இந்த ராமர் படத்தையும் பாருங்க, கீழே உள்ள துணை விக்ரஹங்களையும் பாருங்க. கொஞ்சம் இடம் மாறி விட்டது. நடுவில் கொண்டு வர முடியலை எல்லாவற்றையும். ஆகவே அவை மட்டும் ஓரமாக ஒதுங்கி விட்டன.
இங்கே கீழே வைச்சிருக்கும் விக்ரஹங்களையும் பார்த்துக்கோங்க.
இப்போ இங்கே ஶ்ரீராமரைப் பார்த்தீங்களா?
கீழேயும் பார்த்தாச்சா?
கடைசி இரு படங்களும் இப்போ இந்த (தமிழ்) வருஷப் பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு எடுத்தது.
மேலே உள்ள இரு படங்களும் வேறு சந்தர்ப்பத்தில் எடுத்தவை. மேலே உள்ளவை எங்கே எடுத்த படங்கள்? கீழே உள்ளவை எங்கே எடுத்த படங்கள்? ஆறு வித்தியாசங்களுக்கும் மேல் கண்டுபிடிங்க பார்ப்போம்! :)))))
நெல்லை, முக்கியமா உங்களுக்காகவேத் தேடி எடுத்துப் போட்டிருக்கும் ஶ்ரீராமர் படம். மேலே உள்ள ராமருக்கும்/கீழே உள்ள ராமருக்கும் என்ன வித்தியாசம் கண்டுபிடிங்க! பார்க்கலாம்.
கோதண்டராமனுக்கும், கல்யாணராமனுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது.
ReplyDeleteமுதல் படம் தனியாக எடுத்தாலும் குட்டியாக தெரிகிறது. அடுத்த படம் அவ்வளவு தெளிவில்லாமல் இருக்கிறது.. எப்படியும் நெல்லைதானே பதில் சொல்லவேண்டும்... பார்ப்போம்! ஹிஹிஹி...
ReplyDeleteஹாஹாஹா, ஶ்ரீராம், உண்மையில் நெல்லைக்காகத் தான் போட்டேன். அவர் எட்டிக்கூடப் பார்க்கலை. கடைசியில் சொல்றேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான படங்கள். ராமரை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். ராமரின் அருகில் இடதுபுறமிருக்கும் பிள்ளையார்தான் அன்றைய தின சிறப்பு பூஜைக்காக வந்து நடுவில் அமர்ந்திருக்கிறாரோ? வேறு வித்தியாசங்களை அனைவரும் (நீங்களும்) சொல்ல காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இல்லை கமலா/ சொல்றேன்.
Deleteவணக்கம் சகோதரி
Deleteஸ்வாமி படங்களின் இடமாற்றம் என்றுதான் தங்கள் பதிலை பார்த்ததும் ஊகித்தேன். முதலில் எடுத்தது தாங்கள் சென்னையில் அம்பத்தூரில் இருந்த வீடா என கேட்க வந்தேன். அதற்குள் நீங்கள் விபரமாக பதில் தந்து விட்டீர்கள்.படித்து புரிந்து கொண்டேன். வெளிச்ச பிரதிபலிப்பு இல்லாத அழகிய ராமரை இன்று மீண்டும் தரிசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அம்பத்தூரில் எடுத்த படங்களும் இருக்கின்றன. பெரிய ஸ்வாமி அலமாரி. இரண்டு பக்கக் கதவுகளிலும் கூடப் படங்களை மாட்டி இருந்தார். இங்கே அத்தனை இல்லை. முதல் இரு படங்கள் இப்போ இருக்கும் வீட்டிற்கு முன்னால் குடி இருந்த வீடு. கடைசி இரண்டு படங்கள் இந்த வருஷப் பிள்ளையார் சதுர்த்திக்கு எடுத்தவை.
Deleteஸ்ரீராம ராம ஜெய ராம ராம..
ReplyDeleteஸ்ரீராம ராம ஜெய ராம ராம...
நன்றி துரை.
Deleteஇந்தப் படம் நெல்லைக்காகவே போட்டிருக்கேன். ஆனால் அவர் வரலை. இதில் அதிகமாய் எல்லாம் வித்தியாசங்கள் இல்லை. முதல் இரண்டு படமும் நாங்கள் குடி இருந்த வீட்டின் பூஜை அறையில் எடுக்கப்பட்டது. அங்கே கொஞ்சம் சின்னதாகவே இடம் ஸ்வாமி அலமாரிக்கு மட்டும். அங்கே வைத்திருந்தப்போ எடுத்த படங்கள். ஶ்ரீராமரின் மேல் வெளிச்சப்பிரதிபலிப்பு இருக்காது. கீழேயும் நெருக்கமாக விக்ரஹங்களை வைச்சிருப்போம். அடுத்த இரு படங்களில் முதல் படம் போன வருஷ ஶ்ரீராமநவமிக்கு எடுத்ததுனு நினைக்கிறேன். இப்போ இருக்கும் வீட்டில் எடுத்தது. இது ஸ்வாமி அலமாரியும் கொஞ்சம் பெரிது.இடமும் கொஞ்சம் பெரிது. இங்கே ஸ்வாமிக்கு அருகேயே மின்சார விளக்குப் போடும்படியான அமைப்பில் இருப்பதால் எப்படி/எந்த விளக்கைப் போட்டாலும் படத்தில் அதன் வெளிச்சம் பிரதிபலிக்கத் தான் செய்கிறது. அது இல்லாமல் படம் எடுக்க முடியவில்லை. இது தான் நான் கேட்டிருந்த மிக முக்கியமான வித்தியாசம். அம்பத்தூர் வீட்டு ஸ்வாமி அலமாரியிலும் வெளிச்சப் பிரதிபலிப்பைக் காண முடியாது. அது பின்னர் தேடி எடுத்துப் போடுகிறேன். இன்னிக்கு ஶ்ரீராமநவமி வேலைகள் இருப்பதால் பின்னர் வருகிறேன்.
ReplyDeleteஹை ! நான் இந்தக் கருத்தைப் பார்க்கும் முன்னமே கரெக்ட்டா சொல்லிட்டேனே...கீழே கருத்தில்....மாமா இருக்கும் படமும் முன்னர் வந்திருந்தது தெரிந்தது. ராமர் படங்கள் இருக்கும் இடமும். நான் தற்போதைய வீட்டு உம்மாச்சி அறையைப் பார்த்திருக்கிறேனே!!
Deleteகீதா
ஆமாம், பார்த்தவங்களால் சரியாகச் சொல்ல முடியும். ஶ்ரீராமும் பார்த்திருக்கார் என்றாலும் வருஷங்கள் ஆச்சு. நெல்லையைக் காணவே காணோம்.
Deleteஒரு வேளை கோமதி அரசு வந்திருந்தால் அவர் வித்தியாசங்களைக் கண்டு பிடித்திருப்பார். வேலை மும்முரம் போலும்.
ReplyDeleteமுதல் படத்தில் ராமர் இருக்கார். மாமா இல்லை. இரண்டாவது படத்தில் மாமா இருக்கார் ராமர் இல்லை. அதுதான் வித்யாசம்.
ReplyDeleteஹாஹாஹஹாஹா
Deleteகீதாக்கா மாமா இருக்கும் படம் முன்னமே வந்திருக்கிறதுதானே..
ReplyDeleteமுதல் இரு படங்களும் இப்போதைய வீடு போல் இல்லை அக்கா....கீழே இருப்பவைதான் இப்போதைய வீட்டின் உம்மாச்சி அறை....
கீதா
ஆமாம், ஓரளவுக்கு யூகம் செய்து விட்டீர்கள்.
Deleteநான் எதிர்பார்த்தேன் கீதாக்கா இந்த ராமர் படம் இன்று போடுவாங்க கீதாக்கா என்று....
ReplyDeleteஆறு வித்தியாசங்கள் சொல்லிடலாம் மேலே உள்ள முதலுக்கும் கீழே உள்ள ராமர் படம் இருக்கும் இடத்திற்கு ம் ...
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இன்னிக்குத் தான் நீங்க பார்ப்பதால் ஶ்ரீராமநவமிக்குப் போட்டதுனு நினைச்சுட்டீங்க போல. இன்னிக்கு எடுத்த படங்களை இன்னமும் போடவே இல்லை. :)
Deleteபடங்கள் அழகாக இருக்கின்றன. ஆனால் ஒரு படம் தெளிவாக இல்லையே. மாற்றம் தெரியவில்லை.இன்று ராமநவமி இல்லையா.
ReplyDeleteதுளசிதரன்
எந்தப் படம் தெளிவாக இல்லை துளசிதரன்? இன்னிக்கு எடுத்த படங்களே இல்லை இவை.
Deleteஇப்ப உள்ள் வீட்டில் எடுத்ததுதானா? ஆமாம் விக்கிரகங்கள் மாறியுள்ளன.தான். அதுதான் வித்தியாசமா...அட இந்த மர மண்டைக்கு அது தெரியவில்லை!!!!
ReplyDeleteகீதா
இப்போ உள்ள வீட்டில் எடுத்தவை கடைசி இரண்டும். விக்ரஹங்கள் மாறி இருக்குனா, இடம் மாறி உட்கார்ந்திருப்பாங்க. அவ்வளவே. மற்றபடி விக்ரஹங்கள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரித் தான் உள்ளன.
Deleteகுஞ்சித பாடஹ்ம் இடம் மாறி இருக்கிறது. பூஜை அறை இடமாற்றாத்தால். முத்லில் ஒரு வீட்டில் இருந்தீர்கள், அப்புறம் மாறினீர்கள் அல்லாவா/
ReplyDeleteசார் அர்ச்சனை செய்யும் படம் முன்பு பதிவு போட்டு இருந்தீர்கள்.
முதல் இருக்கும் பக்க சுவரில் சின்ன சின்ன படமாக தொங்க விட பட்டு இருக்கிறது.
அடுத்த படத்தில் பக்க சுவற்றில் பெரிய படமாக ஒன்று இருக்கிறது. என்ன படம் அது?
முதல் படத்தில் மல்லிகை சரம் நீங்கள் தொடுத்து போட்டது. அடுத்த படத்தில் சிவப்பு ரோஜா மலர்கள்.
பிள்ளையார் ராமர் பக்கம் இல்லை, கீழே சார் செய்யும் அர்ச்சனையை ஏற்றுக் கொண்டு கீழே இருக்கிறார்.
ஆமாம், கோமதி, குஞ்சிதபாதம் அந்த வீட்டில் சுவற்றில் மாட்டி இருந்தது இங்கே ஶ்ரீராமர் படத்திலேயே மாட்டி இருக்கோம். இரண்டாவது படத்தில் பக்கச் சுவற்றில் பெரிய வெங்கடாசலபதி படம். பரிசாக வந்தது. முதல் படத்தில் நான் தொடுத்தது தான். கீழுள்ள படத்தில் கால் சரியாகாமல் இருந்த நேரம் என்பதால் உட்கார்ந்து பூத்தொடுக்கலை. ரோஜாப்பூக்கள், கடையில் வாங்கிய கதம்பம் போன்றவை தான். அன்னிக்குக் கதம்பமும் வாங்கப் போக முடியலை. ஆகவே பிள்ளையார் சதுர்த்திக்கு ரோஜாப்பூக்கள் மட்டுமே! ஆமாம், இரண்டாவது படத்தில் கீழே நட்ட நடுவில் பிள்ளையார்.
Deleteநெல்லை கடைசி வரைக்கும்/இப்ப வரைக்கும் வரல போல! :)
ReplyDelete