எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 11, 2019

சென்னைக்குத் தேஜஸான பயணம்!

அடுத்தடுத்துப் பயணங்கள், வீட்டில் உறவினர் வருகை எனக் கடந்த இரண்டு மாசமாக ஒரே மும்முரமான நாட்களாகப்  போய் விட்டன. சென்ற மாதம் கோல்ஹாப்பூர் சென்று விட்டு வந்ததுமே உடம்பு ஒரே சோர்வாகத் தான் இருந்தது. ஆனால் இந்தச் சென்னைப் பயணம் தவிர்க்க முடியவில்லை. அம்பத்தூர் வீட்டை விற்றது சம்பந்தமான ஒரு வேலை முடிய வேண்டி நாங்க அங்கே போயே ஆகவேண்டிய கட்டாயம். ஆகவே ஏப்ரல் ஏழாம் தேதி நெருங்கிய உறவினர் ஒருவரின் பேத்திக்குக் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்தது. அதை ஒட்டியே போகலாம் எனச் சனிக்கிழமை ஆறாம் தேதிக்குத் தேஜஸில் முதல் முறையாகப் பயணம் செய்யத் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்குப் பயணச்சீட்டு முன் பதிவு செய்தோம். திரும்பி வர ஒன்பதாம் தேதியன்று மதியம் பல்லவன். அன்று தேஜஸ் கிடையாது என்பதோடு அது சென்னையில் இருந்து கிளம்புவது காலை ஆறு மணிக்கே! எங்களுக்கோ வேலை முடிய ஒரு மணி ஆகி விடும். ஆகவே பல்லவன் தான் சரி வரும். 


எங்கள் இருக்கைகளில் இருந்து தேஜஸ் உட்புற அமைப்பின் ஒரு பகுதி! 

முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. முதல் வகுப்பை இதிலே எக்சிக்யூடிவ் க்ளாஸ் எனச் சொல்கின்றனர். சாப்பாடு ரயிலில் வருகிறது என்றாலும் நாம்  பயணச்சீட்டு வாங்கும்போதே சாப்பாடு வேண்டுமா வேண்டாமா, சைவமா, அசைவமா என எல்லாம் குறிப்பிட வேண்டும். சாப்பாடு வேண்டுமெனில் அதற்கும் சேர்த்துப் பயணச்சீட்டுத் தொகையில் வாங்கி விடுவார்கள். இல்லை எனில் பயணச்சீட்டின் விலை கொஞ்சம் குறையும். எங்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பயணச் சீட்டு என்பதால் ஒருவருக்கு சாப்பாடும் சேர்த்து 720ரூபாய் ஆகி விட்டது! இருவருக்கும் சேர்த்து 1440 ரூபாய். ஒருவருக்கான பயணச்சீட்டு சுமார் 1400 வரை ஏசி. உட்காரும் வசதி கொண்ட பெட்டிக்கு. படுக்கை வசதி இல்லை. இதைத் தவிர்த்து எக்சிக்யூடிவ் வகுப்பு மட்டுமே! அதற்கான தொகை இன்னமும் அதிகமாக ஆகும்.


                                                            இது எதிர்ப்பக்கம்


தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கின்றனர் விமானங்களில் இருப்பதைப் போல். 

ஆனால் படங்கள் அதிகம் இல்லை. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிப் படங்கள் வந்தாலும் தமிழில் வெள்ளிவிழா, மற்றும் அதற்கும் முன் உள்ள இரண்டு, மூன்று படங்களும், ஹிந்தியில் அமர், அக்பர், அன்டனி, ஆனந்த் போன்ற பழைய படங்களுமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நல்லவேளையா ப்ருத்வி ராஜ்கபூர், சோபனா சமரத் நடிச்ச ராமாயணம் என்று காட்டவில்லை. சும்மாத் திறந்து பார்த்து ஒரு நோட்டம் விட்டு விட்டு மூடி விட்டேன். அநேகமா எல்லோருமே அப்படித் தான்.

நாங்கள் போய் உட்கார்ந்த சில நிமிடங்களில் முதலில் எப்போதும் போல் குடிநீர் விநியோகம், சாப்பாடு உள்ள பயணச்சீட்டுக்காரர்களுக்கு. மற்றவர்கள் விலை கொடுத்து வாங்கலாம் என எண்ணுகிறேன். அதன் பின்னர் லேசான ஆகாரம் என்னும் பெயரில் ஆலு புஜியா,  உ.கி. சமோசா, ஒரு 20/20 பிஸ்கட் பாக்கெட், ஒரு சின்ன சாக்லேட் ஆகியவை அடங்கிய ஒரு தட்டைக் கொடுத்தார்கள். அதன் பின்னர் காஃபியா, தேநீரா எனக் கேட்டுக் கொண்டு காஃபி எனில் காஃபி பாக்கெட், சர்க்கரை, பால் பவுடர் பாக்கெட் ஒரு காஃபி கப்போடு விநியோகம் செய்த பின்னர் ஃப்ளாஸ்குகளில் நிரப்பப்பட்ட வெந்நீரை ஊற்றிக் கொடுத்தனர். எல்லாம் விமான சேவையைப் போல் தான். 

அதை அடுத்து சுமார் ஆறரை மணி போல ப்ரெட் ஸ்டிக்ஸ், உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய்ப் பாக்கெட் கொடுக்க ஆரம்பித்தனர். உடனே சூப் வரப் போகிறது என்பது புரிந்தது. ஆனாலும் இது ரொம்பச் சீக்கிரமாக இருப்பதாக நினைத்தேன். ஆனால் சூப் சுமார் பத்து நிமிஷம் கழித்தே வந்தது.  சூடாகவும் நன்கு கெட்டியாகவும் இருந்த அந்தத் தக்காளி சூப்பை உப்பு, மிளகு பொடி, வெண்ணெய் சேர்த்துக் கொண்டு ப்ரெட் ஸ்டிக்கும் சேர்த்துக் கொண்டு ரசித்துக் குடித்தோம். அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே சாப்பாடு வந்தது. சாப்பாடு வந்ததுமே அதை உணவு உண்ணும் சிறிய மேசையைத் திறந்து மேலே வைத்ததால் கைப்பை கீழே மாட்டிக் கொண்டது. செல்லை எடுக்க முடியவில்லை.ஆகவே சாப்பாடு படம் எடுக்க முடியலை. என்ன பெரிசாக் கொடுத்துட்டாங்க! :)

விரட்டி போன்ற இரு மைதா ரொட்டிகள், ஏதோ மிக்சட் வெஜிடபுள் சப்ஜி, தால், (காரமில்லாமல் இருந்த ஒரே சமாசாரம்) ஊறுகாய், பாஸ்மதி ஃப்ரைட் ரைஸ், தயிர் (நல்லதயிர்) இருந்தது. ரொட்டியை நடுவில் மட்டும் பிய்த்துச் சாப்பிட்டுவிட்டு சப்ஜியைப் பேருக்குத் தொட்டுப் பார்த்து விட்டு அந்த பாஸ்மதி ரைஸைக் கொஞ்சம் தாலில் போட்டுச் சாப்பிட்டுவிட்டு மீதத்தை வைத்து விட்டேன். தயிர் சாப்பிட்டேன். சாப்பாடு முடிந்து அரைமணிக்கெல்லாம் நல்ல அருமையான வனிலா ஐஸ்க்ரீம் வந்தது. அளவிலும் சரி, தரத்திலும் சரி ஐஸ்க்ரீமுக்கு என்னோட ஓட்டு+ முழு ஆதரவு1
**********************************************

நாலாம் தேதி இரவே சென்னையில் இருந்து கிளம்பி தம்பி குடும்பம் இங்கே ரங்கநாதர் கோயிலில் சில பிரார்த்தனைகளை நிறைவேற்ற வந்தார்கள். இஃகி, இஃகி, இங்கே தான் குழப்பமே ஆரம்பம். நாங்க பயணச்சீட்டு வாங்கறச்சே பத்தாம் தேதி புதனன்று தம்பி வீட்டில் நடக்க இருந்த ஓர் நிகழ்வைக் குறித்துக் கேட்டதில் அது ஒத்திப்போடப்பட்டது என்றதும் நாங்கள் திருச்சியில் இருந்து கிளம்பும் தேதியை மாற்றாமல் திரும்பி வரும்போது உள்ள  எங்கள் பயணத்தைச் சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒன்பதாம் தேதிக்கு மாற்றினோம். ஆனால் அவங்க திட்டம் என்ன என்பதைக் கேட்கவே இல்லை. அதன் பின்னர் தான் ஏதோ பேச்சில் தெரிய வந்தது, அவங்க நாலாம் தேதி கிளம்பி வரப்போவது!  அ.வ.சி இருபக்கமும்.  முதலில் நாங்க எங்க மைத்துனர் வீட்டுக்குப்போய்த் தங்குவதாக இருந்தது. ஆனால் அதிலும் சில, பல எதிர்பாரா நிகழ்வுகள். ஆகவே தம்பி வீட்டுக்கே செல்லலாம் என முடிவு செய்தோம். அவங்க நாலாம் தேதி வந்து விட்டு ஏழாம் தேதி இரவு கிளம்புவதாகத் திட்டம். ஆனால் நாங்க ஆறாம் தேதிக்குப் பயணச் சீட்டு வாங்கிட்டோம். இஃகி, இஃகி, என்ன செய்யறது. சாதாரண ரயில் என்றாலோ சாதாரணச் சீட்டு என்றாலோ பயணத்தை ரத்து செய்யலாம். ஆனால் முன்னெல்லாம் தேதியைத் தள்ளிப் போடும் வசதி இருந்தது என்பதால் அதை முயற்சி செய்தால் ஆன்லைனில் வாங்கிய பயணச்சீட்டுகளுக்கு அந்த வசதி இல்லை என ஐஆர்சிடிசியில் இருந்து பதில் வரவும் ரத்து செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் மேலும், மேலும் ரயில்வே சட்டதிட்டங்களைத் தோண்டியதில் இப்போதெல்லாம் பயணச்சீட்டை வாங்கினால் பயணம் அந்தக் குறிப்பிட்ட தேதியில் செய்யவில்லை எனில் ரத்து செய்வதைத் தவிர வேறே வழியில்லை என்றும் இது ஆன்லைனில் வாங்கிய பயணச் சீட்டுகளுக்கு மட்டுமில்லாமல் கவுன்டரில் வாங்கினவற்றுக்கும் செல்லும் என்றும் தெரிய வந்தது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

தம்பி குடும்பத்தை ஶ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு நாங்க சனிக்கிழமை மதியம் சுமார் 3 மணி அளாவில் திருச்சி ஜங்க்ஷன் போனோம். அங்கே போனால் தேஜஸ் எக்ஸ்பிரஸ் 3ஆம் நடைமேடை என அங்குள்ள டிஸ்ப்ளேவில் செய்தி வந்தது. சரினு பாட்டரி காரைக் கூப்பிட்டால் இதோ, அதோனு சொல்லிக் கொண்டே ஒரு வழியாக மூன்றரை மணிக்கு 3 ஆம் எண் நடைமேடைக்குக் கொண்டு விட்டார். இத்தனைக்கும் ஒரு நபருக்கு 30 ரூ பணம் வாங்கிப்பார். இலவசம் எல்லாம் இல்லை. வண்டி கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தது. எல்லோரும் நல்லபடியா ஏறும் முன்னர் கதவு சார்த்தாமல் இருக்கணுமேனு பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன். நாங்களும் எப்படியோ ஏறி விட்டோம். 

இந்த வண்டிக் கழிவறைகள் பயன்படுத்த நம் மக்களுக்குத் தெரியவில்லை/புரியவில்லை. ஆகையால் மதுரையில் இருந்து வரும்போதே ஒரு பக்கத்துக் கழிவறை பயன்படுத்தத் தகுதி இல்லாமல் இருந்தது. வண்டியில் இருந்த மேலாளரிடம் புகார் செய்ததில் இந்தவண்டியில் சுத்தம் செய்யும் ஆட்கள் வரமாட்டார்கள் எனவும், கழிவறையில் ஃப்ளஷ் டாங்க் ஏர் ப்ளாக் ஆகிவிட்டதாயும் கூறினார். ஒரு பக்கத்துக் கழிவறை மட்டுமே பயன்படுத்தும்படி ஆகி விட்டது.  வண்டி ஆட்டத்தில் வெஸ்டிப்யூல் தாண்டிச் செல்வது முடியவும் இல்லை. அதோடு இல்லாமல் சாப்பாடு பரிமாறுப்வர்கள் அவர்கள் பங்குக்கு மிச்சம் இருப்பதை எல்லாம் அந்தக் கழிவறையில் கொட்டுவதால் கழிவறைச் சுவர் எல்லாம் கறை மயம்!

ஒன்பதரைக்குச் சென்னை எழும்பூர் வரணும்.  ஆனால் வண்டி விரைவு வேகம் அதிகம் காரணமாக எட்டரைக்கே தாம்பரம் வர அங்கிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டு ஒன்பது இருபதுக்கு எழும்பூர் வந்தது. வழக்கமான நாலாம் எண் நடைமேடை இல்லாமல் 2 இல் வந்தது. அதுவும் வெளியே செல்ல வசதி தான். 

64 comments:

  1. // ஒருவருக்கான பயணச்சீட்டு சுமார் 1400 வரை ஏசி. உட்காரும் வசதி கொண்ட பெட்டிக்கு. படுக்கை வசதி இல்லை... //

    ஐயோ..! இந்த பணத்திற்கு நாலு பேருக்கு நல்லதொரு நன்மை செய்து விட்டு, "unreserved" -ல் செல்லலாம்... சாப்பாடு 6 பேருக்கு வாங்கி கொடுத்து விட்டு பலமுறை சென்றுள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. முன்பதிவு இல்லாப் பெட்டியில் ஏறுவது என்பது எங்களைப் போன்றவர்களால் இயலாது டிடி. அதுவும் இந்த வெயில் காலத்தில். நாங்க அநேகமாச் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதிலோ, இல்லாதவர்களுக்குக் கொடுப்பதிலோ கணக்குப் பார்ப்பதில்லை முடிந்த அளவுக்குக் கொடுத்து வருகிறோம்.

      Delete
  2. // ஆனால் படங்கள் அதிகம் இல்லை //

    சமீபத்தில் ஒரு கேடியின் படம் தடை செய்யப்பட்டு விட்டது... தப்பித்து விட்டீர்கள்... வாழ்க நலம்...!@

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி டிடி. நான் அவ்வளவாகப் படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. எப்போதேனும் தான்! :)))))))

      Delete
  3. // நல்ல அருமையான வனிலா ஐஸ்க்ரீம் வந்தது. அளவிலும் சரி, தரத்திலும் சரி ஐஸ்க்ரீமுக்கு என்னோட ஓட்டு+ முழு ஆதரவு //

    இதிலே தான் நம் மக்கள் அடிமை ஆகி விடுகிறார்கள்... அது ஐஸ்க்ரீம் அல்ல, அல்வா...! தேஜஸ் ஸ்பெஷல் அல்(ல)வா...

    ReplyDelete
    Replies
    1. டிடி, ஷதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஸ்க்ரீம் என்னும் இந்த அல்வாவைக் கொடுத்து வருவதை அறிவீர்கள் தானே? நம்ம தென் மாவட்ட மக்களுக்குக் குறிப்பா ஷதாப்தி, ராஜ்தானி போன்றவற்றில் பயணம் செய்யாதவர்களுக்கு வேண்டுமானால் இது புதிய விஷயம். சென்னை--"பெண்"களூரு பயணத்திலேயே ஷதாப்தியில் பயணம் செய்பவர்கள் வருடக்கணக்காக அல்வா சாப்பிட்டு வருகின்றனர்! :))))))

      Delete
  4. // எல்லோரும் நல்லபடியா ஏறும் முன்னர் கதவு சார்த்தாமல் இருக்கணுமேனு பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன்.. //

    பிள்ளையார் பாவம்... அவரை விற்று... சே... அவரை விட்டு விடுங்கள்... பாரத் மாடு கீ ஜி என்று சொன்னால் உடனே கதவு மட்டுமல்ல... அனைத்தையும் திறந்து சொர்க்கத்திற்கு வழியும் காட்டும்...

    நன்றி அம்மா... ஒரு சாதாரண நெசவாளியின் மகன் சொல்லும் கருத்து... நன்றி அம்மா....

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்லறீங்கனு புரியாட்டியும் கருத்துக்கு நன்றி டிடி.

      Delete
  5. //ஆனந்த் போன்ற பழைய படங்களுமே// - அநியாயத்துக்கு இப்படி எழுதலாமா? இந்தப் படங்களெல்லாம் உங்களுக்கு புதுப் படமாச்சே... விட்டால் விமர்சனம் கூட எழுதுவீங்களே.... பரவாயில்லை.. இந்தத் தடவை எங்களைக் காப்பாற்றியதற்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்குப் புதுப்படங்கள் என்றால் எனக்கும் அப்படியா என்ன?

      Delete
  6. ரொம்ப நாள் நீங்க காணாமல் போன மாதிரி இருக்கு. பயணம் பயணம்னு தொடர்ந்து லீவு போட்டுட்டீங்க. வாங்க வாங்க..

    ReplyDelete
    Replies
    1. வரேன், வரேன், அநேகமா வெயில் முடியும் வரை யாரும் கூப்பிடமாட்டாங்கனு நம்பறேன். :)

      Delete
  7. பயண ஆரம்பம் ஜோராத்தான் இருக்கு. தேஜஸ் மெனு - சாதாரணமாத்தான் இருக்கு. தால் என்ற பெயரில் மஞ்சள் தண்ணீர்.... எப்படியோ ஐஸ்கிரீம் கொடுத்து உங்கள் வாக்கைப் பெற்றுவிட்டார்கள். (தேஜஸ் வண்டிக்கு)

    ReplyDelete
    Replies
    1. நெ.த. வெளிநாட்டுப் பயணங்களிலும் சரி, உள்நாட்டு ரயில் பயணங்களிலும் சரி, தால் நன்றாகவே இருக்கும். சப்ஜி தான் சொதப்புவாங்க! இதில் சப்ஜி நன்றாக இருந்தாலும் காரம்! ஆகையால் நான் சாப்பிடவில்லை. பனீர்த்துண்டங்கள் மட்டும் சாப்பிட்டேன். தால் உண்மையாகவே நன்றாக இருந்தது. பொதுவாகவே தமிழ்நாட்டு ஓட்டல்களில் சப்பாத்தி சகிக்காது. இது யார் கான்ட்ராக்டோ! சுமாரிலும் சுமார் ரகம் தான். மற்ற உணவுகள் பரவாயில்லை ரகம்.

      Delete
  8. ஆகா..
    எப்படியோ தேஜஸ் மகா புராணம் பாடியாயிற்று....

    சுத்தம்....
    நம் மக்கள் தான் எதிலும் படு சுத்தம் ஆயிற்றே...

    கொஞ்ச நாள் கழித்து எல்லாமும் சரியாகி விடும்....

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, அலுவலில் பிரச்னைகள் குறைந்துள்ளதா? தேஜஸ் புராணம் எல்லாம் இல்லை. தென் மாவட்டங்களுக்குக் குறிப்பாத் தமிழ்நாட்டு மக்களுக்கு இத்தகைய வண்டிகள் புதுசு! ஆகவே எப்படி இருக்குனு பார்க்க ஆவல். வண்டி என்னவோ நல்லாத்தான் இருக்கு. மக்கள் ஒத்துழைக்கணும். வெளிநாட்டில் இருந்து வரவங்க மதுரை வரை போக நேரே விமான நிலையத்திலிருந்து வந்து இந்த வண்டியைப் பிடித்துச் செல்லலாம். காலை ஆறு மணிக்கே சென்னை எழும்பூரில் இருந்து கிளம்புகிறது.

      Delete
  9. ஜன்னல் சீட் என்பதே அர்த்தமில்லாமல் போகிறதுகிட்டதடட சதாப்தி மாதிரிதானோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா. ரொம்ப நாட்களா உங்களை என்னோட பதிவுகளில் பார்க்க முடியலை! முந்தைய பதிவுகளுக்கு வரலையோ? ஜன்னல் சீட் ஆர்வமே இப்போதெல்லாம் இல்லை!

      Delete
  10. ஹாய் கீதாக்கா :) பிரயாணம்லாம் நல்லபடியா இருந்ததுன்னு நினைக்கிறேன் .
    தேஜஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு .
    கழிவறையில் யாராச்சும் உணவு வேஸ்ட்டை கொட்டுவாங்களா :( அழகான இரயில் சேவையையை நாசமாக்கிடுவாங்க இந்த மக்கள் .அதுக்குன்னு தனி bin வைக்கலாமே .

    ம்ம் சரி நான் மூன்று வீக்ஸ்க்கு பிஸி .நேரம் கிடைக்கும்போது பிளாக் பக்கம் வருவேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், இன்னிக்கு நீங்க வந்ததே நான் எதிர்பாராதது. எங்கே உங்க பூசார்? அவங்களும் பிசியா? மெதுவா உங்க வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வாங்க! எ.பி. பக்கம் போய்ப் பார்த்தால் காத்தாடுதேனு நினைச்சேன். நீங்க ரெண்டு பேரும் இல்லாமல் தான்! என்பதை இப்போப் புரிஞ்சு கொண்டேன். :)))))

      Delete
    2. மூன்று வாரம் லீவா? ஓ... அதுதான் எங்கேயும் காணோமா? நீங்க வராட்டா உங்க பாஸும் வரமாட்டார்களா ஏஞ்சல்?

      Delete
    3. காசி ட்ரிப் ஆர்கனைஸ் பண்ணினதிலே பூஸார் ஓய்விலே இருக்கு போல! மெதுவாத் தான் வருவேன்னு சொல்லிட்டுப் போயிருக்கு!

      Delete
  11. தேஜஸ் பார்க்கவே நல்லா இருக்கு. ஆனா விலை அதிகம்ன்னு நினைக்குறேன்.
    கழிவறையில் உணவை கொட்டலாமா?!
    எங்குமே கழிவறை சுத்தமாய் இருக்காதது இந்தியாவின் சாபக்கேடு

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, நம் மக்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். போதாதுக்கு அரசியல்வியாதிகள் இலவசங்களைக் கொடுத்துக் கெடுக்கின்றனர். அப்புறமா அவங்க எங்கே சுத்தமும், சுகாதாரமும் பேணுவது!

      Delete
  12. பேசாம டாம் அண்ட் ஜெர்ரி போட்டு விட்டிருக்கலாம் இல்லே? ஹும்!

    ReplyDelete
    Replies
    1. @divanna, ஹிஹி.

      நீங்க டிக்கெட் புக் பண்ணும் போதே உங்க வயதை கணக்கில் கொண்டு அந்த வருடம் ரிலீசான படங்களை போடுவாங்கலாம். தெரியாதா? :P

      Delete
    2. வாங்க திவாண்ணா! என்னை மாதிரிக் குழந்தைங்களுக்கு டாம் அன்ட் ஜெரி தான் பிடிக்கும் என்பது ரயில்வேகாரங்களுக்குத் தெரியலை பாருங்க! :))))))

      Delete
    3. அம்பி, டாம், எங்கே இந்தப்பக்கம் அதிசயமா? ஜி+ இல்லாமல் போரடிக்குதோ? :)))))

      Delete
  13. ஹை கீதாக்கா தேஜஸ் பார்க்க நல்லாருக்கு நீங்க சொல்லிருக்காப்ல விமானம் போல்தான்....இல்லையா டிவி எல்லாம் ...ஆனால் பாருங்க நம்ம மக்கள் இதை ஒழுங்கா யூஸ் பண்ணுவாங்களா? இல்லை இதிலயும் எல்லாத்தியயும் நாஸ்டி பண்ணுவாங்களோன்னு கூடவே பயமும் எழுகிறது. நல்ல காலம் நீங்க சேவை தொடங்கி ன சில நாட்கள்ல்ல போயிட்டீங்க. நாங்கல்லாம் மீன மேஷம் பார்த்து யோசிச்சு ஆராய்ந்து புக் பண்றதுக்குள்ள இதுவா தேஜஸூஉநு வடிவேலு ஸ்டைல்ல கேட்க வேண்டியாதாகிடும் போல ஹா ஹ ஹா ஹ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தி/கீதா, ஆனால் விமானத்தில் விட இங்கே கால் வைக்க வசதியா இருக்கு! உள்ளே போகவும், வெளியே வரவும் பிரச்னை இல்லை. விமானங்களில் உள்ளே போய் உட்கார்ந்துட்டால் நாம் வெளியே வரணும்னா எல்லோரும் எழுந்து கொண்டால் தானே முடியுது! உணவு வண்டியும் இங்கே விமானத்தில் உள்ளது போலவே இருக்கு. தள்ளிக் கொண்டு வராங்க!

      Delete
  14. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தேஜஸ் மெனு அத்தனை ஈர்க்கவில்லை....இது சாதாரணமா சதாப்தில கொடுக்கறது போலத்தானே இருக்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது மாலைக்கான சிற்றுண்டி தானே தி/கீதா. இதை விட அதிகமாக் கொடுக்க முடியாது. பிஸ்கட் 5ரூ, மில்க் சாக்லேட் 5 ரூ, ஆலு புஜியா 5 ரூ. உ.கி. சமோசா மட்டும் 15 அல்லது 20 இருக்கும். அதில் விலை போடவில்லை. அதைத் தவிர்த்துக் காஃபி அல்லது தேநீர். இவை தனியாகக் கேட்டாலும் தராங்கனு நினைக்கிறேன். எங்களுக்குத் தேவை இல்லை என்பதால் சிற்றுண்டியோடு கொடுத்த காஃபி தான்!

      Delete
    2. இதிலேயே முதல் வகுப்பில் போனால் சாப்பாடு மெனு மாறும். சூப்புடனே சாப்பிடவே நான்கைந்து ஐடங்கள் தருவார்கள். அதோடு உணவில் சப்பாத்தியா, பராத்தாவா, நானா என்றெல்லாம் கேட்டுப்பாங்க! நாங்க வடக்கே தில்லியில் இருந்து அமிர்தசர் போனப்போ முதல் வகுப்பு ஷதாப்தியில் போனோம். அப்போ உணவு நன்றாக இருந்ததோடு வயிற்றையும் ஒண்ணும் பண்ணலை. அநேகமா ஷதாப்தியில் வட மாநிலங்களிலேயே உணவு நன்றாகத் தருகின்றனர். இது அந்த கான்ட்ராக்டரைப் பொறுத்து இருக்கு!

      Delete
  15. நமது மக்களுக்கு நாகரீகம் என்பது தெரிவதில்லை.
    சுகாதாரமாக, சுத்தமாக வைத்துக்கொள்வது அரசு செயல் மட்டுமில்லை மக்கள் நினைத்தாலே நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, எல்லா வேலைகளும் முடிந்து இப்போக் கொஞ்சமானும் ஓய்வு கிடைச்சிருக்கா? மகன், மருமகள், மகள் , மருமகன் நன்றாக இருக்கின்றனரா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நம் மக்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர்கள் தானே. மாறுவதில் விருப்பம் இல்லை அவர்களுக்கு.

      Delete
  16. தேஜஸ் என்ன அதை விட சிறப்பாக இன்னும் எவ்வளவு வசதிகள் இருந்தாலும், நம் மக்களுக்கு - படித்தவர்கள், படிக்காதவர்கள் - என எல்லோருக்கும் அதனை சரியான முறையில் பயன்படுத்த விருப்பம் இல்லை! அரசு சொத்து தானே என்ற ஒரு இளப்பம். பல பயணங்களில் பார்த்த விஷயம் - கழிப்பறை பயன்பாடு - இன்னும் எத்தனை காலம் ஆனாலும் மாற விரும்பாதவர்கள் இங்கே நிறைய.

    இரயில், பேருந்து, விமானம் எல்லாமே இலவசமாகக் கொடுத்தால் எல்லோருக்கும் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஆமாம், மக்களுக்கு இலவசம் தான் பிடிக்கிறது. விமானப் பயணங்களில் மது கொடுக்கிறார்கள் என்பதால் நம் மக்கள் குறிப்பாய்த் தமிழர்கள் பலரும் திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிக் குடிப்பதைப் பல முறை வெளிநாட்டுப் பயணங்களில் பார்க்கிறேன். :( அதிலும் துபாயிலிருந்து இந்தியா வரும் விமானங்களில் அதிகம் காணலாம். மற்றபடி சுத்தம் என்பதை அங்கேயே விட்டுவிட்டு விமானம் ஏறுவார்கள். அதே போல் தான் இங்கேயும்.

      Delete
    2. துபாய்-இந்தியானு இல்லை.... நம்மவர்கள் பயணம் போகும் எல்லா விமானங்களிலும்தான். பிஸினெஸ் கிளாசில் ஒரு தடவை நம்மவர் ஓசி மதுவைக் கேட்டதைப் பார்க்க கொஞ்சம் அசிங்கமாவே இருந்தது. மிஞ்சி மிஞ்சிப்போனால், 2000 ரூபாய் கொடுத்தால் அவரே ஒரு பாட்டில் கொண்டுவந்திருக்கலாம். விமான ஓசியை அதிலும் இது இருக்கா அது இருக்கான்னு கேட்டதைப் பார்க்க அசிங்கமா இருந்தது.

      Delete
    3. நம்மவர்கள் இலவசம்னா வாயைப் பிளந்து கொண்டு வாங்குவாங்களே! அதிலும் இப்போதைய தேர்தலில் காங்கிரஸின் வாக்குறுதியான வருஷத்துக்கு 72,000 ரூபாய் என்பதை நினைத்துப் பார்க்கவே தலை சுத்தல் எடுக்கிறது!

      Delete
  17. கழிவறையில் ஃப்ளஷ் டாங்க் ஏர் ப்ளாக் ஆகிவிட்டதாயும் கூறினார். //

    அதோடு இல்லாமல் சாப்பாடு பரிமாறுப்வர்கள் அவர்கள் பங்குக்கு மிச்சம் இருப்பதை எல்லாம் அந்தக் கழிவறையில் கொட்டுவதால் கழிவறைச் சுவர் எல்லாம் கறை மயம்!//

    போச்சு போங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பத்தான் ரயில் விட்டுருக்காங்க....ஆரம்பமே சரியில்லையே...அப்ப நாங்கல்லாம் பயனிக்கும் போது ரொம்பவே கலர் மாறி ....என்னவோ போங்க நம்ம ஊருக்கு இப்படியான ரயில் எல்லாம் சரிப்பட்டு வராதுனு தோணுது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எதையுமே இலவசமாய்க் கொடுத்து வாங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கு நல்ல பொருளைக் கொடுத்தால் அதை வைச்சுக்கத் தெரியுமா என்ன? விமானப் பயணங்களிலேயே இப்போதெல்லாம் பாமர மக்கள் கூட அதிகம் பயணிப்பதைப் பார்க்கிறேன். விமானக் கட்டணங்கள் குறைந்திருப்பது காரணம் என்றாலும் பலரின் மகன், மகள் நல்ல வேலைகளில் இருப்பதால் அவர்களால் பெற்றோருக்குச் செலவு செய்ய முடிகிறது. இதை உணர்ந்தவர்கள் கூடவே சுத்தம், சுகாதாரம் என்பனவற்றையும் கடைப்பிடிக்கணும். அது தான் இடிக்கிறது.

      Delete
  18. இப்பெல்லாம் இந்தியாவில் ரயில்பயணம் நல்லாவே இருக்கு போல! பெங்களூருக்கு அந்த டபுள்டெக்கர்லே போகலாமுன்னு ஆசை. இங்கிருந்து எந்த ரயிலுக்கும் புக் பண்ணவே முடியலை. அதிலும் நமக்கு ஆதார் கார்டு இல்லை பாருங்க. OCI கொடுத்துருக்காங்க. அதுலே ஓட்டுப்போடும் உரிமை மட்டும் இல்லை. மத்தபடி எல்லா சிவிலியன்களுக்கும் உள்ள உரிமை உண்டுன்னு சொல்லி இருக்கு. ஆனாலும் ரயில் இப்படிப் படுத்துதேப்பா..... பார்க்கலாம். அங்கே வந்தபின் ரயிலுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யமுடியுமான்னு.....

    ReplyDelete
    Replies
    1. துளசி, ஐஆர்சிடிசியில் உங்களுக்குக் கணக்கு இருக்கா? அதாவது ரயிலில் முன்பதிவுப் பயணச்சீட்டு வாங்குவதற்கென நீங்கள் கணக்குத் துவங்கி இருக்கீங்களா? எங்க பையர் இந்தியா வரும்போதெல்லாம் போக வேண்டிய இடங்களுக்குத் திட்டமிட்டு அங்கிருந்தே ரயிலில் முன்பதிவு செய்துவிடுவார். நாங்களும் யு.எஸ்ஸில் இருந்து சில முறை முன்பதிவு செய்திருக்கோம். ஆகவே உங்களுக்கு வேறே ஏதோ பிரச்னை, அதனால் முன் பதிவு செய்ய முடியலைனு நினைக்கிறேன். நீங்க பயணம் செய்ய வேண்டிய தேதிகளைக் குறிப்பிட்டு உங்க உறவினர்கள் மூலம் இந்தியாவிலேயே முன் பதிவு செய்யச் சொல்லலாம். முயன்று பாருங்கள்.

      Delete
    2. எங்க பொண்ணு, பையர் குடும்பங்களுக்கும் ஓசிஐ தான்.

      Delete
    3. //பெங்களூருக்கு அந்த டபுள்டெக்கர்லே போகலாமுன்னு ஆசை. //
      ஏன் இந்த வேண்டாத ஆசை? காலை நீட்ட முடியாது. மேலும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஏறி, இறங்கி, அவஸ்தை பட வேண்டும்.

      Delete
    4. ஆமாம், துளசி, பானுமதி சொல்லி இருக்கிறாப்போல் டபுள் டெக்கர் ஆசை எனக்கும் விசித்திரமாய்த் தோன்றியது! நானெல்லாம் அதில் ஏறவே மாட்டேன். எதுக்கு வம்பு! :)))) அதே போல் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளிலும் ஏறவே மாட்டேன்! :)))))

      Delete
    5. ​டீச்சர் உங்கள் பதிவு மட்டும் படிப்பாங்க போலிருக்கு!

      Delete
    6. அப்படி இல்லை ஶ்ரீராம், அவங்களோட பதிவுகளிலேமுக்கியமானவற்றிலே நானும் என்னோட பதிவுகளிலேசிலவற்றில் அவங்களும் கருத்துப் பரிமாறிப்போம். அப்படிச் சில பதிவுகளில் இரண்டு பேரும் கருத்துப் பரிமாற்றம் செய்வோம். செய்துப்போம்.எல்லாத்துக்கும் இல்லை. இந்தப் பதிவில் தேஜஸ் விஷயம் புதுசுனு வந்து கருத்திட்டு இருக்காங்க! :)))))

      Delete
  19. வணக்கம் சகோதரி

    தேஜஸான பயணம் நன்றாக இருந்ததோ இல்லையோ, நீங்கள் எழுதியது தேஜஸாக இருந்தது. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். படங்களும் (நீங்கள் எடுத்து போட்டது) நன்றாக உள்ளது. தற்சமயம் பேருந்துகளும் இப்படித்தான் வசதிகளாக வந்து விட்டன.முன்பெல்லாம் மாட்டுவண்டி, குதிரைவண்டி என கட்டிக் கொண்டு நம்வீட்டு பெரியவர்கள் எப்படித்தான் பயணித்தார்களோ என ஆச்சரியமாக உள்ளது.

    ஒரு காலத்தில் பேருந்தில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே நாம் பயணித்தோம். (ஒரு தடவை அவசரமாக நாங்கள் பயணித்ததில்,மதுரை திருமங்கலத்திலிருந்து திருநெல்வேலி வரை இருக்கை இல்லாமல் நின்றே பயணம் செய்தோம்.) அப்புறம் குறிப்பிட்ட அமரும் இருக்கைகளை தவிர எவரையும் ஏற்றாத பேருந்துகளில், கொஞ்சம் சாய்வாக படுத்தாலும், உறக்கங்களுக்கிடையே வரும் முழிப்புமாக இருக்கும் பேருந்துகளில்,என பயணித்தோம். இப்போது முன்பதிவு செய்து விட்டால், படுத்துக் கொண்டே(உருண்டு உண்டியல் மாதிரி குலுங்கி கொண்டே) பயணிக்கும் வசதிகள் வந்திருக்கின்றன. ஆயினும் பேருந்தை விட இரயில் பயணம் அனைவரும் விரும்பி ஏற்பது இரயில் வந்த காலந்தொட்டு இயல்பாகி விட்டது. இரயில் பயணங்களும் கொடுக்கும் பணத்தைப் பொறுத்து மிகவும் வசதி கொண்டவைகளாக இருக்கின்றது.

    வாழ்க்கைப் பயணத்தில் இப்படி ஏகப்பட்ட பயணங்கள்..அத்தியாவசியமாக உள்ளதே..என்ன செய்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தாங்கள் புதிர் போட்டு ஆரம்பித்த இரு கோவில்களின் பதிவு இன்னமும் தொடங்கப்படவேயில்லையே.. ஹா ஹா.
    நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நான் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்லாத்திலேயும் பயணம் செய்திருக்கேன். குதிரை வண்டி மதுரையில் முன்னெல்லாம் அதிகம் உண்டு. அங்கே குதிரை வண்டியில் போவது எனில் அப்போல்லாம் ரொம்பப் பெரிய பணக்காரங்கனு ஒரு நினைப்பு உண்டு. என் பெரியப்பா தினசரி கோர்ட்டுக்குப் போக சொந்தக் குதிரை வண்டியே வைத்திருந்தார். :))))) மாட்டு வண்டி புக்ககத்தினர் தயவில் பயணம்! ஆனாலும் எனக்கு எப்போவுமே பேருந்துப் பயணத்தை விட ரயில் பயணமே பிடிக்கும். அதிலும் நிறையவே போயிட்டு வந்தாச்சு!

      Delete
    2. கமலா அக்காவை எங்கள் பக்கம் காணோமே....!

      Delete
    3. கமலாவை இப்போக் கொஞ்ச நாட்களாக மறுபடி காணோம்.உடல் நலம் சரியில்லைனு நினைக்கிறேன்.

      Delete
  20. பயண அனுபவம், புது ரயில் விவரம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    மக்கள் புது ரயிலை பாழ்படுத்தாமல் இருக்க வேண்டும்.
    அந்தியோதயா ரயிலும் நன்றாக இருந்தது கழிவறை. மக்கள் அதை நல்ல முறையில் வைத்துக் கொள்வது நமது கடமை என்று எண்ண வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உங்க பதிவுகளுக்கெல்லாமும் வரணும். அந்த்யோதயா பத்தி நானும் கேள்விப் பட்டேன். திருச்சி, சென்னைக்குப் பயணச் சீட்டுக் கேட்கையில் அது வராது! தாம்பரம் வரை என்பதாலோ? ஒரு முறை வாய்ப்புக் கிடைச்சால் பயணிக்க வேண்டும். கோவைக்கு ஷதாப்தியில் போனோம்! சகிக்கவே இல்லை! :(

      Delete
    2. சங்கமித்ரா ரயிலும் நன்றாகவே பராமரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கழிவறைகள். மக்கள்தான் சரியாக தண்ணீர் ஊற்றாமல் வந்து விடுகின்றனர்.

      Delete
    3. சங்கமித்ரா இப்போப்புது அறிமுகம்னு நினைக்கிறேன் ஶ்ரீராம். நாங்க போனப்போ கங்கா, காவேரியிலே போனோம்.இருபது வருஷங்கள் முன்னர்!

      Delete
  21. பயணங்கள் முடிந்ததா? நீங்கள் இல்லாமல் ஏ.பி.யில் ஒரு கை குறைந்தது. வெய்யில் காலத்தில் பயணம் செய்வது கடினம். தேஜஸ் சிறப்பாக இருக்கிறது போலிருக்கிறது. பொது டாய்லெட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள நம் மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் ஒரு நூறு வருடம் ஆகுமா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, பானுமதி. எ.பி.யில் ஒரு கையா, நான்கு கைகள் அல்லவோ குறைந்திருக்கின்றன. மிச்சம் 3 கைகளும் எப்போ வருமோ தெரியலை! ஏஞ்சல் 2 வாரம் அல்லது அதற்கு மேல்னு சொல்லிட்டார். இனி நானும் ஒவ்வொரு பதிவுக்கா வந்து படிக்கணும். :))))

      Delete
  22. தேஜஸில் பயணம் செய்ய நானும் காத்திருக்கிறேன். 2016 ஏப்ரலுக்குப் பின் மதுரை செல்ல வேண்டிய வாய்ப்பே அமையவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலிருந்து காலை ஆறு மணிக்குக் கிளம்புகிறது தேஜஸ்! எனக்கென்னமோ இப்போல்லாம் அந்த மாதிரிக் காலங்கார்த்தாலே எழுந்து போவது என்பது முடியாமல் இருக்கிறது! ஆகவே நான் சென்னையிலிருந்து போக இதை விரும்பவில்லை. மாலை 3 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்புகிறது. திருச்சிக்கு வரச்சே ஐந்து மணி ஆயிடும். ஆகவே இது வசதி!

      Delete
  23. டீவி பார்க்கும் பொறுமை எல்லாம் இருக்காது என்றே நினைக்கிறேன். புத்தகம் கொண்டுபோனாலே படிக்கத் தோன்றுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிறவங்க பார்க்கத் தான் செய்யறாங்க! ஒரு சிலர் மொபைலிலேயே எல்லாம் பார்க்கின்றனர். நானெல்லாம் மொபைலைப் பயன்படுத்துவதே குறைவு!

      Delete
  24. வைகை போன்ற வண்டிகளில் சூப் என்பது தக்காளியைப் போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீர் போல இருக்கும். இங்கு நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள். பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், சூப்பெல்லாம் வடக்கே இருக்கும் ரயில்களில் குறிப்பாக ஷதாப்திகளில் நன்றாக இருக்கும். ஆனால் சென்னை, பெண்களூரு ஷதாப்தியில் அவ்வளவு நன்றாக இல்லை! இது உண்மையாகவே நல்ல கெட்டியாக மிளகு காரத்துடன், வெண்ணெய் வாசனையுடன் நன்றாக இருந்தது. சூடாகவும் இருந்தது.

      Delete