எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 20, 2018

நேயர் விருப்பத்தின் பேரில்!

பிரசவத்துக்கு இலவசம்!!!!!!!!!! :P
என்னனு பார்க்கிறீங்களா? இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ஆஸ்பத்திரி மாஆஆஆஆஆதிரி எல்லாம் இல்லை, பிரசவ ஆஸ்பத்திரியே தான். ஊரிலே இருக்கும் நாய், பூனை எல்லாம் மற்ற நாட்களில் எங்கேயோ போயிட்டு இருக்கும், சாதம் வைச்சால் கூடச் சாப்பிட வராது. என்னை ஒரு அல்பமாகப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கும். பத்தாதுக்குக் கூப்பிட்டால் ஏதோ விரோதி மாதிரி உர்ர்ர்ர்ருனு முறைச்சுட்டு வேறே போகும். அதனாலோ என்னமோ என்னோட ம.பா. நாங்க கல்யாணம் ஆனதிலே இருந்து வளர்ப்புப் பிராணியாக முதலில் ஒரு பைரவரைக் கொண்டு வந்தார். அவர் சில நாட்கள் தான் இருந்தார். தூங்கும்போது கூட என் பொண்ணோட தொட்டிலிலோ, தூளியிலோ தான் படுத்துப்பேன்னு அடம் பிடிக்கும் டைப். ஆனால் அவளைத் தூளியை விட்டு என்னைத் தவிர என் ம.பா. மட்டுமே எடுக்கணும், வேறே யாராவது எடுத்தால் அவ்வளவு தான், வீட்டுக்குள்ளேயே ஒரு ஓடிப் பிடிச்சு விளையாடுதல் நடக்கும். எடுக்க வந்தவங்க வெறுப்பாயிடுவாங்க. ஆனால் அது பாவம், நான் ஒரு நாள் அதுக்குத் தெரியாமல் பால் வாங்கப் போனபோது (வேலி தாண்டிக் குதித்துப் போவேன், இல்லைனா சுத்த்த்த்த்திட்ட்ட்ட்ட்டுப் போகணும், அதுவும் தாண்டிக் குதிக்கும்போது ஒரு வண்டியில் அடிபட்டு உயிரை விட்டு விட்டது. அப்போ அதன் தாக்கம் அவ்வளவாத் தெரியலை. ராஜஸ்தானுக்கு மாத்திப் போயிட்டோம்.

அங்கே வந்தது ஒரு சிட்டுக் குருவி ஜோடி. இது பத்தி முன்னேயே எழுதிட்டேன். ஒருநாள் அதுங்க வந்துடுச்சுனு நினைச்சுக் கதவைச் சாத்திட்டுப் படுக்க, ஒண்ணு வரவே இல்லை. அன்னிக்கு அதோட ஆஃபீஸிலே ஓவர்டைம் பார்த்திருக்கு போல. கதவெல்லாம் சாத்தினதும் வந்திருக்கு. வெளியே இருந்து அது கூப்பிட, உள்ளே கதவுக்கு நேர்மேலே இருந்த வெண்டிலேஷன் கட்டையில் உட்கார்ந்து இருந்த அதன் ஜோடி, இங்கே இருந்து கத்த, கூட்டில் குஞ்சுகள் கத்த, ஒரே களேபரம். சோககீதம் இசைப்பதை நல்லவேளையாய்ப் புரிஞ்சுட்டு, என்னனு பார்த்து, வெளியே இருந்த குருவியை உள்ளே விட்டோம். அந்தக் குருவிங்க தான் சொன்னதோ, இல்லை மத்த ஜந்துக்கள் எல்லாம் என்ன நினைச்சதோ தெரியலை, தேன் கூட்டில் இருந்து, குளவிக்கூடு, (விதவிதமாய் இருக்கும், அறை அமைப்புக்கள் எல்லாம் ஆர்க்கிடெக்ட் தோத்தாங்க), கிளிகள், புறாக்கள், மைனாக்கள் என்று எல்லாம் வாசம் செய்ய ஆரம்பிச்சது. பத்தாதுக்கு எலிகளும் கூட. இந்த எலிகள் எல்லாம் ரொம்பவே தைரியம் ஜாஸ்தி. சமைக்கும்போது கூடவே வந்து உட்கார்ந்து (மாமியார்கள் மாதிரி?) நல்லாச் சமைக்கிறேனா என்று வேவு பார்க்கும். ஜெர்ரி கிட்டே தோத்துப் போற டாமா என்ன நாம? இருந்தாலும் அதுங்க அடிச்ச லூட்டி தாங்கலை தான்.

எல்லாம் குஞ்சும், குளுவானுமாய் நம்ம வீட்டில் தான் வாசம். எங்கே போனாலும் ராணுவக் குடியிருப்பா? மரம், செடி, கொடிகளுக்குப் பஞ்சம் இல்லை. கிட்டத் தட்டக் காட்டு வாசிதான். அதனாலே முதல்லே ரொம்ப வருஷம் கழிச்சுச் சென்னைக்கு வந்து சொந்த வீட்டில் வசிக்க ஆரம்பிச்சப்போ கொஞ்சம் கஷ்டமாவே இருந்தது. கவலைப்படாதேனு கொஞ்ச நாட்களிலேயே ஊரில் உள்ள நாய், பூனை எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததோடு இல்லாமல், அதுங்க பிரசவத்தையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்க ஆரம்பிச்சது. அதிலே ஒரு சமயம் ஒரு நாய்க்குப் பிரசவம் ரொம்பக் கஷ்டமாப் போய் "ப்ளூ க்ராஸ்" காரங்களுக்குத் தொலைபேசி, (தெருக்காரங்க எல்லாம் சேர்ந்து தான்) அவங்களை வரவழைச்சு, அதுக்கு சிசேரியனும், குடும்பக் கட்டுப்பாடும் சேர்த்துச் செய்யச் சொல்லி,குட்டிகளைக் காப்பாற்றினோம். அதுவும் நன்றி மறக்காமல் தன்னோட பெண், பேத்தி, கொ.பே. என்று அனைத்து நாயினங்களின் பிரசவத்தையும் எங்க வீட்டிலேயே வச்சுக்கிறது. என்ன, வாசலில் தென்னை மரத்தடி ரொம்ப கூலா இருக்குமா? அங்கேயே சாக்குப் போட்டு வைப்போம், டெலிவரி ஆனதும் குட்டிகள் கண் திறக்கும் வரை காத்திருந்து, பின்னர் கொஞ்சம் பெரிசா ஆனது, அம்மா நாய் இல்லாத சமயம் பார்த்து, வெளியே ஒரு பந்தல் போட்டு, (வெளியே விடலைனால் மாடிப்படி, தென்னை மரத்தடிக்குப் பக்கம் இருக்கும் குழாய் கிட்டே எல்லாம் போகவே முடியாது, அம்மா அப்படி ஒரு காவல் காக்கும்) அதுங்களுக்குப் படுக்கை மற்ற சாப்பாடு ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்து, (ம்ஹும் வாடகை எல்லாம் கொடுக்காதுங்க) ஒண்ணொண்ணாய் வெளியே விடுவோம். அதுங்களும் கொஞ்சம் பெரிசா ஆயிருக்குமா எப்படியோ போய்ப் பிழைச்சுக்கும்.

ஆனால் இந்த்ப் பூனைங்க இருக்கே, அதுங்க வீட்டுக்குள்ளே வராந்தாவிலேயோ, அல்லது வெளியே இருக்கும் பாத்ரூமிலேயோ தான் குட்டி போடும். வராந்தாவில் இருக்கும் ரூமுக்குள் போகவே முடியாது. கோலமாவு, மற்றும் செருப்பு எல்லாம் வைக்கும் அந்த அறை பூனைங்க குட்டி போடும்போது மட்டும் வெளியே வைக்க ஆரம்பிச்சு, இப்போ நிரந்தரமாய் செருப்பையும்,. கோலமாவையும் வெளியேயே வைக்கும்படியா ஆக்கிடுச்சு. கோலமாவை வெளியே வச்சால் காக்கை, எலி, மற்றப் பறவைகள் வந்துடும். எலி தான் வீட்டுக்குள்ளேயே குஞ்சு போட்டு எல்லாம் எழுதினேனே, அமெரிக்காவிலே இருந்து வந்ததும். தோட்டத்தில் இதெல்லாம் பத்தாதுன்னு இப்போப் பெருச்சாளி குஞ்சு போட தொட்டி முற்றத்தில் இருந்து தண்ணீர் போகும் குழாயை அடைச்சுவிட்டு, அந்தத் தண்ணீர் நிரம்பும் தொட்டியைச் சுத்தமாய்க் காயவச்சு, அதிலே பாலிதீன் பைகள், மற்றும் பேப்பர்கள் எல்லாவற்றையும் ரொம்ப அழகாய் மெத்தை மாதிரிப் போட்டுக் குஞ்சு போட்டு வைச்சிருக்கு. அதை வெளியே எடுத்துப் போடவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பெரிசானதும் விரட்டிட்டு இப்போத் தான் அடைச்சோம். இப்போப் பாருங்க வெளியே இருக்கும் குளியல் அறையில் பூனை 3 குட்டிகள் போட்டிருக்கு. அதுங்களுக்கு நான் திரும்பத் திரும்பப் பிரசவம் பார்க்கிறதும், பத்தியமாய்ச் சாப்பாடு போடறதும், மருந்து கிளறித் தரதுமாய் ரொம்பவே ஜனரஞ்சகமாய்ப் போயிட்டிருக்கு! இப்போ அம்மாப் பூனை எங்கேயோ வெளியே போயிருக்கு போலிருக்கு. குட்டிகள் எல்லாம் கத்திட்டு இருக்கு, ரொம்ப அழகான குட்டிகள்.அதுங்களைப் போய்ப் பார்க்கணும், வர்ட்டாஆஆஆஆஆ????????????

இந்த திவா வேறே சும்மா இருக்காம முன்னாலேயே வொர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சுக்கிறது தானேன்னு கேட்டுட்டு இருக்கார். நான் என்ன அவர் மாதிரியா எழுதறேன்? இல்லை, அப்படி எல்லாம் முன்னேற்பாடு செய்துட்டு உட்கார்ந்தால் இந்த மாதிரி மொக்கை எல்லாம் போடவா முடியும்? அது புரியலை அவருக்கு! :P :P

2008 ஆம் ஆண்டு எழுதிய பதிவு!  ஏஞ்சல் அங்கே போய்ப் படிச்சுட்டு மீள் பதிவு போடக் கேட்டிருந்தார். ஆகவே ரசிகர்கள் மனம் மகிழ! :)))))))

இங்கே

44 comments:

  1. அப்பவே கொ.பே. கண்ட பைரவர்கள் இப்பொழுது எத்தனை தலைமுறைகளை பார்த்து இருப்பார்கள் ?

    10 வருசமாச்சே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே கில்லர்ஜி! இப்போ அதுங்க எல்லாம் போய்ச் சேர்ந்து இளைய தலைமுறை வந்தாச்சா? அந்தப் பக்கம் போனாலே ஒரே உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்! :)

      Delete
  2. எவ்ளோ நாள் ஆசையோ தெரியலை -
    மாமியார்களை எலிகள்..ன்னு சொல்றதுக்கு!..

    ஆனாலும்
    இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, யாருக்கு மாமியாருக்கா? ஆமா இல்ல! :)

      Delete
  3. ஹை :) தாங்க்ஸ்க்கா .எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா இந்த பதிவை வாசிக்கும்போது ..
    வீட்ல அணில் குருவிகள் பூனைகள் அப்புறம் தர்மபுரியில் சோள காட்டுப்பாக்கம் வீடென்பதால் வெட்னரிடாக்டர் வீடென்பதால் முன் வாசலில் நரி புனுகுபூனைகள் குட்டிபோட்டு வைக்குமாம் அம்மாசொல்வாங்க :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல். இதெல்லாம் கொஞ்சம் மனதை நல்லா வைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயங்கள். இங்கே என்னடான்னா அப்படி ஏதும் இல்லை. ஆனாலும் ஜன்னல்வழியே தெரியும் பறவைங்களைப் பார்த்துப்பேன். சிலது பால்கனிக்கும் வந்து உட்கார்ந்துக்கும் அதிசயமா!

      Delete
    2. இதெல்லாம் கொஞ்சம் மனதை நல்லா வைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயங்கள். //

      யெஸ் யெஸ் ரொம்பவே....சந்தோஷமான விஷயங்கள் இயற்கை இயற்கைதான்...கீதாக்கா

      கீதா

      Delete
  4. சுவாரஸ்யம். மறுபடி படித்து மகிழ்ந்தேன். என் கமெண்ட்ஸ் உட்பட!

    சுப்பு தாத்தா இப்போல்லாம் பதிவுலகம் பக்கம் வர்றதே இல்லை போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், சுப்புத்தாத்தா என்னோட தவலை வடை பதிவிலே முகநூலிலே கமென்டி இருந்தார். அப்புறமும் அவர் சில பதிவுகளிலே வம்புக்கு இழுத்திருப்பார். ஆனால் வலைப்பதிவுகள் பக்கம் வரதில்லை போல!

      Delete
    2. Geetha Sambasivam12 June, 2016
      ஶ்ரீராம் தம்பி,!!!!!! உங்களைத் தம்பினு சொல்றதில்லைனு சொன்னீங்களே! இங்கே பாருங்க, அப்போவே தம்பினு கூப்பிட்டிருக்கேன். :)

      Delete
    3. ஹிஹிஹி.....

      அது சரி..

      // உங்களைத் தம்பினு சொல்றதில்லைனு சொன்னீங்களே!//

      இதுதான் எப்போ சொன்னேன்னு தெரியலை!

      :)))

      Delete
    4. கொஞ்ச நாட்கள் முன்னாடி தான் என்னை கீதா சாம்பசிவம் மேடம் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) அப்படினு கூப்பிட்டுச் சொன்னீங்க! :)))))

      Delete
    5. என்னது ஸ்ரீராம் உங்களை கீதா சாம்பசியம் மேடம்னு சொன்னாரா????!! நானும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....இப்போ கீதாக்கானு சொல்லறார் அதனால தப்பித்தார்!! ஹா ஹா ஹா ஹா ஹா.

      கீதா

      Delete
    6. ஆமாம், ஒரு நாலைந்து பதிவுகள் முன்னால்! :))))))

      Delete
  5. அதன் ஜோடி, இங்கே இருந்து கத்த, கூட்டில் குஞ்சுகள் கத்த, ஒரே களேபரம். சோககீதம் இசைப்பதை நல்லவேளையாய்ப் புரிஞ்சுட்டு, என்னனு பார்த்து, வெளியே இருந்த குருவியை உள்ளே விட்டோம். அந்தக் குருவிங்க தான் சொன்னதோ//
    இல்லைக்கா இதுங்க மெசேஜ் பரிமாரியிருக்கும் இங்கே ஒரு வீடு நமக்கு வசதியா இருக்குன்னு சொல்லி வரவழைச்சிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஏஞ்சல், பறவைகள் ஒன்றுக்கொன்று செய்திகள் பரிமாறிக் கொள்வதை அம்பத்தூர் வீட்டில் அடிக்கடி கண்டிருக்கேன். இங்கேயும் புதிதாக ஏதேனும் ஒண்ணு மரங்களில் ஏறி இருந்தால், அநேகமாய் முன்னோரில் யாரேனும் இருப்பாங்க! உடனே பறவைகளின் வித்தியாசமான குரல் தொனியில் புரிஞ்சு போயிடும். ரங்க்ஸ் கிட்டேச் சொல்லுவேன். அவரும் கவனிச்சுட்டு ஆமாம் ஏதோ வந்திருக்குனோ அல்லது யார்னு பார்த்துத் தெரிஞ்சாலோ பூனை வந்திருக்குனோ அல்லது குரங்கார்னோ சொல்லுவார். அதே போல் சில சமயம் காற்றுக் கூட அடிக்காமல் மரங்களின் இலைகள் சின்ன அசைவு கூடக் கொடுக்காமல் அப்படியே இருக்கும். அப்போப் புரிஞ்சுப்பேன் அடுத்துப் பெரிய காற்று வரப் போகுதுனு! அப்போப் பறவைங்களும் ஒரு சின்னக் கீச் சத்தம் கூட இல்லாமல் அமைதி காக்கும்.

      Delete
  6. எலி சுண்டெலி குட்டிகளை பார்த்திருக்கேன் ஆனா பெருச்சாளி குட்டிகளை பார்த்ததில்லை .இரயில்பெரிசா ஓடும் சென்னை வீட்லயும் .ஒட்டு வீடு என்பதால் எலிகள் உண்டு எங்க வீட்லயும் .

    // பாலிதீன் பைகள், மற்றும் பேப்பர்கள் எல்லாவற்றையும் ரொம்ப அழகாய் மெத்தை மாதிரிப் போட்டுக் குஞ்சு போட்டு வைச்சிருக்கு. அதை வெளியே எடுத்துப் போடவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பெரிசானதும் விரட்டிட்டு இப்போத் தான் அடைச்சோம். //

    அதுங்களுக்கு எத்தனை விவரமும் அறிவும் இல்லையா !! பிறக்கப்போற குழந்தைக்கு மெத்தை செஞ்சிருக்குங்களே

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் எலி, பெருச்சாளி மட்டுமா? மூஞ்சுறுக் குஞ்சுகளைக் கூடக் காப்பாத்தி இருக்கோமே. அதையும் எடுத்துப் போடறேன். :)))))

      Delete
  7. வணக்கம் சகோதரி

    ஜீவ காருண்ய பதிவு மிகவும் அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். படிக்கும் போதே பல இடங்கள் வாய் விட்டு சிரித்தேன். நகைச்சுவை உணர்வுடன் பதிவு யதார்த்தமாக கடைசி வரை சென்றது.
    "எலிகளை" மாமியாரக்கி பைரவர்களை "கொ. பேத்தி பேரன்" வரை சந்தித்து கற்பனை மிகவும் நன்றாக இருந்தது.
    மிக மிக ரசித்துப் படித்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இடத்திலும் சென்று படித்து ரசித்தேன். சகோதரி ஏஞ்சல் அவர்கள் சொல்வது போல், இது போல் மீள் பதிவுகளை வெளியிடுங்கள்.எத்தனை முறை வேண்டுமானாலும் சுவாரஸ்யமாக படிக்கலாம். படிக்கவும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, இது கற்பனை எல்லாம் இல்லை. உண்மையிலேயே அம்பத்தூரில் எங்க வீட்டுக்குக் குடி வரும், வந்த ஜீவன்களைப் பத்தின பதிவு தான்! காக்கையிலிருந்து ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் சாப்பாடு போடுவோம். அதுங்க கூடவே குருவிங்க, அணில், மைனாக்கள், குயில்கள்னு எல்லாமும் சாப்பிடும்! பூனைக்குக் கிணற்றடியிலே தனியா! நாய்களுக்கு வாசல் தென்னைமரத்தடி! அங்கே நிழலா இருக்கும். விருட்சி மரம் வேறே ஒண்ணு இருந்தது. உண்மையாகவே நாய்கள் அந்தத் தென்னை மரத்தடியில் குட்டிகள் போடும். பக்கத்திலேயே குழாயா, காலம்பர வாசல் தெளிக்கத் தண்ணீர் பிடிக்க முடியாது. தாய் உறுமும். இத்தனைக்கும் பழக்கம் தான்! அதுங்களோட குட்டிகள் எல்லாமும் குட்டி போட்டன! :)))) நடந்தவற்றைத் தான் சுவையூட்டுவதற்காகக் கொஞ்சம் நகைச்சுவைகலந்து எழுதி இருக்கேன்.

      Delete
    2. ஒரே பூனை ஒரு வருஷத்துக்குள்ளாக இரு முறை குட்டிகள் போட்டது! அதையும் ஒரு தரம் எழுதினேன். ஆனால் அப்புறமாத் தான் அந்தப் பூனையையும் அந்தக் குட்டிகளையும் நாய்கள் குதறிப் போட்டு! எங்க வீட்டின் பக்கவாட்டுப்போர்ஷனில் வாசல் பக்கம் ஆரம்பிச்சுக் கொல்லைக்கிணற்றடி வரை ஐந்து பூனைக்குட்டிகளும், ஒரு அம்மாப் பூனையும். ஒரு வாரம் சாப்பாடு இறங்கவில்லை. அதுக்கப்புறமா ஆண்டவன் அந்த வீட்டில் எங்களை இருக்கவும் விடலை! :((((

      Delete
  8. நல்ல அனுபவம். எங்களுக்கு என்னவோ இப்படியான அனுபவங்கள் இல்லை. பக்கத்து வீட்டில் மாடு, கோழி போன்றவை இருந்தாலும் அத்தனை அருகே சென்று பழக விட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கோழிகள் கீரை விதை, முள்ளங்கி, காரட் விதைகளைக்கொத்தும் என்பதால் அவற்றை நாங்கள் விரட்டி இருக்கோம்! அப்புறமா மரங்கள் வளர்ந்து நிழல் தட்டினதில் காய்கறிகளே போட முடியலை! கோழிகளும் இல்லை. மாடுகள் எல்லாம் மாமனார் வீட்டோடு போயாச்சு! பசுமாடுகள் வாசலில் வரும்! அவற்றுக்கென ஒரு வாளியில் மிச்சம், மீதி எல்லாம் போட்டுக் காய்க்குப்பைகளும் போட்டு வைச்சிருப்போம். அந்த மாடுகள் இரண்டு வரும். மாறி மாறிச் சாப்பிடும். ஆனால் அவற்றுக்கு நேரே வெளியில் போனால் போக விடாது. வழியை மறித்துக் கொள்ளும். ஒரு முறை காய்கறி மார்க்கெட்டில் கூட அடையாளம் கண்டு கொண்டு வந்து முட்டியது! அப்புறம் ஒரு முறை அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போகும்போது முட்டியதில் கீழேயே விழுந்துட்டேன். அதுங்களுக்குத் தெரியாமல் போகணும். சுத்திக் கொண்டு போவேன். :)))))

      Delete
  9. உங்கள் தொலை பேசி எண்ணைப்பதிவு செய்யுங்கள் ப்ளூ க்ராஸுக்குப் போன் போகாவிட்டால் அந்தஎண்ணுக்காவது போன்செய்யலாமே

    ReplyDelete
    Replies
    1. இப்போ இங்கே அவை எதுவும் இல்லையே!

      Delete
  10. சென்னையில் முதலில் வில்லி வாக்கத்தில் குடி இருந்தோம் அந்தைடம் இப்போதுநிறையவே மாறி விட்டது மழைக் காலத்தில் பெரிய ஈ சைசில் தவளைகள் வரும் ஒரு முறை இரவு உணவு உட்கொண்டிருந்தபோது ஒரு மூஞ்சூறு அடுக்களையில் எட்டிப்பார்த்தது அருகில் இருந்த தீப்பேடியை அதன்மேல் வீசினேன் ஐயோ பாவம் பொசுக்கென உயிரை விட்டது

    ReplyDelete
    Replies
    1. ஜிஎம்பி ஐயா, நாங்களும் வில்லிவாக்கத்தில் தான் முதலில் இருந்தோம். மாடியில் இருந்து கீழே உள்ள கிணற்று நீரை இறைக்கணும். ரொம்பவே அவஸ்தை. அதே சமயம் கழிவறை செல்லணும்னா மாடியில் இல்லை. குளியல் அறை மட்டும் மாடியில். கழிவறையைப் பயன்படுத்தக் கீழே இறங்கணும். முடியலை! ஒரு மாசத்திற்கெல்லாம் அம்பத்தூர் இடம் பெயர்ந்து விட்டோம்.

      Delete
  11. யாராவது விலங்கு விரும்பிகள் படித்தால், ஆஹா , உங்களைப்போலுண்டா என்று மேலிடத்துக்குப் பரிவுரை செய்து அனுப்பக்கூடும். அவார்ட் கிடைக்க சான்ஸ் இருக்கும்போலிருக்கிறது. தகுதி நிச்சயம் உங்களுக்குண்டு.

    Don't feed pigeons என்று ரொம்ப புத்திசாலித்தனமாக எழுதிப்போடுகிற நாட்டில் உங்களைப்போன்றவர் இருப்பது நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. அட! அப்படியும் இருக்காங்களா? :( நாங்க இங்கே பறவைகள் வந்தால் குடிக்க நீர், உண்ண உணவு ரெண்டும் வைக்கும்படி ஒரு துத்தநாகத் தகட்டைப் பொருத்தி அதில் மண் சட்டியில் நீரும், பலகை பதித்து அதில் உணவும் போட்டு வருகிறோம். எல்லாப் பறவைகளூம் வருகின்றன. ஜன்னல் கதவைத் திறந்தால் ஓடிடும்! :)))))))

      Delete
    2. அக்கா இங்கே லண்டனிலும் இருக்காங்க :( .பெர்ட் feeder வைக்க கூட தடையுண்டு.சுற்றுப்புறம் அழுக்காகுதாம் :( .ஆனா எங்க ஏரியாவில் நான் பயமில்லாமல் உணவு தரேன் அதனால்தான் பறவைங்க கூட்டம் எங்க வீட்டு தோட்டத்தில் குமிந்து .

      மனசெல்லாம் அழுக்கோட திரியற மனுஷங்களை நம்மோட நமக்கு தெரியாமலே நடமாட்றாங்க அதைவிட விட இந்த பறவைகளும் விலங்குகளும்தானா அழுக்கு சேர்க்கபோது சூழலுக்கு ..
      ஒரு வீட்டின் மாடியில் போகிற வழியில் எப்பவும் புறாக்கூட்டம் கூட்டமா பறந்த்து அமரும் .கொஞ்ச நாள் முன்னாடி அந்த ஏரியா கூரைப்பக்கம் ஒரு பறவையும் இல்லை பிறகு கவனிச்சேன் ஆணி போல் பொருத்திருக்காங்க :( அட சீ மானிட ஜென்மங்களேன்னு தலையில் அடிச்சிக்கிட்டேன் .எங்க வீட்ல சோலார் பேனலுக்கு இப்படி ஆணி போடறேன்னு சொன்னப்போ மறுத்திட்டோம் :(

      Delete
    3. அட! அப்படியா? :( நாங்கல்லாம் பறவைகள், விலங்குகளை ஒதுக்கறதில்லை! விட்டால் ஆனைக்குட்டி கூட வளர்க்கத் தான் ஆசை! கட்டுபடி ஆகாது! :)))))

      Delete
    4. ஏகாந்தன் அண்ணா நானும் ஃபீட் பண்ணறேன் புறாக்களுக்கு. காகம் கேட்கவே வேண்டாம். நம்ம வீட்டுல தண்ணிச் சட்டி எப்போதுமே தண்ணீயோட இருக்கும் காக்கை, குருவி, புறா என்று அமர்க்களமா இருக்கும்...

      கீதாக்கா அப்படி சொல்லுங்க விட்டா யானைக்குட்டி கூட வளர்க்கலாம் ஆமா கட்டுப்பிடியாகாது. 10 வருடம் முன்னரே ஒரு நாள் செலவு 10000 என்று நடிகர் ஜெயராம் எழுதியிருந்த நினைவு...அவர் வளர்த்து வந்தார். அப்புறம் என்னாச்சு என்று தெரியலை...

      கீதா

      Delete
    5. வாங்க தி/கீதா, அவசரம் அவசரமா வந்திருக்கீங்க போல! அடுத்த பதிவுகளையும் நிதானமாப்படிச்சுக்கருத்துச் சொல்லுங்க! :)))

      Delete
    6. மனசெல்லாம் அழுக்கோட திரியற மனுஷங்களை நம்மோட நமக்கு தெரியாமலே நடமாட்றாங்க அதைவிட விட இந்த பறவைகளும் விலங்குகளும்தானா அழுக்கு சேர்க்கபோது சூழலுக்கு ..//

      அப்படிச் சொல்லுங்க...ஏஞ்சல்..

      ஏகாந்தன் அண்ணா மனிதனைப் போன்ற சுயநலக் கிருமிகள் எந்த உயிரினமும் இருக்காது...

      கீதாக்கா வாழ்க!!!

      கீதா

      Delete
    7. யாராவது விலங்கு விரும்பிகள் படித்தால், ஆஹா , உங்களைப்போலுண்டா என்று மேலிடத்துக்குப் பரிவுரை செய்து அனுப்பக்கூடும். அவார்ட் கிடைக்க சான்ஸ் இருக்கும்போலிருக்கிறது. தகுதி நிச்சயம் உங்களுக்குண்டு. //

      யெஸ் யெஸ் ஏகாந்தன் அண்ணா ரொம்பச்சரியாகச் சொன்னீங்க....

      கீதா

      Delete
    8. ஹெஹெஹெஹெ, அதெல்லாம் வேணாம். கூச்சமா இருக்கு! :))))))

      Delete
  12. ////பிரசவத்துக்கு இலவசம்!!!!!!!!!! :P//

    எங்கள் ஊரிலும் சிலர் ரெடியா இருக்கினம், கூட்டி வந்து விடட்டோ கீசாக்கா.

    எங்கள் ஊர் வீட்டிலும் நம் பூஸார் குட்டி போட்டதைப் பார்த்த அனுபவம் இருக்கு. ஓடித்திரிவா, அம்மாவுக்கு புரிஞ்சிடும், ஒரு பெட்டி எடுத்து வச்சு பழைய துணிகள் போட்டு விடுவா, உடனே பூஸ்பிள்ளை ஏறிப்படுப்பா, நாம் போய்ப் பார்க்க மாட்டோம், பயமாஅவும் பாவமாவும் இருக்கும், அழுது கேட்கும் பின்பு போனால் குஞ்சுக் குஞ்சுக் குட்டிகள் கண்ணை மூடியபடி பால் குடிப்பதற்காக ஊரும்.. என்ன ஒரு அழகு....

    அப்படித்தான் .. ஆடு, மாடு, கோழிக் குட்டீஸ் உம் பார்த்திருக்கிறேன்.

    எங்கு போனால் தமக்கு அடைக்கலம் கிடைக்கும் என நன்கு தெரிந்தே அவை உங்கள் வீட்டுக்கு வருகின்றன கீசாக்கா.. எப்பவும் இப்படியே அடைக்கலம் கொடுங்கோ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஞானி! அம்பத்தூர் வீடா இருந்தால் கொண்டு விடுங்கனு சொல்லிடுவேன். இது அடுக்குமாடிக் குடியிருப்பில் நாலாவது மாடி! :( எங்கே! அந்தத் தனி வீடு, தோட்டம், துரவு என இருந்த வாழ்க்கையையே தொலைச்சாச்சு! நான் அடைக்கலம் கொடுக்கத் தயார்! இப்போதைக்கு இங்கே ஜன்னலுக்கு வெளியே பறவைங்க தான் வருது!

      Delete
  13. வணக்கம் ...!
    இந்தப்பதிவை படிக்கும்போது எங்கள் வீட்டின் பழைய
    ஞாபகங்கள் வருகிறது,அணில்,வெள்ளை எலி,சீமை எலி,நாய்,பூனை,மைனா, சிட்டுக்குருவி, காதல் பறவை, கிளி,வண்ணமீன்கள்,
    இப்படி பலவகையான செல்லப்பிராணிகள் வளர்த்ததுதான்
    ஞாபகத்தில் வந்து செல்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு, கவிதைகள்! நாங்க வளர்த்தது பைரவர்களைத் தான்! மற்றவை தானாக எங்க வீடு தேடி வந்து அடைக்கலம் தேடிக் கொண்டன. அவற்றை விரட்டியதில்லை.

      Delete
  14. மலரும் நினைவுகள் இனியவை.
    பறவைகள், நாய், பூனை , எலியார் என்று எத்தனை எத்தனை அடைக்கலம் ஆகி இருக்கு வீட்டில்.

    அடிபட்ட கிளி, கூட்டிலிருந்து கீழே விழுந்த தேன் சிட்டு பறவை, அணில், தென்னைமரத்திலிருந்து விழுந்த குருவி என்று நானும் வளர்த்து விட்டு இருக்கிறேன் திருவெண்காட்டிலும், மாயவரத்திலும்.

    இங்கும் பறவைகள் பால்கனியை அசிங்கம் செய்தாலும் அவற்றை விரட்ட மனம் இல்லை.

    உணவும், தண்ணீரும் வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, இங்கே பால்கனிப்பக்கம் வரதில்லை! ஆகவேபக்கத்துத் தோப்புக்கு அருகே வரும் எங்க ஜன்னலில் வைக்கிறோம்.காலை அவரோட முதல் வேலையே இதான். நேத்திக்கு வைச்சவற்றை எடுத்துச் சுத்தம் செய்து தண்ணீர் மாத்திப் புது உணவும் வைச்சுடுவார். அதுங்க சாப்பிடும் சப்தம் கேட்கும். கண்ணாடிக் கதவு என்பதால் கொஞ்சம் தெரியவும் செய்யும். ஆனால் கதவைத் திறந்தா பறந்துடும். ஆகவே திறப்பதில்லை.

      Delete
  15. சிரிச்சுட்டேன் கீதாக்கா செமையா எழுதியிருக்கீங்க...// இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ஆஸ்பத்திரி மாஆஆஆஆஆதிரி எல்லாம் இல்லை, பிரசவ ஆஸ்பத்திரியே தான். //

    எங்க வீடும் அதே அதே பாண்டிச்சேரி வீடு வரை பைரவர்கள் பூஸார்கள் என்று. இப்போ இருக்கற வீட்டில் குளவி, வண்ணத்துப் பூச்சி, எறும்புகள், கரப்பான், பல்லி கேட்கவே வேண்டடாம் இப்பத்தான் வரி வரியா ஒரு பல்லி குட்டி...குளவி கூடு கட்டிருக்கு...படம் எடுத்து வைச்சுருக்கேன்...

    ரொம்ப ரசித்துப் படிச்சேன் அக்கா....செம எக்ஸ்பீரியன்ஸ்...ஆமா நீங்க சுப்புக் குட்டியையே வைச்சுருந்தீங்க அப்படியிருக்க இதுங்க எல்லாம் ஜுஜூபி!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ராஜஸ்தானில் ஒரு மீன் கொத்தி, ஒரு கிளிக்குஞ்சு னு அடிபட்டு விழுந்ததை மருந்து போட்டுக்காப்பாத்தினோம். அங்கேயும் பைரவர்கள் தானாக வருவாங்க! எலி எல்லாம் கேட்கவே வேண்டாம். அவங்க இல்லாமல் நாம குடும்பம் நடத்த முடியாது! கொஞ்சம் கூடப் பயமில்லாமல் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்துக்கும்! :))))


      Delete