எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 10, 2018

ஒரு சாமானியர் பிரதமர் ஆனால் எதிர்கொள்ள வேண்டியவை! :(

Image may contain: 1 person, text

இது பிரதமரின் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு ட்வீட். இதைப் பிரதமரின் சார்பில் அவர் அலுவலக ஊழியர் ஒருவர் கொடுத்திருக்கிறார். இதைக் கேலி செய்து நேற்று முகநூலில் சில இளைஞர்கள் பிரதமரைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். மேலும் அவரின் ஆங்கில உச்சரிப்பையும் கேலி செய்தார்கள். சாதாரண அரசுப் பள்ளியில் படிச்ச நாங்களே நல்லா ஆங்கிலம் பேசறோம். இவரால் முடியலையே என்று அவர்கள் கிண்டல்! ஏனெனில் பிரதமர் ஒரு டீக்கடைக்காரர் அல்லவா?  அதான் அவர்களின் முக்கியக் கருத்தே!  எல்லோருமே அந்த இளைஞர்களைப் போல திறமையானவர்களாக இருக்க முடியாதே!

எனக்குத் தெரிந்து வட மாநிலங்களில் ரிசர்வ் என்பதை "ரிஜர்வ்" என்றே சொல்லுவார்கள்.  "நெசஸரி" என்பதை "நெஜஜரி" என்பார்கள். "மெஷர்" என்பதையும் "மெஜர்" என்பார்கள்.  ஆரம்பத்தில் எங்களுக்கும் சிரிப்பு வந்தாலும் எல்லோருடைய உச்சரிப்புமே அப்படியே இருக்க இதான் அவர்களின் உச்சரிப்பு, பொதுவானது என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் பிரதமருக்குக் கல்லூரிக்குச்  சென்று படித்திருக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்காது. அதோடு இல்லாமல் பொதுவாகவே ராஜஸ்தான், குஜராத், உ.பி. ம.பி. பிஹார் இங்கெல்லாம் இப்படியே உச்சரிப்பதால் அது தான் சரியானது என்னும் எண்ணம் இருக்கலாம். வட மாநில மக்கள் சொல்லுவது மதராஸிகளின் ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர் போலவே இருக்கும் என்பது தான்.  அவங்க உச்சரிப்பு சரியில்லை தான். ஆனால் அதற்காக ஒருவரை எவ்வளவு கீழ்த்தரமாகக் கேலி செய்வது? அதுவும் ஓர் நாட்டின் பிரதமரை! ஏனெனில் அவர் ஒரு டீக்கடைக்காரர்! அதான் இங்கே முக்கியம்.

வட மாநிலங்களின் உச்சரிப்பே அப்படித் தான். இவர் மட்டுமல்ல. ஆக நீங்க கேலி, கிண்டல் செய்வதெனில் வட மாநில மக்கள் மொத்தப்பேரையும் செய்ய வேண்டும். இதிலே சில பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் போன்றோர் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், இந்தியாவின்  டூன் ஸ்கூலிலும் மற்ற பிரபல கான்வென்ட்களிலும் படித்த தலைவர்கள் இருக்கலாம். அவர்கள் உச்சரிப்பு ஆங்கிலேயர் போலவோ அமெரிக்கர் போலவோ இருக்கலாம். மோதி மாதிரி டீக்கடைக்காரர்கள், சாமானியர்கள் உச்சரிப்பு இது தான்.

ரிசர்வேஷன் செய்யப் போனால் வட மாநிலங்களில் கவுன்டரில் உள்ளவர் கூட ரிஜர்வேஸன் என்றே கூறுவார்! சென்னையில் மக்கள் பள்ளியை இஸ்கூலு என்பார்கள். பல்லியை Ba(ப)ல்லி என்றும், குடிசையை Gu(கு)டிசை என்றும் சொல்லுவார்கள். நாங்கள் இதை எல்லாம் கேலி செய்வதில்லை. ஏனெனில் அவங்க பார்வையில் நாம் தப்பாக உச்சரிப்பவர் ஆக இருப்போம் என்னும் எண்ணம் எங்களிடம் உண்டு!

எத்தனை தரம் நீங்க கேலி பண்ணினாலும் அப்படித் தான் பேசுவார்கள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அவங்க குஜராத்தி உச்சரிப்பையும், ஹிந்தி உச்சரிப்பையும் அவங்க போல நீங்க பேசலாம். ஆனால் அவங்கல்லாம் உங்களைப் போல் திறமையானவர்கள் அல்ல! வெகு சாமானிய மக்கள்! :) சுமார் 20,25 வருட வட மாநில வாழ்க்கையில் மக்களுடன் பழகியதில் சாமானியர்கள் என்பது நன்கு புரிந்தது.

ஆக்கபூர்வமாகப் பிரதமர்  நாட்டுக்கு என்ன செய்தார் என்பதைச் சிந்திக்காமல் இம்மாதிரி அவருடைய நடை, உடை, பாவனை, பேச்சு, உச்சரிப்பு போன்றவை விமரிசனத்துக்கு உள்ளாவது அநேகமாக இந்தப் பிரதமரிடம் மட்டும் தான். ஏனெனில் இவர் சாமானியர். கீழே இருந்து மேலே படிப்படியாக முன்னேறியவர். நாம் வாய் தான் கிழியப் பேசுவோம். தலித்துகளையும், மற்ற பிற்பட்ட வகுப்பினரையும் முன்னேற்ற வேண்டும் என்று. ஆனால் அவர்களில் ஒருத்தர் முன்னேற்றம் கண்டு தலைவராக வந்துவிட்டால் நம்மால் பொறுக்க முடியவில்லை பாருங்கள். நாலு வருஷமாக எவ்வளவு பேசுகிறோம். இதுவே வேறே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எனில் பேசுவோமா! அடக்கிக் கொண்டு வாய் மூடிக் கொண்டு இருப்போம். நாம் அப்படியே பழகி விட்டோம்.


தவறாக இருக்கும் என்றாலும் தைரியமாக அதைப் பதிவிட்ட திரு மோதியைப் பாராட்டுகிறேன். ஜப்பானியர்கள் ஆங்கிலம் பேசலைனா, நாம் அதைப் பாராட்டுவோம். புகழ்வோம். ஆனால் நம்மில் ஒருவர் பேசத் தெரியாமல் தப்பாகப் பேசினால் கிண்டல், கேலி, நையாண்டி இன்னும் எவ்வளவு மட்டமாகக் கீழ்த்தரமாகப் பேச முடியுமோ அவ்வளவும் பேசுவோம்.

இதுக்கு பதில் சொன்ன அந்த இளைஞர் சொல்கிறார்: "நான் சாதாரண கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச ஆள்.. என்னால சரியா சொல்ல முடிகிற உச்சரிப்பை அவங்க ஏன் சொல்ல முடியல ?"// தமிழிலே இங்கே எல்லோரும் சரியான உச்சரிப்பைத் தான் காட்டுகிறார்களா? அமைச்சர்கள் உட்ப்ட? முதல்லே தமிழ் பேசுபவர்களைத் திருத்துங்க! அப்புறமா வடநாட்டுக்குப் போகலாம். அங்கே சொல்லிக் கொடுப்பதே ரிஜர்வேஸன் என்று தான்! ஆசிரியர்களின் உச்சரிப்பே அப்படித் தான் இருக்கும். எங்களைப் போன்ற தென்னிந்தியர்கள் வேணுமானால் குழந்தைகளைத் திருத்துவோம். ஆனால் அங்கே அது தான் அவங்க உச்சரிப்பு. டெக்னிக் என்பதை தக்னிகி என்பார்கள். இப்படி எத்தனையோ இருக்கு! ஒட்டுமொத்த மக்களின் உச்சரிப்பே ரிஜர்வ் என்றே இருக்கையில் எத்தனை பேரைத் திருத்துவீங்க? இங்கேயும் சிலருக்கு ஷ, ஸ, ஹ வராது. உச்சரிப்பில் மாறுபாடு இருக்கத் தான் செய்யும். குறை சொல்லாமல் அவங்க சொல்வதைப் புரிஞ்சுக்கணும்.  எல்லாருமே அந்த இளைஞரைப் போல கெட்டிக்காரர்களாக இருக்க முடியுமா என்ன?

மேலும் அவர் சொன்னது! "இது பி எம் ஆபிஸில் இருந்து போட்ட பதிவு . ஆங்கிலம் தெரியாதவர் எல்லாம் அங்கே இருந்தால் அந்த ட்வீட்டை படிக்கிறவங்களுக்கு எது சரினு தெரியும் ?" // தெரியுது இல்லையா? இது பிரதமரே நேரடியாகப் போட்டது இல்லை என்பது? யாரோ செய்த தவறுக்கு அவரை ஏன் பொறுப்பாக்கறீங்க? 70 வருஷமாக் காங்கிரஸ் செய்யாதவற்றை எல்லாம் நான்கே வருடங்களில் அவர் செய்யலைனு கேலி செய்யறமாதிரி? ஒவ்வொன்றையும் அவர் நேரடியாகப் பார்த்துக் கவனித்துக் கொண்டிருந்தால் அப்புறமா அவருக்கு வேறே வேலையே இல்லையா? இதுக்கு அந்தத் துறை சார்ந்தவர்களுக்கோ அல்லது அந்த ட்வீட்டிலேயோ பதில் சொல்லி இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொண்டு திருத்தி இருப்பார்கள். அதை விடுத்துப் பிரதமரின் நடை, உடை, பாவனை, பேச்சுக்கள் என எல்லாவற்றையும் கேலி செய்வது தேவையே இல்லாதது.


இங்கேயும் ஆங்கிலத்தைத் தவறாகப் பேசும், எழுதும் அரசு அதிகாரிகள்/அமைச்சர்கள் உள்ளனர்! இன்னும் சொல்லப் போனால் தொலைக்காட்சி சானல்களில் வரும் சூடான செய்திகளின் தலைப்புக்களில் எவ்வளவு எழுத்துப் பிழைகள், பொருட்பிழைகள்! அதை எல்லாம் யார் கண்டிக்கின்றனர்? ஆங்கிலம் கலக்காமல் எந்தத் தொகுப்பாளர்/தொகுப்பாளினி பேசுகிறார்கள்?


ஆனால் அந்நிய மொழி ஒன்றை இந்திக்காரர் தமிழ்காரர் இருவரும் கையாளும் விதமே முக்கியம்// லட்சக்கணக்கான மக்களை அதுவும்    ஐந்து, ஆறு மாநில இந்தி பேசும் மக்களை நீங்கள் முயன்றால் திருத்துங்கள். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாம் ஹிந்தியை அதே போல் தவறாக உச்சரிப்பதை அவர்களும் கேலி செய்யலாமே! ஆனால் நீங்க எல்லாம் தான் ஹிந்தியே கற்றுக்கொள்ள மாட்டீர்கள்! ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன்போன்ற தமிழ்நாட்டு மொழிகளில் வல்லுநர்கள்! :))))) கூடியவரை தனி மனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து நிர்வாக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ பிரதமர் செய்யும்/செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டலாமே!

28 comments:

  1. சரியான வாதம்தான். ஆனால் கீதா அக்கா.. யாராயிருந்தாலும் ஆதரவு / எதிர் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். இதில் இன்னொரு விஷயம் ஆதரவு மன நிலையில் இருப்பவர்கள் கூட சுற்றி இருப்பவர்களால், சூழ்நிலையைப் பொருத்தும் கூட்டத்தோடு கோவிந்தா என்று இப்படி சொல்பவர்கள் உண்டு. போவட்டும் வுடுங்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இப்போ ராகுல் காந்தியின் சமீபத்திய ட்ரெஸ்ஸின் மதிப்பு (burberry jacket) குறித்து ஊடகங்களில் கண்டிருக்கலாம். ஆனால் அதே சமயம் மோதிக்காக இதை அவர் தன் சொந்தக் காசிலேயே வாங்கிக் கொண்டிருந்தாலும் பலத்த கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும். ஏனெனில் ராகுல் காந்தி பிறக்கையிலேயே வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறந்தவர் அல்லவா?என்ன வருத்தம்னா படிச்சவங்க கூட இப்படி வேறுபாடுபார்ப்பது தான்! :(

      Delete
  2. தங்களது ஆதங்கம் புரிகிறது படிக்காதவர்களை, படிக்காத காரணத்தால் படித்தவர்கள் தரம் தாழ்த்தி பேசுவது இந்தியாவிலேயே தமிழர்களுக்கு கைவந்த கலை.

    படிக்காத என்னை அபுதாபியில் பாராட்டியவர்கள் எல்லாம் பிறமொழிக்காரர்களே கிண்டலடித்தவர்கள் தமிழர்கள் மட்டுமே.

    இது எனது அனுபவம்.

    சாதாரண மனிதன் எனக்கே இப்படி என்றால் பொதுநிலையில் இருக்கும் பிரதமர் ???

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இந்த விஷயத்தில் நானும் கொஞ்சம் இல்லை; நிறையவே அனுபவப் பட்டிருக்கேன். என்னோட ஹிந்தி, ஆங்கிலம் எல்லாமும் விமரிசனத்துக்கும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது! அதே சமயம் வட இந்தியர்கள் பாராட்டினார்கள். :)) ஆகவே இதன் தாக்கம் உங்களுக்குள் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

      Delete
  3. எனக்கும் பெரிய பதவியிலிருக்கும் பீஹாரிகள், தில்லி வாலாக்களின் ஆங்கிலம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. என்னுடைய ஆங்கிலத்தையே 'டிபிக்கல் இந்தியன் ஆங்கிலம்' என்றுதான் அமெரிக்கர்கள் (கான்ஃபரன்ஸ் காலின் போது) சொன்னார்கள். அதனால் என்ன.. ஆங்கிலம் ஒரு மொழிதானே.

    இப்போதெல்லாம் மீம்ஸ் போடுபவர்களும், விமர்சனம் செய்பவர்களும் அதிகரித்துவிட்டார்கள். அந்த 'அமெரிக்க' ஆங்கிலம் தெரிந்த தமிழன், தன் அறிவுத் திறனால் ஐ.ஏ.எஸ் பரீட்சையில் வட நாட்டவரைத் தோற்கடித்து முதல் ரேங்க் பெறுவார் (அல்லது பெற்றிருப்பார்) என நம்புவோம். (பெரும்பாலும் இவர்களெல்லாம் வெட்டிப் பயல்கள் என்றுதான் எனக்குத் தோன்றும்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த.பஞ்சாபியர்கள் மற்றும் உபியில் சில குறிப்பிட்டவர்கள், ஹிமாசல்காரங்க ஆகியோர் பேசும் ஆங்கிலம் ஓரளவு நன்றாக இருக்கும். என்றாலும் அவங்களும் இந்த மெஜர்மென்ட் என்பதைப் பயன்படுத்தியும் பார்த்திருக்கேன். பெரிய ராணுவ அதிகாரிகள் கூட அப்படிப் பேசி இருக்காங்க! :) ஆகவே இது பொதுவானதொரு ஸ்லாங் என்றே எடுத்துக்கணும் என்பது என்னோட கருத்து. சென்னைத் தமிழைப் போல!

      Delete
  4. poor quality of affordable health care இதற்கு முகநூலிலேயெ பதில் கொடுத்தீர்களா வலைத் தளத்தில் பதில் எழுதுவதால் என்ன பலன் வட இந்தியர்கள் தென் இந்தியர்களை GUDDA GUDDA VERY GUDDA (குட்ட குட்ட வெரி குட்ட என்று கேலி செய்வார்கள் மோடியைப் பற்றி யாரும் கருத்துசொல்லக் கூடாதோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள்கருத்துக்கு மிக்க நன்றி ஐயா. யாரும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். அவர்கள் நடை, உடை, பாவனை, பேச்சு ஆகியவற்றைக் கிண்டல் செய்வதைத் தவிர்த்து! இங்கே அதைப் பற்றி மட்டுமே பேசி இருக்கேன். :)

      Delete
    2. ஆமாம் அக்கா நடை, உடை, பாவனை, பேச்சு, அப்புறம் உருவம் இதைக் கிண்டல் செய்வது மிகவும் அநாகரீகம்.

      பொதுவாகவே கீதாக்கா இந்தச் சமூகம் புற அழகிற்குத்தான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது....

      கீதா

      Delete
    3. கீதா ரங்கன் - உண்மை. புற அழகில்தான் பெரும்பாலும் கவரப்படறோம். அழகில் அல்லது நிறத்தில் குறைந்தவர்களை கொஞ்சம் குறைவாகத்தான் மதிக்கிறோம், initially. ஆனால் கொஞ்சம் பழகிபின் அல்லது பேசினபின் அவர்களது அக அரகுமான் நம்மைக் கவரும்.

      நான் துபாய் ஹோட்டல் ஜிம்மில் ஒரு எத்தியோப்பியப் பெண்ணை சந்தித்தேன். அவள்தான் Gym பார்த்துக்கறான்னு அப்போ தெரியாது. நான் சும்மா ஜிம் ரிசெப்ஷன் சீட்ல உட்கார்ந்திருக்கான்னு நினைச்சேன். Not impressed with her look as well. நான் எக்சர்சைஸ் சம்பந்தமா கேள்வி கேட்கணும், instructor எங்க என்றதற்கு, அவள் என் எல்லாக் கேள்விகளுக்கும் விளக்கமா, அழகாச் சொன்னா. Very good attitude. அவள்ட சொன்னேன், பார்த்தபோது சாதாரண ரிசப்ஷனிஸ்ட் மாதிரி ஒரு பெண்ணுன்னு நினைத்தேன். அதுக்கு அவ, யாரையும் பார்த்து எடைபோடக்கூடாது, அது நல்ல பழக்கம் கிடையாது. பேசிப் பழகாம யாரையுமே எடைபோடக்கூடாதுன்னு எனக்கு சொன்னா. Amazing girl and she earned my respect.

      Delete
    4. நெ.த./தி.கீதா, ஆமாம், புற அழகிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் சாதாரணமாக இருந்தால் அவங்களுக்கு எதுவும் தெரியாது என்னும் எண்ணமும் சிலருக்கு உண்டு. நான் உயரம் குறைவாக இருப்பதால் பலவிதங்களில் அவமானம் அடைந்திருக்கிறேன். சிலர் எனக்கு உடல்நலம் சரியில்லை என்றால் கூட நீ தான் குண்டா இருக்கியே, உனக்கெல்லாம் எப்படி உடம்பு வரும்? ஒல்லியா உயரமா இருந்தாத் தான் உடம்பு சரியில்லாமல் போகும் என்பார்கள்! :))))

      Delete
    5. நெல்லை!! மிகவும் சரிதான்...புற அழகு வெகு சீக்கிரம் நம்மைக் கவரும்தான்.....அப்பெண் சொன்னதை என் சிறு வயது அனுபவத்தினால், என் மனதை அது ரொம்பவே அப்போது
      பாதித்தது என்று சொல்வதை விட...சிந்திக்க வைத்தது எனலாம்... அதாவது புரியும் வயதில்லாத நேரத்தில், மிகச் சிறு வயதில் நேர்ந்த அனுபவம்..அப்போதே அப்பெண் சொன்ன அந்த வார்த்தைகள் பதிந்துவிட்டது.....என் வீட்டில் எல்லோருமே அழகு, நிறம் மற்றும் புத்திசாலிகள், .நல்ல காலம் என்னை அது மனதளவில் எதிர்மறையாகப் பாதிக்கவில்லை...நேர்மறையாக...அதாவது நான் எப்படி இருக்கக் கூடாது என்று...கற்றுக் கொண்ட விஷயம்......நான் வளர்ந்த கூட்டுக் குடும்பம் இவ்வுலகை எதிர்கொள்ள நிறையவே கற்றுக் கொடுத்தது...

      என் மகனுக்கு நேர்ந்தது படிப்பில்... அவன் படிப்பில் குறைபாடுடன் பின் தங்கி இருந்ததால்...அப்போது நான் அவனுக்குத் தாழ்வுமனப்பான்மை மட்டும் வந்திடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்...மனதின் அழகைக் கூட்டும் போது எல்லாமே அழகாகிவிடும்...அட்டிட்ட்யூட் இஸ் எவ்ரிதிங்க்!!! கற்றதை மகனுக்கும் சொன்னேன்....
      கீதாக்கா நீங்களுமா உயரம் குறைவா...ஆ!!! நானும் உயரம் குறைவு...4 அடியார்!!!!ஹா ஹா ஹா ஹா அதனால் நிறையவே...நல்ல காலம் எதுவும் என் மனதை எதிர்மறையாகப் பாதிகக்வில்லை...
      நோய் நொடிகள் எல்லாம் குண்டு உயரம் ஒல்லி ஏழை பணக்காரன் பார்த்தா வருது...அட போங்கக்கா இந்தச் சமூகம் அப்படினா இப்படிங்கும் இப்படினா அப்படிங்கும்...

      கீதா

      Delete
    6. //..அப்பெண் சொன்னதை என் சிறு வயது அனுபவத்தினால், என் மனதை அது ரொம்பவே அப்போது
      பாதித்தது என்று சொல்வதை விட...சிந்திக்க வைத்தது எனலாம்.// ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எந்தப் பெண்? எப்போ? என்ன? எதுக்கு? ஏன்? எங்கே? எவரை? சொன்னாள்? :))))))

      Delete
    7. //என் வீட்டில் எல்லோருமே அழகு, நிறம் மற்றும் புத்திசாலிகள்,// இங்கே எல்லாமே உல்டா! நான் சிவப்பு என்பதாலேயே அவமானம், ஏச்சு, பேச்சு,! படிப்பும் அப்படியே! நான் நன்றாகப் படிப்பேன் என்பதாலேயே படிப்பை நிறுத்தினார்கள்.

      Delete
    8. நீங்க இருவரும், திரிபுரசுந்தரி (எழுத்தாளர் லக்ஷ்மி) எழுதியதைப் படித்திருக்கிறீர்களா? அவர்களும் கறுப்பு அழகில்லை என்று கஷ்டப்பட்டவராம். பிறகு மருத்துவம் படித்து.. வெளி நாட்டில் வேலை பார்த்து... தானே ஆர்வம் கொண்டு கதைகள் எழுத ஆரம்பித்து புகழேணியில் ஏறியவரவர்.

      அழகுதான் மனதை முதலில் கவரும். அழகில்லாதவர்கள் கவர மாட்டார்கள். ஆனால், சிறிது நாளிலேயே அழகு/அழகின்மை நம் கண்ணைவிட்டு மறைந்துவிடும். அவர்களின் குணம், ஆட்டிடியூட், personalityதான் நம் மனதை வசீகரிக்கும். நான் நிறைய, சாதாரணமானவர்கள் ஆனால் அருமையான பெர்சனாலிட்டி உள்ளவர்களைச் சந்தித்திருக்கிறேன். அது எப்போதும், அழகை வைத்து ஆளை எடைபோடாதே என எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

      Delete
    9. ஹாஹாஹா நெ.த. "லக்ஷ்மி" யைத் தெரியாதவங்க இருப்பாங்களா? ரொம்பச் சின்ன வயசிலே இருந்தே படித்து வருகிறேன். கிட்டத்தட்ட மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதில் இருந்தே! அப்போ அவங்க தொடர்கள் ஆனந்தவிகடனில் வந்து கொண்டிருந்தன. அநேகமாய் "அரக்கு மாளிகை" என நினைக்கிறேன். :) அப்புறமா "இருண்ட கண்டத்தில் எட்டு ஆண்டுகள்" என்னும் தலைப்பிலும் ஆனந்த விகடனில் அவங்க ஆப்பிரிக்க வாழ்க்கை குறித்து எழுதி இருக்காங்க. எல்லாம் பைன்டிங்கில் இருந்தது. இப்போ இருக்குமிடம் தெரியலை. பண்ணையார் மகள், மிதிலா விலாஸ், காஞ்சனையின் கனவு, பெண்மனம்(சினிமாவா வந்தது) போன்ற பல பிரபல நாவல்களை விகடன் பைன்டிங்கிலேயே படிச்சிருக்கேன்.

      Delete
    10. நெ.த. படித்த எழுத்தாளர்கள் குறித்த ஒரு சின்ன உதாரணம் இங்கே இந்தச் சுட்டியில்! :)

      http://sivamgss.blogspot.in/2007/01/187.html இதிலே ஆன்மிகம் எழுதும்/எழுதிய பரணிதரன், ரா.கணபதி, கி.வா.ஜ. கிருபானந்த வாரியார் எல்லாம் இல்லை. கல்கியில் வாரியாரின் கந்தபுராணம் வந்தப்போ சேகரிச்சு வைச்சிருந்தேன். :(

      Delete
  5. இப்படி இளைஞர்களோ யாராக இருந்தாலும்...உச்சரிப்பை விமர்சனம் செய்வது சரியல்ல...மோதி என்பதால் அல்ல அது யாராக இருந்தாலும். ஏனென்றால், ஆங்கிலம் உலகிற்கே பொதுமொழியாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்கில அக்சென்ட் வேறுபடும். நாட்டிற்கு நாடும் கூட. ஏன் அமெரிக்க ஆங்கிலத்திற்கும், ப்ரிட்டிஷ் ஆங்கிலத்திற்குமே வேறுபாடுகள் நிறைய. poor க்குப் பிறகு ஒரு கமா போட்டிருந்தால் கூட போதுமாக இருந்தது...பாவம் அவர். கேலி செய்பவர்கள் மட்டும் என்ன மொழிப் புலமை உள்ளவர்களா என்ன? நம்மில் எத்தனை பேருக்கு பழம் என்பதைச் சரியாக உச்சரிக்கத் தெரிகிறது...விடுங்கள் வேறு ஏதாவது சிக்கும் வரை வரை போகும்...அடுத்தது வரும் போது மாறிவிடும்...

    கீதா: கீதாக்கா அதே கருத்துடன்....என் மகனுடன் படித்த ஆந்திரா பையன்கள் உச்சரிப்பும் கிட்டத்தட்ட ஜ பயன்பாடு நிறைய இருக்கும் கொஞ்சம் அழுத்தியும் பேசுவார்கள். அது போல் ஹிந்திக்காரர்கள் நாம் வெட்னரி என்று சில எழுத்துகளை சைலன்டாக உச்சரிப்பதை அவர்கள் வெட்டரினரி என்பார்கள். அப்புறம் மகனுடன் படித்த பூட்டானீஸ் உச்சரிப்பும் வித்தியாசமாக இருக்கும். என் மகனின் நெருங்கிய நண்பன் இப்போது ராஜஸ்தானில் வேலை பார்க்கிறார். அவர் சொல்லுவார்...இங்கு மக்கள் சாதாரணமாகப் பேசுவது கூட ரொம்ப அழுத்திப் பேசுவதால் ஏதோ நம்மிடம் கோபத்தில் பேசுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும்..அது போல் பஞ்சாபியர், ஹரியானாகாரர்கள் வித்தியாசமாக இருக்கும்...

    ஏன் நம் பக்கத்து மாநிலக் கேரளத்தவரின் ஆங்கில உச்சரிப்பும் வித்தியாசமாக இருக்கும்....நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்குத் தெரிந்த பையன் ஒருவர் பாவம்...அவர் ஆங்கிலம் கற்கும் நிலையில் இருந்தார் அப்போது...தியேட்டர்ல டிக்கெட் கிடைச்சுதா என்று கேட்டதற்கு கூட்டமாக இருக்கு எல்லோரும் வெளியில் நிற்கிறார்கள் என்பதை....பீப்பிள் ஆர் அவுட் ஸ்டாண்டிங்க் என்றார். பலரும் சிரித்தார்கள்... அப்போது அவரிடம் தனியாகத் திருத்திக் கொடுத்தேன்...பாவம்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், நீங்கள் ஆங்கில ஆசிரியர் என்பதால் சரியானபடி புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் நம் மக்கள் வெளிப்பகட்டில் தானே மயங்குகிறார்கள். உண்மையில் பதில் ட்வீட்டில் இதைத் திருத்தச் சொல்லி பிஎம் அலுவலகத்துக்கு யாரேனும் சொல்லி இருந்தால் திருத்தப்பட்டிருக்கும். சின்ன விஷயம். ஊதி, ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

      கீதா, ஆம் கேரளாவில் ஆஃபீஸ் என்பதை ஒஃபீஸ் என்னும் தொனி வரும்படி உச்சரிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்க எனத் தனியாகச் சிறப்புப் பயிற்சிப் பள்ளிகள் வந்திருக்கின்றன. அதில் சேர்ந்தாவது கற்றிருக்கலாமோ எனத் தோன்றுகிறது!

      Delete
  6. // நிர்வாக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ பிரதமர் செய்யும்/செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டலாமே!// அது செய்ய முடியாததால்தானே இப்படி கீழ்த்தரமாக இறங்குகிறார்கள். நெ.த. கூறியிருப்பது போல வெட்டி பயல்கள் என்று ஒதுக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, இப்போச் சென்னையா? பெண்களூரா? நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை! நீங்க சொல்வது போல் பிரதமரை வேறு எந்தவகையில் குற்றம் சாட்ட முடியவில்லை என்னும் ஆத்திரம் தான்.

      Delete
  7. நேற்றைய முந்தினம் பாராளுமன்றத்தில் ரேணுகா சவுத்திரியின் அவுட்டு சிரிப்புக்கு என்ன அமைதியுடன் பக்குவமாக பதிலடி கொடுத்தார் மோடி! அந்த நாகரீகம் ஏட்டுக் கல்வியால் வருவது அல்ல. அந்த நாகரீகம் இல்லாதவர் எவ்வளவு பட்டங்கள் இருப்பினும் கற்றவரே அல்ல. இதை இளைய சமுதாயம் புரிந்து கொண்டால் இந்த நாடு எவ்வளவோ முன்னேறும் :(

    ReplyDelete
    Replies
    1. வாங்க கபீரன்பரே! அதிசய வருகை. கருத்துக்கு நன்றி. ரேணுகா சவுதிரிக்குப் பிரதமர் கொடுத்த பதிலையும் விமரிசிக்கின்றனரே! பிரதமர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கூற்று! :)))))

      Delete
  8. One example.

    These are taken from another blog which I forget. These are for FUN and FUN only, and No offence or criminal intent is involved. Just enjoy.

    JPR jokes

    college students have collected & published a book by name "Jappier's Spoken English"
    ...... Njoy ............with his......... .....English. ......... .......
    Now , here are some classic English sentences from the great "Jappier's Spoken English"

    # At the ground:
    ------------ -----
    All of you stand in a straight circle.
    There is no wind in the balloon.
    The girl with the mirror please comes her...{Means: girl with specs
    please
    come here).

    # To a boy , angrily:
    ------------ ---------
    I talk , he talk , why you middle middle talk?

    # While punishing students:
    ------------ --------- --
    You , rotate the ground four times...
    You , go and understand the tree...
    You three of you stand together separately.
    Why are you late - say YES or NO .....(?)

    # While addressing students about Dress Code: (he is very strict abt this )
    ------------ --------- --
    Every body should wear dress to college
    Boys no proplum
    Girls are pig proplum . (pig=big)
    Girls should wear only slawar no nitee.
    Girls should not wear T sirt , U shirt , V shirt.. but if you want to
    wear
    ..... remove it when inside the campus and put it oout side the campus

    # Sir at his best:
    ------------ ---
    Sir had once gone to a film with his wife. By chance , he happened to
    see
    one of our boys at the theatre , though the boy did no t see them.
    So the next day at s school... (to that boy) - "Yesterday I saw you
    WITH MY WIFE at the Cinema Theatre"

    # Sir at his best inside the Class room:
    ------------ --------- --------- --------- -------
    Open the doors of the window. Let the atmosphere come in.
    Open the doors of the window. Let the Air Force come in.
    Cut an apple into two halves - I will take the bigger half.
    Shhh...Quiet , boys...the principal JUST PASSED AWAY in the corridor
    You , meet me behind the class. (Meaning AFTER the class..)
    This one is cool >> "Both of u three get out of the class."
    Close the doors of the windows please. I have winter in my nose today...
    Take Copper Wire of any metal especially of Silver.....
    Take 5 cm wire of any length....

    Last but not the least some Jeppiar experiences ...
    Once Sir had come late to a college function , by the time he reached , the function had begun , so he went to the dais , and said , sorry I am late ,
    because on the way my car hit 2 muttons (Meaning goats).

    At Sathyabama college day 2002:
    "This college strict u the worry no .... U get good marks , I the happy , tomorrow u get good job , jpr the happy , tomorrow u marry I the enjoy"

    At St. Josephs college of engineering fresh years day 2003:
    "No ragging this college. Anybody rag we arrest the police "

    ReplyDelete
    Replies
    1. நீங்க அவர் பேசிக் கேட்டிருக்கீங்களா? ஆங்கிலமே (இலக்கணம், அததற்கு உரிய வார்த்தைகள்) கொஞ்சம்கூடத் தெரியாமல் ஆங்கிலத்தில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். சர்வ சாதாரணமாக அரைமணி நேரம்லாம் பேசுவாராம். ஒரு தடவை அவருடைய கல்லூரி ஃபங்ஷனில் (தொலைக்காட்சியில்?) கேட்டிருக்கிறேன். எனக்கு சிரிப்பு வரவில்லை. எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தால் அப்படி மாணவ/மாணவிகள் முன்பு பேசுவார். எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாகவும், அவர்மீது மதிப்பும் வந்தது. (அவர் எம்ஜியார் காலத்தில் என்னவாக இருந்தார் என்ற பின்புலமெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்)

      Delete
    2. நான் கேட்டிருக்கேன்! ஒரே ஒரு முறை! :) அநேகமாய் நீங்க சொல்லும் கல்லூரி விழாவில் தான்னு நினைக்கிறேன். :)

      Delete
  9. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். தனி மனிதத் தாக்குதலைத் தவிர்த்து, தேவையான அவர் சொல்ல வந்த பொருண்மைகளை மட்டுமே எடுப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தவறாமல் நினைவு வைத்துக் கொண்டு தொடர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி.

      Delete