எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 08, 2021

என்னவோ சொல்றேன்!

கிட்டத்தட்ட 2750 பதிவுகள் வெளி வந்திருக்கின்றன. இதில் மீள் பதிவுகள் 50 இருக்கலாம். ஆரம்ப காலங்களின் மொக்கைப் பதிவுகள் 100 இருக்கலாம். உருப்படியாத் தேத்துவது எனில் 2000 இருந்தால் அதிகம். கொஞ்ச நாட்களாக இடைவெளி கொடுக்கணும்னு எழுதவில்லை. ஆனால் இந்த நாட்களில் புத்தகங்கள் படித்தேன். ஆன்லைனில் கிடைத்த புத்தகங்களைத் தரவிறக்கிக் கொண்டு படித்தேன். அநுத்தமாவின் 3 புத்தகங்கள், பிவிஆரின் 2/3 புத்தகங்கள் என்று படித்தேன். ராஜம் கிருஷ்ணனின் "அமுதமாகி வருக!" கிடைக்கவே இல்லை. அருமையான கதையம்சம் உள்ளது. ராஜம் கிருஷ்ணன் எழுத ஆரம்பித்த புதுசில் எழுதி இருக்கணும். அதில் பைகாரா-குந்தா திட்டம் செயல்பட ஆரம்பித்தது குறித்தும் அந்த நீர் மின் திட்டம்/அணைக்கட்டுக் கட்டியது பற்றியும் எழுதி இருப்பார். முன்னரே படிச்சிருந்தாலும் இப்போது மீண்டும் படிக்க ஆவல். இம்மாதிரிச் சில நாவல்கள் தான் மறுபடி படிக்கும் ஆவலைத் தூண்டும். அந்த வகையில் சலிக்காத எழுத்தாளர்கள் கல்கியும், தேவனும்.
**********************************************************************************
ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லை என்பதால் நான் அரசியலுக்கூ வரப்போவதில்லைனு அறிவிச்சுட்டார். ஆனாலும் எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைத்துவரச் செய்யப்படும் முயற்சிகள் பற்றியே பேச்சு! காது புளித்துப் போய்விட்டது. அவர் வந்து மட்டும் என்ன செய்ய முடியும்? நிர்வாகத்தில் பழகி இருக்காரா? அரசியலில் அரிச்சுவடி தெரியுமா? மக்களிடையே அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்கு ஓர் அரசை நடத்த உதவியாய் இருக்குமா? அப்படியே அவர் வந்து விட்டாலும் அவர் உடல் நிலை இருக்கும் நிலையில் அவரால் அலைந்து, திரிந்து பிரசாரங்கள் பண்ண முடியுமா? அரசாங்கத்தை நடத்தும் நடைமுறைகளைக் கற்று அரசை நடத்துவதற்கே குறைந்த பட்சம்  ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகும். எல்லா விஷயங்களையும் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களுடனான நட்பு, மத்திய அரசுடன் நடந்து கொள்ளும் முறை என எத்தனையோ இருக்கு! இதுக்கு நடுவில் நம் தமிழக மீனவர்களின் குறைகள். அவங்கல்லாம் ரஜினி வந்து இலங்கை அரசைப் பார்த்துச் சிரித்தாலோ அல்லது திரைப்படங்களில் நடிக்கும் முறையில் கையசைவு, கண்ணசைவிலேயோ எல்லாத்தையும் முடிச்சுடுவார்னு நினைக்கறாங்களோ? ஒண்ணும் புரியலை!

நம்ம மக்கள் திரைப்பட நடிகர்கள் திரைப்படங்களில் நாட்டை ஆட்சி செய்து கொடியவர்கள் எல்லோரையும் வெற்றி கொண்டு ஒரே பாடலில் நாட்டில் கொண்டு வரும் மாற்றங்களைப் போல் இங்கேயும் ஆட்சிக்கு வந்து ஒரே பாடலில் தமிழகத்தையும் முன்னேற்றி விடுவார்கள் என நினைக்கிறாங்க போல! அது இயக்குநர் சொல்லிச் செய்வது. உண்மையில் அவங்க ஆட்சிக்கு வந்து இதை எல்லாம் செய்ய வேண்டியது என ஆரம்பித்தால்! எங்கேயோ போயிடும். தமிழக மக்கள் இன்னமும் கனவுலகிலேயே மிதக்கின்றனர். டாஸ்மாக்கையும், திரைப்படத்தையும் விட்டால் அவங்களுக்கு வேறே பொது அறிவு தேவை இல்லைனு வைச்சுட்டாங்க போல!
***********************************************************************************
காலம் இல்லாக் காலத்தில் மழை வேறு! சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக இருப்பதைத் தொலைக்காட்சி மூலம் பார்த்தோம். கவலையாகத் தான் இருக்கிறது. சூரியன் இங்கே தலைகாட்டிப் பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகப் போகிறது. இதில் ஏழெட்டு நாட்கள் மழையில் கழிந்தன. மற்ற நாட்களில் தூறுவதும் பின்னர் நிற்பதுமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன. இன்றும் காலையிலிருந்து வானம் மூடி இருந்துவிட்டுப் பின்னர் 2 மணியில் இருந்து தூற்றல். இப்போக் கொஞ்சம் நின்னிருக்கு! மார்கழி மழை அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்களுக்கு ஆகாது. பயிர்கள் எல்லாம் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன.  இயற்கைச் சீற்றமா? அல்லது மாற்றமா? தெரியவில்லை. பருவகாலமே மாறிக்கொண்டிருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இனி வரும் நாட்கள் கடுமையான வெப்பம் இருக்கும் எனத் தோன்றுகிறது.
***********************************************************************************
புதிய கொரோனாவும் ஆபத்தை விளைவிக்கிறது எனப் பார்த்தால் பறவைக்காய்ச்சல் வேறே! மனிதர்களுக்குப் பரவுமாம். ஆனால் ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு வராதாம். ஒண்ணும் புரியலை. கேரளாவில் கொரோனாவும், பறவைக்காய்ச்சலும் முழு வீச்சில் இருக்கிறது. நாம் தான் கவனமாக இருக்கணும். கொரோனாவுக்குக் கண்டுபிடித்திருக்கும் தடுப்பு மருந்துகள் பற்றி இருவகையான கருத்துகள் நிலவுகின்றன. அதை யாருக்கு முன்னுரிமை கொடுத்துக் கொடுப்பது என்பதிலும் கருத்து வேறுபாடுகள். ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்கின்றனர். ஊசியைப் போட்டுக் கொண்டு ஒரு மணி நேரமாவது மருத்துவ மனையில் இருந்து பக்க விளைவுகள் இல்லை என்றாலே நம்பலாம்/நம்ப முடியும். 
***********************************************************************************
அரங்கனைப் பார்த்தே ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. கோயிலில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்தால் நம்மால் அவ்வளவு நேரம் நிற்க முடியாது என்பதாலும் விட்டு விட்டுப் பெய்யும் மழையாலும் போக முடியவில்லை/ போக முயற்சியும் செய்யலை என்பதே உண்மை. பயம் தான் காரணம். இன்று கூட வெளியே போகவேண்டிய வேலை இருந்தது. ஆனால் போகவில்லை. தவிர்த்து விட்டோம். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி? சென்னை போகணும். ஆனால் போக பயமா இருக்கு! அங்கிருந்து வருபவர்கள் சொல்வதைக் கேட்டால் சென்னைக்குப் போகவே வேண்டாமே என்று தோன்றுகிறது/ அதே சமயம் சென்னையில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலும் இருக்கிறது. எல்லோரும் இருக்காங்களே! பத்திரமாக இருக்கணும்னு பிரார்த்தனைகள் தான் செய்ய முடியும். சாதாரணமாக இருந்திருந்தால் இதோடு 2 முறையாவது சென்னைக்கு வந்திருப்போம். இப்போக் கிளம்பவே யோசனை!
**********************************************************************************
சஹானாவில் என்னென்னவோ போட்டிகள்! பரிசுகள்! ஏடிஎம் சொல்லிட்டே இருக்காங்க. இந்தப் புத்தகப் போட்டியிலோ அல்லது வாசிப்புப் போட்டியிலோ கலந்து கொள்ள என்னால் முடியலை. ஏனெனில் கிண்டிலில் இருந்து புத்தகம் தரவிறக்கி வாசிக்கவோ அல்லது ஆன்லைனிலேயே அந்தப் புத்தகத்தைப் பார்க்கவோ படிக்கவோ புத்தகங்களைத் திறக்கவே முடிவதில்லை. சொல்லப்போனால் நான் இரு சமையல் புத்தகங்கள் வெளியிட்டிருக்கேன். இரண்டையும் என்னால் திறந்தோ என்னுடைய கணினியில் தரவிறக்கிக் கொண்டோ பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. ஆகவே இந்த பென் டு பப்ளிஷ் போட்டியிலோ/வாசிப்புப் போட்டியிலோ என்னால் பங்கு பெற முடியலை. நான் போட்டியில் கலந்துக்கணும்னு நினைப்பதே அபூர்வம். அப்படி நினைச்சப்போ இப்படி ஒரு தடங்கல்! இஃகி,இஃகி,இஃகி,இஃகி!  ஏற்கெனவே ஜிமெயிலைத் திறக்கும்போதெல்லாம் cannot sync என்று வரும். அநேகமாக ஒவ்வொரு நாளும் புதுசா ஜிமெயில் அக்கவுன்டைத் திறக்கறாப்போல் தான் திறக்கணும். இல்லைனா தாற்காலிகமாகத் தவறு நேர்ந்திருக்கு. சற்றுப் பொறுக்கவும். மீண்டும் முயற்சி செய்யவும். என்று வரும். Temporary Error! Retry. இந்த அழகில் நான் இணையத்துக்கு வந்து பதிவுகளை எல்லாம் பார்த்துப் படிச்சுக் கருத்துச் சொல்லி, என்னோட பதிவுகளுக்குக் கருத்துக் கேட்டு! இதே அதிகம். போதும்டா சாமி! :))))))

66 comments:

  1. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. உங்களின் 2750 பதிவுகள் வெளிவந்தமைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னமும் நிறைய பதிவுகளை தந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    மன அங்கலாய்ப்புகளை அழகாக சொல்லி விட்டீர்கள். இந்த மாதிரி சொல்லும் போது மனதிற்கும் ஒரு பலம் கிடைக்கும்.

    படிப்பது நல்ல விஷயம். அதற்கென்று ஒரு நாளில் சிறிது நேரத்தை ஒதுக்க கூட ஒரு சாமர்த்தியம் வேண்டும். மேலும் பல புத்தகங்கள் படிப்பதினால் தாங்கள் எழுதுவதற்கும் நல்ல விஷயங்கள் எளிதாக பிறந்து வந்து தங்கள் கற்பனையோடு உறவாடி அமர்ந்து கொள்ளும். விரைவில் நீங்கள் படித்த சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை பற்றி நிறைய புத்தக விமர்சனங்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகவாதி. அவரால் அரசியலில் காலூன்ற முடியுமா என்ற கேள்விக்கு, அவர் மனசாட்சி சொன்ன பதிலை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதை ரசிகர்கள் பெரிதுபடுத்தாமல் அவரது நடிப்புத்திறனை எப்போதும் போல் ரசிக்க வேண்டுமென நிறைய விஷயங்கள் வெளிவருகின்றன. ஒருவரின் தனிப்பட்ட உணர்வை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதுதானே மனிதம். என்னவோ இந்த அரசியலே புரியாத புதிர்தான்.

    நேற்றெல்லாம் இங்கும் நல்ல மழை. .. கெர்ப்போட்டத்தில் சமயத்தில் மழை பெய்யும். ஆனால் நேற்றெல்லாம் குளிருடன் பிசுபிசுத்த தொடர் மழை. கொரானா பயம் வேறு, கூடவே குளிர், மழை என வெளியில் எங்கும் செல்ல முடிவதில்லை.

    கொரானா தடுப்பூசி விஷயங்கள் கொரானாவை விட பயமுறுத்தி பார்க்கிறது.

    சஹானா இணைய இதழ் போட்டிகளை நானும் சில பதிவுகளில் பார்த்தேன். திறமைகள் நிறைந்த உங்களாலேயே முடியவில்லை என்றால் நானெல்லாம் எங்கே:)) கற்பனை செய்ய கூட இயலாது. போதுமென்ற மனமே..... என நீங்கள் நினைப்பது போலத்தான். நானும் கருத்துரையாக மனம் விட்டு பேசி விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. அங்கலாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. இதில் கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். நடுவில் சில மாதங்கள் படிப்புக் குறைந்திருந்தது. இப்போது மறுபடி ஆரம்பிச்சிருக்கேன். அப்படி ஒண்ணும் கற்பனை வளம் நீங்க நினைக்கிறாப்போல் எனக்கு இல்லைனு சொல்லிக்கிறேன். மற்றபடி எழுத்தாளர்கள் குறித்தும் புத்தகங்கள் குறித்தும் நிறையவே எழுதி இருக்கேன். ரஜினி விஷயத்தைத் தமிழக மக்கள் ரொம்பவே பெரிசு படுத்தறாங்க! என்னமோ அவ்ர் இல்லைனா எதுவுமே நடக்காது என்பது போல் இப்போவும் இங்கே தூரல். வெளியில் காயப் போட்டிருந்த காய்ந்த புடைவையை நனைச்சுட்டு நின்னுடுத்து. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சஹானா போட்டியில் கலந்துக்க முடியலைனு ஆதங்கம் இருக்கு. மற்றபடி எனக்குத் திறமைகள் எதுவும் இல்லை. இதுவே சஹானா நடத்தாமல் வேறே யாரேனும் நடத்தினால் கலந்துப்பேனா சந்தேகமே!

      Delete
  2. வாசித்து விட்டேன். பதிவுகள் போடாதது எவ்வளவு குஷியாக இருக்கிறது தெரியுமா?.. இன்னொரு பக்கம் இத்தனை நாட்கள் இழந்திருந்த தீவிர வாசிப்பில் ஆழ்ந்து கவனம் செலுத்துவது இரட்டை சந்தோஷத்தையும் கொடுத்திருப்பதை சொல்லியே ஆக வேண்டும். பதிவுகள் போட்டோம் என்ற பெயரில் கிட்டத்தட்ட பத்து புத்தகங்கள் வெளிக்கொணர்வதற்காக புத்தக உரு கிடைத்தது உண்மை. இருந்தாலும் புத்தகங்கள் வெளியிட்டு என்னத்தைக் கண்டோம் என்ற ஞானோதயம் புதுப்புது வாசிப்பில் கவனம் செலுத்த வழிவகுத்திருக்கிறது என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி ஐயா! பதிவுகள் போடாதப்போ என்னமோ ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. என்றாலும் அதையும் மீறிக்கொண்டு தான் கைகளைச் சங்கிலியில் கட்டினாப்போல் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். இதுவும் வேண்டி இருக்கு/ அதுவும் வேண்டி இருக்கு! புத்தகங்கள் எதுவும் நான் அச்சுப்பதிப்பாக வெளியிடவில்லை என்பதால் அதைக் குறித்த உணர்வோ, அனுபவமோ கிடையாது.

      Delete
  3. அமுதமாகி வருக...   கிடைக்கவில்லை...   இதை ஏஞ்சல் படித்தால் எங்கிருந்தாவது தேடிக்கொடுத்து விடுவார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கிடைக்கத்தான் இல்லை. பலருக்கும் இப்படி ஒரு புத்தகம் வந்தது கூடத் தெரியலை. :))))

      Delete
    2. ம்ம்ம்ம்ம்ம், பார்ப்போம்.

      Delete
    3. ஏஞ்சல் பார்க்கவே இல்லை. இந்தப் பதிவு வந்ததே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது! :)

      Delete
  4. தமிழக மக்கள் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.  யார் வந்தால் நல்லாட்சி கிடைக்கும் என்று அலைகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், கையறு நிலை? இல்லைனு தோணுது. யார் ஓட்டுக்கு அதிகப் பணம் கொடுக்கப் போறாங்க? யார் இலவசம் அதிகம் கொடுக்கிறாங்கனு தான் பார்ப்பாங்க! நம்மைப் போல் வெகு சிலர் மட்டும் வேண்டுமானால் எதிர்பார்ப்போம். மக்களுக்குப் பணமும், இலவசமும், டாஸ்மாக்கும் போதும். :(

      Delete
    2. அதுவும் சரிதான். ராமன் ஆண்டா என்ன, ராவணன் ஆண்டா என்ன.. இப்பல்லாம் வித்தியாசமே கிடையாது்

      Delete
  5. சென்னை மழை ரொம்பவே கடுப்பேற்றுகிறது.  மழை வராவிட்டால் ஒருவித கவலை.  இப்படி பெய்பெய்யென்று பெய்தால்....

    ReplyDelete
    Replies
    1. பேசாம...நல்லவர்களெல்லாம் சென்னையை விட்டுக் கிளம்பிவிட்டால், மழை பெய்வது நின்றுவிடுமோ?

      Delete
    2. இயற்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடாதா என்ன? ஆனால் மார்கழி மழை அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். எனக்குத் தெரிந்து 86,87 வருடங்களில் தை மாதம் பொங்கல் சமயம் கூட மழை பொழிந்த நினைவு.

      Delete
    3. கர்ப்போட்டம் பாதிக்கப்படும் இல்லையா? பனிரண்டாம் தேதி வரை மழை உண்டாம். ஆனாலும் இரண்டு நாட்களாய் தேவலாம். மதியம் சுகுமார் வீட்டுக்கு வேற போகணும்!

      Delete
    4. ஆமாம், ஶ்ரீராம், கெர்ப்போட்டம் பாதிக்கப்படும். அது பாதித்தால் அடுத்த வருஷப் பருவ மழைக்குப் பாதிப்பு.

      Delete
    5. இன்னிக்குப் பூரா விட்டு விட்டுத்தூறல், இன்னும் 2 நாட்கள் மழை இருக்காம்!

      Delete
    6. இன்னும் 2 நாளைக்கு மழையாம்! :(

      Delete
  6. பக்க விளைவுகள் இருந்தால் கண்டுபிடிக்க ஒருமணிநேரம் போதுமா?!!

    ReplyDelete
    Replies
    1. உடனடி ஒவ்வாமை போன்றவைகளுக்கு மட்டும் ஒரு மணி நேரம் போதும். ஓரிரு மாதங்களுக்கு முன் எனக்கு அலர்ஜி வந்து, இரவு 11 மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் போனேன். டாக்டர் ஊசி போட்டுவிட்டு சிறிது நேரத்தில் உங்களுக்குச் சரியாகிவிட்டது, கிளம்பலாம் என்றார். எழுந்துகொண்டபோது என் மனசில் இன்னும் சரியாகவில்லை என்று தோன்றியது. அவர்கிட்ட சொன்னேன், இன்னும் அரை மணி பொறுத்து பிறகு கிளம்புகிறேன், டிராப் ஏற்றணும் என்று தோன்றுகிறது என்றேன். அப்புறம் சிறிது நேரம் கழித்துத்தான் கிளம்பினேன். நமக்கு நம் உடல் சரியாக இருக்கிறது என்று தெரியும் வரை, அது ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ, அங்கேயே இருப்பது நல்லது.

      மற்ற பக்கவிளைவுகள்....எப்போனாலும் வரும்..அது ஆண்டவன் விட்ட வழி.

      நாம கார்பண்டைஆக்சைடை சுவாசிக்கக்கூடாது. தொடர்ந்து மாஸ்க் அணிந்தால் நம் மூச்சே திரும்பவும் நாம் சுவாசிக்க உபயோகிக்கிறோம். இது என்ன விதமான பக்கவிளைவுகளைத் தரும் என்பதும் தெரியலை.

      Delete
    2. ஶ்ரீராம், இந்தக் கேள்விக்கு பதில் உங்களுக்குத் தான் தெரியும். :)))))

      நெல்லை, எந்த மருந்து எடுத்துக் கொண்டாலும் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய முடியும்? ஆனால் ஒத்துக்கொள்ளும் மருந்துகளை மருத்துவர் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கணுமே! நம்ம ரங்க்ஸுக்கு மருத்துவர் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் சர்க்கரைக்கான மருந்தை மாற்றி விடுகிறார். சில ஒத்துக்கொள்கின்றன. சில ஒத்துக் கொள்வதில்லை. :(

      Delete
    3. உண்மையில் இந்தக் கேள்விக்கு விடை உலகமே இனிதான் கண்டு பிடிக்கணும்! நாட்டுக்கு நாடு வேறுபடலாம்.

      Delete
    4. அப்படியா? என்னவோ ஒண்ணும் புரியலை!

      Delete
  7. சென்னையில் இருப்பவர்களும் மனிதர்கள்தானே...வந்து போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் இருந்தால் தாராளமாக வரலாம்.

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் ஒரு பயணம் மேற்கொண்டேன். அதற்கு எனக்குத் தெரிந்தவர்களோடு கூட, அவர்களுக்குத் தெரிந்தவரும் வந்திருந்தார். அவருடைய மகன், இரண்டு நாட்கள் முன்புதான் லண்டனிலிருந்து வந்திருக்கிறார், தன்னுடந்தான் இருந்தார் என்ற செய்தியை நாங்கள் அறியவில்லை. பயணம் முடித்துத் திரும்பி, இதோ இரு வாரங்கள் ஆகிவிடப்போகிறது. ஆனாலும் மனசில் கவலை தீர்ந்தபாடில்லை. 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கணுமாமே....

      இதுதான் யாரும் இன்னொருவருடன் interact செய்யவோ சேர்ந்து பயணிக்கவோ தடையாக இருப்பது.

      பயத்தில் யாரும் உண்மையை வெளிப்படையாகச் சொல்வதில்லை.

      Delete
    2. ஶ்ரீராம், கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இன்னிக்குத் தான் சுமார் பத்துப் பேர் கலந்து கொண்ட ஒரு சஷ்டிஅப்தபூர்த்தி/எதிர் வீட்டில் என்பதால் போனேன். அங்கேயே சாப்பிட்டோம். வீட்டில் பண்ணிக் கொண்டு வந்திருந்தார்கள். அதுக்கே மாஸ்க் போட்டுக் கொண்டு தான் போனேன். அப்புறமா யாருமே அங்கே போட்டுக்கலை என்பதால் சாப்பிடும்போது எடுத்தேன். எங்க பையர் நாங்க போகப் போறோம்னு தெரிஞ்சதில் இருந்தே, ஜாக்கிரதை, ஜாக்கிரதை என்று ஒரே புலம்பல்.

      Delete
    3. நெல்லை, நாங்க இன்னும் வெளியே எங்கும் போகவில்லை. அவர் மட்டும் காய்கறிகள் வாங்கப் போக வேண்டி இருக்கு. மற்றபடி மளிகை சாமான்களை எல்லாம் கூட கீழேயே வாங்கிடறோம். காஃபி பவுடர் வீட்டில் கொண்டு வந்து கொடுத்துடறாங்க. மருந்துகள் வாங்க வெளியே போகத் தான் வேண்டி இருக்கு. அதுக்கே பயமாத் தான் இருக்கு. இன்னும் பயணம்னு ஆரம்பிக்கலை. அந்த அளவுக்கு தைரியம் இன்னும் வரலை.

      Delete
    4. நான் சமீபகாலத்தில் நிறைய வெளியே அலைகிறேன்/றோம். இன்றும்!

      Delete
    5. குறைச்சுக்கோங்க ஶ்ரீராம். ஏற்கெனவே பட்டாச்சு எல்லோருமே!

      Delete
  8. கிண்டிலைப் பொறுத்தவரை உங்கள் நிலைதான் எனக்கும்.  அப்பவி என்னையும் கேட்டிருந்தார்கள்.  என்னால் பங்குபெற முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், ஹாஹாஹா, ஏடிஎம்முக்கு என்னைப் பற்றித் தெரியும். ஆதலால் இந்த விஷயத்தில் என்னைக் கேட்கவே இல்லை. நானும் தலைகீழாக முயற்சி செய்து பார்த்துட்டேன். :(

      Delete
    2. ஏற்கனவே கண் பிரச்சனை தொந்தரவு செய்ய வேண்டாம்னு மாமிக்கு லீவு குடுத்துருக்கேன். சரியானதும் என் தொல்லைகள் தொடரும் 🤣😃😊

      Delete
  9. கிண்டிலைப் பொறுத்தவரை உங்கள் நிலைதான் எனக்கும்.  *அப்பாவி  என்னையும் கேட்டிருந்தார்கள்.  என்னால் பங்குபெற முடியவில்லை!  

    ReplyDelete
  10. அமுதமாகி வருக - எங்கும் கிடைக்கவில்லை. ராஜம் கிருஷ்ணனின் வேறு சில புத்தகங்கள் - 11 புத்தகங்கள் கிடைத்துள்ளன. உங்கள் மெயில் பெட்டிக்கு அனுப்பட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கௌதமன் சார், நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்ததுக்கு நன்றி. ராஜம் கிருஷ்ணனின் "மலர்கள்" விகடன் வெள்ளிவிழாப் பரிசு நாவல்/ பின்னர் அதே விகடனில் வந்த "புன்னகைப் பூங்கொத்து" இருக்கா? இருந்தால் அனுப்பி வைங்க. கரிப்பு மணிகள், வளைக்கரம் எல்லாம் பலமுறை படிச்சாச்சு.

      Delete
    2. இதெல்லாம் படிச்சிட்டு என்ன செய்யறீங்க?..

      Delete
    3. @ஜீவி சார், நிச்சயமா நீங்க நினைப்பது இல்லை! மற்றபடி புத்தகங்கள் படிப்பது என் சொந்த விருப்பம். ஏன் படிக்கிறேன் என்று இன்னொருவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலைமை இல்லை. :))))))

      Delete
  11. கதம்பமான எண்ணங்கள். உங்கள் எண்ணச் சிதறல்களாகத் தெரிகின்றன.

    நிறைய எழுதியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. நிறைய எழுதிட்டோம்னு தான் குறைச்சுட்டு இருக்கேன். :))))))) தொடர்ந்து எழுதவும் ஆசை தான். அடக்கிக்கொண்டு சும்மா இருக்கப் பார்க்கிறேன்.

      Delete
  12. கொரோனா பெங்களூரில் முழுவீச்சில் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் கொரோனா வெர்ஷன் 2. பக்கத்து பக்கத்து பில்டிங்கில் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கே செல்வதில்லை. யாருக்கேனும் ஜலதோஷம் என்றாலே பக் பக் என்று இருக்கிறது.

    காரில் பயணம் செய்தால் பயமில்லை. ஆனாலும், எந்த உறவினர்களானாலும், அவங்க யார் யார் வீட்டிற்குப் போய்வந்துகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயமில்லாதவரை, நாம் நம் உடல்நலனைப் பாதுகாத்துக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் புதுக் கொரோனா பரவுவதாய்ச் சொல்கின்றனர் நெல்லை. பயமாய்த் தான் இருக்கிறது. இன்னிக்குத் தான் நாங்க எதிர் வீட்டில் இருப்பவங்க வீட்டு விசேஷத்துக்குப் போனோம். அதுவே உள்ளூர பயம் தான்! உடல் நலனைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கோம். என்றாலும் பயமும், கவலையும் இருக்கத் தான் செய்கிறது.

      Delete
  13. அரங்கனைப் பார்க்க முடியலை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கோவிலை முழுவதுமாக பக்தர்களுக்குத் திறந்துவிட்டாலும், அதனால் ஏற்படப்போகும் ரிஸ்க் இன்னும் அதிகம் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்தில் வீட்டுப் பிரச்னைகளால் ஃபெப்ரவரி மாதம் வந்ததில் இருந்து கோயிலுக்குப் போக முடியலை. அதன் பின்னர் லாக் டவுன் வந்தாச்சு. பின்னர் திறந்தப்பொக் கூட 60க்கு மேல் உள்ளவர்கள் போக முடியலை. இப்போத் தான் எல்லோரையும் அனுமதிக்கிறாங்க. ஆனால் எங்களால் போக முடியலை! :( கூட்டத்தைப் பார்த்தால் பயம். அதுவும் குலசேகரன் படியிலிருந்து வரிசை எல்லாம் இல்லை. எல்லோரும் இடிச்சுப் பிடிச்சுண்டு நுழைகிறார்களாம்.

      Delete
  14. சாதனையில் திருப்தி... அதுவே மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. சாதனை எல்லாம் எதுவும் இல்லை திரு தனபாலன். நன்றி.

      Delete
  15. அசத்திட்டீங்க கீதாம்மா! எனக்கும் கல்கியின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். பொன்னியின் செல்வன் எத்தனை முறை படித்தாலும் மீண்டும் படிக்கும் ஆவல் தோன்றும்! அநுத்தமாவின் புத்தகங்கள் படித்ததில்லை...நேரம் கிடைப்பதில்லை. இரு குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்தே மதியமாகி விடுகிறது...இனி எத்தனை நாட்கள் இப்படி "நியூ நார்மல் " லில் இருக்க வேண்டுமோ தெரியவில்லை. புவி வெப்பமயமாதலால் இப்படியெல்லாம் நேரம் காலமில்லாமல் மழை , அதிக வெய்யில்...என்ன சொல்ல கீதாம்மா...
    இந்த நேரத்திலும் நாம் பாதுகாப்பாக இருப்பது அந்த தெய்வ அருளென்று தான் சொல்ல வேண்டும். எங்கும் செல்லாமல் இருப்பதே உத்தமம். நம் துணைக்கு நல்ல புத்தகங்கள் உண்டு என்று தேற்றிக்கொள்ளலாம். தொலைபேசியில் சிறிது நேரம் உறவுகளுடன் பேசலாம்...என் அம்மாவுக்கும் நான் இதையே சொல்லுகிறேன். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் கீதாம்மா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வானம்பாடி. நாங்களும் தொலைபேசி மூலம் முக்கியமான நெருங்கிய உறவுகளோடு பேசிக்கிறோம். ஆனால் இனி எத்தனை நாட்கள் என்னும்போது கவலையாய் இருக்கிறது. இப்போதைக்கு ஆறுதல் கு.கு.வை தினம் பார்ப்பது தான்!

      Delete
  16. எல்லோருடைய விசாரங்களையும் விலாவாரியாகச் சொல்லி விட்டீர்கள்.

    2750க்கு இனிய வாழ்த்துகள்.
    என்னாலும் போட்டி என்று சொன்னால்
    எழுதக் கைவர மாட்டேன் என்கிறது.

    அப்பாவி நல்ல முயற்சி எடுத்தே செய்கிறார்.
    வளமுடன் இளைஞர்கள் பங்கு கொள்ளட்டும்.

    மனம் அலைந்து கொண்டேதான் இருக்கிறது.

    இங்கே நடக்கும் விஷயங்கள் கொரோனாவைத் தூண்டி விடுவது போலவே
    இருக்கின்றன.
    இன்றும் வெளியே 30 டிகிரி ஃபாரன் ஹீட்.
    கைகால் விரைக்கும் குளிர்.
    வண்டியில் ஏறிக் கொண்டு ஊர்வலம் செய்து வந்தோம்.

    யாருக்கும் பயம் இல்லை. எல்லாக் கடைகளும் நிரம்பி வழிகின்றன.
    வெளியே பார்த்துவிட்டு வந்து விட்டோம்.

    மாத்திரைகள் விஷயத்தில் சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
    ஒத்துக் கொள்ளாவிடில் கஷ்டம் தான்.

    எதிர்வீட்டுக்குப் போய் வந்தது நலமே.
    ஒன்றும் இருக்காது தைரியமாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, எங்களுக்கு ஒரு மாற்றமாக இருந்தது. எதிர்வீட்டுக்குப் போனது. ஆனால் பையருக்குக் கோபம், இரண்டு பேரும் ஊர் சுத்தறீங்களே! என்கிறர். :( என்னத்தைச் சொல்ல! இங்கேயும் யாருக்கும் கொரோனா பயமே இல்லை. எல்லோரும் மாஸ்க் இல்லாமல் தான் சுற்றுகின்றனர். கடைத்தெருவில் கூட்டமும் இருக்கிறது என்கிறார்கள். இங்கே மழையும், குளிருமாக மாறி மாறி வருவதால் உடல்நிலை கொஞ்சம் பாதிக்கத் தான் செய்கிறது.

      Delete





  17. எல்லோருடைய விசாரங்களையும் விலாவாரியாகச் சொல்லி விட்டீர்கள்.

    2750க்கு இனிய வாழ்த்துகள்.
    என்னாலும் போட்டி என்று சொன்னால்
    எழுதக் கைவர மாட்டேன் என்கிறது.

    அப்பாவி நல்ல முயற்சி எடுத்தே செய்கிறார்.
    வளமுடன் இளைஞர்கள் பங்கு கொள்ளட்டும்.

    மனம் அலைந்து கொண்டேதான் இருக்கிறது.

    இங்கே நடக்கும் விஷயங்கள் கொரோனாவைத் தூண்டி விடுவது போலவே
    இருக்கின்றன.
    இன்றும் வெளியே 30 டிகிரி ஃபாரன் ஹீட்.
    கைகால் விரைக்கும் குளிர்.
    வண்டியில் ஏறிக் கொண்டு ஊர்வலம் செய்து வந்தோம்.

    யாருக்கும் பயம் இல்லை. எல்லாக் கடைகளும் நிரம்பி வழிகின்றன.
    வெளியே பார்த்துவிட்டு வந்து விட்டோம்.

    மாத்திரைகள் விஷயத்தில் சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
    ஒத்துக் கொள்ளாவிடில் கஷ்டம் தான்.

    எதிர்வீட்டுக்குப் போய் வந்தது நலமே.
    ஒன்றும் இருக்காது தைரியமாக இருங்கள்.

    ReplyDelete
  18. முடிந்த வரை வீட்டில் இருப்பது நல்லது தான். ஆனாலும் என்னைப் போன்ற பலருக்கும் வெளியே சென்று வந்தே ஆக வேண்டிய சூழல். முடிந்தவரை பத்திரமாகவே இருக்கிறோம் என்றாலும் மனதின் ஒரு மூலையில் எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென்ற எண்ணமும் வந்து கொண்டே இருக்கிறது - இயல்பானதும் கூட.

    வாசிப்புப் போட்டி - முடிந்தால் தானே பங்கு பெற! எனக்கும் யோசனையாகவே இருந்தது. கடைசியாக அனுப்பி வைத்தேன் - என் நூலை. இதுவரை மூன்று நூல்களுக்கான வாசிப்பனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    பதிவுகள் எழுதுவதில் எனக்கும் சமீபத்தில் சுணக்கம் தான். வேலைகள் அதிகம். இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பித்து இருக்கிறேன். எனது பதிவுகளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை பற்றி பார்ப்பதே இல்லை. எல்லோருக்கும் அவரவர் வேலை... அவரவர் விருப்பம்! அது மட்டுமல்ல நானெல்லாம் எழுதுவதை படிக்க யார் இருக்கிறார்கள்! நண்பர்களில் கூட பலர் தொடர்ந்து படிப்பதே இல்லை. ஹாஹா... அதைப் பற்றி யோசிக்காமல் முடிந்தவரை எழுத வேண்டியது தான்.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பல நாட்களுக்குப் பின்னர் வரீங்களோ? இந்தக் கிண்டில்/அமேசான் போட்டிகள் எதிலும் என்னால் பங்கு பெற முடியாது! மற்றபடி நானாகவே தான் பதிவுகள் எழூதுவதைக் குறைச்சிருக்கேன். உங்களைப் போல் வேலைகள் எல்லாம் இல்லை. :)))))மற்றபடி என்னோட பல பதிவுகளுக்கு ஒரு கருத்துக் கூட வந்ததில்லை. என்றாலும் நான் தொடர்ந்து எழுதி வந்தேன். இப்போத் தான் என்னோட பதிவுகளிலே கருத்துகள் கொஞ்சம் நிறையவே வருகின்றன.

      Delete
  19. சாதாரணமாக நீங்கள் கதம்ப பதிவு போட மாட்டீர்கள். உங்கள் மண் போராட்டங்களும், விசாரமும் கதம்ப பதிவுக்கு வழி வகுத்து விட்டன என்று தோன்றுகிறது. 2750 பதிவுகள்..!!! வாழ்த்துகள். இன்னும் நிறைய எழுதுங்கள். துணிச்சலான,நேர்மையான எழுத்து உங்களுடையது. 
    ரஜினி பற்றியும், விபரீத பருவ மழை பற்றியும் நீங்கள் எழுதியிருப்பது மிகவும் சரி. 
    நாங்கள் அவ்வப்பொழுது வெளியே செல்கிறேன். இன்று கூட ஒரு ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் எக்சிபிஷனுக்குச் சென்றோம்.  

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நீங்க அடிக்கடி என்னோட வலைப்பக்கம் வராததால் உங்களுக்குத் தெரியவில்லை. கதம்பப் பதிவுகள் நிறையவே போட்டிருக்கேன். உங்களுக்குத் தெரியவில்லை. :)))) மொத்தப் பதிவுகளும் 2800க்குக் கிட்டே என்றாலும் நான் வெளி வந்தவற்றை மட்டும் சொல்லி இருக்கேன். நாங்க இன்னும் சகஜமாக வெளிக்கிளம்ப ஆரம்பிக்கலை.

      Delete
  20. 2700+ பதிவுகளா? வாவ்... என் நட்பு வட்டத்தில் நீங்களும் வெங்கட் அண்ணாவும் தான் தொடர்ந்து வலைப்பூவில் எழுதிட்டு வரீங்க. நானெல்லம் எப்பவோ அதைவிட்டு விலகி, எப்போ "சஹானா"வில் restart செய்திருக்கேன். பாப்போம், எப்படி போகுதுன்னு :) 

    உண்மை தான் மாமி, மாத்தி மாத்தி ஏதோ காய்ச்சல் அது இதுனு கேட்டு வீட்டை விட்டு வெளிய போகவே யோசனையா இருக்கு. இப்படி வீட்டில இருக்கறது ரெம்பவும் இப்ப பழகிடுச்சு, வெளிய போகத்தான் கஷ்டமா இருக்கு சில நேரம் 

    "சஹானா"வில் நீங்க சொன்னது போல் போட்டிகள் பரிசுகள் அறிவிச்சுட்டு தான் இருக்கேன் மாமி, எல்லாரையும் பிஸியா வெச்சுருப்போம்னு ஒரு ஆசை தான், ஹாஹா... முடியாறப்ப எட்டி பாருங்க. டேக் கேர் 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏடிஎம், துளசி கோபாலும் எழுதறாங்க. ரேவதி எழுதறாங்க! எ.பியில் தினம் ஒரு பதிவுனு வருஷம் 365 நாட்களும் வருது. வீட்டில் இருப்பது எனக்கும் பழகி விட்டதால் வெளியே போகக் கால் எழும்பவே இல்லை. சஹானா அநேகமா எல்லோரையும் பிசியாகத் தான் வைச்சிருக்கு! தொடர்ந்து இது இப்படியே மேன்மேலும் வளர்ச்சி காணட்டும். வாழ்த்துகள்.

      Delete
  21. என்னாது 2750 போஸ்ட் போட்டு விட்டீங்களோ அவ்வ்வ் நான் இன்னும் 500 ஐயே தொடவில்லையாக்கும் ஹா ஹா ஹா..

    எல்லாப் பராவும் படிச்சுத் தகவல் தெரிஞ்சுகொண்டேன்ன்ன்... ரஜனி அங்கிள் வந்தால் என்ன வராட்டில் என்ன... ஏதும் மாற்றம் வந்திடுமோ என்ன?..

    ReplyDelete
    Replies
    1. வாங்க தைதைதை மகள்! உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவே நீங்க 500 போட்டாலே அதிகம். மெதுவாவே எழுதுங்க! உபயோகமான பதிவுகள் குறைவாகத் தான் கிடைக்கும். எனக்கெல்லாம் மொக்கைகள் நிறையவே இருக்கும். ஆகவே இதுக்காகக் கவலைப் படாதீங்க! :)))))

      Delete
  22. இன்னும் பல நூறு பதிவுகள் தரவேண்டும்..
    அவற்றை வாசித்து புது நலம் பெற வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, மிக்க நன்றி.

      Delete
  23. இன்னும் தொடர்ந்து பதிவுகள் வரட்டும்

    அரசியல்வாதிகளை குறை சொல்வதைவிட மக்கள் அனைவருமே யோக்கியர்களா ? இலவசத்தை வாங்க மாட்டோம் என்று சொல்பவர்கள் எத்தனை சதவீதம் இருக்கிறோம் ?

    அரசியல் என்பதே என்வென்று தெரியாதவர்கள் நிறைய மக்கள் உண்டு இன்னுமே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. இப்போல்லாம் குறைச்சிருக்கேன். இலவசம் கொடுக்கிறாங்க என்பதாலேயே எங்கள் ரேஷன் கார்டை நாங்க அரசிடமே திருப்பிக் கொடுத்துட்டோம். எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது.

      Delete