ஐஸ்லாந்தில் இருந்து வெளியே வந்ததும் கொஞ்ச நேரம் வெளியே உட்கார்ந்து உடல் சீதோஷ்ணத்தைச் சமன் படுத்திக் கொண்டோம். கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னர் குழந்தைக்கும் ஆடைகளை மாற்றிக் கொண்டார்கள். பின்னர் பையர் அனைவருக்கும் காஃபி வாங்கி வந்தார். அதைக் குடித்துக் கொஞ்சம் தெம்பு வந்த பின்னர் விளக்கு அலங்காரங்களைப் பார்க்கக் கிளம்பினோம். சுமார் இரண்டரை மைல் நீளம் என்று பையர் சொல்லி இருந்தார். ஆனால் அதை விடக் கூடவே இருந்திருக்குமோனு நினைத்தோம். கிறிஸ்துமஸுக்கு முன்னிருந்து ஆரம்பித்துப் புது வருடம் வரை விளக்கு அலங்காரங்கள் கண்களையும், கருத்தையும் கவர்கின்றன. அநேகமாக நாங்க இருக்கும் பையர் வீட்டுப் பகுதியில் தீபாவளிக்கு ஆரம்பிக்கும் விளக்கு அலங்காரங்கள் ஆங்கிலப் புது வருடம் வரை தொடர்கிறது. பலரும் அவரவர் வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.
பலர் வீடுகளிலும் மாட்டுத் தொழுவம் போல் அமைத்து குழந்தை ஏசு பிறப்பைப் பொம்மைகளால் அமைக்கின்றனர். எல்லார் வீட்டு வாசலிலும் நக்ஷத்திரங்கள் தொங்கும். இதை இந்தியாவிலும் பார்க்கலாம். ஆஙாங்கே பெரிய பெரிய வணிக வளாகங்களில் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர் சான்டா க்ளாஸ் வேடம் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். குழந்தைகள் அவருடன் படம் பிடித்துக்கொள்வார்கள். பல சமயங்களில் பெரியவர்களும் தங்கள் குடும்பத்தோடு படம் எடுத்துக் கொள்வார்கள். கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட திரைப்படமும் காட்டுவார்கள். அப்படி ஒரு 3D படம் இங்கேயும் காட்டினார்கள். வட துருவத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிய படம் அது. குட்டிக் குஞ்சுலுவுக்குக் கண்ணாடியைப் போட்டு விட்டால் முதலில் சந்தோஷமாகப் பார்த்தது. பின்னர் அதில் பெரிய பெரிய உயிர் வாழ் ஜந்துக்கள் வரவும் அதுக்குப் பிடிக்கலை. கண்ணாடியைக் கழட்டி விட்டது. அங்கிருந்து தான் நேரே விளக்கு அலங்காரங்கள் பார்க்கப் போகணும்.
குழந்தைக்காக ஸ்ட்ரோலர் எடுத்து வந்திருந்ததால் அதில் குழந்தையை உட்கார வைத்துத் தள்ளிக்கொண்டு சென்றார்கள். ஆனால் குஞ்சுலு கடுமையாகத் தன் ஆக்ஷேபங்களைத் தெரிவித்தது. தானும் நடந்தோ அல்லது ஓடியோ தான் வருவேன் எனப் பிடிவாதம். சரினு கொஞ்ச தூரம் நடக்க விட்டார்கள். நாங்கள் கொஞ்சம் மெதுவாகவே சென்றோம். இரண்டு பக்கங்களிலும் வண்ண விளக்கு அலங்காரங்கள். இது "பே" எனப்படும் விரிகுடாப் பகுதி என்பதால் Back waters கொஞ்சம் இருக்கும். மணல் பகுதியும் இருக்கும். எல்லா இடங்களிலும் விளக்கு அலங்காரங்கள்.
ஐஸ்லாந்தில் இருந்து வெளியே வரும் இடத்தில் இருந்த விடுதி! இங்கே சாக்லேட் பானம் மட்டும் சூடாகக் கிடைக்கும்.
போகும் வழியில் இம்மாதிரிச் சின்னச் சின்னக் கூண்டுகளில் உடலுக்குச் சூடு செய்து கொள்ளும் வசதி!
ஆர்க்டிக் ஸ்லைட் என்னும் வட துருவக் குளிர்ப் பிரதேசத்தின் மாதிரி. இதைப் பார்க்கக் கீழே காணும் ரயிலில் செல்ல வேண்டும் அல்லது நடந்து போகணும். ரயிலில் செல்ல வசதிக்குறைவு. உட்கார இயலாது. அதைப் பார்க்கப் போனால் விளக்கு அலங்காரங்களைப் பார்க்க நேரம் எடுக்கும் என்பதால் வெளியே இருந்தே பார்த்துவிட்டு மேலும் விளக்குகளைப் பார்க்கச் சென்றோம்.
விளக்கு அலங்காரங்களை நானே கொஞ்ச தூரம் தான் எடுத்தேன். அதிலும் தேர்ந்தெடுத்த படங்களையே போடுவேன். இன்னும் ஓரிரு நாட்கள் வரலாம்.

விளக்கு அலங்காரங்களைப் பார்க்கச் செல்லும் வழி
நுழையும் இடம்