எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 09, 2019

ஜிவாஜியா? எம்ஜாரா? ஜெமினியா?

கொஞ்சம் இல்லை, ரொம்பவே தீவிரமான எண்ணங்களில் சில நாட்களாக ஆழ்ந்து இருந்தாச்சு. கொஞ்சம் ஓய்வு தேவை. ஒரு மாறுதலுக்காக ஒரு மொக்கை போடலாமா? இதுக்கு அள்ளும் பாருங்க கூட்டம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! லலிதாம்பாள் சோபனம் எழுதினா யாருமே வர மாட்டாங்க! இப்போ என்னிடம் ஒரு கேள்வி கேட்ட ஒருத்தருக்கு பதில் சொல்லணும்.கொஞ்ச நாட்களாகவே சொல்லணும்னு இருந்த விஷயம்.

ஒரு வாரம் முன்/அல்லது சில நாட்கள் முன்னர் எ.பி. வாட்ஸப் குழுமத்தில் பானுமதி வெங்கடேஸ்வரன் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். (இல்லை, இல்லை, நீங்கல்லாம் நினைக்கறாப்போல் முக்கியமானதெல்லாம் இல்லைங்க! பொறுமை! பொறுமை!) அவங்க அன்னிக்கு ஏதோ ஒரு சானலிலே அல்லது யூ ட்யூபிலே குடியிருந்த கோயில் படம் பார்த்துட்டு இருந்தாங்களாம். அதிலே நம்ம எம்ஜார் நடிப்பைப் பார்த்துட்டு அதுவும் பாடல் காட்சிகள்னு சொன்னாங்களோ? ஆமாம்னு நினைக்கிறேன். பாடல் காட்சிகளில் எம்ஜார் நடிப்பைப் பார்த்துட்டுச் சிப்புச் சிப்பா வந்ததாம். ஜிவாஜி படங்களைப் பார்த்துட்டுச் சிரிக்கிற கீதா அக்கா (ஹிஹிஹி, நாந்தேன்) இதுக்கு என்ன சொல்லுவாங்க/அல்லது சொல்லப் போறாங்கனு கேட்டிருந்தாங்க! அதுக்கு நான் வாட்ஸப்பில் பதில் சொல்லலை!நீளமா இருக்கும் என்பதோடு அதிலே தமிழில் எல்லாம் தட்டச்சுவது வைச்சுக்கலை! வாட்ஸப்பும் குறிப்பிட்ட நேரம் தான் பார்ப்பேன். எல்லா வாத, விவாதங்களிலும் கலந்துக்கறதும் இல்லை. நேரம் கிடையாது.

ஜிவாஜி படத்தைப் பார்த்துச் சிரித்த   நான்  எம்ஜிஆர் படத்துக்கு மட்டும் பாராட்டா தெரிவிப்பேன்! எம்ஜார் எப்படி நடிச்சா எனக்கு என்ன வந்தது? அதையும் பார்த்துச் சிரிப்போமுல்ல! எம்ஜார்னா என்ன ஒசத்தி? ஜிவாஜி என்ன தாழ்த்தி? இல்லை ஜெமினி தான் நல்லாப் பண்ணுவார்னு சொல்லி இருக்கேனா? எல்லாம் ஒரு குட்டையிலே ஊறிய மட்டைங்க தானே! ஜிவாஜி உணர்ச்சிகளைக் காட்டறேன்னு உருக்கினா எம்ஜார் போதனைகள் பேசியே தன்னை அப்பாவியாகவும், நல்ல மனிதனாகவும் காட்டிப்பார். ஜெமினியோ தன்னைத் தான் பெண்கள் அனைவரும் காதலிப்பதாகவும் துரத்துவதாகவும் நினைத்துக் கொண்டு இருப்பார். ஆகவே வலையுலகத் தோழர்களே, தோழிகளே! எனக்கு யார் நடிப்பும் பிடிக்காது. இருவர்/மூவர் நடிப்பிலும் நல்ல கதையம்சம் கொண்ட படம்னா கொஞ்சம் பார்க்கலாம் என நினைப்பேன்.

எந்த சினிமா நடிகருக்கும் நான் விசிறி இல்லை.  எம்ஜிஆர் படங்கள் எண்ணினால் போல் பார்த்திருப்பேன். ஆனால் அதுவே பெரிய விஷயம். எங்க அப்பாவுக்குப்பாஸ் கொடுக்கும் படங்கள் தான் பெரும்பாலும் பார்த்திருக்கேன். அந்தப் படங்களில் எனக்குத்தெரிந்து ஒரு முறை கூட எம்ஜிஆர் படம் வந்ததில்லை. பாஸும் சித்ராலயா படங்கள், மதுரை தங்கம் தியேட்டரில் போடும் படங்கள், சென்ட்ரல் தியேட்டரில் போடும் படங்கள் இவற்றிற்குத் தான் வரும். இவற்றில் தியேட்டர்களில் போடும் எல்லாப் படங்களுக்கும் பாஸ் கொடுத்ததில்லை. அப்பாவும் நல்ல படம் என்றாலே கேட்டு வாங்குவார். அத்தோடு அவரும் ஒரு ஜிவாஜி ரசிகர் என்பதால் அநேகமான ஜிவாஜி படங்கள் சென்ட்ரல் தியேட்டரில் வந்ததால் அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டன. எம்ஜிஆர் படங்கள் பார்க்க அவ்வளவு சீக்கிரம் அப்போல்லாம் அனுமதியும் கிட்டாது! ஆனாலும் பல பெண்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கேன். ஆச்சரியமா இருக்கும்.

எம்ஜிஆர் படங்கள் எல்லாம் சொல்லப் போனால் மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடர்களும்(40 தானே?) படம் உட்படத் தொலைக்காட்சியில் பின்னாட்களில் பார்த்தவை! இஃகி, இஃகி! எனக்குத் தெரிந்து தமிழில் நல்ல சினிமா என்பதே இல்லை. இன்னும் வரவில்லை என்றே சொல்லலாமோ? ஓரிரண்டு படங்களைத் தவிர்த்து! மகேந்திரன் எடுத்த வீடு அதில் அடக்கம். பின்னர் பாலுமகேந்திரா(வயதான பின்னர்) தாத்தாவாக நடித்த "தலைமுறைகள்" படம் நன்றாக இருந்தது. ஆனால் ஆரம்பத்திலிருந்து பார்க்கலை. இவற்றைத் தவிர இன்னும் ஓரிரு படங்கள் உள்ளன. மற்றபடி வசனங்களில் புரட்சி பண்ணின மணிரத்னமும் சரி, பெரிய பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுக்கும் சங்கரும் சரி! ஜனரஞ்சகமான சற்றும் நம்ப முடியாத படங்களே எடுக்கிறாங்க! அவற்றில் ஒன்றைத் தற்செயலாகப் பார்த்த எங்க பெண்ணோட சின்னப் பெண் (அப்பு) இந்தியாவில் இப்படி எல்லாம் நடந்துக்கறதே இல்லையே பாட்டி? எனக் கேட்கிறாள். என்னத்தைச் சொல்றது!


பாபநாசம் படம் மலையாளத்தில் பார்த்ததும் தமிழில் பிடிக்கலை! அதே போல் மணிச்சித்திரத் தாழ்! காக்கை குயில் என்னும் படம்! தமிழில் கொலை செய்துட்டாங்க! ஒரு கதையின் ஜீவனைப் படத்தில் கொண்டு வருவதற்கு இங்கே ஆள் இல்லை. வந்தாலும் அதை ரசிக்க ஆளும் இல்லை. அதுக்காகத் திரைப்படமே பார்க்காமல் இருக்க முடியுமா எனக் கேட்பவர்களுக்கு! பாருங்க! பாருங்க! பார்த்துக்கிட்டே இருங்க! ஆனால் அந்த நடிகருக்கே நமஸ்காரம் செய்யும் அளவுக்குப் போயிடாதீங்க! என்னைப் பொறுத்தவரை ஜிவாஜியும் சரி, எம்ஜிஆர், ஜெமினி யாராக இருந்தாலும் சரி! ஏதோ ஓரிரு நல்ல படங்களில் நடித்திருக்கலாம். அது கூட எம்ஜிஆர்? சந்தேகமே! அம்பேரிக்காவில் இருந்தவரைக்கும் படங்கள் பார்த்தேன். இங்கே வந்தப்புறமா கேபிளை எடுத்துட்டு செட் டாப் பாக்ஸ் போட்டாங்க! அதுக்கப்புறமாத் தொலைக்காட்சி பக்கமே போறதில்லை! இதிலே சினிமா எங்கே பார்க்கிறது?



76 comments:

  1. //எல்லாம் ஒரு குட்டையிலே ஊறிய மட்டைங்க தானே//

    ஸூப்பர் இந்த நிலைப்பாட்டை எல்லா மக்களும் தொட்டு இருந்தால் சாலைகளில் பாலாறு ஓடி இருக்காது.

    எடப்பாடியும் முதல்வர் ஆகி இருந்திருக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! எங்கே!எத்தனை முறை சொன்னாலும் நம் மக்கள் மண்டையில் ஏறவே ஏறாது!

      Delete
  2. ஆஆஆஆஆஆஆஅ மீ த செகண்ட்டூஊஊஊஊஊ.. என நினைக்கிறேனாக்கும்..

    ///எம்ஜாரா? ஜெமி//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எம் ஜி ஆரை “ஜாரா”க்கிய கீசாக்காவை உடனடியா பிரித்தானிய காண்ட் கோர்ட்டுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார்ர்.. மேன்மை தங்கிய சனாதிபதி:) அவர்கள்.. அது நாந்தேன்ன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! அதிரடி! அமுதசுரபி! என்னோட கசின் ஒருத்தர் குழந்தையா இருக்கும்போது எம்ஜிஆரை எம்ஜார் என்றே சொல்லுவார். அது முதலே எங்க வீட்டில் எம்ஜார் தான்! :)))) அது சரி, அடுத்த பதிவு உங்களைத் தாக்கித் தான் போடப் போறேனாக்கும்! அப்போ எந்தக் கோர்ட்டுக்குப் போவீங்களோ? :))))))

      Delete
    2. ///அது சரி, அடுத்த பதிவு உங்களைத் தாக்கித் தான் போடப் போறேனாக்கும்! அப்போ எந்தக் கோர்ட்டுக்குப் போவீங்களோ? :)))///

      ஆவ்வ்வ்வ் மீ ஒரு அப்பாவீஈஈஈஈஈஈஈஈஈஈ:)).. கடவுளே அப்பாவியாகவே இருந்திருக்கலாமோ எதுக்கு அமுதசுரபியாக மாறினேனோ:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)..

      Delete
    3. ஹாஹா, அடுத்த பதிவு போடறச்சே கட்டாயமா வந்து பாருங்க. பானுமதியைக் கூப்பிட்டும் வரலை! ஹிஹிஹி, அம்புட்டு பயம் நம்மட்ட! :)))))

      Delete
    4. பயமெல்லாம் இல்லை. பதில் கொடுக்க மூடு இல்லை. இன்றோடு முடிந்து விடுகிற விஷயமா இது? சாகா வரம் பெற்ற டாபிக் ஆயிற்றே?

      Delete
    5. ஹிஹி, சும்மாவானும் கலாய்ச்சேன். தப்பா எடுத்துக்காதீங்க. :) உங்களுக்கு மூட் சரியில்லை என்பதைப் புரிஞ்சுக்கலை! :( அப்புறமாத் தனியா இன்னொரு நாளைக்கு வைச்சுப்போமா? :)))))

      Delete
    6. அதிராவைத் தாக்கி பதிவா? ஏன்? எதற்கு? என்ன குற்றம் செய்தார் அவர்!!! முட்டை, மே மே சமையல் போட்டது தவறா? இல்லை ஊசி இணைப்பு கொடுத்தது தவறா? இல்லை, இப்போதெல்லாம் தமிழில் தப்பு குறைஞ்சிருக்கே... அதுதான் தவறா?

      Delete
    7. ஹாஹா ஶ்ரீராம், சமையல் பதிவுக்குத் தான்!இன்னிக்குப் போட இருந்தேன். அதுக்குள்ளே கூடாரவல்லித் திருநாள் வந்துடுத்து! நாளைக்குத் தரேன் பாருங்க! :)))))) சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வம்பு தான். நீங்க தப்புக் குறைஞ்சிருக்குனு சொன்ன முஹூர்த்தம் ஒத்துழைப்பை "ஒத்துளைப்பு"னு எழுதி இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  3. // அவற்றில் ஒன்றைத் தற்செயலாகப் பார்த்த எங்க பெண்ணோட சின்னப் பெண் (அப்பு) இந்தியாவில் இப்படி எல்லாம் நடந்துக்கறதே இல்லையே பாட்டி? எனக் கேட்கிறாள். என்னத்தைச் சொல்றது//

    ஹாஹாஹா :) இதைதான்க்கா என் பொண்ணும் கேட்டா :) இப்படித்தான் எல்லாரும் ஸ்கூல் கல்லூரியில் அட்டகாசம் செய்வார்களா ? பாட்டு பாடி டான்ஸ் ஆடுவாங்களா ??
    மலையாள படங்களை தமிழில் எடுக்காம இருப்பதே நல்லதுக்கா ..துல்கர் நடிச்ச சார்லியை இவங்க கொன்னுபோடுவாங்க ..அதில் இருக்கும் அந்த மென்மையான உணர்வுகளை தமிழ் டைரக்டர்ஸ் சொதப்பிடுவாங்க ..#

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஏஞ்சல், அப்புவுக்கு இதே போல் இந்தியப் பள்ளிகள் பற்றியும் நிறையக் கேள்விகள்! சமயத்தில் பதில் சொல்ல முடியாமல் பேச்சை மாற்றும்படி ஆகும்! ஏனெனில் இங்கே பள்ளிகள் சொல்லிக்கிறாப்போல் இல்லையே! :( ஆமாம், பல மலையாளப்படங்களையும் நான் மூலத்தில் தான் பார்த்திருக்கேன். தமிழாக்கத்தில் பார்க்கலை. சந்திரமுகி, காக்கை, குயில், பாபநாசம் தவிர்த்து! சந்திரமுகி நானாகத் தேடிப் பார்க்கலை! மத்தவங்க பார்க்கையில் நானும் ஒரு பார்வையாளராக இருந்தேன். காக்கை, குயிலும், பாபநாசமும் பார்க்கணும்னு பார்த்தேன்! ஏமாந்தேன்! :(

      Delete
    2. நிதர்சனங்களை நாம் நேரிலேயே காண்கிறோம். செய்ய முடியாத சிலவற்றை, ரசிக்கக் கூடிய சிலவற்றை திரையில் பார்த்து ரசிக்கிறோம்.

      Delete
    3. அதெல்லாம் சரி! கொஞ்சமானும் நம்பக் கூடியதாய் இருக்க வேண்டாமா? :(

      Delete
  4. அக்கா எம்ஜிஆர் எப்படி சில மக்களின் மனதில் இடம் பிடிச்சார் என்பது எனக்கு இன்னமும் புதிர் :)
    ஒரு விஷயம் சொல்லணும் எங்கப்பா கல்லூரியில் படிக்கும்போது எம்ஜிஆர் மாதிரியே லாங் ஸ்லீவ்ஸ் போட்டு அதே போல் மடிச்சு சுருட்டி விடுவாராம் ..முதல் காட்சி அவர் படங்களையும் நண்பர்களோடு பார்ப்பாராம் :) பிறகு 2/3 வருஷங்கள்தான் அப்படியே விட்டு விலகினதா சொல்வாங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், எம்ஜிஆருக்கு முகராசி, அதிர்ஷ்டம் வேறே துணை செய்தது. மேலும் தன்னைப் பற்றிய நல்ல தகவல்கள் மட்டுமே வெளியே தெரியணும் என முயற்சி எடுத்துப்பார் என்பது பொதுவான பேச்சு! பல பெண்கள் எம்ஜிஆர் இறந்தப்போக் கதறி அழுததை அப்போச் சென்னையில் இருந்ததால் பார்த்திருக்கேன்.

      Delete
    2. உண்மை. எம் ஜி ஆரை ரசிக்காதவர்கள் குறைவு.

      Delete
    3. ஆமாம்,கீழே பானுமதி இன்னும் விரிவாகச் சொல்லி இருக்கார். ரொம்ப விளக்க வேண்டாம் என்றே நான் சுருக்கமாகச் சொன்னேன். ஏற்கெனவே ஜிவாஜி ரசிகர்கள் கோபமா இருக்கிறச்சே எம்ஜார் ரசிகர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை! :)))))

      Delete
  5. யாரும் யாருக்கும் விசிறியாகிறது அந்ததந்தப் பாத்திரப் படைப்புகளைப் பொறுத்து.
    நம் வயதைப் பொறுத்து. அங்கே கேட்கும் பாடல்களைப் பொறுத்து.

    நேற்று மாயா பஜார் பார்த்தேன். இன்னும் இனிமையாத்தான் இருக்கு.
    அதே போல இரு கோடுகள்,எதிர்னீச்சல். கீதாமா. அதீத விருப்பம் என்றில்லை.
    நம்மால் முடியாத்தை அவர்கள் திரையில் முடியும் என்பது போலக் காட்டுகிறார்கள். இரு எஸ்கேப்பிசம்.அவ்வளவுதான்.
    பாப்னாசம் எனக்கும் ஒத்துக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, நான் நல்ல படங்களுக்கு விசிறி. மற்றபடி எந்த நடிகருக்கும் இல்லை. இன்னிக்குப் பாருங்க ரஜினி படம் வெளியாகும் தியேட்டரில் திருமணம் செய்து கொண்டாராம் ரஜினி ரசிகர் ஒருவர். அவர் வாழ்க்கை சாபல்யம் அடைந்ததுனு நினைக்கிறாரோ என்னமோ

      அஜித் படம் வெளியான தியேட்டரில் கட் அவுட் விழுந்து இளைஞர்களுக்கு அடி பட்டிருக்கு! :(

      Delete
    2. //நம்மால் முடியாத்தை அவர்கள் திரையில் முடியும் என்பது போலக் காட்டுகிறார்கள். இரு எஸ்கேப்பிசம்.அவ்வளவுதான்.//
      அதேதான்! இதெல்லாம் கீதா அக்காவுக்கு தெரியாதா என்ன? சும்மா..என்று அவரே சொல்லி விட்டாரே?

      Delete
    3. நல்ல சமாளிப்ஸ்! இது ஒண்ணும் முழு பதில் இல்லையாக்கும்!

      Delete
  6. இந்த விசயத்தில் அடிமையாகாமல் இருப்பது பெரிய விசயம் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி. இன்றைய செய்தியைப் பார்த்தும் கேட்டும் மனதே வருத்தம் அடைந்து விட்டது.

      Delete
  7. கதைக்காகவும் நடிப்புக்காகவும் மட்டுமே படம் பார்ப்பேன் எல்லா நடிகர்களும் சம்மதமே

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, அதோடு நல்ல நடிப்பும்!

      Delete
  8. வணக்கம் சகோதரி

    நல்லதொரு சுவையான அலசல். இப்போதுதான் மூன்று பேரை பற்றிய பதிவொன்றை படித்து கருத்திட்டு விட்டு வந்தேன். இங்கேயும் மூவரைப்பற்றிய அலசல் பதிவு. ம. திலகத்தை அவர் படங்களில் வரும் நல்ல நீதிகளுக்காக பார்க்கலாம். ந. திலகத்தை அவரின் முகத்தில் அவர் தோற்றுவிக்கும் உணர்ச்சிகளின் (நவரசங்கள்) வேறுபாடுகளுக்காக ரசிக்கலாம். கா. மன்னரின் பாடல்கள், அதிலும் அவரின் குரலுக்கென ஒத்துப் போகும் ஏ.எம் ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களின் அற்புத குரல்களுக்காக கேட்டு பார்த்து ரசிக்கலாம்.
    இப்போது வர்ற படங்கள் எது ரசிக்கும்படியாக இருக்கிறதென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இளைய தலைமுறைகள் பார்த்து கருத்து சொல்வார்கள் அவ்வளவுதான். தொலைக்காட்சியிலும் படங்கள் பார்பது எப்போதோ நின்று விட்டது. இந்த உலகில் "வலையுலகில்" மட்டுந்தான் இப்போதைக்கு சுற்றி வருகிறேன். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா! எங்கே படிச்சீங்க? சுட்டி கொடுங்க நானும் படிக்கிறேன். மூவருமே பணத்துக்காக மட்டுமே நடிச்சாங்க! மற்றபடி நல்ல கதையம்சம் உள்ள கதைகள் அப்போதெல்லாம் படங்களாக்கப்பட்டன! அதனாலும் பிர்பலம் ஆனார்கள். நான் தேர்ந்தெடுத்த படங்களை எப்போவானும் பார்க்கிறேன்.

      Delete
  9. அக்கா ஆஜர் வைச்சுட்டுப் போறேன்...வரேன்...இன்னிக்கு நிறைய அங்கங்க தாவி தாவி கமென்ட் போடனும் போல..அதுக்கு எனர்ஜி வேண்டுமே!! ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. @தி/கீதா, உடம்பு தேவலையா? வாங்க வாங்க மெதுவா வாங்க!

      Delete
  10. கீதாக்கா நானும் படம் பார்ப்பது அபூர்வம்...பிடிக்காது என்று இல்லை....வாய்ப்பு கிடைப்பது வெகு அபூர்வம்..

    அதுவும் மலையாளப் படம் பார்த்துட்டு தமிழில் பார்க்க பிடிப்பதில்லை. கொலை செய்திருப்பார்கள். அப்படி நான் பார்த்த படம் //அதே போல் மணிச்சித்திரத் தாழ்! // ஹையோ மலையாளத்தில் என்னமா இருக்கும் இந்தப் படம்....அதை தமிழில் எடுத்து கொலை கொலை கொலை...சகிக்கலை...அதுவும் எங்க மாமியார் வீட்டுல அத்தனை பேரும் வீட்டுல விசேஷத்துக்குக் கூடியிருந்தப்ப பெரிய பட்டாளமே போனோம்..தியேட்டருக்கு...நானும் மணிசித்ரதாழ் எதிர்பார்ப்போடு போனேன்.....நொந்து போயிட்டேன்...மணிசித்ரதாழ் கதையை வாசு என்று போட்டதே எனக்கு என்னடா இப்படி எல்லாம் போட்டுக்கறாங்கனு தோனிச்சு. செம ஸ்க்ரீன் ப்ளே மலையாளத்துல...

    அதே போல அக்கா பரதம் பார்க்க வாய்ப்பு கிடைச்சா பாருங்க...செம பட...அதைப் பார்த்துட்டு தயவு செஞ்சு தமிழ்ல அதை வாசு சீனுனு எடுத்து கொலை பண்ணிருப்பார் அதைப் பார்த்துராதீங்க...தமிழ்ப் படம் நான் ஒரே ஒரு சீன் என் கஸின்ஸ் வீட்டுக்குப்போயிருந்தப்ப பார்த்துட்டு அப்புறம் பார்க்கலை பிடிக்கலை..

    நான் மலையாளப் படங்கள் கொஞ்சமே கொஞ்சம் பார்த்ததுண்டு...ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா...இப்படி சில

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மணிச்சித்திரத்தாழ் அருமையான படம். அதே போல் மமூட்டி, மாதவி நடிச்ச ஒரு படமும்! மாதவி தமிழில் ஒரு க்ளாமர் நடிகையாகவே உருவாக்கம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் மலையாளத்தில் அவர் முழுத்திறமையும் தெரிய வந்தது. பரதம் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். எதுக்கும் கதை என்னனு தேடிப் பார்த்துட்டுத் தெரிஞ்சுக்கறேன்.

      Delete
    2. நான் பொதுவாக மலையாள ரீ மேக்குகளை தமிழ்ப்படம் என்றுதான் பார்ப்பேன். மலையாளத்தை மறந்து விடுவேன். ஏனென்றால் மலையாள ஆடியன்ஸ் வேறு, தமிழ் ஆடியன்ஸ் வேறு. இயக்குனர் ஞானராஜ சேகரன், "மலையாளிகள் ஒரு படத்தை இரண்டரை மணி நேரம் முழுவதுமாக பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்பார்கள், தமிழ் ஆடியன்ஸ் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயம் வராவிட்டால் விசில் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்" என்றார். அப்படிப்பட்ட ஆடியன்ஸுக்கு எப்படிப்பட்ட படங்களை கொடுக்க முடியும்? அதையும் மீறி நல்ல வித்தியாசமான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

      Delete
    3. நான் பார்த்து நொந்து போன ஒரு மலையாள ரீ மேக் 'கோபுர வாசலிலே'. 'பாவம் பாவம் ராஜகுமாரன்' என்னும் அருமையான படத்தை கெடுத்து குட்டிசுவராக்கியிருந்தார்கள். இத்தனைக்கும் ப்ரியதர்ஷன்தான் இயக்கியிருந்தார்.

      Delete
    4. @பானுமதி, பத்திரிகைகளும் சரி, திரைப்படங்களும் சரி, தொடர்ந்து நாம் அதோடு தொடர்பில் இருக்கணும். முன்னெல்லாம் விமரிசனங்களாவது படிச்சுடுவேன். இப்போல்லாம் பல படங்களின் பெயரே தெரிவதில்லை. ஆகவே ரொம்பவும் தெரிந்த விமரிசிக்கப்படும் படம் பற்றி மட்டுமே ஓரளவுக்குத் தெரிஞ்சுக்குவேன். இப்போவும் நல்ல படங்கள் வந்தால் நல்லது தானே! அந்த வகையில் மொழி எனக்குப் பிடிச்சது. 36 வயதினிலே படம் நல்லா இருக்கும்னு சொன்னாங்க! ஆனால் அதன் ஒரிஜினல் பார்த்துட்டதாலே பார்க்கலை! :))))

      Delete
    5. தமிழ்ப்படங்களில் அந்த அந்த ஹீரோவுக்கு ஏற்பக் கதை, வசனம், உடை, போன்ற பலவற்றை மாற்ற வேண்டி இருக்கும். மலையாளத்தில் அப்படி இல்லையே! இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு நடிக்கணும். எங்க வீட்டில் என் அப்பாவே ரொம்பப் பார்க்கணும்னு எங்களைக் கூட்டிச் சென்ற படம் "செம்மீன்!" மதுரை மீனாக்ஷி தியேட்டரில் வந்ததுனு நினைக்கிறேன். ஷீலாவுக்கு விருது கிடைச்ச படம். எனக்கும் அதிலிருந்து தான் இந்த விருதுகள் குறித்த அறிவு ஏற்பட ஆரம்பித்தது.

      Delete
  11. எனக்கு படங்கள் நல்ல படங்கள் என்றால் பார்க்கப் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவதில்லை.

    குறிப்பா எனக்கு த்ரில்லர், நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் த்ரில்லர், நகைச்சுவை பிடிக்கும்.

      Delete
    2. த்ரில்லர் பிடிக்கும் என்றால் துருவங்கள் பதினாறு பாருங்கள்.

      Delete
    3. ஏற்கெனவே ஒரு கருத்து எழுதினேன். தவறுதலாக டெலீட் ஆகி விட்டது. இம்மாதிரிப் படங்களை எதில் பார்க்கலாம் என்பதே எனக்குத் தெரியாது. எப்போவானும் தொலைக்காட்சியில் போட்டால் பார்ப்பது தான். யூ ட்யூப் வழி படங்கள் பார்ப்பது என்பது இன்னும் சரியாத் தெரியலை! புரியலை! அதோடு அதே வேலையாக உட்காரவும் முடியாது.கொஞ்சம் ஓய்வு, படம் பார்க்கணும்னு ஆர்வம் இரண்டும் இருக்கணும். பெரும்பாலான நேரங்களில் அது இருக்காது. திடீர்னு நினைத்துக் கொண்டு பார்க்க ஆசைப்பட்டால் அப்போ சரியாக வரதில்லை. ஆகவே பெரும்பாலும் படங்கள் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன். முன்னெல்லாம் கேபிள் இருந்தப்போ ஹிந்திப்படங்கள் வாரம் ஒரு முறையானும் பார்ப்பேன். இப்போ அதுவும் இல்லை.

      Delete
  12. //இன்னும் வரவில்லை என்றே சொல்லலாமோ? //

    ஓரிரண்டு நல்ல படங்கள் வந்திருக்கு. வீடு, தலைமுறைகள்.

    அவ்வளவுதானா? கீசா மேடம்... இன்னும் ஒரு நூறாண்டுகள் இருந்து தூர்தர்சனில் போடும் தமிழ்ப்படங்கள் அனைத்தையும் பார்த்துட்டுச் சொல்லுங்க.

    உதிரிப்பூக்கள், 6-60 வரை, முள்ளும் மலரும், வாகைசூடவா, காஞ்சீவரம், தண்ணீர் தண்ணீர்.... போன்று பல படங்கள் இருக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. தூர்தர்ஷனில் படங்கள் இப்போப் பார்ப்பதில்லை. வட மாநிலங்களில் இருந்த வரை மெட்ரோ சானல் வரும். அப்போச் சில படங்கள், தொடர்கள் பார்த்திருக்கேன். அதிலே சரத்சந்திர சட்டர்ஜியின் "சரித்ரஹீன்" நாவலைத் தொடராக எடுத்திருந்தாங்க! என்ன அருமையான தொடர்! மறுபடி ஒளிபரப்பாகுதா என்றெல்லாம் தேடிப் பார்த்தும் ஒண்ணும் தெரியலை! பல அருமையான தொடர்கள் தூர்தர்ஷனில் வந்திருக்கு!

      Delete
  13. உதிரிப்பூக்கள் மகேந்திரன் எடுத்ததால்/இயக்கியதால் பார்க்க முடிந்தது. ஆறு முதல் அறுபது வரை கடைசியில் சினிமாவாக ஆகி விட்டது. முள்ளும்மலரும் மூலக்கதைப்படி எடுக்கவில்லை. வாகைசூட வா பார்க்கலைனு நினைக்கிறேன். காஞ்சீபுரம் நன்றாகவே இருந்தது. ப்ரகாஷ் ராஜ் தான் நடிச்சிருந்த நினைவு. தண்ணீர், தண்ணீர் முடிவு அருமை!

    ReplyDelete
  14. //ஜெமினியோ தன்னைத் தான் பெண்கள் அனைவரும் காதலிப்பதாகவும் துரத்துவதாகவும் நினைத்துக் கொண்டு இருப்பார்.//
    எனக்குத் தெரிந்தவரை ஜெமினி இதை செய்ததாக நினைவு இல்லை. எம்.ஜி.ஆரைத்தான் பெண்கள் துரத்துவார்கள். 'வட்டமிட்டாள் ஆசை வஞ்சிக்கொடி சிக்கிக்கொண்டேன் அவள் எண்ணப்படி' என்று ஒரு பாடல் கூட உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஜெமினி செய்தாரோ இல்லையோ அவரைப் பெண்கள் பலர் குறிப்பா நடிகைகள் வட்டமிட்டதாக ஒரு பேச்சு உண்டு. அதனால் சொன்னேன். மற்றபடி எம்ஜாருக்குப் பெண் ரசிகர்கள் அதிகம் என்பதும் தெரியும். வயதான பல பெண்மணிகள் அவர் மேல் பைத்தியமாக இருந்து பார்த்திருக்கேன். ஆச்சரியமான விஷயம் இது! அவர் நடிக்க எடுத்துக்கும் கருப்பொருளும் அதன் மேல் தன்னுடைய கதாபாத்திரத்தை அமைக்கும் விதமும் அப்படி அமைந்துவிடும். ஆகவே எம்ஜார் என்றால் உம்மாச்சி என எல்லோரும் நினைக்கும்படி ஆகி விட்டது. :)))))

      Delete
    2. எம்.ஜி.ஆரின் சிறப்பு அவருக்கு தனக்கு நடிக்க வராது என்னும் தன்னுடைய பலவீனத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப படங்களில் நடித்ததுதான். தவிர எம்.ஜி.ஆர். ரசிகர்களும் அவரிடம் நடிப்பை எதிர்பார்க்க மாட்டார்கள். அழகான ஹீரோயின், இனிமையான பாடல்கள், விறுவிறுப்பான கதையோட்டம் இந்த அம்சங்கள்தான் அவர் படங்களை ஓட வைத்தன.
      மேலும் தன்னைப்பற்றி உயர்வாக நினைத்துக் கொள்வது பெரும்பான்மையோரின் பழக்கம். மகான்களும் ஞானிகளும் வேண்டுமானால் தங்களை இழிவாக கூறிக் கொண்டார்கள் மற்ற சாதாரண மனிதர்கள் தங்களை உயர்வாகத்தானே நினைத்துக் கொள்கிறோம்? அதைத்தான் அவர் தொட்டார். இலக்கியமோ, நாடகமோ(சினிமாவும் நாடகத்தின் அங்கம்தானே) வாசகன், அல்லது பார்வையாளன் அதோடு தன்னை ஐடன்டிஃபை செய்து கொள்ளும் போதுதான் வெற்றி அடைகிறது. தன்னை உயர்வாக கருதும் மனிதனின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர். அதிலும் அவருடைய இலக்கு எளிய மனிதர்கள். வாழ்வின் கடை கோடியில் பலவித அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கும் எளிய மனிதன் திரையில் தன்னைப் போல் நல்லவனான ஒருவன்(அது அவன் நினைப்பு) தன்னால் நிஜ வாழ்க்கையில் எதிர்க்க முடியாத ஒருவரை கேள்வி கேட்கும் பொழுதும், சாட்டையால் விளாசும் பொழுதும் தானே அதை செய்வதைப் போல் சந்தோஷப்படுகிறான்.
      தமிழ் திரையுலகில் வெள்ளையாக, அழகாக இருக்கும் கதாநாயகர்கள் வெற்றி அடைய முடியாதாம். அதனால்தான் மேக்கப் இல்லாமலேயே அழகாக இருந்தும் கோமாளி போல் சிவப்பு பேண்ட், மஞ்சள் சட்டை எல்லாம் அணிந்து கொண்டார் போலிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப்பிறகு வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தும் ஜெயித்தவர்கள் கமல், மற்றும் அஜித்குமார்தான் என்கிறது ஒரு பத்திரிகை.

      போதும் மூச்சு முட்ட முட்ட பேசி விட்டேன். ஒரு தனி பதிவாகவே போட்டிருக்கலாம்.

      Delete
    3. பானுமதி, நானும் இதைச் சொல்ல நினைத்து வேண்டாம்னு விட்டுட்டேன். இன்னும் சில விஷயங்களும் தெரிந்தாலும் பகிர முடியாது! :)))) ஜெமினி கூடச் சிவப்பு தான் என்று கேள்வி. ஆனால் எம்ஜாரையும், ஜிவாஜியையும் நேரில் பார்த்திருக்கேன் சில முறை! ஜெமினியைப் பார்த்ததில்லை. :)))))

      Delete
  15. //மகேந்திரன் எடுத்த வீடு அதில் அடக்கம். //
    மகேந்திரன் வீடு கட்டியிருக்கலாம், வீடு படத்தை எடுத்தது பாலு மகேந்திரா. சிறந்த இயக்குனரான பாலு மகேந்திரா கூட ரெட்டை வால் குருவி, 'யாதோன் கி பாராத்' உல்ட்டா பண்ணி ஒரு படம் எடுத்தார். வியாபார நிர்பந்தம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கவனிக்கலை, பாலு மகேந்திரா அர்ச்சனாவை வைத்து எடுத்த படம் வீடு! நான் தான் தப்பாய்ச் சொல்லிட்டேன். கவனக்குறைவு! பாலு மகேந்திரா வீடு படத்தை எடுத்தார் என்பதற்காக அவர் எடுத்த எல்லாப் படங்களும் நல்லா இருந்ததுனு சொல்ல முடியாது. நீங்க சொல்லும் படங்கள் நான் பார்த்ததில்லை. ஜானி, மூன்றாம் பிறை உட்பட!

      Delete
    2. மறுபடியும் தவறு அக்கா. ஜானி படத்தை இயக்கியது மகேந்திரன். ஹா ஹா ஹா! ஜானி வித்தியாசமான படம். ஸ்ரீதேவி அதில் மிக நன்றாக நடித்திருப்பார்.

      Delete
    3. //பாலு மகேந்திரா கூட ரெட்டை வால் குருவி, 'யாதோன் கி பாராத்' உல்ட்டா பண்ணி ஒரு படம் எடுத்தார்//

      எது? ரெட்டை வால் குருவியா? எப்படி?

      Delete
    4. ஜானி படத்தை இயக்கியது யார்னு தெரியாது. பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் அதைப் பற்றிச் சொல்லி இருப்பார். ஆகவே அவர் தான் இயக்கினாரோ என நினைத்தேன். படமே பார்த்ததில்லை! அப்புறம் எப்படித் தெரியும்.ஆனால் மூன்றாம் பிறை பாலு மகேந்திரா தான் என்று நினைவு!

      Delete
  16. மகேந்திரனின் படங்களில் முள்ளும் மலரும் மட்டும்தான் எனக்கு பிடித்தது. எல்லோராலும் பெரிதும் கொண்டாடப்பட்ட உதிரிப்பூக்கள், மெட்டி போன்ற படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. நண்டு படம் படமாக்கப்பட்ட விதத்தில் சிவசங்கரிக்கூட வருத்தம் இருந்தது. "பெரிய டைரக்டர், டிஸ்கஷன் பொழுதெல்லாம் நன்றாகத்தான் செய்தார், எடுக்கும் பொழுது ஏனோ அப்படி எடுத்து விட்டார்" என்றார். மக்களை போரடிப்பது நிச்சயம் நல்ல சினிமா கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் இரண்டுமே தொலைக்காட்சி தயவு தான். மற்றப் படங்கள் பார்த்ததில்லை. சிவசங்கரியின் நண்டு படமாக வந்தது தெரியாது. கதையும் படித்த நினைவு இல்லை.

      Delete
    2. மகேந்திரன் படங்களில் முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள்... நல்ல படங்கள். அவர் கதையில் தங்கப்பதக்கம்.

      யாரையாவது உங்களுக்குத் பிடிக்கவில்லை அவரைப் பழி வாங்கவேண்டும் என்றால் மகேந்திரனின் பூட்டாத பூட்டுகள் படத்தைப் பார்க்க விடுங்கள்!

      Delete
    3. அப்படி வேறே ஒரு படம் எடுத்திருக்காரா மகேந்திரன்? தெரியாது! :)))) ஹிஹிஹி, நான் சினிமா விஷயத்தில் பூஜ்யம்னு சொல்லியும் கேட்காமல் நீங்கல்லாம் என்னை சினிமா பத்தி அறிவு ஜாஸ்தினு சொன்னதில் இப்படித் தான் அ.வ.சி. க்கும்படி ஆயிடுது! :))))))

      Delete
  17. //ஆனால் அந்த நடிகருக்கே நமஸ்காரம் செய்யும் அளவுக்குப் போயிடாதீங்க!//
    கவலைப்படாதீர்கள் நம் பதிவர்கள் அந்த அளவு மோசம் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. இது பதிவர்களை மட்டும் வைத்து எழுதலை. பொதுவான சினிமா ரசிகர்களை மட்டும் வைத்து எழுதியது. இன்றைய தொலைக்காட்சிச் செய்திகள் மனதைக் கவலை கொள்ளவே செய்கின்றன. ரஜினி படம் வெளியான தியேட்டரில் திருமணம், அதுவும் ஆறு தியேட்டர்களில் ஆறு ஜோடிகள் திருமணமாம். அஜித் பட கட் அவுட் கீழே விழுந்து காயம், தியேட்டர் திரையைக் கிழிக்கும் அஜித் ரசிகர்கள்! இந்த அளவுக்கு ஒரு நடிகர் மேல் பைத்தியமாக இருக்கவும் முடியுமா? அதான் கவலை அளிக்கிறது. இதனால் ஜன்மம் சாபல்யம் அடைந்து விடும் என நினைக்கிறாங்க போல! :(

      Delete
    2. //ரஜினி படம் வெளியான தியேட்டரில் திருமணம், அதுவும் ஆறு தியேட்டர்களில் ஆறு ஜோடிகள் திருமணமாம். //
      எனக்கும் கூட இந்த செய்திகளை கேள்விப்பட்டு மனதிற்கு சங்கடமாகத்தான் இருந்தது. அமெரிக்காவிலேயே ரஜினிக்கு கட் அவுட் வைக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட பொழுதும் வருத்தமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

      Delete
    3. ஆமாம், அம்பேரிக்காவில் "ஜிவாஜி" படம் வெளியானப்போ எங்க பொண்ணு எங்களை வற்புறுத்தி அனுப்பி வைச்சா! அங்கே தியேட்டரில் நம்ம ஊர்க்காரங்க ரஜினி பெயர் வரும்போதே விசில், கை தட்டல், தலைவா, தலைவானு கூச்சல்! இருப்பது தமிழ்நாடோனு சந்தேகம் வந்தது. குழந்தைகள் எல்லாம் ரஜினி டான்ஸ் ஆடும்போது எழுந்து நின்று கூடவே ஆடுகின்றனர்! :(

      Delete
  18. நல்ல சினிமாக்கள் அப்போதும் வந்தன, பின்னாலும் வரும், இப்போதும் வந்து கொண்டுதான் இருக்கின்றன, அவற்றை நாம் பார்க்காமல் நல்ல சினிமாக்களே வருவதில்லை என்பது சரியா?

    ReplyDelete
    Replies
    1. நல்ல சினிமா குறித்த என்னோட பார்வைக்கும் உங்களோட பார்வைக்கும் வித்தியாசம் இருக்கலாம். இப்போதும் வரலாம். ஆனால் பொதுவாகத் திரைப்படங்களில் ஆடம்பரக் காட்சிகள், சற்றும் ஒத்துக்க முடியாத காட்சிகளே நிறைந்து இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை! இப்போதைய திரைப்படங்களைப் பற்றிய என் அறிவு ரொம்பக் கம்மி! பார்ப்பதும் இல்லை. விமரிசனங்களைப் படிப்பதும் இல்லை. தொலைக்காட்சியில் ஆங்காங்கே விளம்பர இடைவேளைகளில் காட்டும் காட்சிகளைப் பார்ப்பதோடு சரி! ஆகவே பார்க்காமல் சொல்லக் கூடாது என்பது சரியே!

      Delete
    2. //ஆகவே பார்க்காமல் சொல்லக் கூடாது என்பது சரியே!//
      திறந்த மனதோடு ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி அக்கா. சில பேருக்கு மாற்றுக்கருத்துக்களை ஒப்புக்கொள்ள முடிவதில்லை.

      Delete
    3. நான் படம் பார்த்தே பல மாதங்கள் ஆகின்றன. அம்பேரிக்காவில் இருக்கையில் பார்த்த ஒரு சில படங்கள் தான். அதுக்கு விமரிசனமும் உடனுக்குடனே எழுதிட்டேன். மற்றபடி இதில் திறந்த மனமெல்லாம் இல்லை. பார்க்கிறதே இல்லைங்கறச்சே அதை ஒத்துக்காம எப்படி? பாராட்டுக்கு அர்த்தமே இல்லை! ))))))

      Delete
  19. ஞானராஜசேகரன் எடுத்தது தான் "மோக முள்" படமும். பாரதி பற்றிய படமும். பாரதி படம் பரவாயில்லை ரகம். ஆனால் மோகமுள்! கதையின் ஜீவனே இல்லை! வெகு சாதாரணப் படம்! கதையை அவர் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை! ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் உள்ள கதாநாயகன்! அதைச் சரிவரக் கையாளவில்லை!

    ReplyDelete
    Replies
    1. மோகமுள் படம் எனக்கு பிடிக்கவில்ல. பாரதி, பெரியார் இரண்டும் பிடித்தன. ராமானுஜம் கூட நன்றாக இருந்ததாக சொன்னார்கள். என்னால் பார்க்க முடியவில்லை. அது யூ டியூபிலும் இல்லை, சி.டி யும் வெளியாகவில்லை.

      Delete
    2. பானுமதி, ராமானுஜம் படத்தில் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து இருக்கும் காட்சிகளை எல்லாம் தமிழ்த்திரைப்படக் காதல் காட்சிகளைப் போல் எடுத்துட்டாங்க! :( ஒரு சில பார்த்ததை வைச்சுத் தான் சொல்றேன். முழுப்படமும் பார்க்கலை! அப்படி ஒன்றும் பெயர் வாங்கலை! பெரியார் படம் நான் பார்த்ததில்லை. பாரதி பல முறை பார்த்தாச்சு! மோகமுள் 2 முறை பார்த்தேன். (தூர்தர்ஷனில் தான்)

      Delete
  20. சிவாஜியா, எம் ஜி ஆரா ஜெமினியா என்கிற இந்த விவாதம் சரியாக அல்லது முழுமையாக நடைபெறவில்லை என்று தோன்றுகிறது! நான் இன்னும் அதிகம்ல எதிர்பார்த்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நான் இன்னும் விரிவாக அலசிட்டுப் பின்னர் பல பகுதிகளை எடிட் செய்தேன். அதோடு இதுக்கே இத்தனை பேசி இருக்கோமே அது போதாதா என்ன?

      Delete
  21. தியேட்டருக்கு படம் பார்க்க போவதை நிறுத்தி பலவருடம் ஆச்சு.
    நல்லபடம் என்றால் தொலைக்காட்சியில் பார்ப்பேன்.
    அந்தக்காலத்தில் பொழுது போக்கு என்றால் சினிமாதான். இப்போது தியேட்டருக்கு சினிமா பார்க்க போகாத காரணத்தால் தியேட்டர் எல்லாம் மூடும்படி ஆச்சு.

    கதையாக படித்ததை சினிமாவாக பார்த்தால் சரியாக எடுக்கவில்லை என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும்.
    மக்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி விட்டோம் என்பார்கள்.

    வசந்தமாளிகையில் கடைசி காட்சி கேரளாவில் ஒரு முடிவு, தமிழ் நாட்டுக்கு ஒரு முடிவு என்றார்கள்.சிவாஜி இறந்துவிடுவது போள் கேரளாவில், தமிழ்நாட்டில் கடைசி நிமிடத்தில் பிழைத்துக் கொள்வார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உடல் நலம் தேவலையா? கணுக்கால் வலி தேவலையா? ஜலதோஷம், ஜூரம் என்றால் நான் தூதுவளை, துளசியோடு, கிடைத்தால் ஆடாதொடை இலைகளையும் போட்டு சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் பொடி செய்து போட்டுக் கஷாயம் வைத்துச் சாப்பிடுவேன்/வோம். இப்போப்பையர் வந்திருக்கும்போது தினம் தினம் அது தான்! முந்தாநாள் தான் முடிச்சேன். ஆடாதொடை கொஞ்சம் கசக்கும். இல்லை எனில் வெறும் தூதுவளை மட்டும் துவையலோ, ரசமோ வைச்சுச் சாப்பிடலாம். தூதுவளை தூது போன ஆழ்வார் பத்திப் படிச்சிருப்பீங்க தானே! ம்ம்ம்ம்ம்? ஆழ்வார் தானே? நாயன்மார் இல்லையே? :))))))

      Delete
    2. சினிமா பத்திச் சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். வசந்த மாளிகையை நான் ப்ரேம்நகராகப் பார்த்து விட்டதால் தமிழில் அவ்வளவு பிடிக்கலை! :))) மலையாளத்தில்/கேரளத்தில் வெளியிட்டது தமிழ்மொழிப்படமா? மலையாளப்படமா? தெரியாது! கிட்டத்தட்ட தேவதாஸ் கதை தான் கொஞ்சம் உல்டா செய்திருக்காங்கனு தோணும். அதே தான் ஹிந்தி கிலோனாவும். தமிழில் ஜிவாஜி/ஜெயலலிதா நடிச்சு வந்ததோ?

      Delete
  22. காலையில் படித்தேன்.... ஏனோ இந்த சினிமா மோகம் பலருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், விரிவாக எதிர்பார்த்தேன். :)

      Delete
  23. திடு திடு.. என்றொரு பதிவு..
    திரும்பிப் பார்ப்பதற்குள் இன்னொன்று...

    அப்படியானால்
    நல்ல கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் ( எம்ஜிஆரைத் தவிர்த்து) மற்றவர்கள் நடிக்கவே இல்லையா!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, பதிவு அடுத்தடுத்துப் போட்டால் படிப்பவர்களுக்கும் சிரமம், கருத்தும் சொல்ல முடியாது என்பதை அறிவேன். ஆனால் ஒரு காலத்தில் அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் எல்லாம் எழுதி இருக்கேன். :))))) இப்போவானும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கறேனே! அதே பெரிசு! நல்ல கதையம்சங்கள் கொண்ட பல படங்களில் பல நடிகர்கள் நடிச்சிருக்காங்க தான்! அவற்றில் சிலவற்றையானும் பார்த்திருப்பேன். அந்த வகையில் முத்துராமன், ஜெயலலிதா நடிச்ச "சூரியகாந்தி" படம் ஒன்று. ஜிவாஜி பெரும்பாலும் குடும்பக் கதைகளில் நடிச்சிருந்தாலும் எப்போவும் கஷ்டப்படும் நெகடிவ் குணாதிசயங்கள் கொண்ட கதாநாயகராகவே நடிப்பார். எல்லாப் படங்களிலும் கஷ்டப்படுவார். அதே எம்ஜாரைப் பார்த்தால் கதையை அவருக்கு ஏற்றாற்போல் மாற்றி விடுவார். ரிக்ஷாக்காரனாக நடிப்பார். ஆனால் எம்.ஏ. படிச்சிருப்பார். கூலி வேலைக்குப் போவார். ஆனால் எஞ்சினியரிங் படிச்சிருப்பார். இஃகி,இஃகி! என்னத்தைச் சொல்றது! ஜெமினி நேர்மாறாக அநேகப்படங்களில் 2 கதாநாயகிகளிடம் மாட்டிக்கொண்டு விழிப்பார். இவங்களைத் தவிர்த்துட்டுப் பார்த்தால் மற்ற நடிகர்கள் நடித்த ஒரு சில நல்ல படங்கள் உண்டு தான்.

      Delete