எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 01, 2019

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்?

கொஞ்சம்வேலைகள், கொஞ்சம் உடல் நலக்குறைவு, கொஞ்சம் அலுப்பு, சலிப்பு! ஆகவே என்னை நானே உசுப்பேத்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இது முன்னால் யாரோ தொடர் பதிவுக்கு அழைத்து (ஶ்ரீராம்?) அப்போல்லாம் தினமும் என்னோட பதிவுகளுக்கு வந்திருப்பார். கௌதமன் சார் கூட வந்து கருத்தெல்லாம் சொல்லுவார். அது ஒரு காலம். அந்தக் காலத்திலே யாரோ கணினி கற்ற அனுபவங்கள் குறித்த தொடர் பதிவுக்கு என்னை அழைக்க நானும் எழுதினேன். கீழ்க்கண்டவை தான். அதிலே ஸ்ரீராம் ஆப்பீச்சில் கணினி கற்றுக் கொண்டதாக எழுதி இருந்தாரோ? நினைவில் இல்லை. ஆனால் அதிலே தான் ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் 2,3 பதிவுகள் வரும். கொஞ்சம் சிரிக்கலாம், கொஞ்சம் ரசிக்கலாம். எனக்கு ஓர் புத்துணர்வு கொடுக்கலாம். கீழே ஆரம்பிக்கிறது பதிவு. இதிலே கூச்ச சுபாவம் பத்தி அடிக்கடி வரும். அது ஏன் என்றால் ஶ்ரீராம் தன்னோட கூச்ச சுபாவம் பத்தி அவரோட பதிவிலே குறிப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன். நாம தான் நம்ம வழக்கப்படி எல்லாத்தையும் மாத்துவோமே! அதான் எனக்குக் கூச்ச சுபாவமெல்லாம் இல்லைனு அடிக்கடி சொல்லி இருப்பேன். இந்தக் குறிப்புப் பதிவை ஏற்கெனவே படிக்காதவர்களுக்காக. கோமதி அரசு, ஶ்ரீராம், டிடி, வெங்கட், ரேவதி, ஆதி, கௌதமன் ஆகியோர் ஏற்கெனவே படிச்சுக் கருத்தும் சொல்லி இருப்பதால் அவங்கல்லாம் ஆட்டத்தில் இல்லை. 



இப்போ நான் ஶ்ரீராம் மாதிரி ஆப்பீச்ச்சுக்கெல்லாம் போகலை.   ஒரு காலத்தில் போனேன். அதுவும் டைபிஸ்டாத் தான் சேர்ந்தேன். தட்டச்சும் வேகம் அப்போவெல்லாம் இன்னும் அதிகம்.  அப்புறமா வாழ்க்கைப் பயணத்தில் எப்படியெல்லாமோ பயணம் செய்யும்படி ஆச்சு. ஆனாலும் டைபிங்கோ, சுருக்கெழுத்தோ மறக்கலை.  இப்போக் கூட எந்த ஆங்கில வார்த்தையைப் பார்த்தாலும் உடனே சுருக்கெழுத்தில் மானசீகமா எழுதிப் பார்த்துடுவேன். எனக்குக் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லை. ஶ்ரீராமுக்கு நேர் எதிரிடை! :)))) அப்படி இருந்தும்,   பாருங்க, கணினி மட்டும் யாரும் கத்துக்கொடுக்கலைனு தான் சொல்லணும்.  எண்பதுகளில் சூப்பர் கம்ப்யூட்டர் வந்தப்போ வாயைப் பிளந்துட்டு பார்த்ததோடு சரி.  இதெல்லாம் நம்மாலே எப்படினு ஒரு எண்ணம் அப்போல்லாம்.



குழந்தைங்க எல்லாம் காலேஜ் போக ஆரம்பிச்ச சமயம் பொண்ணு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்னு ஒரு கோர்ஸ் படிச்சா.  எங்க வீட்டிலே முதல்லே கணினியைத் தொட்டது அவ தான். அப்போ பெர்சனல் கம்ப்யூட்டர் எல்லாம் இத்தனை கிடையாது.  அவ சொல்றச்சே கேட்டுப்பேன். நான் கத்துக்க முடியுமானு நினைச்சுப்பேன்.  நமக்கெல்லாம் எங்கே கம்ப்யூட்டரைப் பார்க்கக் கூட முடியுமானு நினைச்சுப்பேன்.  அப்புறமாப் பையர் ஒரு தரம் காலேஜ் லீவிலே சென்னை வந்திருந்தப்போ ஆப்டெக்கில் போய்க் கணினி கோர்ஸ் முடிச்சார். அவர் பண்ணிட்டு இருந்தது மெகானிகல் இஞ்சினியரிங்.  ஆகவே தனியாத் தான் படிச்சார்.


அப்புறமா அவர் பரோடாவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அங்கிருந்து ஒரு தரம் லீவுக்கு வந்திருந்தப்போ விளையாட்டா என்னைச் சும்மாத்தானே இருக்கே! கம்ப்யூட்டர் கத்துக்கோயேன் அப்படினு சொன்னார். பெண்ணுக்கு அப்போத் தான் கல்யாணம் ஆகி இருந்தது.  தொலைபேசி இணைப்பே பொண்ணு கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அப்புறமாத் தான் எங்க வீட்டுக்கு இணைப்புக் கொடுத்தோம்.   அது தனிக்கதை, இன்னொரு நாள் வைச்சுக்கலாம். அப்போ அவ ஒரு தரம் பேச்சு வாக்கிலே உனக்கு மெயில் ஐடி இருந்தால் ஏதானும் முக்கியமானதுனு இருந்தாக் கொடுக்கலாம்.  நீ உடனே ப்ரவுசிங் சென்டர்லே போய்ப் பார்க்கலாம்.  இப்போ நான் லெட்டர் எழுதி உனக்கு வரப் பதினைந்து இருபது நாட்கள் ஆயிடுதுனு சொன்னா.


அதோட இல்லாமல்   என்னோட சிநேகிதி ஒருத்தி அப்போ கணினி கத்துட்டு மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் பண்ணிட்டு இருந்தா.  அதுக்கு ஆங்கில அறிவும், தட்டச்சும் தெரிந்தால் போதும்னு சொன்னாங்க.  நமக்கு இருக்கிற ஆங்கில அறிவு போதாதானு நானே முடிவு பண்ணிக் கொண்டு நமக்குத் தட்டச்சத் தெரியும். ஆகவே இந்த கோர்ஸ் பண்ணினால் வசதினு தோணிச்சு.எனக்குக் கூச்ச சுபாவமே இல்லையா, உடனேயே   ரங்க்ஸ் கிட்டே என்னோட ஆசையை வெளியிட்டேன்.  இப்போ இருக்கிற பணத் தேவைக்கு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்னு அல்நாஷர் கனவுகள்.  அப்படியே நிறைய க்ளையன்ட் கிடைச்சு, எல்லார் கிட்டேயும் இப்போ முடியாது; இன்னும் இரண்டு நாள் பொறுங்க.  உங்களுக்கு முன்னால் கொடுத்தவங்களுக்கு முடிச்சுட்டுத் தான் உங்களோடதுனு மானசீகமாப் பேசி எல்லாம் பார்த்துண்டேன்.  வீட்டிலேயும் எப்போவும் என்னைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம் வராப்போல் எல்லாம் கனவுகள்!  கத்துண்டால் மட்டும் போதுமா?   கணினி வீட்டிலே சொந்தமா இருக்கணும்.  அப்போத் தான் இதிலே கொஞ்சமானும் சாத்தியம் ஆனால் எனக்குத் தான் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லையே!  அதனாலே எனக்குத் தோணினபடி எல்லாம் கற்பனையில் மிதந்தேன்.

ஆனால் பாருங்க, இந்த அழகான, அற்புதமான கற்பனைகளுக்கு, அநியாயமா செக் வைச்சது நம்ம ரங்க்ஸ் தான். இதுக்குச் சொந்தமாக் கணினி வாங்கணும்.  நம்மால வாங்க முடியுமா? முதல் கேள்வி! கணினியோட விலையெல்லாம் அப்போ நினைச்சுப் பார்க்கிற லெவலில் இல்லை.  அது இருந்தால் பொண்ணோட முதல் பிரசவத்துக்கு அமெரிக்கா போயிடலாமே! சரியான இடத்தில் கொக்கி போட்டார் ரங்க்ஸ்!

உன்னாலே தினம் தினம் அண்ணாநகர் போய்ட்டு வர முடியுமா? இரண்டாவது கேள்வி!  மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் கோர்ஸ் அப்போ அண்ணாநகரில் தான் நடத்தினாங்க.  தினம் மதியம் போயிட்டு வரணும்.  அப்போ  குடும்பக் கவலைகள்னு சொல்ல முடியாட்டியும் பொறுப்புகள் இருந்தன. ஆகவே கணினி கோர்ஸுக்கான கட்டணம், அம்பத்தூரில் இருந்து அண்ணாநகருக்கு தினம் போயிட்டு வரக்கூடிய செலவுனு யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.  மூணாவது கேள்வியைப் போட வேண்டிய அவசியமே ரங்க்ஸுக்கு ஏற்படலை! :))))


நம்ம ரங்க்ஸ் எதையும் தன் வாயால் வேண்டாம்னு சொல்லவே மாட்டார்.  இதை எல்லாம் எடுத்துச் சொல்லி, "நீ புத்திசாலி! யோசிச்சுக்கோ!" அப்படினு சொல்லிடுவார்.   நாமளே வேண்டாம், விடுங்கனு சொல்றாப்போல ஆயிடும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒரு  ஐஸ்னு புரிஞ்சுக்கவே பல வருஷங்கள் ஆயிடுச்சு! மரமண்டை தானே!   :P :P :P ஆகவே ஆவலை அடக்கிக் கொண்டு விட்டேன்.  கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆசை என்னமோ மனசில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு தான் இருந்தது.   அதுவரை கணினியைப் பார்த்ததில்லை.   உங்களை எல்லாம் நான் இப்படிப் படுத்தணும்னு விதி இருக்கிறச்சேச் சும்மா விடுமா! பையர் உசுப்பேத்தி விடவே, நானும் பிடிவாதம் பிடிச்சேன்.  அதோட பாருங்க, எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லையே! :))))

ஒரு நாள் காலை தினசரியோட வந்த விளம்பர அறிவிப்புகளில் ஒண்ணு அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இல்லத்தரசிகள்,படிச்சுட்டுச் சும்மா இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கணினி அறிவு கற்றுக் கொடுக்கப்படும்னு சொல்லி 20 மணி நேரம் கத்துக்கறவங்களுக்கு அதே 20 மணி நேரம் இலவசமாய் ப்ரவுசிங் செய்துக்கலாம்னு சொல்லி இருந்தாங்க. அடிச்சது நல்லதொரு வாய்ப்பு, விடுவேனா!  ரங்க்ஸ் ஆப்பீச்சு போறச்சே அவரோட வண்டியிலே தொத்திக்கொண்டேன்.  அவருக்கு என்னமோ இஷ்டமில்லை தான்.  உன்னாலே எல்லாம் முடியாதுனு புலம்பிட்டே வந்தார்.  என் கிட்டே கெட்ட பழக்கம் என்னன்னா, யாரானும் உன்னால முடியாது இதுனு சொல்லிட்டாப் போதும் ;  அதைச் செய்தே காட்டணும்னு ஒரு வீராப்பு வரும்.  அப்படி ஒரு சமயம் இப்போ, விடாதேனு ம/சா. அடிச்சுச் சொல்லவே அதன் குரலுக்குக் கீழ்ப்படிந்தேன்.


எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ, அப்படி! :))))))

ஹிஹிஹி, தாங்க்ஸ் ஶ்ரீராம், கூச்ச சுபாவம் பயனுக்கு!

136 comments:

  1. ஹை :) நான் தான் firstttttttt

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின், வடை/ சே, இன்னிக்கு அடை பண்ணப் போறேன். அடை உங்களுக்குத் தான்! :))))

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அஞ்சு...

      Delete
    3. haahaa :) thankssss :)

      Delete
    4. பாசிடிவ்வா திங் பண்ணுங்க கீதா சாம்பசிவம் மேடம்...... அடை நல்லாவே வரும். நீங்களும் மாமாவும் சாப்பிடலாம். பண்ணறதுக்கு முன்னாலேயே அவநம்பிக்கையோட, அடுத்தவங்க தலைல கட்டக்கூடாது.

      Delete
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி! நேத்திக்கு அடை சாப்பிட்டோமே!

      Delete
    6. நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சின்ன வெங்காயம் போட்டு அடை! மொறுமொறுவென! தொட்டுக்க எனக்குப் பிடிச்ச எலுமிச்சை ரசம்! நெய் விட்டுக்கொண்டு சாப்பிட்டேன். ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!

      Delete
    7. ஏஞ்சல், உங்களுக்கு உண்டு.

      Delete
  2. / கொஞ்சம்வேலைகள், கொஞ்சம் உடல் நலக்குறைவு, கொஞ்சம் அலுப்பு, சலிப்பு! ஆகவே என்னை நானே உசுப்பேத்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.//

    உண்மைதான்க்கா ..எப்போலாம் இப்படி டயர்ட் வருதோ உடனே நாமே நம்மை refresh செஞ்சி உசுப்பனும் இல்லைனா அப்படியே விழுந்திடுவோம் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அஞ்சு, என்னோட கல்யாணப்பதிவுகளை மின்னூலாக்க வேண்டித் தொகுத்துக் கொண்டிருக்கும்போது இவை கண்களில் பட்டன. சரினு கொஞ்சம் மாறுதலாகவும் எல்லோருக்கும் ஆறுதலாகவும் டென்ஷன் ஃப்ரீயாகவும் இருக்கட்டும் எனப் போட்டேன்.

      Delete
    2. கீதாக்கா சொல்லி இருக்கும் இந்த விஷயங்கள் எனக்குமே பொருந்துகிறது... நான் எப்போ எழுவேன், எப்படி எழுவேன்னு தெரியாது.... ஆனா எழவேண்டிய நேரத்தில்...

      ஹா... ஹா... ஹா...

      Delete
    3. ஆனா எழவேண்டிய நேரத்தில்... கரெக்டா தூங்கிடுவேன் (ன்னு சொல்லவந்தீங்களா?)

      Delete
    4. ஹாஹாஹா, ஶ்ரீராம், எழ வேண்டிய நேரத்தில் கட்டாயமாய் எழுந்துக்கணும். பலமுறை எழுந்தாச்சு! :))))

      Delete
    5. நெல்லை, உங்க பழக்கம் எல்லோருக்கும் இருக்கும்னு நினைச்சா எப்பூடி????

      Delete
  3. பதிவு இன்னும் முழுசா படிக்கலை ஓரு ஆர்வக்கோளாறில் நுழைஞ்சிட்டேன் ..இப்போ இவர் மகளை ஸ்கூலில் விட்டுட்டு வருவார்
    சேட்டன் கடைக்கு போய் வா.தா ,நம்மூர் வெண்டை .கூர கிழங்குலாம் வாங்கிட்டு வரணும் ..கொஞ்சம் லேட்டானா எல்லாம் காலியாகிடும் ஓடிபோய்ட்டு வரீஈஈஈன்

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க ஏஞ்சல். அவசரம் ஒண்ணும் இல்லை.

      Delete
  4. உடாதீங்க அம்மா... இப்படியே அடிச்சி தூக்கணும்... நான் இப்ப ஆட்டதுக்கு வர்றேன்...

    சொந்த பதிவு வாரத்திற்கு இரண்டோ,மூணோ... அதனாலே எங்கள்ஸ் blog குரூப்பை மட்டும் நினைக்காம இருந்தா வெற்றி நிச்சயம்... (ஸ்ரீராம் சார் மைண்ட் வாய்ஸ் : DD எனிந்த கொலைவெறி) ஹா... ஹா...

    அப்பாடா... இப்போ நிம்மதி...!

    டிஸ்கி : எங்கள் blog-ல் கிளை பற்றி மூத்த பதிவர் ஒருவர் கருத்துரை எழுதி இருந்தார்... அதன் பாதிப்பே இந்த கருத்துரை...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, டிடி, செம ஃபார்மில் இருக்கீங்க போல! எங்கள் ப்ளாகுக்குக் கிளையா? யாரு, எப்போ, எங்கே, ஏன், எதுக்கு, எப்படிச் சொன்னார்? :))))

      Delete
    2. http://engalblog.blogspot.com/2019/02/blog-post_28.html

      Check comments @ 1.00 PM onwards...

      Delete
    3. ரொம்பப் பிரச்சனை எல்லாம் மண்டையில் ஏத்திக்காம இருந்தா டென்ஷன் இல்லை. நாம் படிப்பவற்றுக்கு நமக்குத் பிடித்த மாதிரி, நம் மனசுக்கு ஏற்றமாதிரி அர்த்தம் எடுத்துக் கொள்வதில் தப்பே இல்லை. மரமோ, கிளையோ... பறவைகள் கும்பலாக சந்தோஷமாக சிறகடித்துப் பறந்தால் மகிழ்ச்சி.

      Delete
    4. // சொந்த பதிவு வாரத்திற்கு இரண்டோ,மூணோ... //

      ஹா... ஹா... ஹா... DD...!

      இதில் ஏதாவது தவறோ பிரச்சனையோ இருக்கா என்ன! அல்லது இதற்கு ஏதும் விதி உண்டா?!!!!


      //அதனாலே எங்கள்ஸ் blog குரூப்பை மட்டும் நினைக்காம இருந்தா வெற்றி நிச்சயம்...//

      இதில் என்ன போட்டி DD? வெற்றி, தோல்வி எல்லாம் பெரிய வார்த்தை... கீதா அக்கா அப்படி நினைக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

      //அப்பாடா... இப்போ நிம்மதி...!//

      ஹா... ஹா... ஹா... மனபாரம் நீங்கி விட்டது!

      Delete
    5. டிடி அண்ட் ஸ்ரீராம்....நேற்று கொடுக்க நினைத்து வேண்டாம் என்று பின்வாங்கினேன்.

      ஏஞ்சல் மிக மிக அழகான ஒரு கருத்து போட்டுருந்தாங்க ரொம்ப நாள் முன்னாடி.எபில..மீக்கு அது எந்தப் பதிவு எந்த நாள் என்றெல்லாம் நினைவு இருக்காது. ஒன்லி அந்த நல்ல கருத்து மட்டுமே...

      எபி நம்ம வீடு மாதிரி. எல்லாரும் அவங்கவங்க ரூம்ல இருப்பாங்க...ஆனா பொதுனு வரும் போது வந்து முற்றத்துல வந்து பேசி கருத்து சொல்லி, கலாய்த்து கும்மி அடித்து போவது போல என்று..

      நான் அந்தக் கருத்தை மிகவும் ரசித்தேன். எபியில் கூடுவது அப்படித்தான் சந்தோஷமா...ஒரு நட்பு வட்டம்.

      அப்புறம் எபி என்னைப் பொருத்தவரை கே வா போ, திங்க பதிவு இரண்டுமே அவர்கள் எல்லோரையும் ஊக்குவிக்கும் ஒரு விஷயமாகத்தான் பார்க்கிறோம். எல்லோராலும் பத்திரிகைக்கு எழுதி அது பிரசுரமாகிவிடுவதில்லையே. இப்படி எபியில் வாசகர்வட்டமும் இருப்பதால் அங்கு அவர்கள் ஊக்குவித்து இப்படி வரவேற்று போடுவது நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறோம்...

      கீதா

      Delete
    6. டிடி, போய்ப் பார்த்தேன். :))))

      ஶ்ரீராம், ரொம்பப் பிரச்னைகளை எல்லாம் ஏத்திக்கிறதே இல்லை. ஏற்கெனவே பிரச்னைகளாலே நிரம்பி வழியறச்சே இன்னும் என்றால் எங்கே போவது? இஃகி, இஃகி!

      Delete
    7. பொதுவாகவே இந்தப் போட்டி சமாசாரங்களில் நான் பங்கெடுக்க ரொம்ப யோசிப்பேன். பல போட்டிகள் ஜெயிக்கலாம்னு தோன்றினாலும் கலந்துக்காமல் ஒதுங்கியே இருந்திருக்கேன். வைகோ தான் ரொம்ப வற்புறுத்தி, மெயில் மூலம், தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். கலந்து கொண்டேன். மற்றபடி நான் பதிவுகள் எழுதும் யாருடனும் போட்டிக்கு வரலைப்பா! விடுங்க ஆளை! ஜூட்! :)))))

      Delete
    8. இதை நான் முதல் பதிவாக எழுதும்போது வந்ததை விட இப்போ அதிகம் ஆட்கள் வந்து பயங்கரக்கும்மி அடிச்சிருக்காங்க. உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்பதே நிஜம்.:))))

      Delete
    9. கும்மி என்பது வேற அம்மா... அவை எப்படி இருக்க வேண்டும் என்றால் :-

      வலைத்தளம் என்பதற்கு உரிய, கருத்துக்கள் சொல்வதற்கு ஏற்ற ஒரு மாண்பு இருக்கிறது... இட்ட பதிவிற்கேற்ப கருத்துரைகள் வந்தால் நலம்... அதை தொடர்ந்து மறுமொழி வந்தால் சுவாரசியம் அதிகம்... அதுவே நல்லதொரு "கும்மி"

      ஆனால், முதல் 20 கருத்துரையை எங்கள் blog-ல் scroll செய்ய வேண்டும்... (ஏதேனும் எங்கள் blog-ல் ஒரு பழைய பதிவை மறுபடியும் நாம் இட்ட கருத்துரைகளை தேடி பாருங்கள்... புரியும்...!)

      உங்களுக்கு புரிய மாதிரி சொன்னால், ஜீவி ஐயா அவர்கள், நான் குறிப்பிட்ட பதிவில் சொன்னது தான் :-

      // வர வர எங்கள் ப்ளாக் வாட்ஸ்ஆப் க்ரூப் மாதிரி ஆகிவிட்டது.//

      Delete
    10. ம்ம்ம்ம், புரிகிறது டிடி. :))))

      Delete
  5. உங்களுக்கு கூச்ச சுபாவம் என்று யாரோ சொல்லி உசுப்பேத்தி இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை ஐயா. கணினி கற்றது குறித்த பதிவு ஶ்ரீராம் எழுதினதில் எனக்குக் கூச்ச சுபாவம் என அடிக்கடி குறிப்பிட்டிருப்பார். அதைக் கேலி செய்ய வேண்டி நானாக இப்படிச் சேர்த்து எழுதினேன். :))))

      Delete
    2. எனக்கே நான் எழுதிய அந்தப் பதிவைத் தேடிப்படிக்கணும்னு ஆர்வம் வந்துவிட்டது அக்கா!

      கூச்சமே இல்லாமல் சொல்றேன் இல்லை?!!!

      Delete
    3. http://engalblog.blogspot.com/2013/07/blog-post_23.html

      இதோ இங்கே உங்கள் பதிவு! பாருங்க ஶ்ரீராம். ரொம்பக் கூச்ச சுபாவத்தோடு எழுதிய பதிவாக்கும்! :))))

      Delete
    4. http://engalblog.blogspot.com/2013/07/2.html

      http://venkatnagaraj.blogspot.com/2013/07/blog-post_29.html நீங்கள் அழைத்தவர்களில் ஒருவர்

      http://engalblog.blogspot.com/2012/05/blog-post_08.html உங்களோட முதல் பதிவிலே வந்த கேள்வியின் நாயகர் பத்தி நீங்க எழுதின பதிவு!

      Delete
  6. //அப்படியே நிறைய க்ளையன்ட் கிடைச்சு, எல்லார் கிட்டேயும் இப்போ முடியாது; இன்னும் இரண்டு நாள் பொறுங்க. // - இந்தப் பத்தி ரொம்ப நல்லா வந்திருக்கு. ரசிக்கும்படி நகைச்சுவையோட எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க நெ.த. அல்நாஷர் கனவாப் போச்சு எல்லாம்! அப்புறமாயும் என்னால் மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் கத்துக்கவே முடியலை! :)))) பிழைத்தார்கள் வாடிக்கையாளர்கள்!

      Delete
  7. //தட்டச்சும் வேகம் அப்போவெல்லாம் இன்னும் அதிகம். // - நான் ஒரு காலத்தில் சுருக்கெழுத்து கத்துக்க ஆரம்பிச்சு விட்டுட்டேன். (அதுக்கு கொஞ்ச ஜாஸ்தி அறிவு வேணும்னு தோணினதால). தட்டச்சு வேகம் - என்னைவிடவா (என்று நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்... ஒரு தடவை தாய்வான் கம்ப்யூட்டர் எக்ஸிபிஷனில் என்னைவிட வேகமா தட்டச்சு செய்யறவனைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நாம கற்காதது பாக்கி இல்லை. சுருக்கெழுத்தும் செம வேகம்! அதைத் திரும்ப எழுதுவதிலும் வேகம் காட்டுவேன். அதெல்லாம் ஒரு காலம்!

      Delete
    2. நானும் தட்டச்சு கத்துக்கிட்டேன். முதல் வகுப்பில்தான் பாஸ் செய்தேன். ஆனால் கீதா அக்கா கூட எல்லாம் போட்டி போடமுடியாது!

      Delete
    3. அவங்க டைப் பண்ணி நான் பார்த்ததில்லை. நான் ஒரு காலத்துல வேகமா தட்டச்சு பண்ணறதுல ஒரு வெறுயோட இருந்தேன். ஹை ஸ்பீட் டெஸ்டுக்கு தயார் பண்ணிக்கிட்டிருந்தேன். ஆனா தட்டச்சு கத்துக்கிட்டது வேஸ்ட் என்று நினைத்தேன் அப்போ. ஆனால் மனசு நினைக்க நினைக்க ப்ரோக்ராம் வேக வேகமா தட்டச்சு செய்து ஒரு இரவில் 4000 வரிகள் கொண்ட ப்ரோக்ராம்லாம் சுலபமா எழுதிடுவேன்.

      Delete
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஶ்ரீராம், இங்கே போட்டி எல்லாம் எதுக்கு! எல்லாம் அவரவர் விருப்பம் தானே!

      Delete
    5. நெ.த. நானும் ஹை ஸ்பீட் போக நினைச்சு அப்பா அனுப்பலை! :(

      Delete
    6. //ஶ்ரீராம், இங்கே போட்டி எல்லாம் எதுக்கு! எல்லாம் அவரவர் விருப்பம் தானே!//

      நான் டைப்பிங் ஸ்பீட் பற்றிச் சொன்னேன்க்கா....

      Delete
    7. ஓஓ, தெளிவு செய்தமைக்கு நன்றி ஶ்ரீராம். :)

      Delete
  8. //எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது!// - கொஞ்சம் அந்த பிரொசிங் செண்டர் பேர் சொன்னீங்கன்னா, மானசீகமாத் திட்டறதுக்கு வசதியா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, இப்போவே பயந்தா எப்பூடி?

      Delete
    2. எத்தனை பதிவு வேண்டுமானாலும் வரட்டும் அக்கா... கொஞ்சம் லேட் ஆனாலும் வந்துடுவேன்!

      Delete
    3. ஹாஹா, ஶ்ரீராம், போன முறை இந்தத் தொடர் பதிவுக்கு என்னை அழைத்ததே நீங்க தானே! :)))) ஆகவே எத்தனை பதிவுனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே! :))))

      Delete
    4. எனக்கா? நான் எழுதி இருந்ததே எனக்கு நினைவில்லை. லிங்க் பிடித்து மறுபடி போய்ப் படித்துவிட்டு வந்தேன், என் பதிவையும், வெங்கட் பதிவையும்!

      Delete
  9. //கணினியோட விலையெல்லாம் அப்போ // - எப்போ? 86-87லதான் நான் கணிணியை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். அப்போ அது 85,000தானே. அப்போ சாதாரண கணிணி 20,000 ரூபாய்க்கெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருந்ததே

    ReplyDelete
    Replies
    1. இது தொண்ணூறுகளின் கடைசியில், 2000 ஆம் ஆண்டின் ஆரம்பம்னு நினைக்கிறேன். எங்களுக்கு அப்போவும் கணினி விலை கொஞ்சம் யோசிக்கும்படி இருந்தது என்றே சொல்லணும். பின்னால் 2005 ஆம் ஆண்டில் கணினியைப் பையர் வாங்கிக் கொடுத்தார்.

      Delete
    2. நெல்லை எங்களுக்கும் கணினி எல்லாம் அப்போ எட்டாக்கனியாகத்தான் இருந்தது. அப்ப வீட்டில் கணினி வேலை பிஸினஸ் செய்தவர் அவரிடம் கொஞ்சம் பழைய டெஸ்க்டாப் ஒன்று 99 ல் தந்தார் அதுவே கஷ்டப்பட்டு வாங்கினோம்...

      கீதா

      Delete
    3. நான் கிட்டத்தட்ட 92 இல் கணினி முதலில் பார்த்தேன்.

      Delete
    4. நான் 92 ஆம் ஆண்டில் கணினியைப்பார்க்கலை என்றாலும் எங்க பொண்ணு கத்துக்க ஆரம்பிச்சிருந்தா. பையரும் பள்ளியில் கற்றுக் கொண்டிருந்தார், கொஞ்சம் கொஞ்சம்!

      Delete
  10. எனக்கும் கூச்ச சுபாவம்தான். அதுதான் என்னை பலவற்றைக் கற்றுக்கொள்வதிலிருந்து தடுக்கிறது. சின்ன வயதில் இப்படி இருந்ததில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, நெ.த. அது சும்மா ஶ்ரீராமைக் கலாய்க்க வேண்டிச் சொன்னது!

      Delete
    2. அந்தப் பதிவில் ரஞ்சனி நாராயணன் இன்னும் சிலரின் பின்னூட்டங்களைப்படித்தால் தெரியும்.

      Delete
    3. அந்தப் பதிவு எக்கட உந்தி?

      Delete
    4. எங்கள் பதிவின் லிங்க் கொடுத்திருந்தால் கூச்சத்துக்கு, மன்னிக்கவும், கூச்சமில்லாததற்கு காரணம் தெரிந்திருக்கும் அக்கா!

      Delete
    5. நெ.த. எதுக்கு அந்தப் பதிவு உங்களுக்கு இப்போ? முன்னாடியே முழுசும் படிச்சுட்டு இங்கே வந்து சொல்லிட்டு இருக்கணுமாக்கும்! அதெல்லாம் கிடையாது போங்க!

      Delete
    6. ஶ்ரீராம்,மேலே லிங்க் கொடுத்திருக்கேன், பாருங்க!

      Delete
  11. பிறருடைய அவஸ்தைக்கு நமது விதியும் உடன் படும் என்பது உண்மைதான் போலும்.

    விடாமுயற்சி வெற்றி தரும்.
    வாழ்க வளர்க...

    பதிவு சுவாரஸ்யம்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி!நல்லா இருக்கு! :))))

      Delete
  12. ஆமாம் அக்கா நாம கொஞ்சம் அப்படியும் இப்படியும் ஆகும் போது நம்மை நாமே உற்சாகப் படுத்திக்க வேண்டும் தான்...வேறு யாரு வந்து நம்மள பண்ணுவாங்க...நம் கையே நமக்குதவி!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நம்மை விட அதிகம் கஷ்டப்படறவங்களைப் பார்க்கையில் நாம் எவ்வளவோ பரவாயில்லைனு நினைச்சுக்கணும். :)))) இல்லைனா மீண்டு வர முடியாது!

      Delete
  13. //என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்?//

    ஆரம்பமே கொயப்பமா இருக்கே:)

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, முதல்லே இந்த "ழ" "ள" "ல" எழுதிப் பழகுங்க! அது என்ன கொயப்பம்?க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குழப்பம்னு ஒழுங்கா எழுதக் கூடாதோ? :))))) இந்த அழகிலே தமிழிலே "டி"எல்லோ! :))))))

      Delete
  14. //அப்படியே நிறைய க்ளையன்ட் கிடைச்சு, எல்லார் கிட்டேயும் இப்போ முடியாது; இன்னும் இரண்டு நாள் பொறுங்க. உங்களுக்கு முன்னால் கொடுத்தவங்களுக்கு முடிச்சுட்டுத் தான் உங்களோடதுனு மானசீகமாப் பேசி எல்லாம் பார்த்துண்டேன். வீட்டிலேயும் எப்போவும் என்னைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம் வராப்போல் எல்லாம் கனவுகள்! //

    ஹா ஹா ஹா ஹ ஹைஃபைவ்!! நானும் இப்படிப் பல கனவுகளில் மிதந்திருக்கேன் கீதாக்கா...முதல் கனவு...நான் ஐஇஎஸ் (இந்தியன் எக்கனாமிஸ் செர்வீஸ்) பாஸ் செய்ததும்...ஆஹா நாம இந்திய திட்டக் கமிஷன்ல எல்லாம் வேலை பார்க்கப் போறோம்னு கனவுல மிதந்தேன்....ஆனால் என் ரேங்க் பிந்திப் போனதால்...அப்புறம்..ம்ம் சிலது இங்க பேச முடியாது விட்டுருவோம்...கிடைக்கவில்லை. பறந்த பலூன்ல குத்தல்.

    அடுத்த வருடம் மீண்டும் எழுதலாம்னு இருந்தப்ப..ஸ்டாஃப் செலக்ஷன் செலக்ட் ஆகி டைப் டெஸ்ட் எல்லாம் முடிந்து லோயர் டிவிஷனல் க்ளெர்க் வேலை கிடைத்துவிட்டது என்ற தகவலும் கடித வடிவில் வந்துவிட்டது. மீண்டும் கனவில் மிதந்தேன்...தில்லியில் அரசு அலுவலகத்தில் வேலைக்குப் போயி மேலும் மேலும் உயர்ந்து உயர்ந்து..உயர்...அது நாள் வரை கல்யாணத்திற்கு ஏதேனும் காரணம் சொல்லிஅழுது புரண்டு அது ஒரு புறம் மற்றொரு புறம் நிறைய வரன்கள் (28) என்னை நிராகரித்தார்கள்...வரதட்சினை, சீர் டிமான்ட்..., வேலை இல்லை, என் உயரம் என்று பலகாரணங்கள்.....நாம் ரொம்ப சந்தோஷத்தில் இருந்தேன்...
    வேலையும் கிடைக்கப் போகுது என்று...ஆனால் அப்புறம் கல்யாணம் வேண்டாம் எனும் என் பாச்சா பலிக்கவில்லை.. ..அதற்குள்.அவசரகதியில் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி..ஒரே மாதத்தில் முடிந்தெ விட்ட்டது....இந்த ஆர்டர் கல்யாணம் முடிந்ததும் வர வேண்டுமா? அதற்கு முன் வந்திருக்கக் கூடாதோ...மீண்டும் பலூனில் குத்தல்....வேலை வடக்கே நான் எதை வேண்டுமானாலும் சூஸ் செய்யலாம் தில்லி, பஞ்சாப், ஹரியானா என்று. ஆனால் அனுமதி இல்லை.

    அப்புறம் கம்ப்யூட்டர் பல வருடங்களுக்குப் பிறகு..எனக்குக் கூச்சம் கிடையாது குறிப்பாகக் கற்பதில்.....ஆனா சில விஷயங்களுக்கு ரொம்பவெ கூச்சப்படுவேன்..தயக்கமும்.குறிப்பா உதவி கேட்க...ஆனா வீட்டில் எனக்கு ம ம என்ற பெயர், எ மா என்ற பெயர் கூடவே பு சா, சூ சொ கிடையாது என்பதெல்லாம் உண்டா....ம ம சொல்லியே கற்கமுடியாமல் போனது. அப்புறம் நானே வீட்டிற்கு டெஸ்ட் டாப் வந்தப்ப அப்ப நெட்டும் கிடையாதே. ஸோ டைப்பிங்க் தெரியும்லியா அதை வைத்த்டுக் கற்றுக் கொண்டேன்..தட்டி தட்டி...இப்ப கூகுள்ள தேடியே சிலது கற்கிறேன்...(கூகுள்கிட்ட கேட்க தயக்கமும் வேண்டாம் கூச்சமும் வேண்டாம்!!!!!!!!!!!!!நம்மள ம ம, மு, அ கெ நு எல்லாம் சொல்லாம கத்துத் தரும்)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தி/கீதா,பாங்க் ஆஃப் இந்தியா இன்டர்வியூ அன்னிக்கு எனக்குக் கல்யாணம்! :)))) அப்புறமாத் தனியாவா எனக்கு இன்டர்வியூ வைப்பாங்க! இம்மாதிரி 2,3கையிலே வந்தது காற்றிலே போயிடுச்சு. நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான் என மனதைத் தேற்றிக் கொண்டாலும் பணப் பிரச்னைகள் பூதாகாரமாக வந்தப்போ எல்லாம் கைவிட்டவை எல்லாம்மனதில் நிழலாடும்! :)))) என் கல்யாணமும் பதினைந்தே நாட்களுக்குள் நடந்தது தான். முன்னர் 2011 ஆம் ஆண்டில் எழுதிய ஓர் தொடர் பதிவில் எழுத ஆரம்பிச்சேன். அதைத் தான் கடந்த ஒரு வாரமாகத் தொகுத்துப் பிழைகள் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் படிச்சால் எல்லா விபரங்களும் இருக்கும்! :)))))

      Delete
  15. //எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லையே! :))))//

    ம்ஹூம்ம் இதைச் சொல்லித்தான் நாங்க அறியோணுமாக்கும்:) ஹா ஹா ஹா.. கீசாக்கா எனக்கும் ஒரு ஆசை வந்து கொஞ்சநாள் சுருக்கெழுத்துப் படிச்சேன்ன் முதல் எக்ஸாமில் பாஸ் பண்ணினேன் பின்பு விட்டுவிட்டேன், ஏனெனில் கணணி வந்துவிட்டது அப்போ.. அதனால சோர்ட் காண்ட்டில் என்ன பிரயோசனம்...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, நீங்க படிக்கும் நாட்களில் கணினி வந்தாச்சு எனில் சுருக்கெழுத்தெல்லாம் எதுக்குப் படிச்சீங்க? பள்ளியிலே கணினி சொல்லிக் கொடுக்கலையோ? கூச்ச சுபாவம் இல்லாமல் பதில் சொல்லுங்க! :))))

      Delete
    2. பொழுது போகாத ஒரு இடைவெளியில் ஒரு மூன்று மாதம், அம்மாவின் தொந்தரவு, அருகில் இருந்த ஒரு லேடீஸ் கொலிஜ் இல் படிப்பித்தார்கள் என அனுப்பி வச்சா.. அம்மாவுக்கு எங்களை தூர அனுப்பப் பயம், அதனால பக்கத்தில என்ன எல்லாம் இருக்கோ.. அதுக்கு அனுப்பிடுவா:)) நம் மைண்ட் ஐ டைவேர்ட் பண்ண கர்ர்:)).

      Delete
    3. எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு கீசாக்கா:).. ஸ்ரீராமை விட:)

      Delete
    4. அம்மா நல்லது தானே செய்தாங்க தீர்க்கதரிசினி! அப்புறம் என்னவாம்? இப்போ எதுக்கு உங்களுக்குக் கூச்சம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    5. அஆவ் !! எல்லார் அப்பா அம்மாவும் டைப்பிங் ஷார்ட் ஹெண்டுக்கு அனுப்பினாங்க எங்கப்பாஅம்மா மட்டும் பரதநாட்டியம் கிளாசுக்கு சேர்த்து விட்டாங்க :)

      Delete
  16. இங்கு இப்பவும் லைபிரரிகளில் இலவச கொம்பியூட்டர் வகுப்புக்கள் நடக்குது.. 80, 90 வயசுக்காரர்கள் எல்லாம் வந்து படிப்பதைப் பார்க்கலாம்.

    எங்கள் அம்மாவும் கொம்பியூட்டரில் கலக்குறா:).. எல்லாம் நாங்கள் குடுத்த ரெயினிங்:).. அதனால அவவின் பொழுது நன்றாகப் போகுது.

    ReplyDelete
    Replies
    1. அட! உங்க அம்மாவும் கணினியில் கலக்குறாங்களா? வாழ்த்துகளைச் சொல்லிடுங்க. அவங்களும் ஹை டெக் அம்மாவா? கேட்கவே சந்தோஷமா இருக்கு!

      Delete
    2. இப்போ அம்மாவுக்கு ஒரு புளொக் ஆரம்பிச்சுக் குடுத்தால், நல்லா கலக்குவா:).

      Delete
    3. அதைச் செய்ங்க தீர்க்கதரிசினி!

      Delete
  17. //அப்படியே நிறைய க்ளையன்ட் கிடைச்சு, எல்லார் கிட்டேயும் இப்போ முடியாது; இன்னும் இரண்டு நாள் பொறுங்க. உங்களுக்கு முன்னால் கொடுத்தவங்களுக்கு முடிச்சுட்டுத் தான் உங்களோடதுனு மானசீகமாப் பேசி எல்லாம் பார்த்துண்டேன். வீட்டிலேயும் எப்போவும் என்னைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம் வராப்போல் எல்லாம் கனவுகள்! //

    கீதாக்கா இந்தக் கனவுகள் இப்பவும் எனக்கு உண்டு...ஆனா வேறு விதமாக....ஹிஹிஹி...அப்படி ஒரு சந்தோஷம்...உற்சாகம் நம்மை சிலிர்த்துக் கொள்ள....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, இம்மாதிரிப் பகல் கனவுகள் எனக்கும் உண்டு/ ஆனாலும் இப்போவெல்லாம் பழசே நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதிலிருந்து விடுபடத் தான் போராட்டம் நடக்கிறது! :))))

      Delete
  18. மாமா செக் வைக்கிற கேள்விகள் போல..ஆஹா அந்த அனுபவமும் உண்டே!!!!! என் அனுபவம் நெகட்டிவாக கேள்விகல்..அதுவே என்னை சரி வேண்டாம் அப்படினு சொல்ல வைச்சுரும்..என்னா தக்கினிக்கு வேண்டாம்னு சொல்ல வைக்க.....ஹா ஹா ஹா ஹா...

    //ஆவலை அடக்கிக் கொண்டு விட்டேன். கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆசை என்னமோ மனசில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு தான் இருந்தது. //

    ஹையோ அக்கா மீண்டும் ஹைஃபைவ்!!! ஆமாம் மீ க்கும்....

    இப்ப கம்ப்யூட்டர் என் மகன் பயன்படுத்தி அது கொஞ்சம் பழுதடையவும் அவனுக்கு வேறு விதம் வேண்டுமே என்று அவன் தன் வேலைக்காக வாங்கிக் கொண்டான். என்னிடம் அவனது பழைய லேடாப் அதை மச்சினர் சரி செய்து கொடுத்து இதோ இப்போது வரை ஓடுகிறது..நானும் கவனமா வைச்சுருக்கேன்...

    ஆனா என் ஆசைகள் சில இருந்துச்சுதான்..இப்பவும் ....என் ஆசைகள் எல்லாமே கற்றல்...வீட்டிலிருந்தபடி வேலை செய்யலாமே என்றதுதான்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆறு முதல் அறுபது வரை ரஜினி தோத்தார் போங்க! நாமளே சரி,வேண்டாம்னு சொல்லிடுவோம். இப்போவும் சில விஷயங்களில் இப்படித் தான்! ஆனால் தன்னால் தான் இந்த முடிவு என்பதையும் வெளிக்காட்டவே மாட்டார்.

      Delete
  19. என் கிட்டே கெட்ட பழக்கம் என்னன்னா, யாரானும் உன்னால முடியாது இதுனு சொல்லிட்டாப் போதும் ; அதைச் செய்தே காட்டணும்னு ஒரு வீராப்பு வரும்.//

    மீண்டும் ஒரு ஹைஃபைவ் அக்கா!!!!!! எனக்கும் அப்படித்தான்....ஆனால் அந்த வீராப்பையும் ஆட்டிப் பார்த்து உடைக்கிறா மாதிரி நிகழ்வுகள் வரும்....நடக்கும்..நிறைய தக்கினிக்கு!!!...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தி/கீதா, என்னையும் கேலி செய்திருக்காங்க! பெரிசாக் கிழிக்கப் போறே! பார்க்கலாம் என்பார்கள்! நான் இல்லைனா உன்னாலே முடியுமா என்றிருக்கிறார்கள்.கடைசியில் அவங்கல்லாம் இல்லாமலே நான் தான் தன்னந்தனியாக எல்லாத்தையும் முடிச்சிருக்கேன்.

      Delete
  20. எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ, அப்படி! :))))))//

    அக்கா விடாதீங்க!!! எழுதுங்க எழுதுங்க நாங்க இருக்கோம்ல விட்டுருவோமா என்ன?!!! நீங்க எழுதாட்டியும் நாங்க விட்டுருவோமா...

    சூப்பரா இருக்கு அக்கா...பதிவையும் பார்த்து சிரிச்சு என்னையும் நினைத்து சிரிச்சுக்கிட்டேன்!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா,இப்போ இவை எத்தனை எழுதி இருந்தேனோஅத்தனை தான் வரும். இது அப்படியே பழைய பதிவைக் காப்பி, பேஸ்ட் தான் என்பதால் அதிலே சொன்னதுஇங்கேயும் வந்திருக்கு! :))))

      Delete
  21. வேலையெல்லாம் முடிஞ்சி கூர்க்ககிழங்கு ரோஸ்டலாம் சாப்டுட்டு வந்துட்டேன் :)

    அவ்வ்வ் இந்த கூச்ச சுபாவம் பற்றி இங்கே லண்டன் வந்த புதிதில் எனக்கொரு அனுபவம் என் தோழி வேலை செய்ற இடத்தில அப்ளிகேஷன் fill பண்ணும்போது ஒரு கேள்வி ..ARE YOU A SHY PERSON --100 % DISAGREE ---- TOTALLY AGREE .இது மாதிரி ஒரு கேள்வி
    அவசரத்தில் டோட்டலி அக்ரீனு போட்டுட்டேன் :)) .தெரியாமத்தான் போட்டேனாலும் அது கொஞ்சம் உண்மைதான் ..நான் லேசில் பழக மாட்டேன் :) இப்ப இவ்ளோ ஜகஜமானத்துக்கு அந்த ஸ்கொட்லான்ட் பூனைதான் காரணம் :))))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், இங்கே சிறுகிழங்கே கிடைப்பதில்லை. மதுரை போனால் வாங்கலாம்.:( வேலை செய்யற இடத்திலே இதெல்லாம்கூடக் கேட்டாங்களா? எப்படியோ இப்போ ஜகஜமா இருக்கீங்களே இதான் உண்மையான ஏஞ்சல்!அதை வெளிக்கொணர்ந்த பூசாருக்கு நன்னி ஹை!

      Delete
  22. எங்களுக்கும் ஸ்கூல் நாட்களில் கணினி க்ளாஸ் ஆரம்பிச்சு நான் தான் பியூர் சயன்ஸ் எடுத்துட்டு அந்த கம்பியூட்டர் ரூமை ஏக்கத்தோடு பார்த்துட்டு போவேன் :) 95 இல் தான் முதன்முதலா கம்பியூட்டர் அப்பாவின் ப்ரண்டு ஆபீசில் படிச்சிகிட்டேன் :)டைப்பிங்க்லாம் கத்துக்கலை ஒரு விரல் தான் :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், எங்க மாப்பிள்ளை முழுக்க முழுக்க கணினியிலேயே வேலை. ஆனால் இப்போவும் ஒரு விரல் தான்! எங்க பொண்ணு, பிள்ளை எல்லாம் டைபிங்க் படிச்சதாலே அவங்க டைப் பண்ணுவாங்க! :)) நீங்க சயன்ஸ் எடுக்காமல் கம்ப்யூட்டர் படிப்பு எடுத்திருக்கலாமே!

      Delete
    2. இப்பவும் அதிகம் வருந்தும் விஷயம் அதுதானேக்கா ..இன்போசிஸ் HCL னு கலக்கவேண்டிய பிள்ளையை சாம்பார் கலக்க விட்டுட்டாங்களே :))))))))

      Delete
    3. ஹாஹாஹா, அதனால் என்ன? அதுவும் வேண்டுமே!

      Delete
  23. வாவ் ஷார்ட் ஹான்ட் தெரியுமாக்கா உங்களுக்கு ..எனக்கு ஆசை ஆனா டைமில்லாம போச்சு அப்போ அத்திருந்தா எவ்ளோ வசதியா இருக்கும் //இப்போக் கூட எந்த ஆங்கில வார்த்தையைப் பார்த்தாலும் உடனே சுருக்கெழுத்தில் மானசீகமா எழுதிப் பார்த்துடுவேன்// க்ரேட் அக்கா அதுதான் சூப்பர் .அந்த ஸ்கொட்லாந்து பூனையை நாலு வார்த்தை ஏதாச்சும் சொல்லி ஷார்ட் ஹேண்டில் எழுதுங்களேன் :)))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,சுருக்கெழுத்தில் ரொம்பவே பைத்தியமா இருந்திருக்கேன். ஹாஹா, பூசாரை ஷார்ட் ஹான்டில் சொல்லணுமா? பாவம்! விட்டுடுவோம்!

      Delete
    2. //அந்த ஸ்கொட்லாந்து பூனையை நாலு வார்த்தை ஏதாச்சும் சொல்லி ஷார்ட் ஹேண்டில் எழுதுங்களேன் :)))))//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹையோ விடுங்கோ மீ முருங்கியில:) ஏறிடுறேன்ன்...

      http://images6.fanpop.com/image/photos/41500000/tree-climbing-cute-kittens-41537269-1920-1080.jpg

      Delete
    3. தீர்க்கதரிசி, நீங்க என்னமோ முருங்கை மரத்தில் இல்லாத மாதிரி பேசறீங்க? குடித்தனமே அங்கே தானே! :)))))))))

      Delete
  24. /ங்களுக்கு முன்னால் கொடுத்தவங்களுக்கு முடிச்சுட்டுத் தான் உங்களோடதுனு மானசீகமாப் பேசி எல்லாம் பார்த்துண்டேன். வீட்டிலேயும் எப்போவும் என்னைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம் வராப்போல் எல்லாம் கனவுகள்! //

    ஹாஹாஆ :) செம மீ விழுந்து புரண்டு சிரிக்கிங் :) ஆனா கூச்சப்படாம கற்பனையில் மிதந்தத்துக்கு பாராட்டுக்கள் .என்னோட நிறைய கனவுகள் இப்படி கூச்சப்பட்டே பாதியில் நின்னுருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் கனவு காணக் கூச்சமெல்லாம் படமாட்டோமே! :))))

      Delete
    2. கூச்சமெல்லாம் இருக்கட்டும், நான் கஸ்டப்பட்டு பாடுபட்டு அடிபட்டு இடிபட்டு.. நேற்றுக் காலை அவசரமா ஓடிவந்து கொமெண்ட் போட்டா.. இப்பூடிக் கூச்சப்படாம ஒருநாளா வச்சிருந்து இன்று பப்ளிஸ் பண்ணியிருக்கிறீங்களே.. இதை நான் கூச்சப்படாம பிரித்தானிய காண்ட் கோர்ட்டில் முறையிடப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நானும் காலம்பரவே எல்லாக் கருத்துக்களையும் வெளியிட்டு விட்டேன். பதில் தான் மத்தியானமா சாவகாசமா வந்து சொல்லணும்னு வந்து சொல்லி இருக்கேன். காலை வேளையில் அதிகமா உட்கார முடியாது எல்லோ! :)))))

      Delete
  25. //உன்னாலே தினம் தினம் அண்ணாநகர் போய்ட்டு வர முடியுமா? //

    ஒரு வருங்கால H .R ஆபீசரை முன்னேற விடாம தடை பண்ணது அவர்தானா :))
    இப்படி கேள்விகளை எங்கப்பா அம்மா கேட்டே நான் உருப்படாம போனேன் :) எதுனாலும் இல்லம்மா நீ டயர்ட் ஆகுவ அப்படினு சொல்லியே கட்டிபோட்டாங்க :) இதெல்லாம் எமோஷனல் கட்டுப்பாடுகள் :)
    நாம் யோசிக்கும்போது ஒரு பயம் எட்டி பார்த்து நம்மளை :அடக்கிடும் ) நமக்குத்தான் கூச்ச சுபாவமாச்சே ஹ்ஹாஹ்ஹா

    ReplyDelete
    Replies
    1. அதானே! ஓர் உயர்ந்த சி.ஈ.ஓ(எதுக்குக் குறைச்சலாச் சொல்லிக்கணும்! ) ஆக வரவேண்டியவளைத் தடுத்து விட்டார் பாருங்க! ஹாஹாஹா! ஆனால் அப்போத் தான் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி இருந்தது. பையர் கடைசி வருஷம் படிச்சுட்டு இருந்தார். காம்பஸ் செலக்‌ஷன் ஆகி இருந்தது என்றாலும் அவர் படிப்பு இருந்ததே! எல்லாம் யோசிக்க வைத்தது.

      Delete
  26. ஒரு கமெண்ட்டை ரெண்டு தடவை தட்டி விட்டிருக்கேன் நினைக்கிறன் திலீட்டுங்க ரெண்டா வந்ததை

    ReplyDelete
    Replies
    1. இல்லை எதுவும் 2 முறை வரலை!

      Delete
  27. //அதைச் செய்தே காட்டணும்னு ஒரு வீராப்பு வரும். அப்படி ஒரு சமயம் இப்போ, விடாதேனு ம/சா. அடிச்சுச் சொல்லவே அதன் குரலுக்குக் கீழ்ப்படிந்தேன்.//
    அதேதான்க்கா அந்த வீராப்பு எல்லாருக்கும் வரணும் :) எல்லா ஆண்களும் அதில் அப்பாக்கள் அண்ட் கணவர்கள் இரண்டுபேரும் நம்மை இப்படி பயங்காட்டி முடக்கிப்போட்டுடுவாங்க :) அடிக்கடி இந்த வீராப்பு வரணும் நமக்கு

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், இந்த வீராப்பைத் தப்பாக நினைப்பவர்கள் உண்டு. அதிலே அப்பாக்கள், கணவர்களுக்கும் முக்கிய இடமும் உண்டு! அவங்க நினைக்கிறாங்க மத்தவங்க செய்தா நமக்குப் பிடிக்கலைனு! :)))))

      Delete
    2. எங்கள் வீட்டில் என்னைப் பயம் காட்டி மடக்குவது அம்மாதான், ஊக்கம் கொடுத்து முன்னுக்கு அனுப்புவது அப்பா.... அம்மா வேண்டாம் எதுக்கு எனச் சொல்லச் சொல்லத்தான் அப்பா என்னைக் கூட்டிப்போய் ட்றைவிங் லைசென்ஸ் எடுக்கப் பண்ணினார். அம்மாவுக்கு .. பயம், பெண் பிள்ளையை பத்திரமாக வளர்த்து கட்டிக் குடுத்திடோணும் எனும் எண்ணம் :)..

      Delete
    3. அம்மாமார்களுக்கேக் குழந்தைகள் அதிகம் கஷ்டப்படக் கூடாது என நினைப்பாங்க போல! ஆனாலும் என் அம்மா என்னை ஊக்கம் கொடுத்துத் தான் வளர்த்தார். கண்டிப்பு எல்லாம் அப்பா தான்! இது செய்யாதே, அது செய்யாதே, ஆடாதே, பாடாதே! என்றெல்லாம். :(

      Delete
  28. இப்போ கவனிச்சு பார்த்ததில் வெளிநாட்டு ஐரோப்பிய பெண்களை விட நம்மூர் பெண்கள் அதாவது 60 தாண்டிய பெண்கள் அதிகம் கணினி யூஸ் பண்ராங்க :) எங்க சர்ச்சில் 10 பாட்டிஸ் இருக்காங்க அவங்களுக்கு இ மெயில்னாலே என்னன்னு தெரியாது இன்னிவரைக்கும் .
    சரி அடுத்தது என்ன நடந்தது தொடர்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வெளிநாட்டில் ஐரோப்பாவில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். யு.எஸ்ஸில் நிறையப் பெண்கள் கணினி அறிவுடன் இருக்காங்க என நினைக்கிறேன்.

      Delete
    2. அஞ்சு சொல்வது உண்மைதான், நாம் நினைப்போம் வெளிநாடு வெள்ளையர்கள் எனில் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என, அப்படி இல்லை, நமக்கு முந்தின ஜெனரேசனில் கணணி தெரியாதோர் உண்டு.. கார் ஓடத் தெரியாத எத்தனை வெள்ளைகள் இங்கிருக்கினம், யூரோப் என்றில்லை கீசாக்கா எங்கிலும் தான், ஆனா நாம் பார்ப்பது எல்லாம் தெரிந்தவர்களை என்பதால நமக்குப் புரிவதில்லை.

      Delete
    3. ம்ம்ம்ம்,எங்கும் இப்படியான மனிதர்களும் இருக்காங்க போல!

      Delete
  29. உங்கள் உடல்நிலை தேவலாமா? ஆம் நாம் நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் தொய்வு ஏற்படும் போது.

    உங்களுக்குக் கூச்ச சுபாவமா? பதிவுகளை வாசிக்கும் போது அப்படித் தெரியவில்லையே.

    எங்கள் வீட்டிலும் கணினி அதுவும் மேசைக் கணினிதான் அதுவும் ஒரு 7, 8 வருடங்களுக்கு முன் தான்..பள்ளியில் கணினி கற்க வேண்டும் என்று வகுப்பு எடுத்தார்கள்...வீட்டில்.முதலில் நெட் இருந்தது...அப்புறம் அதுவும் இல்லை. இப்ப வரை நெட் இல்லை. எல்லாமே சென்னை வழிதான் என் கருத்து பதிவு எல்லாமே...

    உங்கள் ஆசைகள் எல்லாம் செக் வைக்கப்பட்டது எல்லாமே நகைச்சுவையுடன் சொல்லியிருக்கின்றீகள். ரசித்தோம்.

    உங்கள் கணினி வகுப்பு என்ன ஆயிற்று என்று அறிய ஆவலுடன் தொடர்கிறோம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. //உங்களுக்குக் கூச்ச சுபாவமா? பதிவுகளை வாசிக்கும் போது அப்படித் தெரியவில்லையே.// ஹாஹாஹா , துளசிதரன், அது சும்ம்ம்ம்ம்ம்ம்மா ஶ்ரீராமைக் கலாட்டா பண்ணுவதற்காகச் சொன்னது. அவர் பதிவில் தனக்குக் கூச்ச சுபாவம் இருப்பதாய்க்குறிப்பிட்டிருப்பார்! அதைக் கிண்டல் செய்து எழுதியது!

      Delete
  30. எனக்கும் கூச்ச சுபாவம் உண்டு. தெரிந்தவர்களிடம் மட்டுமே அவ்வளவாகக் கிடையாது. குறிப்பாக யாரிடமேனும் ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் ரொம்பக் கூச்சம் உண்டு. விழா ஏற்பாடுகள் என்றால் நான் தொடர்பு கொள்ள ரொம்பவே தயங்குவேன். புதியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நெருக்கமானவர்கள் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நான் பொதுவாக வலுவில் பேசுவதில்லை. ஆனால் பேச ஆரம்பித்தால் நன்றாகப் பேசுவேன். மற்றபடி பல வேலைகள், ஏற்பாடுகள் பிறருக்காகச் செய்து கொடுத்திருக்கேன். இப்போத் தான் பத்து வருஷங்களாக எல்லாம் குறைந்து விட்டன.

      Delete
  31. இன்றைய பதிவில் வளமையான நகைச்சுவை உணர்வு ததும்புகின்றது...

    என்னையும் என் தந்தை தட்டச்சு பழகச் சொன்னார்..
    ஏனோ அதில் எனக்கு விருப்பம் இல்லாமல் போனது...

    1998 ல் முதன் முதலாக கணினி முன் அமர்ந்து Store கணக்குகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன்..

    பின்னர் கரந்தையில் (2005) DTP Center ஆரம்பித்த போது ஒரு மணி நேரத்தில் தமிழ் வசப்பட்டது..
    இதுவரைக்கும் எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது...

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை! 98 ஆம் ஆண்டிலேயே கணினியில் அமர்ந்தாச்சா? ம்ம்ம்ம், அதுக்கப்புறமாப் பத்து வருஷம் கழிச்சுத் தான் 2005 மார்ச்சில் கணினி வாங்கி ஏப்ரல் முதல் அதில் தொடர்ந்து உட்கார்ந்து முதலில் பதிவுகளைப் படித்துக் கொண்டும் கருத்துக்களை ஆங்கிலத்தில் பதிந்து கொண்டும் இருந்தேன். பின்னர் தான் தமிழில் தட்டச்ச ஆரம்பித்துப் பதிவுகளும் எழுத ஆரம்பித்தேன். பதிவராக ஆன புதுசில் வருடா வருடம் 2 வருடம் ஆச்சு,3 வருடம் ஆச்சு எனக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போத் தான் விட்டு விட்டேன்.

      Delete
  32. மதுரைனா சும்மாவா. எந்த ஊருக்கு போனாலும் மதுரை என்னைக்குமே ஆட்சியை விட்டுக் கொடுத்ததில்லை. சிதம்பரமே வாய் அடைச்சு நிற்கும்போது தஞ்சாவூர் எம்மாத்திரம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா ஜேகே அண்ணா, இங்கேயும் தப்பு! மதுரையில் மீனாக்ஷிக்குச் சித்திரையில் பட்டாபிஷேஹம் ஆனால் ஆவணி வரை தான் அவள் ராஜ்ஜியம். ஆவணி மாசம் சுந்தரேசர் பட்டாபிஷேஹம், அதன் பின்னர் அவர் ஆட்சி தான்! என்னிக்கும் விட்டுக் கொடுத்ததில்லை என்பதே தப்பு! இஃகி, இஃகி! இஃகி, இஃகி!

      Delete
  33. ஹாஹா! ஸ்வாரஸ்யம்! டைப் ரைட்டிங் கற்றுக்கொள் என்று அப்பா கூறியபொழுது நான்,"நானே எனக்கு ஒரு செகரெட்டரி போட்டுக் கொள்வேன்" என்று தெனாவெட்டாக கூறிய நான், திருமணத்திற்கு பிறகு டைப்பிங் தெரிந்தால் மஸ்கட்டில் வேலைக்கு முயற்சி செய்ய முடியும் என்று என் கணவர் கூறியதால் டைப்பிங் கற்றுக் கொண்டேன். அங்கு தப்பிஸ்டாக அரசு வேலையில் சேர்ந்தேன்.
    அங்கெல்லாம் எலக்டிரிக் டைப் ரைட்டர். கையை வைத்தாலே சர்ரென்று ஓடும். எனக்கு வேகம் கொஞ்சம் குறைவுதான். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அதுவும் ஸ்டென்ஸில் டைப்பிங் நிறைய இருக்கும். கணிணி வந்த பிறகு என் வேலையை ரசிக்க ஆரம்பித்தேன். புதிது புதிதாக கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. எங்கள் டிபார்ட்மெண்டில் டேபில்ஸ், கிராஃப்ஸ் போன்றவை நிறைய இருக்கும். அதற்கு கணிணி மிகவும் உதவியது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, எலக்ட்ரானிக் மிஷினில் எல்லாம் தட்டச்சியது இல்லை. உங்கள் அனுபவமும் சுவாரசியம் தான். நீங்களும் எழுதுங்கள். அப்போதே கணினியில் கற்றுக் கொண்டிருப்பதால் உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும்.

      Delete
  34. தலைப்பே மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, போனமுறை எழுதினப்போவும் நீங்க வந்திருந்தீங்க என நினைவு. ரொம்பவே வேலை மும்முரத்தில் இருக்கீங்க! மெதுவா வாங்க. உங்க பேரன் நடிச்ச நாடகம் பற்றி எஃப்.எம்.ரேடியோவில் கூட விமரிசனம் செய்தார்கள். சிறப்பான விமரிசனம். எந்த எஃப்.எம். என்பது தெரியாது! அங்கே அரிசோனாவில் உள்ள என் நண்பர் திரு தேவ் மஹாதேவன்(ஒரு அரிசோனன் என்னும்பெயரில் எழுதுவார். தாரகை பத்திரிகை நடத்துகிறார்.) அவர் கூட இதைப் போட்டிருந்தார். முகநூலிலும் வந்திருக்கிறது. தாரகையிலும் வந்திருக்கிறது.

      Delete
  35. நானும் இந்த தொடர் பதிவில் கலந்து கொண்டேன்.

    அடிச்சது நல்லதொரு வாய்ப்பு//


    மிக நன்றாக அனுபவங்களை சொல்லி இருக்கிறீர்கள்.
    விருந்தினர் வருகை இடையில் நேரம் கிடைக்கும் போது எட்டிப் பார்க்கிறேன் பதிவுகளை, வருகிறேன் மீண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க கோமதி! அவசரமே இல்லை.

      Delete
    2. அரிசோனாவில் உள்ள என் நண்பர் திரு தேவ் மஹாதேவன்(ஒரு அரிசோனன் என்னும்பெயரில் எழுதுவார். தாரகை பத்திரிகை நடத்துகிறார்.) அவர் கூட இதைப் போட்டிருந்தார். முகநூலிலும் வந்திருக்கிறது. தாரகையிலும் வந்திருக்கிறது.//

      அவர்தான் தினமலர் கொடுத்து இருக்கிறார்.
      சாரின் தம்பி குடும்பம் வந்து இருக்கிறார்கள் அவர்களுடன் கோவில், உறவினர் வீடுகள் என்று போய் கொண்டு இருந்தேன்.
      இன்று தான் ஊருக்கு போய் இருக்கிறார்கள்.
      வீட்டு வேலைகள் அது இது என்று நேரம் வர விடவில்லை.

      Delete
    3. எனக்கும் ஒரு முறை மதுரையில் அழகர்கோயில், திருப்பரங்குன்றம் எல்லாம் போக ஆசை! முடியறதில்லை! பக்கத்திலேயே இருக்கு! :(

      Delete
  36. நான் என்ன பதில் எழுதினேனோ தெரியாது.
    இப்ப படிக்கும் போது புதுசாத்தான் இருக்கு கீதா மா. எப்பாடியோ 13 வருஷங்கள் தாண்டியாச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, வல்லி, நீங்களும் எழுதின நினைவு!

      Delete
  37. அனுபவத்தினைக் கண்டேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவிலும், ஒவ்வொரு மாதம் முதல் நாளன்று சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறேன். அவ்வப்போது சில சிரமங்களை எதிர்கொள்கிறேன். முடிந்தவரை எழுதுவோம். எழுதுவதும், வாசிப்பதும் என்றுமே புத்துணர்வினைத் தரும் என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
    Replies
    1. ஆம், ஐயா, சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உங்கள் சோழ நாட்டில் பௌத்தம் பதிவுகளைப் படித்து வருகிறேன். முடிந்தவரை எழுதுவோம் என்பதே என் கொள்கை/ஆசை!

      Delete
  38. வணக்கம் சகோதரி

    பதிவு மிகவும் அமர்க்களமாய் சுவாரஸ்யமாக இருக்கிறது.. பதிவின் முதல் நாலுவரி எனக்கும் பொருத்தமான உண்மை வரிகள். அதை முதலில் உள் வாங்கி கொண்டேன். தாங்கள் விடா முயற்சிக்கு ஒரு உதாரணம். ஆசைப்பட்ட அனைத்தையும் எத்தனை தடைகள் வந்தாலும், விடாமல் கற்று தேர்ந்திருக்கிறீர்கள். தங்கள் எழுத்து நடையும் அருமை. தங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    எனக்கு இந்த கூச்ச சுபாவம் மிக, மிக அதிகம். அதனாலேயே எனக்கென்று அதிசயமாக அமைந்த திறமைகளை நழுவ விட்டிருக்கிறேன். ஆனால் இப்போது திறமையாக செயல்படும் தங்களைப் போன்றோரின் நட்பு கிடைத்தமைக்காக பெருமைப்படுகிறேன். கடவுளுக்கு நன்றி.

    அடுத்தது என்ன என்றறிய மனது ஆவல் கொள்கிறது. எத்தனை பதிவு வேண்டுமானாலும் எழுதுங்கள்.நான் கடைசியிலாவது படிக்க வந்து விடுவேன்.என் நேரம் அப்படி.. இப்போதுதான் அனைவரின் பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறேன். இன்னமும் என் பதிவுக்கு வந்தவர்களுக்கு பதிலளிக்க தாமதமாகிறது குறித்து வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ரொம்பவே வேலை அதிகம் போல. மெதுவா வாங்க. கூச்ச சுபாவம் பற்றி விளையாட்டாகவே குறிப்பிட்டிருப்பேன். ஶ்ரீராமைக் கிண்டல் செய்வதற்காகக் குறிப்பிட்டது அது. அடுத்தது இன்று மாலைக்குள் போட முயற்சிக்கிறேன். சனி, ஞாயிறு யாரும் வரமாட்டார்கள்! அதான் யோசனை!

      Delete
  39. மிக சுவாரசியமான பதிவு! உண்மியிலேயே படிக்கும்போது ஆக இருந்தது.
    இள‌ம் வயதில் தட்டெழுத்து, சுருக்கெழுத்து கற்றுக்கொண்டதெல்லாம் நினைவில் எழுந்தது! அதுவும் சுருக்கெழுத்தில் அதன் அழகில் எனக்கு அப்படியொரு மோகம் இருந்தது. இப்போது கணினி வந்த பிறகு சுருக்கெழுத்தெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ, இப்போது தட்டச்சு, சுருக்கெழுத்தெல்லாம் இல்லை. சுருக்கெழுத்தை நிறுத்திய போது சுமார் பத்தாண்டுகள் முன்னர் எனக்கு அழுகையே வந்தது! அப்போதெல்லாம் எப்போப் பார்த்தாலும் சுருக்கெழுத்து நோட்டும், பென்சிலும் தான் கைகளில்! அதெல்லாம் ஒரு காலம். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete