எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 19, 2025

பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு!

 ஆன்மிகம் அல்லது பக்திப் பதிவுகள் எழுதணும்னு தான் நினைச்சுக்கறேன். ஆனால் மனம் பதிவதில்லை. அடுத்தடுத்தப் பிரச்னைகள் தான் காரணம். புத்தி அதிலே போய் விடுகிறது. பொதுவாக நான் என்னை அவமானம் செய்தவர்களிடம் கூடக் கடுமையாக நடந்துக்கறதில்லை. நடந்து கொண்டதும் இல்லை. கடந்து போய்விடுவேன். அவங்க பேசினாலும் பேசாவிட்டாலும் நான் பேசுவேன். ஆனால் ஒரு சிலர் இதைப்புரிஞ்சுக்கறது இல்லை. ஏதோ நாம் அவங்களிடம் நட்புக் கொண்டாடுவதை விரும்புவதாக நினைச்சுப்பாங்க. அதையும் தாண்டி வந்துடுவேன். ஆனால் நம்மைப் பயன்படுத்திக் கொண்டு நம்மூலம் பலரின் நட்பைப் பெற்றுக் கொண்டு பலன் அடைந்தவர்கள் பின்னால் நம்மை யாரென்றே தெரியாதது போல் நடந்துக்கறது தான் விசித்திரமாக இருக்கும்.  இன்னும் சிலர் நம்மிடம் மிகவும் நெருங்கிப் பழகிவிட்டு நம் நேரத்தையும் அவங்களுக்காகச் செலவிட வைச்சுட்டுப் பின் திடீரென வேறொருவர் நட்புக் கிடைச்சதும். நம்மை யாரோ போல் பார்ப்பதோடு அல்லாமல் புதுசாய்ப் பழகறவங்களைப் பத்தி நாம் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லாமல் மழுப்பிடுவாங்க. இதை எல்லாம் இப்போத் தான் கடந்து  வந்திருக்கேன்,. போனது போகட்டும்.

கொஞ்ச நாட்களாக எனக்கு ஏதேனும் சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படுகின்றன. 15 ஆம் தேதி சனியன்று ரங்க்ஸை செக்கப்புக்குக் கூட்டிச் செல்லும் நாள். போயிட்டுத் திரும்பும்போது ஒரு மாதிரி, கவனிக்க, ஒரு மாதிரித் தான் ஆட்டோவில் ஏறிட்டேன். வலக்கால் உள்ளே வந்துடுத்து,, இடக்கால் தான் எப்போதும் பிரச்னை, அதைச் செல்லம் கொஞ்சி, தட்டிக் கொடுத்துக் கொண்டு வரணும். மெல்ல மெல்ல நான் முயன்று கொண்டிருக்கையிலேயே கூட வந்த அட்டென்டர் டக்கெனக் கீழே குனிந்து என் காலைப்பிடித்து, மடித்து உள்ளே தள்ளினாரே பார்ப்போம். அந்த இடமே களேபரம் ஆகிவிட்டது, என்னோட கத்தலினால். அவ்வளவு வலி. அதிலும் முழங்காலில் இருந்து கணுக்கால் வரை. எனக்கு ஊசி போட வரும் நர்ஸ் வெரிகோஸ் வெயின் நீளமாக அந்த இடத்தில் இருப்பதோடு ஆங்காங்கே சுருட்டிக்கவும் செய்யறது. ஆகவே அது சுருட்டிக்கும்போது வலி அதிகமாத் தெரியும் என்றிருக்கிறார். போறாததுக்குக் கால் முட்டி வேறே. தொட்டாலே கன்னாபின்னாவென நரம்புகள், எலும்புகள் பின்னிக்கொண்டிருக்கும்போல! ரொம்ப கவனமாய்க் கையாள வேண்டிய கால். இப்படிப் பண்ணிட்டாரேனு வேதனையா இருந்தது. வீட்டுக்கு வந்ததும் நர்ஸை அழை க்கலாமானு இருந்தேன், வேண்டாம்னு தோணித்து, 

ஏனெனில் எப்படியும் திங்களன்று ஊசி போட வேண்டிய நாள் என்பதால் அவரே வருவார். நேற்றுக்காலையில் வழக்கமான வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு ரங்க்ஸுக்குக் கஞ்சிக்குக் கேழ்வரகை வறுத்தேன். அதை ஆற வைச்சுப் பையில் போட்டுவிட்டு அதில் சுக்கை இடித்துச் சேர்த்துப் பின்னர் மாவு மிஷினில் அரைக்கக் கொடுக்கலாம் எனக் குழவிக்கல்லை எடுத்தேன். அதான் தெரியும். அடுத்த நொடியே நான் குய்யோ, முறையோ எனக் கத்த ஹாலில் உட்கார்ந்திருந்தவருக்கு உடனே எழுந்தும் வர முடியலை. என்னனும் புரியலை, ஒரு நிமிஷம் எனக்கே புரியலை. அப்புறமாத் தான் புரிஞ்சது குழவிக்கல்லைக் காலிலே போட்டுக் கொண்டிருக்கேன் என்பதே. நல்லவேளையாகப் பாதத்தின் நடுவில் விழாமல் ஓரமாய் விழுந்திருக்கு. ஏற்கெனவே இடக்கால் பிரச்னை. இப்போ வலக்காலும் சேர்ந்து கொண்டது, ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. ஆனால் எப்படியும் வந்து தானே ஆகணும். மெல்ல மெல்ல வந்து ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நர்ஸிடம் விஷயத்தைக் கூறி உடனே வரச் சொன்னேன்,. அவங்களும் அரை மணி நேரத்துக்குள் வந்துட்டாஅங்க. இரண்டு இடுப்பிலேயும் இரண்டு ஊசிகள். கடுமையான வலி, ஒரு ஊசி ஏறும்போதே வலி தாங்காது. வேதனை எல்லாப்  பக்கமிருந்தும். வலி அதிகமா இருந்தால் மாலை அழைக்கச் சொல்லி இருந்தார். அவ்வளவு வலி இல்லை. நேற்றும் வலி இல்லை. ஆனால் இன்று காலையிலிருந்து இடப்பக்கம் பூராவும் வலி. நரம்புகள் கன்னாபின்னாவென இழுத்துக்கொண்டு காலை வெட்டி வெட்டி இழுக்கிறது. கணுவைச் சுற்றிலும் வலி. பார்க்கலாம் என்றிருக்கேன். சுயப் பிரதாபத்தை முடிச்சுப்போமா

காடரிங் காரங்க சாப்பாட்டின் காரம் ஒத்துக்கறதே இல்லை. சுள்ளென்று மிளகாய்த் தூள் மட்டும் வத்தக் குழம்பில் போடுவாங்க போல. நல்லவேளையாக எனக்குக் குழம்பெல்லாம்  நிறைய விட்டுக் கொண்டு சாதம் பிசைந்து சாப்பிடும் வழக்கம் இல்லை. பிழைத்தேன் அரைக்கரண்டி குழம்பில் முடிஞ்சுடுஜ். ஆனால் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன், சமையல் அடிப்படை தெரிஞ்சோ தெரியாமலோ எல்லோருமே பொடி மட்டும் போட்டுத் தான் செய்கின்றனர் அதிலேயே பிட்லை, சாம்பார், ரசவாங்கி எனப் பெ யரும் கொடுக்கிறாங்க. பிட்லையின் வறுத்து அரைக்கும் பழக்கம் இப்போ எந்தக் காடரர் கிட்டேயும் இல்லை. எல்லோருமே தானைப் போட்டுப் புளி ஜலம்,  பருப்பு, (சிலர் வேக வைக்காமல் ஊற வைச்சு அரைச்சும் சேர்க்கிறாங்க)பொடி போன்றவை சேர்த்துக் கொண்டு குக்கரில் ஒரு தட்டில் இதையும் இன்னொரு தட்டில் கூட்டுக்கான காயைப் போட்டு, அரைச்சு விட்ட விழுதைப் பாசிப்பருப்போடு சேர்த்து உப்புச் சேர்த்துக் கொழ கொழவென ஒரே விழுதாக இருக்கும் கூட்டையும் பண்ணிடறாங்க. கூட்டில் என்ன தான் எனத் தேடணும், அதிலும் கூட்டு எனில் வெறும் பாசிப்பருப்பு ;விழுதை மட்டும் போட்டுக் கூட்டுப் பண்ணணும்னு இல்லை, பருப்பே இல்லாமலும் பண்ணலாம். நாலைந்து விதங்களில் கூட்டுப் பண்ணலாம். ஆனால் இவங்க தினம் தினம் இந்தப் பாசிப்பருப்பு விழுதைத் தான் கூட்டு  என்னும் பெயரில் கொடுக்கிறாங்க. என்னிக்கானும் மோர்க்கூட்டுன்னா அன்னிக்கு மோர்க்குழம்புக்கு அரைக்கிறாப்போல் கடலைப்பருப்பு, ஜீரகம் எல்லாம் வைச்சு அரைச்சு விடுகிறாங்க. மோர்க்கூட்டின் தாத்பரியமே போயிடறது,,

இப்போ உள்ள இளைய சமுதாயம் இதான் பண்ணும் முறை போலிருக்குனு இதையே கடைப்பிடிக்கும் அபாயம் இருக்கு. கடைசியில் மூலம் தெரியாமலேயே போகப் போகிறது. தமிழைக் கொலை செய்திருக்கிறாப்போல் சமையலையும் கொலை செய்யறாங்க. இப்போதைய தமிழில் நமக்கு ஒண்ணும் புரியறதே இல்லை. அதிலும் வாய்ஸ் மெசேஜ் கொடுத்தால் வெறும் சத்தம் மட்டுமே வருது.

16 comments:

  1. வணக்கம் சகோதரி

    உங்கள் பதிவை படிக்கையில் வருத்தம் மேலிட்டது. இப்போது நீங்கள் எப்படியுள்ளீர்கள்? கால் வலி குறைந்துள்ளதா? எப்படியோ தீடிரென எதிர்பாராது இப்படியெல்லாம் நடந்தால் மிகவும் கஸ்டந்தான்..! நமக்கென்று வரும் சோதனைகளை தாங்கிக் கொள்ள என்றும் அவனருளை வேண்டுவோம் . வேறு என்ன செய்ய..! / சொல்ல..? என்னை முந்தி விட்டீர்கள்.

    மாமா உடல் நலம் எப்படியுள்ளது? தங்கள் உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். தாங்கள் கொஞ்சமேனும் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவரையும் பார்த்துக் கொள்ள முடியும்..! விரைவில் உங்கள் உடல்நலம் குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நம்மை சுற்றியுள்ளவர்கள் நீங்கள் கூறுவது போல், பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள் போலும். "இன்னா செய்தாரை ஒறுத்தல்" என்ற திருக்குறளைத்தான் நானும் அடிக்கடிச் சொல்லிக் கொள்வேன்.

    சமையல் கலைகள் இப்போது காலத்திற்கேற்ப நிறையவே மாறி விட்டது. நாம் எதிர்பார்க்கும்படி கிடைப்பது இனி சிரமம்தான். காடரிங்காரங்க கிட்டே ஏற்பாடு செய்து சாப்பாடு வாங்கி கொள்ளாமல், வீட்டிலேயே ஒருவரை வந்து தினசரி சமையல் செய்ய சொல்லலாம்., ஆனால் அதுவும் நமக்கு ஒத்துக் கொள்ளாமல் போய் விடும் பிரச்சனைகளும் உண்டு.

    நிதானமாக வேலைகளை செய்யுங்கள். நல்லபடியாக கால் வலிகள் குறைந்து முன்பு போல நடமாட இறைவன் துணையாக இருக்க வேண்டும். அதுதான் என் பிரார்த்தனையும். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. நன்றி சகோதரி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கும், அன்பான விசாரிப்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. கால் இப்போது பரவாயில்லை. அன்று ஒரே நா:ளில் இரண்டு ஊசிகள் போட்டுக் கொண்டு அது படுக்க முடியாமல் அவஸ்தையாக இருந்தது. பின்னர் பரவாயில்லை.
      இந்த சமையலுக்கு ஆள் போடுவது பற்றிச் சில நாட்கள்/மாதங்கள் முன்னர் ஒரு பதிவு எழுதினேனே. நீங்கள் பார்க்கவில்லை போல. ஆள் போடுவதில் சௌகரியங்களை விடவும் அசௌகரியங்களே அதிகமாய் இருக்கு. சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொடுக்கணும், தினசரி காய்கறிகள். மாவெல்லாம் நாம் தான் அரைச்சு வைக்கணும். அவங்க வந்து ஏத்தி இறக்கிட்டுப் போவாங்க. எடுத்து மேஜையில் வைச்சுடுவாங்க. நாம் தான் போட்டுச் சாப்பிட்டுக் கொண்டு ஒழிச்சுப் போடணுமாம். இல்லைனா அன்னிக்கு இரவோ மறுநாளோ அவங்க வரும் வரையில் அப்படியே கிடக்கணுமாம். மிஞ்சினால் என்ன செய்யறது? அவங்க சாப்பாடு மிச்சமெல்லாம் சாப்பிட மாட்டாங்களாம். புதுசா அவங்களுக்குத் தனியாச் சமைச்சுப்பாங்களாம். அதிலும் மிஞ்சினால் என்ன செய்யறது?காடரிங் எனில் சாப்பாடு ருசி முன்னேப் பின்னே இருந்தாலும் பொருளாதார ரீதியாக லாபம் அது தான். அதிகம் போனால் மாசம் 3500 ரூபாய்க்குள் தான் ஆகும். ஆள் போட்டுச் சமைச்சால் சம்பளம் மட்டுமே 20,000 ரூயில் இருந்து 25,000 ரூ வரை. அவங்க எத்தனை தரம் வராங்க என்பதைப் பொறுத்து.

      Delete
  2. // அதிலும் வாய்ஸ் மெசேஜ் கொடுத்தால் வெறும் சத்தம் மட்டுமே வருகிறது //

    சிம்பிள்.  கேட்கும்போது போனை ம்யூட்டிலிருந்து எடுங்கள்.  கேட்கும்!!

    ReplyDelete
    Replies
    1. ஃபோனை ம்யூட்டில் வைப்பதா? எனக்கு அதெல்லாம் தெரியாதே! இரவு மட்டும் ஒன்பதரை மணிக்குப் பின்னர் மொபைலில் சவுண்டை ம்யூட் செய்து வைப்பேன். நோடிஃபிகேஷன் சப்தம் அதிகமாய் இருக்கும் என்பதால். மற்றபடி எந்தவிதமான டெக்னிகல் அறிவும் இல்லை. :(

      Delete
  3. அந்த ஊழியரின் பொறுப்பின்மையை என்னவென்று சொல்வது?  ஆனால் நீங்கள் கத்திய கத்தலில் அவர் ஓடிப்போயிருப்பார்!  

    கோச்சுக்காதீங்க..  நானும் விதம்விதமா கால்வலியை அனுபவிக்கிறேன்.  கஷ்டமாத்தான் இருக்கும்.  உங்கள் நிலை படு சிரமம்.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஊழியர் அனுபவம் வாய்ந்தவர் இல்லை. ப்ரொஃபஷனல் அட்டென்டர் இல்லை. அதனால் அவருக்கு எதுவும் தெரியலை. :(

      Delete
  4. குழவியை காலில் போட்டுக் கொண்டீர்களா...   என்ன கீதா அக்கா இது..  மாமாவாலும் உடனே வந்து அட்டென்ட் செய்ய முடியாது... 

    ரொம்பவே அவஸ்தைப் பட்டிருக்கீங்க..   கொஞ்சம் நிதானமா உஷாரா இருங்கன்னுதான் சொல்ல முடியுது.

    ReplyDelete
    Replies
    1. கவனக்குறைவுனு சொல்ல முடியாது ஸ்ரீராம். நேரம். சும்மாக் கையில் தூக்கினேன், அவ்வளவு தான். அடுத்த நிமிடம், நான் குய்யோ/முறையோ

      Delete
  5. காட்டரர் பிரச்னை எல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியலை.  எப்படி இவ்வளவு அலட்சியமாக சமையல் செய்கிறார்கள் என்பது புதிர்.  காசுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் - மனசாட்சியை விட்டு விடுகிறார்கள்.  

    ReplyDelete
    Replies
    1. காடரர் எல்லா இடங்களிலும் இப்படித்தான் எனப் பலரும் சொன்னாலும் நம்ம ரங்க்ஸுக்கு என்னமோ சென்னை மயிலை, நங்கநல்லூர், மடிப்பாக்கம் இங்கெல்லாம் நன்றாக இருப்பதாக யூ ட்யூப்களைப் பார்த்துச் சொல்லுகிறார். எல்லாமே ஆரம்பத்தில் ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் தான். போகப் போகத்தான் சாயம் வெளுக்கும். இதில் நம் தப்பும் இருக்கு. நாமும் காடரிங் சாப்பாடுக்குத் தரம் இவ்வளவு தான்னு நினைச்சுக்காமல் பெரிசா எதிர்பார்க்கிறோம்.

      Delete
  6. கீதாக்கா, முதல் சில வரிகளை டிட்டோ செய்கிறேன். ஹைஃபைவ்! அதேதான்...நானும் நினைப்பதுண்டு இதை.

    அக்கா அந்த ஆளுக்குப் புத்தி இல்லையா? வயசானவங்க கால் முடியாதவங்க...இப்படியா காலை எடுத்து டபால்னு வைப்பது? என்னக்கா இப்படி மனுஷங்க..அதுவும் அட்டெண்டர்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, அவர் தொழில் ரீதியிலான அட்டென்டர் இல்லை. என்றாலும் மாமாவை நன்கு கவனித்துக் கொண்டார். என்னோட காலின் நிலைமையைப் புரிஞ்சுக்கலை. இப்போப் புரிஞ்சுண்டு இருப்பார். இங்கே நான் கச்சேரிகளில் பாடல்கள் கேட்கையில் உங்களையும் ஸ்ரீராமையும் தான் நினைச்சுப்பேன். அதிலும் சித் ஸ்ரீராமின் நகுமோமு, அஸ்வத் நாராயணின் பண்டுரீதி, ஆத்ரேயா சிஸ்டர்ஸின் நடனம்.

      Delete
  7. அடக் கடவுளே! என்னக்கா இப்படி..குழவிக்கல்லை வேறு போட்டுக்கிட்டிருக்கீங்க. நீங்க ரொம்ப கவனமா இருப்பீங்களெ.

    என்னவோ உங்க ராசிக்காரங்களுக்கு எல்லாம் ஓஹோ ஓஹோ ன்னு ஓஹோ ப்ரடெக்ஷன்னு நம்ம வீட்டுல சொன்னாங்களே....

    அக்கா வீட்டுக்கு வந்து காலில் சூடு ஒத்தடம்...ஃபிசியோ மாதிரி செய்வாங்கன்னா அதை முயற்சி பண்ணிப் பாருங்களேன்...உங்களுக்குத் தெரியாதது இல்லை ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் கவனமாய் இருந்தாலும் நேரம், கிரஹ நிலைமை அப்படி ஒரு வலியை நான் அனுபவிக்கணும்னு இருந்திருக்கு. இன்னிக்கு எவ்வளவோ பரவாயில்லை. ஃபிசியோதெரபியெல்லாம் வேண்டாம். அவங்க கொடுத்த எண்ணெயைத் தடவிக்கொண்டு பொறுக்கும் சூட்டில் வெந்நீர் விட்டுக் கொண்டதால் வீக்கம், கரு ரத்தம் கட்டிப்பது எல்லாம் இல்லை.

      Delete
  8. பிட்லையும் ரசவாங்கியும் வெவ்வெறு ஆனால் வெளியில் செய்யறவங்களுக்கு இது தெரிவதில்லை. பல வீடுகளிலும் கூட.

    காடரர்கள் எல்லாம், அக்கா ஜஸ்ட் பிஸினஸ். பலரும் அதையே போதும்னு வாங்கிக் கொள்வதால் காடரர்களும் கண்டு கொள்வதில்லை. அவங்களுக்கு ஈசியா செஞ்சு சம்பாதிக்கத்தான் பார்ப்பாங்க....வயதானவங்களுக்குன்னு தனியா செய்வதும் இல்லை.

    கஷ்டம் தான் கீதாக்கா.

    கால் அவஸ்தை ரொம்பவே சிரமமா இருக்கும்னு புரியுது. பார்த்து கவனமா இருங்கக்கா...வேற என்ன சொல்ல என்று தெரியவில்லை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, நானெல்லாம் ஒரு காலத்தில் சாம்பார்னால் அரைச்சு விட்டாத்தான்னு சொல்லிட்டு இருந்தவள். இப்போ சாம்பாரின் இடத்தில் இந்தப் பிட்லை, ரசவாங்கி எல்லாம் வந்து விட்டது. அதிலும் தஞ்சாவூர்ப்பக்கம் (என் மாமியாரும் பண்ணுவாங்க) வெண்டைக்காய்ப் பிட்லை என்பார்கள். ஆனால் அதுக்கும் பொடி கொஞ்சம் போட்டுவிட்டு மேல் சாமான் அரைச்சு விடுதல் எனக் கொஞ்சமாக வறுத்து அரைச்சுப் போடறாங்க. சாம்பாரிலும் அதே, அதே. எல்லாமும் ஒரே மாதிரி ருசி. சாம்பார்ப் பொடி போட்டால் அதைத் தனியாகப் பருப்புக் குழம்புனு நாங்க பண்ணுவோம். பிட்லைக்கோ, ரசவாங்கிக்கோ, சாம்பாருக்கோ பொடி போட்டுப் பண்ணிட்டு அதிலும் அரைச்சு விட்டதில்லை. இப்போ எல்லாமே கலப்படம். :)

      Delete