பேப்பர்க்ராஃப்ட்ஸ்! சொல்லுங்க, சொல்லுங்க, மெதுவாச் சொல்லுங்க!

      Delete
  4. ​​உங்களுக்கு மட்டும் கால் கிலோ கேக் போதாதோ? கடையில் வாங்கிக்கொண்டால் பொதும். microwave அவன் இரண்டு type உண்டு. சாதா டைப் மாடலில் கேக் செய்ய முடியாது. கன்வெக்ஷன் உள்ள மாடலில் செய்யமுடியும்.

    நம்முடைய உணவுகள் baking ,முறைக்கு மாறுபட்டவை. நீரில் கொதிக்க வைத்தல், ஆவியில் வேக வைத்தல் நெருப்பில்/கல்லில் சுடுதல் என்ற முறையில் செய்யப்படுபவை. நமக்கு அவன் தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. கால்கிலோ கேக் விலையைக் கேட்டால் வீட்டில் செய்தால் அதைவிடக் குறைவான செலவிலும், நிறைவான அளவிலும் வரும். என்னோட மைக்ரோவேவ் கன்வெக்‌ஷன் இல்லை. :) பையர் தொலைபேசியில் கேட்டார், கிறிஸ்துமஸ் கேக் பண்ணலையானு! உடனே எழுந்த எண்ணங்களைப் பதிவாக்கினேன். :)

      Delete
  5. வெளியில் காசு கொடுத்து வாங்கும் கேக்குகள் பிள்ளைகளின் பிரியத்துக்கு நாங்கள் வீட்டில் அவனில்லாமல்தான் கேக் செய்கிறோம் பூவையின் எண்ணங்களில் எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, கூடுமானவரை வீட்டில் தான் செய்வேன். கடை கேக்கில் முட்டை, ரம் போன்றவை சேர்ப்பார்களே! :) எப்போதோ யாருக்கானும் கொடுக்க வேண்டி வந்தால் வாங்கிக் கொடுக்கும்போது ருசி பார்த்தது உண்டு! அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் கூட முட்டையில்லாக் கேக் அருமையான சுவையில் கிடைக்கிறது. ஆகவே பிரச்னை இல்லை.

      Delete
  6. ஆர் கே நகர் மட்டுமில்லை, 2G யும் மூட் அவுட் செய்கின்றனதான். என்ன செய்ய? அரசியல்வாதிகளிடம் இல்லாத நேர்மை லஞ்சம் வாங்கிய மக்களிடம் இருக்கிறது. இவர்களும் இந்நிலையிலிருந்து இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து மாறக்கூடும். மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று சொல்வார்கள். கலிகாலம்.

    ReplyDelete
    Replies
    1. 2ஜிக்கு இது இறுதித் தீர்ப்பல்ல. அதோடு நீதிபதி ப்ராசிக்யூஷனுக்குக் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் ரொம்ப உற்சாகத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ப்ராசிக்யூஷன் வாதங்கள் வக்கீல் மாறினதும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதைத் தான் நீதிபதி சுட்டிக் காட்டி இருப்பதோடு அப்பீல் பண்ணலாம் என்றும் சொல்லி இருக்கார்.

      Delete
    2. சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பில் குற்றமுள்ளவர்கள் என்று வந்தால் அடுத்த பெரிய நீதிமன்றத் தீர்ப்புகளில் குற்றமற்றவர் என்று வர வாய்ப்புகள் அதிகம். இங்கேயே குற்றமற்றவர் என்று வந்துவிட்டால் அடுத்தடுத்த நிலைகளில் மாறுவது மெத்த கடினம். மேலும் இன்னும் எத்தனை வருடங்கள்... தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. சோ சொல்லி இருப்பது போல நாங்கள் வரப்போகிறோம்.... நாங்கள் வரப்போகிறோம்.. என்று சொல்லிச் சொல்லி வருமானவரிச் சோதனையோ, சி பி ஐ சோதனைகளோ வந்தால் அவர்கள் எதை எதை பதுக்க வேண்டுமோ அதை எல்லாம் பதுக்கல், ஒழிக்காமல் காத்திருப்பார்களா என்ன!

      Delete
    3. ஏற்கெனவே ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. :(

      Delete
  7. //நானோ ஸ்ரீராமோ எழுதமாட்டோம்.//

    அரசு பல சமயங்களில் மக்களின் சந்தேகங்களை போக்கக் கடமைப்பட்டிருக்கிறது. உடனுக்குடன் விளக்கம் தரப்படவேண்டும். இந்த அரசு இல்லை, எந்த அரசும் செய்வதில்லை. அவர்கள் எல்லாம் மிகவும் உயர் நிலையில் இருப்பது போலவும், மக்கள் அடிமைகள் போலவும் காலம் தாழ்ந்த பதில்கள் வரும். அதுவும் அரைகுறையாக. அந்த பதிலும் காப்பாற்றப்படுமா என்பதும் நிச்சயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதிலும் எல்லாவற்றிற்கும் வாய் மூடிக் கொண்டிருப்பது நல்லதல்ல. அதிலும் சமீபத்தில் குமரி மாவட்டத்தில் திரு பொன்.ராதாகிருஷ்ணன், திருமதி நிர்மலா சீதாராமன் இருவரும் சென்று பார்த்து விட்டு நலத்திட்டங்களை அறிவித்த பின்னர் எட்டு நாட்கள் கழித்து மக்கள் போராட்டம்! என்ன சொல்வது! திட்டமிட்டுப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

      Delete
    2. /////நானோ ஸ்ரீராமோ எழுதமாட்டோம்.////

      இந்த ஒரு வசனத்துக்காகவே ஒப்பேது கொமெண்ட் போட்டிருக்கிறார்ர் ஸ்ரீராம் ஹா ஹா ஹா:).. ஒருவேளை ரசிகர் மன்றத்தைக் கலைச்சிட்டாரோ?:)

      Delete
  8. அரசு வெளிப்படையாக பதில் கொடுக்கும் பட்சத்தில் அரசை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது என்று இருப்பவர்களின் குரல்கள் அமுங்கலாம். இந்த அரசை ஊழலில் குறை கூற முடியாதவர்கள் மதத்தை எதிர்ப்பதற்குக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை மட்டும் பகடி செய்வது. இல்லா விட்டால் ஜாதியை இழுத்து வந்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நேரடியான குற்றம் சாட்ட முடியவில்லை என்பதோடு பல அரசு அதிகாரிகளின் வேலைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் எல்லோரும் அரசுக்கு எதிராகத் தானே செயல்படுவார்கள். அதன் தாக்கம் தான் நாம் பார்ப்பது! நேர்மையான ஆட்சியை ஏற்க முடியவில்லை.

      Delete
    2. இப்போ எல்லாக் கட்சிகளும் முக்கியமாக் காங்கிரஸ் கட்சி, மம்தாவின் திரினாமுல் கட்சி ஆகியவை தாங்களும் இந்துக்களின் ஆதரவாளர்கள் எனக் காட்டிக் கொள்வதில் முனைந்திருக்கிறார்கள். விரைவில் தமிழ்நாட்டிலும் மாறலாம். ஆனால் அந்த அளவுக்கு வட மாநிலம் போல் எதிர்ப்பு இங்கே இல்லை! :(

      Delete
  9. ஆர் கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளாய் கமல் காணாமல் போய்விட்டார். அவர் அவரின் விஸ்வரூபத்தில் மூழ்கி இருக்கக் கூடும். ரஜினி மீண்டும் ஒரு தவணை வாங்கி இருக்கிறார். இவர்கள் யாருமே தேவ தூதர்கள் இல்லை. வந்தவுடனே கையை ஆட்டி மற்ற அரசியல்வாதிகளின் மனதையும், மக்கள் மனதையும், நிலையையும் மாற்றிவிட!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், கமல் பேசுவதை எல்லாம் லட்சியம் செய்வதே தப்பு. நேத்திக்குப் பாருங்க ரஜினிகாந்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்! என்னவோ இந்த மாநிலம் மட்டுமே சினிமாக்காரங்க பின்னாடியே சுத்துது! ஏதோ விண்ணிலிருந்து இறங்கி வந்துட்டாப்போல!

      Delete
    2. ரஜினி கமலை லட்சியம் செய்யவேண்டாம். ஆமாம். என் கருதும் அஃதே!

      அதே சமயம், இப்போது ஆர் கே நகர் தேர்தலை எடுத்துக் கொள்வோம். சுயேச்சையாக நின்ற டிடிவிதி வென்றார். எப்படி வென்றார் என்பது ஒருபுறம். மறுபுறம் அவருக்கு அங்கு மாற்றாக வாக்களிக்க யார் இருந்தார்கள்? மதுசூதனன்? மருது கணேஷ்? பாஜக தமிழகத்தில் இன்னும் கால் ஊன்றவே இல்லை. மேலும் அது தமிழகத்தில் ஏகப்பட்ட அவநம்பிக்கைகளைப் பெற்றிருக்கிறது. நமக்கு நல்ல சாய்ஸ் இல்லை.

      Delete
    3. பிஜேபியைப் பற்றி மதவாதம் என்று சொல்வதோடு அல்லாமல் பார்ப்பனர்கள் கட்சி என்றொரு பெயரையும் தமிழ்நாட்டில் பெற்றிருக்கிறது. மேலும் அரசு செய்யும் பல நல்ல நலத்திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேர விடாமல் போராட்டங்களை ஆரம்பிக்க மக்களையும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும் தூண்டி விடுகின்றனர். சமீபத்தில் வளர்மதிக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. அதன் பின்னராவது குழந்தைகளை இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள வைக்காமல் அரசியல்வாதிகள் போராட்டங்களை நடத்த வேண்டும்.

      Delete
  10. கீதாக்கா நான் ப்ளம் கேக் செய்தேன் நேற்று. எக், ரம் எதுவும் போட மாட்டேன். ப்யூர் வெண்ணைதான், எந்த பேக்கிங்க் செய்தாலும் நோ எக்...டால்டா, மார்க்ரைன் எதுவும் சேர்க்க மாட்டேன்.

    பீஸா மாவு கூட வீட்ல கலந்து வைத்து செய்வதுண்டு. ரொம்ப நல்லா வரும்...ப்ரெட், பன் செய்ததுண்டு. அதே போல மசாலா பன் -அதான் பங்களூர் ஐயங்கார் பேக்கரில ஃபேமஸ் பன் ஸ்பைஸ்டா இருக்குமே அந்த மசாலா பன், அப்புறம் பஃப்/வெஜ் பேட்டிஸ் என்று நிறைய மகன் இருக்கும் வரை செய்ததுண்டு. வித விதமான கேக், கேக் வித் ஐஸிங்க், வித்தவுட் ஐஸிங்க், மார்பிள் கேக், ப்ளாக்ஃபாரஸ்ட், வொயிட் ஃபாரஸ்ட், வெட்டிங்க் கேக், மோல்ட்டன் லாவா கேக், budt cake, டேட் அண்ட் வால்னட் லோஃப், பைனாப்பிள் அப்சைட் டவுன் கேக், ஆப்பிள் பை, ஆப்பிள் டார்ட் என்று...மகன் இல்லை என்பதால் செய்வது அபூர்வம். மகன் இருக்கும் போது அவனது நண்பர்கள் வருவார்கள்... யாரேனும் உறவினர் கேக்கும் போது செய்து கொடுக்கிறேன்.
    பீட்ஸாவில் நான் நிறைய குடைமிளகாய் வெங்காயம், தக்காளி சேர்த்துவிடுவேன். குழந்தைகள் என்றால் சீஸும்...பெரியவங்க என்றால் சீஸ் குறைவாக...

    அக்கா மைக்ரோவேவில் கன்வெக்ஷன் மோட் இருந்தால் பேக்கிங்க் செய்யலாமே...ஆனால் நான் பேக்கிங்க் அவனில் தான் செய்வது வழக்கம். என்னிடம் மைக்ரோவேவ் இல்லை ஆனால் உறவினர் வீட்டில் இருக்கிறது அங்கு கன்வெக்ஷன் மோட் இருப்பதால் அதில் செய்வது....

    டொனட் வீட்டில் செய்வதுண்டு. உங்களைப் போலத்தான் அக்கா எல்லாம் முன்பு...எனக்கும் பேக்கிங்கில் ஆர்வம் உண்டு. வீட்டில் உறவினர்களும் சாப்பிடுவார்கள். மாமியார், மாமனார் முன்பு சாப்பிடுவார்கள்:. இப்போது மாமனார் இல்லை மாமியாரும் வயதாகிவிட்டதால் ரொம்ப சாப்பிடுவதில்லை.

    போணியாகலைனா கொஞ்சமா கப் கேக் போல செஞ்சு நீங்க சாப்பிடலாமே அக்கா...டீ கேக்,சுகர் கம்மியாதானே போடறதுண்டு இல்லையா...

    ஹான் சொல்ல விட்டுப் போச்சு, நேத்து ப்ளம் கேக் சீனி போடாமல் வெல்லம் போட்டுச் செய்தேன். ரொம்ப நன்றாகவே இருந்தது அக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, உங்க அளவுக்குக் கேக்குகள் செய்ததில்லை. அதிகம் போனால் ப்ளம் கேக், அதிலேயே பாதாம், முந்திரி சேர்த்தோ டுட்டி ஃப்ரூட்டி சேர்த்தோ! எப்போவானும் ஐஸிங் செய்வேன். மற்றபடி ப்ரெட், பன், பிட்சா எல்லாம் செய்திருக்கேன். இப்போப் பையர் கேட்டதாலே கேக் சாப்பிட ஆசை வந்தது. மற்றபடி யு.எஸ்ஸில் அநேக நாட்கள் கேக், ஐஸ்க்ரீம் கேக் எனச் சாப்பிட்டாச்சு! அங்கே அமுல் ஐஸ்க்ரீம் கேக் கிடைக்கும்.

      Delete
    2. கீதா ரங்கன் - நீங்க எழுதியிருப்பவைகளைக் கண்டு ஆச்சரியம் எனக்கு. எவ்வளவு வெரைட்டி செய்துபார்க்கிறீர்கள். ஒரு நாள், உங்கள் பிளம் கேக் 1 சிறிய துண்டு சாப்பிட்டுப்பார்க்கிறேன்.

      முன்பெல்லாம் டோனட் போன்றவை கடைகளில் வாங்குவேன். அப்புறம் அதன் ingredients தெரிந்தவுடன் சாப்பிடுவதில்லை (ஏகப்பட்ட fat என்று)

      Delete
    3. அவ்வ்வ்வ்வ்வ் கீதா என்ன இது கேட்டறிங் நடத்தலாமே:)..

      Delete
    4. நாங்க வெளிநாட்டுக்குச் சென்று வந்தாலும் அங்குள்ள உணவு வகைகளை முக்கியமாக் கேக், டோனட் போன்றவை சாப்பிட்டதில்லை. முழு கோதுமை ப்ரெட் தான் பையர் வாங்குவார். பெண் வீட்டிலும் அதே. ஆகவே ப்ரெட் மட்டும் சாப்பிட்டதுண்டு. டோனட் எல்லாம் சாப்பிட்டே பார்த்ததில்லை. பெண்ணிடம் வேடிக்கையாக பாதுஷா நானே பண்ணிச் சாப்பிட்டுக்கறேன், இது வேண்டாம்னு சொல்லிடுவேன். கேக், ஐஸ்க்ரீம் கேக் எல்லாம் இந்தியத் தயாரிப்பு என்பதால் அதெல்லாம் சாப்பிடுவோம்.

      Delete
  11. ஆர் கே நகர் கேக்காதீங்க அது வேண்டாம் அக்கா...தமிழ்நாட்டிற்கு சாபம்!
    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கீதா. மட்டமான தேர்தல்!

      Delete
  12. கேக் கடைல்யில் வாங்கி சாப்பிடுவது தான் எனக்கு சுலபம்.

    அரசியல் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கருத்துக்கு நன்றி.

      Delete
  13. என்ன கீதாக்கா? சமையலும் அரசியலும் ஒண்டோ?:).. கொயப்புறீங்களே?:).. அதுசரி நல்லாத்தானே இருந்தீங்க எப்போ இப்படித் திடீரென குதிச்சிட்டீங்க அரசியலில் ஜொல்லவே இல்ல:)).. இப்போ நான் ஆருக்கு வோட் போட்டட்டும்?:)

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, குழப்பல்லாம் இல்லை. உங்க ஓட்டை (ஓடு இல்லை) வோட்டு, எனக்கே போடுங்க!

      Delete
    2. ஹா ஹா ஹா என் வோட் உங்களுக்கே!:) ஆனா ஒரு கண்டிஷன்.. அந்நேரம் நீங்க இருமாமல் ஸ்ரெடியா நிக்கோணும்:)..

      Delete
    3. அதிரடி, இது என்ன அநியாயம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  14. வரிக்கு வரி.. அவன்:) அவன்:) என ஆரைத்திட்டுறீங்க?:) அரசியல் வாதிகளை எல்லாம் அப்பூடித்திட்டக்குடா தெரியுமோ:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

    அது அவன் இல்லை அவண்:) எனத்தான் மீ சொல்லுவேன்:)) ஒரு மருவாதைக்காகத்தான்:))..

    இன்னொன்று கீதாக்கா.. மேலே ஜே கே அவர்கள் சொன்னதைப்போல, மைக்குரோவெவ் உடன் சேர்ந்து அவணும் இருந்தால் மட்டும்தான் பேக் பண்ண முடியும்.. தனிய மைக்குரோவேஃப் எனில் முடியாதே...

    பிட்ஷா வை வேணுமெண்டால் நீங்கள் அடுப்பிலேயே தோசைக் கல்லில் முதலில் பேஸ் ரொட்டியை பிரட்டிப் போட்டு சுட்டு எடுத்து விட்டு[அரை வேகுதல் போதும்], பின்பு மேலே தூவும் மரக்கறிகளை கொஞ்சம் நொன் ஸ்ரிக்கில் சூடு படுத்தி விட்டு, பின்னர் சீஸ் சேர்த்து இந்த ரொட்டியின் மேல் போட்டு ஸ்லோ ஃபயரில் நெடுநேரம் விட்டு எடுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. தோசைக்கல்லில் பிட்சாவை வைச்சுட்டு அப்புறமா நான் தான் சாப்பிடணுமாக்கும். இதென்ன ஊத்தப்பமானு கேட்பார். அதெல்லாம் பண்ணிடுவேன். பிரச்னை இல்லை! :) அவன் இல்லை என்பது தான் கொஞ்சம் இன்னமும் வருத்தம்! :)

      Delete
  15. இந்த அம்பேரிக்கா:) வாலதான்.., அவன்:) காணாமல் போயிட்டாரோ?:)) ஹா ஹா ஹா:))..

    ////நானும் நம்ம அதிரடி அதிரா மாதிரி ஊசிக்குறிப்பெல்லாம் போடலாமோனு ஜிந்திக்கிறேன். ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ விடுங்கோ.. இந்த தேம்ஸ் ஐ வித்தாவது என் ஊசிக்குறிப்புக்கு கொப்பிவலது:) வாங்காமல் விடமாட்டேன்ன்ன்ன்:)) இது அந்த கீதாக்கா வீட்டு.. தானம் பண்ணிய அவன்:) மேல் சத்தியம்!!!:)..... ஹையோஓஓ இந்தக் கீதாக்கா என்னையும் பப்புளிக்கில கெட்ட வார்த்தை பேச வச்சிட்டாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா.. கீதாக்க்கா நித்திரையால எழும்பி வந்து எங்கள் புளொக்கின் பழைய போஸ்ட்டை ரீஈஈஈஈஈ பிரெஸ்:) பண்ணிக்கொண்டிருக்க.. அதுக்குள் துரை அண்ணன் முதல் கொமெண்ட் போட:)).. இவ அங்கின கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்லிட்டு இங்கின எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல வருவதற்குள் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதிரா,ஊசிக்குறிப்புக்குக் கொப்பிவலது(அதென்ன, காப்புரிமையா?) வாங்கினால் மட்டும் சும்மா இருப்பேனா என்ன? நாங்களும் வாங்குவோமுல்ல! என்ன போங்க! காலம்பர தாமதமா வந்துட்டோமேனு பார்த்தால் கௌதமன் சார் இசைவிழாவில் தூங்கிட்டாராம். பதிவே வரலை! :) காவிரியில் குதிச்சுடலாம்னு வந்துட்டேன்.

      Delete
    2. ஹா ஹா ஹா நீங்க பல வருசமா இருந்தும் எங்கள் புளொக்கின் புதன் கிழமை பற்றி இன்னும் அறியவில்லை:), நான் அங்கு கால் வச்சு ஒரு வருடம் அதுக்க்குள் நேர காலம் அறிஞ்சு வச்சிருக்கிறேன்:)

      Delete
  16. //மற்ற செயற்கைப் பொருட்கள் சேர்த்தது இல்லை, முட்டை உட்பட!//

    என்ன கீதாக்கா... நீங்க முட்டை சாப்பிட மாட்டீங்கதானே????

    ReplyDelete
    Replies
    1. அதிரா, கேக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டால் முட்டை இருக்குமே. அப்படிச் சாப்பிடுவது தான்! மற்றபடி முட்டையை உடைச்சது கூட இல்லை. குழந்தைகளுக்குக் கொடுக்கையில் நம்ம ரங்க்ஸே உடைச்சுக் கொடுத்துடுவார். அதுக்குத் தனி கிண்ணம், தம்பளர் , ஸ்பூன் எல்லாம் உண்டு. அமாவாசை, பௌர்ணமினா வாங்கினதில்லை! வீட்டுக்குள்ளே கொண்டு வர மாமியார் தடா! ஆகவே தோட்டத்திலோ வெளியே வராந்தாவிலோ அல்லது மொட்டை மாடிக்கோ எடுத்துட்டுப் போவாங்க! :)))))

      Delete
    2. ஓ அப்படியா?.. கடையில் பெரும்பாலும் எது வாங்கினாலும் இப்போ முட்டை சேர்த்தே செய்கிறார்கள்.. பன், பிட்ஷா, சொக்கலேட்ஸ் இப்படி நிறையச் சொல்லலாம்... அதனாலதான் இங்குள்ளவர்கள் வெஜிடேரியன்ஸ் எனில் அதுக்குள் முட்டையும் அடங்கும். வெள்ளையர்களிலும் வெஜிடேரியன்ஸ் மற்றும் வீகன்ஸ் எனவும் இருக்கிறார்கள்... இந்த வீகன்ஸ் என்பவர்கள் எப்படி எனில்... மிருகங்களில் இருந்து வரும் எதுவும் தொடமாட்டார்கள்.. சீஸ், பால், முட்டை எதுவும் சாப்பிடமாட்டார்கள்.

      நாங்களும் அப்படித்தான் கீதாக்கா, அசைவத்துக்கு எல்லாம் புறிம்பாகவே பாத்திரங்கள்,பிளேட்ஸ், கறண்டி, கட்டிங் போர்ட் அனைத்தும் வைத்திருப்போம்.. வைத்திருக்கிறேன்.. கலக்க மாட்டேன், பிள்ளைகளுக்கும் பழக்கி விட்டேன், அவர்களும் பார்த்து எடுப்பினம்.

      Delete
  17. வந்திட்டேன் :)
    இந்த மணல் கேக் அவன் எங்க வீட்லயும் இருந்தான் அம்மா செய்வாங்க ..ஆனா எனக்கும் இந்த கேக்குக்கும் ஏழாம் பொருத்தம் ..கணவரின் அம்மா பேக்கரிங்களுக்கு செய்து கொடுப்பார்களாம் ..
    இவரும் அவங்க அம்மாகிட்ட கத்துக்கிட்டதை எனக்கு சொல்லித்தர முயன்றார் :) நோ சக்ஸஸ் ..
    இங்கே க்ளூட்டன் இல்லா கேக் மிக்ஸ்லாம் கிடைக்குது ஆனாலும் எங்க வீட்ல பொண்ணும் நானும் கேக் :)காத கட்சி .
    பிட்ஸா ரெடிமேட் பிரெட் மிக்ஸ் வாங்கி பிசைந்து சின்ன வட்டங்களா தட்டி அவனில் 10 நிமிஷம் வச்சி எடுத்திட்டு ஆறினதும் ப்ரீசரில் வச்சிட்டா தேவையான நேரம் எடுத்து வெஜிடபிள்ஸ் சீஸ் சாஸ் சேர்த்து அவனில் வச்சி எடுப்பேன் .
    //கோயில்கள் அனைத்தும் வணிக வளாகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.//
    வேதனையான உண்மை ..

    //சினிமா நடிகரை நடிகராகத் தான் பார்க்கணும். அதோடு இல்லாமல் அவரும் நம்மைப் போன்ற மனிதர் தான்! //
    இவர் அரசியலுக்கு வரப்போறதா ரெண்டு மூணு மாசம் முன் ஒரே பில்டப் கொடுத்த டைமில் நான் ஒரு பதிவை பயந்திட்டே போட்டேன் ..எதுக்கு சொல்றேன்னா இவரை தெய்வமா நினைக்கிற சிலரும் இருக்காங்க :(
    அவர் politics வரட்டும் வராம போகட்டும் ஆனா இந்த ரசிகசிகாமணிகள் பண்ற அட்டகாசம் நெஞ்சு பொறுக்கலை

    ReplyDelete
    Replies
    1. வாங்க பேப்பர்க்ராஃப்ட்ஸ், மணல் போட்டுச் செய்வதே சுலபம்னு இப்போத் தோணுது. எங்க பள்ளியில் (மதுரையில்) ஹோம் சயின்ஸ் மாணவிகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க! நான் வேறே க்ரூப் என்பதால் அவங்க பண்ணிட்டுச் சாப்பிடக் கூப்பிடுகையில் போய்ச் சாப்பிடுவேன். :)))))
      சினிமா நடிகர்களுக்கு இங்கே கொடுக்கும் முக்கியத்துவம் வேறே எங்கேயும் பார்க்க முடியாது! அது என்னமோ தெரியலை அப்படி ஒரு மயக்கம்! :( படித்தவர்கள் கூட இதுக்கு விதி, விலக்கு இல்லை!

      Delete
  18. கையில் இருந்த ஒரு பொருளை சுலபமாய் யூஸ் செய்து பழகின பின் அதை தவிர்த்து வேறொன்றில் முயற்சிக்கவேண்டுமென்றால் கஷ்டம்தான் கீதா சிஸ்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, சில பொருட்கள் நமக்கு அத்தியாவசியத் தேவை என்னும்போது அதைக் கொடுத்தால் கொஞ்சம் வருத்தம் இருக்கத் தான் செய்கிறது. இப்படித் தான் அருமையான கல்லுரல், அம்மியை ராஜஸ்தானில் தானம் செய்துட்டு சிகந்திராபாத் வந்தால் குடி இருந்த வீட்டில் கல்லுரல், அம்மியே போடலை! நீங்க வாங்கிக்கோங்கனு சொல்லிட்டாங்க! சிகந்திராபாதில் கல்லுரல் மாவுக்கல் போல் இருந்ததால் அப்புறமா சென்னையிலிருந்து ரயிலில் வரவழைச்சோம். ஒட்டிக்கு இரட்டி செலவு!:( அப்போல்லாம் மிக்சியும் கிடையாது!

      Delete
    2. பூவிழி, உங்களுக்குப் பதில் சொல்லவே இல்லை என்பதை இப்போத் தான் கவனிச்சேன்! மன்னிக்கவும்.

      Delete
  19. சமையலே ஒரு அரசியல். முட்டை சேர்க்காத கேக்கும் ஒரு அரசியல். கேக்கும் சரி, பிசாவும் சரி வீட்டில் செய்தால் எனக்கு சரியாக வராது. கடையில் வாங்கி சாப்பிடுவது போல வராது என்ற மனமயக்கம். பிசா அவ்வளவு பிடிப்பதில்லை. கேக் ரொம்ப இஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. பிட்சா சில சமயம் நல்லா இருக்கு! பல சமயங்களிலும் சாப்பிடக் கஷ்டம்! ஹூஸ்டனில் ஒரு கடற்கரையில் (பெயரை மறந்துட்டேன்.) புராதனமான பிட்சா கடை ஒன்றில் பையர் வாங்கித் தந்தார். சீஸ் பிட்சா! நன்றாக இருந்தது! ஆனால் சின்னது தான். நம்ம ஊர் தோசை அளவே!

      Delete
    2. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், வான்மதி!

      Delete
  20. அககாவ் அங்கே எங்கள் பிளாக் சரியா 6 மணிக்கு டாஷ் போர்ட்லருந்து குதிங்க :) இன்னிக்கு துரை அண்ணாவை விடக்கூடாது ..உங்க பிளாக் ல இப்போ இருந்தா அங்கே மிஸ் ஆகும் ஸோ ரன் ரன்

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கேயும் இங்கேயுமாத் தான் இருந்தேன். அப்படியும் துரையும் முந்திட்டார், நீங்களும் தான்! :)

      Delete
    2. ஓ... இங்கேயும் பேச்சு ஓடிக் கொண்டிருந்தா?

      Delete
    3. ஆமாம், தினம் தினம் வரணும்னு தான் நினைக்கிறேன். இன்னிக்கு மறந்தே போச்சு! :)

      Delete
  21. அதிரா மாதிரி ஊசிக்குறிப்பெல்லாம் போடலாமோனு ஜிந்திக்கிறேன். /

    உங்களுக்கு ஊசிக்குறிப்பு எல்லாம் வராது.ஊசிப்போன குறிப்பு (புலம்பல்) தான் வரும்.

    ReplyDelete
    Replies
    1. :)))))) நீங்க என்னோட ஆரம்பகாலப் பதிவுகளைப் படிச்சதில்லை! அதோடு இப்போ நடக்கும் நடப்புகள் அப்படித் தான் இருக்கின்றன. முக்கியமாத் தமிழ்நாட்டு நிலைமையையே பார்த்தா! அழுகை தான் வரும்! :(

      Delete