எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 22, 2018

மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அனுபவம்! மீள் பதிவு 2

பால்கரில் செளராஷ்ட்ரா மெயில் நின்று கொண்டு இருந்தது. நாங்களும் வண்டியில் உட்கார்ந்து கொண்டு எப்போது கிளம்பும்னு யோசித்துக் கொண்டிருந்தோம். பக்கத்துப் ப்ளாட்ஃபார்மில் ஒரு வண்டி பால்கரில் இருந்து தாதருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தது. எங்கள் வண்டியில் இருந்து சிலர் அதில் ஏறினார்கள். என்னடா இதுன்னு யோசிக்கும் போதே வண்டி சட்டுனு கிளம்பிவிட்டது. சரி, ஏதோ அவசரமாப் போவாங்கனு நினைச்சோம். ஒரு 1/2 மணி நேரத்துக்கு எல்லாம் விரார் என்னும் ஸ்டேஷனில் இருந்து ஒரு வண்டி வந்தது. இது போரிவிலிக்கு முன்னாலே அதாவது பால்கருக்கும், போரிவிலிக்கும் நடுவில் வரும். அந்த வண்டியில் இருந்து வந்தவர்கள் எங்களைப் பார்த்து, அதாவது எங்களை மட்டும் இல்லை பொதுவாக எங்கள் வண்டியில் இருந்தவர்களைப் பார்த்து நீங்க இன்னிக்குப் போக முடியாது. இங்கே இருந்து போன வண்டியும் பாதி வழியிலே நிக்குது. என்று சொன்னார்கள். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கீழே இறங்கி யாரையாவது கேட்கலாம்னு யோசிக்கும்போது ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தார்கள். பலத்த மழை காரணமாக வண்டி இன்று பம்பாய் செல்லாது எனவும், அங்கிருந்து வண்டி வர அறிவிப்பு வந்ததும்தான் கிளம்பும் எனவும் சொன்னார்கள். "இப்போ என்ன செய்யறது?" எங்களுக்கு அதிர்ச்சி. இதுக்கு முன்னாலே எல்லாம் இம்மாதிரி நடந்திருக்கு. அதுவும் முதல்முறை என் பெண் பிறந்து மதுரையில் இருந்து சென்னை வரும்போது சனிக்கிழமை காலை கிளம்பி ஞாயிறு அன்று இரவு மதுரை வந்து சேர்ந்தோம். அப்போவும் இதே மழை, வெள்ளம்தான். அப்போ அப்பாவும், அம்மாவும் கூட இருந்தார்கள். அதனால் பயம் எல்லாம் இல்லை.

இதே மாதிரி ஒரு 2 வருஷத்துக்கு முன்னால் நசிராபாத்தில் இருந்து செகந்திராபாத் "காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்ஸில்" போகும்போது (மீனாட்சி எக்ஸ்ப்ரஸ்னு பேர் மாறிடுச்சு) வண்டி தடம் புரண்டு விட்டது. அதே வண்டி இஞ்சின் எரிந்து போனது. ஆனால் அப்போ எல்லாம் என் கணவர் எங்களுடன் இருந்தார். ஆகவே முடிவு எடுக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது. நாங்கள் உண்மையில் அந்தப் பிரயாணங்களை ரொம்பவே ரசித்தோம். ரெயில் நடுக்காட்டில் தடம் புரண்டு நின்றதும் பக்கத்து ஸ்டேஷன்களுக்கு எப்படித் தகவல் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்து மீட்பு வண்டி வந்து எப்படி மீட்கிறது என்பது வரை பார்த்தோம். அங்கேயே கூட வந்தவர்களில் சிலர் கல்லை அடுக்கி அடுப்பு மூட்டித் தேநீர் தயார் செய்து (பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்தார்கள்) எல்லாருக்கும் கொடுத்தார்கள். ஏதோ பிக்னிக் மாதிரி இருந்தது. தவிர அந்த வழியில் ரெயில் பிரயாணமே ரொம்ப ரசிக்கும்படியாய் இருக்கும்.

இப்போ என்ன செய்யறது? பம்பாய் எங்களுக்குப் புதிசு. போரிவிலி கருப்பா, சிவப்பா தெரியாது. மச்சினன் இருப்பது தத்தபாடா ரோடு என்று தெரியும். ஆனால் அது மேற்கு, கிழக்கு இரண்டு பகுதிகளையும் இணைக்கும் என்பதோ அவன் கிழக்குப் பகுதியில் இருந்தான் என்பதோ தெரியாது. அப்போ எங்க 2 பேர் கிட்டேயும் வீட்டில் தொலைபேசி இல்லை. ஃபோனிலும் தகவல் தெரிவிக்க முடியாது. கீழே இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டதற்கு வேறு ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. எங்களுக்கு அலுவலகம் மூலம் தகவல் வந்தால்தான் செய்ய முடியும் என்றும் வண்டி சீக்கிரம் கிளம்பும் என்பதால் செய்யவில்லையோ என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்தார். மணி 10, 12 என்று ஓடிக் கொண்டு இருந்தது. ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அங்கே ஸ்டேஷன் வாசலில் இருந்த ஆட்டோ, வாடகைக் கார் முதலியனவற்றில் போய்க் கொண்டிருந்தார்கள். எங்கள் பெட்டியிலும் உள்ளவர்கள் எல்லாம் இறங்கி நாங்களும், ராஜ்கோட்டில் ஏறியவர்களும்தான் பாக்கி. அவர்களும் போரிவிலிதான். ஆனால் அவர்கள் 7,8 பேர் இருந்தார்கள். மேலும் போரிவிலி மேற்கு என்றார்கள். நான் ரொம்பச் சமர்த்தாக நாங்கள் மேற்கா, கிழக்கா எனத்தெரியாது என்பதைச் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேன். வேறு வழியில்லாமல் 1 மணி போல் இருக்கும் நாங்களும் இறங்கினோம். மூட்டை, முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஒவ்வொருத்தராகக் கேட்டோம். அவர்கள் கேட்ட பணத்தில் நான் ஒரு ஆட்டோவே வாங்கலாம் போல் இருக்கே என்று நினைத்தேன். ஒன்றும் சரிவராமல் பேசாமல் உள்ளே போய் உட்காரலாம். வண்டி கிளம்பும்போது ஏறிக் கொள்ளலாம் என்று நினைத்தபோது ஒருத்தர் தான் ஆட்டோவை எடுத்துக் கொண்டு வருவதாகவும் 400ரூ கொடுத்தால் போதும் எனவும் சொன்னார். நாங்கள் 200ரூ தான் கொடுக்க முடியும் என்று சொல்ல அவர் கடைசியில் 250/க்கு ஒத்துக் கொண்டு எங்களை ஏற்றிக் கொண்டார். போரிவிலியில் எங்கே என்று கேட்க நான் ரொம்பத் தெரிந்த மாதிரித் "தத்தப்பாடா ரோடு," என்றேன். அவர், "பஹின் ஜி., தத்தபாடா ரோட் மே கஹான்? பூர்வ் யா பஸ்சிம்?" என்று கேட்க, நான், "ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்." என்று சொன்னேன். ஆட்டோ கிளம்பியது.


இன்றிலிருந்து அடுத்த இரு தினங்களுக்கு முக்கியமான வேலை மும்முரம். நாளைக்கு இணையத்துக்கு வர முடியுமானே சந்தேகம். முடிந்தால் சாயங்காலமா வரப் பார்க்கிறேன். (அப்பாடா, நிம்மதினு யாரோ சொல்லிக்கிறாங்க, காதிலே விழுந்துடுச்சு! :P) இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை! என் கடமை! இந்த மீள் பதிவு போர் அடிக்குதுனும் முணுமுணுக்கிறது காதிலே கேட்டுது! அதான் போணியே ஆகலைனும் புரிஞ்சது!  ஆனாலும் நானும் இணையத்திலே இருக்கேன் எனச் சொல்லிக்கிறதுக்காகப் போட்டிருக்கேன். ஹிஹிஹி! நாளை முடிஞ்சுடும். கவலை வேணாம். 

43 comments:

  1. போடறதுதான் போடறீங்க, முழுவதுமாப் போட்டா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நெ.த. பலரும் நீண்ட பதிவை விரும்புவதில்லை!:)

      Delete
    2. //போடறதுதான் போடறீங்க, முழுவதுமாப் போட்டா என்ன?//

      நெல்லை.. பழைய லிங்க்ல போய் முழுசா படிச்சுடுங்க!

      Delete
    3. @Sriram, link is not given!

      Delete
    4. கொடுத்துடுங்கன்னு சொல்றேன்!!!

      Delete
  2. ஓஹோ.... உங்களுக்கு ஞாயிறு விசேஷம் கிடையாதா? அதான் இரண்டு நாட்கள் மட்டும் பிஸி என்று சொல்றீங்களா?

    ReplyDelete
    Replies
    1. நெ.த.இரண்டு நாட்கள் பிசினா நீங்க நினைக்கும் அர்த்தம் இல்லை. என் மாமியார் வழியில் கிடையாது! :) தொடர்ந்து என்னோட பதிவைப் படிப்பவர்களுக்கு ஞாயிறன்றும் எங்களுக்கு எந்த விசேஷமும் இல்லைனு புரியும்!:) செப்டெம்பரில் தான்! :))))

      Delete
    2. எழுதினப்பறம்தான் ஞாபகம் வந்தது (அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து......). அதனால் எங்களுக்கும் கொஞ்சம் நினைவு இருக்கிறது.

      Delete
    3. ?????? அம்பேரிக்காவிலே இருந்து 2017 மே மாசம் வந்தோம்! அதுக்கும் இதுக்கும் என்ன? புரியலை!

      Delete
  3. >>> அங்கேயே கூட வந்தவர்களில் சிலர் கல்லை அடுக்கி அடுப்பு மூட்டித் தேநீர் தயார் செய்து (பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்தார்கள்) எல்லாருக்கும் கொடுத்தார்கள். ஏதோ பிக்னிக் மாதிரி இருந்தது.<<<

    துன்பம் வர்ற போதும் சந்தோஷமா இருங்க...ன்னு - வள்ளுவர் தாத்தா சொல்லி வெச்சது இதைத்தான்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்க பொதுவா இக்கட்டிலே தான் நிறைய ஜோக் சொல்லிச் சிரிச்சுப்போம். :)

      Delete
    2. //துன்பம் வர்ற போதும் சந்தோஷமா இருங்க...ன்னு - வள்ளுவர் தாத்தா சொல்லி வெச்சது இதைத்தான்...//

      சொன்னார், சரி. துன்பம் வரும்போது டீ குடிக்கச் சொன்னாரா?

      Delete
    3. வள்ளுவர் காலத்திலே டீ எல்லாம் ஏது?

      Delete
    4. டீ இல்லைன்னா ஏதோ ஒரு பானம்...

      அட...

      ஒரு ஜோக்கடிக்க விட மாட்டேங்கறாங்களே...!

      Delete
    5. //ஒரு ஜோக்கடிக்க விட மாட்டேங்கறாங்களே...!///
      ஹா ஹா ஹா சொன்னாத்தானே தெரியுது ஜோக் என:) என்ன கீசாக்கா நான் ஜொள்றது??:)

      Delete
    6. அதானே, அதிரடி, ஜிங்க் சக்க ஜிங்க் சக்க! :)))))

      Delete
    7. கிர்ர்ர்ர்ர்... ஒவ்வொரு வாட்டியும் ப்ராக்கெட்ல ஜோக்னு எழுதி போடவா முடியும்?

      Delete
    8. அதானே, ஶ்ரீராம், இந்த அதிரடிக்குத் தெரியலை பாருங்க, ஜிங்க் சக்க, ஜிங்க் சக்க! :)))))))

      Delete
  4. மனதில் தைரியமில்லாவிட்டாலும் தைரியமிருப்பதுபோல் நடிப்பது பல தரும்

    ReplyDelete
    Replies
    1. ஜிஎம்பி ஐயா, நாம் பயத்தில் இருப்பதைக் காட்டிக் கொள்ளக் கூடாது அல்லவா!

      Delete
  5. இதும் ஒரு அனுபவம்ன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ராஜி, இதைப்போல் பல அனுபவங்கள். கடந்து வந்தாச்சு! :))))

      Delete
  6. Replies
    1. வாங்க, வாங்க, மெதுவா வாங்க!

      Delete
  7. உங்கள் கஷ்டம் ஒருபுறம் இருக்கட்டும். நடுவழியில் நீங்கள் படும் கஷ்டங்கள் தெரியாது உங்கள் இருபக்க உறவினர்களும் என்ன பாடு பட்டிருப்பார்கள்?

    ReplyDelete
    Replies
    1. என் அப்பாவுக்கு இந்த விஷயமெல்லாம் நாங்க சென்னை போய்ச் சொல்லித் தான் தெரியும். நம்ம ரங்க்ஸோ ஜாலியாக் குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருந்திருக்கார். வீட்டிலே மின்சாரமும் இல்லை! ஆகவே தொலைக்காட்சி மூலம் தகவலும் தெரியலை. மறுநாள் தான் தெரிந்தது! அதற்குள்ளாக நாங்க சௌகரியமாப் போய்ச் சேர்ந்துட்டோம்.

      Delete
  8. வ.வி மும்முரமா? அதுதான் அடுத்த இரண்டு நாள் பிஸியா?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வ.வி. கிடையாதே, உங்களுக்குத் தெரியும். மறந்துட்டீங்க! :))))வேறே வேலை, எதிர்பாரா விருந்து!

      Delete
    2. ஆமாம்க்கா மறந்துட்டேன். பின்னூட்டம் கொடுத்ததுமே நினைவுக்கு வந்து விட்டது. போதாதற்கு நெ த பின்னூட்டத்துக்கு பதிலும் படிச்சேன். சரி, போட்டது போட்டபடியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்!

      Delete
  9. ஆஆஆஆஆஆ தொடர் முடிஞ்சிடுச்சா?.. கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது போல இருந்திருக்கும்.. ரெலிபோனும் இல்லாத, பாஷையும் புரியாத இடத்தில் எப்படி இருந்திருக்கும் நினைச்சுப்பார்க்கவே முடியவில்லை.. இருப்பினும் கீசாக்காவோ காவிரியோ.. "ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்.”.. என்று சொல்லிட்டாவெல்லோ.. ஹா ஹா ஹா..

    வாங்கோ வாங்கோ.. ஸ்ரீராம் போஸ்ட் போடப்போகும் விசாளக்கிழமை:) பார்த்து எஸ்கேப் ஆகப்பார்க்கிறீங்க:) .. மீயும் இன்னும் சில நாட்களில் காணாமல் போவேனாம்ம்.. நீங்க எல்லோரும் தேடிக் கண்டு பிடிச்சுக் கூட்டி வருவீங்களாம் ஊக்கே?:))

    ReplyDelete
    Replies
    1. //வாங்கோ வாங்கோ.. ஸ்ரீராம் போஸ்ட் போடப்போகும் விசாளக்கிழமை:) பார்த்து எஸ்கேப் ஆகப்பார்க்கிறீங்க://

      அதானே.... திட்டமிட்ட சதி!

      //மீயும் இன்னும் சில நாட்களில் காணாமல் போவேனாம்ம்.//

      கிர்ர்ர்ர்ர்... ஊருக்கு ஒரு நியாயம்.. உங்களுக்கு ஒரு நியாயமா?

      Delete
    2. ஹா ஹா ஹா ஊருக்குபதேசம் உனக்கல்லடி மகளே:))

      Delete
    3. அதிரடி, இன்னிக்கு நான் தான் ஃபர்ஷ்டோ ஃபர்ஷ்டு எ.பி.யிலே. நீங்க மெதுவா செப்டெம்பரிலே வாங்க! :) எங்கே உங்க செக்? கண்ணிலேயே காணோம்? தொடர் இன்னும் முடியலை. நாளைக்குத் தான் முடிப்போம். :)

      Delete
  10. எப்படியோ தைரியமாய் ஆட்டோ ஏறி விட்டீர்கள்.

    நாங்கள் ஒருமுறை திருப்பதி போய் வரும் போது கடலூர் வந்த போது பலத்த மழையால் ரயில் பாதையில் மரம் விழுந்து விட்டது. பல மணி நேரம் ஆகி விட்டது. ரயில்வே காண்டீன் எங்களுக்கு எலுமிச்சை சாதம் செய்து கொடுத்தது. மதிய நேரம் எல்லோரும் பாராட்டினார்கள் ரயில்வே காண்டீன் நடத்துபவரை.

    ReplyDelete
    Replies
    1. வங்கித் தேர்வு எழுதிட்டுச் சென்னையிலே இருந்து தனியா மதுரைக்குப் பகல் வண்டியில் வந்துட்டு இருந்தேன், அப்போப் பதினெட்டு வயசு தான். திருச்சிக்கிட்டே டவுன் ரயில் நிலையத்திலே வண்டியை நிறுத்தினாங்க. என்னனு முதல்லே தெரியலை! அப்புறமாத் தான் தெரிஞ்சது இஞ்சின் தடம் புரண்டதுனு. ஒருத்தருக்கும் ஒண்ணும் ஆகலை. சாயந்திரம் மதுரைக்குப் போக வேண்டியவ இரவு பனிரண்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். நல்லவேளையா அப்பா அங்கேயே தங்கி இருந்தார். இல்லைனாலும் வீடு அப்போ மேலாவணி மூல வீதி தான். கூட வந்தவங்க கொண்டு விடறதாச் சொல்லி இருந்தாங்க. ஆனாலும் அப்பாவைப் பார்த்ததும் தான் மனம் நிம்மதி ஆச்சு.

      Delete
  11. மழை அனுபவம், இதே போனற அனுபவம் எனது தந்தைக்கு இருந்தது. ஆனால் அவர் வண்டியில் இருந்த இடம் ஸ்டேஷனில் இருந்தாலும் அவரால் வண்டியை விட்டு இறங்க முடியவில்லை. வீட்டில் இருந்த எங்களுக்கு அந்த இரவு மறக்கமுடியாதது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கும்மாச்சி, இது என்ன பெயர்? நாங்கல்லாம் படியில் அளக்கும்போது கும்மாச்சியா வைனு சொல்வோம். :) அப்போதெல்லாம் அலைபேசி வசதி இல்லை. ரயில்வே மூலமே தகவல்கள் பரிமாற்றம் நடந்து வந்தன. இப்படியான அனுபவமும் உண்டு.

      Delete
  12. உங்கள் மன தைரியம் எல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.
    மீண்டும் படித்தாலும் நன்றாக இருக்கிறது ரசிக்கும்படி.
    இந்த சந்தோஷம் நீடிக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதி. இதெல்லாம் 2006 ஆம் வருடமே எழுதி விட்டேன். அதன் பின்னர் 2014 இல் யாரோ கேட்டதன் பேரில் மீள் பதிவு போட்டேன். இப்போதைய வெள்ளம் அவற்றை நினைவில் கொண்டு வந்தது.

      Delete
  13. இரண்டு பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்தேன். மிக முக்கியமான கட்டத்தில் இடைவேளை விட்டு விட்டீர்களே..!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, வருகைக்கு நன்றி. நாளைக்கு (சனிக்கிழமை) முடிஞ்சுடும்.

      Delete
  14. வணக்கம் சகோதரி

    இந்த இரு பதிவுகளையும் ஒரு சேர படித்து விட்டேன். என்னதான் தைரியமாய் நீங்கள் இருந்தாலும், இரு குழந்தைகளுடன் தெரியாத இடத்தில் தனியே ஆட்டோவில் பயணம். கஸ்டந்தான். கடவுள்தான் தங்களுக்கு மனோதைரியத்தை நிரம்பவே தந்திருக்கிறார். மூன்றாவது பதிவு படிக்கும் போது இந்த இருபதிவுகளின் தாக்கம் எனக்கு புரியவில்லை. இப்போது எப்படித்தான் சமாளித்தீர்களோ என கவலைப்பட வைக்கிறது. கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கிறது சகோதரி.. கடவுளுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, தாமதமாய் வந்தாலும் விடாமல் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி. இம்மாதிரிப் பல அனுபவங்கள் உண்டு. :) உண்மையில் இறைவனின் இருப்பைப் புரிய வைத்த அனுபவங்கள் இவை எல்லாம்.

      Delete