எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 29, 2023

மீண்டும் சந்திப்போம்!

 நான் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் செய்து கொண்டேன். அறிந்தவர், தெரிந்தவர், முகநூல் நண்பர்கள்/மத்யமர்கள்னு பலரும் அறுவை சிகிச்சை செய்துக்கப் போறாங்க அல்லது செய்து கொண்டிருக்காங்க. இன்னொரு கண்ணிற்கான அறுவை சிகிச்சைக்குப் போனால் மருத்துவர்  சர்க்கரை சோதனையின் தற்போதைய நிலவரம் சரியாக இல்லை என்பதாலும், எனக்குக் கடுமையான இருமல் இருந்ததாலும் (இப்போதும் அவ்வப்போது இருக்கு) மருத்துவரே இப்போதைக்கு இன்னொரு கண் அறுவை சிகிச்சை வேண்டாம்னு சொல்லிட்டார். அதோடு இப்போ வெயில் வேறே தாங்கலை. உடல் முழுவதும் கொப்புளங்கள், கட்டிகள். அரிப்பு, வலி, எரிச்சல்! :( ஆகவே மறுபடியும் வேப்பிலை+குப்பைமேனி+மஞ்சள் கலவைக்குப் போகணும் இப்போதிருந்தே. இல்லைனா தாங்க முடியாது.

பெண்ணுக்கும் சாப்பாடு எல்லாம் இன்னமும் வழக்கமான முறையில் இல்லை. அது வேறே கவலை. இந்தியா வரச் சொல்லிண்டு இருக்கோம். 2015 ஆம் ஆண்டில் வந்தது. அப்புறமா வரவே இல்லை. என்ன செய்யப் போறாங்களோ தெரியலை. கு.குவுக்கு இப்போது ஈஸ்டர் விடுமுறை என்பதால் அவங்க யு.எஸ். போறாங்க. அங்கே தான் அவங்க மருத்துவச் சோதனைகள் எல்லாம் செய்து கொண்டு கண், பல் என எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொள்ளணும். இது அங்கே உள்ள நடைமுறைப்படி ஒவ்வொருவரும் கட்டாயமாய்ச் செய்துக்கணும். குஞ்சுலு   நன்றாக வரைய ஆரம்பிச்சிருக்கு. அதுவாவே ஒரு  லூடோ போர்ட் (அட்டை) வரைந்து வண்ணம் கொடுத்துட்டு அவங்க அப்பாவோட விளையாடியது. அது தோத்துப் போனால் அழுதிருக்கும் போல. அவங்க அப்பா "அழுமூஞ்சி துர்கா" என்று சொல்லுவாராம். ஆகவே இதுவும் அவ அப்பாவை "அழுமூஞ்சி அப்பா" என்று சொல்லிக் கொண்டு கையைத் தட்டிக் கொண்டு குதிச்சது. குழந்தைக்கு அடிக்கடி ஜூரம் வந்து விடுகிறது. அங்கே உள்ள சீதோஷ்ணம் காரணமா என்னனு தெரியலை.

எங்க எதிர் வீட்டு மாமியும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாங்க போன வாரம். அவங்களுக்குக் கட்டெல்லாம் போடவில்லை. அன்னிக்கே ஒரு சாதாரண/அல்லது பவர் உள்ள கண்ணாடியைப் போட்டு அனுப்பிச்சுட்டாங்க. அறுவை சிகிச்சைக்காக நிறையப் பேர் இருந்ததால் காலை ஆறரைக்குப் போனவங்களுக்குப் பத்து மணிக்குத் தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கு. மகாத்மா காந்தி மருத்துவமனை, தென்னூரில் நடந்திருக்கு. இதே மாதிரித்தான் லென்ஸ்,மற்றவை எல்லாம். ஆனால் இவங்களுக்கு 20 நிமிடங்களில் சிகிச்சை முடிஞ்சிருக்கு. நாம தான் எல்லாத்திலேயும் சிறப்பானவங்க போல! 

நாட்டு நிலவரங்கள் எதுவும் சரியாக இல்லை. அதைப் பற்றி எழுதப் போனால் பிரச்னைகள் தான் வரும். அதிலும் முக்கியமாகக் கோயில்கள்! நல்லவேளையாகத் திரைப்பட நடிகை காஞ்சனா தன்னுடைய சொத்தைத் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதிக் கொடுத்தார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறையின் கைகளில் வந்திருந்தால்! நினைச்சாலே நடுக்கமா இருக்கு! பெண்கள் சுதந்திரம் அது இதுனு சொல்லிக் கொண்டு ஒரு பக்கம் பெண்களுக்கு வன்கொடுமைகள் நிகழ்ந்தால் இன்னொரு ப்க்கம் பெண்களே கண்வனைக் கொல்வது, தீயிட்டு எரிப்பது என்றெல்லாம் போய்க் கொண்டு இருக்கு. தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதிகரித்து இருப்பதை அதிகரித்து வரும் விபத்துக்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பக்கம் இலவசம் கொடுப்பது போல் கொடுக்கும் அரசு இன்னொரு பக்கம் அதை டாஸ்மாக் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டு விடுகிறது. 

கட்டுப்பாடின்றி வேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இங்கே காவிரிப் பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒரு சின்னப் பையர் ஸ்டன்ட் வேலை எல்லாம் செய்திருக்கார். அந்தப் பையரைப் பிடிச்சுட்டாங்களா என்னனு தெரியலை. இதை எல்லாம் வீடியோ எடுத்து முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளுவது இப்போதைய இளைஞர்களின் விருப்பம்.. அதோடு இல்லாமல் பேருந்தில் தொங்கிக் கொண்டு போறவங்களைக் கட்டுப்படுத்த ஓட்டுநர்/நடத்துநருக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. அதே போல் மின்சார ரயிலில் பயணம் செய்யும் இளைஞர்களையும் அடக்க ஒரு சிறப்புச் சட்டம்/அதிகாரம் ரயில்வே ஊழியர்களுக்குக் கொடுக்கணும். வேகமாகச் செல்லும் ரயிலில் தொங்கிக் கொண்டே போவதோடு அல்லாமல் பக்கத்தில் வரும் தூண்களின் மேலும் ஏறுவதற்கு முயற்சி செய்கிறார்கள், ரயில் ஓடும்போதே! இதை எல்லாம் சாகசம் என நினைக்கிறாங்க போல!


மீண்டும் சந்திப்போம்!

18 comments:

  1. நேற்றே கூப்பிட்டு விசாரிக்கணும் என நினைத்தேன். நலமுடன் இருங்கள்.

    ReplyDelete
  2. கண் அறுவை சிகிட்சை தள்ளி வைத்து விட்டார்களா? இரண்டாவது கண் அறுவை சிகிட்சை முடிந்து விட்டது அதுதான் வலைபக்கம் வரவில்லை என்று நினைத்தேன். இவ்வளவு சிரமங்கள் பட்டு கொண்டு இருப்பது இப்போதுதான் தெரிந்தது.
    உடல் நலம் பெற பிரார்த்தனைகள்.
    மகள் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.
    துர்காவின் குறும்புகள் கேட்க மகிழ்ச்சி. துர்காவும் உடல் நலம் பெற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, பெண்ணை நினைத்தால் தான் ரொம்பக் கவலை/வருத்தம். உடம்பு இளைத்துத் துரும்பாகி இருக்கு. எப்படியோ நாட்களை ஓட்டுகிறாள். :( ஒண்ணும் பிரச்னை இல்லைனே மருத்துவர்கள் சொல்றாங்க. இங்கே இந்தியாவில் உள்ள என்னோட சிநேகித மருத்துவர்களிடமும் அவளோட ரிப்போர்ட்டை எல்லாம் காட்டிக் கேட்டாச்சு! :( ஆண்டவன் தான் கண் திறக்கணும்.

      Delete
  3. தாங்கள் நலம் பெற வேண்டுகிறேன்.

    நடிகை காஞ்சனா கோயிலுக்கு கொடுத்ததை விட (காரணம் கோயில்களுக்கு ஏற்கனவே நிறைய சொத்து இருக்கிறது. இதுவும் தூங்கத்தான் போகிறது)

    அனாதை, முதியோர் இல்லங்களுக்கு கொடுத்து இருக்கலாம். (இறைவன் இதை விரும்புவார்)

    ரயில் சாகசம் நானும் கண்டேன் உயிரின் மதிப்பு தெரியாத இந்த உயிரினங்கள் பூமியில் எதற்கு ?

    ReplyDelete
    Replies
    1. நடிகை காஞ்சனா நீங்க சொன்னமாதிரியான தான, தருமங்களும் செய்து வருகிறார். அவருடன் இப்போதும் நெருக்கமாக இருக்கும் காலச்சக்கரம் நரசிம்மா இது குறித்து நிறையத் தகவல்கள் தருவார். காஞ்சனா கொடுத்த நிலத்தில் சென்னையில் பத்மாவதித்தாயாருக்குப் பிரம்மாண்டமான முறையில் ஆலயம் எழுப்பிப் போன வாரத்துக்குக் கொஞ்சம் முன்னால் கும்பாபிஷேஹமும் ஆச்சு. அன்று சென்னையில் திடீர் மழை பெய்ததாகக் கூடச் சொன்னார்கள். இந்தச் சொத்துத் தூங்கவில்லை. ஓர் பிரம்மாண்டமான கோயிலாக உருப்பெற்று விட்டது.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    நலமாக இருக்கிறீர்களா? தங்கள் பதிவை கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தாங்கள் உடல்நிலை பாதிப்புகளும், தங்கள் மகளுக்கு இன்னமும் வந்து கொண்டேயிருக்கும் பிரச்சனைகளும் மனதை வருத்தியது. விரைவில் அனைத்தும் நலமாகி அனைவரும் எவ்வித உபாதைகள் இல்லாமல் இருக்க ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தங்கள் பேத்தியின் ஊக்கம் நிறைந்த செயல் திறமைகள் படிக்கும் போது மகிழ்ச்சியை தருகிறது. அடிக்கடி உடம்பை படுத்துவதுதான் கவலையாக உள்ளது. உங்களுக்கும் மனதை மிகவும் கஸ்டப்படுத்தும். இங்கு என் பேத்திக்கும் மாதத்திற்கு ஒருமுறை, சளி, ஜுரம் என வந்து உடம்பை தேற விடாமல் படுத்துகிறது. சில குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அத்தனை பிரச்சனையும் சரியாகி விடுமென நம்புகிறேன். இறைவனை வேண்டிக் கொள்வோம்.

    பெண்களின் நிலைமைகள் என வருந்தியது போக இப்போது பெண்களால் வரும் இந்த மாதிரி செய்திகளை படிக்கவும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறைகளின் செயல்களும், செல்ஃபி மோகங்களும் வருத்தத்தை தருபவையாகத்தான் உள்ளது. என்ன செய்வது? இவற்றையெல்லாம் படிக்கும் போதும், காணும் போதும் கலி முத்தி வருகிறது எனவும் எண்ண வைக்கிறது.

    தலைப்பு நன்றாக உள்ளது. இனி மீண்டும், மீண்டும் தொடர்ந்து சந்திப்போம் . உடல்நலம் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நலமா? உங்கள் பிள்ளை யு.எஸ். திரும்பிட்டாரா? வீட்டில் அனைவரும் நலமா? உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். சர்க்கரைக்குப் பணம் செலவு செய்து அலோபதி மாத்திரைகள் சாப்பிட மனம் இல்லைனாப் பரவாயில்லை. ஆவாரம்பூக் கஷாயம், நெல்லிக்காய்ச் சாறு, முருங்கைக்கீரை சூப் எனச் சாப்பிட்டு வந்தாலும் பலன் ஓரளவு தெரியும். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கனிவான விசாரணைக்கு நன்றி. மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளது.

      Delete
  5. நலமா? பகிர்வு கண்டது மகிழ்ச்சி
    மகளின் நிலை அறிந்து வருத்தம். நலமடைய வேண்டுவோம்.

    குஞ்சுலு துடுக்குத்தனம் மகிழ்ச்சி தருகிறது .

    ReplyDelete
  6. என்னக்கா மீண்டும் வெய்யிலின் தாக்கம் உங்களுக்கு வந்துவிட்டதா கொப்புளங்கள் அரிப்பு என்று....இதுக்கெல்லாம் தீர்வே இல்லையா? உங்களை இப்படி ஏதாவது ஒன்று படுத்துதே...

    ப்ளீஸ் கவனமாக இருங்க....நீங்க இருப்பீங்கதான். நாங்களும் பிரார்த்திக்கிறோம்...

    கீதா

    ReplyDelete
  7. உங்கள் மகளுக்கும் விரைவில் சரியாகிவிடும்.

    கு . கு ஸ்வீட்!! சமத்து....இந்த வயதிற்கான குறும்புகள். நன்றாக வரைகிறதா.. நல்ல விஷயம்

    இளைஞர்கள் என்ன சொல்ல? நல்ல வளர்ப்பில்லை. நல்ல நட்பு வட்டமில்லை. ஆரோக்கியமான கல்வி இல்லை. ஆரோக்கியமான சுற்றுப்புறம் இல்லை....சுய ஒழுக்கம் சுய அறிவு இருப்பவர்கள் மட்டுமே உருப்படுவார்கள்,

    கீதா

    ReplyDelete
  8. கீதாக்கா எல்லாம் விரைவில் சரியாகும்...நல்லது நடக்கும்..

    கீதா

    ReplyDelete
  9. சென்னை வெயிலும் எரிக்கிறது.  தாங்க முடியவில்லை.  மின்விசிறிக்குக் கீழேயே இருந்தாலும் வியர்த்து ஊற்றுகிறது.  கண் சோதனை நான் ஆறு மாதங்களுக்கு முன் சென்றபோது பரவாயில்லை என்றார்கள்.  இப்போது லேசாய் கண் மறைக்கிறது!  உங்கள் வெயில் கட்டிகள் பிரச்னை சரியாகப்போய்விட்டதா?

    ReplyDelete
  10. பெண்ணின் பிரச்னைக்கு என்ன நிரந்தரத் தீர்வு  என்று மருத்துவரை ஆலோசிக்கவில்லையா?  ஏன் அப்படி ஆகிறதாம்?  கு கு வளர்ந்திருப்பார்...  விஷமங்களும்தான்!

    ReplyDelete
  11. நாட்டு நிலவரங்களைக் கண்டு கொள்ளாமல் நம் பணியைச் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்..  இல்லா விட்டால் நம் நிம்மதிக்கு, நம் ஹெல்த்துக்கும்தான் ஆபத்து.

    ReplyDelete
  12. இந்த பைக் சாகசங்கள் சென்னையைப்போல அங்கெல்லாமும் தொடங்கி விட்டார்களா?  எந்த ஊரிலும் போக்குவரத்துக்குத் தேவையான பேருந்துகளை இயக்க மாட்டார்கள் போல..  வரும் காசை எல்லாம் வீண் செலவு செய்யும் அரசாங்கம்.

    ReplyDelete
  13. கண் அறுவை சிகிச்சைக்கு வேறு நாள் சொல்லி விட்டார்களா?

    இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் என்று நினைத்தேன்.. சிரமங்கள் குறைய வேண்டும்..

    எல்லாருக்குமாக
    உடல் நலம் பெறுவதற்கு பிரார்த்தனைகள்...

    ReplyDelete
  14. ஒரே பதிவில் பல விஷயங்களை கவர் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete