மைசூர்ப் பாகு புரையோடி இருந்தால் தான் எங்க வீட்டிலே அதை மைசூர் பாகுனு ஒத்துப்பாங்க. இந்த வருஷம் நெய்யும் என்னமோ பத்தலை. ஆனாலும் சாப்பிடறாப்போல் தான் இருக்கு.
வில்லை போட்டதிலே உள்ளே கூடு கூடாய் இருக்கு பாருங்க. இதன் மைசூர்பாகு ஒரிஜினல். :)))) கிருஷ்ணா ஸ்வீட்ஸெல்லாம் விக்கிறது மைசூர்பா. மைசூர்பாகு இல்லை. :P :P :P :P
தீபாவளிக்கு முன்னெல்லாம் பக்ஷண வகையறாக்களே நிறைய இருக்கும். இப்போ இரு வகைத் தேன்குழலும் மைசூர்பாகும் மட்டும். சின்னத் தூக்கில் மருந்து. பழங்கள், பூ வைக்க மறந்திருக்கேன். :( பலகையில் எண்ணெய் காய்ச்சிப் பக்கத்திலே சீயக்காய், மஞ்சள் கலந்து வைக்கணும். வைச்சாச்சு. இன்னொரு பக்கம் துணிமணிகள். நிறையத் துணி மணி வைச்ச இடத்திலே இப்போ என்னோட புடைவை மட்டும். அதனால் இரண்டு புடைவையானும் வைச்சுடுவேன். :)))) வேலை செய்யறவங்க எல்லாம் பணமாக் கேட்டதாலே அவங்க மனம் நிறையும் வண்ணம் பணமாக் கொடுத்தாச்சு.
குளிச்சுட்டு வந்ததும் நிவேதனத்துக்குத் திறந்தது. இடப்பக்கம் இருப்பது உளுத்தமாவு தேன்குழல். வலப்பக்கம் இருப்பது முள்ளுத் தேன்குழல். பக்கத்திலே மைசூர்பாகு.
பாலும் நல்லவேளையா சீக்கிரமா வந்தது. வேஷ்டி அருகே சின்னத் தூக்கில் தீபாவளி மருந்து.
நிவேதனம் முடிஞ்சாச்சு. ராமர் வயிறு நிறைஞ்சுடுத்துனு சொல்லிட்டார். கீழே மஹாவிஷ்ணுவும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராப் போதும், போதும்னு சொல்லிட்டார்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பு கீதாமா,
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள். கங்கா ஸ்நானம் முடித்து இத்தனையும் செய்து வச்சாச்சா:)
படம் எடுத்துப் பதிவும் போட்டச்சு.
ரொம்ப அழகா இருக்கு.
நானும் நேற்று இரவே எடுத்துவைத்துவிட்டேன். படம்தான் எடுக்கலை.:) ரொம்ப அழகா இருக்குமா. எனக்கும் புரைகள் ஓடும் மைசூர்பாகுதான் பிடிக்கும்.அதைத்தான் செய்திருக்கிறேன்.:)
பட்சணங்கள் அருமையாக இருக்கின்றது.சுவைத்துக்கொண்டோம்.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
எஞ்சாய்.
ReplyDeleteதீபாவளி கொண்டாட்டத்துக்கு நடுவுலே பதிவா? ஆச்சரியமா இருக்கு போங்கோ!
ReplyDeleteYum Yum Yum !!vechchu vaingoa. aduththa thingakizhamai saappidaRaen:) Haappy theevuli:)
ReplyDeleteவாங்க வல்லி. உங்க மைசூர்ப்பாகும் படம் போடுங்க. இங்கே நான் நெய்யைக் குறைச்சுட்டேன்னு சொல்லிட்டு இருக்கார். அவர் சாப்பிடப் போறதில்லை. அதனால் பரவாயில்லைனு சொல்லிட்டேன்.:)))))
ReplyDeleteவாங்க டிடி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க மாதேவி நன்றிம்மா. உங்களுக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅப்பாதுரை நன்றி. தீபாவளிக் கொண்டாட்டம்ங்கறதாலேயோ என்னமோ இன்னிக்கு மின்சாரமும் இருக்கே! முக்கியமான கொண்டாட்டம் அதான். :)))))
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, நல்வரவு. நிச்சயமா தரேன். ஆனால் புத்தம்புதியதாக. :)))))
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் கீதா!
ReplyDeleteஉங்களுக்கும் தாமதமான வாழ்த்துகள் ரஞ்சனி. :)))
ReplyDeleteபடத்திலே இன்னிக்கு எடுத்துண்டேன்...
ReplyDeleteநாளைக்கு இல்லைன்னா நாளை மறுநாள் நேரில் வந்துடறேன்! :)
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
தலைவி ஏவ்வ்வ்வ்...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஏனோ இந்தப் பதிவில் என்னைக் காணோம்!
ReplyDeleteஶ்ரீராம், உங்க கருத்து இங்கே வந்திருக்கு. ஆனால் publish செய்ததில் இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தேடிக் கொண்டு வந்தேன்.
ReplyDelete