எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 29, 2019

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 13

திருப்பாவைப் பதிவுகள் 13 க்கான பட முடிவு   திருப்பாவைப் பதிவுகள் 13 க்கான பட முடிவு


திருப்பாவைப் பதிவுகள் 13 க்கான பட முடிவு

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!

புள் எனப் பறவைகளைக் குறித்துச் சொல்லி இருப்பதால் பறவைகளைக் கோலமாக வரையலாம். ஆனால் இங்கே சொல்லி இருக்கும் பறவை அரக்கனாக இருந்து பறவை வடிவில் வந்த பகாசுரனைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

திருப்பாவைக் கோலங்கள் க்கான பட முடிவு   திருப்பாவைக் கோலங்கள் க்கான பட முடிவு

கோலங்கள் படங்களுக்கு நன்றி கூகிளார்!

இந்த மாதமே கண்ணனையும் அவன் லீலைகளையும் குறித்து நினைந்து ஆனந்திக்கும் மாதம்.  அத்தகைய தண்மையான மாதத்தில் குள்ளக் குளிரக் குடைந்து தண்ணென்ற நீரில் நீராடாமல் இருக்கும் தோழியைத் தூக்கமாகிய இருட்டிலிருந்து விழிப்பு என்னும் வெளிச்சத்திற்கு வரச் சொல்கிறாள் ஆண்டாள். இங்கே தூக்கம் அறியாமை என்னும் இருளையும், ஞானம் என்னும் வெளிச்சத்தை விடிவெள்ளியாகவும் மறைபொருளாகச் சுட்டப்படுகிறது.

ராவணனை வதம் செய்த சாக்ஷாத் அந்த மஹாவிஷ்ணு என்னும் நாராயணனை, பறவை வடிவெடுத்து வந்த அரக்கனையும் பிளந்து தள்ளிய கண்ணன் அவதாரத்தில் வந்த நாராயணனின் நாமத்தைச் சொல்லாமல் தூக்கம் என்னும் பெரும் இருட்டில் ஆழ்ந்திருக்கும் தோழியை அதோ பார், வெள்ளி முளைத்தது, வியாழம் உறங்கப் போயிற்று.  நீயும் எழுந்திரு என்கிறாள் ஆண்டாள்.

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்=

ஆண்டாள் பாட்டுக்கு முந்தைய பாட்டில் ஸ்ரீராமனைப் பற்றிப் பாட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள், சில கோபியருக்குக் கோபம் வந்திருக்கு போல! அவங்க இங்கே மறுபடியும் கிருஷ்ணனைத் துதிக்க ஆரம்பிச்சாச்சு! புள்ளின் வாய்க் கீண்டானை என்பது இங்கே பகாசுரன் கொக்காய் வந்து கிருஷ்ணனைக் கொல்ல வந்தபோது அந்தக் கொக்கின் வாயைக் கண்ணன் பிளக்க முயன்றதைக் குறிக்கும். அதைக் குறித்துச் சில கோபியர்கள் பாட, ஆண்டாளோ விடாமல் ஸ்ரீராமனையே குறித்துச் சொல்கிறாள். நாலு பெண்கள் சேர்ந்தாலே பேச்சு அதிகம். இங்கேயோ பாகவதர்களின் விசேஷம் வேறே. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று ப்ரீதி. அது போலத் தான். ஆண்டாள் பாட்டுக்குப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை அப்படினு முந்திய பாடலின் தொடர்ச்சியாக ராவணனின் பத்துத் தலைகளையும் ஸ்ரீராமன் அறுத்ததைக் குறிப்பிடுகிறாள். அப்படிப் பட்ட பரம்பொருளின் கீர்த்திகளைப் பாடிக்கொண்டே போவோம்.


பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!=

இங்கே பிள்ளைகள் என்று கூறி இருப்பது மீண்டும் பாவை நோன்பு நூற்கும் பெண்களையே. தென்மாவட்டங்களில் இன்றும் பெண்குழந்தைகளைப் பெண்பிள்ளை என்று கூறுவதும், ஏ, பிள்ளே, என அழைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. மேலே ஒருத்தி ஸ்ரீகிருஷ்ணனையும், மற்றொருத்தி ஸ்ரீராமனையும் பாட ஆரம்பிக்கவும், ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டால் வேலைக்காகாது என இன்னொருத்தி, சரி, சரி, எல்லாப் பெண்பிள்ளைகளும் பாவை நோன்புக்காக நதிக்கரைக்குப் போய்ப் பாவையைப் பிடித்து வைத்து வழிபாட்டுக்கு ஆரம்பிக்கப்போகிறார்கள். அதோடயா?? ஆச்சரியமான வாநிலை அறிக்கையும் தருகிறாள் ஆண்டாள் இங்கே. வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று என்கிறாள். சுக்கிரன் உதயம் ஆகி வியாழ கிரஹம் அஸ்தமனம் ஆகிவிட்டதாம். ஆகையால் பொழுது விடிந்துவிட்டதே? இன்னுமா நீ தூங்குகிறாய்?? அந்தக் காலகட்டங்களிலே பெண்கள் கிரஹ சஞ்சாரங்களை எல்லாம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்பவர்களாய் அறிவு நிரம்பி இருந்திருக்கின்றனர். மற்றப் பறவைகளும் காச், மூச்சென்று கத்த ஆரம்பிச்சாச்சு, ஏ பெண்ணே, மலர் போன்ற கண்களை உடையவளே,

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்! =

சீக்கிரம் வந்து நதியில் ஆழ்ந்து அமுங்கிக் குளிரக் குளிரக் குளித்தால் குளிரெல்லாம் போய்விடும். அதாவது ஸ்ரீகிருஷ்ண பக்தி அநுபவம் என்ற நதியில் மூழ்கி முங்கி எழுந்தால் நம் பாவங்களாகிய குளிர் போய்விடும். மேலும் தாமதம் ஆவதற்குள்ளாக சும்மாக் குளிருது, குளிருதுனு பொய் சொல்லி நடிக்காமல் வா, பெண்ணே!

இங்கே நம் மனம் ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்.

பட்டத்திரியோ முக்குணங்களால் கிடைக்கும் வெவ்வேறு பலாபலன்களையுமே பகவானைச் சேவிப்பதும், பகவானின் க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதுமாகிய செயல்களை நிர்பலனாக நிஷ்களங்கமாகப்பரிபூரண மனதோடு செய்து வந்தால் அதிலேயே முக்தி அடையலாம் என்கிறார்.

த்ரைகுண்யாத் பிந்ந ரூபம் பவதி ஹி புவனே ஹீநமத்யோத்தமம் யத்
ஜ்ஞாநம் ஸ்ரத்தா சகர்த்தா வஸதிரபி ச ஸுகம் கர்ம சாஹார பேதா:
த்வத் க்ஷேத்ர த்வந்நிஷேவாதி து யதிஹ புநஸ் த்வத்பரம் தத்துஸர்வம்
பராஹூர் நைர்குண்ய நிஷ்டம் ததநு பஜநதோ மங்க்ஷு ஸித்தோ பவேயம்






  

16 comments:

  1. விளக்கங்களைப்படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  2. படித்தேன் நன்று தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    இன்றைய பாசுரம் 13ம் அருமையாக உள்ளது. அதன் விளக்கங்கள் புரிந்து கொண்டேன். அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்.

    /இங்கே நம் மனம் ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்./

    உண்மை.. மனம் ஒரு நிலையில்லாமல் அங்குமிங்கும் தாவும் வண்ணம் உள்ளது. இதைதான "மனம் ஒரு குரங்கு" என்றார்களோ? பக்தி குளத்தில் ஆழ்ந்து முங்கி எழ அந்த பரமன்தான் அருள வேண்டும். அதற்கு அவன் திருவடியைப் பற்றி நாள்தோறும் பணியும் அருளையும் அவன் தர வேண்டும். பிரார்த்திக்கிறேன்.

    இது போல் நேற்றைய பாசுரத்தை நீங்கள் பகிர்ந்த அழகுக்கு ஒரு கருத்துரை தந்திருந்தேன். அதைத்தான் காணாமல் போய் விட்டதென குறிப்பிட்டிருந்தேன்.

    நேற்றைய பாசுர பாடலும் அதன் விளக்கமும் அழகாக இருந்தது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. பரமனின் அருளால் தொடர்ந்து எழுதுங்கள். படிக்க நானும் காத்திருக்கிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கமலா. நேற்றைய பதிவில் உங்கள் கருத்துரை எதுவும் எனக்குக் கிட்டவில்லை. ஸ்பாமில் கூடப் போய்த் தேடியாச்சு! இன்றைய பதிவுக்கான உங்கள் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி. உளமாரப்பாராட்டுவதற்கும் நன்றி.

      Delete
  4. அருமை...

    திருப்பாசுர விளக்கங்களால் காலைப் பொழுது இனிமையாகிறது...

    ஆண்டாள் திருவடிகள் போற்றி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை, உங்களுக்கு நேரமும் இணையமும் கிடைக்கையில் வாருங்கள்!

      Delete
  5. //ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்.//

    உலக இன்பங்களில் முழ்கி போகாமல் இறைவனிடமும் மனதை செலுத்தினால் நல்லது.

    பாடல் விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி! தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி.

      Delete
  6. அழகான விளக்கம். தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. இறைபக்தி என்பதே ஆனந்தப் பெருவெள்ளம்..

    அதில் -
    ஒரு ஓரமாக ஆகிலும் நீராடி நலம் பெறுவோம்.

    ReplyDelete
  8. ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி துரை!

    ReplyDelete
  9. மீண்டும் தாமதம். இனிய காலை வணக்கம் கீதாமா.
    சென்னையில் கல்யாண்புரம் ஆராவமுதன் சொல்லும்பொது
    இத்தனை உற்சாகத்தையும் உணர்வேன். நீங்களும் பகவ்த் அனுபவத்தில்
    திளைந்து எங்களுக்கும் அறியக் கொடுக்கிறீர்கள். நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete