இரண்டு நாட்கள் டாட்டா போறேன். வெள்ளிக்கிழமை சாயந்திரம் முடிஞ்சா, பிழைச்சுக் கிடந்தா பார்க்கலாம். அது வரைக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, August 29, 2018
Monday, August 27, 2018
ரங்குவோட பூச்சாண்டி சேவை! குலோப்ஜாமூனோட "திங்க" வாங்க!
முதல்லே எல்லோரும் குலோப்ஜாமூன் எடுத்துக்குங்க. காரத்துக்குத் தவலை வடை நம்ம எ.பியிலே இருக்கு. முதல்லே இங்கே வந்துட்டுஸ்வீட் எடுத்துண்டு அப்புறமாத் தவலை வடை சாப்பிடப் போகும்படியாப் பதிவைப் போடணும்னு நினைச்சேன். முடியலை. படமே அப்லோட் ஆகலை. அதோட ஒரே ஓட்டம், பிடி! அதிலே உட்காரவே நேரமே வேறே இல்லை. ராத்திரி குஞ்சுலு வேறே வந்ததா! அப்புறமாப் போய்ப் படுத்துட்டேன். முதல்லே பார்க்கிற ஜாமூன் ஜூன் மாசமோ, ஜூலை மாசமோ பண்ணினது. உருளியிலே பண்ணினேன். நான் எந்தப் பாகு வைக்கிறதா இருந்தாலும் வெண்கல உருளியில் தான் வைப்பேன். கீழே உருளியில் நீங்க பார்க்கிற குலோப்ஜாமூன் முன்ன்னாடி பண்ணினது. அதுக்குக் கீழே இருப்பது இப்போ வெள்ளிக்கிழமை பண்ணினது. ஒரு குட்டிப் பயலைப் பார்க்கப் போனேன். அப்போப் பண்ணி எடுத்துண்டு போனது கீழே இருப்பது. இப்போப் பண்ணும்போது அலுமினியம் சட்டியிலே பாகு வைச்சேன். நெ.த. கல்கத்தா அலுமினியம் சட்டியே பார்த்தது இல்லைனாரா, அதான் இந்த முறை அதிலே பண்ணினேன். இதை விடப் பெரிசு எல்லாம் இருந்தது. அவ்வளவு இப்போத் தேவை இல்லை என்பதால் தானம் கொடுத்துட்டேன்.
கல்கத்தா அலுமினியம் சட்டி
ஜாமூன்கள்
பூச்சாண்டி சேவை!
பத்து நாட்களாக ரங்குவைப் பார்க்கப் போகணும்னு சொல்லிட்டிருந்தேன். ஏனெனில் இப்போப் பவித்ரோத்ஸவம் நடக்குது. இது முடிஞ்சு ரங்குவுக்குத் தைலக்காப்பு சார்த்தினாங்கன்னா பின்னர் தீபாவளி வரை திருவடி தரிசனம் கிடைக்காது. ஆகவே ரங்குவைப்பார்க்கணும் என்பதோடு இப்போப் பூச்சாண்டி சேவை என்னும் சிறப்புச் சேவை வேறே. இந்த சேவை பார்த்ததே இல்லை. இது குறித்த விவரங்களுக்குப் படத்தின் அருகே உள்ள சுட்டியைக் க்ளிக் செய்து ஆன்மிகப்பயணம் வலைப்பக்கம் போங்க! எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!
இன்னிக்கு காயத்ரி ஜபம் என்பதால் காலையிலே ஆகாரம் ஏதும் எடுத்துக்காமல் நேரடியாப் பத்து மணிக்குச் சாப்பாடு சாப்பிட்டாச்சு. உடனே ரங்குவையும் பார்த்து விசாரிச்சுட்டு வரலாம்னு கிளம்பியாச்சு. வழக்கம் போல் முதல்லே தாயாரைப் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். நல்லவேளையா பாட்டரி கார் நின்னுட்டு இருந்தது. அங்கே அரங்கன் சந்நிதி நுழைவாயிலுக்குக் கொண்டு விட்டாங்க. மறுபடியும் உள்ளே நுழையும் முக்கிய நுழைவாசலை மூடிட்டுக் கம்பி கட்டி உள்ளே அனுப்பறாங்க! உள்ளே போனதும் கொஞ்சம் கூட்டம் இருந்ததால் கவலையாக இருந்தது. ஆனால் 50 ரூ டிக்கெட்டுக்கு அவ்வளவு கூட்டமில்லை என்பதால் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போனோம். இங்கேயும் நுழையும் படிக்கட்டுகள் முதல் முதல் ஏழு வருஷங்கள் முன்னாடி போனாப்போல் இரண்டாம் நுழைவாயிலுக்கு அருகே மாத்திட்டாங்க! கொஞ்சம் கூட்டம் இருக்கத் தான் செய்தது. மெதுவாக வேறே நகர்ந்தது.
அரை மணி நேரம் நின்றிருப்போம். அரங்கன் சந்நிதி வந்தது. வழக்கம்போல் போறச்சேயே நம்பெருமாளைப் பார்த்துட்டேன். அவர் ஏதேதோ மாலைகள் போட்டிருந்தார். பூச்சாண்டிக்கோலத்தில் வித விதமான மாலைகள் உண்டுன்னாலும் இது பார்க்க ருத்திராக்ஷம் மாதிரி தெரிஞ்சது. ரங்க்ஸ் இல்லை சாளக்கிராமம் என்கிறார். எதுனு கேட்டால் அங்கே யாரும் பதில் சொல்லப் போறதில்லை. ஆகவே நிதானமாப் பெரிய ரங்குவை தரிசனம் செய்துக்கலாம்னு இருந்துட்டேன். தரிசனம் செய்தால் என்ன ஆச்சரியம்! பெரிய ரங்குவின் வலக்கண் நம்மையே பார்க்கிறாப்போல் ! அவர் கண்ணை விழித்துப் பார்க்கிறாப்போல் இருக்கு! தூக்கி வாரிப் போட்டது எனக்கு! அதுவும் கடைக்கண் தரிசனம்! எனக்குத் தான் அப்படினு நினைச்சா நம்ம ரங்க்ஸும் வெளியே வந்ததும் அதையே சொல்றார்.
திருமுடி, திருவடி தரிசனம் கண்ணாரக் கண்டு கொண்டு விடாப்பிடியாகத் துளசி பெற்றுக் கொண்டு வெளியே தீர்த்தம் வாங்கிக் கொண்டுசந்நிதியை விட்டு வெளியே வந்தோம். அங்கே கிளிமண்டபம் இன்று திறந்து இருந்தது. அங்கே தான் பரவாசுதேவரைப் பார்க்க முடியும். பல நாட்கள் ஆகிவிட்டதே எனக் கிளி மண்டபம் ஏறிப் பர வாசுதேவரையும் தங்க கோபுரத்தில் தரிசனம் செய்து கொண்டோம். முன்னாடி எல்லாம் மேலே கூரையில் உள்ள ஜன்னல் திறந்திருக்கும். பரவாசுதேவரை முழுசாப் பார்க்க முடியும். இப்போ ஜன்னலில் கம்பி போட்டிருக்காங்க. ஆகவே முழுசாப் பார்க்க முடியாது! :( மறுபடி கீழே இறங்கித் தொண்டைமான் மேடு வழியே மேலே ஏறி விமான தரிசனம் மறுபடி செய்து கொண்டு வெளியே வந்தோம். இப்போவும் நல்லவேளையா பாட்டரி கார் தயாராக இருக்கவே அதிலே ஏறித் தாயார் சந்நிதிக்கு அருகே வந்து வடக்கு வாசலில் வெளியே வண்டியை விட்ட இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
Saturday, August 25, 2018
மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அனுபவம், மீள் பதிவு 3
இனி நாம் பம்பாய் பயணத்தைத் தொடரலாம். ரொம்பப் பேருக்குச் சந்தேகம் வருது, நான் எப்படி அம்மாதிரியான நிலையில் ஆட்டோவில் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஏறினேன் என்று. பொதுவாக எங்க வீட்டில் முடிவு எடுப்பது என் கணவர்தான் என்றாலும் அப்போது அவர் இல்லை. நானே முடிவு எடுக்கணும். இங்கே உட்காருவதை விட போரிவிலி போனால் அங்கே போய்ப் பார்க்கலாம் அல்லது ஸ்டேஷனிலேயே வெயிட்டிங் ரூமில் தங்கிக் கொண்டால் மறுநாள் லோக்கல் வண்டியில் அலுவலகம் செல்ல என் மைத்துனரகள் இருவருமோ அல்லது என் ஓரகத்தியோ அல்லது மூவருமோ வருவார்கள். அங்கே வந்துதான் ஆகணும். லோக்கல் வண்டியில் போய்ப் பார்க்கலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் இது எல்லாம் வெளியில் சொல்லிக்கலை.
ஆட்டோ டிரைவர் ரொம்பவே நல்லவராக அமைந்தது எங்கள் அதிர்ஷ்டம். பொதுவாய் அங்கே எல்லாம் அவ்வளவு ஏமாற்ற மாட்டார்கள் என்றாலும் இவர் நன்கு படித்தவர். எம்.ஏ. படித்துவிட்டு மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்புப் படித்துக் கொண்டு இருந்தார். வண்டி மலைப் பாதையில் போவதால் என்பெண்ணை முதலில் கம்பிக்குப் பக்கத்திலும், நான் நடுவிலும்
பையனை ஓரத்திலும் உட்காரச் சொல்லிவிட்டுக் கயிறைக் கொடுத்து இறுக்கிப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். கொண்டை ஊசி வளைவுகளில் ஆட்டோ சக்கரம் கார், வான், பஸ் மாதிரி மெதுவாய்ப் போகாது. கொஞ்சம் வழுக்கும் ஆகவே பிடித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழி சரியான வழிதான் என்று எங்கள் கூட வந்தவர்களின் வண்டி முன்னால் போனதில் இருந்து தெரிந்தது. இருந்தாலும் நான் எனக்குத் தெரிந்த ராமநாமாவையும், கந்த சஷ்டி கவசத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே வந்தேன்.
கொஞ்ச நேரத்தில் வந்து விடும் என்று நினைத்தால் டிரைவர் 21/2 மணி நேரம் ஆகும் என்றார். மலைப்பாதை முடியவே ஒரு மணி நேரம் ஆனது. பிறகும் பாதையில் ஏற்ற இறக்கங்கள். எல்லாம் முடிந்து போரிவிலி வருகிறது என்று டிரைவர் சொல்லும்போது அங்கே ஒரு ட்ராஃபிக் போலீஸ்காரர் வந்து எங்கள் வண்டியையும் முன்னால் போன வண்டியையும் நிறுத்தினார். எங்க ஆட்டோவை நிறுத்தின போலீஸ்காரர் ஆட்டோ டிரைவரிடம் லைசென்ஸ் கேட்டார். லைசென்ஸ் குஜராத் மாநிலத்துக்குள் மட்டுமே ஓட்டக் கூடியதாய் இருந்திருக்கிறது. ஆகவே எங்களை போரிவிலிக்குள் கூட்டிப் போக முடியாது எனத் தெரிவிக்க, நாங்கள் ஸ்டேஷன் பக்கம் இறங்கிக் கொண்டு அனுப்புவதாய்க் கேட்டுக் கொண்டு லெவெல் க்ராஸிங் தாண்டியதும் ஸ்டேஷன் வாசலில் இறங்கிக் கொண்டோம். சாமான்களை இறக்கி நாங்களும் இறங்கி ஆகி விட்டது.
ஒரே ஆட்டோக்களும், டாக்ஸிகளுமாய் நின்று கொண்டிருந்தது. ஆனால் விலாசம் தெரியாமல் இனி என்ன செய்வது? பையன் போய் ஸ்டேஷனில் உள்ளே பார்த்து விட்டு வந்தான். ஸ்டேஷன் வெறிச்சோடிக் கிடந்தது. யாரைக் கூப்பிடுவது எனத் தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டு பொது தொலைபேசியில் போய் விலாசங்களைப் பார்த்தால் உறவினர் யாருடைய விலாசமாவது கிடைக்கும். அவங்க யார் கிட்டேயாவது சொல்லலாமான்னு யோசித்தோம். அதைச் செயல்படுத்தலாமா வேண்டாமான்னு எங்களுக்குள் தீவிர விவாதம். அதுக்குள் என் பெண் பக்கத்தில் ஒரு வண்டி கிளம்புவதற்கு யாரோ வருவதைப் பார்த்து விட்டுக்கொஞ்சம் நகர்ந்து இடம் விட்டவள், "சித்தப்பா, அம்மா, சித்தப்பா, அங்கே பாரு சித்தப்பா" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஒரு வாடகை வண்டி பால்கருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.
நாங்கள் வந்த வண்டி அங்கே நின்றிருக்கும் விஷயம் இவர்களுக்குத் தெரிந்த படியால், நாங்கள் வண்டியிலேயே இருப்போம் என்று நினைத்துப் பால்கர் போய் வண்டியில் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூடவே இன்னொருத்தரும் அவர் குடும்பத்தை அழைத்து வர அவர்களுடன் கிளம்பி இருக்கிறார். எங்க சத்தம் கேட்டதும், அல்லது உடனே எங்க பையன் ஓடிப் போய்ச் சித்தப்பாவைக் கட்டிப் பிடித்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி. நிஜமாவே அவங்க யாரும் எதிர்பார்க்கவே இல்லை, நாங்க தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கோம்னு. கொஞ்ச நேரம் யாருக்கும் பேச்சே வரவில்லை. அப்புறம் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு,நல்ல வேளை நாங்க இறங்கின கிழக்குப் பகுதி (இறங்கும்போது கிழக்கா, மேற்கா தெரியாத், மேற்கே இறங்கி இருந்தால் பார்த்திருக்க முடியாது.)யிலேயே மச்சினன் வீடும் இருந்தது. வீட்டிற்குப் போய்க் குழந்தையைப் பார்த்த போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையும் எங்களைப் பார்த்ததும் தெரிந்த மாதிரி சிரித்தான்.

இந்த மாதிரி நடக்குமா, கதை போல் இருக்கிறதே, நம்ப முடியவில்லையே என்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன் என்றால் இப்படித்தான் நடந்தது. இதுதான் நிஜம். என்ன தைரியத்தில் கிளம்பி வந்தோம், அங்கே என் மச்சினனை அந்த நேரம் பார்த்து யார் கொண்டு விட்டது? இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில்? எல்லாம் வல்ல அந்த ஈசன் தான் காரணம். நான் என்றும் என் நண்பராய்க் கருதும் அந்த விநாயகரும்,அவர் தம் அருமைத் தம்பியும் தான் எங்களுக்குத் துணை இருந்து கொண்டு சேர்த்தார். "காக்க, காக்க, கனகவேல் காக்க' என்று எத்தனை முறை சொல்லி இருப்பேனோ தெரியாது. அந்த வெற்றி வடிவேலன் தான் துணை இருந்தான்.
"வெற்றி வடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்:
சுற்றி நில்லாதே போ!-பகையே
துள்ளி வருகுது வேல்!"
Thursday, August 23, 2018
அம்மா மண்டபக் காட்சிகள்!
நேற்றிரவுக்கொள்ளிட மதகுகள் உடைந்த செய்தி கேட்டதில் இருந்து பரபரப்பு! இன்றைய முக்கிய வேலைக்குப் பங்கம் ஏற்படக் கூடாதெனப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டோம். கொள்ளிட மதகுகள் மட்டுமின்றிக் காவிரிக்கு நீர் போகும் மதகுகளும் உடையும் நிலையில் இருப்பதாகச் செய்தி காலையில் வந்தது. ஏற்கெனவே கொள்ளிடத்தில் நீர் போய்க் கொண்டிருப்பதால் இந்த அதிகப்படி நீரைக் காவிரிக்குத் திருப்பி விட்டார்கள். ஆகவே காவிரி நீர் ஸ்ரீரங்கம் வந்துடுமோனு கவலை! ஆனால் வரலை. காலை எல்லாம் வழக்கப்படி இருந்தது. என்றாலும் அம்மா மண்டபம் திறந்து விட்டதாகத் தகவல் கிடைக்கவே அங்கே போய்ப் பார்த்துச் சில படங்கள் எடுத்தோம். திரும்பத் திரும்ப அம்மா மண்டபமா என்னும் நண்பர்களுக்கு இவை வேறே கோணத்தில் எடுக்கப்பட்டவை. பொறுத்துக் கொள்ளவும். குளிக்க அனுமதி இல்லை. கரையோரங்களில் காவல் துறையினர் காவலுக்கு இருக்கின்றனர். மக்களை நீரில் இறங்க அனுமதிப்பதில்லை. தொட்டுத் தலையில் புரோக்ஷணம் செய்து கொள்ளலாம். குழந்தைகள் அருகே வர அனுமதிப்பதில்லை.
அப்பாவின் செல்ஃபி மோகத்துக்கு 2 வயதுப் பையர் ஒருவர் தன் உயிரையே கொடுத்திருக்கும் செய்தி அனைவரும் அறிந்திருப்பீர்கள்! :( சின்னக் குழந்தையைப்பாலத்துக் கைப்பிடிச் சுவரில் உட்கார்த்தி வைத்து விட்டு செல்ஃபி எடுத்திருக்கிறார் அப்பா. குழந்தை அப்படியே மல்லாக்கக் காவிரியில் விழுந்து விட்டது! :(
கீழே இன்னிக்கு எடுத்த படங்கள்.
அம்மாமண்டபம் நுழையும் இடம். வழக்கமாய் இருக்கும் கூட்டம் இன்று இல்லை.
கொஞ்சம் கிட்ட இருந்து எடுத்த படம்
பெண்கள் குளிக்கும் படித்துறை போகும் வழி! பக்கத்தில் குளியலறை, உடை மாற்றும் அறை உள்ளது. அங்கே மிக அருகே போக அனுமதி இல்லை.
அந்தப் படித்துறையிலிருந்து ஒரு காட்சி. படிகள் மூழ்கி விட்டன.
திரும்பிப் பொதுப் படித்துறைப்பக்கம் வந்தப்போ கண்ணில் பட்ட கருப்பர்! இன்னிக்குத் தான் பார்த்தேன். உடனே படம் எடுத்துக் கொண்டேன்.
பொதுப் படித்துறையில் கிழக்கு நோக்கி எடுத்த படம். தூரத்தில் தெரிவது உ.பி. கோயில். செல்ஃபோனில் ஜூம் பண்ணத் தெரியவில்லை! :(
இங்கே நின்று நீர் எடுக்கிறாங்களே இவங்க எடுக்கும் படிக்குக் கீழேயும் படிகள் உள்ளன. இந்த மேல்படி வரை நீர் வந்திருக்கு. இப்போக் குறைஞ்சிருப்பதாய்ச் சொன்னாங்க. மேல்படியில் நீர் இருந்தப்போ யாரையும் அனுமதிக்கலை!
நீரைப் பார்த்துவிட்டுச் செல்லும் மனிதர்கள்
அம்மாமண்டபத்தில் ஆஞ்சிக்கு எதிரே ஸ்ரீராமரா, லக்ஷ்மணனா என ஒரு பட்டிமன்றம் நடந்ததே, அந்தச் சிற்பம் இருக்கும் தூணுக்கு இன்னொரு பக்கம் (இது கொஞ்சம் உள்பக்கமாக இருப்பதால் இருட்டு, சரியா வெளிச்சம் இல்லை) இருக்கும் கருடாழ்வார். ஸ்ரீராமர் இருக்கும் தூணுக்கு அந்தப்பக்கம் வெளிப்பக்கம் பார்த்த வண்ணம் யாரோனு நினைச்சா நம்ம சிங்கம்!
சிரிக்கும் சிங்கம். இன்னிக்குக் காலம்பரேயே போனதால் வெளியே கிளம்பவேண்டிய அவசரம். இன்னொரு நாள் சாவகாசமாக ஒவ்வொரு தூணையும் ஆராய வேண்டும்.
Wednesday, August 22, 2018
மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அனுபவம்! மீள் பதிவு 2
பால்கரில் செளராஷ்ட்ரா மெயில் நின்று கொண்டு இருந்தது. நாங்களும் வண்டியில் உட்கார்ந்து கொண்டு எப்போது கிளம்பும்னு யோசித்துக் கொண்டிருந்தோம். பக்கத்துப் ப்ளாட்ஃபார்மில் ஒரு வண்டி பால்கரில் இருந்து தாதருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தது. எங்கள் வண்டியில் இருந்து சிலர் அதில் ஏறினார்கள். என்னடா இதுன்னு யோசிக்கும் போதே வண்டி சட்டுனு கிளம்பிவிட்டது. சரி, ஏதோ அவசரமாப் போவாங்கனு நினைச்சோம். ஒரு 1/2 மணி நேரத்துக்கு எல்லாம் விரார் என்னும் ஸ்டேஷனில் இருந்து ஒரு வண்டி வந்தது. இது போரிவிலிக்கு முன்னாலே அதாவது பால்கருக்கும், போரிவிலிக்கும் நடுவில் வரும். அந்த வண்டியில் இருந்து வந்தவர்கள் எங்களைப் பார்த்து, அதாவது எங்களை மட்டும் இல்லை பொதுவாக எங்கள் வண்டியில் இருந்தவர்களைப் பார்த்து நீங்க இன்னிக்குப் போக முடியாது. இங்கே இருந்து போன வண்டியும் பாதி வழியிலே நிக்குது. என்று சொன்னார்கள். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கீழே இறங்கி யாரையாவது கேட்கலாம்னு யோசிக்கும்போது ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தார்கள். பலத்த மழை காரணமாக வண்டி இன்று பம்பாய் செல்லாது எனவும், அங்கிருந்து வண்டி வர அறிவிப்பு வந்ததும்தான் கிளம்பும் எனவும் சொன்னார்கள். "இப்போ என்ன செய்யறது?" எங்களுக்கு அதிர்ச்சி. இதுக்கு முன்னாலே எல்லாம் இம்மாதிரி நடந்திருக்கு. அதுவும் முதல்முறை என் பெண் பிறந்து மதுரையில் இருந்து சென்னை வரும்போது சனிக்கிழமை காலை கிளம்பி ஞாயிறு அன்று இரவு மதுரை வந்து சேர்ந்தோம். அப்போவும் இதே மழை, வெள்ளம்தான். அப்போ அப்பாவும், அம்மாவும் கூட இருந்தார்கள். அதனால் பயம் எல்லாம் இல்லை.
இதே மாதிரி ஒரு 2 வருஷத்துக்கு முன்னால் நசிராபாத்தில் இருந்து செகந்திராபாத் "காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்ஸில்" போகும்போது (மீனாட்சி எக்ஸ்ப்ரஸ்னு பேர் மாறிடுச்சு) வண்டி தடம் புரண்டு விட்டது. அதே வண்டி இஞ்சின் எரிந்து போனது. ஆனால் அப்போ எல்லாம் என் கணவர் எங்களுடன் இருந்தார். ஆகவே முடிவு எடுக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது. நாங்கள் உண்மையில் அந்தப் பிரயாணங்களை ரொம்பவே ரசித்தோம். ரெயில் நடுக்காட்டில் தடம் புரண்டு நின்றதும் பக்கத்து ஸ்டேஷன்களுக்கு எப்படித் தகவல் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்து மீட்பு வண்டி வந்து எப்படி மீட்கிறது என்பது வரை பார்த்தோம். அங்கேயே கூட வந்தவர்களில் சிலர் கல்லை அடுக்கி அடுப்பு மூட்டித் தேநீர் தயார் செய்து (பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்தார்கள்) எல்லாருக்கும் கொடுத்தார்கள். ஏதோ பிக்னிக் மாதிரி இருந்தது. தவிர அந்த வழியில் ரெயில் பிரயாணமே ரொம்ப ரசிக்கும்படியாய் இருக்கும்.
இப்போ என்ன செய்யறது? பம்பாய் எங்களுக்குப் புதிசு. போரிவிலி கருப்பா, சிவப்பா தெரியாது. மச்சினன் இருப்பது தத்தபாடா ரோடு என்று தெரியும். ஆனால் அது மேற்கு, கிழக்கு இரண்டு பகுதிகளையும் இணைக்கும் என்பதோ அவன் கிழக்குப் பகுதியில் இருந்தான் என்பதோ தெரியாது. அப்போ எங்க 2 பேர் கிட்டேயும் வீட்டில் தொலைபேசி இல்லை. ஃபோனிலும் தகவல் தெரிவிக்க முடியாது. கீழே இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டதற்கு வேறு ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. எங்களுக்கு அலுவலகம் மூலம் தகவல் வந்தால்தான் செய்ய முடியும் என்றும் வண்டி சீக்கிரம் கிளம்பும் என்பதால் செய்யவில்லையோ என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்தார். மணி 10, 12 என்று ஓடிக் கொண்டு இருந்தது. ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அங்கே ஸ்டேஷன் வாசலில் இருந்த ஆட்டோ, வாடகைக் கார் முதலியனவற்றில் போய்க் கொண்டிருந்தார்கள். எங்கள் பெட்டியிலும் உள்ளவர்கள் எல்லாம் இறங்கி நாங்களும், ராஜ்கோட்டில் ஏறியவர்களும்தான் பாக்கி. அவர்களும் போரிவிலிதான். ஆனால் அவர்கள் 7,8 பேர் இருந்தார்கள். மேலும் போரிவிலி மேற்கு என்றார்கள். நான் ரொம்பச் சமர்த்தாக நாங்கள் மேற்கா, கிழக்கா எனத்தெரியாது என்பதைச் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேன். வேறு வழியில்லாமல் 1 மணி போல் இருக்கும் நாங்களும் இறங்கினோம். மூட்டை, முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஒவ்வொருத்தராகக் கேட்டோம். அவர்கள் கேட்ட பணத்தில் நான் ஒரு ஆட்டோவே வாங்கலாம் போல் இருக்கே என்று நினைத்தேன். ஒன்றும் சரிவராமல் பேசாமல் உள்ளே போய் உட்காரலாம். வண்டி கிளம்பும்போது ஏறிக் கொள்ளலாம் என்று நினைத்தபோது ஒருத்தர் தான் ஆட்டோவை எடுத்துக் கொண்டு வருவதாகவும் 400ரூ கொடுத்தால் போதும் எனவும் சொன்னார். நாங்கள் 200ரூ தான் கொடுக்க முடியும் என்று சொல்ல அவர் கடைசியில் 250/க்கு ஒத்துக் கொண்டு எங்களை ஏற்றிக் கொண்டார். போரிவிலியில் எங்கே என்று கேட்க நான் ரொம்பத் தெரிந்த மாதிரித் "தத்தப்பாடா ரோடு," என்றேன். அவர், "பஹின் ஜி., தத்தபாடா ரோட் மே கஹான்? பூர்வ் யா பஸ்சிம்?" என்று கேட்க, நான், "ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்." என்று சொன்னேன். ஆட்டோ கிளம்பியது.
இன்றிலிருந்து அடுத்த இரு தினங்களுக்கு முக்கியமான வேலை மும்முரம். நாளைக்கு இணையத்துக்கு வர முடியுமானே சந்தேகம். முடிந்தால் சாயங்காலமா வரப் பார்க்கிறேன். (அப்பாடா, நிம்மதினு யாரோ சொல்லிக்கிறாங்க, காதிலே விழுந்துடுச்சு! :P) இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை! என் கடமை! இந்த மீள் பதிவு போர் அடிக்குதுனும் முணுமுணுக்கிறது காதிலே கேட்டுது! அதான் போணியே ஆகலைனும் புரிஞ்சது! ஆனாலும் நானும் இணையத்திலே இருக்கேன் எனச் சொல்லிக்கிறதுக்காகப் போட்டிருக்கேன். ஹிஹிஹி! நாளை முடிஞ்சுடும். கவலை வேணாம்.

Monday, August 20, 2018
மழை, வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கதை! மீள் பதிவு! படிக்காதவங்களுக்காக!
கேரள, கர்நாடக மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறாங்க. ஃபேஸ்புக்கில் மத்யமர் குழுமத்தில் அவரவர் வெள்ள அனுபவங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருந்தாங்க. அதிலே போட வேண்டி நாங்க முதல் முதலா மும்பை போன அனுபவத்தைத் தேடி எடுத்தேன். ஆனால் அங்கே எல்லோரும் அநேகமாப் போட்டு முடிச்சுட்டாங்க! அதோட நம்மோடது அப்படி ஒண்ணும் ருசிகரமா இருக்காது. அங்கே நம்மை விடப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் எழுதிட்டாங்க! அதுக்கு முன்னே இது எந்த மூலை! ஆகவே இங்கேயே மொக்கை போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டுப் போட்டுட்டேன். ஏற்கெனவே படிச்சவங்க அடிக்க வராதீங்க! :))))
*********************************************************************************
இது நடந்தது 1990 ஆம் வருஷம். நாங்க அப்போத் தான் ராஜஸ்தான் நசிராபாதில் இருந்து குஜராத் ஜாம்நகர் மாற்றல் ஆகிப் போயிருந்தோம். ஜூன் மாசம். தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும் நேரம். சென்னையில் என் அப்பா வீட்டில் ஒரு விசேஷம் என்பதால், நானும் குழந்தைகளும் ஜாம்நகரில் இருந்து சென்னை ஒரு 2 நாளில் போவதாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தது. இப்போது தான் வந்ததாலும், ஜாம்நகர் அலுவலகத்தைத் தவிர கட்சில் உள்ள "புஜ்" ஜில் உள்ள அலுவலகமும் என் கணவரின் கீழ் இருந்ததால் அவர் நாடாறு மாதம், காடாறு மாதம் தான் இங்கிருந்து மாற்றல் வரும் வரைக்கும். ஆகவே அவர் எங்களுடன் சென்னை வரவில்லை. நாங்கள் சென்னை போகும் திட்டம் என் கணவரின் முதல் தம்பிக்குத் தெரியும் ஆதாலால் அவர் எங்களை பம்பாய் வந்து விட்டுப் பின் சென்னை போகும்படிக் கூறி இருந்தார். நாங்கள் அதுவரை பம்பாய் போனது கிடையாது. ஒவ்வொரு லீவிலும் போக முடியாமல் ஏதாவது தடை இருக்கும். இப்போ அவருக்குக் குழந்தை வேறே பிறந்திருந்தது. நாங்கள் இன்னும் அந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உத்தேசித்தும் பம்பாயில் என் கணவரின் தாய்வழி உறவினர்கள் நிறைய இருந்ததாலும் அங்கே போய்விட்டே சென்னை போவதாக முடிவு செய்து அதற்குத் தகுந்தாற்போல் டிக்கெட் எடுக்கப் பட்டிருந்தது. செளராஷ்ட்ரா மெயில் துவாரகா அருகே இருக்கும் "ஓகா" என்னும் ஊரில் இருந்து ஜாம்நகர், ராஜ்கோட் வழியாகத் தான் அஹமதாபாத் வந்து பரோடா, சூரத் வழியாக பம்பாய் வரும். என் மைத்துனர் "போரிவிலி"யில் இருந்தார். அவர் அலுவலகக் குடியிருப்பு. அங்கே இருந்து "சர்ச் கேட்" பகுதியில் உள்ள அவர் அலுவலகத்துக்கு நேரே ரெயில் இருந்தது. அவர் மனைவியும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்தாள். இந்த செளராஷ்ட்ரா மெயில் காலை 6-20 மணி அளவில் "போரிவிலி" வரும். ஆகவே அவருக்கு ஸ்டேஷன் வந்து கூட்டிப் போகவும் வசதி. இதற்கு முன்னால் என்றால் நாங்கள் அமர்க்களத்தோடு ஜாம்நகர் வந்தோமே அந்த
"ஹாப்பா ஜனதா" வண்டி தான். அது ஹாப்பாவில் இருந்து கிளம்புவதோடு இல்லாமல் போரிவிலிக்குக் காலை 4-30-க்கே போய்விடும். அவங்க தூக்கத்துக்கு இடைஞ்சல். எல்லாருக்கும் வசதியாக இந்த வண்டி ஏற்பாடு செய்து குறிப்பிட்ட நாளில் கிளம்பினோம்.
இதுவரை நான் தனியாகப் பிரயாணம் செய்தது என் பையன் பிரசவத்துக்கு மதுரை போகும் போதும், அங்கே இருந்து திரும்ப நசிராபாத் வரும்போதும் தான். மதுரை போகும்போது என் தம்பியும் ,அம்மாவும் நசிராபாத் வந்திருந்தார்கள் என்றாலும் தம்பி ரொம்பவே சின்னப் பையன். மொழிப் பிரச்னை. ஆகவே கிட்டத் தட்ட நான் தான் கூட்டிப் போனேன் என்று சொல்ல வேண்டும். திரும்ப வரும்போது அண்ணாவும், மன்னியும், என் சிறிய நாத்தனாரும் வந்தார்கள் என்றாலும் அதே பிரச்னைதான். அப்பவும் நான் தான் கூட்டி வந்தேன். இப்போ ரொம்ப நாள் கழிச்சு நாங்க 3 பேரும் தனியாகப் போகிறோம். அதுவும் முதல் முதல் பம்பாய்க்கு. என் மைத்துனன் வீட்டிலும் சரி, எங்களுக்கும் சரி அப்போ ஃபோன் வசதி இல்லை. ஆஃபீஸ் நம்பரில்தான் முக்கியமான விஷயம் இருந்தால் அண்ணா, தம்பி பேசிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் கடிதம் தான். ஆகவே என் மைத்துனர் போரிவிலியில் CWC க்வார்டர்ஸில் "தத்தபாடா ரோட்"டில் இருக்கிறான் என்று தெரியும். மற்றபடி அவர் அலுவலகம் சர்ச்கேட்டில் இருக்கிறது என்றும் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. என் கணவரிடம் எதற்கும் ஸ்ரீதர் விலாசம் கொடுங்கள் என்றதற்கு அவர், உன்னை ரெயில் ஏற்றிவிட்டு அவர் ஆஃபீஸுக்கு ஃபோன் செய்து விடுகிறேன். மத்தியானம் 2-200க்கு ஏறினால் காலையில் போரிவிலி 7 மணிக்கு வீடு போயிடலாம் என்றார். என் மாமனார், மாமியார் வேறு அப்போ அங்கே தான் இருந்தார்கள். அதனாலும் நாங்கள் கட்டாயம் போக வேண்டி இருந்தது. வண்டியில் ஏறினோம். வண்டியும் கிளம்பியது. அப்பா வராமல் குழந்தைகளுக்குள் ஒரு வெறுமை, இருந்தாலும் வேறு வழி இல்லை. ராஜ்கோட் ஒரு மணி நேரத்தில் வந்தது. ராஜ்கோட்டில் ஒரு குடும்பம் ஏறியது. அவங்க வீட்டையே காலி செய்து இந்த ஸ்லீப்பர் க்ளாசில் ஏற்றினார்கள். எங்களுக்குக் கால் வைக்க மட்டும் இல்லை, கை வைக்கவும் இடம் இல்லை. பாத்ரூம் போகப் பச்சைக் குதிரை தாண்டிப் போகவேண்டி வந்தது. அவங்ககிட்டே சொன்னால் குஜராத்தியில் சண்டை மாதிரி ஏதோ சொல்கிறார்கள். ஏற்கெனவே வெறுப்பில் இருந்த நான் இன்னும் வெறுப்பில் ஆழ்ந்தேன். ஒரு வழியாகக் காலை வந்தது. 5-00 மணி இருக்கும். நான் தான் கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டு இருப்பேனே, அது போல எழுந்து உட்கார்ந்திருந்தேன். வண்டி "பால்கர்" என்னும் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. டீ வந்தது சாப்பிட்ட படி கேட்டேன், "போரிவிலிக்கு இன்னும் எத்தனை தூரம்?" சாய்வாலா சொன்னார்: "யே காடி டீக் ஸே ஜாதே தோ ஏக் கண்டே மே ஜாயேகி" (சரியாகக் கிளம்பினால் இந்த வண்டி ஒரு மணி நேரத்தில் போரிவிலி போய்விடும்.)என்றார். "என்ன இது இப்படிச் சொல்றாங்க!" என்று நினைத்தேன். வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது.
Saturday, August 18, 2018
நாங்கள் இங்கு நலமே! காவிரியின் சீற்றம்?
இந்த வருடம் தென்மேற்குப் பருவ மழை போல் எந்த வருடமும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பதவி ஏற்றபின்னர் ரங்கநாதரைக் காண வந்த கர்நாடக முதலமைச்சர் திரு குமாரசாமி எந்த நேரம் அரங்கன் அருள் இருந்து இந்த வருடம் மழை பொழிந்தால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் என்றாரோ தெரியவில்லை. கர்நாடகத்தில் நாங்க தண்ணீரே கொடுக்க மாட்டோம் என்றிருந்த நிலை போய் இப்போ எங்களுக்குத் தண்ணீரே வேண்டாம், போதும்னு சொல்றாப்போல் ஆயிடுத்து! காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்னமும் கனமழை பெய்து வருகிறது என்பதை இங்கே வீசி வீசி அடிக்கும் காற்றே உறுதிப் படுத்துகிறது. மேட்டூர் அணை நிரம்பி வழிந்து, காவிரியிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதுவும் போதாமல் தினம் ஒரு லட்சம் கன அடிகள் என லட்சக்கணக்கில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கே அம்மா மண்டபம் படித்துறை மூடி விட்டார்கள். வடக்கே கொள்ளிடக்கரையிலும் மூடி விட்டதாகப் பால்காரர் சொன்னார். எங்கும் போலீஸ் பாதுகாப்பு! அம்மாமண்டபம் பக்கம் யாரையும் விடறதில்லை என்று சொல்கின்றனர்.
எதுக்கும் சாயங்காலம் மறுபடி அங்கே போய்ப் பார்க்க முடியுமா எனப் பார்க்கணும். நேற்று, இன்று திறக்கப்பட்டிருக்கும் நீர் இங்கே வந்து சேர நாளை வரை ஆகலாம். ஆகவே நாளைக்குப் போயாவது பார்க்கணும். அதற்குள்ளாகப் பலரும் இங்கே காய்கறி, பால்னு கிடைக்குதா, சமையல் செய்ய முடியுதா என்றெல்லாம் கேட்டிருக்கின்றனர். இங்கே ஒரு பிரச்னையும் இல்லை. இன்னிக்குப் போய்க் காய்கறி, விநாயகருக்கு அருகு, மல்லிகைப்பூ உதிரி எல்லாம் வாங்கிட்டு வந்தார். வடக்கே கொள்ளிடம் பாலம் நேற்றே மூடியாச்சு! நேற்றே மாலை அம்மா மண்டபம் படித்துறையும் மூடியாச்சு. ஆகவே அங்கே போய்ப் படம் எடுக்க முடியாது. காவிரிப்பாலம் போகணும்னா தனியாப் போக முடியாது! மொட்டைமாடியில் தான் சில படங்கள் எடுத்தேன். பார்த்தவரையில் சிந்தாமணிப் பகுதியில் நீர் உட்புகுந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால் யாரும் அது பற்றி எதுவும் சொல்லவில்லை. இங்கே சகஜமான வாழ்க்கைக்குப் பங்கம் ஏதும் ஏற்படவில்லை. கீழே நான் இன்னிக்கு வாங்கிய பூவைத் தொடுத்து வைச்சிருக்கேன் பாருங்க. எல்லாப்பொருட்களும் கிடைக்கின்றன. சகஜமாக மக்கள் நடமாடிக் கொண்டு இருக்கின்றனர்.
இன்று எடுத்த படங்கள். மொட்டைமாடியிலேயே எடுக்கறீங்க எனச் சொல்வதால் நான் அதிகம் பகிரவில்லை.
இன்னைக்குத் தொடுத்த மல்லிகைப் பூ. விலை ஜாஸ்தி. ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருப்பதால் வரத்துக் கம்மியாம். அதனால் விலை அதிகம். ஆனால் நல்ல பூவாக இருக்கிறது.
கொஞ்ச நாட்கள் முன்னர் ப்ரெட் சான்ட்விச் பத்திப் பேச்சு வந்தப்போ மானுவல் டோஸ்டர் பத்திச் சொல்லி இருந்தேன், பலரும் அப்படி இருப்பது தெரியும் என்பதாகச் சொல்லவில்லை. என்னிடம் இருக்கும் மானுவல் டோஸ்டர் படம் எடுத்துப் போட்டிருக்கேன். இது நான் ஸ்டிக் என்பதால் நான் அதிகம் (அநேகமாய்) பயன்படுத்துவதே இல்லை. இதற்கு முன்னர் இருந்தது இரும்பு! வெண்ணெய், அல்லது நெய்யை நன்கு தடவி விட்டு ப்ரெட் சான்ட்விச் செய்யலாம். ஒட்டாமல் வந்துடும். இதில் ஒட்டாது என்றாலும் அவ்வளவு பிடிக்கலை. அதோடு சீஸ் வைத்து சான்ட்விச் செய்தால் எந்த மானுவல் டோஸ்டராக இருந்தாலும் சரி, அல்லது எலக்ட்ரிக் டோஸ்டர் என்றாலும் சரி சீஸெல்லாம் வழிந்து விடும். ஆகவே சீஸ் சான்ட்விச் என்றால் நான் தோசைக்கல்லிலேயே செய்துடுவேன். சீஸ் போடலைனாத் தான் இதெல்லாம்.
ஆனால் கேரளாவில் வெள்ளத்தினால் பயங்கரமான சேதம்! வீடுகள் அப்படியே பிஸ்கட் நொறுங்குவது போல் விழுகின்றன. வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்த மக்கள் கதறும் ஒலி மனதைப் பிழிகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மதத் தலைவர்கள் பலரும் பல விதங்களில் சொல்லுகின்றனர். ஒருத்தர் இது சாத்தானின் வேலை என்கிறார். அப்படி எனில் கடவுளால் சாத்தானை அடக்க முடியாதா? பேத்தலாக இருக்கிறது. இன்னொருத்தர் ஐயப்பனின் சபரிமலைக்குப் பெண்கள் வரலாம் என உச்சநீதிமன்றம் சொன்னதால் ஐயப்பன் கோபம் கொண்டு யாருமே வரவேண்டாம் என் இடத்துக்கு என்று சொல்லிவிட்டதாய்ச் சொல்கிறார். சபரிமலைக்கு மட்டும் இப்படி நடந்திருந்தால் ஓரளவுக்கு ஏத்துக்கலாமோ என்னமோ! ஆனால் இதற்காக ஐயப்பன் ஒட்டுமொத்தக் கேரள மக்களைப் பழிவாங்க அவர் என்ன சீரியலிலா நடிக்கிறார்! ரொம்ப மோசமாக இருக்கிறது. இன்னொருத்தர் சிவன் மலையில் வில்லையும் அம்பையும் வைத்துப் பூஜிக்கவேண்டிப் பிரச்னம் வந்ததாகவும் அது கேரளம் முன்னாட்களில் சேர நாடு என இருந்ததால் வில்லும் அம்பும் உள்ள கொடி அவர்கள் கொடி என்பதால் இப்படி வந்திருப்பதாய்ச் சொல்கின்றனர். ஒரு வாதத்துக்காக இதைச் சரி என எடுத்துக் கொண்டால் கூட வில்லையும், அம்பையும் வழிபாடு தானே செய்கின்றனர். அப்போக் கடவுள் இப்படிப்பழி வாங்குவாரா என்ன? சாமானிய மக்களுக்கு உள்ள குணங்களை எல்லாம் கடவுள் மேல் ஏற்றிச் சொல்லலாமா? இயற்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வதால் மழையும் இயற்கைக்கு மாறாகப் பெய்கிறது!
காட்டை அழித்து வனவிலங்குகளின் வாழ்விடத்தை அழித்து என எல்லா அக்கிரமங்களையும் செய்தால்! என்ன சொல்ல! ஆனால் இத்தனை களேபரங்களிலும் கேரள மக்கள், மத்திய, மாநில அரசைப் பழித்துப் பேசவில்லை. என்னை வந்து காப்பாற்றவில்லை. அங்கே வரலை, இங்கே வரலை என்ற புகார்கள் இல்லை. வந்திருக்கும் ஆபத்தை திடமனதோடு எதிர்கொள்கின்றனர். காப்பாற்றி அழைத்துச் செல்ல வந்திருப்பவர்களிடம் எவ்விதமான கத்தலும் கூப்பாடும் இல்லாமல் அமைதியாக ஒத்துழைக்கின்றனர். இது நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம். எதிர்க்கட்சிகளும் இந்த நேரத்தில் எதிரிக்கட்சியாக இல்லாமல் ஒத்துழைக்கின்றன என்பதும் கேரள அரசுக்கு மிகப் பெரிய பலம். கேரள முதல்வரும் மத்திய அரசின் நிதி உதவி பத்தாது என்றே சொல்லி இருக்கிறார். மற்றபடி மத்திய அரசு கேரளத்தை வஞ்சித்துவிட்டது. மலையாளம் பேசும் மக்களை அலட்சியம் செய்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லை. அங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவருமே வந்திருக்கும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்றே கலந்து ஆலோசிக்கின்றனர். மத்திய அரசை எப்படித் தாக்கலாம் என்று அல்ல!
Wednesday, August 15, 2018
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். இந்த நன்னாளில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேச ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துப்போம். அதோடு நாடு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவும் முயற்சிகள் எடுப்போம். எதற்கெடுத்தாலும் அரசாங்கம் வரணும்னு சொல்லாமல் நம் தேவைகளைக் கூடியவரை நாமே முயன்று செய்து கொள்வோம். மற்றவர்க்கு முன்மாதிரியாக இருக்க முயற்சி செய்வோம்.
இந்தியாவில் வாழத் தக்கச் சிறந்த நகரங்களில் ஒன்றாகத் திருச்சியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதன்மை இடத்தில் உள்ளது. தேசிய அளவில் பனிரண்டாம் இடம்! எனினும் சென்னை, மதுரை ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் திருச்சி முன்னே நிற்கிறது. சுத்தமான நகரங்களில் ஒன்றாகத் திருச்சி இரண்டாண்டுகளுக்கு முன்னர் தேசிய அளவில் முதலிடமும் பெற்றிருந்தது. ஆனால் இப்போது மைசூர் முன்னே நிற்கிறது. சென்னைக்குத் தமிழக அளவில் 25 ஆவது இடமும் மதுரைக்கு 28 ஆம் இடமும் கிடைச்சிருக்குனு நினைக்கிறேன். மாத்திச் சொல்றேனோ? தெரியலை! ஆனால் மதுரை ஒரு காலத்தில் நன்றாகத் தான் இருந்தது. இப்போது எப்படி இருக்குன்னா காலில் கொலுசும், மெட்டியும் போட்டுக் கொண்டு ஒற்றைப்பின்னலில் பூ வைத்துக் கொண்டு ஜீன்ஸும் டீஷர்டும் போட்டுக் கொண்டு போகும் பெண்ணைப் போல் சம்பந்தமே இல்லாமல் இருக்கு! மீனாக்ஷியோடு முன்னர் இருந்த நெருக்கம் இப்போ எங்கே போச்சு? :( மீனாக்ஷி கூட அந்நியப்பட்டுப் போனாளா?
எனக்குத் திருச்சியோடு நான் பிறந்ததில் இருந்து சம்பந்தம்! எப்படினு கேட்கறீங்களா? என் அப்பா இங்கே உள்ள ஹிந்தி பிரசார சபாவில் தான் ஹிந்தி கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். இங்கே உள்ள ஆண்டார் தெருவில் தான் ஒரு ஸ்டோரில் அம்மாவும், அப்பாவும் அண்ணாவோடு குடி இருந்திருக்கின்றனர். அப்போத்தான் அம்மா என்னை உண்டாகிப் பின்னர் நான் பிறந்திருக்கிறேன். அதன் பின்னர் இங்கே அருகிலுள்ள காட்டுப்புத்தூர் என்னும் ஊரில் நான் குழந்தையாய் இருக்கையில் அப்பா அங்கே பள்ளியில் வேலை செய்ததால் அங்கேயும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கின்றனர். அதன் பின்னரே மதுரை சென்றிருக்கிறார்கள்.
அதன் பின்னர் சில முறை திருச்சி சமயபுரம் கோயிலுக்குப் பிரார்த்தனைக்காகவும், ஶ்ரீரங்கம்கோயிலுக்கும் வந்திருக்கோம். இதெல்லாம் நான் பள்ளி மாணவியாய் இருக்கும்போது நடந்தவை! அதன் பின்னர் திருச்சியோடு தொடர்பு என்பது சென்னை--மதுரை பயணத்தின் போது தான். அதுவும் வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் ஆனதும் திருச்சியிலிருந்து சென்னை வரை நூலகம் இயங்கும்! சென்னையிலிருந்து வரும்போது திருச்சி வரை நூலகம் இயங்கும். சில ஆண்டுகளில் இங்குள்ள ஸ்டேட் வங்கியின் ரீஜனல் அலுவலகத்துக்கு என் தம்பி மாற்றல் ஆகி வந்தார். அப்போது பல முறை இங்கே வந்து இருந்திருக்கிறேன். இருந்தது திருச்சி கன்டோன்மென்ட் என்றாலும் அங்கேயும் நல்ல குடிநீர்,காய்கள் வாசலுக்கே வரும், எல்லா வசதிகளும் நிறைந்து இருந்தது. வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் பஸ் ஸ்டாப். ஏறினால் சில நிமிடங்களில் போகவேண்டிய இடம் போகலாம். அவசரம் இல்லாமல் நிதானமாகப் போகலாம். இந்த வசதி மதுரையில் நாங்க மேலாவணி மூலவீதியிலும், மேலமாசி வீதியிலும் இருந்தப்போ அனுபவித்தவை. எதுக்கும் அவசரம் இல்லாமல் கிளம்ப முடியும். ஆனால் சென்னையில் அப்படி இல்லை!
நாங்க அம்பத்தூரை விட்டு விட்டு இங்கே வந்ததும் பலரும் கேலி செய்தாங்க. அங்கே என்ன இருக்கு, கிராமம் என்றார்கள் சிலர். மருத்துவ வசதியே இல்லை எனச் சிலர். எங்கே போகணும்னாலும் கஷ்டம் எனச் சிலர்! ஆனால் இங்கே கிராமம் மாதிரி இருந்தாலும் நகரத்தில் கிடைக்கும் அனைத்தும் கிடைத்து வருகிறது. மருத்துவ வசதியில் தமிழ்நாட்டில் முன்னணியில் இருப்பது திருச்சி நகரம், சென்னைக்கு அடுத்தபடி! எல்லாவிதமான தரமான அறுவை சிகிச்சைகளும் இங்கே வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன. சென்னையில் பிரபலமாக இருக்கும் ஃப்ரன்ட்லைன் மருத்துவமனை, வாசன் மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, அகர்வால் மருத்துவமனை ஆகிய அனைத்தும் இங்கேயும் உள்ளன. தில்லை நகர் முழுவதும் சென்னை கீழ்ப்பாக்கம் போல் மருத்துவர்களால் நிறைந்தது!
அடுத்து எங்கே போகணும்னாலும் முக்கிய நகரங்களுக்கு இங்கே ஶ்ரீரங்கத்திலேயே ரயில் ஏறலாம். பெண்களூர்,மங்களூர், திருவனந்தபுரம், மதுரை, திருநெல்வேலி, கன்யாகுமரி, ஹைதராபாத், மும்பை, தில்லி, கல்கத்தா, புவனேஸ்வர் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்தே ரயில் ஏறிச் செல்லலாம். இங்கிருந்து மும்பைக்கும், மும்பை வழியாக தில்லிக்கும் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும். சென்னை-திருச்சி விமான சேவை எப்போதும் உண்டு. துபாய், சிங்கப்பூர் , மலேசியா, இலங்கை போன்ற கிழக்கு நாடுகள், மத்தியதரைக்கடல் நாடுகள் போன்றவற்றிற்கும் நேரடி விமான சேவை உண்டு. சென்னை போன்ற இடங்களில் கிடைக்கும் ஐபாகோ ஐஸ்க்ரீம் கேக் இங்கே ஶ்ரீரங்கத்தில் எங்க வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே கிடைக்கிறது. இந்த ஐஸ்க்ரீம் பற்றி எனக்குத் தெரியாது. முதலில் சொன்னவர் பானுமதி! அதன் பின்னர் தான் வீட்டுக்கு அருகேயே ஐஸ்க்ரீம் பார்லர் இருப்பதைப் பார்த்தேன். பக்கத்திலேயே பிட்சா கடை! என்ன ஒரு பிரச்னைன்னா இது வேக வேகமாக நகரமயமாக இல்லை, இல்லை நரகமயமாகிக் கொண்டு வருகிறது. அதான் பிடிக்கலை! இந்த அமைதியும், காற்றும், நீரும் தேவைனு தான் இங்கே வந்தது. கூட்டம் வந்தால் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாமல் போயிடுமோனு கவலை! :))))))
காற்று என்றால் அப்படி ஒரு காற்று. வீட்டுக்குள் சமையலறை ஜன்னல் வழியாக் காத்து கொட்டும். பால்கனியில் உட்கார்ந்தால் காற்று அள்ளும். கணினி அறை ஏசி போட்டாப்போல் எப்போதும் சிலுசிலு! மொட்டை மாடிக்குப் போனால் காற்று ஆளைத் தள்ளுகிறது. சுண்டைக்காயை வைச்சுட்டு வந்துட்டேன். காற்று ஆரம்பிச்சுடுச்சேனு எடுக்கப் போனால் தட்டோடு தூக்கிக் கொண்டு சுண்டைக்காய்கள் பறக்க, முதலில் போன ரங்க்ஸ் அதோடு ஓடிப் போய்க் களைத்துத் திரும்பி வர பின்னர் இரண்டு பேருமாப் போனால் காற்று என்னையும் அலைக்கழித்து விட்டது. பின்னர் சுண்டைக்காய்களோடு ஓடிப் பிடிச்சு விளையாடி எல்லாத்தையும் பொறுக்கிக் கொண்டு வந்தோம்.
கீழே உள்ள மைசூர்ப்பாகு படம் 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பண்ணினது போட்டிருக்கேன். பொரபொரனு வந்திருப்பதால் வீணாகி இருக்காது! எடுத்துக்குங்க! அதோடு இன்னிக்கு சுதந்திர நாளாச்சே. ஸ்வீட் எடு! கொண்டாடு! கீழுள்ள சுட்டியில் க்ளிக்கினால் அந்தப் பதிவுக்கும் போகலாம்.
மைசூர்ப்பாகு
Monday, August 13, 2018
"திங்க"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்!
இஃகி,இஃகி, கொஞ்ச நாட்கள் முன்னர் குலாப்ஜாமுன் பண்ணினேன். அதிலே ஜீரா மிச்சம் ஆயிடுத்து. சாதாரணமாக உடனே அதிலே மைதா பிஸ்கட்டோ அல்லது பூந்தி தேய்த்தோ போட்டுடுவேன். ஆனால் இம்முறை அப்படி எல்லாம் செய்ய முடியாமல் படுத்தாச்சு! அதிலும் அடுத்தடுத்து இரு முறை படுத்ததில் இது பத்தின நினைப்பே இல்லை. இரண்டு நாட்கள் முன்னர் தான் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பதை சென்சஸ் கணக்கு எடுத்தப்போ வீணாகும்படி எதுவும் இல்லை என்பதும் இந்த ஜீரா மட்டும் இருப்பதும் தெரிய வந்தது. என்ன செய்யலாம் என மண்டையை உடைத்துக் கொண்டேன். சேமியா பாயசம் வைச்சிருக்கலாம். ஆனால் அதுக்கு ஜீரா ஜாஸ்தி. ப்ரெட் வாங்கி ரோஸ்ட் மொறுமொறுவெனப் போடலாமா எனில் 2 ஸ்லைஸ் ப்ரெட் தான் போடலாம். அதோடு சீஸ் வேறே பிரிக்காமல் இருக்கு. ப்ரெட் இருந்தால் சீஸை வைத்து சான்ட்விச் செய்தால் ஒரு நாள் காலைப் பொழுதுக்கோ மாலைப் பொழுதுக்கோ மண்டை காய வேண்டாம். அதோட ப்ரெட் ஸ்லைஸ் அப்படியே ஜீராவை உறிஞ்சிக்கும். ம்கூம். போர்! கொஞ்ச நாட்கள் வைச்சுச் சாப்பிடும்படி என்ன செய்யலாம் என மண்டையை உடைத்துக் கொண்டேன். முந்தாநாள் ஜீராவை வெளியே எடுத்து வைச்சுட்டு நேரம் இல்லாமையால் மறுபடி உள்ளே வைச்சுட்டேன்.
நேத்திக்குத் தான் திடீர்னு மைசூர்ப்பாகு பண்ணினால் என்னனு தோணித்து. ஜீரா எப்படியும் ஒரு டம்பளர் அளவுக்கு இருக்கும். அதுக்கு ஏற்றாற்போல் ஒரு சின்னக் கிண்ணம் கடலைமாவு போட்டால் போதும்! நேத்திக்கே செய்திருக்கணும். என்னமோ முடியலை. இன்னிக்குக் காலம்பர சமைக்கும் முன்னே நல்ல நேரம் பார்த்துக் கொண்டு பின்னே! திப்பிசம் ஆச்சே, சரியா வர வேண்டாமா? பத்தரைக்கு எமகண்டம் ஆரம்பிக்கும் முன்னே அடுப்பில் உருளியை வைச்சு நெய்யை ஊத்திட்டேன். :)
மிகுந்திருக்கும் ஜீரா
டப்பாவில் கடலைமாவு

உருளியில் நெய்
ஒரு கரண்டி அளவு கடலைமாவு குவித்து எடுத்துக் கொண்டேன். ஜீரா பாகு பதத்தில் இருந்ததால் அடுப்பில் முதலில் வைக்கவில்லை. நெய்யில் கடலைமாவை நன்கு வறுத்துக் கொண்டேன். நெய்யோடு சேர்ந்து கடலைமாவு நன்கு பொங்கிக் குமிழ் விட்டுக் கொண்டு வரும் வண்ணம் வறுத்துக் கொண்டேன்.
கடலைமாவை நெய்யோடு சேர்த்து வறுக்கும்போது
பின்னர் ஜீராவைச் சேர்த்தேன்.
ஜீராவைச் சேர்த்ததும்
பின்னர் சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டி இருந்ததால் படம் எடுக்க முடியலை. சுமார் 20 நிமிடங்கள் கிளறி இருப்பேன். பின்னர் பதம் வந்தது எனத்தெரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே சிறிது நேரம் கிளறினேன். சுமார் 2 வருடங்கள் முன்னர் வரை மைசூர்ப்பாகு பொரபொரவென கூடு விட்டுக் கொண்டு வரும்படி தான் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போக் கொஞ்சம் மாற்றி விட்டேன். மைசூர்ப்பாகு மிருதுவாக இருக்கணும்னு பொங்கி வரும் சமயம் அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே கிளறிக் கொட்டினால் துண்டங்களும் ஒழுங்காக வருகிறது. மிருதுவாகவும் இருக்கு. ஆகவே இன்னிக்கும் அப்படியே செய்தேன்.
தட்டில் கொட்டியதும்
துண்டங்கள் போட்டு வைத்திருக்கிறேன்.
துண்டங்கள் போட்ட மைசூர்ப்பாகு வில்லைகள்
இந்தத் திப்பிச வேலையை இங்கே பகிரலாமா, இல்லைனா சாப்பிடலாம் வாங்க பக்கம் போகலாமா இல்லாட்டி ஶ்ரீராமுக்கு அனுப்பவானு பூக்கட்டிப் பார்த்தப்போ இன்னிக்குத் "திங்க"ற கிழமைனு நினைப்பு வந்தது. எல்லோரும் "திங்க" வசதியா இருக்குமேனு இதிலேயே போட்டுட்டேன். அதோடு இதுக்குப் பார்வையாளர்களும் அதிகமா வருவாங்க. ஶ்ரீராமுக்கோ சமையல் குறிப்புகள் வரிசை கட்டி நிற்கும். மெதுவாத் தான் போடுவார். நமக்கோ ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுக்காத மனசு! அதான் போட்டுட்டேன். வேணும்ங்கறவங்க எடுத்துக்கோங்க! நல்லாவே இருக்கு. ஏலக்காய் போட்டிருப்பதால் இது என்ன மைசூர்ப்பாகுக்குப் போட மாட்டாங்களேனு தோணும்! இந்தத் திப்பிசம் தெரியதவங்க கிட்டே நாங்க போடுவோமுல்லனு சொல்லிடுவோமுல்ல!
Saturday, August 11, 2018
காவிரியில் மேலும் நீர் வரத்து!
காவிரியில் நீர் வரத்து இன்னமும் அதிகரித்திருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் அடைமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அவங்க கொடுக்க வேண்டிய டிஎம்சி அளவுக்கு மேல் தண்ணீர் இந்த வருஷம் வந்திருக்கு போல! கர்நாடக முதல்வர் அடுத்த வருஷத்துக்கும் சேர்த்து இந்த வருஷமே தண்ணீர் கொடுத்துவிட்டதாய்ச் சொல்லிவிட்டார். நாளைக்கும் சேர்த்து இன்றைக்கே சாப்பிடுவார் போல! எனக்கெல்லாம் அடுத்த வேளைக்குச் சேர்த்துக் கூடச் சாப்பிட முடியாத வயிறு! என்னத்தைச் சொல்றது! ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இது இல்லை.
காவிரியில் நீர் வரத்து என்றதும் எல்லோரும் உடனே உபரிநீர் கொள்ளிடம் வழியாக சமுத்திரத்தில் போய்க் கலக்கும்! தேக்கி வைக்க முடியாது! தமிழ்நாட்டில் மேட்டூருக்குப் பின்னர் அணைகளே கட்டவில்லை என்பார்கள். என்று சொல்லிக் கொண்டும் இருக்கின்றார்கள். ஈரோடு தாண்டிக் கிழக்கே வந்தால் முழுக்க முழுக்க சமவெளிப்பகுதியான தமிழகம்! அதுவும் திருச்சியிலிருந்து ஆரம்பித்துக் காவிரியின் கடைமடை வரை சமவெளி தான். அந்தக் காலத்தில் காவிரியில் கல்லணை என்னும் பெயரில் கரிகாலன் கட்டியது கூட அணைக்கட்டு இல்லை. கல்லணையை இன்று வரை பார்க்காதவர்கள் அதை அணைக்கட்டு என நினைத்துக் கொண்டால் அந்த நினைப்பைத் தவிருங்கள். அந்தக் காலத்திலேயே கரிகாலன் அங்கே அணை கட்ட முடியாது என்பதைப் புரிந்து கொண்டே காவிரியின் உபரி நீரைக் கொள்ளிடத்துக்கும் காவிரியின் நீரை மற்ற உபநதிகளுக்கும் பிரிந்து செல்லும்படியான ஒரு ரெகுலேட்டரைத் தான் கல்லும், களிமண்ணையும் சேர்த்துக் கட்டி இருக்கிறான்.
மணலிலேயே அடித்தளம் அமைத்து சாதாரண காலங்களில் ஆழமாகவும், வேகமாகவும் ஓடும் காவிரி நீர் வெள்ள காலங்களில் பாதுகாப்பாகக் கல்லணையில் இருந்து கொள்ளிடத்துக்குத் திருப்பி (இது இந்தப் பகுதியில் உள்ளாறு என அழைக்கப்படும்.) பின்னர் கடலில் கொண்டு சேர்ப்பதே இந்த அணையின் முக்கிய வேலை! இதை வெகு திறமையாக விநோதமான வடிவில் வண்டல் மண் அடியில் படிந்து விடாமல் வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு செல்லும்படி கட்டி இருப்பது அந்தக் கால கட்டத்தின் பொறியியல் திறமைக்கு ஒரு சான்றாகும். பாறைகளுக்கு மேல் பாறைகளை மணல் அடித்தளத்தில் வைத்து இரு பாறைகளையும் ஒட்டும் சக்தி இருக்கும் ஒருவிதக் களிமண்ணால் ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் இந்த அணை சமவெளிப்பகுதியில் தான் இருக்கிறது. உபரி நீர் இம்மாதிரி முறைகளினால் கொள்ளிடம் போகவில்லை எனில் தஞ்சை ஜில்லா முழுவதும் பாசன நிலங்கள் வெள்ளத்தில் முழுகிவிடும். வெள்ளம் வந்து நீரெல்லாம் வீணாகிவிட்டால் அடுத்து வறட்சி தானே! இவற்றை எல்லாம் தடுக்கத் தான் உபரி நீர் கொள்ளிடம் செல்கிறது.
அதோடு இல்லை கடலில் காவிரி நீர் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள காவிரி நீரால் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதோடு, நீரின் தன்மையும் மாறாமல் இருக்கும். காவிரி நீர் மட்டுமல்ல, எந்த நதியாக இருந்தாலும் முகத்துவாரத்தில் உள்ள நீர் கடலில்கலக்கவில்லை எனில் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் பயனற்றதாகி விடும். கடல் நீர் உட்புகுந்து நீர் உப்பு நீராகும். அதோடு இல்லாமல் பாசன வசதிகளுக்கான நிலத்தடி நீர் வளம் இல்லாமல் போவதால் நீர் வளம் குன்றி பாசன வசதிகள் இல்லாமல் நிலங்கள் பாலைவனமாகிவிடும். ஆகவே உபரி வெள்ள நீர் கடலுக்குப் போகத் தான் வேண்டும்.
அதோடு கூட இன்னும் சிலர் தமிழகத்தில் அணைகளே இல்லை என்கின்றனர். அணைகளைச் சமவெளிப் பிரதேசத்தில் எப்படி அமைப்பது? சாத்தியமே இல்லாத ஒன்று. மேட்டூர் உயரத்தில் அமைந்திருப்பதால் அங்கே அணை கட்டுவது சாத்தியமானது. அதை விட்டால் காவிரி பாயும் தமிழகப் பகுதிகள் சமவெளியிலேயே அமைந்திருப்பதால் அங்கெல்லாம் அணைகள் கட்ட முடியாது. தடுப்பணைகள் கட்டிக் குடிநீருக்கான நீரைச் சேமிக்கலாம். அதற்கு மேல் முடியாது! ஆகவே உபரி நீர் கடலில் கலக்கிறது என்பதையோ, அணைகள் கட்டவே இல்லை என்பதையோ பற்றிப் புலம்பாமல் இருக்கும் நீரைச் சிக்கனமாகச் செலவு செய்து காவிரிக் கரைகளை உயர்த்தி, காவிரியில் இருக்கும் பார்த்தீனியச் செடிகளை அகற்றி, நாணல் புதர்களை அகற்றி, மணலை அள்ளாமல் காவிரியின் இதயத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல் அவளை எந்நாளும் இதே அழகோடும், வேகத்தோடும், ஆர்ப்பரிப்போடும், சந்தோஷத்தோடும் ஓடுவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வோம்.

Monday, August 06, 2018
அம்மாமண்டபம் படித்துறையில் நேற்று!
நேத்திக்கு அம்மாமண்டபம் படித்துறைக்குப் போனோம். சாயங்காலம் சுமார் ஐந்து மணி இருக்கும். அப்போவும் மண்டபத்திலும் கூட்டம். படித்துறையிலும் கூட்டம். கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும் கிழக்குப் பக்கம் போனோம். அங்கே உ.பி.கோயிலைப் படம் எடுக்கையில் இந்த மனிதர் குறுக்கே வந்துட்டார். க்ளிக்கிட்டேன். :) அவருக்கு என்னமோ சந்தோஷம்.
சரினு கொஞ்சம் மேற்கே தள்ளி எடுக்கலாம்னு பார்த்தால் அங்கே ஒரு பெண் தலையை விரிச்சுப் போட்டுக் கொண்டு இருந்தார். அவர் முகத்தை எடுக்காமல் கொஞ்சம் மேலே தூக்கி எடுத்தும் தலை படத்தில் வந்துடுத்து. வேறே இடம் போகலாம்னா எங்கே பார்த்தாலும் கூட்டம். அதோடு பல பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஆகையால் எடுக்கக் கூடாதுனு எடுக்கலை.
கொஞ்சம் ஆட்கள் காலி ஆன நேரம் பார்த்து உ.பி. கோயிலைக் க்ளிக்கிட்டேன். அப்போ யாரும் இல்லை. ஒரு படி மேலே போய் எடுத்தேன். ஜூம் பண்ணினது பத்தலையோ? யாருங்க அது அலட்டல்னு சொல்றது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜம்மாவே ஜூம் பண்ணினேனாக்கும். போறலை போல!
இங்கே சிலர் குளிக்கும், துவைக்கும் காட்சி. என்னதான் சொன்னாலும் ஷாம்பூ பாக்கெட்கள், சீயக்காய்ப் பாக்கெட்டுகள், எண்ணெய்ப் பாக்கெட்டுகள், என ஆற்றில் மிதக்கத் தான் செய்கின்றன. துணிகளைப் போடத் தனியாக ஓர் இடம் ஒதுக்கி வைச்சிருக்காங்க! ஆனாலும் ஆற்றிலும் போடுகின்றனர். நாங்க யார் சொன்னாலும் கேட்கமாட்டோமே!
அம்மாமண்டபம் படித்துறைக் கோயில்களில் பிள்ளையார் மட்டும் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தார். மற்ற சந்நிதிகள் மூடி இருந்தன. மேலே இருப்பது காவிரி அம்மன் சந்நிதி. மூடி இருந்தது. பிள்ளையார் சந்நிதிக்கும், சிவன் சந்நிதிக்கும் நடுவே உள்ள இடத்தில் பலரும் ஆடிக் கிருத்திகைக்கான காவடி ஆட்டங்களுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த உணர்ச்சிப் பிழம்பான முகத்தைப் பார்த்துட்டுப் படமே எடுக்கக் கூடாதுனு வந்துட்டேன். வித விதமான காவடிகள். எல்லோரும் இடுப்புகளில் மணிகளைக் கட்டிக் கொண்டு விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு, காவி, சிவப்பு வண்ண உடைகள் உடுத்திக் கொண்டு வேல்களை ஏந்திய வண்ணமும் காவடிகளை ஏந்திய வண்ணமும் காணப்பட்டனர். கூட வந்த குடும்பத்தினர் பக்திப் பரவசத்துடன் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.
இதோ இவர் நம்ம ஆஞ்சி. ஏற்கெனவே போட்டிருக்கேன். இவருக்குத் தான் வெத்திலை மாலை சாத்துவேன். ஒவ்வொரு நாளும் மாலை சாத்த வரும்போது பட்டாசாரியார் பத்து ரூபாய் கொடுக்கணும்னு வற்புறுத்துவார். கொடுக்கலைனா மாலையைச் சாத்த மாட்டேன்னு சொல்லுவார். அதுக்காக அவர் இல்லாத நேரம் பார்த்து வந்து மாலையை நானே சாத்திட்டுப் போவேன். காலை நேரங்களில் வந்தால் பட்டாசாரியாருக்குப் பணம் கொடுத்ததும் உண்டு. என்றாலும் இந்த ஆஞ்சியைப் பார்த்துக்கனு அந்த பட்டாசாரியாரை யாரும் நியமிக்கவில்லை என்றே சொன்னார்கள். அம்மாமண்டபம் திருச்சி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்குனு நினைக்கிறேன். ஆஞ்சிக்கு வலப்பக்கமாத் தெரியும் மேடையில் தான் நம்பெருமாள் வந்து மண்டகப்படி கண்டருளுவார். ஆஞ்சிக்கு எதிரே இருக்கும் இவர் ராமர் என முன்னே சொல்லி இருந்தேன். ஆனால் நேத்திக்குப் பார்த்தப்போ ராமர் இல்லைனு தோணியது. இன்னொரு நாள் போய்ப் பார்க்கணும். கிட்டக்க இருந்தாலும் அடிக்கடி போக முடியலை. வில்லை ஏந்திக் கொண்டிருப்பதால் ராமர் தானோனும் தோணுது. யாரிடமும் கேட்டால் தெரிவதில்லை. அவங்கல்லாம் பார்த்தாலும் இதை எல்லாம் பத்தி நினைக்கமாட்டாங்களோ!
Friday, August 03, 2018
மேலும் கீழும் ஓட வைச்சார் பெருமாள்! :)
ராமர் எப்போத்தான் என்னை இந்த வெளிச்சம் மறைக்காமல் எடுப்பியோனு கேட்கிறார். ஆனால் விளக்கை அணைத்தால் ராமர் தெரியலை!
ராமருக்கு வலப்பக்கம் இருக்கு நவநீத கிருஷ்ணன். கையில் வெண்ணெயுடன்.
ராமருக்கு இடப்பக்கம் இருக்கிறார் நம்ம ஆள்!
நேத்திக்கே வாட்சப்பில் நெ.த. எச்சரிக்கை! நாளைக்குப் பெருமாள் அம்மாமண்டபம் வரார், ஒழுங்காப் படம் எடுக்கணும்னு! மனுஷர் சும்மா இருந்திருக்க மாட்டாரோ! ஆனாலும் நான் உடனே உள் மனசு ஏதோ சொல்ல அவரிடம் இருக்கும் கூட்டம் எப்படியோ தெரியாது! முடிஞ்சதை எடுப்பேன்னு சொல்லிட்டேன். ரெண்டு நாள் முன்னேயே மாடிக்குப் போய்க் காவிரியை எடுத்துட்டும் வந்தேன். அதைப் போடலை. ஆடிப்பெருக்கன்னிக்குச் சேர்த்துப் போடலாம்னு இருந்தேன். இன்னிக்கு இங்கே அம்மாமண்டபத்துக்குக் காவிரிக்குச் சீர் வழங்கப் பெருமாள் வரார்ங்கற விஷயமே நேத்திக்குத் தான் நிச்சயமாய்த் தெரிய வந்தது. ஆகவே இன்னிக்குக் காலம்பர எழுந்ததுமே அதிகம் கணினியில் உட்காராமல் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு சீக்கிரமாவே எட்டரை மணிக்கெல்லாம் குளிக்கவும் போயிட்டேன்.
இன்னிக்கு நம்பெருமாளைப் பார்க்க உங்களுக்கு எல்லாம் கொடுத்து வைக்கலை. ஆகவே இவரைப் பார்த்துக்குங்க ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக! :(
குளிச்சுட்டு வந்ததும் ரங்க்ஸ் கீழே அசோசியேஷன் அலுவலகம் போனார். அவரிடம் பெருமாள் வந்தால் சொல்லச் சொல்லிட்டுச் சமையலுக்கான ஏற்பாடுகளைக் கவனிச்சேன். சீக்கிரம் சமைத்து வைத்து விட்டால் பெருமாளைப் பார்த்துட்டுத் திரும்பினதும் சாப்பிடலாமே! மேலும் இன்னிக்குக் கலந்த சாதம் தான் என்பதால் சூடா வேணும்னு இல்லை. ஆகவே வெல்ல சாதம், (சர்க்கரைப் பொங்கல் இல்லை) தேங்காய்ச் சாதம், எலுமிச்சைச் சாதம், எள் சாதம், தயிர் சாதம் ஆகிய ஐந்து சாதங்களைப் பண்ணுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துச் செய்து வைத்து சாதமும் வைத்து எல்லாவற்றையும் கலந்தும் வைத்தேன். மோர்க்குழம்பும் தொட்டுக்கப் பண்ணினேன். வடைக்கு அரைத்து வடை தட்ட எண்ணெயை அடுப்பில் வைத்து இரண்டு வடையைத் தட்டிப் போடும்போதே கீழிருந்து தொலைபேசி அழைப்பு. பாதுகாவலர் பெருமாள் வந்துட்டே இருக்கார்னு சொல்ல மணியைப் பார்த்தால் பத்தே கால்! போட்ட வடைகளை எடுத்துத் தட்டில் போட்டுவிட்டு அடுப்பை அணைத்து சந்தேகத்துக்கு சிலிண்டரையும் மூடிட்டுக் கீழே லிஃப்ட் வழியா இறங்கினேன்.
இன்னிக்கு நிவேதனங்கள். வெல்ல சாதம், தேங்காய் சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வடை, சொம்பில் காவிரி நீர், வெற்றிலை, பாக்கு, பழம், நிவேதனம்! யாருக்கு எது பிடிக்குமோ எடுத்துக்கலாம்.
எங்க குடியிருப்பு வளாகத்தின் வாசலில் கூட்டமே இல்லை. மற்றக் குடியிருப்பு வாசிகள் யாருமே இல்லை. பக்கத்து மண்டகப்படியிலே போய்க் கேட்டால் இப்போ இல்லை அம்மா, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வாங்கனு சொல்லிட்டார். சரினு பாதுகாவலர் அமரும் இடம் சென்று அங்கே அமர்ந்திருந்தேன். பத்தரை, பத்தேமுக்கால் ஆனது. மேலே அப்படியே போட்டுட்டு வந்துட்டோமேனு அடிச்சுக்க அங்கு இருந்த சில பெண்களிடம் சொல்லிட்டு மறுபடி மாடிக்குப் போனேன். மேலே போய் சாதங்களை நன்கு கலந்து ராகுகால விளக்கு ஏற்றி சாமி அலமாரியிலும் விளக்கை ஏற்றி வைத்து எல்லாவற்றையும் சாமிக்குக் கொண்டு வந்து வைத்து ஒரு சொம்பில் காவிரி நீரையும் நிரப்பி அதையும் சாமி முன்னால் வைத்து நிவேதனம் செய்து காக்கைக்குப் போட்டேன். அப்போ மறுபடி கொட்டுச் சத்தம். உடனே மறுபடி எல்லாவற்றையும் சாப்பாட்டு மேஜையில் வைச்சுட்டு மீண்டும் கீழே ஓடினேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்பெருமாள் அப்போத் தான் தெற்கு வாசலே தாண்டி இருக்கார்னு சொன்னாங்க. மறுபடி சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துட்டுப் பெருமாளைத் தேடியாவது போய்ப் பார்ப்போம்னு கிளம்பினேன். அதற்குள்ளாக அலுவலக வேலை முடிந்து ரங்க்ஸும் வர இரண்டு பேருமாப் போனோம்.
இரண்டு நாட்கள் முன்னர் எடுத்த மொட்டைமாடிப் படங்கள்!
இன்னொரு பாதுகாவலர் வந்து பெருமாள் மங்கம்மா நகருக்குள் போயிருக்கார், வர முக்கால் மணி நேரம் ஆகும்னு சொன்னார். மறுபடி மேலே போனோம்.அங்கே போய் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் சுத்தம் செய்யலாம்னா கீழே இருந்து அழைப்பு. நிஜம்மாவே பக்கத்து மண்டகப்படி வந்துட்டாராம். சாப்பிட்ட எச்சல் கூடத் துடைக்கலை. கையை மட்டும் அலம்பிக் கொண்டு எச்சல் இடத்தின் மேலே தண்ணீரைத் தெளித்துவிட்டுக் கீழே ஓடினோம்.போகும்போதே மிச்சம் இருந்த சாப்பாடை ஒரு பாக்கு மட்டையில் வைத்து மோர்க்குழம்பையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றிப் பாதுகாவலருக்குக் கொண்டு கொடுத்தோம். அப்போ பெருமாள் குடை வந்து நம்மகுடியிருப்பு வாசலிலே இறங்கியது. சரினு நான் பக்கத்து மண்டகப்படிக்குப் போக அவர் வாசலிலேயே நின்னார்.
கொஞ்ச நேரத்தில் அங்கே கூட்டம் கூடியது! கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். இதிலே வெயில் அதிகமா இருப்பதாலே பெருமாள் திரையை விட்டுக்கொண்டு வருகிறார் எனவும் தோளுக்கு இனியானில் வரலை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் பெருமாள் வந்து விட்டார். சாலையிலிருந்து மேடான அந்த மண்டகப்படிக் கட்டடத்திற்குள் பெருமாளை ஏற்ற முடியவில்லை. பெரிய பல்லக்கு வேறே. பல்லக்கை முதலில் திருப்புவதற்கே கஷ்டமாக இருந்தது. உள்ளே தூக்கி வருவதும், பின்னால் போவதும், மறுபடி உள்ளே வருவதுமாக இருந்தனர். அப்புறமாகச் சமாளித்துக் கொண்டு பல்லக்கை உள்ளே தூக்கி வந்தனர். யாராலும் நிற்க முடியவில்லை. ஒரு மாதிரி சிரமப்பட்டுப் பல்லக்கைக் கீழே வைத்தனர். எனக்கு மிக அருகே பெருமாள். ஆனாலும் படம் எடுக்க முடியவில்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டு ஒரு படம் எடுக்க முயன்றேன். எடுக்கும்போதே ஒருத்தர் கத்த ஆரம்பித்து விட்டார். இதுக்கு நடுவில் மண்டகப்படிக்காரங்க அவங்களோட நிவேதனம், பெருமாளுக்கான சமர்ப்பணங்கள் ஆகியவற்றைக் கொடுக்க பட்டாசாரியார்கள் அவற்றைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க ஆரம்பிக்க பெருமாள் முகம் தெரியாத மற்றவர்கள் இந்தப் பக்கம் வர ஆரம்பிக்க நடுவில் நான் மாட்டிக் கொண்டேன். அத்தோடு கூட்டம் என்னை வெளியே தள்ள ஒருவழியாக வெளியே வந்தேன். சாலையிலும் இருமருங்கிலும் கூட்டம். காவிரியில் நெரிசல் கேட்கவே வேண்டாம். காலை நான்கு மணியில் இருந்து ஒலிபெருக்கியில் மாற்றி மாற்றி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சாலையின் இரு மருங்கிலும் திடீர்க்கடைகள் வேறே. எல்லாப் போக்குவரத்தும் இந்தச் சாலை வழியாகத் தான்! இன்னமும் மாம்பழச் சாலையிலிருந்து செல்லும் வழியில் கட்டப்பட்டிருக்கும் பாலம் திறந்து வழி விடலை! ஆகவே நகருக்குள் நுழையும் எந்த வண்டியும் அம்மாமண்டபம் சாலைக்குத் தான் வந்தாகணும்! அது வேறே இரண்டு பக்கமும்! 2013க்கு அப்புறமா இம்முறை தான் இந்தக் கூட்டம்! ஆனால் இது அதை விடப் பெரிய கூட்டம்! மல்லிகைப் பூ அரை முழம் 35 ரூபாய்!
ஜனங்கள் வந்து மோதும் வேகத்தில் பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு நகரவே சிரமப்படுகின்றனர். இதில் ஒவ்வொரு மண்டகப்படியாகப் போய்ப் போய்க் கீழே இறக்கி என மிகவும் அதிக சிரமம். அவங்களால் தாக்குப் பிடிக்க முடியலை! அதோடு பல்லக்குக்கும் எனக்கும் ஒரு அடி தூரமே இருந்ததால் மீண்டும் பல்லக்கைத் தூக்கும்போது பாரம் தாங்காமல் அவர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள் என்பதால் நான் சுவரை ஒட்டி நின்றதால் உடனே வெளியேறும்படி ஆயிற்று. இதை நேரில் பார்த்தால் தான் புரியும். தரிசனம் கிடைத்ததே பெரிய விஷயம் என்று ஆகி விட்டது! பெருமாளுக்காக மேலும், கீழும் ஓடியதில் முழங்கால் வேறே பிடித்துக் கொண்டு இருக்கு! விடணும்! :)))))

ராகுகால விளக்கு பிரதிபலிக்கிறது.

Subscribe to:
Posts (Atom)