எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 27, 2019

நெய் மணக்கும் கத்திரிக்காய்!

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திரிக்காய்

கீழே படம் பார்க்கிறீங்க இல்லையா, வெள்ளைக்கத்திரிக்காய்! 
இது தென் மாவட்டங்களில் மட்டுமே அதிகம் கிடைக்கும் வெள்ளைக் கத்திரிக்காய். மதுரையில் இருக்கும்போது சாப்பிட்டது. இதில் எண்ணெய்க்கறி, எண்ணெய்க் குழம்பு, கத்திரிக்காய் ரசவாங்கி, கத்திரிக்காய்க் கூட்டு புளி விட்டு, பொரிச்ச கூட்டு, பொரிச்ச குழம்பு, வத்தல்னு எல்லாமும் பண்ணலாம். எல்லாமும் பிடிக்கும். கத்திரிக்காய் பிடிக்காதவங்க அதன் ருசியை அறியாதவங்க.

இரண்டு நாட்கள் முன்னர் திருநெல்வேலிக்குச் சில கோயில்கள் பார்க்க வேண்டிக் கிளம்பிப் போய் வந்தோம். அந்த விபரங்கள் மெதுவா வரும்! அங்கே ஆலங்குளம் என்னும் கிராமத்தில் ஒரே காய்கறிக்கடைகள்! அங்கேயே வயலில் விளையும் காய்களை அங்கேயே விற்கின்றனர். அதிகம் போனால் திருநெல்வேலி டவுனுக்குக் காய்கள் வரும். அங்கேயே விற்று விடுமாம். வெளியே போவதில்லை. அதனால் சென்னைக்காரங்க வெள்ளைக்கத்திரிக்காயை ஆச்சரியமாப் பார்ப்பாங்க. நானும் கல்யாணம் ஆகி வந்தப்போ நீலக்கத்தரிக்காயை ஆச்சரியமாப் பார்த்தேன். ஏனெனில் மதுரையில் வெள்ளை, வெளிர் பச்சை, வெளிர் நீலம்(கோடு மெலிதாக இருக்கும்) ஆனால் அதிகம் இருக்காது. அதிகம் வாங்குவதும் சாப்பிடுவதும் வெள்ளைக்கத்தரிக்காய் தான்! இப்போ எல்லாம் ஒரே வயலட் கலராக வருதே ஹைப்ரிட் கத்திரிக்காய், அது இதன் அருகே கூட நிற்க முடியாது. 

விலை என்ன தெரியுமா? அதிகம் இல்லை ஜென்டில்மேன், இருபதே ரூபாய்கள் தான். திருச்சியில் கூட வெள்ளைக்கோடு போட்ட வயலட் கத்திரிக்காய் கால் கிலோ 20 ரூ, 25 ரூ என விற்கிறது. இது கிலோவே இருபது ரூபாய் தான். இங்குள்ள விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங் பண்ணத் தெரியலையோனு என்னோட எண்ணம். ஆனால் கூட வந்த வண்டி ஓட்டுநர் வீணாகப் போவதில்லை என்கிறார்.
எல்லோரும் கண்ணால் பார்த்துக்குங்க! இன்னிக்கு இதான் கறி. இதான் குழம்பு! சின்னக் கத்திரிக்காயாகப் பார்த்து முழுசாகப் போட்டுப் பண்ணிய குழம்பு! 



திருநெல்வேலி போயிட்டு இருட்டுக்கடை அல்வா வாங்காமல் வரலாமா? கால் கிலோ போதும்னு தான் இருந்தோம். சொல்லவும் சொன்னோம். ஆனால் இப்போல்லாம் அரைக்கிலோவுக்குக் குறைந்து கொடுப்பதில்லையாம். அதோடு இப்போ அல்வா சூடாகச் சாப்பிட நிற்கும் வரிசையையும் பார்க்க முடியலை. ஒருவேளை அல்வா தீர்ந்து விட்டதோ என்னமோ? இன்னொன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. அந்தப் பாலின் மணத்தோடு கூடிய பால்கோவா இன்னமும் கொஞ்சம் மாறாமல் அதே தரத்துடன் கிடைக்கிறது. இத்தனைக்கும் இது ரயிலில் வந்தப்போ வாங்கியது தான்.


65 comments:

  1. ஆஹா அக்கா இப்படி உசுப்பேத்தரீங்களே...வெ க படம் போட்டு. நிறைய சாப்பிட்டிருக்கேன். அங்க இருந்த வரை. சென்னைல எப்போதாவது சந்தையில் கிடைக்கும். ஆனாலும் இப்படி நீங்க கிராமத்துல உழவர் சந்தைல கார்டன் வெஜ்ஜியா கிடைக்குமான்னு தெரியலை. இந்தக் கத்தரிக்காய் சூப்பரா இருக்கும்...டேஸ்ட்...மத்ததெல்லம் ஒன்னுமே கிடையாது..வரிக்கத்தரி ஹைப்ரிட்

    இங்க எலஹங்காவுல வெண்டைக்காய் கத்தரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் சந்தைல கொண்டு வராங்க பலதும் அப்படியே பெரிய காம்பொடு தோட்டதுலருந்து. கிலோ 20, 15 தான் அக்கா...வெண்டை சூப்பரா இருக்கும். நிறைய வைச்சுருக்க மாட்டாங்க நீங்க சொல்லறது போல தீந்திரும்...தினசரி சந்தைல...

    குவித்து வைச்சுருந்தாங்கனா அது தோட்டதுலருந்து இல்ல. இடைத்தரகர் மாறி வந்த காய்கறிகள்...

    சரி சரி நெய் மணக்கும் கத்தரிக்காய்னு சொல்லிட்டு ரெசிப்பி, குழம்பு ரெசிப்பி எதிர்பார்த்தேன் போடலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா ரங்கன்.... கீதா சாம்பசிவம் போடாத ரெசிப்பிக்களா? படம்தான் இருக்காதே தவிர, கத்தரிக்காய்னு தலைப்பைப் பார்த்தீங்கன்ன, வெள்ளைக்கத்தரி துவையல், ரசவாங்கி, எண்ணெய் கத்தரி.... ... வயலெட் கத்தரி துவையல், குழம்பு, பச்சிடி... என்று ரகம் ரகமா எழுதியிருப்பாங்க. பாத்துக்கிட்டே இருங்க, லிங்க் நிறைய வரும்.

      On a serious note, கீசா மேடம் மட்டும் பொறுமையா படம்லாம் எடுத்து தளத்துல போட்டாங்கன்னா அது நல்ல ரெஃபரென்ஸ் ஆக இருக்கும். ம்ம்ம் நாந்தான் அதைச் செய்யணும் போலிருக்கு

      Delete
    2. வாங்க தி/கீதா, வெள்ளைக்கத்தரிக்காய் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகம். பச்சை நிறத்திலும் சில சமயங்கள் கிடைத்தாலும் இந்தக் கத்தரிக்காயின் ருசி அதில் வராது! ரெசிபி போடணும்னு தோணவே இல்லை. :))) இன்னிக்குக் கத்தரிக்காய் தான் பொரிச்ச கூட்டு! ஆனால் படம் எடுக்க முடியாமல் ப்ளம்பர் வேலை!ஆகவே படம் எல்லாம் எடுக்கலை. ரெசிபியும் போடலை! :))))

      Delete
    3. நெ.த. நிறையப்படங்கள் எடுக்கும்படி சமைக்கையில் முடியறதில்லை. பல சமயங்களில் மறந்து போய்விடும். சமையலில் உப்பு சரியாய்ப் போட்டோமா, சேர்க்கவேண்டியதைச் சரியாய்ச் சேர்த்தோமா என இருக்கும்போது படம் எடுக்கவோ, அதை வரிசைப்படுத்தி வெளியிடணுங்கற எண்ணமோ வரதில்லை. எப்போவானும் வரச்சே எடுப்பேன். அதைக் கட்டாயமாய்ப் போடுவேன். சேவை எல்லாம் படம் எடுத்து 4,5 வருடங்கள் முன்னரே போட்டிருக்கேன். கை முறுக்கு, தட்டை, சீடை எல்லாமும் படங்கள் எடுத்துப் பகிர்ந்திருக்கேன். நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. நீங்க வலைக்கு அப்போல்லாம் வரலை! :)))))

      Delete
  2. ஆஹா திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா., ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சூப்பரா இருக்கும். ஆமாக்கா இன்னமும் தரம் மெயிண்டெய்ன் பண்ணறாங்க...அப்படியெதான் இருக்கு. ஒரு 6 மாசம் முன்னாடி உறவினர் போய்ட்டு வந்தப்ப வாங்கிட்டுவந்தாங்க...படம் பேக்கெட் தான் போட்டுருக்கீங்க..பிரிச்சு ஃபோட்டோ எடுத்து போட்டுருக்கலாம்...ஹிஹிஹிஹி..சரி சரி .நாங்களே பிரிச்சு எடுத்துக்கறோம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா ரங்கன்... இதெல்லாம் ஒண்ணும் பிரிக்கவேண்டாம். சென்னைல எந்தக் கடைல போனாலும் 20-30 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் கிடைக்குது. அதுவும் வில்லிபுத்தூர் பால்கோவான்னுதான் போட்டிருக்கு. ருசியில் வித்தியாசமில்லை.

      Delete
    2. தி/கீதா, அல்வாவை இன்னமும் பிரிக்கலை. பால்கோவா கொஞ்சம் போல் சாப்பிட்டோம். அந்தப் பால் மணத்துடன் கூடிய கோவா வட மாநிலங்களிலே தான் கிடைக்கும். அதே போல் இங்கே ஶ்ரீவில்லிபுத்தூரில்! அங்கே திருநெல்வேலியிலும் நாங்க தங்கி இருந்த ஓட்டலுக்கு அருகே ஓர் கூட்டுறவுப் பால் பண்ணைச் சங்கம். குடியரசு தினத்தன்று கொடியேற்றிட்டு இருந்தாங்களாம். நம்ம ரங்க்ஸ் காலை டிஃபன் வாங்க அந்த வழியாச் செல்கையில் கொடியேற்றிவிட்டு ஸ்வீட் பால் கோவா கொடுத்தாங்கனு கொண்டு வந்தார். சுமார் 50 கிராம் இருக்கும். சற்றே சிவந்த நிறத்தில் ஆவின் கோவா போல் அதுவும் சுவையாகவே இருந்தது. நமக்கென்ன சர்க்கரையாவோ, வெல்லமாவோ கொடுக்காமல் இப்படிக் கொடுத்தால் உள்ளே தள்ள எளிது! :))))

      Delete
    3. நெ.த. கட்டாயமாய் சுவையில் மாறுபாடு இருக்கும். இதே அல்வா வெல்லம் போட்டு ஸ்ராத்தம் சமயங்களில் நானும் பண்ணுவேன். அந்தச் சுவை தனி! சர்க்கரை சேர்த்துப் பண்ணும்போது தனிச் சுவை! அதேபோல் செய்யும் பக்குவமும் கைக்குக் கை ஆளுக்கு ஆள் மாறுபடும். என் மாமியார் அல்வாக் கிளறினால் எத்தனை நேரம் கிளறினாலும் கொஞ்சம் தளரத்தான் வரும். அதுவே எனக்குக் கெட்டியாக வரும். மதுரையில் நாகப்பட்டினம் அல்வா முன்னாலெல்லாம் மொட்டை மாமா இருக்கும்போது இருந்த சுவை இப்போ இல்லை! அவர் எங்கானும் ஊருக்குப் போனால் வேறே யாரானும் அல்வா கிளறினால் அன்னிக்குச் சரியா விற்கலைனு சொல்வாங்க! அதே போல் ஜிலேபி என்னும் ஜாங்கிரியும்! மேலே பார்த்தால் மஞ்சளாக இருக்கும். சர்க்கரையில் போட்டாப்போல் எல்லாம் இருக்காது. கெட்டிச் சுத்தாகச் சுத்தி இருப்பார். வாயில் போட்டால் மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே ஜீராவாகவும் வரும். அதைச் சாப்பிட்டுப் பார்த்தால் தான் புரியும்! உள்ளே நெய் குடித்தாற்போல் ஜீராவை உள் வாங்கி இருக்கும்.

      Delete
    4. அல்வா சுமாராகத் தான் இருக்கு. நெ.த. சொன்னாப்போல் டால்டா அல்லது ஏதோ காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட எண்ணெயில் செய்யப்பட்டிருக்கிறது! இதற்கு முன்னால் பல முறை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டிருக்கோம். இப்படி மோசமாக இருந்தது இல்லை.

      Delete
    5. கிலோ 220க்கு கொடுக்கணும்னா வேற என்னதான் பண்ணுவாங்க? முழு நெய்யில எப்படி செய்யமுடியும்? அதனால இது டிரேட் ரகசியம். நெல்லை அல்வாவில் டால்டா உண்டு.

      இதைவிட இன்னொரு விஷயம். மாலைல சாந்தி ஸ்வீட்ஸ் (அங்க வேற கடைகளும் சொல்றேன். எக்சலண்ட் அல்வாவுக்கு) 10 ரூபாயைக் கொடுத்து வாழை இலையில் 50 கிராம் அல்வா சாப்பிட்டோமா கிளம்பினோமான்னு இருக்கணும். ஒரு காலத்தில் அரைக் கிலோவை ஒரு சமயத்தில் சாப்பிட முடிந்த என்னால், இப்போல்லாம் எண்ணெய் வழிய 100 கிராமே சாப்பிட முடிவதில்லை.

      கோவில் விஷயங்கள் உடனே எழுதுங்க. டிராப்ட் மோட்ல போட்டு 8 மாசம் கழிச்சு வெளியிடாதீங்க...

      Delete
    6. அப்படிப் பார்த்தால் மதுரை நாகப்பட்டினம் கடை அல்வா சென்ற ஏப்ரலில் வாங்கும்போது கூட நெய்யில் தான் தயாரித்திருந்தாங்க. விலை அதிகம் தான். ஆனால் ருசி? அதோடு வயித்தை ஒண்ணும் பண்ணாது. இது வாயிலேயே போட முடியலை! :(

      Delete
    7. செப்பறை அதோடு சேர்ந்த கோயில்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன்.அதை அப்படியே இங்கே காப்பி, பேஸ்ட் பண்ணிட்டுச் சுருக்கமாகப் பயண விபரங்கள் வரும்.

      Delete
  3. எங்க ஊரில் முள்ளுக்கத்திரிக்காய் அதிகளவில் கிடைக்கும். அதைத்தவிர்த்து வயலட் காய் கிடைக்கும். வெள்ளைக்காய்கள் கிடைக்காது, மதுரை, அருப்புக்கோட்டை பக்கம் அப்பா போய்வரும்போது வாங்கி வருவார். ஆனாலும் எங்க ஊர் கத்திரிக்காய்தான் சுவையா இருக்குறதா தோணுது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, ரொம்ப நாளாச்சு பார்த்து. முள்ளுக்கத்திரிக்காய் வேலூர்க்கத்திரி எனச் சென்னையிலும் விற்பார்கள். சாப்பிட்டிருக்கோம். நன்றாகவே இருக்கும். ஆனால் வயலட் காய் தான் சுவை கொஞ்சம் சுமார் ரகம்!

      Delete
  4. ஆயிரந்தான் இருந்தாலும் அந்த வெள்ளைக் கத்தரிக்காயின் சுவை தனி தான்..

    பள்ளிப் பருவத்தில் வீட்டுத் தோட்டத்தில் விளைவித்தது மனதில் நிற்கின்றது...

    அப்படியே வில்லிபுத்தார் பால்கோவாவின் சுவை - மறக்க மனம் கூடு....தில்லையே...ய்!...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, என் மாமியார் வீட்டினருக்கு இந்த வெ.க., அரைக்கீரை, புதினா, சிவப்பு முள்ளங்கி எல்லாம் அவ்வளவாத் தெரியாது! பின்னர் வந்த நாட்களில் அங்கே இங்கே போனதில் புரிந்து கொண்டாங்க! மதுரையில் முன்னெல்லாம் சிவப்பு முள்ளங்கி தான் கிடைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கும் சிவப்புக் கிழங்கு தான் கிடைக்கும். இப்போ இங்கே திருச்சியில் வெள்ளை/சிவப்பு இரண்டும் கிடைக்கிறது.

      Delete
  5. எங்க ஊருக்கு என்கிட்ட சொல்லாமப் போயிருக்கீங்க. பரவாயில்லை.

    எங்க ஊர் வெள்ளைக் கத்திரிக்காயை, மதுரைல கிடைக்கறதில்லை, நெல்லைல மட்டும்தான் கிடைக்கும்னு உண்மையைச் சொல்லாம, 'தென் மாவட்டத்துக்கே உரிய' என்று எங்க ஊரை இருட்டடிப்பு செஞ்சிருக்கீங்க.

    சும்மா விடலாமா? இந்த கீதா ரங்கன் வேற சண்டைக்கு வராம எப்போதும் சமாதானக் கொடியைப் பறக்கவிடறாங்க..

    ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நெ.த.அதெல்லாம் சொல்லிட்டுப் போறாப்போல இல்லை. இத்தனைக்கும் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்தது தான்! ஆனாலும் எனக்கு என்னமோ கிளம்பும்வரை மனசில் கலக்கம். அதற்கேற்றாற்போல் முதல்நாள் வயிறு கலாட்டா! எப்படியோ போயிட்டு வந்துட்டோம். என்றாலும் நிறைவடையாப் பயணம்!

      Delete
    2. கத்திரிக்காய் விஷயத்தில் அது மதுரையிலும் கிடைக்கும், திருநெல்வேலியிலும் கிடைக்கும். எங்க ஊரான மேல்மங்கலம் கத்திரிக்காயும், இஞ்சியும், மஞ்சளும், வேர்க்கடலையும் இன்னும் நன்றாக இருக்கும். அதிலும் பச்சை மஞ்சள் ரொம்பவே பிரபலம்!

      Delete
  6. இருட்டுக்கடை அல்வா நல்லா இருக்கும்னாலும், அதுல நிறைய ஓரங்களில் உதிர் உதிரா நெய்யோடு (நெய் இல்லை... வனஸ்பதி + நெய்.. கட்டுப்படியாகணும் இல்லையா) நிறைய இருக்கும். அதனால அந்த ஜவ்வு பதம் குறைந்துவிடுவதா என் எண்ணம்.

    சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவும் மிக்சரும் எப்போதுமே என் சாய்ஸா மாறிவிட்டது. இந்த சாந்தி ஸ்வீட்ஸ், நெல்லை பழைய பஸ் ஸ்டாண்டில், செயிண்ட் மேரீஸ் பார்மசிக்கு அடுத்த கடை.

    ReplyDelete
    Replies
    1. இந்த சாந்தி ஸ்வீட்ஸிலே எல்லாம் நாங்க வாங்கியதே இல்லை. நாங்க வடமாநிலத்திலே இருக்கிறச்சே கூட எங்க பொண்ணு/பிள்ளையோட ஆசிரியர்கள் சிலர் திருநெல்வேலிக்கு லீவில் போறச்சே எங்களுக்கு இருட்டுக்கடை அல்வா தான் வாங்கிக் கொண்டு தருவாங்க. அதே போல் அம்பத்தூரில் வீட்டின் பின்பக்கம் இருந்த தென்காசிக்காரரும் ஒரு முறை வாங்கிக் கொண்டு கொடுத்தார். சாந்தி ஸ்வீட்ஸ் என்னும் பெயரில் ஜங்க்‌ஷன் ஏரியா முழுதும் எக்கச்சக்கமான கடைகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  7. இரயில் நிலையத்தில் பால்கோவாவும், சிலர் கடலை மிட்டாயும் விற்பாங்க. கடலை மிட்டாய் நல்ல குவாலிட்டி. பால்கோவா அவ்வளவு ருசியாக இல்லை. (நாங்க ஜீனி போட்ட பால்கோவா வாங்கறதை நிறுத்தியுமாச்சு).

    ReplyDelete
    Replies
    1. ரயில்வேஸ்டேஷனில் நாங்க உட்கார்ந்திருந்த இடத்தில் எதுவும் விற்கலை! ஏன்னா ஏசிபெட்டி வரும் இடம் பார்த்து முன் கூட்டியே போய் உட்கார்ந்துட்டோம். அங்கே கடைகள் ஏதும் இல்லை. ரயிலில் விற்பனைக்குக் கொண்டு வந்தது தான். கடலை மிட்டாய் நன்றாகவே இருக்கும். இதற்கு முன்னரும் சில சமயங்கள் வாங்கினோம். பால்கோவாவும் நம்ம ரங்க்ஸே பாராட்டினார்.

      Delete
  8. பஹ்ரைன்ல பச்சைக் கத்தரிதான் எனக்குப் பிடிக்கும். பூசனி சைஸுல (அதாவது பென்னாம் பெரிய-ஹா ஹா) ஹைப்ரிட் கத்தரிதான் அங்கு அதிகம். சென்னைல வரி கத்தரிதான் தைரியமா வாங்கலாம். கைக்காது.

    ReplyDelete
    Replies
    1. சென்னைக் கத்திரிக்காய் சாப்பிடவே அலுப்பாக இருக்கும்! மண்ணாங்கட்டி மாதிரி சுவை! இஃகி, இஃகி! பச்சைக்கத்தரி மதுரையிலே அடிக்கடி கிடைக்கும்.

      Delete
  9. இருட்டுக் கடை குடும்பம் இரண்டாப் பிரிஞ்சு இப்போ அதுக்குக் கொஞ்ச தூரத்துலயே இன்னொரு கடையும் இருக்கு. அங்கயும் இருட்டுக்கடை அல்வா விக்கறாங்க.

    மாலை 8 மணிக்குள்ள ரெண்டு பாக்கெட் வாங்கிக்கிட்டு அதுக்கு அப்புறம் காந்திமதி அம்மை, நெல்லையப்பர், அங்க ரங்கநாதர் என்று சன்னிதிகளைச் சேவிக்கலாம். ஆமாம்... அல்வா வாங்கினீங்க. இரண்டு கோவிலுக்கும் போனீங்களோ? (நெல்லையப்பர், காந்திமதி அம்மை). 7 ஸ்வரத் தூணையும் பாத்தீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. இருட்டுக்கடை பிரிந்து போன விஷயமெல்லாம் தெரியாது. யாரும் சொல்லலை! நாங்க பழைய கடையிலே தான் வாங்கினோம். கோயிலுக்குப் போன விஷயமெல்லாம் பின்னர்! :))))

      Delete
  10. வெள்ளைக்கத்தரிக்காய் சமைத்தால் நன்றாய் இருக்கிறது என்பதை நானும் பார்த்திருக்கிறேன் (சுவைத்திருக்கிறேன்!!) ஆனாலும் ஏனோ மனதுக்குள் ஒரு சிறு எதிர்ப்பு வரும் இதற்கு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கத்திரிக்காய் மேல் என்ன காய்ச்சல்? சுவை நல்லாத்தானே இருக்கு? க்ர்ர்ர்ர்ர்

      Delete
  11. வயலட் கத்தரிக்காய் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் என்று சொல்கிறார்கள். நான் சிறுவயதில் தஞ்சையில் அழகான, அம்சமான வயலட் கத்தரிக்காய் வாங்கி சமைத்து சாப்பிட்டிருக்கிறேன். அதன் ருசியே தனி. மதுரையில்கூட வயலட் கத்தரிக்காயை கம்மா கத்தரிக்காய் என்பார்கள். அதன் கவர்ச்சி வெள்ளைக் கத்தரிக்காயில் (பார்க்கும்போது) இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், மதுரையில் மாடக்குளம் கம்மாக்கத்தரிக்காய் நிறமே தனி! இப்போ வர நல்ல வயலட் கலரில் இருக்காது. வெள்ளைக்கத்திரியையும், ஒரு வயலட் கத்திரியையும் தனித்தனியே சமைத்துச் சுவைத்துப் பார்த்துவிட்டுச் சொல்லவும்.

      Delete
  12. சிறு கத்தரிக்காய் வாங்கி முழுசு முழுசாய் போட்டு எண்ணெய் வதக்கல், ஸ்டப்ட் கறி, சாம்பார், வெந்தயக்குழம்பு, பிட்லே எல்லாம் செய்து சாப்பிடலாம் ஸ்ஸ்ஸ்ஸ்.......

    ReplyDelete
    Replies
    1. நேத்திக்கு எண்ணெய்க்கறி, குழம்பு! இன்னிக்குப் பொரிச்ச குழம்பு! நாளைக்கு என்னனு யோசிக்கணும்!

      Delete
  13. நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கியிருந்து வேலை பார்த்தவன். அங்கு நிறைய சாப்பிட்டிருக்கிறேன் இந்த பால்கோவா...

    இருட்டுக்கடை அல்வா.....ம்ம்ம்ம்..... ஓகே! மதுரை பிரேமாவிலாஸ் அல்வா வாங்கி சாப்பிடுங்கள். அதைவிட அங்கேயே நின்று சாப்பிடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் சொல்லிட்டே இருக்கீங்க ஶ்ரீராம், பிரேமவிலாஸ் பத்தி. முதல்லே அது எங்கே இருக்குனு கண்டுபிடிக்கணும். அப்புறமா அல்வா வாங்கிச் சாப்பிட்டுட்டுச் சொல்றேன். இந்தத் தரம் மதுரைக்கும் போவதாக ஒரு ப்ளான் இருந்து பின்னர் கான்சல் பண்ணினோம்.

      Delete
    2. இந்த நிமிடம் கையில் இருட்டுக்கடை அல்வாவுடன் உட்கார்ந்து சுவைத்துக்கொண்டே பின்னூட்டமிடுகிறேன்! நேற்று சகோதரரின் முகநூல் நண்பர் ஒருவர் வந்திருந்தார். ஐம்பொன் நகைகள் விற்பதாய்ச் சொல்லி பாஸ் தலையில் (இல்லை கையில்) 250 ரூபாய்க்கு ஒரு மோதிரத்தைக்கட்டிவிட்டு, இது இருட்டுக்கடை அல்வா என்று அல்வா கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்!!!!

      Delete
    3. ம்ம்ம்ம்ம் ஜமாயுங்க! இருட்டுக்கடை அல்வா சாப்பிடும் அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு!

      Delete
  14. வணக்கம் சகோதரி

    சுவையான கத்திரிக்காய் பதிவு. வெள்ளை கத்திரிக்காய் பார்க்கவே மிகவு‌ம் அழகாக உள்ளது. ஆலங்குளத்தில் எங்கள் நாத்தனாரின் மாப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வேலை முடிந்து வரும் போது இப்படித்தான் பச்சை பசேல் காய்களுடன் வருவார். நாங்கள் கல்லிடை செல்லும் போது ஏற்பட்ட இந்த அனுபவங்களை மறக்க இயலாதது. ஆகா... நீங்கள் லீவு போட்டுட்டு தி.லிதான் சென்று வந்தீர்களா? இருட்டு கடை அல்வா நன்றாக இருந்திருக்குமே.! நாங்கள் சென்ற வருடம் சென்ற போது கூட நிறைய பேர்கள் சூடாக வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தார்களே.! நாங்கள்தான் மறுநாள் வாங்கலாமென்று நினைத்து பின் ஏதோ வேலைகள் மும்மரத்தில் வாங்காமலேயே வந்து விட்டோம்.

    எப்போதும் இங்கு என் அண்ணா வரும் சமயம் அல்வாவும், பால்கோவாவும் வாங்கி வருவார். நீங்கள் அல்வா கொடுத்ததில் எனக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன... ஹா ஹா ஹா.

    சகோதரி கீதா ரெங்கன் கூறியது போல் கத்திரி வைத்து செய்தவைகளை பதிவிடுங்கள். கண்ணால் சுவைக்கலாம். "திங்க" பதிவில் விரைவில் வருமென எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஹிஹிஹி, நாங்க காரில் ஏறினதுமே ஓட்டுநரிடம் அல்வா வாங்கப் பணத்தைத் தான் முதலில் கொடுத்தோம்! இஃகி, இஃகி, அப்புறம் மறந்துட்டா! அதுக்கப்புறமாத் தான் அவர் ஆலங்குளம் காய்கள் பத்திச் சொன்னார். வாழைப்பூ வாங்கணும்னு கூட ஆசை தான். ஆனால் அந்த ஒரு வாழைப்பூ எனக்கு 4 நாட்கள் வரும். விலை 5 ரூபாய் தான். நாலு நாட்கள் அதையே சாப்பிடணுமேனு நினைச்சு வாங்கலை!

      Delete
  15. கால்கிலோ உங்களுக்கு போதும் என்றால் மீதியை இங்கே அனுப்புறது

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இதுவே பத்தலை. முதல்லே ஜாஸ்தியா இருக்குமோனு நினைச்சோம்! :) இப்போ மெனு நீளமா இருப்பதைப் பார்த்தால் போதுமானு யோசனையா இருக்கு! :))))

      Delete
  16. சிறுவயதில் கத்தரிக்காய் என்றாலே பிடிக்காது இப்போது கத்தரிக்காய் இல்லைன்னா சாப்பாடே இல்லை என்ற மாதிரி ஆகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. அதே கதை தான் நம்ம வீட்டிலும். நம்மவர், அவர் தம்பி, தங்கைகள் யாருக்குமே கத்திரிக்காய் பிடிக்காது. பண்ணினாலோ, சாப்பிட்டாலோ சிரிப்பாங்க! இப்போ எல்லோரும் கத்திரிக்காய் ரசிகர்கள்.

      Delete
  17. கத்தரிக்காய் நானும் ஆரம்பத்தில் விரும்பியதில்லை.
    எஜிப்தியர்களின் செய்முறை எனக்கு பிடித்து போனது இப்பொழுது கத்திரிக்காய் பிடித்தமானதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நமக்குக் கத்திரிக்காய் தான் உயிரே!

      Delete
  18. அந்த கத்திரிக்கா இங்கே கிடைக்குதே . ஊரில் அம்மா செய்வாங்க ..அப்போ சாப்பிட ஆசை வரலை .நீங்க நெய்மணக்கும் னு சொல்லும்போது ஆசையா இருக்கு விரைவில் ரெசிப்பி வேண்டும் :)
    ஹைபிரிட் கத்திரி அப்புறம் சில வகை கென்யாலருந்து வருது அதெல்லாம் நமக்கு ஆகாது .
    இந்த வெள்ளை நாட்டுவகை தானே ? கன்பர்ம் பண்ணிக்கிறேன் வாங்குமுன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், வெள்ளைக்கத்திரிக்காய் நாட்டுக் கத்திரிக்காய் என்று தான் சொல்லுவோம். நல்ல சுவையா இருக்கும். அதே போல் இங்கே திருச்சியில் வெண்டைக்காய் நாட்டு வெண்டைக்காய் எனக்கிடைக்கும். சற்றே வெளிறிய பச்சையில் சின்னச் சின்னதாக இருக்கும். அரைக்கிலோ வாங்கி வதக்கினாலும் பத்தாது. சுருண்டு விடும்.

      Delete
  19. வெள்ளைக்கத்திரிக்காய் அழகாக இருக்கிறது...

    ReplyDelete
  20. இந்த வெள்ளை கத்திரிக்காய் என் மாமனாருக்கு மிகவும் பிடிக்கும்.
    அவர்கள் வரும் போது மார்கட் போய் தேடி வாங்கி வந்து சமைப்போம்.
    பழனியில் ஒருமுறை மார்கட்டில் வெள்ளைகத்திரிக்காய் பார்த்து மாமாவுக்கு பிடிக்கும் என்று கோவை வாங்கி போனேன். மாமாவுக்கு குழந்தையை போல மகிழ்ச்சி. இங்கு(கோவையில்) கிடைக்க மாட்டேன் என்கிறது என்று வருத்த படுவார்கள்.
    என் கணவருக்கு முன்பு பிடிக்காதாம். இப்போது கத்திரிக்காய் ரசிகர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, வெள்ளைக்கத்திரிக்காய் ஒரு முறை சாப்பிட்டு விட்டால் பின்னர் அதன் ரசிகராக வேண்டியது தான். நம்மவருக்கும் ஆரம்பத்தில் கத்திரிக்காயே பிடிக்காது. இப்போ பரம ரசிகர்!

      Delete
  21. அட அட கத்திரி ...எப்பவும் பிடிக்கும்..

    ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவின் சுவை நாவில் ஏன்னா போன வாரம் தான் அப்பா அங்க தரிசனம் போயிட்டு வரும் போது வாங்கிட்டு வந்தார் ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, அநேகமாய் நம் பதிவர்கள் பலருக்கும் வெள்ளைக்கத்திரிக்காய் பற்றித் தெரிஞ்சிருக்கு. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  22. வெள்ளைக் கத்தரிக்காய் எப்போதோ ஒரு முறை சாப்பிட்டதாக நினைவு.
    கத்தரிக்காய் என்ன நிறமானால் என்ன! சுவைக்குக் குறைவிராது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க இமா கிறிஸ், முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  23. கத்தரிக்காய் எல்லாம் செய்கிறமாதிரி செய்தால்தான் சுவைக்கும் கேரளத்தில் கத்தரிக்காய் மெழுக்கு வரட்டிசெய்வார்கள் எனக்கு பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, கத்திரிக்காய் சிலருக்குப் பிடிக்காது. பொதுவாக எங்க வீட்டில் அனைவருக்குமே பிடிக்கும்.

      Delete
  24. கத்தரிக்காய் புராணம் ரொம்பத்தான். கடைசியிலே மகா பெரியவா செய்த மாதிரி (கதை முன்னரே சொல்லி இருக்கேன்) கத்தரிக்காயை மாமா விட்டுவிடுவார்.
    டெல்லி கத்திரிக்காய் பற்றி வெங்கட் ஒன்றும் கூறவில்லை. ஒரு கத்தரிக்காய் ஒரு கிலோ வரும்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, நாங்க ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போ அந்த மாதிரிப் பெரிய கத்திரிக்காய் வாங்கித் தான் பைங்கன் பர்த்தா செய்வோம். இங்கேயும் கிடைக்கிறது. ஆனால் அவ்வளவும் செலவு செய்ய முடியாது இரண்டே பேர் என்பதால்! கத்தரிக்காயை அவர் இப்போத் தான் சாப்பிடவே ஆரம்பித்திருக்கார் ஆதலால் அதுக்குள்ளே விட மாட்டார்! :))))

      Delete
  25. ஆஹா , கத்திரிக்காய். மூணு வேளையிம் சாப்பிட ரெடி.
    ஒரு ஆத்தூர் கத்திரிக்காய் பச்சை நிறம். அது மட்டும் கசக்கும் பிடிக்காது.
    \மத்த எந்தக் கத்திரிக்காயும் ஓகே.
    எங்க ஊருக்கெல்லாம் போய் வளமெல்லாம் பார்த்து வந்திருக்கிறீர்கள்.
    மதுரை பிரேமவிலாஸ் நாங்களும் ருசித்திருக்கிறோம். 2003 ல.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இந்தப் பிரேம விலாஸ் எங்கே இருக்குனு ஶ்ரீராம் சொல்லவே மாட்டேங்கறார். நாங்க திருநெல்வேலியில் இருந்து மதுரையும் போறதாத் தான் இருந்தோம். ஆனால் என்னால் முடியலை! அதோடு மதுரைக்குக் காலங்கார்த்தாலே இரண்டு வண்டிகள். அதைப் பிடிக்க முன்பதிவும் செய்ய முடியாதபடிக்குப் பாசஞ்சர் வண்டிகள். ஆகையால் போகலை!

      Delete
    2. அட பார்றா... மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே (தங்க ரீகல் தியேட்டர் எதிரே) டவுன் ஹால் ரோடுக்குள் நுழையும்போதே வலது பக்கம் முதல் கடை! முன்பே சொல்லியிருக்கிறேன். இன்று மதுரையிலிருந்து புறப்படும் நண்பர் ஒருவரிடம் கால் கிலோ பிரேமாவிலாஸ் அல்வா வாங்கிவரச் சொல்லி இருக்கிறேன். நேற்று எதிர்பாராமல் இருட்டுக்கடை அல்வா கைக்கு வந்தது! இப்போது நாவில்!

      Delete
    3. ஓஓ, நாங்க ரெயிலிலே மதுரைக்குப் பயணித்துப் பல ஆண்டுகள் ஆகின்றன என்பதால் அந்தப் பக்கமெல்லாம் போக வாய்ப்புக் கிடைக்கலை. வெளி ஊர்களில் இருந்து மதுரைக்குள் நுழைந்தால் நேரே தளவாய் அக்ரஹாரம் வழியாக சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் இப்போது இருக்கும் கார் பார்க்கிங்குக்கு வருவார்கள். நாங்க ஒரே முறை தான் மதுரையில் தங்கினோம் 2009 ஆம் ஆண்டோ என்னமோ! அதுக்கப்புறமா அங்கே தங்கலை என்பதால் இதெல்லாம் சரியாத் தெரியலை. நாங்க ரெண்டு பேர் மட்டும் பேருந்தில் வந்தப்போவும் நேரே தானப்ப முதலித் தெரு "கதிர்" ஓட்டலுக்குப் போயிட்டோம். ரீகல் டாகீஸ் பக்கம் போகலை. அடுத்த முறை போனால் இதுக்காகப் போகணும். அதோட ராஜா பார்லி வேறே ரொம்ப வருஷமாப் பென்டிங்.

      Delete
  26. வெள்ளை கத்திரிக்காய் தில்லியில் கிடைக்கிறது. வாங்கி சமைப்பது உண்டு.

    இருட்டுக் கடை அல்வா, பால்கோவா என பதிவு முழுமையாக பிடித்த விஷயங்கள்.....

    சுவை ஈர்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நன்றி. வெள்ளைக்கத்திரிக்காய் நான் வடமாநிலங்களில் பார்க்கவில்லை. இப்போக் கிடைக்கிறது என்பது ஆச்சரியம் தான். :)

      Delete